Thursday, 29 March 2018

குடகு

62 ஆண்டுகள் முன்பு வரை கர்நாடகாவின் பாகமாக இராத பகுதி குடகு.

1956 ல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தமிழகத்துடன் இணைய விரும்பிய பகுதி குடகு.

காவிரி உற்பத்தி ஆகும் இடமான தலைக்காவிரி இருக்கும் பகுதி குடகு.

கன்னடரை விட தனித்துவமான தேசிய இனமாக  இருந்தாலும் கர்நாடகாவுடன் சேர்க்கப்பட்டது குடகு.

காவிரிப் பிரச்சனைக்காக பதவியைத் தூக்கியெறிந்த அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி அதற்கு தீ்ர்வாகக் கேட்டது தனி குடகு.

மொழியும் கலாச்சாரமும் அழிந்து கன்னடவர் குடியேற்றத்தையும் ஆதிக்கத்தையும் சந்திக்கும் பகுதி குடகு.

நாளைய தமிழர்நாட்டின் ஒரு மாநிலம் குடகு.

(படம் உதவி: Veera VK)

செய்தி: காவிரி நீர் கிடைக்க குடகு போராட்டததுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்
வியனரசு பேட்டி
நாம் தமிழர் கட்சி

Wednesday, 28 March 2018

தமிழக விவசாயிகள் சிதறிக் கிடப்பதேன்?

தமிழக விவசாயிகள் சிதறிக் கிடப்பதேன்?
----------------------

தமிழகத்தில் வந்தேறிகள் கைவசமுள்ள நிலவுடைமை வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது (நீலநிறம்).

(இதில் பிராமணர் என்பதில் பார்ப்பன குலத் தமிழர் உண்டா என்பது தெரியவில்லை.
எனக்குத் தெரிந்து தமிழ்ப் பார்ப்பனர் எவரிடமும் நிலவுடைமை இல்லை.
எனவே பி என்று குறிக்கப்பட்டோர் வடுக பிராமணராகவே இருக்க வாய்ப்பு அதிகம்)

மேலும் இது ஆங்கிலேயர் கால வரைபடம் ஆகும்.

50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தெலுங்கு கன்னட வந்தேறிகளின் நிலவுடைமை வரைபடத்தில் உள்ளதை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.

இத்துடன் திராவிட ஆட்சியில் நகர்ப்புற நிலவுடைமை மார்வாடிகளின் கைகளுக்கு சென்றுவிட்டது.

தமிழகத்தில் 8 ல் ஒரு பங்கு நிலம் மலையாளிகள் கையில் உள்ளது.

கேரள எல்லைப்பகுதிகளை மொத்தமாக விலைக்கு வாங்கி கேரள குடியுரிமைக்கு விண்ணப்பித்து எல்லைக்கற்களை பிடுங்கி கேரளாவுடன் இணைக்கப்பட்ட தாளூர் போன்ற கிராமங்கள் பல.

இவையெல்லாம் வரைபடத்தில் குறிக்கப்படவில்லை.

அதாவது தமிழகத்தில் பெரும்பாலான நிலம் தமிழருக்கு சொந்தமில்லை.

விவசாய நிலங்கள் பெரும்பாலும் தெலுங்கர் கையில் உள்ளன.
விவசாய சங்கங்களில் பொறுப்பில் பதவியில் இருப்பவர்கள் இவர்களே!

கீழவெண்மணி படுகொலை செய்த கோபாலகிருஷ்ண நாயுடு நினைவுக்கு வரலாம்.
அவருக்கு ஈ.வே.ராமசாமியும் அண்ணாதுரையும் முட்டுக்கொடுத்து நினைவிருக்கலாம்.

விவசாயக் கூலிகளை விவசாயியாக யார் ஒத்துக்கொள்கிறார்கள்?!

தெலுங்கர்கள்தான் தமிழக விவசாயிகளை ஒன்றுசேரவிடாமல் நடுநடுவே ஊடுறுவி உள்ளனர்.

இதுவே விவசாய போராட்டம் பெரிய அளவு வெடிக்காத்தற்கு காரணம்.

நாராயணசாமி நாயுடு சீனிவாசராவ் போன்றவர்களை உப்புக்கு சப்பாணியாக ஒத்துக்கொள்ளலாம்

(வரைபடத்திற்கு நன்றி : பார்க்கவன் தமிழன்)

Tuesday, 27 March 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் கூறவில்லை _ மத்திய அரசு

"உச்சநீதிமன்றம் கெடுவிதித்த 29 ஆம் தேதிக்குள் 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்"
- எடப்பாடி பழனிச்சாமி

"நா எப்படா அப்டி சொன்னேன்?"
- உச்சநீதிமன்றம்

(செய்தி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க
மத்திய அரசு திடீர் கைவிரிப்பு
'அப்படி ஒரு வார்த்தையை உச்ச நீதிமன்றம் கூறவில்லை'
தினகரன் 10.03.2018)
__________

ஏற்கனவே இட்ட பதிவுக்கு
காவிரி மேலாண்மை அமைக்கும் ஐடியா இல்லை - ஹிந்திய அரசு
http://vaettoli.blogspot.com/2017/10/blog-post_27.html

வைகோ: போராளியும் நானே புரோக்கரும் நானே

போராளியும் நானே! புரோக்கரும் நானே! - வைகோ

மூன்று மாநிலங்கள் துரத்தியடித்த ஸ்டெர்லைட்டுக்கு கருணாநிதி அனுமதி அளித்து,
ஜெயலலிதா அடிக்கல் நாட்டியதில் இருந்தே மக்கள் தீவிரமாகப் போராடி வந்துள்ளனர்.

வழக்குரைஞர் வி.பிரகாஷ் என்பவர் தொடுத்த வழக்கில் அரசியல் தரகர் வைகோ பிற்பாடு வந்து செருகிக்கொண்டார்.

