Saturday, 20 July 2024
தொண்டனின் மனநிலை
Sunday, 1 December 2019
15 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் பேட்டி கண்ட சீமான்
15 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் பேட்டி கண்ட சீமான்
2004 லேயே சீமான் அண்ணன் புலிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
புலிகளுக்காக அவர் அளித்த பேட்டியை இங்கே இணைத்துள்ளேன்.
ஆம்.
தமிழினத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு
புலிகள் நடத்திவந்த "நிதர்சனம்" தொலைக்காட்சி 2 மணிநேரம் நீளமுள்ள ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டது.
(அதன் தலைப்பு "தலைநிமிர்வு" என்பது.
இணையத்தில் அது Prabhakaran undying symbol of tamil resistance என்ற பெயரில் இருந்தது.
தற்போது நீக்கப்பட்டுவிட்டது.
ஆனால் என்னிடம் உள்ளது.)
இந்த ஆவணப் படம் பல அரிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம்
ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றையும்
தலைவரது வாழ்க்கை வரலாற்றையும்
எடுத்துரைக்கிறது.
அப்போது புலிகளுக்கும் இலங்கைக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து போர் ஓய்ந்திருந்த காலம்.
புலிகள் இலங்கை அரசுக்கு சமமான பலத்துடன் உலக நாடுகள் ஏறத்தாழ அங்கீகரித்துவிட்ட ஒரு அரசாங்கத்தை நடத்தி வந்தனர்.
அப்போது வெளியிடப்பட்ட இந்த ஆவணப் படத்தில் தலைவரை வாழ்த்தி 2 சிங்களவர் உட்பட 36 பேர் பேசியிருக்கின்றனர்.
அதில் 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
அண்ணன் சீமானும் அதில் பேசியிருக்கிறார்.
இந்த 13 பேரில் தலைவரை ஈழத்திற்கு சென்று நேரடியாகச் சந்தித்தோர் பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் ஆகிய நால்வர் மட்டுமே!
அதில் பேட்டி அளித்தோர் முழுப் பட்டியல் வருமாறு
1. மறவன்புலவு திரு.சச்சிதானந்தம் (தமிழகம்)
2. திருமதி. தாமரைச் செல்வி
எழுத்தாளர்
3. திரு. மருசலீன்
மாவீரர் லெப்.கேணல் விக்டரின் தந்தை
4. ஜனாப். சலீம்
பத்திரிக்கையாளர்
5. திரு. தர்மலிங்கம்
மூத்த பத்திரிக்கையாளர்
6. திரு. காசி ஆனந்தன்
உணர்ச்சிக் கவிஞர்
7. திரு. புகழேந்தி
கவிஞர் (தமிழகம்)
8. திரு.வேணுகோபால்
ஆசிரியர்
9. திரு.வை.கோபாலசாமி
பொதுச் செயலாளர் - ம.தி.மு.க (தமிழகம்)
10. திரு.முல்லைமணி
எழுத்தாளர்
11. திரு.சதாசிவம்
மாவீரர் லெப். அருச்சுனாவின் தந்தை
12. இன்குலாப்
கவிஞர் (தமிழகம்)
13. திரு.சீமான்
திரைப்பட இயக்குனர் (தமிழகம்)
14. வைத்தியர். ஜெயகுலராசா
வைத்திய அதிகாரி
15.திரு.கனகரவி
ஊடகவியலாளர்
16. திருமதி. மனோன்மணி சண்முகதாஸ்
விரிவுரையாளர் - யாழ் பல்கலை
17. திரு. சூரியதீபன்
(தமிழகம்)
18. மோகனதாஸ்
துணைவேந்தர் - யாழ் பல்கலை
19. திருமதி. யோகம்மா
20. திரு. சித்தி.அமரசிங்கம்
எழுத்தாளர்
21. திரு. அறிவுமதி
கவிஞர் (தமிழகம்)
22. ஜனாப். அப்துல் சயான்
23. திரு. டி.சிவராம்
இராணுவ ஆய்வாளர்
24. திரு. சுப. வீரபாண்டியன்
தமிழ் தமிழர் தேசிய இயக்கம் (தமிழகம்)
25. திரு. கலாநிதி விக்கிரபாகு குணரட்ண
26. திரு. தணிகாசலம்
கவிஞர்
27. ஆண்டகை. இராயப்புஜோசப்
ஆயர். மன்னார்
28. பாஷண அபேய குணவர்த்தன
பத்திரிக்கை ஆசிரியர்
29. திரு.தியாகு
தமிழ் தமிழர் இயக்கம் (தமிழகம்)
30. திரு. திலகவதி
எழுத்தாளர்
31. திரு. சந்திரசேகரன்
32.திரு. மனோ கணேசன்
33. திரு. பழ.நெடுமாறன்
தலைவர் - தமிழ் தமிழர் இயக்கம் (தமிழகம்)
34. திரு. ராமதாஸ்
தலைவர். பா.ம.க (தமிழகம்)
35. திரு. திருமாவளவன்
தலைவர் வி.சி. (தமிழகம்)
36. திரு. மணியரசன்
தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி (தமிழகம்)
இதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து 2008 இல் புலிகள் திரைப்படம் எடுத்த போது சீமான் அங்கு சென்றார்.
