Showing posts with label ஹிந்தியா. Show all posts
Showing posts with label ஹிந்தியா. Show all posts

Monday, 17 February 2025

தமிழை ஒழிக்கும் மும்மொழி கொள்கை

 தமிழை ஒழிக்கும் மும்மொழி கொள்கை 

 மத்திய அரசு என்ன மாதிரியான கல்விக் கொள்கையைக் கொண்டுவர நினைக்கிறது என்பதை ஏற்கனவே மத்திய அரசு சார்பில்  தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைக் கவனித்தால் விளங்கும்.
 தமிழகத்தில் 49 கேந்திரிய பள்ளிகள் இயங்குகின்றன.
 இதில் 109 இந்தி ஆசிரியர்களும், 53 சமஸ்கிருத ஆசிரியர்களும், 0 தமிழ் ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர்.
 
 ஆம்! இந்த கேந்திரிய பள்ளிகளில் தமிழ் பாடமோ, தமிழ் ஆசிரியர்களோ கிடையாது!
சமஸ்கிருதம் கட்டாயம்!
 
 28.01.2021 தேதியின்படி பெறப்பட்ட தகவலில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை இந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாய மொழி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மொழி பாடம் கட்டாயம் இல்லை என்றும், தமிழ்நாட்டில் 49 பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாய மொழியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறிப்பாக தமிழ் மொழியை கொண்டு கற்பிக்கும் ஒரு பள்ளி கூட இல்லை எனவும், சமஸ்கிருதத்திற்கு பதிலாக தமிழை தேர்வு செய்ய முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 தமிழ் மொழியே இல்லாத பள்ளிக்கு எதற்கு தமிழ் ஆசிரியர்கள் என்பது போன்று, தமிழ்நாட்டில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே கிடையாது என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 109 இந்தி ஆசிரியர்களும், 53 சமஸ்கிருத ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள் என தகவல் இடம்பெற்றுள்ளது.

 (இதுபற்றி திமுக எம்.எல்.ஏ எழிலன் நாகநாதன் ஆதரத்துடன் பேசியுள்ளார்.

 திமுக-வின் ஐடிவிங்க் இதற்கான தகவல் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்பட்ட அறிக்கையையும் வெளியிட்டுள்ளது)

 மும்மொழி என்பது மூன்றாவதாக ஏதாவது ஒரு இந்திய மொழி என்கிற போர்வையில் இந்தியைத் திணிக்கும் நோக்கம் கொண்டது!
 
 2020 இல் இதைக் கட்டாயமாக்கிய போது திமுக போதுமான எதிர்ப்பையும் காட்டவில்லை!
 அதன் பிறகும் சட்ட ரீதியான அல்லது அரசியல் ரீதியான எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை!
 இப்போது கல்வி நிதியை தரமுடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய பிறகு தூங்கிக் கொண்டிருந்த திமுக விழித்துக்கொண்டு அறிக்கை போர் நடத்துகிறது!
 

Sunday, 16 February 2025

10ரூ வரி வாங்கி 2ரூ ஒதுக்கும் ஹிந்தியா

வரிகள் மூலம் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு கொடுத்தது ரூ.8.04 லட்சம் கோடி ஒன்றிய அரசு திருப்பி தந்தது ரூ.1.58 லட்சம் கோடி: புள்ளி விவரத்தில் அதிர்ச்சித் தகவல்

12:16 am Feb 12, 2024 |

புதுடெல்லி: ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து கடந்த 2018-19 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரை 5 ஆண்டுகளில் ஜிஎஸ்டி மூலம் மொத்தம் ரூ.4,03,982 கோடி கிடைத்துள்ளது. இதுதவிர, தனிநபர், நிறுவனங்கள் மூலமான நேரடி வரி வசூலாக தமிழ்நாட்டில் இருந்து ரூ.4,00,672 கோடி கிடைத்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு ரூ.8.04 லட்சம் கோடி கிடைத்துள்ளது. ஆனால், இதே காலக்கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வரிப்பகிர்வாக ரூ.1,58,145.62 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து மாநிலங்களின் வரி வருவாய் வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால், அனைத்துத் திட்டங்களுக்கும் நிதித் தேவைக்கு ஒன்றிய அரசிடம் கையேந்த வேண்டிய நிலை மாநில அரசுகளுக்கு ஏற்பட்டு விட்டது. ஜிஎஸ்டியால் வரி வருவாய் மொத்தமாக முடங்கி விட்டபோதிலும், ஒன்றிய அரசு தர வேண்டிய வரிப்பகிர்வு போதுமானதாக இல்லை என மாநிலங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அதிலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி தருவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், ஒன்றிய அரசுக்கு கடந்த 2018-19 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரை மாநிலங்கள் மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வசூல், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மூலமான நேரடி வரி வசூல் மற்றும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளித்த வரிப்பகிர்வு விவரங்கள் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி மேற்கண்ட 2018-19 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் மொத்தம் ரூ.4,03,982.61 கோடி கிடைத்துள்ளது. இதுதவிர, தனிநபர், நிறுவனங்கள் மூலமான நேரடி வரி வசூலாக தமிழ்நாட்டில் இருந்து ரூ.4,00,672 கோடி என ெமாத்தம் ஒன்றிய அரசுக்கு ரூ.8.04 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இதில், ஒன்றிய அரசு இதே காலக்கட்டத்தில் ரூ.1,58,145.62 கோடியை தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது என புள்ளி விவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், மேற்கண்ட காலக்கட்டத்தில் பாஜ ஆளும் மாநிலங்களுக்கு அதிக வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, உத்தர பிரதேச மாநிலத்துக்கு மொத்த வரிப்பகிர்வாக ரூ.1,69,745.3 கோடியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. ஆனால், இந்த மாநிலம் மூலம் ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டி வருவாய் ரூ.3,48,159.87 கோடி கோடி மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், மேற்கண்ட 5 ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் இருந்து நேரடி வரி வசூல் ரூ.37,983.05 கோடி மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Wednesday, 14 August 2024

இந்தியா உடைவது ஏன் தேவை

இந்தியா உடைவது ஏன் தேவை?!

 குழந்தையிலேயே பள்ளிகளில் மூளைச்சலவை செய்யப்பட்டு "இந்தியா ஒற்றை நாடு" என்று நம்ப வைக்கப்பட்டு போலி தேசபக்தி ஊட்டப்பட்ட அப்பாவி இளைஞர்கள் ஒரு நிமிடம் இதைப் படியுங்கள்!
 இன்று நமக்கு இருப்பது இரண்டே வழிதான்!
ஒன்று இந்தியா என்கிற பெயரும் அமைப்பும் வாழ வேண்டும்
அல்லது அந்த அமைப்பில் சிக்கியுள்ள 140 கோடி மக்கள் வாழ வேண்டும்!
 இதில் நாம் எந்த வழியைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்?!
 இந்தியா என்கிற அமைப்பு நீடித்தால் அதன் பலன் சில லட்சம் எண்ணிக்கையுள்ள உயர்தட்டு ஹிந்தியர்களுக்கு மட்டுமே கிடைக்கும்! 
 இந்த அமைப்பை உடைத்து அதில் இருக்கும் இனங்களுக்கு நாடுகளை கொடுத்துவிட்டால் அந்த மாபெரும் அதிகாரப் பகிர்வு கோடிக்கணக்கான மக்களுக்கு அனைத்து வகையிலும் பலனளிக்கும்!
 வறுமை ஒழியும்! கல்வி கிடைக்கும்! பொருளாதாரம் மேம்படும்! வாழ்க்கைத் தரம் உயரும்! 
 ஆங்கிலேயர் காலத்தில் கூட இந்திய மன்னர்கள் ஆண்ட சமஸ்தானங்களில் காந்தி எந்த போராட்டமும் செய்யவில்லை!
 அன்று சமஸ்தானங்களுக்கு கிடைத்த அதிகாரப் பகிர்வு தரப்படும் என்றுதான் எல்லா இனங்களும் போராடியது!
 ஆனால் 1947 இல் அமைந்த இந்திய அரசமைப்பு அப்படியே ஆங்கிலேய சுரண்டல் அமைப்பின் நகலாக இருக்கிறது!
 அன்று தரப்பட்ட சில அதிகாரங்கள் கூட ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு விட்டன!
 நம் முன்னோர்கள் கனவு கண்ட இந்தியா இது இல்லை!
 அன்று நாம் எதிர்பார்த்து போல நமக்கு நாடு (அதாவது state) கிடைத்தது ஆனால் நாட்டுக்குரிய எந்த அதிகாரமும் இல்லாத நிர்வாகம் தரப்பட்டுள்ளது!
நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்!
 தமிழகத்தின் பார்வையில் பார்த்தால் மேலே ஹிந்திய மேல்தட்டு வர்க்கம் அது அப்பாவி ஹிந்திய மக்களை ஒன்று திரட்டி தென்னகத்தை ஒடுக்க அதை எதிர்க்காத தென்னைத்தார் இழப்பை ஈடுகட்ட தமிழகத்தை ஒடுக்குகின்றனர். தமிழக மக்கள் ஹிந்திய பொதுமக்களை விட மூன்று மடங்கு ஒடுக்குதலுக்கு ஆளாகின்றனர்.
 இது எல்லாமே இந்தியா என்கிற பெயரால் நடக்கிறது!
 இதன் மூலம் பெறப்படும் கொழுத்த லாபம் ஹிந்திய மேல்தட்டு வர்க்கத்தின் கருப்புப் பண சேமிப்பில் குவிகிறது.
 தமிழகத்தின் உள்ளேயும் ஒரு இந்திய சுரண்டல் அமைப்பு உள்ளது.
 இதில் மேல்தட்டு அதிகார வர்க்கம் கீழ்த்தட்டு பெரும்பான்மை மக்களை ஒடுக்கிறது. சாதி பேதமில்லாமல் தமிழக அடித்தட்டு மக்கள் நான்கு மடங்கு ஒடுக்கப் படுகின்றனர். இதற்குக் காரணம் இந்திய அமைப்பு மேல இருப்பதுதான்.
 இதற்கு வர்ணாசிரமம், பார்ப்பனீயம் என்று வெவ்வேறு பெயர் வைத்து திசைதிருப்பு கின்றனர்.
 உண்மையான ஆரியம் இன்றைய இந்திய அரசமைப்புதான்!
 இந்தியா என்கிற அமைப்பை உடைத்து மொழி அடிப்படையில் நாடுகளை அமைத்து அம்மொழி பேசும் இனங்களுக்கு தன்னாட்டை ஆளும் உரிமையையும் கொடுத்துவிட்டால் சில மோதல்கள் எழுந்தாலும் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்துவிடும்! 95% இந்திய குடிமக்களுக்கு நன்மையே நடக்கும்!
 இந்தியாவை உடைக்காமல் திருத்திவிடலாம் என்பது கனவிலும் நடக்காது!
 இது ஒரு தானியங்கி அமைப்பு (automatic system) போன்றது!
 மனிதர்கள் மாறினாலும் அமைப்பு மாறாது!
 இந்தியா கையெழுத்து இட்டுள்ள சர்வதேச ஒப்பந்தங்கள் படி தன் குடிமக்களுக்கு பிரிந்துபோகும் உரிமை தரவேண்டும்!
 ஆனால் அதை மீறி பிரிவினைவாத தடுப்பு சட்டம் போட்டு நமக்கு பிரிவினை பேசும் உரிமையை முதலிலேயே பறித்துவிட்டனர்.
 கைக்கெட்டும் தூரத்தில் ஈழத் தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்பட்டு கடைசியில் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டபோது கூட நம்மால் சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாமல் நின்றோம்!
 பாராட்ட ஒரு காரணமும் இல்லாமல் இந்த நாட்டைப் போற்றிப் பாடு என்றால் எப்படி முடியும்?! 
 ஆண்டுக்கு ஒருநாள் கூடி கொடியேற்றி கையில் ஒரு இனிப்பை தந்துவிட்டால் தேசப்பற்று ஆகிவிடுமா?!
மீதி 364 நாட்களில் ஏன் இந்த உணர்ச்சி காணப்படுவதில்லை!?
ஏனென்றால் இது உண்மையான உணர்ச்சி இல்லை!
 தமிழின இளைஞர்களே சிந்திப்பீர்!
உங்களுக்கு இந்தியா என்கிற பெயர் வேண்டுமா?! அல்லது இந்திய குடிமக்கள் நலம்பெற வேண்டுமா?!
 இந்தத் துணைக்கண்டத்தில் மூத்த இனமான தமிழினம் இந்தியாவை உடைத்து இந்திய மக்களை காப்பாற்ற முதல் அடி எடுத்துவைக்கட்டும்!
 இன்று இந்தியன் என்று அதிக உணர்ச்சி காட்டுபவனை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள் அவன்தான் இதன் பலனை அனுபவிப்பவன்! 
 அவனைத்தான் நாம் எதிர்க்க வேண்டும்! 
அனைவருக்கும் "மீண்டும் அடிமைப்பட்ட நாள்" ஆறுதல்கள்! 

