Showing posts with label பிராமணர். Show all posts
Showing posts with label பிராமணர். Show all posts

Tuesday, 17 December 2024

ஈ.வே.ரா ஆதரித்த பிராமணர்கள்


ஈ.வே.ரா ஆதரித்த பிராமணர்கள்

"நெல்லூர் மகாநாட்டில் பார்ப்பனர்களை சட்டச்சபைக் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் தென்னிந்திய நல உரிமைச்சங்க நிர்வாக சபையின் பேரால் பிரேரேபிக்கப்பட்டு,
என்னால் ஆமோதிக்கப்பட்டு அது விஷயாலோசனைக் கமிட்டியில் ஒரு ஓட்டில் தோல்வியடைந்து விட்டது."
- ஈ.வே.ரா 'எனது தோல்வி' என்ற தலைப்பில் 'குடியரசு' ஏட்டில் 13.10.1929 இல் எழுதியது.

1929இல் செங்கற்பட்டில் ஈ.வே.ரா நடத்திய முதல் சுய மரியாதை மாநாட்டிலும் தெலுங்கரான மணத்தட்டை சேதுரத்தின ஐயர் தலைமை தாங்கினார்.
அதாவது இதற்கு முன்னர் மதுரையில் (1926) மற்றும் கோவையில் (1927 ) நடத்திய முதல் இரண்டு மாநாடுகளை 'பிராமணரல்லாதார் மாநாடு' என்று நடத்திய ஈ.வே.ரா மூன்றாவது மாநாட்டை 'சுயமரியாதை மாநாடு' என்று பெயர்மாற்றி ஒரு பிராமணரையே தலைமையும் தாங்கவைத்தார்.

1930ல் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டிலும் மணத்தட்டை சேதுரத்தின ஐயர் முன்னிலை வகித்தார்.

ஈ.வே.ரா வின் ஆதரவுடன் 1946ல் தெலுங்கு பிராமணரான தங்கதூரி பிரகாசம் பந்துலு (இடைக்கால) சென்னை மாகாண அரசின் தலைமை அமைச்சரானார்.

1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் சட்ட மன்றத் தொகுதியியல் சி.என்.அண்ணாத்துரையை எதிர்த்துக் காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான மருத்துவர் பி.எசு. சீனிவாசனை ஆதரித்து ஈ.வெ.ரா. நேரடியாகவே வாக்குக் கேட்டார்.
இருந்தாலும் அண்ணாதுரை வென்றார்.

இதே 1957இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட பி.பாலசுப்பிரமணியத்தை தோற்கடிக்க காங்கிரஸின் காலில் விழுந்தார் ஈ.வே.ரா.
காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக்கேட்டார்.
அதோடு நில்லாது பி.பாலசுப்பிரமணியத்தைத் தோற்கடிக்க வேண்டுமென்றே சுயேட்சையாக எஸ்.இராமநாதன் என்பவரை என்ஜின் பெட்டிச் சின்னத்தில் போட்டியிட வைத்தார் ஈ.வே.ரா.

1967இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க உறுப்பினர் எஸ்.டி. சோமசுந்தரத்தை தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக காங்கிரசு கட்சியின் சார்பில் இந்திராகாந்தியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிராமணராகிய ஆர்.வெங்கட்ராமனை நேரடியாக ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக் கேட்டார்.
தேர்தல் பரப்புரை செய்த ஈ.வெ.ரா,
“கழுதைகளாக இருந்தாலும் பிராமணராக இருந்தாலும் எல்லாக் காங்கிரசு வேட்பாளர்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

13.11.2016 
திராவிடம் கூட்டுவைத்த பிராமணர்கள்
என்ற பதிவின் ஒரு பகுதி

Tuesday, 21 January 2020

வடவருக்கு தேவாரம் பயிற்றுவித்த இராசரான்

வடவருக்கு தேவாரம் பயிற்றுவித்த இராசரான்

தஞ்சை பெரியக்கோவிலில் காணப்படும் ராஜேந்திர சோழன் கல்வெட்டு, தேவாரம் பயிற்றுவித்த ஆசிரியருக்கு தந்த குருதட்சணையை விவரிக்கிறது.

இது அவரது 19 ஆட்சியாண்டில் அதாவது கி பி 1031 இல் வெட்டப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் ராஜேந்திர சோழனின் " திருமன்னி வளர " என்று தொடங்கும் நெடிய மெய்க்கீர்த்தி தொடரில் இந்த செய்தியும் இடம்பெறுகிறது .