அப்போது தலைவரையும் சந்தித்தார்.
புலிகளின் முப்படையில் ஒன்றான கடற்படையின் தலைவர் திரு. சூசை அவர்கள் கடைசி குரல்பதிவில் "சீமானை முன்னெடுக்க சொல்லு" என்று கூறியுள்ளார்.
இந்த பதிவு இப்போது ஏனென்றால்
சீமான் பற்றி புலிகளுக்கு எதுவுமே தெரியாது என்றும்
அவர் ஏதோ கேமரா பிடிக்க போனபோது தற்செயலாக தலைவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது போலவும் பதிவுகள் வருகின்றன.
சீமான் அண்ணனை தர்க்க ரீதியாக எதிர்கொள்ள முடியாமல்
வெறும் நக்கல் நையாண்டி செய்தே வீழ்த்திவிடலாம் என்கிற எண்ணத்தில் சிலர் அலைகின்றனர்.
சீமான் மீது வைக்கப்படும் உருப்படியான விமர்சனங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் மற்றபடி எல்லாமே நக்கல் நையாண்டி பதிவுகள்தான்.
அவர்களுக்கு உரைக்கவே இந்த பதிவு.
சீமான் புலிகளின் ஆள்தான்!
https://m.facebook.com/story.php?story_fbid=2024288354341474&id=100002809860739
Saturday, 23 March 2019
நாம்தமிழர் தோற்கவேண்டிய தொகுதி
நாம்தமிழர் தோற்கவேண்டிய தொகுதி
திருப்பெரும்புதூர் (ஸ்ரீபெரும்புதூர்) தொகுதியில் நாம்தமிழர் நிறுத்தும் வேட்பாளர் இரா.மகேந்திரன் எனும் மஹேந்தர் ஜெயின் ஒரு மார்வாடி.
இந்த உண்மையை நாம் தமிழர் கட்சியினர் மறைப்பதேன்?
வந்தேறிகளின் அடையாள மறைப்புக்கு உடைந்தையாக ஏன் இருக்கவேண்டும்?!
அந்த வேட்பாளர் அப்படி எதையாவது சாதித்தாரா என்றால் அதுவும் இல்லை.
பணக்காரன் என்பதற்காக இதைச் செய்கிறார்கள் என்றால் இது அப்பட்டபான (அரசியல்)விபச்சாரம்.
பிற மாநிலங்களில் உள்ள தமிழர் பகுதிகளில் கூட ஒரு கவுன்சிலர் பதவி நமக்கு கிடைப்பதில்லை.
ஆனால் இங்கே விரல்விட்டு எண்ணும் அளவுக்கு உள்ள ஒரு வந்தேறி மார்வாடிக்கு நேரடியாக அமைச்சர் நாற்காலி வரை சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது.
தமிழர்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்க அமைச்சர் பதவி மிக முக்கியம்.
ஹிந்திய ஜனநாயகத்தில் நமக்கு கிடைத்துள்ள அதிகாரப் பகிர்வே குறைவு,
அதுவும் வந்தேறிகளின் கைகளில்.
இதற்கு மாற்றாக நாம்தமிழரை ஆதரித்தால் அதுவும் வந்தேறிகளை தலையில் தூக்கிக்கொண்டு வருகிறது.
நாம் எங்கேபோய் முட்டிக்கொள்ள?!
சீமானிடம் இத்தகைய சகிக்கவே முடியாத குறைகள் இருக்கின்றன.