தமிழகத்தில் அவ்வப்போது போராட்டம் வெடிக்கும்போது தானே கலந்துகொண்டு முதல் வரிசையில் நின்று வாயாலேயே வடை சுட்டு தலைமை தாங்குவது போல காட்டிக்கொள்வார்.

ஊடகங்களும் இவரையே முன்னிலைப்படுத்தும்.

போராடும் மக்கள் சிறிது சோர்வடைந்த்தும் வைகோ பல படங்களில் வரும் யூனியன் லீடர் போல நிர்வாகத்திடம் தனியே டீல் பேசுவார்.

பிறகென்ன! கமிசன் அவருக்கும் வாக்குறுதி மக்களுக்கும் கிடைக்கும்.

இவ்வாறாக வைகோவின் மகன் வையாபுரி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் 2% பங்குதாரர் ஆனது அனைவருக்கும் தெரியும்.

(வைகோவின் மகன் ஒரு மாவட்டத்திற்கே புகையிலை சப்ளை செய்யும் டொபாக்கோ ஏஜன்ட் என்பதையும் பலர் அறிவீர்கள்)

மேலும் தம்பி ரவிசந்திரனின் மைத்துனன் ஜெகதீஸ் என்பவருக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கான எரிபொருள் ஏஜென்சியை வைகோ பிடித்துக் கொடுத்துள்ளார் என்பதையும் தற்போது அறிவோமாக.

ஏதோ ம.தி.மு.க மட்டும்தான் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருவதுபோல வைகோவின் எடுப்புகள் ஊடகங்களில் பரப்பிவருகின்றனர்.

அதை யாரும் நம்பவேண்டாம்.

ஸ்டெர்லைட் பிரச்சனை இழுத்துக்கொண்டே போவதற்கு வைகோதான் காரணம்.

Monday, 26 March 2018

கடவுள் என்றால் முனிவர்

கடவுள் என்றால் முனிவர்

கடவுள் என்னும் சொல் இப்பொழுது பரம்பொருளைக் குறிக்கிறது.
ஆனால் பண்டைக்காலத்தில் இச்சொல் முற்றந்துறந்த முனிவர்க்கும் வழங்கப்பட்டது.

"தென்னவற் பெரிய துன்னருந் துப்பிற்
றொன்முது கடவுள் பின்னர் மேய
வரைதாழ் அருவிப் பொறுப்பிற் பொருந"

என வரும் 'மதுரைக்காஞ்சி' அடிகளிலுள்ள 'கடவுள்' என்னும் சொல்லுக்கு 'முனிவன் ஆகிய அகத்தியன்' என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறியுள்ளார்; இத்துடன் அமையாது, கலித்தொகை யில் உள்ள கடவுள் பாட்டைச் சுட்டிக் காட்டி "இருடிகளையும் கடவுள் என்று கூறியவாற்றானும் காண்க" என்று விளக்கம் தந்துள்ளார்.
இவர் சுட்டியுள்ள கலித்தொகைப் பாடலில் தலைவன் தலைவியை நோக்கி,
"உடனுறை வாழ்க்கைக் குதவி யுறையுங்
கடவுளர் கட்டங்கினேன்"
என்று கூறுகின்றான்.
இங்கு கடவுளர் என்ற சொல் முனிவரைக் குறித்தல் காண்க.

இளங்கோ அடிகளும் முனிவர்களைக் கடவுளர் என்று கூறியுள்ளார்.
"ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளி கடவுளர்க் கெல்லாம்"
- சிலப்பதிகாரம், நாடுகாண்காதை

இங்ஙனம் கடவுளர் என்ற சொல் சிந்தாமணி, சூளாமணி, கம்ப ராமாயணம், முதலிய நூல்களில் முனிவர் என்ற பொருளில் ஆளப்படுகிறது.

நூல்: தமிழ் இனம்
ஆசிரியர்: முனைவர். மா.இராசமாணிக்கனார்
பக்கம்: 36, 37

Saturday, 24 March 2018

ஸ்டெர்லைட் முன்பு ஒரு லட்சம் தமிழர்கள்!

ஸ்டெர்லைட் முன்பு ஒரு லட்சம் தமிழர்கள்!

அதே நேரத்தில் லண்டனில் உள்ள அதன் முதலாளி அகர்வால் வீடு முன்பும் போராட்டம்!

ஜல்லிக்கட்டு போராட்டம் போல மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியம்!

ட்விட்டர் மூலம் ஒருங்கிணைந்த இளைஞர்கள்!

உனக்குள் இருக்கும் நாயகன் எங்கே?

உனக்குள் இருக்கும் நாயகன் எங்கே?

எத்தனையோ தலைவர்கள், தியாகிகள், சாதனையாளர்கள் இருக்கும்போது
பெருவாரியான இளைஞர்கள் ஏன் ஒரு நடிகனை தனது முன்மாதிரியாக நினைக்கிறார்கள்?

இது இளைஞர்களின் தன்னம்பிக்கை குறைந்துவிட்டதைக் காண்பிக்கிறது.

நான் பல முறை கவனித்துள்ளேன்.
எந்த பணக்காரனும் ரசிகர் மன்றத்தில் இருப்பதில்லை.
சமூகத்தில் மதிக்கத்தகுந்த இடத்தில் இருக்கும் எந்த மனிதனும் நடிகனுக்கு கொடி பிடிப்பதில்லை.

நடுத்தர மற்றும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள்தான் ரசிகர் என்ற அடையாளத்தை ஏற்கிறார்கள்.
இது உலகம் முழுவதுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

இவர்களுக்கு எல்லாரையும் போல பெரிய பெரிய கனவுகள் லட்சியங்கள் இருக்கும்.
ஆனால் அதை சாதிக்கத் துப்பு இருக்காது.