இராசேந்திர சோழன் தனது 19 வது ஆட்சியாண்டில் 242 ம் நாளில் இந்த கொடை உத்தரவை பிறப்பித்தார்.
அதில் கங்கைகொண்ட சோழபுரத்து கோவிலின் உள்ளே அமைந்திருக்கும் முடிகொண்ட சோழன் திருமாளிகையின் வடபக்கத்தில் தேவாரம் பயிற்றுவிக்கும் கல்லூரி ஒன்று இயங்கியதும்
அக்கல்லூரியில் அரசர்களின் புதல்வர்கள், அமைச்சர், படைத்தலைவர் போன்ற அதிகாரிகளின் புதல்வர்களும் இன்னிசை கருவிகளுடன் அமைதியாக தேவாரம் கற்றுக்கொண்டதும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தேவாரத்தை பயிற்றுவித்த ஆசிரியரான குரு சர்வசிவ பண்டிதருக்கும்
அவரின் சீடர்களாக இருந்த ஆரிய தேசம், மத்திய தேசம், கௌட தேசம் முதலிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும்
நிறைந்த அளவான ஆடல்வல்லான் எனும் மரக்காலால் ஆண்டுதோறும் 2000 கல நெல்லை தட்சணையாக க் கொடுத்தார் என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது .

இந்த உத்தரவானது சூரிய சந்திரர் உள்ள அளவும் நிலை பெற்றிருக்கவேண்டும் என்று தெரிவிக்கிறது.
இந்த கல்வெட்டை செம்பியன் விழுப்பத்தரையன் என்பவன் எழுதியிருக்கிறான்.

இதில் சுவையான செய்தி அந்தக் கல்லூரியில் தேவாரம் பயிற்றுவித்த சர்வசிவ பண்டிதர் தமிழ் நாட்டை சேர்ந்தவராகத் தெரியவில்லை.
அவரது சீடர்களும் வட புலத்தை சேர்ந்தவராகவே உள்ளனர்.

இடைக்காலச் சோழர் காலத்திய சைவம் பாசுபதம், காளாமுகம், ஆகிய பல பிரிவுகளுடன் படர்ந்து இருந்தது தெரியவருகிறது .

சோழ நாட்டுடன் அன்றைய இந்தியாவின் பல வட மாநிலங்களும் ஆன்மீக ரீதியில் தொடர்புடன் விளங்கியது தெரியவருகிறது.
வட மாநிலத்தவரும் நமது தேவாரம் முதலியவற்றை பயிற்றுவிக்கும் விதத்தில் அவைகளை நன்கு பயின்றிருந்தனர் என்பதும் தெரிகிறது .

[கல்வெட்டு செய்தி:
முனைவர் ஜெகதீசன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டு இயல் கூறுகள்
பக்கம் 89]

பதிவர்: Annamalai Sugumaran

Saturday, 27 July 2019

இராசராசன் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பிராமணீயம் இல்லை - வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

இராசராசன் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பிராமணீயம் இல்லை
- வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

** ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாச்சேரி என்றும் பறைச்சேரி எனவும் தனித்தனியாக குறிக்கப்படுள்ளது **

** விஜயநகர காலத்திற்கு பின்புதான் (நாயக்கர் ஆட்சியில்) பறையர்கள் தீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டனர் **

**  சோழர் வழங்கிய நிலதானங்களில் 20% தான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது **

---------------

வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மே.து.ராசுகுமார் அவர்கள்,
""பிறகாலச் சோழர் கால வாழ்வியல்",
"சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்",
"தமிழகத் தொல் சாதியக் குடிகளின் மேலேற்றமும் கீழிறக்கமும்"
உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி உள்ளார்.

ராஜராஜன் சோழன் காலத்தில் தலித் என்று ஒரு பிரிவு இருந்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் மே.து.ராசுகுமார்.

சமீபத்தில் "சாதி ரீதியான ஒடுக்குமுறைகள், நிலப் பறிப்பு என ராஜராஜ சோழனின் காலம் இருண்டகாலமாக இருந்தது.
குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகம் நில உரிமையை இழந்தது ராஜராஜன் ஆட்சி காலத்தில்தான்"
என திரைப்பட இயக்குநர் ரஞ்சித் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார்.