எனவே பெரும்புதூரில் நாம்தமிழர் படு மோசமாகத் தோற்கவேண்டும்.
இதன்மூலம் சீமானுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்கவேண்டும்.
Thursday, 14 March 2019
நாம் தமிழருக்கே ஆதரவு
நாம் தமிழருக்கே ஆதரவு!
நாம்-தமிழர் எத்தனையோ குறைகளைக் கொண்டிருந்தாலும்
பிற கட்சிகளுடன் ஒப்பிடும்போது நூறு மடங்கு அதிகம் தமிழருக்கு நன்மை பயக்கும் என்றே தோன்றுகிறது.
ஒரு மாற்றத்தைக் கொண்டுவர இரண்டு செயல்பாடுகளைச் செய்யவேண்டும்.
முதலாவது குறைசொல்லுதல்!
இரண்டாவது தீர்வு சொல்லுதல்!
முதலாவதை பலரும் சிறப்பாகச் செய்கின்றனர்.
தோலுரிக்கச் சொன்னால் துகிலுரித்து விடுகின்றனர்.
குறை சொல்வதை அதாவது விமர்சிப்பதை பல்வேறு கட்சிகளும், இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளரும், சமூக வலைத்தள பதிவர்களும் ஏன் திரைத்துறையினரும் கூட திறம்பட செய்கின்றனர்.
ஆனால் தீர்வு சொல்ல எவராலும் முடிகிறதா என்றால் கட்டாயம் இல்லை.
ஏனென்றால் முதலாவது எளிது.
இரண்டாவது கடினம்.
திரைத்துறையினர் இதற்கு முயற்சித்துள்ளனர்.
சர்கார், எல்.கே.ஜி என இவர்களால் நன்றாக துகிலுரிக்க முடிந்ததே தவிர சரியான தீர்வு சொல்ல முடியவில்லை.
ஆனால் நாம்தமிழர் அப்படியில்லை,
வசைபாடுவதோடு நிறுத்திக்கொள்ளமல் தீர்வையும் சேர்த்தேதான் பேசுகிறார்கள்.
அதில் நடைமுறைச் சிக்கல்கள் வரலாம்தான்.
அதற்காக அத்தீர்வுகளை முன்வைக்கும் இளைஞர்களின் கனவை புறந்தள்ள முடியாது.
என்னைக் கேட்டால் நாம்தமிழரின் தனித்துவம் இதுதான் என்று கூறுவேன்.
நாம்தமிழர் முதலில் நோட்டா வாக்குகளை தம் பக்கம் மாற்றவேண்டும்.
எவனோ "நோட்டா அதிகம் விழுந்தால் மத்திய அரசே ஆடிவிடும்" என்று பரப்பிய வதந்தி இன்று வரை வேலை செய்கிறது.
49-O மற்றும் 49-P ஆகியன எதற்குமே உதவாதவை என்கிற உண்மையை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்.
மற்றபடி பா.ம.க "மாதிரி அமைச்சரவை", "மாதிரி நிதிநிலை அறிக்கை" என மாற்று தீர்வுகளை முன்வைத்த செயல்பாட்டை வைத்து அவர்களை நாம்தமிழரின் முன்னோடியாகக் கூறலாம்.
பா.ம.க தாக்குப்பிடிக்க முடியாமல் சோரம்போய்விட்ட இன்றைய நிலையில் நாம்தமிழரை ஆதரிக்கவேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள் இருக்கிறோம்.
இல்லையென்றால் நா.த.க இன்னொரு பா.ம.க ஆகிவிடும்.
"சீமானை எனக்கு பிடிக்காது , அவ்வளவுதான்" என்று ஒரு வரியில் விவாத்தை முடிக்கும் மேதாவிகளுக்கு இரண்டாம் வாய்ப்பாக இருக்கவே இருக்கிறார் தினகரன்.
Wednesday, 13 June 2018
நாம் தமிழர் கைது படலம்
நாம் தமிழர் கைது படலம்
காவிரி மேலாண்மை வாரியத்திற்காக....
