Saturday 29 June 2019

எழுவர் தூக்கு விடயத்தில் வஞ்சகம் செய்த கருணாநிதி - பழ.நெடுமாறன் எழுத்துகளில்

எழுவர் விடுதலையை தடுத்த" துரோகி கருணாநிதி"


எழுவர் விடுதலையை கருணாநிதி எப்படியெல்லாம் தடுத்தார் என்பது ஐயா பழ நெடுமாறன் எழுதிய நூலிலிருந்து நமக்கு தெளிவாகத் தெரிகிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் முழுதாக விடுவிக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டவர் ஐயா பழ நெடுமாறன் அவர்கள்.
அவர் இதற்காக பலரையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய சட்டப்போராட்டம் நடத்தி, இப்போது இருக்கும் எழுவரை தவிர மீதி உள்ளவர்களை விடுதலை செய்ததில் ஐயாவின் பங்களிப்பு முக்கியமானது.


அப்படியானவர் தூக்கு கொட்டடியிலிருந்த பேரறிவாளன் சாந்தன் முருகன் நளினி ஆகியோர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்து எப்படியாவது விடுவித்துவிட வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் என்னவெல்லாம் செய்தோம் என்பதை தினமணியில் கட்டுரையாக எழுதியுள்ளார். 

அதுவே தினமணி கட்டுரை என்ற நூலாக வெளிவந்துள்ளது. 

அதைப் படிக்கப் படிக்க, கருணாநிதி என்ற துரோகி எழுவர் விடுதலை விஷயத்தில் செய்த அத்தனை அயோக்கியத்தனத்தையும் புறிந்து கொள்ளமுடிகிறது.


சரி வாருங்கள் நூலுக்கு செல்வோம்.


-------


அவர்களை விடுவிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று புறப்பட்ட போது முதலாவதாக முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களின மருமகளும் மனித உரிமை ஆர்வலருமான மோகினி கிரி அம்மையார் அவர்களை சந்திக்க முடிவு செய்தோம் மோகினிகிரி சோனியா காந்தி அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று அறிந்து, நாங்கள் அவர்களை சந்தித்தால் இந்த வழக்கு விரைவில் முடித்து அவர்களை வெளியில் எடுத்து விடலாம் என்று நம்பிக்கையோடு நாங்கள் அவர்களை சென்று சந்தித்தோம்.


அவரிடம் இந்த நால்வரின் மரண தண்டனை தொடர்பாக பேசினேன்.
அதன் விளைவாக அவர் இந்த நால்வரையும் சிறையில் சந்திக்க விரும்பினார்


வழக்கறிஞர் கோபியுடன் அவரை வேலூர் சிறைக்கு அனுப்பி வைத்தேன்.
இந்த நால்வரையும் மற்றும் ஆயுள் தண்டனை பெற்ற மூவரையும் சந்தித்துப் பேசிவிட்டு வந்த அவர் பெரிதும் நெகிழ்ந்து போய் இருந்தார்.
அதிலும் கற்றறிந்த நளினியின் சந்திப்பு அவர் உள்ளத்தையும் மிகவும் தொட்டிருந்தது. என்னிடம் அவர்களைப் பற்றி மிகவும் பாராட்டிப் பேசினார்.
திருமதி சோனியா அவர்களிடம் இது குறித்து பேசுவதாக கூறினார். அதன்படியே பேசி திருமதி சோனியா அவர்களும் இந்த நால்வருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பினார்.

இந்த நால்வரின் சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பி வைத்தோம்


மேலும் டெல்லிக்கு சென்று பிரதமர் வாஜ்பாய் உட்பட அமைச்சர்கள் அனைவரையும் சந்தித்து முறையிடுவது என முடிவு செய்தோம், அதற்கிணங்க மணியரசன், தியாகு, கார்முகில் ஆகியோருடன் நானும் டெல்லி சென்று நண்பர் வைகோ அவர்களின் உதவியுடன் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, ராணுவத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ராம்ஜெத்மலானி மற்றும் பல்வேறு அமைச்சர்கள் அரசியல் தலைவர்கள் ஆகியோரை சந்தித்து மனுக்கள் அளித்தோம்.