எழட்டும் தமிழினம்!
உடையட்டும் ஹிந்தியா!
மீளட்டும் துணைக்கண்ட இனங்கள்!
அமைப்போம் தனித் தமிழர்நாடு!

Saturday, 29 June 2024

ஸ்டாம்ப் சைஸ் கோவணம் இந்த கப்

 


ஸ்டாம்ப் சைஸ் கோவணம்

 

 இதுவரை நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஹிந்தியா சாதித்ததை இங்கே பாருங்கள்.

கீ....ழே 58 வது இடம்!

 தென்னாப்பிரிக்கா எவ்வளவோ மேல்!

விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாத ஹிந்தியா இந்த கிரிக்கெட் என்கிற கேலிக்கூத்தில் வென்றது ஒரு ஸ்டாம்ப் ஐ வைத்து நிர்வாணத்தை மறைக்கும் முயற்சி!

 இந்த எழவிலும் 18 ஆண்டு தோல்விக்கு பிறகு வெற்றி!

இனியாவது சோம்பேறிகளின் பொழுதுபோக்கான கிரிக்கெட் பார்ட்டியில் கொட்டும் பணத்தை உண்மையான ஆரோக்கியமான விளையாட்டுக்கு கொடுத்தால் உலக அரங்கில் மானம் மிஞ்சும்! 

 ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் அரங்கில் பாரத மாதா பல நாடுகளால் மானபங்கம் அடைவதை ஹிந்தியர்கள் இனியாவது தடுப்பார்களா?! 

 இல்லை நடிகர் கோலியை நினைத்துக் கொண்டு கண்மூடி கவுந்து படுத்து விடுவார்களா?! 

 

Saturday, 2 March 2024

சாந்தன் இன்னொரு திலீபன்

சாந்தன் இன்னொரு திலீபன்

 அன்று திலீபன் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தபோது ஈவு இரக்கமே இல்லாமல் சாகவிட்டது ஹிந்தியம்!
 ஆனால் சாந்தனை 30 ஆண்டுகள் அனுஅனுவாக வதைத்து சாகும் தருவாயில் கொஞ்சம் கருணை காட்டியது ஹிந்தியம்!
 ஆனால் அதையும் விடாத திராவிடம் அவரை பிடித்து மேலும் வதைத்து அவர் குற்றுயிராக தன் ஊருக்குத் திரும்ப இருந்த கடைசி நாளில் கொன்று முடித்தது!

 பிரபாகரன் பிறந்த வயிற்றை வைத்திருந்தார் என்பதாலேயே பார்வதியம்மாள் மரணத் தருவாயில் சிகிச்சைக்கு வந்தபோது அவரைத் திருப்பி அனுப்பி கொன்ற திராவிடம் ஹிந்தியத்தை விட கொடூரமானது! 

 போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று வெளிப்படையாகவே கூறிய திராவிடம் சட்டத்திற்கு புறம்பாக ஈழத் தமிழரை வதைக்கவே கட்டியுள்ளது சிறப்பு முகாம் எனும் கொட்டடி சிறை!

  நீதிமன்றம் விடுதலை செய்த 5 பேரை சட்டவிரோதமான  கோட்டடியில் இறுக பூட்டி 2 பேரை சாகடித்துவிட்டது!
இன்னும் 3 பேர் சாவுக்கு காத்திருக்கின்றனர்!

 இதேபோல கர்நாடகா விலும் தூக்குமேடை வரை போன 4 தமிழர்கள் கதை இருக்கிறது!
 செய்யாத தவறுக்கு கைதாகி ஹிந்தியாவிலேயே அதிக நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு சாகடிக்கப்பட்டவர் வீரப்பன் அண்ணன் மாதையன்!

  கொட்டடியில் அடைக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரில் 2 பேர் இறந்துவிட்டனர். மீதி 2 பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் சிறையில் சாவின் விளிம்பில் நிற்கின்றனர்.

 தமிழர்களை 'வைத்திருந்து கொல்வது' ஹிந்தியமும் திராவிடமும் இன்பமடைய சிறந்த வழியா?!

 33 ஆண்டுகளாக பார்க்க முடியாத தன் மகன் வரப்போகிறான் என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கும் அந்த முதிய தாயின் கண்முன் உருக்குலைந்து இறந்த மகனது பிணத்தை போட்டு எக்காளமிட்டு சிரிக்கிறது திராவிடம்! 

கூடவே கைகொட்டி கூத்தாடும் இந்தியமும் சிங்களமும்!

 இதற்கு தீர்வு இல்லையா?!

இதற்குத்தானா தங்கை செங்கொடி தன்னை தீயில் போட்டு அலறி நம்மை அறியாமையில் இருந்து எழுப்பினாள்?!

 சங்கரலிங்கனார் தொடங்கி சாந்தன் வரை ஒரு தமிழன் அவன் இந்திய குடிமகனோ இலங்கை குடிமகனோ அறவழியோ ஆயுதவழியோ ஆணோ பெண்ணோ அப்பாவியோ எவனாக இருந்தாலும் வதைபட்டு சாவதுதான் விதியா?!

 
 

 

Wednesday, 24 January 2024

தமிழ்தேசிய பார்வையில் அயோத்தி பிரச்சனை

தமிழ்தேசிய பார்வையில் அயோத்தி பிரச்சனை

 முதலில் இயல்பிலேயே தனி நாடான தமிழகத்திற்கும் அயோத்தி பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை என்பதை கூறிவிடுகிறேன்.

 ஆனால் கரிகாலன் காலத்தில் இருந்து வள்ளலார் காலம் வரை தமிழ் இலக்கியத்தில் இராமன் பற்றி உயர்வான வகையில் குறிப்புகள் இருக்கின்றன என்பதையும் கூறிக் கொள்கிறேன்.

 இங்கே நாம் பேசப்போவது வடயிந்திய ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையேயான மோதல் பற்றி மட்டுமே!
 இந்த பிரச்சனையில் ஹிந்தி மொழிக்குடும்ப ஹிந்து மற்றும் முஸ்லிம்களுக்கும் தமிழக இந்து மற்றும் இசுலாமியருக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்கிற வகையில் வெளியில் நின்று (தமிழனாக) மூன்றாவது நபரின் பார்வையில் இதை அலசுகிறேன்.

 குழப்பத்தைத் தவிர்க்க இங்கே அயோத்தி என்றே தற்போதைய அயோத்தியைக் குறிக்கிறேன். அதன் பழைய பெயர் வேறு.

 அயோத்தி என்கிற பெயர் சிலப்பதிகாரத்தில் வருகிறது. இமயமலை அடிவாரத்தில் இருந்து கங்கை வரை ஔத் அல்லது அவத் எனும் பகுதி இருந்துள்ளது. ஔதி அல்லது அவதி வட்டார மொழி பேசப்பட்டது. இதுவே புராணங்களில் வரும் அயோத்தி நகரம் (இந்தியில் அயோத்யா) என்பதற்கு போதுமான சான்றுகள் இல்லை. 

 பாபர் மசூதிக்கும் பாபருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.
 இப்ராஹிம் லோடியை தோற்கடித்து பாபர் ஆட்சிக்கு வருகிறார். கிபி 1526 - 1530 என நான்கு ஆண்டுகள்தான் இவர் ஆட்சியே செய்கிறார். பாபர்நாமா என்று இவரது சுயசரிதை கூட இருக்கிறது. இவர் கோவிலை இடித்ததாக எந்த சான்றும் இல்லை. பொ.மு. 1528 இல் இவர் கோவிலை இடித்ததாக ஆங்கிலேயர் தமது அரசிதழில் தவறான கருத்தை பதிவு செய்ததே குழப்பத்திற்கு காரணம்!
 இது அவர்கள் ஆரம்பத்தில் சிதைந்து போன கல்வெட்டுகளை அரைகுறையாக ஆய்ந்து மொழிபெயர்த்தபோது ஏற்பட்ட தவறு.

 william foaster என்பவர்  'early travels of india' (1583-1619) எனும் புத்தகம் வெளியிட்டுள்ளார். இது அக்பர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த 7 ஆங்கிலப் பயணிகளின் குறிப்புகளின் தொகுப்பு ஆகும். இதில் அயோத்தி வருகிறது ஆனால் ராமர் கோவில் பற்றியோ அல்லது மசூதி பற்றியோ குறிப்பு எதுவும் இல்லை. ஆனால் இந்த 7பேரில் 2 பேர் இங்கே அழிந்து போன பழமையான ராணிச்சந்த் எனும் கோட்டையின் சிதிலங்கள் இருந்ததாக பதிவு செய்துள்ளனர். இதில் பிராமணர்கள் பானைகளை வைத்துக்கொண்டு வரும் பக்தர்களின் பெயரைக் கேட்டு ஏதோ சடங்கு செய்ததாகவும் பதிவு செய்கின்றனர்.
 அருகில் ஆறும் ஓடுவதால் இது இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது போன்ற சடங்காக இருக்கலாம்.
 மேலும் thomas coryat என்பவர் "உலகிலேயே முகலாயர் ஆட்சியில்தான் ஒரு கிறித்துவனாகிய நான் மதங்கள் பற்றி சுதந்திரமாக பேச முடிகிறது. இங்கு போல நான் முகமது (நபி) பற்றி பாரசீகத்திலோ(ஈரான்) துருக்கியிலோ பேசியிருந்தால் உயிரோடு கொளுத்தியிருப்பார்கள்" என்று 1620 களில் பதிவு செய்துள்ளார்.

 இதிலிருந்து பாபர் கோவிலை இடித்து மசூதி கட்டவில்லை என்பதும் அக்பர், ஜஹாங்கிர் காலம் வரை மதவெறியுடன் இல்லாமல் அரசாட்சி நடந்ததும் புலனாகிறது.

 கி.பி. 1660 இல் 15 கோவில்களை இடிக்கச் செய்தவர் அவுரங்கசீப். அயோத்தியில் மசூதி கட்டியவரும் இவராகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு உறுதியான சான்றுகள் இல்லை.

 கி்பி 1672 இல் லால் தாஸ் என்பவர் 'அவத விலாசம் (awadh vilas)' எனும் புத்தகத்தில் இந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று கூறுகிறார். இதிலும் கோவில் பற்றியோ மசூதி பற்றியோ குறிப்பு இல்லை. ஆனால் திடீரென்று அந்தப் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒருவர் எழுதக் காரணம் அங்கே ஓரு மசூதி கட்டப்படப் போவதாக தகவல் பரவியதால் இருக்கலாம். 