அதாவது தன் கனவுகளை தன்னால் நிறைவேற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்த ஒருவன்
அதை திரையில் போலியாக செய்துகாட்டும் ஒரு பிம்பத்தை பார்த்து திருப்தி அடைகிறான்.
அதன் உருவில் தன்னையே காண்கிறான்.

ஒரு சராசரி இளைஞன் கனவுகள் பெரும்பாலும் என்னவாக இருக்கும்?

தான் அழகாக இருக்க வேண்டும்.
தன்னை பலர் துரத்தி துரத்தி காதலிக்க வேண்டும்.
தனியாளாக பத்து பேரை அடிக்கவேண்டும்.
உடனடியாக பணக்காரன் ஆகவேண்டும்.
சமூகம் தன்னை கையெடுத்து கும்பிட வேண்டும்.
தன் பின்னால் ஒரு கூட்டம் திரளவேண்டும்.

இப்படியாக பல ஆசைகள் மற்றும் பேராசைகள் இருக்கலாம்.
ஆனால் இதையெல்லாம் நிறைவேற்ற அவர்களால் முடியாது.
அதாவது முடியாது என்று அவர்களே முடிவு செய்துகொள்வார்கள்.

திரையில் நடிகர்கள் செய்துகாட்டுவது மேற்கண்ட ஆசைகளைத்தான்.
ஒரு சராசரி இளைஞனின் கனவுகளுக்கு நடிகன் என்பவன் வடிவம் கொடுக்கிறான்.

எவனுக்கு  தன்னம்பிக்கை இல்லையோ,
எவன் தன் தகுதிக்கு மேல் கனவு காண்கிறானோ,
எவன் வாழைப்பழ சொம்பேறியோ,
அவனெல்லாம் அந்த நடிகனில் தன்னையே காண்கிறான்.

இதன்மூலம் தனக்குள் இருக்கும் கதாநாயகனை சாகடிக்கிறான்.
தன்னால் முடிந்த முயற்சிகளைச் செய்வதையும் கைவிடுகிறான்.
எதற்கும் உதவாத கையாலாகதவன் ஆகிறான்.

உள்ளத்தால் ஊனமான ஒருவனை சமூகம் புறக்கணிக்கும்.
இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட தன்னை ஒத்த கையாலாதோருடன் கூட்டு சேர்ந்து தன் கற்பனை உருவத்தையாவது வாழவைக்க முயல்கிறான்.
அதற்கு பால் ஊற்றுகிறான், கொடி பிடிக்கிறான், அவன் படத்துடன் தன் படத்தை ஒட்டி ஃபிளக்ஸ், நோட்டிஸ், கட் அவுட் என வைக்கிறான்.
அவனுக்கு ஓன்றென்றால் தனக்கே ஆனதுபோல பதறுகிறான்.

இது ஒரு மனநோய்.
பகுத்தறிவு பலவீனம்.

கற்பனைக்கும் உண்மைக்கும் வேறுபாடு தெரியாத உளவியல் குறைபாடு.

முதிர்ச்சிபெற்றும் அகலாத சிறுபிள்ளைத்தனம்.

இத்தகைய சிந்திக்கத் தெரியாத முட்டாள்களை அதிகப்படியாக உருவாக்குவதுதான் கார்ப்பரேட் கம்பெனிகளினுடைய பெருமுதலாளி வர்க்கத்தின் நோக்கம்.

இதுவே அரசியல்வாதிகளுக்கும் தேவை.

இவ்விருவருக்கும் உதவுவதே ஊடகங்களின் தலைசிறந்த பணி.

ஒரு நடிகன் அவன் எவ்வளவு பெரிய டம்மி பீசாக இருந்தாலும்
அவன் ஏதோ அதிசயபிறவி போலவும் கடவுளின் அவதாரம் போலவும் கட்டமைப்பதே டிவி, பத்திரிக்கை, இணையம் போன்ற ஊடகங்களுக்கு இடப்பட்ட கட்டளை.

இதற்கு சலுகைகளை வாரி வழங்குவது அரசியல்வாதிகளுக்கு இடப்பட்ட கட்டளை.

சினிமா என்றில்லாமல் கிரிக்கெட், மல்யுத்தம், காமிக்ஸ் போன்றவையும் இதன் அடிப்படையிலேயே இயங்குகின்றன.

இவற்றில் வரும் சாதனைகளும் கதாநாயகர்களும் போலியாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள்.

பொதுமக்களை எதைச்சொன்னாலும் நம்பும் முட்டாளாக்குவதே இம்மூவருக்கும் இலக்கு.
அதுவே இவர்களுக்கும் லாபம்.

ஏர்செல் ஏமாற்றிவிட்டது சூர்யா சட்டையையா பிடிக்க முடியும்?

நாளைக்கு சாகப்போகும் கே.ஆர்.விஜயா நமக்கு அம்மாவாம்!

எந்த தைரியத்தில் இந்த மொக்கையான நெஞ்சை நக்கும் விளம்பரங்கள் வருகின்றன?
அவ்வளவு கேணையாகவா ஆகிவிட்டோம்?!

சிந்தியுங்கள் மக்களே!

சினிமா ஒரு பொழுதுபோக்கு காட்சி ஊடகம் மட்டுமே!
அதுவும் ஒலி, ஒளியுடன் கூடிய எளிமையான ஊடகம்.
அதுவும் வாழ்க்கைக்கு தேவைதான்.

ஆனால் நடிகனின் அந்தரங்க வாழ்க்கை நமக்கு தேவையில்லாதது.

கனவில் அதிகம் மூழ்கினால் நிஜம் காணமல் போகும்.
கற்பனையே வாழ்க்கையாகிவிடும்.

சினிமா ரசிகர் என்றில்லை பொதுவாகவே ரசிகர்கள் என்போர் மனநோயாளிகள்.
அவர்களைத் திருத்த முயலாதீர்கள்.