சட்டத்துறை அமைச்சர் ஜெத் மாலினியை சந்தித்தபோது அவர் எங்களிடம்,

"ஏன் உங்கள் முதலமைச்சரே இதை செய்யலாமே என்று கூறினார்"


என்ன காரணத்தினாலோ அவர் தயங்குவதாக நாங்கள் தெரிவித்தபோது


"முதலமைச்சரின் தொலைபேசி எண்ணை கேட்டு வாங்கிக் கொண்டார், அவரே உடனடியாக அந்த எண்ணுடன் தொடர்பு கொண்டபோது சிறிது நேரத்தில் முதலமைச்சர் கருணாநிதி அவரிடம் பேசினார்


"எதற்காக தயங்குகிறீர்கள்" "தைரியமாக செய்யுங்கள்" " நான் உங்கள் பக்கம் இருக்கிறேன்" என்று ஜெத்மாலனி கூறினார் ஆனால் முடிவில்


"அவர் நீங்களே செய்யுங்கள் என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டார்" என்று எங்களிடம் கூறினார்.


திருமதி சோனியா காந்தி அவர்கள் நால்வருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று கடிதம் எழுதிய செய்திக்குப் பிறகு, நளினியின் தண்டனை மட்டும் குறைக்க கருணாநிதி முன் வந்தாரே தவிர மற்றவர்களின் தண்டனையை குறைத்து மரண தண்டனையை ஒழிக்க முன்வரவில்லை.


ஆனால் மரண தண்டனைக்கு எதிராக முழங்கியவர் கருணாநிதி.


ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட போது அதை கண்டித்தவர் கருணாநிதி.


பாகிஸ்தான் சிறையில் வாடும் சரண்தீப் சிங் தூக்குத் தண்டனையை குறைக்க உலகநாடுகள் குரலெழுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்து சிறந்த மனிதராக தன்னை காட்டிக் கொண்டவர் கருணாநிதி.


அண்மையில் சென்னையில் நடந்த மரண தண்டனைக்கு எதிரான கருத்தரங்கில் கலந்துகொண்ட முதல் அமைச்சரின் மகள் திருமதி கனிமொழி அவர்கள் தூக்கு மேடையின் நிழலில் நிற்கும் பேரறிவாளனின் நூலை வெளியிட்டு மரணதண்டனைக்கு எதிரான கருத்துக்களை கூறினார்.
இதன் மூலம் மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் புதிய நம்பிக்கை பெற்றார்கள்.


அண்ணா நூற்றாண்டில் தமிழ் நாட்டில் மரண தண்டனை பெற்றவர்கள் அனைவருக்கும் விடிவு காலம் பிறக்கும் என நம்பினர்.
ஆனால் அந்த நம்பிக்கை அடியோடு தொலைந்து விட்டது


உலக அளவில் மதிக்கப்படும் முன்னாள் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ண ஐயர் அவர்கள் அண்ணா நூற்றாண்டில் பேரறிவாளன் உட்பட மூவருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார்.
ஆனால் அந்த கடிதத்துக்கும் அவர் எந்த மதிப்பும் தரவில்லை.

17 ஆண்டுகாலத்திற்கு மேலாக சிறையில் வாடும் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என எழுத்தாளர்கள் கலைஞர்கள் கவிஞர்கள் கையெழுத்திட்ட வேண்டுகோள் கடிதத்தை தியாகு மற்றும் அவரது துணைவியார் திருமதி தாமரை ஆகியோர் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து கொடுத்த போது,


"தான் எதுவும் செய்வதற்கில்லை டெல்லி தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பிவிட்டார்.

எல்லோரிடமும் இவ்வாறு கூறுகிறார் இது உண்மையா இந்தக் கூற்றில் கொஞ்சமும் உண்மை கிடையாது.


கிரிமினல் சட்ட விதிகளின் மத்திய மாநில அரசுகளுக்கு பொதுவான பட்டியல் உள்ளன.
எனவே தமிழ்நாட்டில் மரண தண்டனையை ஒழிப்பது குறித்து சட்டத்தை தமிழக சட்டமன்றமே இயற்ற முடியும்


இதுதான் சட்டம் அறிந்த வல்லுனர்களின் கருத்தாகும்.
ஆனால் அவ்வாறு செய்வதற்கு முதலமைச்சருக்கு துணிவுமில்லை மனமுமில்லை


நால்வரின் கருணை மனுவை அன்றைய ஆளுநர் தள்ளுபடி செய்த போது உயர் நீதிமன்றம் அந்த ஆணை செல்லாது என்று தீர்ப்பளித்தது.
கருணை மனுக்கள் மீது முடிவு செய்யும் அதிகாரம் அமைச்சரவைக்கு உண்டு என்று கூறியும் அந்த அதிகாரத்தை பயன்படுத்த முதல்-அமைச்சர் கருணாநிதி முன்வரவில்லை அதைத் தட்டிக் கழித்தார்


அண்ணா நூற்றாண்டு விழாவிலும் அதையே செய்கிறார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநகராட்சி உறுப்பினரான லீலாவதியை பட்டப் பகலில் நட்டநடு வீதியில் படுகொலை செய்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட திமுகவினரை 7 ஆண்டுகளில் விடுதலை செய்ய அவரால் முடிகிறது இவர்களுக்காக ஆயுள் தண்டனை பெற்ற அனைவருமே 7 ஆண்டுகளில் விடுதலை பெற்று விட்டார்கள்.