ஔரங்கசீப் பேரரசுக்கு அடங்கி ஆட்சி செய்த ராஜபுத்திர மன்னர் ஸவாய் ஜெய் சிங் (ஜெய்ப்பூர் நகரை நிர்மணித்தவர்)  என்பவர் ஆதரவுடன் கிபி 1717 இல் இந்த மசூதியின் முன்பும் பக்கவாட்டிலும் ஹிந்துக்கள் இடம் வாங்கி (கோவில் என்றில்லாமல்) அங்கே ராமர் கோட்டம் எனும் திடல், சீதை சமையலறை எனும் மேடை, அனுமன் வாயில் எனும் நுழைவு வாசல் என மூன்று சிறிய கட்டமைப்புகளைக் கட்டி பூஜைகள் நடத்தினர் என்று கூறுகின்றனர். இதற்கு சான்றுகள் இல்லை. ஜெய் சிங் காலத்தில் வரைந்த பாபர் மசூதி போன்ற மூன்று கோபுரம் கொண்ட கோவில் வரைபடம் கூட இருக்கிறது. இது பாபர் மசூதி கட்டப்பட்டதும் அது போல ஹிந்துக் கோவில் ஒன்று கட்டப்பட போடப்பட்ட திட்ட வரைபடம் போலவே தெரிகிறது.

 ஐரோப்பிய ஏசு சபை (european jesuit missionary) சார்பாக இந்த வட்டாரத்தில்  தங்கியிருந்த Joseph Tiefenthaler "ஔரங்கசீப் ராமரின் பிறப்பிடம் என்று நம்பப்படும் ராம்கோட் கோட்டையை இடித்து மசூதி கட்டினார் ஆனால் சிலர் பாபர்தான் இதைச் செய்தார் என்று கூறுகின்றனர்"  என 1767 இல் முதன்முதலாக பதிவு செய்கிறார்.

 [என்னுடைய யூகம் முகலாயர் வருகைக்கு முன்பே கங்கைக் கரையில் ஒரு சிறிய குன்றின் மீது அழிந்துபோன பழமையான  கோட்டையின் அஸ்திவாரம்  இருக்கிறது. ஊருக்கு வெளியே இருந்த அந்த இடத்தில் பிராமணர்கள் சில சடங்குகளைச் செய்து வந்துள்ளனர்.
 அந்த அஸ்திவாரத்தின் மேலே ஒரு மசூதியை ஔரங்கசீப் காலத்தில் முஸ்லிம் அதிகாரி யாரோ கட்டியிருக்கிறார்.
 இது கட்டப்பட்ட காலம் 1690-1710.
 அதைப் பார்த்து அதுபோல தானும் கோவில் கட்ட ராஜஸ்தான் மன்னர் திட்டமிடுகிறார்.
மசூதி இருக்கும் குன்றின் பெயர் ராம் கோட் என்று இருந்தது முதல் குழப்பத்திற்கு காரணம்.
 அப்பகுதி அவ்த் என்கிற பெயரில் வழங்கப்பட்டதும் புராணங்களில் ராமர் பிறப்பிடம் அயோத்யா என்று இருந்ததும் அடுத்த குழப்பம்.
 இந்த 'ராமர் பிறந்த இடத்தில் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டினர்' எனும் கருத்து ஏசு சபையின் மதமோதலை ஏற்படுத்தி மதமாற்ற உள்நோக்கம் கொண்டதாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்டதாக தெரிகிறது.
 தாங்கள் சடங்குகள் செய்யும் காலி இடத்தில் மசூதி வந்ததால் பிராமணர்கள் மேற்படி கருத்தை ஆதரித்து பேசத் தொடங்கியுள்ளனர்.]

  பிற்காலத்தில் தோன்றிய மசூதிகள் நல்ல வளர்ச்சி அடைந்திருக்க இந்த முகலாயர் கால மசூதி அந்த வட்டாரத்தில் கூட பிரபலம் ஆகவில்லை. வட்டார முஸ்லிம்கள் இந்த மசூதியை பெரிதாக ஆதரிக்கவில்லை. முஸ்லிம்கள் அங்கே மிகச் சிறுபான்மை என்பதும் ஒரு காரணம். ஊருக்கு வெளியே இது இருப்பதும் இதை பொதுமக்கள் அவ்வளவாக பயன்படுத்தாமல் விட்டுவிடக் காரணமாக இருக்கலாம்.

மசூதியின் முதல் புகைப்படம் (ஓவியம்) பொ.மு 1783 இல் william hodges என்பவர் வரைந்தது. இதுவே மசூதி இருந்தது பற்றிய முதல் வலுவான சான்று.
 
 முகலாயர் வீழ்ந்து ஆங்கிலேயர் ஆட்சி வந்தபோது இப்பகுதியில் அகழ்வாய்வு செய்யப்பட்டது.
 1813 இல் பச்சனான் (buchanan) என்பவர் இப்பகுதியில் கல்வெட்டு ஆய்வுசெய்து பாதியில் விட்டுவிட்டார் (இதை பிற்காலத்தில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் தேடி எடுத்த எழுத்தாளர் கிஷோர் குணால் என்பவர் அது தொடர்பான செய்திகளை வெளியிட்டார். அதில் சிதைந்து கிடந்த கல்வெட்டுத் துண்டுகளில் பாபர் பெயரும் ஔரங்கசீப் பெயரும் இருப்பதை கண்டறிகிறார். ஆனால் காலத்தை கணிக்க முடியவில்லை.
 அப்போதே அந்த மசூதி பராமரிப்பின்றி கல்வெட்டுகள் சிதைந்து போய் இருந்துள்ளன).

 அகழ்வாராய்ச்சி முடிவுகளை எதிர்பார்த்திருந்த இரு தரப்பினரும் ஏமாற்றம் அடைந்து அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
இதுவே ஹிந்து முஸ்லிம் என மதரீதியான சட்டரீதியான முதல் மோதல்.
  1838 இல் மான்ட்கோமரி மார்ட்டின் என்பவரை ஆங்கிலேயர் நியமித்து இது பற்றி அறிக்கை கேட்டனர்.
 இவர் விசாரித்து ஆராய்ந்து மசூதி இருந்த இடத்தில் கோவில் இருந்தது உண்மைதான் ஆனால் அதை இடித்து மசூதி கட்டியதாக கூறமுடியாது என்று குழப்பமான அறிக்கையை வெளியிடுகிறார்.
அதாவது அஸ்திவாரம் பழமையானது மசூதி கொஞ்சம் புதியது என்பதால் இப்படி கூறியிருக்கலாம்.
 ஆனால் அயோத்தி ஒரு ஹிந்துக்கள் பெரும்பான்மைப் பகுதி என இவர் குறித்துள்ளார். 
 
 இதுவரை சட்டப்படி அமைதி வழியில் நடந்த பிரச்சனை 1853 இல் முதன்முதலாக மசூதியில் இருந்து சிறிது தூரத்தில் இருந்த அனுமன் கோவில் மற்றும் அதை நிர்வகிக்கும் நிர்முகி அகாடா எனும் அமைப்பு 'ராமர் கோவிலை மீட்போம்' என்று மசூதியை நோக்கி பேரணியாக சென்றனர். இப்போது முதல் மதமோதல் ஏற்படுகிறது.
 அதாவது முதல் அடாவடியான நடவடிக்கையை ஹிந்துக்கள்தான் தொடங்கியுள்ளனர்.

 1855 இல் பதிலுக்கு 'அனுமன் கோவில் மசூதியை இடித்து கட்டியது' என்று ஷா குலாம் ஹுசைன் என்பவர் தலைமையில் 500 முஸ்லிம்கள் அனுமன் கோவிலை நோக்கி சென்றனர். அப்போது அங்கே 8000 ஹிந்து பைராகி சாமியார்கள் திரட்டப்பட்டு இருந்தனர். இருவரும் மோதிக்கொள்ள 75 முஸ்லிம்கள் இறக்கின்றனர். இதுவே முதல் ரத்தக் களரியான கலவரம் (இதற்குப் பிறகு முஸ்லிம்கள் ஏறத்தாழ கடைசிவரை களத்தில் இறங்கவே இல்லை).

 இதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் மசூதி நிலத்திற்கும் ஹிந்துக்கள் பூஜை செய்யும் இடத்திற்கும் இடையே தடுப்பு சுவர் கட்டுகின்றனர்.
 பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.

 1858 இல் பஞ்சாபில் இருந்து 25 பேர் கொண்ட சீக்கியர் குழு ஒன்று மசூதியை முற்றுகை இட்டு மசூதி வளாகத்தில் நுழைந்து வேள்வி நடத்துகின்றனர். மசூதி சுவர்களில் ராம் ராம் என்று எழுதுகின்றனர்.
 ஹிந்து பகுதியை மணல் நிரப்பி உயர்த்தி பூஜைகள் செய்கின்றனர்.
 
 இது பற்றி மசூதி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளிக்கிறது. பிறகு காவல்துறை வந்து சீக்கியர்களை அப்புறப்படுத்துகிறது.

 1885 இல் மகந்த் ரகுவர் தாஸ் எனும் ராமர் கோட்டத்து பூசாரி ராமருக்கு ஹிந்து இடத்தில் சிறிய கோவில் கட்ட அனுமதி கேட்டு வழக்கு போடுகிறார். 'அவர் நிலத்தின் முதலாளி இல்லை எனவே கோவில் கட்ட உரிமை இல்லை' என்று கூறி வழக்கு தள்ளுபடி ஆகிறது.

 வெகுகாலம் அமைதியாக இருந்த பின் 1934 இல் ஒரு பசு மாடு அயோத்தி அருகே ஷாஜகான்பூர் எனும் முஸ்லீம் பகுதியில் கொலைசெய்யப்பட்டு கிடக்கிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் கலவரம் வெடிக்கிறது.
 இப்போது ஹிந்துக்கள் திரண்டு வந்து மசூதியில் மதில் சுவரை உடைத்து மசூதியையும் இடிக்க முயற்சிக்கின்றனர். ஆங்கில அரசு கலவரக்காரர்களை அடித்து விரட்டி உடைந்த பகுதிகளை சரிசெய்து அளிக்கிறது.

 1949 இல் ஹிந்து அமைப்பு ஒன்று ராமர் கோட்டத்தில் ராமாயண கச்சேரி நடத்துகிறது இவர்கள் இரவோடு இரவாக பயன்பாட்டில் இல்லாத மசூதியின் உள்ளே திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்துவிட்டு சிலை தானே தோன்றியதாக வதந்தி பரப்புகின்றனர்
(இந்த சிலை கடைசி வரை அகற்றப் படவில்லை).
 
 இப்போதும் சன்னி வக்பு வாரியம் காவல்துறையில் புகார் அளிக்கின்றனர். மசூதி பூட்டப்படுகிறது. ராமர்சிலையை வெளியே எடுக்க நேரு மற்றும் வல்லபாய் படேல் உ.பி அரசுக்கு உத்தரவிட உ.பி மாநில அரசு கலெக்டருக்கு உத்தரவிட அதை நிறைவேற்ற மறுத்து அன்றைய வட்டார காவல்துறை தலைமை அதிகாரி மற்றும் கலெக்டர் ஆன கே.கே.நாயர் மறுக்கிறார். மக்கள் கூடும்வரை சிலையை எடுக்காமல் தாமதிக்கிறார். கடைசியில் ராஜினாமாவும் செய்கிறார். இதனால் சிறிது நாட்களில் ஹிந்துக்கள் பகுதியும் சேர்த்து பூட்டப் படுகிறது.

 ஆனாலும் பூசாரிகள் மட்டும் உள்ளே சென்று ராமர் கோட்டத்தில் பூஜை செய்ய அனுமதிக்கிறது. 

 இனி நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை இப்படியே தொடரும் என்று அறிவிக்கிறது்

 1950 இல் எல்லா வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே வழக்காக நடக்கிறது. ஹிந்து தலைமையாக நிர்மூகி அகாடா முஸ்லிம் தலைமையாக சன்னி வக்பு வாரியம் என வழக்கு நடக்கிறது.

 1984 வரை எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ரத யாத்திரை தொடங்குகிறது.
 வெவ்வேறு நகரங்களில் இருந்து ராமர் தேர் போன்று அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் ஊர்வலமாக அயோத்தி நோக்கி செல்கின்றன.

 இந்த நேரத்தில் ஹிந்து பொதுமக்கள் உள்ளே சென்று தங்கள் இடத்தில் பூஜை செய்யலாம் என்று தீர்ப்பு வருகிறது. 