மூடநம்பிக்கையில் மூழ்கிய முரட்டு பக்தர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடில்லை.

இதுவரை இந்த உளவியல் தாக்குதலுக்கு இரையாகாதவர்கள் இனியும் ஊடகங்களின் மூளைச்சலவையில் சிக்காமல் சுயமாக சிந்தித்து போலிகளைப் புறந்தள்ளி உண்மையான நாயகர்களை முன்மாதிரியாகக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் போலிகளை அடையாளம் காண கற்றுக் கொடுங்கள்.

அடுத்த தலைமுறையாவது தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்கட்டும்.

Thursday, 22 March 2018

வந்தேறித்துறை உங்கள் நண்பன்

வந்தேறித்துறை உங்கள் நண்பன்

தமிழகக் காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதற்கு இந்த காணொளி ஒரு உதாரணம்.

ஆட்சியாளர்களின் உத்தரவை ஏற்று அடிமட்ட காவலர்களை தனது ஏவல்நாய்போல  பொதுமக்கள் மீது  ஏவுவது யார் என்ற கேள்விக்கு பதிலும் இக்காணொளியில் உள்ளது.

தெலுங்கு வந்தேறிகளின் தமிழ் மறவர்கள் மீதான அடக்குமுறை பாரீர்!

தேவருக்கு அதுவும் தேனியில் இந்த நிலை என்றால் பிறருக்கு என்ன நிலை என்பதை ஊகிக்கவும்.

எங்கும் தெலுங்கர்!
எதிலும் வந்தேறிகள்!

உயர் பதவிகள், உடனடி வாய்ப்பு, உடனடி பதவி உயர்வு, நோகாத வேலைப்பளு இப்படி ராஜபோக வாழ்வு ஆந்திரா போலீசில்கூட நாயக்கர் சாதிக்கு கிடைக்காது.

ஆமா? தேனி தமிழகத்தில்தானே இருக்கு?!

(Youtube ல் காண:-
டி.ஜி.பி அலுவலகம் முன்பு காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
FX16 NEWS)

முகநூல் காணொளி துண்டு
https://m.facebook.com/story.php?story_fbid=1183290831774568

Wednesday, 21 March 2018

உருளைக்கிழங்கு வறுவல்

உருளைக்கிழங்கு வறுவல்
---------------------
"ஏன் பாய்?
நாங்கள்லாம் எத்தன வருசமா கூட இருக்கோம்?!
அவனுக்கு நன்றி இருக்கா?! போய்ட்டான் பாருங்க.
ஆனா நீங்க அவனுக்குனா மட்டும் இப்பிடி துடிக்கிறீங்களே ஏன் பாய்?"

"நீங்கள் எல்லாரும் என்ன பாய் பாய் னு கூப்டும்போது
அத்தனபேரு மத்தில அவன் மட்டும்தாய்யா என்ன அண்ணே அண்ணே னு கூப்டுவான்"
-----------
"எனக்கு உருளக்கிழங்கு வறுவல்னா ரொம்ப பிடிக்கும்.
  இப்போ சிப்ஸ் லேய்ஸ் னு சொன்னாதான் எல்லாருக்கும் புரியுது.
என் மொழியினுடைய ஒரு வார்த்தை அழிந்துவிட்டதே!
இது பற்றி யாராவது பேசுறீங்களா?!"
விஜய் டிவியில் வணிகம் உலகமயமாதல் பற்றி பேசிய ஒரு இசுலாமியர்
------------
  "என்ன சார் வாய்ல நுழையாத பேரு வச்சிக்கிட்டு...
ஸ்பெல்லிங் சொல்லுங்க"

"எதுக்குங்க ஸ்பெல்லிங்?
பேசாம தமிழ்ல தரவேண்டியதுதானே?! பிரச்சனயே இருக்காதே!
மெடிக்கல் ரிப்போட்னா இங்கிலீசுலதா இருக்கணுமா?
தமிழ்நாட்டுல எல்லாருக்கும் தமிழ் தெரியுமே?!"

30 வயது படித்த இசுலாமிய இளைஞர்
----------------
மேற்கண்ட மூன்றும் நான் நேரில் சந்தித்த அனுபவங்கள்.

ஈழத்தில் ஏதோ இசுலாமியர்கள் தமிழரே கிடையாது என்கிறார்கள்.
சான்று கேட்டால் பதிலில்லை.

எனக்கு தமிழகத்து இசுலாமியரை பற்றித்தான் தெரியும்.

தமிழ் இலக்கியங்களில் வரும் இராமனை எவனோ வடயிந்தியன்   எடுத்துக்கொண்டு ரதம் அமைத்து இசுலாமியர் பகுதி வழியாக போகிறான்.

ஒரு பொம்பள பொறுக்கி இசுலாமியத் தலைவன் பிரபாகரன் ஒரு தீவிரவாதி என்கிறான்.
பொங்கல் பண்டிகையை இசுலாமியர் கொண்டாடக் கூடாது என்கிறான்.

ஆனால் நடைமுறையில் எல்லோரும் இணக்கமாகத்தான் இருக்கிறார்கள்.

அடுத்தது நம்மில் யார்?

அடுத்தது நம்மில் யார்?

முகநூலில் தமிழ்தேசியம் பேசுவதோடு நில்லாமல் இயக்கம், கட்சி என களத்தில் இறங்கியவர்கள் எனக்குத் தெரிந்து 10 பேர் வரை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இறந்துள்ளனர்.