இது தொடர்பாக வரலாற்றாசிரியர் மே.து.ராசுகுமார் அவர்களிடம் பேசினோம்.

"ஓர் அரசர் வாழ்ந்த காலத்தில் அந்த சமூகம் யாருடைய வர்க்க நலனை பாதுகாப்பதற்காக இருந்ததோ,
அந்த வர்க்க நலனை அரசர்கள் பாதுகாத்து கொண்டுதான் இருந்தார்கள்.
அதனை நாம் மறுத்துவிட முடியாது.
எந்த அரசரும் வர்க்க நலனுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.

ஆனால், அதே நேரம் தாங்கள் இருக்கின்ற சமூகத்தில் அன்றைய சமூக பொருளியல் நிலையில் அந்த சமூகத்தை அடுத்தக்கட்ட நகர்வுக்கு அந்த மன்னர்கள் எப்படி அழைத்து சென்றார்கள் என பார்க்கவேண்டும்.
அப்படிப் பார்த்தால்தான் ராஜராஜ சோழனின் பங்களிப்பை நாம் புறந்தள்ள முடியாது.

வேளாண் வளர்ச்சியில், தொழில்நுட்ப வளர்ச்சியில், நிலசீர்த்திருத்தத்தில் ராஜராஜ சோழனின் பங்களிப்பு மிகப்பெரியது.
அவரின் காலத்தில் நிலங்கள் முறையாக அளவிடப்பட்டது.
இதன் மூலமாக உற்பத்தி பெருகியது.

உற்பத்தி பெருக்கம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துமோ, அது அனைத்தும் ராஜராஜ சோழனின் காலத்திலும் ஏற்பட்டது.
உற்பத்தி பெருக்கம் பிற நாடுகளை பிடிக்க காரணமாக இருந்தது.

ஒரு அரசன் பிற நாடுகளை பிடித்ததை வைத்தே அவரை குற்றஞ்சாட்டுவோமாயின்,
இங்கு எந்த அரசரையும் புகழ முடியாது"
என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ராசுகுமார்.

பறையர் சமூகத்தை குறித்து விவரிக்கும் ராசுகுமார்,

"தீண்டப்படாதார் குறித்த குறிப்புகள் சில கல்வெட்டுகளில் உள்ளன. 
ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாசேரி என்றும் பறைசேரி எனவும் தனித்தனியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படியானால் பறையர்கள் தீண்டப்படாதவர்களாக அந்த காலக்கட்டத்தில் இல்லை என்றுதானே பொருள்?
எனவே பறையர்கள் அந்த காலத்தில் தீண்டப்படாதவர்களாக இல்லை எனலாம்.

அப்போது உற்பத்தி முறைக்குள் வராதவர்கள் வேண்டுமானால் தீண்டப்படாதவர்களாக கருதப்பட்டிருக்கலாம்.
அதாவது, வேட்டை சமூகமாக இருந்தவர்கள் தீண்டப்படாதவர்களாக இருந்திருக்கலாம்.

விஜயநகர காலத்திற்கு பின்புதான் பறையர்கள் தீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பது என் மதிப்பீடு" என்கிறார்.

மேலும்,
"இங்கு தவறான சில கற்பிதங்கள் நிலவுகின்றன.
பிராமணர்கள் கையில்தான் வளமான நிலங்கள் இருந்தன என்பது அதில் ஒன்று.
உண்மையில் அப்படியெல்லாம் இல்லை.

40 ஆண்டுகளுக்கு முன்பே அதனை பேராசிரியர் சுப்புராயலு உடைத்துவிட்டார்.
அவரது எம்.லிட் ஆய்வு சோழ நாட்டின் புவியியல் அரசியல் குறித்தது.

அதில்,
'சோழர் காலம் குறித்து கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில்
வெறும் இருபது விழுக்காடுதான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுத்த ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ளது எல்லாம் வேளாளர் சமூகத்தின் ஊர் பெயர்கள்'
என்று கூறியுள்ளார்.

பெரும் நிலப்பரப்பை பிடுங்கி பிராமணர்களுக்கு கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெறும் கற்பிதமன்றி வேறில்லை.
பிராமண ஆய்வாளர்கள் தங்களை மேன்மையாக காட்டிக் கொள்வதற்காக வளமான நிலங்கள் எல்லாம் தங்களிடம் இருந்தன என்று எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள் "
என்று கூறும் ராசுக்குமார் மேலும் விளக்குறார்....

