Showing posts with label ஜெர்மன். Show all posts
Showing posts with label ஜெர்மன். Show all posts

Saturday, 4 November 2017

ஹிட்லர் ஏன் தோற்றார்?

ஹிட்லர் ஏன் தோற்றார்?

ஜெர்மானிய மக்கள் பல அரசுகளாக சிற்றரசுகளாக சிதறிக் கிடந்தனர்.
இதை ஜனநாயக வழியில் ஒரே நாடாக உருவாக்க வியன்னாவில் கூடிய ஜெர்மன் தேசியவாதிகள் மக்கட்புரட்சி மூலம் இதை செய்ய முடிவெடுத்தனர்.

1848 ல் இந்த முயற்சி ஆளும் வர்க்கம் அதிலும் குறிப்பாக சிற்றரசுகள் தனது அதிகாரம் போய்விடுமே என்று பயந்தன.
ராணுவ வலிமையால் இந்த எழுச்சி அடக்கப்பட்டது.

இதற்கு அடுத்து அன்றைய ஜெர்மனிய அரசுகளிலேயே பெரிய அரசான பிரஷ்யாவின் பிரதமராக வருகிறார் பிஸ்மார்க்.

1862 ல் இவர் நிகழ்த்திய உரை மிகவும் புகழ்பெற்றது.
அந்த பேச்சில் அவர் விவரித்த கொள்கையை 'இரத்தமும் இரும்பும்' (iron and blood) என்று சுருக்கமாகக் கூறுவர்.

அந்த உரையை சுருக்கமாகக் கூறினால்,
"ஜெர்மனிய அரசுகள் ஒன்றாக இணையவேண்டும்.
ஜெர்மானியர் வாழும் பகுதி ஒரே நாடாக இருக்கவேண்டும்.
இந்த ஒருங்கிணைப்பு ஜனநாயக வழியில் அல்லாது பிரஷ்யாவின் பலத்தால் (குருதியும் இரும்பும் செலவளித்து) நிறைவேற்றப்படும்"

இதன்பிறகு டென்மார்க் மீது படையெடுத்து அதனிடம் இருந்த ஜெர்மானிய பகுதியை மீட்டது பிரஷ்யா.
அடுத்து வடக்கு ஜெர்மனியில் இருந்த பல்வேறு சிற்றரசுகளை பேசியும் மிரட்டியும் பிரஷ்யாவில் இணைத்தனர்.

ஆனால் தெற்கே ஜெர்மானிய அரசான ஆஸ்திரியா அப்போது ஹங்கேரி உடன் இணைந்து ஆஸ்திரிய-ஹங்கேரி என்று பெரிய அரசாக இருந்தது.

ஆஸ்திரியா ஜெர்மனியுடன் இணைய மறுத்துவிட்டது.
காரணம் ஜெர்மனி கிறித்துவத்தில் புரோட்டஸ்டன்ட் பிரிவையும் ஆஸ்திரியா கத்தோலிக்க பிரிவையும் பின்பற்றுவது.
பிஸ்மார்க் ஆஸ்திரியா மீதும் படையெடுத்து அதைத் தோற்கடித்தார்.

"ஒற்றுமையே இல்லாத ஜெர்மானியர் இணைந்து ஜெருமானியப் பேரரசு அமைக்கப் போகிறார்களாம்" என்று பிரான்ஸ் இதை பரிகசித்தது.

பிஸ்மார்க் பிரான்சை ஆண்ட மூன்றாம் நெப்போலியனுக்கு துணிச்சல் இருந்தால் ஜெர்மனி மீது படையெடுக்குமாறு கடிதம் எழுதினார்.

போர் மூண்டது. பிரான்சை மிக எளிதில் படுதோல்வி அடையச்செய்தார் பிஸ்மார்க்.
இதைத் தொடர்ந்து வடக்கு முழுவதும் மத்திவரைக்கும் இருந்த ஜெர்மனிய அரசுகள் பிரஷ்யாவுடன் இணைந்தன.
ஆஸ்திரியா பெரிய ஜெர்மானிய பகுதியை இழந்தது.
1871ல் பிரஷ்யா ஜெர்மானிய பேரரசு ஆனது.
இது 80% ஜெர்மானிய பகுதியை உள்ளடக்கியது.

இதன்பிறகு முதலாம் உலகப்போர் மூண்டபோது ஜெர்மனிய பேரரசும் ஆஸ்திரிய-ஹங்கேரியும் இணைந்தே போர்புரிந்தன.

ஆனால் போரில் தோற்றபிறகு ஜெர்மனியின் எல்லைப் பகுதிகளைப் பறித்துக்கொண்டு சுருக்கி (முதல் படம்) பெரிய தொகை நட்ட ஈடாக தரவேண்டும் என்று ஒப்பந்தம் வென்றநாடுகள் போட்டன.

ஆஸ்திரியாவில் பிறந்த ஹிட்லர் ஜெர்மனிக்கு ஓவியனாகும் ஆசையில் வந்தார்.
அவருக்கு அதில் பெரிய திறமையில்லை என்று நிராகரிக்கப்பட்டார்.