தற்போது செல்வா பாண்டியர் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

* பள்ளர்கள் sc பட்டியலில் இருந்து வெளியேற்றம்
* பெரியார் திடல் முற்றுகை
* திரைத்துறை வந்தேறி ஆதிக்கத்தை எதிர்த்து உண்ணாவிரதம்
*முகநூல் தமிழ்தேசிய எழுச்சி பற்றி முதல் புத்தகம் வெளியீடு
* ஒரிசா பாலு அவர்களுடன் இணைந்து பணி

என செல்வா அவர்களது தமிழ்தேசியப் பணி மறக்கவியாதது.

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்
ஒரு பெரிய உறுத்தல் உண்டு.

தமிழ்நாடு தெற்கு வடக்கு என இரண்டாக பிரிக்கப்பட அவர் ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் நான் இரங்கல் தெரிவித்திருப்பேன்.

என் நாட்டைத் துண்டாட நினைத்த ஒருவருக்கு இரங்கல் தெரிவிக்க என் நாட்டுப்பற்று தடுக்கிறது.

எனவே அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இயத்தினர் பெரியமனம் செய்து என்னை மன்னிக்கவும்.

அடுத்து யாரோ?!

ம.நடராசன் அவர்களைப் பற்றி அறிவோம்

ம.நடராசன் அவர்களைப் பற்றி அறிவோம்

* 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டதில் மாணவராக இருந்தபோது முனைப்பாக இருந்தார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எல்.கணேசன் அவர்களின் வழிகாட்டுதலில் மாணவர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்று செவ்வனே செயல்படுத்தினார்.

* ஒவ்வொரு ஆண்டும் தஞ்சையில் 'கலை இலக்கிய விழா'வை பொங்கல் விழாவின் போது நடத்தி வந்தார்.

* 'புதிய பார்வை' என்ற இதழை நடத்திவந்தார்.

* 'மகளிர் மேம்பாட்டில்
இதழ்களின் பங்கு'

* ஈழப்போர் பற்றிய ஒரு நூலை எழுதியுள்ளார்.

* தஞ்சை நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விளார் என்பது இவரது சொந்த ஊர்.
அங்கே ஈழத் தமிழர்களின் படுகொலைகளையும் பட்ட அவலங்களையும் நினவு கூரும் வகையில்  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்னும் பெரிய கூடத்தை நிறுவினார்.

Saturday, 17 March 2018

பாலைவனமாகும் 36 விவசாய கிராமங்கள் - இது ஆரம்பம்தான்

பாலைவனமாகும் 36 விவசாய கிராமங்கள் 

- இது ஆரம்பம்தான்


இப்பட்டியலில் உங்கள் ஊர் இருக்கிறதா பாருங்கள்.

 

 அப்படி இருந்தால் குடும்பத்தோடு ஊரை காலி செய்ய தயாராகுங்கள் தமிழர்களே...!

 

 எல்லா அழிக்கப்பட்டு நீரின்றி நோய்வாய்ப்பட்டு கேவலமாக சாவதை விட இப்பொழுதே குடும்பத்துடன் வெளியேறிவிடுங்கள்.


தன் உரிமைக்காக போராடாத ஒரு இனம் அழிந்து போகட்டும்.


 தமிழகத்தில்  ஹைட்டரோ கார்பன் மற்றும் மீத்தேன் எடுக்க அடிமை மாநில அரசால் தாரைவார்க்கப்பட்டு பாலைவனமாக்கப்பட போகும் இடங்கள்!


1). கருவேப்பிலைக்குறிச்சிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள 

- கண்ணூர்.


2). புவனகிரிக்கும் கீரப்பாளையத்திற்கும் இடையில் உள்ள 

- கிளியனுர்


3). புவனகிரிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள 

- எரம்பூர்


4). புவனகிரிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள, மனவெளி அருகிலுள்ள 

- பூதராயன்பேட்டை


5). புவனகிரியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஊர் பேரு தெரியாத இடம்..


6). சிதம்பரத்திற்கும் காட்டுமன்னார்கோவிலுக்கும் இடையிலுள்ள தாவரத்தாம்பட்டு அருகிலுள்ள 

- மெய்யத்தூர்


7). சிதம்பரத்திற்கும் காட்டுமன்னார்கோவிலுக்கும் இடையிலுள்ள டி.நெடுஞ்சேரி அருகிலுள்ள 

- நெய்வாசல்


8). சிதம்பரத்திற்கும் காட்டுமன்னார்கோவிலுக்கும் இடையிலுள்ள டி.நெடுஞ்சேரி அருகிலுள்ள 