"ராஜராஜ சோழன் காலத்தில் பிராமணர்களுக்கு நிலம் முழு உரிமையாகவெல்லாம் தரப்படவில்லை.
பங்குதான் தரப்பட்டது.
அதாவது விளைச்சலில் பங்குதான் கொடுக்கப்பட்டது.

இதுவும் எப்படி செயல்படுத்தப்பட்டது என்று பார்த்தால், நிலத்தை முழுவதுமாக வாங்கிக்கொண்டு அதில் உற்பத்தியில் ஈடுபட வேறொருவருக்கு கொடுத்து, அதிலிருந்து பங்குதான் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது.

இது 'குடிநீக்கி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது ஏற்கெனவே இருந்த  குடிகளை நீக்கி உற்பத்தியில் ஈடுபடும் வேறொரு குடிகளை அமர்த்துதல்.

சரி.
இதில் 'குடி' என்பது யார் என்பதை பார்க்க வேண்டும்.
'குடி' என்பது ஏதோ குறிப்பிட்ட சாதி அல்ல.
வேட்டை சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக மாறிய போது,
யார் நிலத்தை பண்படுத்தி அதை வேளாண்மை செய்வதற்கு ஏற்றவாரு மாற்றினார்களோ, அவர்களே 'குடி'.
அதாவது காடு கொன்று நாடாக்கியவர்கள்.
இந்த உழுகுடிகள் தான் குடிநீக்கம் செய்யப்பட்டார்கள்.

மற்றொருவகை 'குடிநீங்கா பிரமதேயம்'.
ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்காமல் அவர்களின் உற்பத்தியில் பிராமணர்களுக்கு பங்கை கொடுப்பது.

குடிளாக அனைத்து சமூக மக்களும் இருந்தார்கள்.
ஏதோ குறிப்பிட்ட சாதியின் நிலம் மட்டும் பறிக்கப்படவில்லை"
என்ற மே.து.ராசுக்குமார்,

ராஜராஜ சோழன் காலத்தில் நிலத்திற்கும் பிராமணர்களுக்கும் இருந்த தொடர்பை மேலும் விவரிக்கிறார்...

"சோழர் காலத்தில் பிராமணர்கள் உயர்நிலையில் இருந்ததுபோல ஒரு கருத்து நிலவுகிறது.
உண்மையில் அப்படியெல்லாம் இல்லை.
அனைத்து சமூகமும் அரசில் பங்கு வகித்ததுபோல, அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்கள்.
மற்றபடி இங்கு சிலர் நினைப்பது போல, சோழ ஆட்சியே பிராமணமயமாக இல்லை.

அப்போது நிலவிய நிலவுடமை அமைப்பில் நிலம் கையில் வைத்திருந்த வேளாளர்கள்தான் சமூகத்திலும், அரசிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்."
என்கிறார் ராசுக்குமார்.

நன்றி:
ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்? - வரலாற்று ஆய்வாளர் பேட்டி
- மு. நியாஸ் அகமது
பிபிசி தமிழ்
11 ஜூன் 2019

Tuesday, 18 June 2019

திருமூலர் பார்வையில் பார்ப்பனர்

திருமூலர் பார்வையில் பார்ப்பனர்

சித்தர்கள் பார்ப்பனர்களை எதிர்த்ததாக கூறும் பலர் காட்டும் முக்கிய சான்று திருமூலர் பாடிய ஒரு பாடல். அது வருமாறு,

"பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே."

இதன் பொருள் தம் பெயரால் மட்டுமே (அதாவது பெயருக்கு பார்ப்பனர் மற்றபடி ஒழுக்கமில்லாதவர்) பார்ப்பானராக இருப்பவர் இறைவனை அர்ச்சனை செய்தால் நாட்டுக்கும், அரசனுக்கும் வேதனைகளும், வியாதிகளும், பஞ்சமும் வந்துசேரும் என்பதை நந்தி என்பவர் கூறியதாக உரைக்கிறார்.

இந்த நந்தி யார்?
இவர் நிச்சயம் திருமூலரின் மதிப்பிற்குரிய குருவாகத்தான் இருக்கவேண்டும்.
இவர் இறைவனுடன் கலந்த அறவாழி 'அந்தணன்' என்றே திருமூலர் கூறுகிறார்.

"பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே."

பூசை செய்வோர் பற்றிய திருமூலரின் இன்னொரு பாடலைப் பார்ப்போம்.

"சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே"

சத்தியம், ஞானம், இறையுணர்வு, பக்தி, இறைவிசுவாசம் போன்றவை இல்லாமல் தன்னைத்தாமே பிராமணர் என்போர் பித்தேறிய மூடரேயன்றி பிராமணராகார் என்கிறார் திருமூலர்.

என்றால் தகுதியுள்ள பிராமணரிடம் உண்மை, அறிவு, இறையச்சம் ஆகியன இருக்கும் என்று அவர்களை உயர்வாகத்தானே கூறியுள்ளார்?!

(மாலைத்தென்றல் Subash Kumar அவர்களது பதிவின் தழுவல்)

Friday, 27 July 2018

சோழர்கள் வடநாட்டு பிராமணரைக் குடியமர்த்தினரா?

இராசேந்திர சோழன் 1080 வடநாட்டு பிராமணர்களை இங்கு இறக்குமதி செய்து அவர்களுக்கு 57 ஊர்களை 'திரிபுவனதேவி சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரில் தானமாக வழங்கியதாக ஒரு கருத்து திராவிட இயக்க தத்துவவாதிகளால் பரப்பப்பட்டு நிலவுகிறது…..

இது உண்மைதானா என்று அறியவேண்டி “கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி” என்ற சி.கோவிந்தராசன் எழுதி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்ட புத்தகத்தை இன்று ஒரு நண்பரிடம் ( காளிங்கன்) வாங்கிப் படித்தேன்…

அதில் இராசேந்திரச் சோழன் கி.பி.11ஆம் நூற்றாண்டில் தன் தாயான திரிபுவன மாதேவியின் பெயரில் 'திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்' என்னும் பெயரிட்டு தானமாக வழங்கிய 57 ஊர்களை தானமாகப் பெற்ற 1080 அந்தனர்களின் பெயர்கள் 57 செப்பேடுகளில் முழுமையாக பட்டியல் இடப்பட்டுள்ளன.

அதில் 1080 பார்ப்பனர்கள் (எட்டு பேர் தவிர அனைவரும் வைணவர்கள்) எவரும் வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டதாக கூறப்படவில்லை.
  ஒவ்வொருவரின் ஊர் மற்றும் கோத்திரம் சூத்திரம் தொடங்கி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலுள்ள ஊர் பெயர்கள் அனைத்தும் தமிழ் பெயர்களாகவே உள்ளன.
அதிலுள்ள அந்தனர் பெயர்கள் பட்டன் என்னும் தமிழ்ப் பார்ப்பனர்களின் ஒரு பட்டப் பெயரிலேயே முடிகிறது.

அவர்கள் அனைவரும் அவர்கள் வாழ்ந்து வரும் வளநாடு (அப்போது சோழ நாட்டின் தமிழகப் பகுதிகள் வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன), அதிலுள்ள ஊர், பிறகு கிராமம், பிறகு அவர்கள் கோத்திர சூத்திரப் பெயர்களுடன்( பல்லவர் காலத்தில் இருந்து தமிழ்ப் பார்ப்பனர்களுக்கு கோத்திரப் பெயர்களை சேர்த்துக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது), இயற்கைப் பெயர், பின் பட்டப் பெயர்களுடன் அழைக்கப்பட்டுள்ளனர்.

அனைவரும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து வந்த தமிழ் பார்ப்பனர்கள்தான்.
அவர்களையே இராசேந்திர சோழன் திரிபுவன சதுர்வேதி மங்கலத்தின் 57 ஊர்களில் குடியேற்றி நிலங்களை வழங்கியுள்ளான்.
இந்த 57 ஊர்களுக்கும் தலைமை ஊர் தான் கரந்தை.

அந்தச் செப்பேடுகளில் குறிப்பிடப் பட்டுள்ள சில பார்ப்பனர்களின் பெயர்கள் (எடுத்துக் காட்டாக சிலப் பெயர்கள் மட்டும்)....

