Thursday 24 September 2015

பெங்களூரில் சோழர் கோவில்கள்

பெங்களூரில் சோழர் கோவில்கள்

வெங்கலூர் (பெங்களூர்) மற்றும் அதைச் சுற்றிலும் சோழர் கட்டிய கோவில்கள் பல உள்ளன.

பழைய பெயர்கள் மறைந்துவிட்டன.
தற்போதைய பெயரையே தருகிறேன்.

எட்கர் தர்ஸ்டன் எழுதிய 'castes and tribes of india' volume-5' ல்
கி.பி ஒன்றிலிருந்து 1024ல் சோழர்கள் பெங்களூரைக் கைப்பற்றும் வரையான காலத்தில் பெங்களூரை ஆண்ட மன்னர்கள் பற்றி கூறியுள்ளார்.
'கொங்குதேச ராஜாக்கள்' (Kongu chronicle) இதற்கான குறிப்புகளை வழங்கியுள்ளது.

பெங்களூரில் மரதஹல்லி (marathahalli)ல் உள்ள சோமேஸ்வர ஆலயத்தில் 1304ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு உள்ளது.
இதில் இப்பகுதியின் பழைய பெயர் நெற்குந்தி (nerkundi)என்று குறிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பெங்களூரின் அகரா (agara) பகுதியில் உள்ள 1200 ஆண்டுகள் பழமையான மற்றொரு சோமேஸ்வரசுவாமி கோயிலும் சோழர்கள் கட்டியதே.

பெங்களூரின் வசந்தபுரத்தில் 'வசந்த வல்லபரயர்' ஆலயமும் சோழர்காலத்தில் கட்டப்பட்டதே.

பெங்களூரின் நாகரத்பேட் (nagarathpet)ல் உள்ள 800ஆண்டுகள் பழமையான காளிகாம்பாள்- காமதேஸ்வரர் கோயிலும் சோழர் காலத்தைச் சேர்ந்தது.

பெங்களூர் புறநகரில் உள்ள ஹொஸ்கோட் (hoskote) தாலுகாவில் கோண்ட்ரஹல்லி (kondrahalli)ல் உள்ள தர்மேஸ்வரர் ஆலயம் 1065ல் சோழர்களால் கட்டப்பட்டது.

பெங்களூரில்  அனேகல் (anekal) தாலுகாவில் ஹுஸ்கூர் (huskur)ல் மதுரம்மன் ஆலயம் உள்ளது.
இதுவும் 11ம் நூற்றாண்டில் சோழர்கள் கட்டிய கோவில் ஆகும்.

பெங்களூர் அருகே ஹெப்பல் (hebbal) எனுமிடத்தில் உள்ள ஆனந்தகிரி குன்றுகளில் உள்ள 'ஆனந்த லிங்கேஸ்வரர்' கோவில் சோழர்கள் கட்டடக்கலையில் அமைந்துள்ளது.
கட்டியது யாரென்று ஆராயப்படவேண்டும்.

இதேபோல பெங்களூர் நகருக்குள் மற்றொரு மதிவாலா சோமேஸ்வரர் ஆலயம் உள்ளது.
இதையும் சோழர்களே கட்டியுள்ளனர்.
இதில் 1247 மற்றும் 1365ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் உள்ளன.

பெங்களூரின் காங்கேரி (kangeri)ல் ஈஸ்வரர் ஆலயம் ஒன்று உள்ளது.
இதுவும் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டது.

இது போக முக்கியமானவை,

1)பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம்
இக்கோவில் பெங்களூரில் பேகூர்(Begur, Bangalore) என்ற இடத்தில் உள்ளது.
இவ்வூரின் பழைய பெயர் வெப்பூர் ஆகும்.
தமிழ் கல்வெட்டுகள் கொண்டது.
1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.
நாகேஸ்வரர் கோவில் என்று தற்போது அழைக்கப்படுகிறது.
வெவ்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட ஐந்து லிங்கங்கள் உள்ளன. அதில் ஒன்று சோழேஸ்வரர் என்று பெயர்பெற்றுள்ளது.

