Friday 25 January 2019

தமிழன் ஸ்டிக்கர்ஸ்

தமிழன் ஸ்டிக்கர்ஸ்

இந்த படம் எடுக்கப்பட்டது பழைய கேரளா-தமிழ்நாடு எல்லையான பிராணூர் எனுமிடத்தில்.
(இதைத் தற்போதும் பார்டர் என்றே அழைக்கின்றனர்)

தமிழன் என்ற பெயரிடப்பட்டுள்ள இக்கடையின் உரிமையாளர் ஒரு இசுலாமியர் ஆவார்
(படத்தில் உட்கார்ந்திருப்பவர்).

சரி இந்த செங்கோட்டையை மலையாளிகளிடமிருந்து மீட்டு தமிழகத்துடன் இணைத்தது யார்?

ஒரு கிறித்தவரும் அவருடைய தளபதியான ஒரு இசுலாமியரும்தான்.

அன்று மார்சல் நேசமணியும் அப்துல் ரசாக்கும் போராடவில்லை என்றால் இன்று இப்பகுதிவரை கேரளா என்றாகியிருக்கும்.

அவர்கள் நினைத்திருந்தால் இந்த பகுதியை மீட்ட பிறகு மீட்கப்பட்ட மற்றொரு பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்கியிருக்க முடியும்.
ஆனால் அவர்கள் இப்பகுதியை திருநெல்வேலிக்கே கொடுத்துவிட்டனர்.

இதை இந்நேரத்தில் பதிவிடுவது ஏனென்றால்,

எப்போதும் பொங்கல் விழாவினையொட்டி தெருவுக்கு தெரு விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்.
கடந்த விநாயகர் சதுர்த்தியில் இந்து-முஸ்லீம் மதமோதல் நடந்த பிறகு இம்முறை அவ்விளையாட்டுகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் செங்கோட்டை முழுவதுமே பொங்கல் களையிழந்து காணப்பட்டது.

திருநெல்வேலி முழுக்க எத்தனையோ இந்து பண்டிகைகளும் இந்து மத ஊர்வலங்களும் ஆண்டு முழுவதும் நடக்கின்றன.
எப்போதும் எந்த அசம்பாவிதமும் நடந்ததில்லை.

திருநெல்வேலியில் தமிழகத்திலேயே அதிகமான முஸ்லீம்கள் வாழும் கிராமமான பொட்டல்புதூர் தர்காவில் நடக்கும் கந்தூரி (அல்லது சந்தனக்கூடு) விழாவில் லட்சக்கணக்கான இந்து மற்றும் முஸ்லீம்கள் ஒன்றுகூடி ஒற்றுமையாக கொண்டாடுகின்றனர்.
இதுவரை எந்த அசம்பாவிதமும் நடந்ததில்லை.

ஆனால் பத்து ரவுடிப்பயல்களை கூட்டி இந்து முன்னணி நடத்தும் விநாயகர் ஊர்வலத்தில் மட்டும் எப்போதும் கலவரம் வரும் பதற்றம் இருக்கிறது.
இம்முறை செங்கோட்டையில் கலவரம் நடந்தேவிட்டது.

இனி செங்கோட்டை இந்து இளைஞர்கள் இசுலாமியரை நோக்கி விரல் நீட்டும் முன்,
கேரளாவின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எல்லைகடந்து தப்பி வந்து  ஒற்றை ஆளாக தமிழகம் முழுவதும் சென்று ஆதரவு திரட்டி டெல்லி வரை சென்று பேசி செங்கோட்டை உட்பட 5 தாலுகாக்களை தமிழ்நாடு ஆக்கிய அப்துல் ரசாக்கை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அப்படியே மண்மீட்பு போராட்டத்தில் மலையாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 11 பேரில் பீர் முகமது என்கிற பெயரும் இருப்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

அப்படியே இந்த "தமிழன்" கடையையும் நினைத்துப் பார்க்கவேண்டும்.

திருந்த வேண்டியது அவர்கள் மட்டும் இல்லை.

இதே பார்டர் அருகில் "அரபி பாடசாலை" நிறுவி பிறமொழி வளர்க்கும் இசுலாமியரும்
பார்க்கவே அல்-கொய்தா தளபதி போல தாடி ஜிப்பாவுடன் அலையும் இசுலாமிய இளைஞர்களும்தான்.

20 ஜனவரி, பிற்பகல் 2:30 ·
தனியுரிமை: பொது

தேசிங்கு ராஜேந்தர் தெலுங்கு பேட்டி

தேசிங்கு ராஜேந்தர் தெலுங்கு பேட்டி

இதில் சரளமாகத் தெலுங்கு பேசும் டி.ராஜேந்தர் தனது அரசியல் குரு மற்றும் திரைத்துறை குரு என்று குறிப்பிடுவது ஒரு தெலுங்கர்களை.

அவரது மனைவி நாயுடுபேட்டையில் பிறந்த தெலுங்கர் என்றும் கூறுகிறார்.
இன்னமும் தனது மனைவி வழி உறவினர் பலரும் ஆந்திரா முழுக்க இருப்பதாகக் கூறுகிறார்.

(தமிழர்கள் இதைக் காண நேரிட்டால் அவர்களைச் சமாளிக்க தன் தாய்மொழி தமிழ் என்று கூறுகிறார்)

1984 லேயே தனது 'பிரேம சாகரம்' (உயிருள்ளவரை உஷா) படத்தில் தொடங்கி தனது மகன் சிம்பு நடித்த வல்லபா(வல்லவன்) மன்மதா(மன்மதன்) வரை டப்பிங் செய்து தெலுங்கில் வெளியிட்டு அதற்கு தெலுங்கு மக்கள் அளித்த உறுதியான ஆதரவை நன்றியுடன் நினைவு கூறுகிறார்.