- பூர்த்தங்குடி


9). கருவேப்பிலைக்குறிச்சிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள 

- வடக்குபாளையம்


10). கருவேப்பிலைக்குறிச்சிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள 

- பாளையம்கோட்டை


11). ஆண்டிமடம் காடுவெட்டி இடையில் உள்ள

- கோவில்வழக்கை


12). ஆண்டிமடம் அருகிலுள்ள

- கூவத்தூர், அக்னீஷபுரம்


13). ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் இடையிலுள்ள 

- கீழக்குடியிருப்பு


14). ஜெயங்கொண்டம் சிறுகொளத்தூர் இடையிலுள்ள 

- தேவனூர்


15). ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் இடையில் உள்ள 

- சூரியமணல்


16). மயிலாடுதுறை சேந்தன்குடி இடையிலுள்ள 

- மண்ணம்பந்தல்


17). மயிலாடுதுறை நெய்வாசல் இடையிலுள்ள 

- பண்டூர், மகாராஜபுரம்


18). கும்பகோணம் நெடுங்கொல்லை அருகிலுள்ள 

- கடமங்குடி, பரவனூர்


19). திருப்பனந்தாள் திருமங்கலக்குடி இடையிலுள்ள

- சூரியமூலை


20). கதிரமங்கலம் பந்தநல்லூர் இடையிலுள்ள 

- முள்ளுக்குடி


21). மயிலாடுதுறை குத்தாலம் அருகிலுள்ள 

- அரையபுரம், கோமல்


22). மயிலாடுதுறை மண்டாரவாடை மாப்படுகை அருகிலுள்ள 

- பொன்னுர்


23). மயிலாடுதுறை ஆனதாண்டவபுரம் அருகிலுள்ள 

- சேந்தன்குடி


24). தரங்கம்பாடி பொறையார் திருக்களாச்சேரி அருகிலுள்ள

- ஈச்சங்குடி, நரசிங்கநாதம்


25). கும்பகோணம் காரைக்கால் இடையிலுள்ள 

- எழுமகளூர், எ.கிளியனூர்


26). மயிலாடுதுறை திருவாரூர் இடையிலுள்ள 

- தேவூர், கீரனூர்


27). திருப்பனந்தாள் அருகிலுள்ள

- திருலோக்கி


28). சேத்தியாத்தோப்பு சோழதரம் அருகிலுள்ள 

- நந்தீஸ்வரமங்கலம்


29). குறிஞ்சிப்பாடி நெல்லிக்குப்பம் அருகிலுள்ள 

- பச்சாரபாளயம்


30). புவனகிரி, நெடுஞ்சேரி அருகிலுள்ள - கீழநத்தம்


31). காட்டுமன்னார்குடி அய்யன்குடி அருகிலுள்ள 

- குச்சூர்


32). காட்டுமன்னார்குடி முத்தம் அருகிலுள்ள 

- ஆச்சாள்புரம்


33). கங்கைகொண்டசோழபுரம் பாப்பாக்குடி இடையில் 

- ஊருபேரு தெரியாத இடம்


34). ஆடுதுறை மங்கநல்லூர் இடையிலுள 

- கஞ்சுவோய், மாம்புலி


35). மயிலாடுதுறை குத்தாலம் அருகிலுள்ள 

- சென்னியநல்லூர்


36). கும்பகோணம் திருமங்கலக்குடி அருகிலுள்ள 

- வேப்பத்தூர்...


(பட்டியலுக்கு நன்றி: Veera VK)


மேற்கண்ட அனைத்தும் விவசாய கிராமங்கள்.

 இங்கே கூறப்பட்டது காவிரி டெல்டா மட்டும்தான்.

 இதற்கு வடக்கே மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை ஐட்ரோ கார்பன் எடுக்க ஒற்றை உரிமை அடிப்படையில் அனுமதி தரப்பட்டுவிட்டது.


 இனி மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் எண்ணெய், ஷேல் எரிவாயு உள்ளிட்ட எவற்றையும் எடுப்பதற்கு ஒரே ஒரு முறை அனுமதி வாங்கினால் போதுமானது. 

 அதுவும் பத்தே நாளில் கிடைத்துவிடும்.


 மாசுக் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிகூட தேவையில்லை.


இந்த திட்டத்திற்கு பேர்தான் # ஹெல்ப் # HELP


 100 விழுக்காடு நேரடி அந்நிய முதலீட்டில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளால் அரங்கேற இருக்கும் இத்திட்டத்தில்

 முதன்முதலாக வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு கான்டராக்ட் தரகர்கள் இன்றி நேரடியாக நம் தாய் நிலத்தில் கால் பதிக்கும் வகையில் மத்திய அரசு தாரை வார்த்து விட்டது.


அதாவது முற்றாக அழிக்கப்படவுள்ள காவிரிப் படுகை.


 பல ஆயிரம் ஆண்டுகள் நமக்கு சோறுபோட்ட பூமி.

 பூமித்தாயின் பாலூட்டும் மார்பு.

அதை அறுத்து ரத்தத்தை உறிஞ்சப் போகிறார்கள்.


என்ன செய்யப்போகிறோம் நாம்?



Friday, 16 March 2018

திராவிடநாடு அமைந்தால்...

திராவிடநாடு அமைந்தால்...

  அதில் தமிழோ தமிழினமோ இருக்காது.

எப்படி நமக்கு வடயிந்தியன் எதிரியோ அதற்கு சமமான எதிரிகள் நமது அண்டை இனங்கள்.

பரம எதிரி சிங்கள இனம் என்றால் பிற இனங்களும் அதற்கு சளைத்தவை அல்ல.

நமக்கு நம்மைத் தவிர இந்த உலகில் யாருமில்லை என்பதுதான் உண்மை.

நூறாண்டு முன்பே திராவிடம் என்ற பெயரில் தெற்கை ஓரணியில் திரட்ட முயன்றோம்.
அதனால் நாம் உள்ளதையும் இழந்தோம்.

நம்பி நம்பி ஏமாந்தது போதும்!

எனவே நாம் நேரடியாக தமிழர் நாடு அமைப்போம்!

Thursday, 15 March 2018

அந்நியர் ஆட்சிக்கு முந்தைய தமிழகம்

அந்நியர் ஆட்சிக்கு முந்தைய தமிழகம்
**********************************

சோழர் வீழ்ந்து பாண்டியர் எழுச்சிபெற்றிருந்த காலம் அது.

கி.பி. 1251ல் ஆட்சிக்கு முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் 12 ஆண்டுகள் தொடர்ந்து போர் புரிந்து தமிழகத்தை ஒற்றையாட்சியில் கொண்டுவருகிறான்.

அவனது மகன் முதலாம் குலசேகர பாண்டியன் ஆண்ட காலத்தில் பாண்டிய நாடு அமைதியாகவும் வலிமையாகவும் விளங்கியது.

உண்மையில் இவனே கடைசி தமிழ் அரசன் ஆவான்.

இவனது  காலத்தில்தான் கி.பி. 1293 இல் மார்க்கோ போலோ எனும் இத்தாலி நாட்டு பயணி தமிழகம் வருகிறார்.

இவரது குறிப்புகள் அந்நியர் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன் தமிழகத்தின் நிலையை அறிய பெரிதும் உதவுகின்றன.