2) சொக்கப்பெருமாள் ஆலயம்
பெங்களூரில் உள்ள தொம்லூர் (Domlur) என்ற இடத்தில் உள்ளது.
10ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் உள்ளன.
இதன் பழைய பெயர் தொம்பலூர் அல்லது தேசிமாணிக்கப் பட்டணம் ஆகும்.
பெங்களூரை இலைப்பக்கநாடு என்றும்
தென்கன்னடப் பகுதியை தடிகைப்பாடி என்றும் இக்கோவில் கல்வெட்டுகள் குறிக்கின்றன.
1258ஐச் சேர்ந்த ஒரு கல்வெட்டு ஆலால நம்பியார் என்பவர் பூசாரியான 'மணலி திரிபுரந்த ஆசாரியார்' என்பவருக்கு வழிபாட்டுக்கென வழங்கிய கொடையைக் கூறுகிறது.
1270ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் அழகியர் என்பவர் கதவுகள் அளித்தது பற்றியும்
மற்றொன்று இக்கோவிலைக் கட்டிய தலைக்காடு பகுதியைச் சேர்ந்த 'திரிபுராந்தகன் செட்டியார்' மற்றும் அவரது மனைவி 'செட்டிச்சி பார்ப்பார்த்தி' ஜலப்பள்ளி மற்றும் விண்ணமங்கலம் குளம்  பகுதிகளை கொடையாக அளித்தது பற்றியும் கூறுகிறது.
(சான்று: epigraphica carnatica vol 9, insc of banglore, no 10&13 )

3) போகநாதீஸ்வரர் ஆலயம்
நந்திமலை அடிவாரத்தில் சிக்கபல்லப்பூர் (chikkaballapur) மாவட்டத்தில் உள்ள நந்தி கிராமத்தில் உள்ளது.
தமிழ் கல்வெட்டுகள் கோவில் சுவரில் காணப்படுகின்றன.

4) சோமேஸ்வரர் ஆலயம்
பெங்களூரில் உல்சூர் அல்லது ஹலசூரு என்ற இடத்தில் உள்ளது.
63நாயன்மார்களின் (தமிழர்கள்) சிலைகளும் உள்ளன.

5)கோலாரம்மன் ஆலயம்
கோலார் (kolar) நகரத்தில் அமைந்துள்ளது.
இதைக் கட்டியது ராஜேந்திர சோழன் ஆவான்.
முழுக்க முழுக்க தமிழ் கல்வெட்டுக்கள் நிறைந்துள்ளன.
(epigrapha carnatica vol 10  insc of kolar taluk)

6)முக்தி நாதேஸ்வரர் ஆலயம்
நீலமங்கல தாலுகாவில் பின்னமங்கலா (binnamangala) என்ற என்ற இடத்தில் உள்ளது.
குலோத்துங்க சோழன் காலத்தில் 1110ல் கட்டப்பட்டுள்ளது.
உடையான் ராஜராஜ குலோத்துங்கன் (எ) குலோத்துங்க சோழன் அதிமூர்க்க செங்கிராயன் எனும் பெயருடைய இப்பகுதியின் நிர்வாக அதிகாரியும் மன்னனும் ஆகிய சோழமன்னன்
விக்கிரம மண்டலத்தில் உள்ள குக்கனூர் நாட்டின் விண்ணமங்கலம் ஊரின் சுற்றியுள்ள நிலங்களை முத்தீஸ்வர உடைய மகாதேவருக்கு (இக்கோயில் கடவுள்) தேவதானமாக அளிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
(epigrapha carnatica vol 9 insc of nelamangala taluk, no:3)

7)சித்தேஸ்வரம் ஆலயம்
சோழதேவனஹல்லி  (soladevanahalli) எனும் இடத்தில் உள்ள முத்தரையஸ்வாமி கோவில் என்ற கோவில் உள்ளது.
ஆய்வுகள் செய்யப்படவேண்டும்.

8)பிடாரி சாமுண்டேஸ்வரி ஆலயம்
இந்த கோவில் தற்போது காணக்கிடைக்கவில்லை.
நீலமங்கலா அருகே மைலானஹல்லி (mailanahalli) என்ற ஊரின் நுழைவாயிலில் இரண்டாம் அடுக்கில் தமிழ் கல்வெட்டு காணப்படுகிறது.
ராஜராஜசோழன் காலத்தையதான அதில் அப்பகுதி குக்கனூர்நாடு என்றறியப்பட்டதாகவும் அது விக்கிரமசோழ மண்டலத்திற்கு உட்பட்டிருந்ததாகவும் அறியக்கிடைக்கிறது.

