Tuesday, 6 December 2022
வேலைவாய்ப்பு இனத்தின் உரிமை
Tuesday, 27 November 2018
தமிழகத்தை ஒட்டச் சுரண்டும் ஹிந்தியா
தமிழகத்தை ஒட்டச் சுரண்டும் ஹிந்தியா
தமிழகத்தைப் புயல் தாக்குகிறது.
தமிழகக் குழு ஆய்வு செய்கிறது. இவ்வளவு சேதம் என்று கணக்கிட்டு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கிறது.
இப்போது நியாயமாக நடுவணரசு என்ன செய்யவேண்டும்?
தமிழக அரசு கூறுவதை நம்பி நிவாரணம் அளிக்கவேண்டும்.
ஆனால் மத்திய அரசு வழக்கமாக என்ன செய்கிறது தெரியுமா?
தனியே ஒரு மத்திய குழுவை அனுப்பி அந்த குழு திமிராகவும் எகத்தாளமாகவும் மேம்போக்காக ஆய்வு செய்து சாவகாசமாக "சேதமெல்லாம் ஒன்றுமில்லை" என்பது போல அறிக்கை அனுப்பி தமிழக அரசு கோரியதில் கால்வாசியோ அல்லது அதற்கும் குறைவாகவோ பிச்சை போடும்.
இத்தனைக்கும் தமிழக அரசு வரி என்கிற பெயரில் மத்திக்கு கட்டும் மலை மலையான பணத்திற்கு முன் இந்த "பிச்சை" உண்மையிலேயே "பிச்சை" என்று கூடக் கூறமுடியாது அதற்கும் கீழ்.
உதாரணத்திற்கு 2012 ஆண்டு தமிழக அரசு மத்திக்கு கட்டிய 'வருமான வரி' மட்டும் 28000 கோடி (பிற வரிகளைச் சேர்க்கவில்லை).
ஆனால் 2011 இல் தானே புயல் தாக்கியபோது தமிழகம் கேட்டது வெறும் 5200 கோடி.
ஆனால் மத்திய அரசு போட்ட பிச்சை 500 கோடி.
அதாவது ஒரு நபர் இன்னொரு நபரிடம் 280 ரூபாயை கொடுத்துவைத்து அதில் அவசரத் தேவைக்காக 50 ரூபாயை கேட்கும்போது வெறும் 5 ரூபாயை அவர் முகத்தில் விட்டெறிந்தது போல.
இது மட்டுமில்லை மத்திக்கு நாம் கட்டும் கப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
2012 இல் 28000 வருமான வரி கட்டியதாக கூறினேன் அல்லவா?!
2016 இல் அது 67000 கோடியாக உயர்ந்துவிட்டது.
இதேபோல 2016 "வர்தா" புயல் பாதிப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு கோரியது 22000 கோடி.
மத்திய அரசு போட்ட பிச்சை வெறும் 266 கோடி.
அடுத்த ஆண்டு 2017 ஒக்கி புயலின்போது,
தமிழ்நாடு கேட்டது 13000.
இந்திய அரசு பிச்சையிட்டதோ வெறும் 280 கோடி.
இப்போது புதிதாக GST போட்டு ஆறே மாதங்களில் 51000 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டனர்.
(01.07.2018 அன்று GST ஆணையர் அறிவிப்பு)
ஆக இந்த நிதி ஆண்டு 1 லட்சம் கோடிக்கு மேல் GST வரி கட்ட உள்ளோம்.
பிற வரிகளையும் சேர்த்தால் ஏறத்தாழ தற்போதைய நிலைப்படி ஓராண்டுக்கு 3 லட்சம் கோடிக்கு மேல் மத்திக்கு கப்பம் செல்கிறது.
தமிழகத்தின் மொத்த கடனே அவ்வளவுதான்!
இது பகல்கொள்ளை அன்றி வேறில்லை!
விளைவு, தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும் 40,000 ரூபாய் கடனாளி.
ஆனால் நாம் பெற்றது என்ன?!
ஆற அமர வந்து பிணங்களை பொறுக்கி தரும் "மத்திய பேரிடர் மீட்பு" நடவடிக்கை மட்டும்தான்.