பிறகு முதல் உலகப்போர் நடந்தபோது ராணுவத்தில் செய்தி கொண்டுசெல்லும் பணியில் சேர்ந்து திறமையாக செயல்பட்டு சிப்பாயாக ஆனார்.
போரில் காயமடைந்தார்.
அவர் மருத்துவமனையில் இருந்தபோது ஜெர்மனி தோல்வியடைந்தது.

எல்லைகளை இழந்து ராணுவமும் களைக்கப்பட்டு போர்ச் செலவாலும் கடனாலும் நாடே பஞ்சத்தில் சிக்கித்தவித்த அந்த வேளையில் இட்லர் கூலிவேலை செய்து பிழைத்து வந்தார்.

ஒருநாள் அவருக்கு அரசியல் எவ்வாறு நடக்கிறது என்று பார்க்க ஆர்வம் வந்தது.

சட்டமன்றத்திற்கு போன அவர் அங்கே யூதர்களே நிறைந்திருப்பதும் அவர்கள் மக்கள் பிரச்சனைப் பற்றி பேசாமல் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டு அவர்களை அவர்களே பெரிதாகப் புகழ்ந்துகொண்டு இருந்ததைக் கண்டு யூதர்களே எல்லாவற்றுக்கும் காரணம் என்று முடிவுசெய்தார்.

"ஒவ்வொரு அரசு அதிகாரியும் யூதனாக இருந்தான்.
ஒவ்வொரு யூதனும் அரசதிகாரியாக இருந்தான்.
இவர்கள் போர்க்களத்தில் குறைவாகவும் நாற்காலிகள் அதிகமாகவும் காணக்கிடைத்தனர்"
என்று யூதர்களைப் பற்றி அவர் எழுதுகிறார்.

ஏற்கனவே பிஸ்மார்க் பற்றி அறிந்திருந்திருந்த இட்லர் இனப்பற்றும் மிக்கவராக இருந்தார்.
பிஸ்மார்க் வழியில் தானும் பயணித்து ஜெர்மனியை ஒருங்கிணைப்பது என்று சூளுரைத்தார்.

அன்று ஏழுபேர் மட்டுமே இருந்த ஒரு கட்சியில் சேர்ந்தார்.
அவர்கள் மொட்டைமாடிகளில் கூட்டம் நடத்தினர்.
ஹிட்லர் தம்மால் முடிந்த அளவு உழைத்து கூட்டம் திரட்டி நன்கொடை பெற்று எழுச்சிப்பூர்வமாக உரை நிகழ்த்தி அந்தக் கட்சியை மிகப்பெரிய அளவில் உயர்த்தினார்.
பிறர் கழன்றுகொண்டபோதும் இட்லர் உறுதியாக கட்சியை நடத்தினார்.

இவ்வாறாக படிப்படியாக வளர்ந்த கட்சி ஜெர்மானிய தேசியத்தை மீண்டும் மக்கள் மனத்தில் துளிர்விடச் செய்தார்.

பிஸ்மார்க் போல தற்போது ஜெர்மனி பேசும் பகுதிகள் அனைத்தையும் இணைத்து ஒரே ஆட்சியில் கொண்டுவருவேன் என்று பரப்புரை செய்தார் (பிற மூன்று படங்கள்).
16 ஆண்டுகளில் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தார்.

ஆட்சிக்கு வந்ததும் இட்லர் ஜனநாயக முறைப்படி இரண்டு இழந்த பகுதிகளை மீட்டார்.

இராணுவத்தைக் கட்டமைத்து பல சீர்திருத்தங்கள் செய்து ஜெர்மனியை குறுகிய காலத்தில் தன்னிறைவு பெறச்செய்து வளர்ச்சியை நோக்கி கொண்டு சென்றார்.

1938ல் ஆஸ்திரியாவை மிரட்டி பேச்சுவார்த்தை மூலமே ஜெர்மனியுடன் இணைத்து பிஸ்மார்க் சாதிக்கமுடியாததை தாம் சாதித்துக் காட்டினார்.

இழந்த பகுதிகளை மீட்க போலந்தின் மீது படையெடுத்து பாதியைப் பிடித்தார்.
பிரான்ஸ் மீது படையெடுத்து தோற்கடித்து அவர்கள் எந்த ரயில்பெட்டியில் தோற்றுப்போன ஜெர்மானியரை ஒப்பந்தம்போட வரச்சொல்லி நிற்கவைத்து அவமானப்படுத்தி கையெழுத்து வாங்கினார்களோ
அதே ரயில்பெட்டிக்கு பிரெஞ்சு பிரதிநிதிகளை வரச்சொன்னார்.
அவர்கள் வந்ததும் ஒப்பந்தத்தை கொடுத்துவிட்டு வெளியேறினார்.

செக்கோஸ்லோவாகியா நாட்டின் எல்லை மூன்று புறமும் இட்லர் கட்டுப்பாட்டில் இருந்தது.
எல்லையை ஒட்டி ஜெர்மானியர் வாழ்ந்த பகுதியை தந்துவிட்டால் போர்தொடுக்கமாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்து தாம் வாக்களித்தபடி ஜெர்மன் பேசிய பகுதிகள் அனைத்தையும் ஒரு ஆட்சியின் கீழ் இணைத்தார்.

ஹிட்லர் இதோடு நின்றிருந்தால் இன்று ஜெர்மனிதான் உலக வல்லரசு.