1.”ராஜேந்திரசிம்ம வளநாட்டு தனியூர் வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்து பரத்வாஜ கோத்திரத்து ஆஸ்வலாயன சூத்திரத்து இறையானரை சூர் மதிசூதன் யக்ஞப் பிரிய பட்டனுக்குப் பங்கொன்று”
என்று ஒரு அந்தனனுக்கு வழங்கப்பட்ட விபரங்களுடன் தொடங்குகிறது.
அதாவது,
'ராஜேந்திரசிம்ம' என்ற வளநாட்டின்
'தனியூரில்' உள்ள
'வீரநாராயண சதுர்வேதி மங்கலம்' என்னும் ஊரைச் சேர்ந்த
'இறையானரை சூர் மதிசூதன்' என்ற இயற்பெயரையும்
'யக்ஞப் பிரியப் பட்டன்' எனும் பட்டப்பெயரைக் கொண்டவனுக்கு ஒரு பங்கு நிலமும் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த 7 முதல் 10 நபர்களின் பெயர்கள் என 1080 பார்ப்பனர்களின் பெயர்கள் உள்ளன.

அவர்கள் வாழ்ந்த தமிழக ஊர்கள் மற்றும் அந்தப் பார்ப்பனர்களின் பெயர்களில் சில….
2. நாலூர் நாராயணன்
3.வேலங்குடி நீலகண்டன்
3. இடையாற்று மங்கலத்து நந்தி நாராயணப் பட்டன்.
4. முடபுரத்து பய்யகுட்டி
5.திருவெண்காட்டடிகள் பட்டனம் பிதச புரியன்
6. பொன்னம்புரத்து பவக்ருதன்
7.அட்டாம்புரத்து வெண்ணையன்
8. திருவேழ்விக்குடி தஸ்புரியன்
9. அரணைபுரத்து நாராயணன்
10.ஒலிக்கொன்றை ஐயன் பெருமான் சிவன பட்டன்
11.காராம்பிச் செட்டுத்துரை அந்திக்குமரன்
12.பதம்புரத்து கபோதீஸ்வரன்
13.உறுப்புட்டூர்க் கேசவன்
14.கதறு முண்டூர் அக்குமரன்
15.திருமங்கலத்து நந்தியாலன்
16.பேரூர் நாராயணப் பட்டன்
17.தென்குன்றத்து எழுவடியான்
18.வேற்புரத்து நாராயணன்
19.குரவசரி நீலசிவன்
20.திருவெண்காடன் திருவரங்க தேவபட்டன்
21.இருங்கண்டி கிருஷ்ணன் கோவிந்த பட்டன்
22.திருமாலிருஞ்சோலை ஸகஸ்ரயன்
23.பெருமருதூர் பதபதி நாராயணப் பட்டன்
24.ஆதனூர் நக்கன் சோலைப் பிரான்
25.சிறுகொட்டையூர் நீலகண்டன்…

இது போல 1080 பேர்கள் வாழ்ந்த ஊர்களும் தமிழக ஊர்களே!
இவ்வாறிருக்க இவர்கள் வட இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பிராமணர்கள் என திராவிட இயக்க தத்துவவாதிகள் கூறுவது ஏன்?

இங்குள்ள பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல வடவர் என்று பொய் பரப்புரை செய்வதற்காகத் தானே?!

திராவிடப் பொய்களைத் தோலுரிப்போம்

நன்றி: பாண்டிய ராசன் சட்டத்தரணி

Tuesday, 15 May 2018

உலகில் 99 சதவீதம் பிராமணர்கள்!

உலகில் 99 சதவீதம் பிராமணர்கள்!

சமூக ஊடகங்களில் வலம்வரும் ஒரு புள்ளிவிபரம்,

கோயில்களில் 100% பிராமணர்கள்.
ஊடகங்களில் 90% பிராமணர்கள். 61% ஐ.பி.எஸ் பிராமணர்கள்.
70% ஐ.எ.எஸ் ஆபிஸர்கள் பிராமணர்கள்.
56% உச்சநீதி மன்ற நீதிபதிகள் பிராமணர்கள்.
40% உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிராமணர்கள்.
70% துணை வேந்தர்கள் பிராமணர்கள்.
54% தலைமைச் செயலர்கள் பிராமணர்கள்.
50% கவர்னர்கள் பிராமணர்கள்.
48% லோக்சபா உறுப்பினர்கள் பிராமணர்கள்.
36% ராஜ்யசபா உறுப்பினர்கள் பிராமணர்கள்.

இப்படி எல்லா துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் பிரமணர்கள் மக்கள் தொகையில் 3% மட்டுமே.