தனது கட்சிக்காரர் களுக்காக சட்டத்தையே வளைத்தும், திறமை வாய்ந்த முதலமைச்சருக்கு நியாயத்தின் அடிப்படையில் கூட மரண தண்டனையை ஒழிக்க மனமில்லை.

வாய்ச்சொல் வீரராக சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப ஏமாற்றுபவராக விளங்கும் ஒருவரால் மனிதநேயத்தோடு ஒரு போதும் செயல்பட முடியாது என்பதைத்தான் அவர் நிரூபித்திருக்கிறார்.


பழ. நெடுமாறன்


தென்செய்தி


அக்டோபர் 1. 15. 2010


******************************

எம்மை பொறுத்தவரை கருணாநிதி ஒரு தெலுங்கு இனப் பற்றாளர்,
அத்தோடு சுயநலவாதி.
இந்த நால்வரையும் விடுதலை செய்தால் தனக்கு ஆயிரம் கோடி கிடைக்கும் என்றால் உடனே விடுதலை செய்திருப்பார்.


இல்லை பாதிக்கப்பட்டு தூக்கு கொட்டடியில் இருப்பவர்கள் தெலுங்கர்களாக இருந்தால் அவர் விடுதலை செய்து இருப்பார்.


கருணாநிதியை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.


தமிழர் அல்லாத அனைவருக்கும் மனிதநேயம் காட்டுவார், இரக்கம் காட்டுவார், எல்லாம் காட்டுவார்.
தமிழர்கள் என்றால் 'செத்து ஒழியட்டும் நாய்கள்' என்று இருப்பார் அந்த துரோகி கருணாநிதி


இந்த மண்ணில் பிறக்கின்ற பச்சைத் தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரும் இந்த கருணாநிதியின் துரோகம் பற்றியும்,
தெலுங்கு இன அரசியல் ஆதிக்கம் பற்றியும் தெரிந்து கொள்ளும் வரை எமது போராட்டம் தொடரும்.

அதியமான்

பொதுச் செயலாளர்


தமிழர் முன்னேற்ற கழகம்


Tuesday 18 June 2019

திருமூலர் பார்வையில் பார்ப்பனர்

திருமூலர் பார்வையில் பார்ப்பனர்

சித்தர்கள் பார்ப்பனர்களை எதிர்த்ததாக கூறும் பலர் காட்டும் முக்கிய சான்று திருமூலர் பாடிய ஒரு பாடல். அது வருமாறு,

"பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே."

இதன் பொருள் தம் பெயரால் மட்டுமே (அதாவது பெயருக்கு பார்ப்பனர் மற்றபடி ஒழுக்கமில்லாதவர்) பார்ப்பானராக இருப்பவர் இறைவனை அர்ச்சனை செய்தால் நாட்டுக்கும், அரசனுக்கும் வேதனைகளும், வியாதிகளும், பஞ்சமும் வந்துசேரும் என்பதை நந்தி என்பவர் கூறியதாக உரைக்கிறார்.

இந்த நந்தி யார்?
இவர் நிச்சயம் திருமூலரின் மதிப்பிற்குரிய குருவாகத்தான் இருக்கவேண்டும்.
இவர் இறைவனுடன் கலந்த அறவாழி 'அந்தணன்' என்றே திருமூலர் கூறுகிறார்.

"பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே."

பூசை செய்வோர் பற்றிய திருமூலரின் இன்னொரு பாடலைப் பார்ப்போம்.

"சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே"

சத்தியம், ஞானம், இறையுணர்வு, பக்தி, இறைவிசுவாசம் போன்றவை இல்லாமல் தன்னைத்தாமே பிராமணர் என்போர் பித்தேறிய மூடரேயன்றி பிராமணராகார் என்கிறார் திருமூலர்.

என்றால் தகுதியுள்ள பிராமணரிடம் உண்மை, அறிவு, இறையச்சம் ஆகியன இருக்கும் என்று அவர்களை உயர்வாகத்தானே கூறியுள்ளார்?!

(மாலைத்தென்றல் Subash Kumar அவர்களது பதிவின் தழுவல்)