 இந்த நேரத்தில் முஸ்லிம்கள் 'பாபர் மசூதி செயல் குழு' என்று ஒன்றைத் தொடங்கினர் ஆனால் ராமர் சிலையை அகற்ற கோரிக்கை வைத்ததைத் தவிர அவர்கள் பெரிதாக செயல்படவில்லை.

 1989 இல் பகவான் இராமர் இந்த வழக்கில் பங்கேற்கிறார். அதாவது கோவில் தொடர்பான வழக்குகளில் தெய்வத்தின் சார்பாக ஒரு பக்தர் ஆஜராகி கோவில் தரப்பு நியாயங்களை அந்த தெய்வம் வாதிடுவது போலவே வாதிடலாம் என்ற சட்டத்தை பயன்படுத்தி தியோகி நந்தன் அகர்வால் எனும் முன்னாள் நீதிபதி ராமரை இந்த வழக்கில் சேர்க்கிறார் (இந்த ராமர்தான் வழக்கை வெற்றி பெற்றதாக இறுதி தீர்ப்பு வந்தது)

 1989 கும்ப மேளாவில் ஹிந்து அமைப்புகள் கூட்டாக ராமர் கோட்டத்தில் அஸ்திவாரக் கல் வைக்கும் போராட்டத்தை அறிவிக்கின்றன. இதன்பிறகு சாமி கும்பிட வரும் பக்தர்கள் ஒரு செங்கலில் ராம் என்று எழுதி ராமர் கோட்டத்தில் வைத்தனர். இப்படி மூன்றரை லட்சம் செங்கற்கள் சேர்ந்தன. இதை உள்துறை அமைச்சர் முன்னிலையில் அடித்தளமாக அடுக்கி பூஜை செய்தனர்.

 இப்போது வாஜ்பாய் நீக்கப்பட்டு அத்வானி தலைமையில் பாஜக இந்த விடயத்தில் குதிக்கிறது.
இதற்கு காரணம் அன்று இந்த விடயத்தில் ஹிந்துக்கள் காட்டிய பேராதரவு.
  அத்வானி தலைமையில் மோடி திட்டமிடலில் VHP செய்தது போலவே குஜராத்தில் இருந்து ஒரு  ரத யாத்திரை அயோத்தி நோக்கி தொடங்குகிறது. இது செல்லுமிடங்களில் கலவரங்கள் மூண்டன இதனால் 1990 இல் இது பீகாரில் நுழைந்த போது லாலு பிரசாத் யாதவ் தடுக்கிறார். அத்வானியை கைது செய்கிறார்.

 ஆனாலும் RSS தொண்டர்கள் யாத்திரை நின்ற இடத்தில் இருந்து தொடங்கி அயோத்தி நோக்கி வந்தனர். தடைகளை மீறி ராமர் கோட்டத்துக்குள் நுழைய முயன்ற அவர்கள் மீது முலாயம் சிங் உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடக்கிறது. இதில் 30 பேர் உயிரிழக்கின்றனர்.

 2 தொகுதிகளை வென்றிருந்த பாஜக அடுத்த தேர்தலில் ஹிந்துக்களின் பேராதரவோடு நான்கு மாநிலங்களில் 85 தொகுதிகளில் வெல்கிறது. 

 1991 இல் உத்திர பிரதேச தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது.
கல்யாண் சிங் முதலமைச்சர் ஆகிறார். இவர் பிரச்சனைக்குரிய மொத்த நிலத்தையும் அரசின் சுற்றுலா தளம் அமைப்பதாக கூறி கையகப்படுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் ஒரு அறக்கட்டளைக்கு வெறும் ஒரு ரூபாய் க்கு குத்தகைக்கு விடுகிறார். இங்கே சுற்றுலா தளமாக ராமாயணப் பூங்கா வரவுள்ளதாக அறிவிக்கிறார். 

 இப்போதும் முஸ்லிம்கள் வழக்கு போடுகின்றனர். நீதிமன்றம் கல்யாண் சிங் முயற்சிகளுக்கு தடை விதிக்கிறது.  
 
 கல்யாண் சிங் இப்பகுதியில் இருந்த தடுப்பு வேலிகளை அகற்றி பாதுகாப்பைக் குறைக்கிறார்.

 1992 பிப்ரவரியில் RSS, VHP, BJP, Bajrang dal ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் கூடி மசூதியை உடைக்க திட்டம் தீட்டுகின்றனர்.

 இதை உளவுத்துறை மத்திய அரசிடம் கூறுகிறது ஆனாலும் காங்கிரஸ் அரசு பேசாமல் இருந்து விடுகிறது.

 கல்யாண் சிங் "ஆட்சியே போனாலும் ராமர் கோவில் கட்டுவேன்" என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்.

 1992 மத்தியில் VHP தலைவர் "மூன்று மாத காலத்திற்குள் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை என்றால் அடுத்த கட்டத்திற்கு செல்வோம்" என்று அறிவிக்கிறார்.

 VHP "மசூதி இருக்கும்வரை கோவில் கட்டமுடியாது" என்று பரப்புரை செய்கிறது.

 1992 நவம்பரில் டெல்லியில் கூடிய ஹிந்து அமைப்புகள் பாபர் மசூதியை டிசம்பர் 6 இல் இடிப்பதாக முடிவு செய்கின்றனர்.

 அந்த தேதியில் தொண்டர்களைத் திரட்டி அனைவரும் கைப்பிடி அளவு மணல்  அள்ளி குவிக்கும் போராட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு தொண்டர்கள் திரட்டப்படுகின்றனர்.

 இது தொடர்பான வழக்கில் கல்யாண் சிங் நீதிமன்றத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று உறுதியளிக்கிறார். இதை நிறுத்தினால் கலவரம் வரலாம் என்றும் கூறுகிறார்.

 டிசம்பர் 6 அன்று கல்யாண் சிங் காவல்துறைக்கு துப்பாக்கிச்சூடு மட்டும் நடத்தக் கூடாது என்று உத்தரவிடுகிறார். இதன் பொருள் 'வேடிக்கை மட்டும் பார்' என்பதாகும்.

அங்கே எல்லா ஹிந்து அமைப்புகளும் கூடி இருந்தன. மேடையில் பேசும்போது அத்வானி 'தொண்டர்கள் பலி கொடுக்கத் தயாராகுங்கள்' என்கிறார். வாஜ்பாய்  'இந்த நிலம் நாம் உட்கார முடியாமல் இருக்கிறது. இதை சம மட்டம் ஆக்குங்கள்' என்கிறார்.

 அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு கும்பல் எழுந்து மசூதியை உடைக்கத் தொடங்குகிறது. பிறகு மொத்த கூட்டமும் அப்படியே சென்று மசூதியை உடைக்கின்றனர். அனைவருக்கும் இடிக்கும் கருவிகள் வழங்கப்படுகின்றன.

 11:30 - 4:00 மணி வரை இடிக்கும் செயல் நடக்கிறது. மசூதி முழுவதுமாக இடிக்கப்பட்டு பந்தல் போடப்பட்டு ராமர் சிலை வைத்து பூஜை நடக்கிறது.

 பிறகு 6:00 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப்படுகிறது. 
 ஆட்சியைக் கலைக்கும் முன் கல்யாண் சிங் தாமே ராஜினாமா செய்துவிடுகிறார்.
 பாஜக ஆளும் மூன்று மாநிலங்களில் ஆட்சி கலைக்கப்படுகிறது.

செய்தி பரவியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மதக் கலவரம் வெடிக்கிறது. 2000 பேர் இறக்கின்றனர்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், சவுதி அரேபியா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன.

 இந்த இடிப்பு சம்பவம் பற்றி விசாரிக்க லிபரான் அயோத்தி கமிஷன் நியமிக்கப்பட்டு இது திட்டமிட்ட செயல் என்று அறிக்கை வருகிறது.

 பிறகு வழக்கு சிபிஐ வசம் போய் இது திட்டமிட்ட தாக்குதல் அல்ல என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப் படுகின்றனர்.

1993 இல் பிரச்சனைக்குரிய நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தி இந்திய அகழ்வாய்வுத் துறை மூலம் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு அதன்படி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. 

 ஆனாலும் 2003 இல் தான் அகழ்வாய்வு தொடங்குகிறது.
 இதில் அடித்தளம் ஆராயப்பட்டு அது முகலாயர் பாணியில் இல்லை என்பது அறிவிக்கப்படுகிறது.
ஆனால் முகலாயர் இதை இடித்துதான் மசூதி கட்டினர் என்று கூறமுடியாது என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
 
 2005 இல் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 5 பேர் இந்த தற்காலிக கோவிலைத் தாக்க முயல்கின்றனர். CRPF படை அவர்களைக் கொல்கிறது.

 2010 இல் உயர்நீதிமன்றம் பிரச்சனைக்குரிய நிலத்தை பிரித்து சன்னி வாரியம், ராமர், நிர்மூகி அகாடா ஆகிய மூவருக்கு வழங்குகிறது.
 
 மூவருமே மேல்முறையீடு செய்கின்றனர். ஆனால்
2017 இல் தான் மீண்டும் வழக்கு தொடங்குகிறது. 
 
 2019 இல் இறுதித் தீர்ப்பு ஹிந்துக்களுக்கு சாதகமாக வருகிறது.

இதற்கு மூன்று காரணங்கள் முக்கியமானவை
1) இந்திய பாணி அஸ்திவாரம் இருக்கிறது என அகழ்வாய்வுத் துறை தந்த அறிக்கை.
 இதன்மூலம் நிலம் ஹிந்துக்களுக்கு சொந்தம் என்று உறுதியானது.

2) அக்பர் கால ஆங்கிலேயப் பயணிகள் புற முஸ்லிம் தளங்களைக் குறித்தது போல அயோத்தியை முஸ்லிம் புனித தலமாக குறிக்காதது
அதேவேளை பிராமணர் இருந்ததைக் குறித்தமை.

3) பாபர் மசூதி பெரும்பாலும் இயக்கத்தில் இல்லாமலே இருந்தது.
ஆனால் ஹிந்துக்கள் அங்கே பூஜை செய்வதை எப்போதுமே நிறுத்தவில்லை.

 எல்லாவற்றையும் வைத்துப் பார்த்தால் உத்திர பிரதேச முஸ்லிம்கள் இந்த பிரச்சனையில் அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. ஹிந்துக்கள் ஒற்றுமையாக தீவிரமாக தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்ததே இங்கே அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளது. 

 ராமர் சிலையை அகற்றாமல் விட்டது,  அகழ்வாராய்ச்சி நடத்தாமலே இருந்தது, 
மசூதியை இடிக்கும் வரை வேடிக்கை பார்த்தது என இந்த பிரச்சனையை காங்கிரஸ் கையாண்ட விதம் ஏற்கும் வகையில் இல்லை. இவ்வளவு நீண்டகாலம் இழுத்தடித்து வேறு பிரச்சனைகள் முற்றும் போது மக்களை மடைமாற்ற இந்த பிரச்சனையை பயன்படுத்தி வந்துள்ளது.

பாஜக இதை வைத்து எல்லா பிரச்சனைகளையும் மடைமாற்றம் செய்து அரசியல் செய்து வந்துள்ளது. 
 
 
  முடிவாக, 
ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டது என்பது முழுக்கப் பொய்!
மசூதியை இடித்தது கண்டிப்பாக குற்றச்செயல்!
தற்போது ராமர் கோவில் கட்டப்படுவது குறுக்குவழியில் கிடைத்த வெற்றி!