ஆனால் இட்லர் ஜெர்மானிய இனவெழுச்சியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தத் தொடங்கினார்.

வாக்குறுதி மீறி செக்கோஸ்லோவாகியா மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினார்.
இது ஜெர்மன் பேசாத பகுதி ஆகும்.

அதன் பிறகு இத்தாலியுடன் கூட்டுவைத்து முதலாம் உலகப்போர் தோல்விக்கு பழிவாங்கவும் நாடுபிடிக்கும் எண்ணத்திலும் இட்லர் எல்லைமீறி போனார்.

ஆனாலும் ஜெர்மானிய இனம் அவருக்கு முடிந்த அளவு ஈடுகொடுத்து வெற்றிமேல் வெற்றி குவித்தது.

யூதர்களை தனியாக அடையாளமிட்டு தனிமைப்படுத்தி பிறகு சொத்துக்களை பறிமுதல் செய்து முகாம்களில் அடைத்து கடைசியில் கொத்துக் கொத்தாக கொலை செய்யச் சொன்னார்.

வெற்றியைக் குவித்தாலும்  தொடர்ச்சியான போர்களால் சோர்ந்துவிட்ட ஜெர்மன் படை மிகப்பெரிய இனமான ரஷ்ய இனத்திடம் தாக்குப்பிடிக்க முடியாமல் தோற்றது.
அங்கு நிலவிய காலநிலையும் இதற்கு முக்கிய காரணம்.

இறுதியில் ஜெர்மனி தோல்வியைத் தழுவியது.
போலந்திடம் பெரிய அளவு நிலத்தை இழந்தது.
அங்கிருந்த ஜெர்மானியர் விரட்டப்பட்டு போலந்து மக்கள் குடியேறிக்கொண்டனர்.
அதில் ஒரு சிறு பகுதியை ரஷ்யா எடுத்துக்கொண்டது.

எல்லைப் பகுதிகளை இழந்து ஆஸ்திரியா தனிநாடாகியது.
ஜெர்மனியும் கிழக்கு மேற்காக இரண்டாக பிரிக்கப்பட்டு வென்றநாடுகள் அடக்கி ஆண்டன.

45 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்த இரு பகுதிகள் மக்கள் எழுச்சியால் பிரிவினை சுவர் இடிக்கப்பட்டு ஜெர்மனி ஒருங்கிணைந்தது.

ஜெர்மானிய தாய்நிலத்தில் பாதியை இழந்தாலும் ஜெர்மனி இன்றும் ஒரு வல்லரசு.

ஆஸ்திரியா ஹங்கேரி போன்றன இன்று சிறிய நாடுகள்.
ஆனாலும் ஆஸ்திரியா நல்லநிலையில் உள்ளது.

இட்லரின் பேராசையும் பழிவாங்கும் உணர்வும் வரம்பு மீறி போனதால் இன்று ஜெர்மனியர் தமது இயல்பான இனப்பற்றைக் கூட வெளிப்படையாகக் காட்டமுடியாத நிலையில் உள்ளனர்.

இட்லர் அரசியலில் காலடி எடுத்துவைத்த அன்றைய ஜெர்மனி அப்படியே இன்றைய தமிழகத்தை ஒத்திருக்கிறது.
எல்லைப் பகுதிகள் இழந்த நிலையில் தமிழகம், ஆஸ்திரியா இடத்தில் ஈழம், துண்டானபகுதி இடத்தில் மலையகம்  ஆகியன பொருந்தி உள்ளன.

கிழக்கு மேற்கு என்று ஜெர்மனியை எதிரிகள் பிரித்தது போல வடதமிழ்நாடு தென்தமிழ்நாடு என்று இன்று தமிழகத்தை பிரிக்க சதி நடக்கிறது.

ஐரோப்பாவில் மூத்த இனமான ஜெர்மனியின் வரலாறு இந்திய துணைக்கண்டத்தில் மூத்த இனமான நமது வரலாறுடன் ஒத்துப்போகிறது.

நாம் எங்கே தொடங்கவேண்டும் எங்கே முடிக்கவேண்டும் என்பதற்கான பாடம் ஜெர்மனியின் வரலாற்றில் இருக்கிறது.

Thursday, 26 October 2017

அமெரிக்க இனங்கள்

அமெரிக்க இனங்கள்

(பேசுவது பலவகை ஆங்கிலம்)

இதன்படி ஜெர்மானிய-அமெரிக்கர் (German American) அமெரிக்காவின் மிகப்பெரிய இனம் ஆவர்.
மொத்த மக்கட்தொகையில் 15%.

இது ஆங்கில அமெரிக்கரை (8%) விட ஏறத்தாழ இருமடங்கு ஆகும்.

Wednesday, 5 July 2017

வடதமிழக மக்களுக்கு ஒரு வரலாற்றுக் கதை

வடதமிழக மக்களுக்கு ஒரு வரலாற்றுக் கதை
×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×

பிரான்ஸின் எல்லையை ஒட்டிய ஜெர்மனியின் ஒரு பகுதி 'ஸார்' (saar)

முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்றபோது பிரான்ஸ் அதை எடுத்துக்கொண்டது.
அங்கே பெருமளவு நிலக்கரி வளம் இருந்தது.
பிரான்ஸ் அதை நன்கு பயன்படுத்தியதுடன் அப்பகுதி ஜெர்மானியரையும் நன்றாக கவனித்துக்கொண்டது.