தெலுங்கு வந்தேறிகளின் தலைவன் பாதுகாவலன் கருணாநிதி தன் மீது காட்டிய பாசத்தையும் அளித்த பதவிகளையும் நினைவு கூறுகிறார்.

நான் ஏற்கனவே கூறியபடி டி.ராஜேந்தர் ஒரு பொட்டுகட்டி தெலுங்கர் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.

சிம்பு முழுத் தெலுங்கர் என்பதும் தற்போது வெட்டவெளிச்சமாக ஆகிவிட்டது.

முழு காணொளி : Exclusive Interview - Simbu's Father T.Rajendar || Sakshi Saradaga Kasepu - யூட்யூப்

https://m.facebook.com/story.php?story_fbid=1537590149677966&id=100002809860739

பதினேழாயிரம் ஆண்டுகள் முந்தைய பழந்தமிழர் பரவல்

பதினேழாயிரம் ஆண்டுகள் முந்தைய பழந்தமிழர் பரவல்

வரலாற்று ஆய்வாளர் H.G.Wells என்பவர் உலகில் மாந்தர் பரவல் பற்றிய தமது கருத்தை கீழ்க்கண்டவாறு முன்வைக்கிறார்,

"For thousands of years, from 15,000 to 10,000 BC., such a heliolithic Neolithic culture and its brownish possessors may have been oozing round the globe through the warmer regions of the word, drifting by canoes often across wide stretches of sea"

"கி.மு 15,000 முதல் கி.மு. 10,000 வரையான புதிய கற்கால (அல்லது கதிரவக் கற்கால) காலகட்டத்தில் பழுப்பு மேனியுடையோர் சிறிய ரக படகுகள் மூலம் கடலில் துடுப்பாட்டியே வெப்பநாட்டிலிருந்து உலகெங்கும் பரவினார்கள்"

அத்தோடு நில்லாமல் இந்த பழுப்பு மனிதர்கள் இந்தியா முதல் எகிப்து மற்றும் ஸ்பெயின் வரை தொடர்ச்சியாக வாழ்ந்ததாக பிற ஆய்வாளரும் கருதுவதாகக் கூறியுள்ளார்,

"Wilfred scaven Blunt says that huxley had a long suspected a common origin of Egyptians and Dravidians of india, perhaps along belt of brown skinned men from india to spain in very early days"

Book: The outline of History
Page: 138 & 140

(கால்டுவெல் காலத்திற்கு முந்தைய ஆய்வாளர்கள் 'தமிழிய' என்று அழைத்தனர்.
அவர் காலத்திற்கு பிறகே 'திராவிட' எனும் பொருத்தமற்ற பெயர் நம்மீது திணிக்கப்பட்டு அதுவே மேலைநாட்டார் வழக்கத்திலும் உள்ளது)

நன்றி: பழந்தமிழர் பரவிய நாடுகள் - பழ.நெடுமாறன்

Thursday 24 January 2019

இமயத்தைத் தோற்கடிக்கும் திறனுடையோர்

இமயத்தைத் தோற்கடிக்கும் திறனுடையோர்

சிங்களம் புட்பகம் சாவக மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு

விண்ணை யிடிக்கும் தலையிமயம் – எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு

சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு

செந்தமிழ் நாடெனும் போதினிலே– இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே

- பாரதியார்

Tuesday 8 January 2019

ராஜீவ் காந்தி மரணம் பற்றி நாஸ்டிரடாமஸ்

ராஜீவ் காந்தி மரணம் பற்றி நாஸ்டிரடாமஸ்

கி.பி. 1555 ஆம் ஆண்டு புகழ்பெற்ற தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ் வெளியிட்ட Prophecies என்கிற புத்தகம் உலகில் நடக்கப்போகும் பல விடயங்களைப் பூடகமாகச் சொல்லும் நூலாகும்.

அதில் ஒரு பெண்மணி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து 67 வயதில் சதிகாரர்களால் கொல்லப்படுவார் என்று இந்திரா காந்தி பற்றி கூறியுள்ளார்.

அவர் கூறியவற்றில் தெள்ளத் தெளிவாக உள்ளவை சில மட்டுமே!
அவற்றில் டயானா வுக்கு அடுத்து தெளிவானது ராஜீவ் காந்தி பற்றிய பாடல்.

அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வருமாறு,

The great pilot shall be sent for by royal mandate
(அரச ஆணையின் மீது ஒரு மாலுமி அல்லது விமானி)

to leave the fleet, and be preferred to a higher place,
(படைப்பிரிவை விட்டு விலகி, தலைமைக்கு உயர்வான்)

seven years after he shall be countermanded
(ஏழாம் ஆண்டில் கட்டளை ரத்தாகி)

a barbarian army shall put venice to fear
(காட்டுமிராண்டி படை வெனிஸ் நகரை பயத்தில் ஆழ்த்தும்)

இதில் கூறப்பட்டுள்ளபடி ராஜீவ் விமானியாக இருந்தார்.
இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு அவர் அரசியலுக்கு வந்தார்.

அடுத்த ஏழாவது ஆண்டில் அவர் பதவியை இழந்தார்.

ஈழத்தில் அவர் அனுப்பிய படை செய்த இனப்படுகொலைக்கு பழிவாங்க ஆயுதம் தாங்கிய படை (புலிகள் அல்லது வேறொரு ஈழ ஆயுதக் குழு) அவரைக் கொன்றது.

வெனிஸ் நகரம் என்பது இத்தாலியில்  சோனியா காந்தி பிறந்த (வெனிடோ) மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.