* கடந்த 10-04-2018 அன்று ஐபில் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் நடைபெற்ற போராட்டத்தில் சீமான் உட்பட 21 நாம் தமிழர் கட்சியினர் மீது கொலை முயற்சி (307) உள்ளிட்ட 8 பிரிவுகளில் 3 வழக்குகள்
* ஐபில் போட்டியினுள் காலணி வீசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த
1. பிரபாகரன்,
2. ஐயனார்,
3. பொன்னுவேல்,
4. மகேந்திரன்,
5. ராஜ்குமார்,
6. பிரகாஷ்
7. வாகைவேந்தன்,
8. சுகுமார்,
9. ஆல்பர்ட்,
10. ஏகாம்பரம்,
11. மார்டின் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டன.
* 10-04-2018 அன்று மாலை 04 மணியளவில் போராட்டத்தில் பங்கெடுக்கச் சேப்பாக்கம் தொடர்வண்டி நிலையம் வந்திறங்கிய ஆவடி நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த
1. ராஜேஷ்,
2. ஜெரால்ட்,
3. தனசேகர்,
4. நந்தகுமார்,
5. கார்த்திக்,
6. சரத்குமார்,
7. மணிகண்டன்,
8. சிவா,
9. சரவணக்குமார்,
10.பிரதீப்
ஆகியோர் கைது செய்யப்பட்டு அடுத்த நாள் காலையில் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கொலைமுயற்சி உட்பட 10 பிரிவுகளின் கீழ் பொய்வழக்கு பதியப்பட்டது.
அனைவரும் 15 நாள் தடுப்புக்காவலில் சிறையிலடைக்கப்பட்டனர்.
* 10-04-2018 அன்று மாலை கடலூரில் காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி கர்நாடக பேருந்தை மறித்துப் போராடிய
1.கடல்தீபன்,
2.கு.சாமிரவி,
3.சுரைன்குமார்,
4.நாராயணசாமி,
5.நாராயணன்,
6.தனசேகரன் ஆகியோரை கைதுசெய்தனர்.
இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கடல்தீபன் மீது கடுஞ்சட்டமான குண்டர்சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
* ஐபில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மைலாப்பூர் தொகுதி பொறுப்பாளர் ஸ்டாலின் அவர்களை 14-04-2018 அன்று நள்ளிரவில் காவல்துறை கைது செய்தது.
மேலும் ரூபன்,வினோத், சாரதி, சுபாகரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு 10-04-2018யில் போடப்பட்ட கொலைமுயற்சி முதல் தகவல் அறிக்கையில் இணைத்து சிறையிலடைத்தனர்.
* 40 நாள் கழித்து 21-05-2018 அன்று சென்னை ஐபிஎல் வழக்கில் காவலரை தாக்கியதாக அம்பத்தூர் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த கதிர்வேலனை காவல்துறை கைதுசெய்தது.
* பிறகு 31-05-2018 அன்று ஐபில் போராட்டத்தில் வன்முறையில் இடுபட்டதாகத் தேடப்பட்டுவந்த மதன்குமார் சரணடைய வந்தபோது அவரை தாமே பிடித்ததாகக் கூறி அவர்மீது சங்கிலி பறித்ததாக வழக்குப் பதிவுசெய்து சிறைப்படுத்தி கையை உடைத்துள்ளனர்.
கழிவறையில் வழுக்கி விழுந்து கை உடைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளார்.
* ஐபில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 9-06-2018 அன்று நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை பொறுப்பாளர் சிவராசன் கைது செய்யப்பட்டார்.
அவர்மீதும் 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
---------------------
மோடிக்கான எதிர்ப்பு...
* 12-04-2018 பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11-04-2018 அன்று நள்ளிரவில் நாம் தமிழர் கட்சியினர்
1. அன்புதென்னரசன்,
2. எஸ்.கே சிவக்குமார்,
3. விக்னேஷ்
4.ராஜாராமகிருஷ்ணன்,
5. கணேசன்,
6. ராம்ராஜ்,
7. சிவக்குமார்,
8. ஞானசேகரன்,
9. சத்தியமூர்த்தி,
10. கோகுலகிருஷ்ணன்,
11. ஜீவா,
12. சீமான் சுரேஷ்,
13. இராயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இரவோடு இரவாக 15 நாள் தடுப்புக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அனைவரின் மீதும் பொய்வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
* பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி 12-04-2018 அன்று, சென்னை விமான நிலையம் அருகே கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததற்காகக் கைது செய்யப்பட்ட சீமானை விடுவிக்க பல்லாவரம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தின் முன்பு கூடியோர் மீது தடியடி நடத்தி நடிகர் மன்சூர் அலிகான் உட்பட கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது போன்ற பொய் வழக்குகள் புனையப்பட்டன.