அதாவது ஒட்டுமொத்த ஜெர்மனியும் வறுமையில் திண்டாடியபோது ஸார் ஜெர்மானியர் ஓரளவு வசதியாக வாழமுடிந்தது.

பிறகு ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்ததும் இழந்த பகுதிகளை மீட்க முயற்சி மேற்கொண்டார்.
பிரான்ஸ் அதைத் திருப்பித்தரவேண்டும் என்று கேட்டார்.
பிரான்சுக்கு ஹிட்லரை நேரடியாக எதிர்க்கத் துணிவில்லை.
ஒப்பந்தத்தின்படி வாக்கெடுப்பு நடத்தி ஸார் மக்களே தீர்மானிக்கும்படி ஒரு ஏற்பாடு செய்தனர்.

பிரான்ஸ் ஸார் பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்தது.
"ஜெர்மனிக்கு ஸார் போனால் வறுமை வரும். நாஜிக்கள் இனவெறியால் போர் வரும்.
பிரான்ஸிற்கு வாக்களித்தால் உங்களை ஸார்லேன்ட் எனும் தனிநாடாக ஆக்கித் தருவோம்" என்றெல்லாம் ஆசை காட்டினர்.

பிரான்சிற்குள் இருக்கும் ஸாரில் நாஜிக்களால் நேரடியாக பிரச்சாரம் செய்யமுடியாத நிலை.
1935 ல் வாக்கெடுப்பு நடந்தது.
தமது பெரும் நிலக்கரி வளத்துடன் ஸார் ஜெர்மனிக்கு வாக்களித்து தம் தாய்நிலத்தோடு மீண்டும் இணைந்தது.

கதை இதோடு முடியவில்லை.

பிரான்ஸ் சொன்ன அத்தனையும் நடந்தது.
வறுமை, இரண்டாம் உலகப்போர், தோல்வி, பட்டினிச்சாவு, இனப்படுகொலை பழி என அத்தனையையும் ஜெர்மனியோடு ஜெர்மனியாக ஸார் சந்தித்தது.

இப்போது மீண்டும் பிரான்ஸ் ஸாரை எடுத்துக்கொண்டது.
முன்பு போலவே ஜெர்மனியின் பரிதாப நிலையைவிட ஸார் மக்கள் ஓரளவு நல்லநிலையில் இருந்தனர்.
பிரான்ஸ் முன்பை விட அதிக சலுகையாக ஸார் பகுதிக்கு தன்னாட்சி கொடுத்து தனது நாட்டில் வைத்துக்கொண்டது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது ஸார் மக்களுக்கு தனிநாடு ஆகலாமா? பிரான்சுடன் இணைவதா? ஜெர்மனியுடன் இணைவதா? என்று மூன்று வழிகள் இருந்தன.

அப்போது மீண்டும் ஜெர்மனிக்கே வாக்களித்து தன் தாய்நிலத்துடன் இணைந்தது ஸார்.

பேரதிர்ச்சியில் உறைந்தது பிரான்ஸ்!

ஜெர்மானியர் இனப்பற்றுக்கு முன் பிரான்சின் அத்தனை ராஜதந்திரங்களும் வீணாகிப்போனது.

அத்தகைய இனப்பற்றால்தான் இரண்டு உலகப்போர்களில் தோற்றும் இன்றும் உலகின் தலைசிறந்த வல்லரசாக நிமிர்ந்து நின்று ஐரோப்பா கண்டத்திற்கே தலைமை தாங்கி வழிநடத்துகிறது ஜெர்மனி.

அன்று பிரான்சைப் போல இன்று ஹிந்தியா கதிராமங்கலம் உட்பட வடதமிழ்நாட்டு வளங்களை சுரண்ட வடக்கை தனியாக பிரிக்க சதி செய்கிறது.

ஒருவேளை வடதமிழ்நாடு நமக்கு நன்மையாக அமையுமோ என்று யாராவது சிலர் சிந்தித்தால் அதற்கான பதில் மேற்கண்ட பதிவில் உள்ளது.

இனப்பற்று பிரச்சாரம் செய்து வருவதில்லை.

வட தமிழக மக்கள் ஸார் ஜெர்மானியரைப் போன்றவர்கள்தான்.

எதற்கும் இருக்கட்டுமே என்று இப்பதிவை இட்டுவைத்தேன்.

வரலாற்றில் அடையாளம் தெரியாமல் போய் ஆயிரம் ஆண்டுகள் கழித்து பேரெழுச்சி பெற்ற ஐரோப்பிய மூத்த இனமான ஜெர்மனி போல
தமிழர்நாடும் மீண்டு எழத்தான் போகிறது!