 
பி.கு: இணையத்தில் தேடி ஆராய்ந்து எனது யூகத்தை எழுதியுள்ளேன். 
 சான்றுகளைக் காட்டினால் எனது கருத்துகளை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

நன்றி:-
Nitish rajput (yt)
இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு நகல்
விக்கிபீடியா

 

Tuesday, 15 August 2023

சக் தே இந்தியா

சக் தே இந்தியா

 ஹிந்தியில் மிகச்சிறந்த தேச பக்தி படம் 'சக் தே இந்தியா'.
 அதுவரை முழுக்க விளையாட்டை மையமான வைத்து  எந்த திரைப்படமும் வந்ததில்லை. இந்த படம் வந்த உடனேயே கிரிக்கெட் மாயையை உடைக்க முற்பட்டது.
 இதில் கேட்பாரற்றுக் கிடக்கும் மகளிர் ஹாக்கி அணியை மேம்படுத்தி கோப்பை வெல்ல வைப்பார் அதன் கோச்சாக வரும் ஷாருக் கான்.
மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் முதல் காட்சி இளம் வீராங்கனைகள் வரிசையாக நிற்பார்கள். சாருக் கான் வருவார். ஒவ்வொருவரும் ஒரு அடி முன்வந்து அறிமுகப்படுத்திக் கொள்ளும் காட்சி வரும். ஒவ்வொருவரும் neha from gujarat மாதிரி தனது பெயரையும் தனது மாநிலத்தின் பெயரையும் கூறுவார்கள்.  அப்பொழுது அவர் நீங்கள் எல்லோரும் இந்தியர்கள் எனவே நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறேன் என்று கூறுமாறு பணிப்பார்.
 உடனே அவரவர் தமது பெயரையும் தான் இந்தியாவில் இருந்து வருவதாகவும் முழு வேகத்துடன் கூறுவார்கள். 
பிறகு அந்த வீராங்கனைகள் தத்தமது இனத்துடன் தங்குவதை தடுப்பார்.
அதாவது  இரண்டு தமிழ்நாட்டு வீராங்கனைகள் ஒரே அறையில் தங்கியிருந்தால் அவர்களை பிரித்து வெவ்வேறு மாநில வீராங்கனைகளுடன் அறையில் தங்கும்படி செய்வார்.
 இதனால் வேற்றுமைகள் மறைந்து அவர்கள் இந்தியர் என்ற உணர்வுடன் விளையாடி கோப்பையை வெல்வதாக படம் செல்லும்.

  ஆக தேசிய இனங்களின் தனித்தன்மையை அழித்து புதிதான (போலியான) இந்தியா என்கிற அடையாளத்தின் கீழ் இணைப்பதன் மூலமே இந்த நாடு வெற்றி பெறும் என்பது ஆளும் வர்க்கத்தின் மனநிலை.
 தேசிய இனங்களின் தனித்தன்மையை பேணுவது அவர்கள் மொழியை கலாச்சாரத்தை பாதுகாப்பது இதெல்லாம் தேச பக்திக்கு எதிரான சிந்தனை என்பது தான் இந்தியாவை ஆளும் வர்க்கத்தின் உறுதியான நிலைப்பாடு .

நீங்கள் தமிழன் என்றால் உங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் உரிமைகளையும் இந்தியா காவு கேட்கிறது  என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்!

  அதையெல்லாம் விட்டுக் கொடுக்க நீங்கள் தயாராக இருந்தால் தாராளமாக இந்தியன் என்று கூறிக் கொள்ளலாம்!

தமிழனாகவும் இருப்பேன் இந்தியனாகவும் இருப்பேன் என்பது கடுகளவும் சாத்தியமில்லை.

  இரண்டுமே நேர் எதிரானது!
இரண்டில் ஏதோ ஒன்று தான் உங்கள் அடையாளம்!

ஆனால் விபரம் தெரியும் முன்பே குழந்தைகளை சுதந்திர தினம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மூளைச்சலவை செய்து அவர்களை இந்தியர் என்று நம்ப வைத்து தேசபக்தியின் பெயரால் அவர்களது மொழியையும் இனத்தையும் வளத்தையும் தியாகம் செய்யச்சொல்லி கேட்கிறது இந்திய தேசம்!

  இப்படி தேசிய இனங்களின் தனித்தன்மையை விட்டுக்கொடுக்கச் சொல்வதில் இந்திய தேசியம், இந்துத்துவம், இஸ்லாமியம், தலித்தியம்,  கம்யூனிசம், திராவிடம் என அனைவருமே கைகோர்ப்பார்கள் !

 இந்த இந்திய தேசிய சிந்தனை வலிந்து திணிக்கபடுவதற்கும் ஒரு கன்னிப் பெண் கற்பழிக்கப்படுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை!

Tuesday, 23 May 2023

டெல்லி எவ்வளவு தூரம்?

டெல்லி எவ்வளவு தூரம்?

 உண்மையில் உச்ச அதிகார மையமான டெல்லி நமக்கு எவ்வளவு தூரம் என்பது நமக்குப் புரியவில்லை.
 விமானத்தில் போன கதையைக் கூறுகிறேன் கேளுங்கள்.
1) செங்கோட்டை - திருவனந்தபுரம் ஏர்போர்ட் காரில் (பஸ் எனில் செங்கோட்டை - தென்காசி போய் திருவனந்தபுரம் பஸ் பிடிக்க வேண்டும். பின் ஏர்போர்ட் செல்ல வேண்டும்)

2) ஒரு மணிநேரம் விமான நிலையத்தின் உள்ளே செலவாகும் பிறகு மினி பஸ் மூலம் விமானம் அருகே கொண்டு செல்வார்கள்
3) திருவ.-டெல்லி 3:00 -3:30 மணிநேரம் பயணம்
4) டெல்லி வி. நிலையத்தில் 1 மணிநேரம்
5) அங்கிருந்து வி.நிலையத்திற்கான பிரத்யேக மெட்ரோ ஸ்டேஷனுக்கு பஸ்
6) அங்கே வரிசையில் நின்று டோக்கன் வாங்கி மெட்ரோ பிடித்து மெயின் மெட்ரோ
7) பின் அங்கே வரிசையில் நின்று டிக்கட் வாங்கி டெல்லியில் எங்கே போகவேண்டுமோ அங்கே மெட்ரோவில் போக வேண்டும்
8) மைய நகரில் நமக்கெங்கே இடம் அங்கிருந்து ஆட்டோ, டாக்சி அல்லது ஓலா, ஊபர் மூலம் அந்த இடத்திற்கு செல்லலாம்.
 அல்லது பஸ் பிடித்தால் 2,3 பஸ்கள் மாற வேண்டும்.
 அதாவது அதிகாலை கிளம்பினால் இரவாகிவிடும்.
 (இதுவே நீங்கள் மும்பை என்றால் காலையில் விமானம் ஏறி டெல்லியில் ஆபிஸ் போய்விட்டு சாயங்காலம் விமானம் ஏறி வீட்டுக்கு வந்துவிடலாம்.
 இப்படி சீசன் பிளைட் டிக்கெட் வாங்கி டெய்லி ட்யூடி பார்க்கும் மேல்தட்டு வர்க்கம் உண்டு)

இதே ரயில் பயணம் என்றால் (3 மாதம் முன்பே டிக்கெட் எடுக்க வேண்டும் அல்லது தக்கலில் காசைக் கொட்ட வேண்டும்)

 1) செங்கோட்டை - தென்காசி பஸ் 
2) தென்காசி - திலி
3) திலி பழைய பே. நி - ஜங்ஷன் நடை 
4) ரயிலில் ஏறி முழுமையான 2 நாட்கள் (48 மணிநேரம்) ரயிலில் வாழ வேண்டும்.
5) நிஜாமுதீன் ஸ்டேஷனில் இறங்கி வெளியே நடந்து வந்து பஸ் ஸ்டான்ட் (ISBT) க்கு பஸ் பிடிக்க வேண்டும்
(ரயில் தாமதமானால் ஆட்டோ).
அதாவது இரண்டரை நாள் ஆகும்.
பெரும்பாலான டெல்லி தமிழர் பயண அமைப்பு இதுவே!
(டெல்லியில் 8 லட்சம் தமிழர்கள் இருக்கின்றனர்.
ஆர்.கே.புரம் எனும் தமிழர் பகுதி உண்டு. கரோல் பாக் எனும் இடம் உண்டு).
 

இதில் வயதானவர் அல்லது நோயாளி அதுவும் லக்கேஜுடன் மொழியும் தெரியாமல் சென்றால் என்ன கதி என்று யோசித்துப் பாருங்கள்.

டெல்லி எவ்வளவு தூரம்?

டெல்லி எவ்வளவு தூரம்?

 உண்மையில் உச்ச அதிகார மையமான டெல்லி நமக்கு எவ்வளவு தூரம் என்பது நமக்குப் புரியவில்லை.
 விமானத்தில் போன கதையைக் கூறுகிறேன் கேளுங்கள்.
1) செங்கோட்டை - திருவனந்தபுரம் ஏர்போர்ட் காரில் (பஸ் எனில் செங்கோட்டை - தென்காசி போய் திருவனந்தபுரம் பஸ் பிடிக்க வேண்டும். பின் ஏர்போர்ட் செல்ல வேண்டும்)

2) ஒரு மணிநேரம் விமான நிலையத்தின் உள்ளே செலவாகும் பிறகு மினி பஸ் மூலம் விமானம் அருகே கொண்டு செல்வார்கள்
3) திருவ.-டெல்லி 3:00 -3:30 மணிநேரம் பயணம்
4) டெல்லி வி. நிலையத்தில் 1 மணிநேரம்
5) அங்கிருந்து வி.நிலையத்திற்கான பிரத்யேக மெட்ரோ ஸ்டேஷனுக்கு பஸ்
6) அங்கே வரிசையில் நின்று டோக்கன் வாங்கி மெட்ரோ பிடித்து மெயின் மெட்ரோ
7) பின் அங்கே வரிசையில் நின்று டிக்கட் வாங்கி டெல்லியில் எங்கே போகவேண்டுமோ அங்கே மெட்ரோவில் போக வேண்டும்
8) மைய நகரில் நமக்கெங்கே இடம் அங்கிருந்து ஆட்டோ, டாக்சி அல்லது ஓலா, ஊபர் மூலம் அந்த இடத்திற்கு செல்லலாம்.
 அல்லது பஸ் பிடித்தால் 2,3 பஸ்கள் மாற வேண்டும்.
 அதாவது அதிகாலை கிளம்பினால் இரவாகிவிடும்.
 (இதுவே நீங்கள் மும்பை என்றால் காலையில் விமானம் ஏறி டெல்லியில் ஆபிஸ் போய்விட்டு சாயங்காலம் விமானம் ஏறி வீட்டுக்கு வந்துவிடலாம்.
 இப்படி சீசன் பிளைட் டிக்கெட் வாங்கி டெய்லி ட்யூடி பார்க்கும் மேல்தட்டு வர்க்கம் உண்டு)

இதே ரயில் பயணம் என்றால் (3 மாதம் முன்பே டிக்கெட் எடுக்க வேண்டும் அல்லது தக்கலில் காசைக் கொட்ட வேண்டும்)

 1) செங்கோட்டை - தென்காசி பஸ் 
2) தென்காசி - திலி
3) திலி பழைய பே. நி - ஜங்ஷன் நடை 
4) ரயிலில் ஏறி முழுமையான 2 நாட்கள் (48 மணிநேரம்) ரயிலில் வாழ வேண்டும்.
5) நிஜாமுதீன் ஸ்டேஷனில் இறங்கி வெளியே நடந்து வந்து பஸ் ஸ்டான்ட் (ISBT) க்கு பஸ் பிடிக்க வேண்டும்
(ரயில் தாமதமானால் ஆட்டோ).
அதாவது இரண்டரை நாள் ஆகும்.
பெரும்பாலான டெல்லி தமிழர் பயண அமைப்பு இதுவே!
(டெல்லியில் 8 லட்சம் தமிழர்கள் இருக்கின்றனர்.
ஆர்.கே.புரம் எனும் தமிழர் பகுதி உண்டு. கரோல் பாக் எனும் இடம் உண்டு).
 

இதில் வயதானவர் அல்லது நோயாளி அதுவும் லக்கேஜுடன் மொழியும் தெரியாமல் சென்றால் என்ன கதி என்று யோசித்துப் பாருங்கள்.