அன்று கைதானோர்
1. வீரபாண்டியன்,
2. சரவணன்,
3. ரூபன்,
4. ஆகாஷ்,
5. பாபுராசன்,
6. ரங்கசாமி,
7. சீனிவாசன்,
8. அருண்கண்ணன்,
9. முரளி,
10. பொன்குமார்
அனைவரையும் 15 நாள் தடுப்புக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
-----------------
நெய்வேலி மின்சாரத்தை தடுக்க...
* 7-05-2018 அன்று பிணையில் விடுதலைப் பெற்றிருக்கவேண்டிய கடல்தீபன் மீது திட்டமிட்டு நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பேசியதற்காகத் தேச துரோக வழக்கு (124A) பதியப்பட்டு மீண்டும் சிறைப்படுத்தப்பட்டார்.
------------
இனப்படுகோலை நாளன்று...
* 18-05-2018 மே18 இனஎழுச்சி பொதுக்கூட்டம் சோழிங்கநல்லூரில் நடைப்பெற்றது.
அந்த நிகழ்வில் பேசிய நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை மாநிலச்செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் நள்ளிரவு 12.30 மணிக்கு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்.
எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத அவர் மீது கைது செய்யும் பொழுது காவல் அதிகாரிகளைத் தாக்கியதாகப் பொய்வழக்குகளைப் புனைந்து குண்டர்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தியுள்ளனர்.
----------
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து...
* 19-05-2018 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஹைட்ரொகார்பன் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் நூறாவது நாள் நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கும்போது முன்பாகவே அதே விமானத்தில் வந்திருந்த வைகோ அவர்களை வரவேற்க வந்திருந்த ம.தி.மு.க. தொண்டர்கள் காத்திருந்து நாம்தமிழர் கட்சியரைத் தாக்கினர்.
சீமான் தலைமையில் ம.தி.மு.க.வினர் தாக்கப்பட்டதாக
1.வினோத்(எ)அலக்சாண்டர்,
2.மதியழகன்,
3.நாகேந்திரன்,
4.சதிஷ்குமார்,
5.மணிகண்டன்,
6.சஜில்,
7.குணா
ஆகியோர் மீது பொய்வழக்குகளைப் பதிவுசெய்து காவல்துறை சிறைப்படுத்தியது.
மேலும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 8 பேர் மேல் காவல் அதிகாரி வண்டியை சேதப்படுத்தியதாகப் பொய் வழக்குப் புனையப்பட்டது.
* இதையும் மீறி கதிராமங்கலம் போராட்டத்தில் கலந்துகொண்ட சீமான் அண்ணன் உள்ளிட்ட 26 பேர் வழக்குப் பதியப்பட்டது.
* இரண்டு நாள் கழித்து 21-5-18 அன்று
1.ராசா ஆனந்து,
2.தினேஷ்குமார்,
3.பிரதிப் ஆகியோரை கைது செய்து இந்தப் பொய்வழக்கில் இணைத்து சிறைப்படுத்தப்பட்டனர்.
----------
காடழித்து வரும் பசுமைச்சாலைக்கு எதிராக...
* 27-05-2018 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் சேலம் பசுமைவழி சாலை அமைக்கக்கூடாது என்று மனு கொடுக்கச் சென்ற
1.கந்தன்,
2.மோகன்ராஜ்,
3.ராமன்,
4.பிரகாஷ்,
5.சிவமுத்து,
6.வெங்கடேசன்,
7.மோகன்,
8.சதிஸ்குமார்,
9.தேசிகன்,
10.கேசவன்,
11.ஜெயச்சந்திரன்,
12.வடிவேல்,
13.கெளதமன்,
14.குரு,சாய்குமார்,
15.பெருமாள்,
16.துரைமுருகன்,
17.ஐயப்பன்,
18.பிரபு,
19.குமார்,
20.பாலாஜி,
21.அமீன்முகமது,
22.விஜயகுமார்,
23.சார்லஸ்,
24.தனபால்,
25.மாணிக்கம்,
26.பிரகலதா ஆகியவர்களைக் காவல்துறை கைதுசெய்து அனுமதியின்றிப் பேரணி வந்ததாகப் பொய் வழக்கு போட்டு கைது செய்து 15 நாள் சிறையிலடைத்தனர்.