மேலும், நீலமங்கலா தாலுகாவில்
அ) மாதிகேரே (madikere)ல் உள்ள மாதேஸ்வரர் ஆலயம்,
ஆ)ஐங்கந்தபுரம் (ayinkandapura)ல் உள்ள கோபாலகிருஷ்ண ஆலயம்,
இ)சோலதேவன ஹல்லி தர்மேஸ்வர ஆலயம்,
ஈ) ஹெக்குண்டா (heggunda)ல் உள்ள மல்லிகார்ஜுன ஆலயம்,

தேவனஹல்லி தாலுகாவில் உள்ள
அ) கங்கவாரா ஔடப்பன்ஹல்லி (gangavara chowdappanhalli)ல் சோமேஸ்வரர் ஆலயம்

ஹொஸ்கோட் தாலுகாவில் உள்ள
அ)கடுகோடி (kadugodi) காசி விஸ்வேஸ்வரர் ஆலயம்

சன்னபட்டண தாலுகாவில் உள்ள

அ)மல்லூர் பட்டண (malurpatana)ல் நாராயணஸ்வாமி ஆலயம் மற்றும்
அரக்கேஸ்வரர் ஆலயம்
ஆ)குட்லூர் (kudlur)ல் ராமதேவ ஆலயம் மற்றும் மங்கலேஸ்வரர் ஆலயம்
இ)சிக்கமலூர் (chikkamalur)ல்  அரக்கேஸ்வரர் ஆலயம், கோபாலஸ்வாமி ஆலயம், மற்றும் காளீஸ்வரர் ஆலயம்
ஈ)தொட்டமலூர் (doddamalur)ல் அப்ரனேயஸ்வாமி ஆலயம்

போன்றவையும் சோழர்காலத்தவையே

ஆராய்ந்தால் நிறைய சான்றுகள் கிடைக்கும்.

நன்றி: www.mayyam.com/talk/showthread.php?10458-A-brief-study-on-Chola-built-temples-in-Karnataka

https://en.m.wikipedia.org/wiki/List_of_Chola_temples_in_Bangalore

Monday 21 September 2015

துரோகிகள்

தமிழர்கள் வலுப்பெறட்டும்

அப்போது தெரியும்
எந்த இனத்திலும் துரோகிகளுக்குப் பஞ்சமில்லை என்று

Friday 18 September 2015

Invention of "Stepney"

Invention of "Stepney" (for Vehicle)

in Sangam age around 300-100 BC
While Mordern world invented in 1904

“எருதே இளைய நுகம் உணராவே
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே
அவல் இழியினும் மிசை ஏறினும்
அவணது அறியுநர் யார் என உமணர்
கீழ்மரத்து யாத்த சேம அச்சு அன்ன
இசை விளங்கு கவி கை நெடியோய் திங்கள்
நாள் நிறை மதியத்து அனையை இருள்
யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே?”

"Salt merchants carry a spare axle tied to the wood underneath,

since the bulls are youn and not acquainted with the yoke,

and they have to carry heavy loads as the wagon climbs on mounds and goes down through ditches.

Who knows what might happen?

You are like that spare axle,
a great man with cupped hands that give.

You are like the full moon.
How can there be darkness for those who live under your protection?"

(Puranānūru 102, Poet Avvaiyār)

நன்றி: sivaskr

Sunday 13 September 2015

ஜெர்மனியும் தமிழகமும்

ஜெர்மனியும் தமிழகமும்

தற்போதைய ஜெர்மனி நாடானது ஜெர்மானிய பெரும் நிலத்தின் ஒரு பகுதிதான்.

ஆஸ்திரியாவும் லக்சம்பர்க்கும் கூட ஜெர்மானிய நாடுகள்தான்.

இது போக பிரான்சிடமும் இத்தாலியிடமும் டென்மார்க்கிடமும் ஸ்லோவேனியாவிடமும் சிறிய சிறிய ஜெர்மானிய பகுதிகள் உள்ளன.