Saturday, 15 April 2023

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கும் மரியாதை இல்லை

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கும் மரியாதை இல்லை


 பஞ்சாப் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்த இரண்டு தமிழக வீரர்களின் உடல்கள் எந்தவித அரச மரியாதையும் இல்லாமல் உறவினர்களுக்கு அனாதைப் பிணம் போல அனுப்பி வைக்கப்பட்டன.

 

 இதை எதிர்த்து இரண்டு ஊர்களிலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


 தமிழர்களுக்கு ஹிந்தியாவில் எந்த மட்டத்திலும் மரியாதை என்பதே கிடையாது!


 பாஜக சார்பான வீடியோ போடும் அந்த ராணுவ வீரர் எங்கே?!

 எதற்கெடுத்தாலும் 'எல்லையில் ராணுவ வீரர்கள்...' என்று பாடமெடுக்கும் இணைய சங்கிகள் எங்கே?! 


 தமிழர்கள் இந்த நாட்டுக்காக செத்தாலும் கூட கேவலப்பட்டே ஆக வேண்டுமா?!


விபரம் கீழே,


தினத்தந்தி செய்தி (15.04.2023)


தமிழக ராணுவ வீரர்கள் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாததால் பொதுமக்கள் மறியல்


தேனி,

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் கடந்த 12-ந் தேதி அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 ராணுவ வீரர்கள் இறந்தனர்.


இதில் உயிரிழந்த தேனி மாவட்டம் மூணான்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் யோகேஷ்குமார் (வயது 24), சேலம் மாவட்டம் மசக்காளியூர் பனங்காட்டை சேர்ந்த ராணுவ வீரர் கமலேஷ் (24) ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.


அதன்படி ராணுவ வீரர் யோகேஷ்குமார் உடல் நேற்று காலை மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேவாரத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தேவர் சிலையில் இருந்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் யோகேஷ்குமாரின் உடலை ஊர்வலமாக அவரது வீட்டுக்கு எடுத்து சென்று அஞ்சலிக்காக வைத்தனர்.


சாலை மறியல்:

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உத்தமபாளையம் தாசில்தார் சந்திரசேகரன் மற்றும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்த ராணுவ வீரருக்கு ராணுவ மரியாதை மற்றும் அரசு சார்பிலும் மரியாதை செலுத்த மாவட்ட கலெக்டர் வரவேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


உடல் தகனம்:

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராணுவ வீரர் யோகேஷ் குமார் சாவு குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதன் காரணமாக சம்பவம் குறித்து முழுமையாக கூற இயலாது என்றனர். இதையடுத்து ராணுவ வீரர் உடலை வீட்டில் இருந்து ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் யோகேஷ்குமார் உடலுக்கு அவரது தந்தை ஜெயராஜ் தீ மூட்டினார்.


 கமலேஷ் உடல்:

இதேபோல ராணுவ வீரர் கமலேஷின் உடல் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அமரர் ஊர்தியில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. மதியம் 12.50 மணிக்கு அந்த வாகனம் வனவாசி அரசமரம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்தது. அங்கு திரண்டிருந்த கமலேசின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனத்தை சிறை பிடித்தனர். அரசு மரியாதையுடன் ராணுவ வாகனத்தில் உடல் கொண்டு வராததை கண்டித்தும், கமலேசின் இறப்புக்கான காரணத்தை தெரிவிக்க கூறியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மேட்டூர் தாசில்தார் முத்துராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கீதா, விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கமலேசின் உறவினர்கள், ராணுவ வாகனத்தில் தான் உடலை கொண்டு செல்லவேண்டும். அதுவரை மறியலை கைவிட மாட்டோம் என்று உறுதிப்பட தெரிவித்தனர்.


மரியாதை:

மாலை 4.15 மணி அளவில் சேலத்தில் இருந்து ராணுவ வாகனம் வரவழைக்கப்பட்டு கமலேசின் உடல் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டு, சொந்த ஊரான மசக்காளியூர் பனங்காடு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கோவை ராணுவ தலைமை அலுவலக உத்தரவின்பேரில் தமிழ்நாடு 12-வது பட்டாலியன் சேலம் என்.சி.சி. சார்பில் அவருடைய உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டது. பின்னர் சுபேதார்கள் பாபு, ரமணா ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் தாசில்தார் முத்துராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் அனைத்து கட்சியினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கமலேசின் உடல் அங்குள்ள மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Friday, 14 April 2023

சுருட்டிய பணம் ஒரு ஒப்பீடு

சுருட்டிய பணம் ஒரு ஒப்பீடு

 தமிழர்கள் பத்துகோடி என்றால்,
 தி.மு.க மட்டும் ஒவ்வொரு தமிழனிடம் இருந்தும் 13,400 ரூபாய் பிடுங்கி வைத்துள்ளதாக அர்த்தம்!  
(கே.அண்ணாமலை வெளியிட்ட ஆதாரப்படி)

 ஹிந்திய அரசு ஒவ்வோரு தமிழரிடமும் மாதம் 3,000 ரூபாய் கொள்ளையடிப்பது தனி!
(பெ.மணியரசன் வெளியிட்ட ஆதாரப்படி)

 அதாவது திமுக 75 ஆண்டுகளாக சுருட்டி வைத்துள்ள பணத்தை ஹிந்திய அரசு ஐந்தே மாதங்களில் சுருட்டுகிறது.