இதில் ஒரு பெண்ணும் அடக்கம்.
* 08-06-2018 அன்று சேலம் எட்டுவழிச் சாலைக்கு எதிராகக் கூட்டத்திற்கு அனுமதி கேட்ட கட்சி பொறுப்பாளர் மாரி அவர்கள் போராட்டத்தைத் துண்டுகிறார், பாலத்திற்கு வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினார், அரசுக்கு எதிராகச் சதித்திட்டத்தில் ஈடுபடுகிறார் என்று பொய்யான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார்.
------------
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக...
* 22-05-2018 துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்ட பொதுமக்களின் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் தான் இப்போராட்டத்திற்கு மக்களைத் திரட்டியதாகப் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் திட்டமிட்டுச் சேர்க்கப்பட்டது.
30-05-2018 அன்று நாம் தமிழர்கட்சியின் மாநில ஒருங்கினைப்பளர்களில் ஒருவரான வியனரசு அவர்கள் கைதுசெய்யப்பட்டுப் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீதும் பத்திற்கும் மேற்ப்பட்ட பிரிவுகளின் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் பங்கேற்ற குற்றத்திற்கு அவர் தான் ஸ்டர்லைட் பணியாளர்கள் குடியிருப்பைக் கொளுத்தினார் என்று வழக்கு போடப்பட்டுள்ளது.
* 10-6-2018 அன்று தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றதற்காகத் தூத்துக்குடி நாம் தமிழர் பொறுப்பாளர் இசக்கித்துரை கலவரத்தில் ஈடுபட்டதாகப் பொய்வழக்குகள் பதிவுசெய்து அதிகாலையில் மூன்று மணிக்குக் கைதுசெய்யப்பட்டுப் பாளையங்கோட்டை சிறையில் சிறைப்படுத்தப்பட்டார்.
-------------
மேலும்....
வேலூர் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்புள்ளதாகக் கூறி நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த
1.விஜி,
2.சிவா,
3.விக்னேஷ் ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தொடர்ச்சியாகப் பொய்வழக்குகள் போடப்பட்டுத் தொடர் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
வேறு எந்த கட்சி மீதும் இப்படியான அடக்குமுறை இருந்ததில்லை
Friday, 25 May 2018
ஏகே74 உண்மை
ஏகே74
ண்ணன் சீமானை இழிவு படுத்துவதற்காக சவுக்கு சங்கர் போன்றவர்கள் AK 74 துப்பாக்கியே இல்லை என்பது போல் பதிவிட்டு வருகின்றனர்.
AK 74 துப்பாக்கி குறித்த தகவல்களின் சுட்டி இதோ.
https://en.wikipedia.org/wiki/AK-74
மேலும் 2009-ஆம் ஆண்டு புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் பட்டியலில் AK-74 ரக துப்பாக்கிகளும் அடங்கும்
(பார்க்க படம்).
அண்ணன் சீமானை பற்றி வதந்தி பரப்புவதே முழுநேர வேலையாக கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் அதன் உண்மைத்தன்மை ஆராய்ந்து பேச வேண்டும்.
நன்றி: Karthik Ganesan
Thursday, 29 March 2018
குடகு
62 ஆண்டுகள் முன்பு வரை கர்நாடகாவின் பாகமாக இராத பகுதி குடகு.
1956 ல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தமிழகத்துடன் இணைய விரும்பிய பகுதி குடகு.
காவிரி உற்பத்தி ஆகும் இடமான தலைக்காவிரி இருக்கும் பகுதி குடகு.
கன்னடரை விட தனித்துவமான தேசிய இனமாக இருந்தாலும் கர்நாடகாவுடன் சேர்க்கப்பட்டது குடகு.
காவிரிப் பிரச்சனைக்காக பதவியைத் தூக்கியெறிந்த அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி அதற்கு தீ்ர்வாகக் கேட்டது தனி குடகு.
மொழியும் கலாச்சாரமும் அழிந்து கன்னடவர் குடியேற்றத்தையும் ஆதிக்கத்தையும் சந்திக்கும் பகுதி குடகு.
நாளைய தமிழர்நாட்டின் ஒரு மாநிலம் குடகு.