விரிவாக இட்ட பழைய பதிவு,
ஷாங்காயிலிருந்து பெர்லின்
(31 August 2014) வேட்டொலி

Monday, 16 May 2016

"எம்டன்" செண்பகராமன் - ஹிட்லரை அடக்கிய நேதாஜியின் குரு

"எம்டன்" செண்பகராமன்
- ஹிட்லரை அடக்கிய நேதாஜியின் குரு

செண்பகராமன் 1891ல் திருவாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட தமிழர் மண்ணான திருவனந்தபுரத்தில் "நாஞ்சில் வெள்ளாளர்" குடியில் பிறந்த தமிழர்.
அவரது பெற்றோர் திரு.சின்னசாமிப்பிள்ளை, திரு.நாகம்மாள் ஆகியோராவர்.

திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்த செண்பகராமன்.
மாணவர் பருவத்திலேயே விடுதலை உணர்வோடு தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
ஆங்கிலேயர்கள் மாணவர்களின் குடும்பத்தினரை எச்சரித்தனர்.
மாணவர்களின் தலைவர் போல இருந்த செண்பகராமனுக்கு கல்லூரி நிர்வாகத்திடமிருந்தும் எச்சரிக்கை வந்தது.
இதனால் அவருக்கு நெருக்கடி முற்றியது.
இது பற்றி அறிந்த சர் வால்டர் வில்லியம் ஸ்ரிக்லாண்ட் என்ற ஒரு ஜெர்மன் உளவாளி அவரை ஜெர்மனிக்கு அழைத்துசென்றார்.

1908-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் திகதி தனது 17வது அகவையில் என். எல். ஜி. யோர்க் என்ற ஜெர்மனிய கப்பலில் ஏறி செண்பகராமன் தலை மறைவானார்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த செண்பகராமன் ஐரோப்பா சென்று மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஆள் ஆனார்.
இத்தாலியில் போய் இறங்கி சிறிது காலம் அங்கே வாழ்ந்தார்.
அங்கு இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றார்.
பிறகு சுவிட்சர்லாந்திற்குச் சென்றார்.
அங்குள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் செண்பகராமன் பட்டம் பெற்றார்.

பிறகு சுவிட்சர்லாந்திலிருந்து ஜெர்மனியின் தலைநகரான பெர்லினுக்குச் சென்றார்.
அங்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.

வேலை செய்து படித்துக்கொண்டே சக இந்தியர்களைத் திரட்டி கூட்டம் போட்டார்.
இந்திய விடுதலை நிகழ்வுகளில் பங்குபெற்று சொற்பொழிவாற்றினார்.
இந்த நேரத்தில்தான் "ஜெய்ஹிந்த்" என்ற சொல்லை உருவாக்கினார்.

ஜெர்மானியர்களிடம் இருந்த பிரிட்டிஷ் வெறுப்புணர்வை புரிந்துகொண்ட செண்பகராமன் அங்கேயே நிலைகொண்டு போராட்டத்தைத் தொடர முடிவெடுத்தார்.
“இந்திய ஆதரவு சர்வதேச கமிட்டி” ஒன்று நிறுவினார்.
டாக்டர் செண்பகராமனே அதற்கு தலைவராக இருந்து “ப்ரோ இந்தியா” (Pro-India) எனும் ஆங்கிலப் பத்திரிகையை ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகளில் இந்திய விடுதலைக்கு ஆதரவு திரட்டினார்.

1914ல் ஜெர்மானியப் பேரரசராக இருந்த அப்போதிருந்த கெய்சர் வில்ஹெம் செண்பகராமனை அழைத்து ஆங்கில அரசுக்கெதிராக செயல்பட தான் உதவுவதாகக் கூறினார்.
செண்பகராமனின் தோற்றத்தையும் அறிவாளித்தனத்தையும் பார்த்த கெய்சர் அவரைத் தனது நண்பராக ஏற்றுக்கொண்டார்.
அரசு விழாக்களில் தன்னுடன் அழைத்துச்சென்றார்.
ஜெர்மன் அரசின் உயரிய பட்டமான "வொன்" செண்பகராமனுக்கு வழங்கப்பட்டது.

இந்த நேரத்தில்தான் ஆங்கிலேய அரசு தான் நெடுநாட்களாகத் தேடிக்கொண்டிருந்த அந்த தீவிரவாத மாணவன் ஜெர்மனியில் தொடமுடியாத உச்சத்தில் இருப்பது தெரிந்தது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்தியரைத் திரட்டி ஆங்கில அரசுக்கெதிரான செருமானிய நடவடிக்கைகளில் ஒத்துழைக்க செண்பகராமன் முயல்வதும் தெரியவந்தது.

1914 முதல் உலகப்போர் மூண்டது.
ஜெர்மனியில் வாழும் இந்தியரைத் திரட்டி ஐ.என்.ஏ (Indian national volunteers) என்ற தொண்டர் படையை நிறுவினார்.

ஜெர்மனியின் எம்டன் (Emden) என்ற போர்க்கப்பலை செண்பகராமன் பெற்றுக்கொண்டு இந்தியப் பெருங்கடலில் ஆங்கில அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தாக்கினார்.

1914ல் செப்டம்பர் 22 எம்டன் கப்பல் கடலில் நின்றபடி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையை தாக்கிவிட்டு மறைந்தது.
அது தாக்கிய விதத்தை மக்கள் இன்றும் மறக்கவில்லை.
பயங்கரமான ஆட்களை எம்டன் என்ற பெயர்கொண்டு இன்றும் சென்னை மக்கள் அழைக்கிறார்கள்.