Sunday, 5 April 2020

கொரோனா பாதிப்பில் பிரதமரின் செயல்பாடு


கொரோனா பாதிப்பில் பிரதமரின் செயல்பாடு
இதுவரை வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் பங்கு என்ன?!
யோசித்ததுண்டா?!
இதை நீங்கள் யோசித்தால் ஒன்று தெளிவாகப் புரியும்.
நமது தேவைகளை நிறைவேற்றுவது மாநில அரசாங்கம் மட்டுமே!
மத்திய அரசு எதுவுமே செய்வதில்லை.
அது வரி என்கிற பெயரில் மாநிலங்களைக் கொள்ளையடித்துவிட்டு 'அதைச் செய்' 'இதைச் செய்' என்று கட்டளை போடுவதோடு சரி!
தமிழகத்தில் ஒரு குடும்பத்திற்கு 4 பேர் என்று வைத்துக்கொள்வோம்.
தோராயமாக (தலைக்கு 3000 ரூபாய் என) ஒவ்வொரு குடும்பமும் மாதந்தோறும் 12,000 ரூபாய் மத்திய அரசுக்கு வரி கொடுக்கிறோம்.
இத்தனை பணத்தையும் வாங்கிக்கொண்டு மத்திய அரசு நமக்குத் தருவதென்ன?!
ரயில் போக்குவரத்து, தபால் சேவை, ராணுவ பாதுகாப்பு (?), விமான சேவை (திவாலாகிவிட்டது) , ஒன்றிரண்டு மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்.
அவ்வளவுதான்! அவ்வளவேதான்!
தமிழகம் கட்டும் வரி ஒரு ரூபாய் என்றால் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி 30 பைசா என்ற அளவில் உள்ளது.
வரியை மட்டும் இங்கே கூறியுள்ளேன்.
அதைப்போல இரண்டு மடங்கு நமது வளங்களைச் சுரண்டுகிறது ஹிந்தியா!
எவ்வளவு இக்கட்டான சூழலிலும் நமக்கு மத்திய அரசு உதவுவது கிடையாது!
நாம் கட்டும் வரி 100 ரூபாய் என்றால் பேரிடர் காலங்களில் நாம் 10 ரூபாய் கேட்பதும் மத்திய அரசு 10 பைசா விட்டெறிவதும் வாடிக்கையாகிவிட்டது.
[இதையெல்லாம் புள்ளிவிபரமாக தமிழ்தேசியப் பேரியக்கம் வெளியிட்டுள்ளது.]
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் மத்திய அரசு செய்தவற்றைப் பார்ப்போம்.
முன்னெச்சரிக்கை :-
ஜனவரி 31 இல் கொரோனா இந்தியாவிற்கு வந்துவிட்டது.
மோடி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கூடி பேசியது மார்ச் 4 இல்.
இதற்குப் பத்துநாட்கள் கழித்து கொரோனா ஒரு தேசிய அச்சுறுத்தல் இல்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிறது.
மார்ச் 16 இல் சார்க் கூட்டமைப்பு நாடுகளுடனான சந்திப்பில் கொரோனா பாதிப்பு விவாதிக்கப்படுகிறது.
மார்ச் 19 இல் பொதுமக்கள் 22ம் தேதி ஊரடங்கைக் கடைபிடிக்க மோடி வேண்டுகோள் விடுக்கிறார்.
மார்ச் 22 இலிருந்து தரையில் ஓடும் சைக்கிள் வரை தடுத்து நிறுத்திய மோடி அரசு மார்ச் 25 இல் தான் (முதல் வேலையாக செய்திருக்கவேண்டிய) விமான சேவை ரத்து என்பதை செயல்படுத்துகிறது.
மருந்து துறை :-
இந்திய மருந்து தயாரிப்பு துறை படுத்து பல ஆண்டுகள் ஆகின்றன.
   1990 களில் தன் சொந்தக் கால்களில் நின்ற இந்திய மருந்து தயாரிப்பு கம்பெனிகள்
இப்போது சீனாவை நம்பி இருக்கின்றன.
சென்ற ஆண்டு சீனாவிலிருந்து இறக்குமதியான மருந்துப் பொருள் மட்டுமே நாட்டின் மொத்த மூலப் பொருள் இறக்குமதியில் 68%  என்கிறது எக்கனாமிக் டைம்ஸ்.
இப்போது சீனாவே படுத்துவிட்டது.
மருந்து எப்படி இருக்கும்?!
மலேரியாவுக்கு பயன்படும் மருந்தை பயன்படுத்தலாம் என்று தெரிந்தவுடன் அதன் ஏற்றுமதிக்குத் தடை விதித்தனர். அது ஒன்றுதான் குறிப்பிடும் அளவான செயல்பாடு.
மருத்துவத் துறை :-
இந்தியாவில் 10,000 பேருக்கு ஒரு டாக்டர் என்ற அளவில்தான் மருத்துவ வளர்ச்சி இருக்கிறது.
(இந்தியாவிலேயே தமிழகம்தான் இதில் முதலிடம் 260 பேருக்கு ஒரு டாக்டர்!
இதிலும் நீட் என்ற மண்ணைப் போட்டுவிட்டனர்).
41 பேருக்கு ஒரு மருத்துவர் இருந்த இத்தாலியே கொரோனாவிடம் மண்டியிட்டுவிட்டது என்றால் இந்தியா எவ்வளவு தீவிரமாக செயல்படவேண்டும் என்பதை யூகிக்கவும்.
ஆராய்ச்சித் துறை :-
கிருமிகள் ஆராய்ச்சியில் இதுவரை இந்தியா துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.
மற்ற நாடுகள் மருந்து கண்டுபிடிக்க தனியாக நிதி ஒதுக்கி தீவிரமாக இயங்கிவருகின்றன.
பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள் பலர் தமிழர்களாக இருக்கின்றனர்
அதாவது அறிவாளிகள் அத்தனைபேரும் ஏற்கனவே நாட்டைவிட்டு வெளியாயிற்று.
உயிரியியல் தொடர்பான பரிசோதனைக் கூடங்கள் நாட்டில் மொத்தமே 40 தான் இருக்கின்றன.
அவைகளும் பல பல்கலைக் கழகங்களில் கல்விக்குத்தான் பயன்படுகின்றன.
அவசரகால உற்பத்தி :-
மருத்துவ சாதனங்கள் தயாரிப்பு மற்றும் தற்காப்பு உபகரணங்கள் தயாரிப்பு என்றாவது கவனம் செலுத்தவேண்டும்.
இங்கே மருத்துவர், செவிலியர், காவலர் என எவரிடமும் போதுமான மூச்சு கவசமோ, கையுறைகளோ, கிருமிநாசினி நீர்மங்களோ இல்லை.
(இருக்கின்றவையும் மாநில அரசுகள் கொடுத்தவை)
இது தொடர்பாக மார்ச் 18 இல் ஆபரேசன் செய்யப்படும்போது அணியப்படும் மூச்சுக் கவசங்களைத் தயாரிக்கும் அரசு நிறுவனமான HLL மற்றும் நெசவுத்துறை அதிகாரிகள் கூடிப் பேசினர்.
தயாரிப்பை அதிகரிப்பது பற்றியும் 75 லட்சம் மூச்சு கவசங்கள் உருவாக்கத் தேவை இருப்பது பற்றியும் HLL இரண்டு மாதங்களாக வலியுறுத்தி வந்ததை அந்த சந்திப்பிற்கு பிறகும்கூட நிறைவேற்றவில்லை.
இப்போது வரை HLL க்குத் தேவையான துணி சப்ளை செய்யப்படவில்லை.
பல உள்ளூர் நிறுவனங்கள் உற்பத்திக்கு அனுமதி கேட்டும் இதுவரை தரப்படவில்லை.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் "10 லட்சம் N-95 மூச்சுக் கவசங்கள் கேட்டோம். கிடைத்ததோ வெறும் 50,000 தான்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
பண உதவி:-
மார்ச் 24 இல் சுகாதாரத் துறை மேம்பாட்டுக்கு 1500 கோடி அளித்ததோடு சரி.
(பட்டேல் சிலை செலவு 3,000 கோடி என்பதை நினைவில் கொள்க)
பிரதமர் நிவாரண வைப்பு 3000 கோடி,
மாநிலங்களுக்கான நிவாரண வைப்பு 20,000 கோடி,
தேசிய பேரிடர் நிவாரண வைப்பு 25,000 கோடி என எல்லாப் பணத்தையும் மத்திய அரசு வைத்திருக்கிறது.
உள்நாட்டிலும் ல நடிகர்களும் தொழிலதிபர்களும் நன்கொடை அளித்து வருகிறார்கள்.
(இந்த திட்டத்திற்கு பெயர் என்ன தெரியுமா?! "PM cares")
இப்படியாக தனியே 6500 கோடி வரை கிடைத்துள்ளது.
ஆனால் இதுவரை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை.
கேரள வெள்ளத்தின் போது வெளிநாட்டு வாழ் மலையாளிகளிடம் நன்கொடை வாங்கக்கூடாது என்று கூறிய மத்திய அரசு தற்போது வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் நன்கொடை பெற்றுவருகிறது.
என்றால் கொரோனா ஒரு தேசியப் பேரிடர்தானே?!
என்றால் மாநிலங்களுக்கு மேற்கண்ட நிதியை சிறிதுசிறிதாக ஒதுக்கலாம்தானே?!
ஆனால் மோடி இந்த நிலையிலும் பெருமை பீத்த கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சார்க் நாடுகள் கூட்டாக செயல்பட அழைப்பு விடுத்து அதற்கான கூட்டு நிதிக்கு 75 கோடியை கொடுத்துவிட்டு வந்துள்ளார்.
[படம்: பிரதமர் நிவாரண நிதியில்  வருமானம் மற்றும் செலவு ஒப்பீடு.
இதிலேயே தெரியும் மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவும் லட்சணம்]
ஆள் உதவி :-
இத்தனை பெரிய நாட்டில் போலீஸ் பலம் மிகவும் குறைவு.
இதனால் மக்களைக் கட்டுப்படுத்த காவல்துறை திணறி வருகிறது.
எப்படியும் பாகிஸ்தான் படையெடுக்கப் போவதில்லை ராணுவத்தை அனுப்பாவிட்டாலும் துணைராணுவத்தையாவது அனுப்பியிருக்கலாம்.
மத்திய மருத்துவ நிறுவனங்களில் முக்கிய டாக்டர்கள் கேரளா பாதிக்கப்பட்ட போது அங்கே வந்த உதவியது உண்மைதான்.
ஆனால் அதன் பிறகு எங்குமே மத்திய அரசு சார்பில் வழிநடத்த திறமையான மருத்துவ மேதை ஒருவர் கூட எந்த மாநிலத்திற்கும் அனுப்பப்படவில்லை.
மனவலிமை ஊட்டுதல் :-
அறிவிப்புகளை மோடி அறிவிக்கிறார்.
மக்களிடம் மேல்வலியாமல் எதையாவது செய்யச் சொல்கிறார்.
அவ்வளவுதான்.
இதுவரை நிலை என்ன?
இதை சமாளிக்க என்ன திட்டம் வைத்துள்ளோம்?
பிற நாடுகள் இதற்கு என்ன செய்கின்றன? என அறிவுப் பூர்வமாக எதையும் பேசுவதில்லை.
உணர்வுப் பூர்வமாக பேசுகிறார் அவ்வளவே!
அவர் தன் திருவாயை அசைத்ததைத் தவிர வேறு என்ன செயல்பாட்டைச் செய்தார் என்று கேட்டால் விரல்களை அசைத்து ட்வீட் போட்டதைச் சொல்லலாம்.
மற்றபடி கொரோனா அமைத்துள்ள போர்க்களத்தில் அவர் கால்வைக்கவே இல்லை.
மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி என்றால்
முதலில் லொக்கு லொக்கு என்று இருமிவிட்டு கச்சாமுச்சா என்று பிணாத்தும் ஒரு ரிங்டோனை அனைவருக்கும் வைத்தனர்.
அதனால் யாருக்கு என்ன புரிந்தது என்பது கொரோனாவுக்கே வெளிச்சம்.
மோடியும் எப்போதும் கெக்கரா பெக்கரா என்று இந்தியில்தான்  பிணாத்துகிறார்.
மக்களுக்கு புரியும்படி பேசமுடியாவிட்டால் கீழே சப் டைட்டிலாவது போடலாமே?!
அப்படி என்ன திமிர் என்று நினைக்கத் தோன்றுகிறது.
மக்களுக்கு ஓடோடி உழைப்பது மாநில அரசும் அதில் பங்குவகிக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான்.
மத்திய மந்திரிகளில் மோடி தவிர எவரும் வாயை அசைக்கும் வேலையைக் கூட செய்வது இல்லை.
பொருள் உதவி :-
கொரோனா இருக்கிறதா இல்லையா என்று கண்டறியும் பரிசோதனை கிட் வாங்கவோ தயாரிக்கவோ எந்த முயற்சியும் இதுவரை செய்யப்படவில்லை.
கொரோனா பாதிப்பு சோதனை செய்வதில் இந்தியா மிகவும் பின்னே இருக்கிறது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
Mylab எனும் ஒரு நிறுவனம் தயாரித்த பரிசோதனை கிட் மார்ச் 24 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு சோதனைக்கு 2000 ரூபாய் செலவாகும் அதுவும் அந்த ஒரே நிறுவனத்தை நம்பியிருக்கும் நிலை.
இது யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது!
சீனா கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ஒரே நாளில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டியது ஆனால் மத்திய அரசு அப்படி எதுவும் செய்யவில்லை.
மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசின் கட்டிடங்களை பயன்படுத்த அளிக்கலாம்.
மத்திய அரசு நடத்தும் நடத்தும் மருத்துவமனைகளில் ஒன்றை இதற்கு தனியாக அர்ப்பணிக்கலாம்.
இப்படி எதையும் செய்யவில்லை.
மலேரியா மருந்து மற்றும் பரிசோதனை கிட் தயாரிப்பை ஊக்கப்படுத்தி வரிகளைத் தளர்த்தி அனைவருக்கும் கிடைக்க எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை.
திட்டமிடுதல் :-
வீட்டிலேயே இருங்கள் என்று கூறியதைத் தவிர கொரோனாவைக் கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லாதபோதே நமக்குப் புரிகிறது இதனால் ஏற்படும் பொருளாதார சரிவை ஈடுகட்ட எந்த திட்டமும் இருக்காது என்று.
தொழில்துறை மீண்டுவர எத்தனை நாள் ஆகும் அதற்கு முன்னெச்சரிக்கையாக என்ன செய்யவேண்டும் என்று தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நாடுகளைப் பார்த்து நமக்கு ஏற்றதுபோல ஒரு திட்டத்தை தயாரிப்பதும் அவசியம்
.
அனேகமாக மோடியின் அடுத்த திட்டம் "மொட்டைமாடியில் நடனம் ஆடுவதாக" இருக்கலாம்.


Tuesday, 10 December 2019

தமிழரில் என்ன தனியே போர்க்குடி?!

தமிழரில் என்ன தனியே போர்க்குடி?!

இந்திய ராணுவம்,
பெருமளவு ராணுவ தளவாடங்களுடன்,
ஒரு லட்சம் போர்வீரர்களுடன் ஈழத்தில் இறங்கி,
  3 ஆண்டுகள் போராடியும்
புலிகளை வெல்லமுடியாத காரணம் என்ன என்று கேட்டால் பலரும் பல்வேறு காரணங்களைக் கூறுவர்.

ஸ்டீபன் கோஹென் (Dr. Stephen P. Cohen) என்கிற புகழ்பெற்ற இராணுவ ஆய்வாளர் இந்திய ராணுவத்தை ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அதன் தலைப்பு,
Indian Army : Its Contribution to the Development of a Nation
என்பதாகும்.

அதில்,
"தமிழீழ விடுதலைப் புலிகள் போரியல் கல்வி கற்றவர்களை பெருமளவு கொண்டிருந்தது.
இதுவே இந்திய ராணுவம் இலங்கையில் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம்"
என்று கூறியுள்ளார்.

என்றால் இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் புலிகள் போன்ற போரியல் கற்ற யாருமே இல்லையா?!

ஏனில்லை?
இருக்கிறார்கள்.
அதையும் ஸ்டீபன் கூறியுள்ளார்.

அது மதராஸ் ரெஜிமென்ட்.

(இராணுவ ஆய்வாளர் தராகி சிவராம் அவர்கள் தலைவரின் பிறந்தநாள் அன்று அளித்த பேட்டியிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்)

தமிழர் வீரம் என்றவுடன் புறநானூறு தொடங்கி பூலித்தேவன்  வரை மட்டுமே பேசுகிறோம்.

ஏதோ அதன்பிறகு நாம் கோழைகளாகி விட்டதுபோல!

Wednesday, 16 October 2019

ஈழம் - ஹிந்தியாவின் வியட்நாம்

ஈழம் - ஹிந்தியாவின் வியட்நாம்

1947 க்கு பிறகு இந்தியா சந்தித்த போர்கள், இழப்புகள் மற்றும் முடிவுகள்
------------

1947 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 1104 பேர்
முடிவு = போர்நிறுத்தம்
-------------

1962 சீனா உடனான போர்
உயிரிழப்பு = 1383 பேர்
முடிவு = தோல்வி
-----------

1965 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 3000 பேர்
முடிவு = வெற்றி
------------

1971 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 3843 பேர்
முடிவு = வெற்றி
-------------

1984 சீக்கியர் உடனான போர்
உயிரிழப்பு = 634 பேர்
முடிவு = வெற்றி
------------

1987 புலிகள் உடனான போர்
உயிரிழப்பு = 1138 பேர்
முடிவு= பின்வாங்கல் (விலகுதல்)
-------------

1999 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 700 பேர்
முடிவு = வெற்றி
-------------
இதில் சேர்க்கப்படாதவை

ஜுனாகத், ஹைதராபாத் (32 பேர் உயிரிழப்பு) ஆக்கிரமிப்புகள் சேர்க்கப்படவில்லை.

கோவா(22 உயிரிழப்பு) , தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி (44 உயிரிழப்பு) ஆகியவற்றை கைப்பற்ற போர்ச்சுகல் உடன் நடந்த போர்கள் சேர்க்கப்படவில்லை.

காங்கோ மற்றும் சிசெல்ஷ் நாடுகளுக்கு படையுதவி செய்த முடிவுகளையும் சேர்க்கவில்லை.

சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நடந்த எல்லை மோதல்கள் சேர்க்கபடவில்லை.