ஸ்விட்சர்லாந்தின் முக்கால்வாசி ஜெர்மானியரே.

போலந்திலும் செக் குடியரசிலும் இருந்த ஜெர்மானியர் உலகப்போருக்குப் பிறகு விரட்டப்பட்டுவிட்டனர்.

நீல நிற கோடு 1910வரை ஜெர்மானியர் வாழ்ந்த நிலப்பரப்பு.

இதை நமது சூழலுக்கு பொருத்திப் பார்த்தோமானால்

இன்று தமிழ்நிலம் ஏழுதுண்டுகளாக சிதறுண்டு உள்ளது.
1.தமிழகம்
2.ஈழம்
3.கிழக்கு கேரளம்
4.தென் கன்னடம்
5.தென் ஆந்திரம்
6.புதுச்சேரி
7.மலையகம்

ஐரோப்பாவிற்கு ஜெர்மானியர் எப்படியோ அதேபோல இந்திய துணைகண்டத்திற்கு தமிழர்.

ஒருவேளை அண்டை மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்கமுடியாது போனாலும்

ஈழம் தனிநாடாக ஆனாலும்

தமிழகம் மட்டும் தன் வலிமையால் தனிநாடாகி மாபெரும் வல்லரசாக உருவெடுக்கமுடியும்.

Friday 11 September 2015

விசால ஆந்திரா

விசால ஆந்திரா

இதுதான் தெலுங்கர் வெளியிட்டுள்ள வரைபடம்

கறுப்பு நிறம் தூய தெலுங்கு பகுதியாம்

அடர் சாம்பல் தெலுங்கு பெரும்பான்மையாம்

(இவ்விரண்டையும் தமது நாடாக்க இவர்கள் கோருகிறார்கள்)

சாம்பல் நிறம் தெலுங்கு கணிசமான அளவாம்

தமிழகத்தில் 41% தெலுங்கராம்.
தெலுங்கு மக்கள்தொகை 19கோடியாம்.

2009வாக்கில் வெளியிடப்பட்டது.

www.quora.com/Are-there-only-39-5-Tamils-in-Tamil-Nadu-while-Telugu-people-are-about-41

தமிழகத்துடன் இணையவிரும்பும் பிறமாநிலத் தமிழர் (காணொளிகள்)

தமிழகத்துடன் இணைய ஆந்திரத் தமிழர் தீர்மானம்
https://m.facebook.com/story.php?story_fbid=609661612470829&id=100002809860739&_rdr

தமிழகத்துடன் இணைய கேரளத் தமிழர்கள் போராட்டம்
https://m.facebook.com/story.php?story_fbid=608701625900161&id=100002809860739&_rdr

Monday 7 September 2015

திருநெல்வேலி ரெட்டியார்கள்

திருநெல்வேலி ரெட்டியார்கள்
.
.
ஒரு பகுதியில் அதிகப்படியான நிலங்களை
அதுவும் விளைநிலங்களைக்
கையில் வைத்திருக்கும் சாதி
அப்பகுதியின் ஆதிக்க சாதி என்றோமானால்

தமிழகத்தின் கடைக்கோடி நகரான
திருநெல்வேலி மற்றும் அதன் வட்டத்தில்

ஆதிக்க சாதி தெலுங்கு ரெட்டிகளே
.

Thursday 3 September 2015

புதியதொரு தமிழர் மதம் உருவாக்குவோம்

எல்லா தற்காப்புக் கலைகளின் சிறப்புகளையும் கலந்து புரூஸ் லீ தலைசிறந்த ஒரு தற்காப்புக்கலையை எப்படி உருவாக்கினாரோ

அதே போல

எல்லா மதங்களின் சிறப்புக்களையும் கலந்து தமிழர்கள் தமக்கான புதியதொரு மதத்தை உருவாக்கவேண்டும்.

ஆனால் அது கட்டாயப்படுத்துவதாக இருக்கக்கூடாது.

---""""----""""---""""---""""----"""---""""---""""---""""----
தமிழர் மதம்
https://m.facebook.com/photo.php?fbid=368994183204241&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56