அன்று அந்த கப்பலின் தலைமைப் பொறியாளராகவும் இரண்டாம்கட்ட தளபதியாகவும் இருந்தது ஒரு 23 வயதான தமிழர் என்ற உண்மை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

1915ல் வீரேந்தர்நாத் சட்டோபாத்யாய் என்பவர் மூலம் வங்காள ஆயுத போராளிகளான ஜுகாந்தர் குழுவிற்கு ஆயுதங்களை அனுப்பிவைத்து உதவினார்.

1916 ஆப்கானிஸ்தான் மீது பிரிட்டிஷ் படை எடுத்தது.
அப்போது காபூலில் 'நாடுகடந்த இந்திய அரசாங்கத்தை' ஜெர்மனியின் கூட்டுப்படைகளின் ஆதரவுடன் இந்திய தலைவர்கள் ஏற்படுத்தினர்.
அதில் வெளியுறவு அமைச்சராக செண்பகராமன் நியமிக்கப்பட்டார்.

ஜெர்மனி போரில் தோற்றதும் 1919 ல் அங்கிருந்து ரஷ்யா தப்பிச்சென்று லெனினைச் சந்தித்து உரையாடினார்.

ஜெர்மனி சரணடைந்து வெர்ஸெயிர்ல்ஸ் உடன்படிக்கை கையெழுத்தானபோது செண்பகராமனை பிரிட்டனிடம் ஒப்படைக்க ஆங்கிலேயர் கோரினர்.
ஆனால் தமக்கு பெரிதும் உதவிய செண்பகராமனை ஜெர்மானியர் ஒப்படைக்க மறுத்துவிட்டனர்.

பிறகு ஜெர்மனி திரும்பிய செண்பகராமன் ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

உலகில் அத்தனை மூலைகளிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் இருப்பதைக் கண்ட செண்பகராமன் “ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கம்”
“ கீழ் நாட்டவர் சங்கம்” ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார்.
இவற்றின் கிளைகளை நிறுவுவதற்காக பன்னிரண்டு மொழிகளில் மிகச் சரளமாக பேசும் திறமைபெற்ற செண்பகராமன் பட்டேவியா, பர்மா, சயாம், சீனா, எகிப்து, துருக்கி, அமெரிக்கா, தென்ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.

அமெரிக்கா சென்றபோது செண்பகராமன்  கறுப்பர்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று சொற்பொழிவாற்றினார்.
கறுப்பின மக்களுக்காக அன்றைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனை சந்தித்து நெடுநேரம் உரையாடினார்.

பிறகு தென்னாப்பிரிக்கா சென்றார்.
ஆங்கில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தென்னாப்பிரிக்காவில் செண்பகராமன் நுழைந்தது தெரிந்ததும் பிரிட்டிஷ் அரசு அவர் தலைக்கு ஒரு லட்சம் பவுண்ட் அறிவித்தது.

அவர் பயணம் செய்த எல்லா இடத்திலும் பிரிட்டிஷ் உளவாளிகள் அவரைப் பிடிக்க தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேயிருந்தனர்.
மாறுவேடமிடுவதிலும் பெயர்மாற்றிக்கொண்டு எல்லையைக் கடப்பதிலும் வல்லவரான செண்பகராமனை அவர்களால் பிடிக்கவேமுடியவில்லை.
அவர் உலகின் பல மூலைகளில் தோன்றி மறைந்து பிரிட்டிஷ் அரசைக் குழப்பினார்.

இறுதியில் பெர்லினுக்கே திரும்பிவிட்டார்.

1930-ம் ஆண்டில் இந்திய வர்த்தக சபை சமாஜத்தின் பெர்லின் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பெற்றார்.
பெர்லின் நகரில் வாழ்ந்துவந்த மணிப்பூரைச் சேர்ந்த லஷ்மி பாய் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

முதலாம் உலகப்போர் முடிந்திருந்த நேரம் ஒரு உணவு விடுதியில் செண்பகராமன் அமர்ந்திருந்தபோது
அடால்ப் ஹிட்லர் என்ற ஒரு இளைஞன் ஜெர்மானியர் உயர்ந்த ஆரிய இனமென்றும்
அவர்களே உலகை ஆளவேண்டும் என்றும்
இந்தியர்கள் ஜெர்மானியரால் ஆளப்படவேண்டிய கீழ்மக்கள் என்றும் ஒரு சிறிய குழு முன் நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தான்.

உடனே அருகிலிருந்த செண்பகராமன் அவனை விவாதத்திற்கு அழைத்து இந்தியர்கள் ஒன்றும் கீழ்மக்கள் இல்லை என்று வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவி அவனது திமிரை அடக்கினார்.
ஹிட்லர் எழுத்து மூலம் மன்னிப்பு கேட்ட பிறகே அவனை விட்டார்.
( அன்று அதிகம் அறியப்படாத அந்த இளைஞனே பின்னாளில் ஜெர்மனிய அதிபராகி
தன் உயிரைப் பறிப்பான் என்று அவர் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்)

ஜெர்மனி செல்லும் இந்திய தலைவர்கள் அனைவரும் செண்பகராமனை போய்ப் பார்க்காமல் வருவதில்லை.
சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு, அவரது தந்தை பண்டித மோதிலால் நேரு, லால்சந்த், ஹீராசந்த், விட்டல்பாய் பட்டேல் ஆகியோர் டாக்டர்.பிள்ளையின் வீட்டில் தங்கியவர்கள் ஆவர்.