(படம் உதவி: Veera VK)
செய்தி: காவிரி நீர் கிடைக்க குடகு போராட்டததுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்
வியனரசு பேட்டி
நாம் தமிழர் கட்சி
Saturday, 9 December 2017
நாம்தமிழர் தெலுங்கு பிரச்சாரம்
நாம்தமிழர் தெலுங்கு பிரச்சாரம்
ஆர்.கே.நகரில் நாம்தமிழர் மேடையில் தெலுங்கில் பேசி வாக்குசேகரித்த காணொளி பரவலாகி வருகிறது.
ஒரு தெலுங்கரை தெலுங்கு அடையாளத்தோடு கட்சியில் சேர்த்து
அவரைவிட்டு தெலுங்கில் பேசவைத்து தெலுங்கரிடம் ஓட்டுக் கேட்பது தவறில்லைதான்.
ஆனால் 'நாம் தமிழர்' என்று பெயரை வைத்துக் கொண்டு இவ்வாறு செய்வதற்கான அவசியம் என்ன என்றுதான் புரியவில்லை.
முதலில் தெலுங்கரைத் தவிர்த்துவிட்டு இங்கே அரசியல் செய்யமுடியாது என்ற நிலை இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழர் பாதிக்கு பாதி வாழ்ந்த எல்லைப் பகுதிகளை அண்டைமாநிலங்கள் பறித்துக்கொண்டுவிட்டன.
இதனாலேயே பிற மாநிலங்களை விட அதிக 'மண்ணின் மைந்தர் பெரும்பான்மை' தமிழகத்திடம் உள்ளது.
(இதையும் விடாது வந்தேறிகள் குடியேற்றம் தொடர்ந்து நடத்தப்பட்டு தமிழகத்தில் தமிழர் செறிவு நீர்த்துப்போக அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்படுகின்றன.
தற்போது 4 தொகுதிகளில்
நா.த.க முதலில் தமிழரை (மட்டும்) முழுமையாக ஓரணியில் திரட்டும் முயற்சியைச் செய்யுங்கள்.
வந்தேறிகள் கடைசியில் தானாக வந்து ஒட்டிக் கொள்வார்கள்.
பிறமொழியாளருக்கு இப்போதே (234 இல்) 15 இடங்களில் நிற்க வாய்ப்பு கொடுத்துள்ளோம் என்று உங்கள் வியனரசு வெளிப்படையாக கூறியுள்ளார்.
அவர்களெல்லாம் நீங்கள் அவரவர் மொழியில் பேசியதால்தான் உங்கள் கட்சி சார்பில் நிற்க முன்வந்தார்களா?
ஒருபேச்சுக்கு தெலுங்கர் 15% க்கு மேல் என்று வைத்துக்கொண்டாலும் அவர்கள் தமிழ் தெரிந்தவர்கள்தானே?!
தமிழிலேயே வாக்கு கேட்கவேண்டியதுதானே?!
தெலுங்கருக்கு உங்கள் கட்சி என்ன செய்யும்? அவர்களிடம் என்ன நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தமிழிலேயே விளக்குங்கள்.
இலங்கை உட்பட முழு தென்னிந்திய துணைக்கண்டமும் தமிழ் புரியும்.
எல்லாவனும் வெட்டி பந்தாவுக்கு தமிழ் புரியாதமாதிரி நடிக்கத்தான் செய்கிறான்.
நீங்கள் பிற மொழியில் பேசி வாக்கு கேட்பதை தமிழக எல்லைக்கு வெளியே வாழும் தமிழர்களிடம் வேண்டுமானால் செய்யுங்கள்.
ஆனால் தமிழகத்திற்கு உள்ளே தெலுங்கு பேசி உங்கள் கட்சியை வளர்க்கவேண்டிய அவசியம் இல்லை.
"இல்லைங்க!
எங்களுக்கு மொழிவெறி இல்லைனு வெளிய காட்டிக்கணும்!
தமிழர்கள் எங்க மேல வைச்சிருக்க நம்பிக்கை குறைஞ்சாலும் பரவாயில்ல!
தெலுங்கர் மனசுலயும் துண்டுபோட்டு வெப்போம்!" என்றால், நீங்கள் மாநில ஆட்சியைப் பிடிப்பது அதிசயமாக நடந்தாலும் நடக்கும்,
தமிழர் மனதில் இடம்பிடிப்பது நடக்காது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.