மார்க்கோபோலோ காலத்திற்கு பிறகு பாண்டிய வாரிசுகளிடையே உள்நாட்டுப் போர்,
அதன் விளைவாக 1311ல் டெல்லி சுல்தானிய படையெடுப்பு,
அதன் விளைவாக 1362 இல் நாயக்கர் படையெடுப்பு என தமிழகத்தின் வீழ்ச்சிக்காலம் தொடங்கியது.

தமிழகம் வலிமையாக இருந்தபோது வருகை தந்த மார்க்கோபோலோவின் குறிப்புகள் அவரது நண்பரால் "இல் மிலியோன் - மார்க்கோபோலோவின் பயணங்கள" (il milion - the travels of marcopolo) என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது.

1293 இல் தஞ்சைக்கு அருகே உள்ள காவிரி பூம்பட்டிணம் வந்திறங்கிய மார்க்கோபோலோ ஓராண்டு தமிழகத்தில் சுற்றித் திரிந்துள்ளார்.
கடைசியாக மயிலாப்பூருக்கும், புனித தோமையார் ஆலயத்திற்கும் சென்றார்.
அவரது குறிப்புகள் இன்று நூறுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகளுடன் வெவ்வேறு திரிபுகளுடன் கிடைக்கிறது.

மார்க்கோபோலோவின் குறிப்புகளே ஐரோப்பியருக்கு தமிழகத்தின் மீது வணிக ஆர்வத்தைத் தூண்டியதாகவும்
அதன் விளைவாக தமிழகத்தின் குழப்ப நிலையை பயன்படுத்தி ஆங்கிலேயர் ஆட்சியைப் பிடிக்க முடிந்ததாகவும் கூறுவர்.

தமிழகத்தை பற்றி மார்க்கோபோலோ குறித்தவற்றில் முக்கியமானவை கீழே,

* தமிழக அரசர்களும் பிரபுக்களும் தரையிலேயே எப்போதும் அமர்கின்றனர்.
கேட்டால் "மண்ணில் அமர்வதே பெருமை! மண்ணிலிருந்து தோன்றினோம்! இறந்த பிறகு மண்ணுக்குள்ளேதான் போகப்போகிறோம்" என்று பதிலளித்தனர்.

* தமிழகம் வெப்பமான பிரதேசம்.
மெல்லிய ஆடைகளே அனைவரும் உடுத்துகின்றனர்.
அரசனும் அவ்வாறே. ஆனால் அவனது ஆடையில் நவரத்தினம் பதிக்கப்பட்டு இருந்தது.

* வர்த்தகம் சிறந்து விளங்கியது.
இரவிலும் பயணிகள் நெடுஞ்சாலைகளில் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு பயமில்லாமல் பயணம் செய்கின்றனர்.

* நான் பயணம் செய்த இடங்களிலேயே தமிழகம்தான் செல்வச் செழிப்பான இடம்.
(தமிழகம் வரும் முன்பே ஐரோப்பா முதல் சீனா வரை பயணம் செய்தவர்)

* உலகிலேயே பெரும்பான்மை முத்துக்களும் ரத்தினங்களும் தமிழகம் மற்றும் இலங்கையில்தான் கிடைக்கின்றன.

* பொதுவான தமிழர்கள் மது அருந்துவதில்லை

* அரிசி மட்டுமே பயிரிடப்படும் ஒரே தானியம்

* தமக்கென்று தனியே ஒரு குடுவை வைத்துக்கொண்டு அதிலே தண்ணீரை சேமித்து வைத்து பருகுகின்றனர்.
அதை உதடு படாமல் பருகுகின்றனர்.

* வெற்றிலை, சுண்ணாம்பு, வாசனை திரவியங்களுடன் தாம்பூலம் போட்டு கண்ட இடங்களில் துப்புகின்றனர்.

* அவமானப்படுத்த காறித் துப்பும் வழக்கம் உள்ளது.
இதனால் சண்டைகள் வருகின்றன

* ஆருடம் பார்ப்பது, குறிகேட்பது, சகுனம் பார்ப்பது ஆகியனவற்றில் உலகிலேயே அதிக கவனம் செலுத்துவோர் தமிழர்களே.

* முத்துக்குளிக்க செல்பவர்களை சுறாமீன் தாக்காமல் இருக்க பார்ப்பனர்கள் கரையில் மந்திரம் ஓதுகின்றனர்.
20 முத்துக்கு ஒரு முத்து சம்பளமாகப் பெறுகின்றனர்.

* தமிழர்கள் போரிட ஈட்டியும் நீண்ட கேடயமும் பயன்படுத்துகின்றனர்.
பெரிய பலசாலிகள் என்று கூறமுடியாது.

* பசுக்களை தெய்வமாக வணங்குகின்றனர். மாட்டிறைச்சி தின்பதில்லை

* கடல் தாண்டி பயணிப்பது வறுமையின் அடையாளமாக எண்ணுகிறார்கள்.

* உடலுறவின்போது எந்த விதமாக உறவு கொண்டாலும் தவறாக பார்க்கப்படுவதில்லை
(அந்த காலத்து ஐரோப்பா கிறித்துவ மதவெறி ஓங்கி எப்படி உடலுறவு கொள்ளவேண்டும் என்றெல்லாம் சட்டம் போட்டிருந்த காலம்)

* மாதம் ஒருமுறை கன்னிப் பெண்கள் கூடி தெய்வங்களுக்கு உணவும் மாமிசமும் படைத்து ஆடி பாடி வழிபடுகிறார்கள்.
இது தெய்வக்குற்றம் ஆகாமல் இருக்க செய்யப்படுகிறது.
அடுத்தநாள் பூசாரி தெய்வங்கள் இறங்கி வந்து படையலை ஏற்றுக்கொண்டு அருள்பாலித்ததாக கூறுகிறார்.
(மார்க்கோபோலோ தீவிர கிறித்தவர் அதனால் பிற மதங்களையும் சடங்குகளையும் அவர் சிறிது மதிப்பு குறைவாகவே குறித்துள்ளார்)

* கருப்பு நிறமாக இருப்பது அதிகம் மதிக்கப்படுகிறது.
குழந்தை பிறந்தவுடன் வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுகின்றனர்.
இதனால் குழந்தை அதிக கறுப்பு நிறத்துடன் வளருமாம்.
கடவுள்களை கறுப்பு நிறமாகவும் சாத்தான்களை பனி போல வெண்மையான நிறமாகவும் உருவகப்படுத்துகின்றனர்.