நேரு தனது சுயசரிதையில் பொறாமையுடனும் வெறுப்புடனும்
கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
"நாடுகடத்தப்பட்டவர்களில் ஒருவரான டாக்டர் செண்பகராமன் பிள்ளையைச் சந்தித்தோம்.
அவர் பழைய யுத்தகோஷ்டியைச் சேர்ந்தவர்களில் பெயர்பெற்ற அங்கத்தவர்.
பெர்லினில் அவர் மிக படாடோபமாக வாழ்ந்துவந்தார்.
அங்குள்ள இளம் மாணவர்கள் அவருக்கு பொருத்தமற்ற பட்டம் ஒன்றை வழங்கினர்.
டாக்டர் பிள்ளை தேசியம் ஒன்றில் மட்டுமே தம் சிந்தனையைச் செலுத்தினார்.
பொருளாதார, சமூக பிரச்சனைகளில் போதிய அக்கறை காட்டவில்லை.
உருக்கு தொப்பி அணிந்த ஜெர்மனிய தேசியவாதிகளுடன் எவ்வித வேறுபாடுமின்றி மிக சகஜமாகப் பழகினார்.
நாஜிக்களுடன் கலந்து சற்றும் பயமின்றி பணிபுரிந்த சொற்ப இந்தியர்களில் டாக்டர் பிள்ளை முதன்மையானவர்.
நான் மீண்டும் சிறையில் இருந்த காலத்தில் பெர்லின் நகரில் டாக்டர் பிள்ளை மரமடைந்ததைக் கேள்வியுற்றேன்"

17வயதில் தலைமறைவான செண்பகராமன் பிள்ளை.
1933 அக்டோபர் 7 அன்று தனது  தலைமறைவு வாழ்க்கையின் 25வது ஆண்டைக் கொண்டாட ஒரு விழா ஏற்பாடு செய்தார்.
ஜெர்மனியின் பெரிய மனிதர்கள் அனைவரும் அதில் கலந்துகொண்டனர்.

ஹிட்லரை அடியபணிய வைத்த அந்த வீரத்தமிழ்மகன் ஹிட்லர் ஆட்களால் மெல்லக்கொல்லும் நஞ்சு கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

1934 மே 26 அன்று செண்பகராமன் சாகும் முன் தன் மனைவியிடம் கடைசி ஆசையாக,
தன் அன்னையின் அஸ்தி கரைக்கப்பட்ட அதே கரமனை ஆற்றில் தன் அஸ்தியில் பாதியைக் கரைத்துவிட்டு நாஞ்சில் நாட்டு வயல்களில் மீதி அஸ்தியைத் தூவுமாறு கூறிவிட்டு இறந்தார்.

நாஜிகள் அவரது உடலை எரியூட்டியபிறகு அவரது மனைவி கெஞ்சி கதறி அவரது அஸ்தியை வாங்கிக்கொண்டார்.
பிறகு அவர் நாஜிக்களால் மனநல மருத்துவமனையில் அடைத்துவைக்கப்பட்டார்.
அங்கிருந்து தப்பி இத்தாலி சென்று ஸ்பெயின் வழியே 1936ல் மும்பை வந்து சேர்ந்தார்.
அதன்பிறகு அவர் தன் கணவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற 30 ஆண்டுகள் படாதபாடு பட்டார்.
நேருவும் காந்தியும் கூட அவரது அஸ்தியை இந்தியா கொண்டுவர ஒத்துழைக்கவில்லை.

Free Press Journal of Bombay என்ற பத்திரிக்கை செம்டம்பர் 12, 1966 அன்று வெளியிட்ட செய்தி கீழ்வருமாறு
" In early 1930's Dr.Pillai incurred the wrath of Hitler whose ominous rumblings were just beginning to be heard.
In May 1934, Pillai died of suspected slow poisoning.
His body was cremated in Berlin."

லட்சுமிபாயின் பெருமுயற்சிக்கு கிடைத்த வெற்றியாக செண்பகராமன் இறந்து 32ஆண்டுகள் கழித்து 1966 செபடம்பர் 19ல் இந்தியாவின் முதல் போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.டெல்லி மூலம்,
மும்பையிலிருந்து எர்ணாகுளம் வரை செண்பகராமனின் அஸ்தி எடுத்துவரப்பட்டு கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டது.
ஆனால் நாஞ்சில் வயல்களில் தூவப்படவில்லை.
அந்த தமிழனின் கடைசி ஆசை கூட அரைகுறையாகத்தான் நிறைவேற்றப்பட்டது.