நிவாரண நிதியை விடுங்கள், தற்போதைய மோடி அரசு நமக்கு ஒதுக்கிய வழக்கமான நிதியைக்கூட இன்னும் தரவில்லை.
கடந்த 08.10.2018 அன்று, புதுதில்லி சென்று இந்தியத் தலைமையமைச்சரை நேரில் சந்தித்து வந்த தமிழ்நாடு முதலமைச்சர்,
"தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கும்,
தமிழ்நாட்டின் இதர திட்டங்களுக்கும்
ஒதுக்கப்பட்டு இதுவரை வராத 19000 கோடி ரூபாய் நிதி பாக்கியைத் தாருங்கள்"
என கோரிக்கை வைத்துவிட்டு வந்தார்.
(இந்த பாக்கி தற்போது 21000 கோடியைத் தாண்டிவிட்டது)
தமிழகத்திற்கு உள்ளே ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவு அதாவது மாநில அரசின் மொத்த செலவே 15000 கோடிதான்.
ஒரு தொழிலாளிக்கு ஒரு மாத ஊழியம் தராமல் ஏமாற்றுவது போலத்தான் இதுவும்!
சென்னைப் பல்கலைக்கழகப் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
இவர் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில் எழுதிய கட்டுரையில் "ஓர் ஆண்டில் இந்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 31% என்றும்
அதேவேளை இந்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தொகை வெறும் 3% என்று குறிப்பிட்டிருந்தார்"
(சான்று Times of India, 05.09.2018).
"நல்ல வாயன் சம்பாதிப்பதை நாறவாயன் தின்கிறான்" என்கிற பழமொழியை இனி "தமிழகம் சம்பாதிப்பதை ஹிந்தியா தின்கிறது" என்று மாற்றிக் கொள்ளலாம்.
மக்கள் என்னதான் நிவாரணம் அனுப்பினாலும் ஒரு அரசு அளவுக்கு வராது.
கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணமாக நாம் கேட்பது 15000 கோடி.
ஆனால் வழக்கம் போல மத்திய அரசு "விளைவித்தவன் வாழைப்பழத்தை பிடுங்கித் தின்றுவிட்டு தோலை தூக்கி முகத்தில் அடிக்கும்" ரவுடி போல எதையாவது வீசியெறிய உள்ளது.
சுரண்டலை நோக்கமாகக் கொண்ட ஆங்கிலேய பேரரசுக்கும் ஹிந்திய நடுவணரசுக்கும் எதாவது வேறுபாடு உள்ளதா?!
தமிழர்கள் சிந்திப்பீர்!
-----------------
தகவல்களுக்கு நன்றி:
தோழர் க. அருணபாரதி
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
கட்டுரை தலைப்பு:
“கசா” பேரழிவுச் சூழலிலும்
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இந்திய அரசு!
Saturday, 20 October 2018
தமிழகத்தில் வடவர் குடியேற்றம் மற்றும் ஆதிக்கம்
தமிழகத்தில் வடவர் குடியேற்றம் மற்றும் ஆதிக்கம்
“எங்கெங்கு காணினும் இந்திவாலாக்கள்!"
என்ற தலைப்பில், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கை தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் குவிந்து வருவதைப் பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அக்கட்டுரையில் தோழர் பெ. மணியரசன் அளித்துள்ள செவ்வியும் வெளியாகியுள்ளது.