ஹா... ஹா.. ஹா..

கோயிலில் 100%  ஊடகத்தில் 90% என்று எதை வைத்து முடிவு செய்தார்களோ தெரியாது.

ஆனால் பிற பதவிகளை பற்றி  துல்லியமாகக் கூறமுடியும்.
--------
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 70% பிராமணராம்!

12.04.2014 ல் வெளிவந்த UPSC ரிசல்ட் படி மொத்த ஐஏஎஸ் 1122 பேர்.
பிராமணர்கள் 205 பேர்.
அதாவது 18% மட்டுமே.
70% என்பது பொய்.
அத்தனை பெரிய அதிகாரம் பிராமணர் கையில் நூறாண்டு பின்னால் போனாலும் இல்லை.

புள்ளிவிபரங்கள் படி,
1912 ல் 55%
1990 ல் 38%
2013 ல் 18%
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பிராமணர்கள்.

[Source: Punjab Monitor
Date: 13.04.2014
Article: RESULTS 2014 - BRAHMIN CONTINUE TO LEAD, SIKHS GOING DOWN]
------------------
எம்.பி பதவிகளில் 36% பிரமணராம்!

உண்மை என்னவென்றால் M.P பதவியில் பிராமணர்
1984 ல் 19.91%
1989 ல் 12.44%
1998 ல் 12.44%
1999 ல் 11.3%
2007 ல் 9%

[Source: Outlook India
Date: 04.06.2007
Article: Brahmins in India]
---------
உச்சநீதி மன்ற நீதிபதிகள் 56% பிராமணர்களாம்!

தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பட்டியல்,
இதிலுள்ளோர் துணைப்பெயர் (சாதி பட்டம்) மூலம் பிராமணர் யாரோ அவரை குறித்துள்ளேன்.

1 Dipak Misra (பி)
2 Jasti Chelameswar
3 Ranjan Gogoi
4 Madan Lokur
5 Kurian Joseph 
6 Arjan Kumar Sikri
7 Sharad Arvind Bobde
8 N. V. Ramana
9 Arun Kumar Mishra (பி)
10 Adarsh Kumar Goel
11 Rohinton Fali Nariman
12 Abhay Manohar Sapre
13 R. Banumathi
14 Uday U. Lalit
15 Ajay Manikrao Khanwilkar
16 Dhananjaya Y. Chandrachud
17 Ashok Bhushan
18 L. Nageswara Rao
19 Sanjay Kishan Kaul (பி)
20 Mohan Shantanagoudar
21 S. Abdul Nazeer
22 Navin Sinha 
23 Deepak Gupta
24 Indu Malhotra

அதாவது மூவர் மட்டுமே பிராமணர்.
(2, 3, 8, 14, 15, 16 ஆகியோரின் பெயர்களை வைத்து சாதியை அறியமுடியவில்லை.
இதில் பாதியை கணக்கில் எடுத்துக்கொள்வோம்)
ஆக எப்படிப் பார்த்தாலும் 24 இல் 6 பேருக்கு மேல் பிராமணராக இருக்க வாய்ப்பில்லை.
இது 25% வருகிறது.

[நன்றி: விக்கிபீடியா]
-------------

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 40% பிராமணராம்

உதாரணத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்தை எடுத்துக்கொள்வோம்.

2015 இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் மொத்தம் 44 நீதிபதிகள்.
இதில் இடவொதுக்கீடு படியான புள்ளிவிபரத்தின் படி,
28 பிற்படுத்தப்பட்ட28 பிற்படுத்தப்பட்டோர்
1 மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
9 பட்டியல் சாதியினர்
6 பேர் மட்டுமே முன்னேறிய சாதியினர்
இதில் பிராமணர் எவ்வளவு என்பது தெரியவில்லை.

எப்படி இருந்தாலும் 44 இல் 5 பேருக்கு மேல் பிராமணராக இருக்க வாய்ப்பில்லை.
இது 11% வரை வருகிறது.

[ Source: The Hindu
Date: 16.03.2015
Article: Judges, castes and social justice.
நீதித்துறையில் சாதிய ஒடுக்குமுறை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தபோது முன்னாள் நீதிபதி கே.சந்துரு தி ஹிந்துவுக்கு அளித்த பேட்டியிலிருந்து]
--------
கவர்னர்கள் 50% பிராமணர்களாம்!