(இதில் வட கிழக்கு, காஷ்மீர் ஆயுதக் குழுக்கள் மற்றும் நக்சலைட்  உடனான போர் நடவடிக்கைகள் ஒரு முடிவை எட்டாமல் தொடர்ந்து கொண்டு இருப்பதால் அவற்றைச் சேர்க்கவில்லை)

மேற்கண்ட அனைத்திலும் பாகிஸ்தான் (1947), சீனா (1962) மற்றும் புலிகள் (1987 - 1990) தவிர்த்த அனைத்து போரிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இதில் பாகிஸ்தானை மீண்டும் போரிட்டு 3 முறை தோற்கடித்துள்ளது.

1967 இல் சியாச்சின் எல்லை மோதலில் சீனாவைக்கூட தோற்கடித்துள்ளது.

என்றால் இந்தியாவின் வியட்நாம் ஈழம் என்றுதானே பொருள்?!

(தகவல்களுக்கு நன்றி: Wikipedia)

Friday, 15 February 2019

தமிழக வீரரை காஷ்மீரில் வைத்து கொலை செய்த ஹிந்தியர்களே

தமிழக வீரரை காஷ்மீரில் வைத்து கொலை செய்த ஹிந்தியர்களே!

காஷ்மீரிகளின் நிறம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

தோற்றம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

மொழி உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

மதம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

உடைகள் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

காலநிலை உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

மண்வகை உங்களுடன் ஒத்துப்போவதில்லை!

உணவுமுறை உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

கலாச்சாரம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

அவர்கள் வரலாற்றில் புராணங்களில் இலக்கியங்களில் உங்கள் பெயர் கூட இல்லை!

இன்றுவரை காஷ்மீருக்கு நேரடி நிலவழித் தொடர்பே இல்லை!

அவர்களை நீங்கள் போர் செய்து வென்று உங்கள் நாட்டுடன் இணைக்கவும் இல்லை!

அதாவது தமிழகத்தை விடவும் அந்நியமான ஒரு அண்டை நாட்டை ஆக்கிரமித்து உள்ளீர்கள்!

அதன் வளங்களை கொள்ளையடித்து வருகிறீர்கள்!

அங்குள்ள பெண்களைச் சீரழித்து வருகிறீர்கள்!

காஷ்மீர் விடுதலைக்காக ஆயுதம் தாங்கி போராடிய அனைவரையும் கொன்று ஒழித்து பதினைந்து ஆண்டுகள் ஆகியும்
நேரு காலத்தில் கொடுத்த உறுதிமொழிப்படி பொதுவாக்கெடுப்பு நடத்தாமல் சண்டித்தனம் செய்கிறீர்கள்!

அத்தோடு நில்லாமல் தேர்தல் நேரத்தில் நீங்களே குண்டு வைத்து பல மாநில வீரர்களைக் கொன்று
நாடு முழுக்க அனுதாப அலையையும் எழுப்பி
அரசியல் ஆதாயமும் அடைகிறீர்கள்!

இத்தகைய இழிவுக்கு
உங்களது ஆக்கிரமிப்பில் இருக்கும் மற்றொரு நாட்டு மக்களான நாங்கள்
பெருமை வேறு படவேண்டுமா?!

Friday, 30 November 2018

புயல் பாதுகாப்பு கட்டிடங்கள் - தமிழகம் முற்றிலும் புறக்கணிப்பு

புயல் பாதுகாப்பு கட்டிடங்கள் - தமிழகம் முற்றிலும் புறக்கணிப்பு

  மத்திய அரசு இதுவரை கட்டியுள்ள மொத்த
"புயல் பாதுகாப்பு கட்டிடங்கள்" = 567

இதில் தமிழகத்தில் கட்டப்பட்டவை = 0

ஆம். இது உண்மை.

ஒரிசா = 312
ஆந்திரா = 218
குஜராத் = 22
மேற்கு வங்கம் = 15

என பிற மாநிலங்களில் கட்டப்பட்டவையுடன் ஒப்பிடும்போது தமிழகத்தைத் திட்டமிட்டு புறக்கணித்திருப்பது புரிகிறது.

இதுமட்டுமல்ல.
இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் 353.

மாநில வாரியாக கீழ் வருமாறு,

மேற்கு வங்கம் = 150
குஜராத் = 112
கோவா = 40
கேரளா = 27
கர்நாடகா = 11
மகாராஷ்டிரா = 13
தமிழகம் = 0

தகவல்களுக்கு நன்றி:
விகடன் செய்தி
02.12.2018
---------
மேற்கண்ட இரு பட்டியல்களில் புயலையே பார்க்காத மாநிலங்கள் கூட  உண்டு.

பிற மாநிலங்களை விட வரி என்கிற பெயரில் அதிகம் கொள்ளை போவது தமிழக பொருளாதாரம்.
(தேடுக: தமிழகத்தை ஒட்டச் சுரண்டும் ஹிந்தியா)

ஆனால் தமிழகத்தை மட்டும் தவிர்த்துவிட்டு நடுவணரசு உலக வங்கியின் நிதியுதவியுடன் பாதுகாப்பு கட்டிடங்கள் கட்டி அதற்கு சாலைகளும் போட்டு தருகிறது.

நீலம், வர்தா, ஒகி, கஜா என வரிசையாக புயல் தாக்குவதோ தமிழகத்தை.
ஆனால் பாதுகாப்பாக இருப்பது மற்ற மாநிலங்கள்.

தமிழர்களின் உயிருக்கே இங்கு மதிப்பில்லை.
இது இனப்படுகொலை அன்றி வேறென்ன?!

Tuesday, 27 November 2018

தமிழகத்தை ஒட்டச் சுரண்டும் ஹிந்தியா

தமிழகத்தை ஒட்டச் சுரண்டும் ஹிந்தியா

தமிழகத்தைப் புயல் தாக்குகிறது.
தமிழகக் குழு ஆய்வு செய்கிறது. இவ்வளவு சேதம் என்று கணக்கிட்டு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கிறது.

இப்போது நியாயமாக நடுவணரசு என்ன செய்யவேண்டும்?

தமிழக அரசு கூறுவதை நம்பி நிவாரணம் அளிக்கவேண்டும்.

ஆனால் மத்திய அரசு வழக்கமாக  என்ன செய்கிறது தெரியுமா?

தனியே ஒரு மத்திய குழுவை அனுப்பி அந்த குழு திமிராகவும் எகத்தாளமாகவும் மேம்போக்காக ஆய்வு செய்து சாவகாசமாக "சேதமெல்லாம் ஒன்றுமில்லை" என்பது போல அறிக்கை அனுப்பி  தமிழக அரசு கோரியதில் கால்வாசியோ அல்லது அதற்கும் குறைவாகவோ பிச்சை போடும்.

இத்தனைக்கும் தமிழக அரசு வரி என்கிற பெயரில் மத்திக்கு கட்டும் மலை மலையான பணத்திற்கு முன் இந்த "பிச்சை" உண்மையிலேயே "பிச்சை" என்று கூடக் கூறமுடியாது அதற்கும் கீழ்.

உதாரணத்திற்கு 2012 ஆண்டு தமிழக அரசு மத்திக்கு கட்டிய 'வருமான வரி' மட்டும் 28000 கோடி (பிற வரிகளைச் சேர்க்கவில்லை).

ஆனால் 2011 இல் தானே புயல் தாக்கியபோது தமிழகம் கேட்டது வெறும் 5200 கோடி.

ஆனால் மத்திய அரசு போட்ட பிச்சை 500 கோடி.

அதாவது ஒரு நபர் இன்னொரு நபரிடம் 280 ரூபாயை கொடுத்துவைத்து அதில் அவசரத் தேவைக்காக 50 ரூபாயை  கேட்கும்போது வெறும் 5 ரூபாயை அவர் முகத்தில் விட்டெறிந்தது போல.

இது மட்டுமில்லை மத்திக்கு நாம் கட்டும் கப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
2012 இல் 28000 வருமான வரி கட்டியதாக கூறினேன் அல்லவா?!
2016 இல் அது 67000 கோடியாக உயர்ந்துவிட்டது.

இதேபோல 2016 "வர்தா" புயல் பாதிப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு கோரியது 22000 கோடி.
மத்திய அரசு போட்ட பிச்சை வெறும் 266 கோடி.

அடுத்த ஆண்டு 2017 ஒக்கி புயலின்போது,
தமிழ்நாடு கேட்டது 13000.
இந்திய அரசு பிச்சையிட்டதோ வெறும் 280 கோடி.

இப்போது புதிதாக GST போட்டு ஆறே மாதங்களில் 51000 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டனர்.
(01.07.2018 அன்று GST ஆணையர் அறிவிப்பு)

ஆக இந்த நிதி ஆண்டு 1 லட்சம் கோடிக்கு மேல் GST வரி கட்ட உள்ளோம்.

பிற வரிகளையும் சேர்த்தால் ஏறத்தாழ தற்போதைய நிலைப்படி ஓராண்டுக்கு 3 லட்சம் கோடிக்கு மேல் மத்திக்கு கப்பம் செல்கிறது.

தமிழகத்தின் மொத்த கடனே அவ்வளவுதான்!

இது பகல்கொள்ளை அன்றி வேறில்லை!

விளைவு, தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும் 40,000 ரூபாய் கடனாளி.

ஆனால் நாம் பெற்றது என்ன?!

ஆற அமர வந்து பிணங்களை பொறுக்கி தரும் "மத்திய பேரிடர் மீட்பு" நடவடிக்கை மட்டும்தான்.

நிவாரண நிதியை விடுங்கள், தற்போதைய மோடி அரசு நமக்கு ஒதுக்கிய வழக்கமான நிதியைக்கூட இன்னும் தரவில்லை.

கடந்த 08.10.2018 அன்று, புதுதில்லி சென்று இந்தியத் தலைமையமைச்சரை நேரில் சந்தித்து வந்த தமிழ்நாடு முதலமைச்சர்,
"தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கும்,
தமிழ்நாட்டின் இதர திட்டங்களுக்கும்
ஒதுக்கப்பட்டு இதுவரை வராத 19000 கோடி ரூபாய் நிதி பாக்கியைத் தாருங்கள்"
என கோரிக்கை வைத்துவிட்டு வந்தார்.
(இந்த பாக்கி தற்போது 21000 கோடியைத் தாண்டிவிட்டது)

தமிழகத்திற்கு உள்ளே ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவு அதாவது மாநில அரசின் மொத்த செலவே 15000 கோடிதான்.

ஒரு தொழிலாளிக்கு ஒரு மாத ஊழியம் தராமல் ஏமாற்றுவது போலத்தான் இதுவும்!

சென்னைப் பல்கலைக்கழகப் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
இவர் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில் எழுதிய கட்டுரையில் "ஓர் ஆண்டில் இந்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 31% என்றும்
அதேவேளை இந்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தொகை வெறும் 3% என்று குறிப்பிட்டிருந்தார்"
(சான்று Times of India, 05.09.2018).

"நல்ல வாயன் சம்பாதிப்பதை நாறவாயன் தின்கிறான்" என்கிற பழமொழியை இனி  "தமிழகம் சம்பாதிப்பதை ஹிந்தியா தின்கிறது" என்று மாற்றிக் கொள்ளலாம்.

மக்கள் என்னதான் நிவாரணம் அனுப்பினாலும் ஒரு அரசு அளவுக்கு வராது.

கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணமாக நாம் கேட்பது 15000 கோடி.

ஆனால் வழக்கம் போல மத்திய அரசு "விளைவித்தவன் வாழைப்பழத்தை பிடுங்கித் தின்றுவிட்டு தோலை தூக்கி  முகத்தில் அடிக்கும்" ரவுடி போல எதையாவது வீசியெறிய உள்ளது.

சுரண்டலை நோக்கமாகக் கொண்ட ஆங்கிலேய பேரரசுக்கும் ஹிந்திய நடுவணரசுக்கும் எதாவது வேறுபாடு உள்ளதா?!

தமிழர்கள் சிந்திப்பீர்!
-----------------

தகவல்களுக்கு நன்றி:
தோழர் க. அருணபாரதி
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

கட்டுரை தலைப்பு:
“கசா” பேரழிவுச் சூழலிலும்
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இந்திய அரசு!