அக்கட்டுரையின் முக்கிய கருத்துகள் கீழே,
//கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலேயே "வெளிமாநிலத்தார் குடியேற்றத்தில்" தமிழகம் முதலிடம் //
//2011 இல் மக்கட்தொகை கணக்கெடுப்பு படி தமிழகத்தில் 'வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் குடியேறியோர்' 44 லட்சம்//
//தற்போது 'வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் குடியேறியோர்' எண்ணிக்கை ஒரு கோடி தாண்டும்//
//கர்நாடகா, குஜராத், மேற்குவங்கம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் குடியேற்றம் தொடர்பாக கடுமையான சட்டம் வைத்துள்ளன//
//நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலபிரதேசம் ஆகியவற்றில் வெளியார் குடியேற 'இன்னர்லைன் பெர்மிட்' எனும் மத்திய நடுவணரசு அனுமதி கட்டாயம்//
//தமிழகத்தில் எந்த குடியேற்றக் கட்டுப்பாடும் இல்லை//
//வடவர் குற்றச்செயல்கள் பெருகிவருகின்றன//
//சென்னை பொருளாதாரம் பல ஆண்டுகளாக ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி பணக்காரர்கள் கைகளில்//
//அம்பத்தூர் தொழிற்பேட்டை வேலைவாய்ப்பு 70% வந்தேறி வடவர்களால் ஆக்கிரமிப்பு //
//சென்னை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உயர்தர வேலைவாய்ப்பு 50% வடயிந்தியர் ஆக்கிரமிப்பு//
படம்: குமுதம் ரிப்போர்ட்டர் (23.10.2018)
தலைப்பு: எங்கெங்கு காணினும் இந்திவாலாக்கள்! - சிக்கலில் தமிழகத் தொழிலாளர்கள்
இதேபோல நக்கீரன் வெளியிட்ட கட்டுரையைப் படிக்க,
"2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள்" என்று தேடுக.
Wednesday, 8 November 2017
சென்னை மாகாணத்தை மொழிவழியாகப் பிரிக்கக்கூடாது - ஈ.வே.ரா
சென்னை மாகாணத்தை மொழிவழியாக பிரிக்கக்கூடாது - ஈ.வே.ரா
"சென்னை மாகாணத்தை நான்கு கூறுகளாக ஆக்க வேண்டு மென்பது கண்டிப்பாக அரசியல் வாழ்வையே தங்கள் ஜீவனமாக, வியாபாரமாக, பதவி- பட்டம்- பணம் சேர்த்தல் முதலிய காரியங்களுக்கு வழியாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தும் சிலர் தங்கள் நலனுக்காக இதை- இந்தப் பிரிவினையை வேண்டுவார்களானால், வலியுறுத்துவார்களானால் அதற்கு இடம் கொடுப்பது திராவிட கலாச்சாரத்துக்கும் திராவிட சமுதாயத்துக்கும், திராவிடத் தலை மொழியாகிய தமிழுக்கும் தேய்வு- அழிவு ஏற்பட்டு விடுமென்று எச்சரிக்க விரும்புகிறேன்"
- ஈ.வே.ரா விடுதலை 01.08.1948
ஈ.வே.ராமசாமி ஏதோ 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று முழங்கி தமிழர் உரிமைக்காகப் போராடினார் என்றும்
தனித்தமிழ்நாடு கேட்டார் என்றும் திராவிடவாதிகள் கூறுகிறார்கள்.
ஆனால் அது பொய்.
(தேடுக: தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம் வேட்டொலி
தேடுக: ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா? மூன்றுமுறை நிறம் மாறிய பச்சோந்தி வேட்டொலி)
தற்போது மேலும் ஒரு சான்று கிடைத்துள்ளது.
2011 ல் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை பெரிய அளவில் வெடித்தது.
அது அமைந்துள்ள இடுக்கி மாவட்டமே (தேவிகுளம் - பீர்மேடு) தமிழர் பெரும்பான்மை மாவட்டம் ஆகும்.
தேனி தமிழரும் இடுக்கி தமிழரும் லட்சக்கணக்கில் திரண்டு இடுக்கி தமிழகத்துடன் இணைய பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.
அப்போது தமிழ்தேசியப் பேரியக்கம் தலைவர் திரு.மணியரசன் பல்வேறு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டார்.
அப்பொது அவர் வெளியிட்ட அறிக்கையில் திராவிடம் பேசுவோர் அன்று முதல் இன்றுவரை தமிழர் இனவுணர்வை திசைமாற்றி எப்படியெல்லாம் இரண்டகம் செய்தனர் என்று விரிவாக கூறியுள்ளார்.
(அவற்றில் மேற்கண்ட சான்று மட்டும் இதுவரை எனக்கு காணக்கிடைக்காத ஒன்று.
அதனால் இங்கே பதிகிறேன்.
இது ' ஈ.வே ரா மண்மீட்பில் உதவினாரா? ' என்ற பதிவுடனும் சேர்க்கப்படும்)