தற்போதைய கவர்னர்கள் பட்டியல்,
இதிலுள்ளோர் துணைப்பெயர் (சாதி பட்டம்) மூலம் பிராமணர் யாரோ அவரை குறித்துள்ளேன்.

1. E.S Lakshmi Narasimhan
2. B. D. Mishra (பி)
3. Jagdish Mukhi
4. Satya Pal Malik
5. Balramji Dass Tandon
6. Mridula Sinha
7. Om Prakash Kohli
8. Kaptan Singh Solanki
9. Acharya Dev Vrat
10. N. N. Vohra
11. Droupadi Murmu
12. Vajubhai Vala
13. Palaniswamy Sathasivam
14. Anandiben Patel
15. Chennamaneni Vidyasagar Rao
16. Dr. Najma A. Heptulla
17. Ganga Prasad
18. Nirbhay Sharma (பி)
19. Padmanabha Balakrishna Acharya (பி)
20. Satya Pal Malik
21. V.P. Singh Badnore
22. Kalyan Singh
23. Shriniwas Dadasaheb Patil
24. Banwarilal Purohit (பி)
25. Tathagata Roy (பி)
26. Ram Naik
27. Dr. Krishan Kant Paul
28. Keshari Nath Tripathi (பி)

9, 17 ஆகிய பெயர்களை வைத்து சாதியைக் கணிக்கமுடியவில்லை.
எப்படிப் பார்த்தாலும் 28ல் 7 பேருக்கு மேல் பிராமணர் இல்லை.
இது 25% வரை வருகிறது.
-------------
சமூக வலையில் வலம்வரும் புள்ளிவிபரம் பொய்யென்று நிறுவ இந்த தகவல்கள் போதும் என்று நினைக்கிறேன்.

இந்திய அளவில் 3% இருக்கும் பிராமணர் 10-20 % வரை அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
இதுதான் பிராமண ஆதிக்கம்.

இது ஐந்து மடங்கு ஆறுமடங்கு பெருக்கிக் காட்டப்படுகிறது.

Sunday, 22 April 2018

காவிரிக்காக எந்த பார்ப்பனராவது குரல் கொடுத்துள்ளாரா?

காவிரிக்காக எந்த பார்ப்பனராவது குரல் கொடுத்துள்ளாரா?

1971ல் காவிரிக்காக முதன்முதலில் வழக்கு தொடுத்தவர் திரு. சீனுவாச ஐயங்கார்.
அவர் வழக்கு தொடுக்க போகும்போது கடைசி நேரத்தில் வந்து ஒட்டிக்கொண்டனர் கருணாநிதி மற்றும் முரசொலி மாறன்.

பிறகு இந்திரா காந்தி மிரட்டியதும் வழக்கை கருணாநிதி வாபஸ் பெற்றனர்.

அதன்பிறகு சீனுவாச ஐயங்காரின் மகன் மன்னார்குடி ரெங்கநாதன் 8.11.1983 ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு போட்டார்.
அதன் மூலம் 1991ல் (419 TMC தமிழகத்திற்கும் 270 TMC கர்நாடகத்திற்கும் என) கிடைத்த முதல் தீர்ப்புதான் அடுத்த 11 ஆண்டுகள் தடையில்லாமல் தண்ணீர் வரக் காரணம்.

இன்றும் தனது 82 வயதிலும் காவிரிக்காக துணிந்து களத்தில் நிற்கிறார் ரங்கநாதன்.

காவிரி பிரச்சனை தீவிரமடைந்துள்ள இந்த நேரத்தில் நாலுவரி எழுதி மீம்ஸ் போட்டுவிட்டு 'ஆண்டாளுக்கு போராடின அவா இதுக்கு வரலை' என்று பார்ப்பனரைத் திட்டும் போராளிகள்,
காவிரிப் பிரச்சனையில் ஆரம்பகட்டத்திலேயே வெறும் 40 விவசாயிகள் கொண்ட அங்கீகாரமே இல்லாத ஒரு சங்கத்தை வைத்துக்கொண்டு தன் மாநில அரசாங்கம் காலைவாரிய பிறகும் கர்நாடக மாநில அரசுக்கு எதிராக வழக்கு போட்டு நியாயம் வாங்கித் தந்தது ஒரு பார்ப்பனர் என்ற உண்மையை தயவுசெய்து அறிந்துகொள்ளவும்.

நன்றியில்லாத உலகம்!