* துறவிகள் பரவலாக காணப்படுகின்றனர்.
காய்ந்த இலைகளில் குறைந்த அளவு உணவு உண்டு 200 ஆண்டுகள் வரை கூட வாழ்கின்றனர்.
நிர்வாண யோகிகள் உண்டு.
ஆணுறுப்பை பாவத்திற்கு பயன்படுத்தாத்தால் அதை மறைப்பதில்லை என்று கூறுகின்றனர்.
எல்லா உயிர்களையும் ஆன்மா இருப்பதால் உயர்வாக மதிக்கின்றனர்

* அரசர்களுக்கு 500 மனைவிகள் வரை உண்டு.
பெண்களின் பொருட்டு இரண்டு சகோதரர்களுக்கு இடையே சண்டை வந்தால் அவர்களது தாய் தலையிட்டு சண்டையை நிறுத்தாவிட்டால் பாலூட்டிய மார்பகங்களை அறுத்தெறிவதாகக் கூறி சமாதானத்திற்கு தள்ளுகிறாள்

* தமிழகத்தில் குதிரைகள் இனப்பெருக்கம் செய்வதில்லை.
ஏடன் நாட்டிலிருந்து ஆண்டுக்கு சுமார் 2000 குதிரைகள் வந்திறங்குகின்றன.
சரியான பராமரிப்பு இன்றி அவற்றில் 100 குதிரைகள் மட்டுமே ஓராண்டுக்கு மேல் உயிருடன் இருக்கின்றன.
குதிரை வணிகர்கள் வேண்டுமென்றே குதிரை மருத்துவர்களை இங்கே அனுப்புவதில்லை.
இதனால் குதிரை விரைவிலேயே இறக்கும், அவர்களுக்கு வணிகம் பெருகும்.
ஒரு குதிரை 200 தினார் வரை விற்கப்படுகிறது.

* நான் பார்த்ததிலேயே காயல் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பழைய காயல்)
துறைமுகமே மிகப்பெரியது.
உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இங்கே கப்பல்கள் வருகின்றன.

* அரசர் தமிழகத்திற்கு வரும் வணிகர்களையும் மற்றவர்களையும் வெகுமதிகள் வழங்கி கவனிப்பதால் வெளிநாட்டவர் தமிழகம் வர ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

* அரசர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் திறமையாகவும் பாரபட்சம் காட்டாமலும் ஆட்சி செய்கிறார்.
அவரது ஸ்திரமான ஆட்சியால் கருவூலம் நிரம்பி வருகிறது.

இவ்வாறு தமிழகத்தின் நிலையை குறித்துள்ளார் மார்க்கோபோலோ.

அதாவது 725 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தில் ஓரளவு மூட நம்பிக்கைகளும்  பெண்ணடித்தனமும் நிலவியுள்ளது.
ஆனாலும் செல்வ செழிப்பும் ஒழுக்கமும் சமத்துவமும் நிலவியதாகத் தெரிகிறது.

ONGC எனும் அரச கார்ப்பரேட்

ONGC எனும் அரச கார்ப்பரேட்

சட்டவிரோதமாக எண்ணெய்க் கிணறுகள்

* தமிழகம் முழுவதும் ONGC க்கு எத்தனை எண்ணெய்க் கிணறுகள் உள்ளன?

701 கிணறுகள்

* அதில் உரிமம் பெற்றவை எத்தனை?

218 கிணறுகள்

* 701 கிணறுகளில் எத்தனை இயங்குகின்றன?

183 கிணறுகள் இயக்கத்தில் உள்ளன.

* இயங்கும் கிணறுகளில் எத்தனை அனுமதி பெறப்பட்டவை

71 கிணறுகள்

* என்றால் ONGC எனும் மத்திய அரசாங்க நிறுவனம் சட்டவிரோதமாக தமிழகத்தில் 483 கிணறுகள் அமைத்துள்ளதா?

ஆம்.

* அவற்றில் 112 கிணறுகள் சட்டவிரோதமாக இயங்கி எண்ணெய் எடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறதா?

ஆம். இங்கே அரசாங்கமே கார்ப்பரேட் போல செயல்படுகிறது.
சொல்லப்போனால் கார்ப்பரேட் பரவாயில்லை.

* நல்லவேளை 218 கிணறுகளாவது அனுமதியுடன் இயங்குகிறதே!
ஆமாம், அந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இன்னும் எத்தனை காலத்திற்கு?

அது காலாவதி ஆகி பல ஆண்டுகள் ஆகின்றன

* என்றால் ஓ.என்.ஜி.சி யின் அனைத்து கிணறுகளும் சட்டத்திற்கு புறம்பானவையா?

ஆம்.
இது ONGC யின் கணக்கு மட்டும்தான்.
என்றால் பிற நிறுவனங்களையும் சேர்த்தால்?!
மேற்கண்டவை தமிழகத்தின் கணக்கு மட்டும்தான் பிற மாநிலங்களையும் சேர்த்தால்?

அருந்ததி ராய் கூறியதுபோல இந்தியா தன்னைத்தானே தின்னும் மிருகம்

Monday, 12 March 2018