செண்பகராமனைப் பற்றி அவர் உதவி செய்த வங்காள ஆயுத போராளிகள் மூலம் அறிந்த சுபாஷ் சந்திரபோஸ் அவரை ஒருமுறை சந்தித்தார்.
அவர் இறந்துபோன பிறகு அவர் வழியிலேயே போராட முடிவு செய்தார்.
காங்கிரசிலிருந்து விலகினார்.
1941ல் ஆங்கிலேயரிடமிருந்து தப்பி ஜெர்மனி சென்று அதன் அதிபர் ஹிட்லரிடம் உதவி கேட்டார்.
ஜெர்மானிய நீர்மூழ்கி கப்பல் மூலம் தனது நட்பு நாடான ஜப்பானுக்கு ஹிட்லர் அவரை அனுப்பினார்.
ஜப்பானிடம் இருந்த இந்திய கைதிகளைக் கொண்டு செண்பகராமனனின் I.N.V போலவே I.N.A ஐத் தொடங்கி செண்பகராமனின் முழக்கமான ஜெய்ஹிந்தையே தனது முழக்கமாகவும் வைத்துக்கொண்டார் நேதாஜி.
ஆக நேதாஜியின் குரு செண்பகராமனே.

உசாத்துணை:-
நூல்: மாவீரன் செண்பகராமன் (1968)
ஆசிரியர்: யோகா பாலச்சந்திரன்
வெளியீடு: கொழும்பு கலைச் சங்கம்

படம்: நக்கீரன்
-------------------------
செண்பகராமன் ஒரு குசராத்தியாகவோ தெலுங்கராகவோ இருந்திருந்தால் சாலைகள், கல்லூரிகள், நிலையங்கள், சிலைகள், பாடப்பகுதி என்று தூள்கிளப்பியிருப்பார்கள்.
தமிழன் என்பதால் பெயர்கூட வெளிவரவில்லை.
தமிழகத்தில் படேல் சாலையும், காந்தி நகரும், நேரு அரங்கமும், ஓமந்தூரார் கட்டடமும் இருக்கும்.

ஆனால் செண்பகராமனுக்கு தமிழகத்தில் ஓரே ஒரு சிலைதான் உள்ளது.
அதுவும் இறந்து 75 ஆண்டுகள் கழித்து 2009ல்தான் நிறுவப்பட்டது.

தமிழகத்துக்கு வெளியே ஒரு முட்டுசந்துக்குக் கூட ஒரு தமிழ்த்தலைவர் பெயர்கூட இல்லையே அது ஏன்?

டெல்லியில் பாரதி பெயரில் ஒரு சாலை உள்ளது.
அவர் பார்ப்பனத் தமிழராக இல்லையென்றால் அதுகூட இருக்காது.

தமிழர்கள் இந்திய சுதந்திரத்திற்காக சிந்திய குருதி அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராய் வீணாகப் போனதே?!

இந்தியா தமிழர்களுக்கான நாடா?

Sunday, 4 October 2015

ஹிட்லரை மன்னிப்பு கேட்கவைத்த தமிழன்

ஹிட்லரை மன்னிப்பு கேட்கவைத்த தமிழனின் சாம்பலைக் கூட கொண்டுவராமல் அசட்டை செய்த இந்தி'யா

நேதாஜிக்கு முன்பே ஆங்கிலேயரின் கீழ்  போர் செய்து ஜெர்மனிடம் தோற்று கைதியாக இருந்த இந்திய சிப்பாய்களை திரட்டி, இந்தியாவை விடுவிக்க முதன்முதலாக படை அமைத்தவர்;
ஹிட்லரையே மன்னிப்பு கேட்க வைத்தவர்;
'எம்டன்' கப்பலின் தலைவராக சென்னைவரை வந்து கோட்டையைத் தாக்கியவர்;
மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, சுபாஷ்
சந்திர போஸ் ஆகியோர் தாமே சென்று சந்திக்கும் அளவுக்கு பெரிய மனிதர்;
வீரத்தமிழன் செண்பகராமன்;
1934ல் மரணிக்கும் முன்பு கடைசி விருப்பமாக "நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டின் வளமிக்க
வயல்களில் தூவிவிடு" என்று மனைவியிடம் கூறியிருந்தார்;
ஹிந்தியா 1947ல் போலி விடுதலை அடைந்த பிறகும்கூட பல ஆண்டுகாலம் (மணிப்பூரைச் சேர்ந்த) அவரது மனைவி அலையாய் அலைந்துதான் அதை 1966ல் நிறைவேற்றினார்;
ஹிந்தியர்களும் வரலாற்றில் நம் செண்பகராமன் பெயரையே இல்லாமல் அழித்துவிட்டனர்;
பல ஆண்டுகளுக்குப் பிறகு 2009ல்தான் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது(தமிழகத்தில்தான்);
செம்பகராமன் யார் என்று பெரும்பாலான தமிழருக்கே தெரியாது .

_________________
பெருமையில் வெடித்ததே நெஞ்சம்
செந்தமிழ் வீரனே செண்பகராமனே
http://noolaham.net/project/02/185/185.htm

உன் இறுதிவிருப்பம்கூட அரைகுறையாகத்தான் நிறைவேறியதா ?!
பாவிகளே இந்தியப் பாவிகளே ?!?!

Sunday, 13 September 2015

ஜெர்மனியும் தமிழகமும்

ஜெர்மனியும் தமிழகமும்

தற்போதைய ஜெர்மனி நாடானது ஜெர்மானிய பெரும் நிலத்தின் ஒரு பகுதிதான்.

ஆஸ்திரியாவும் லக்சம்பர்க்கும் கூட ஜெர்மானிய நாடுகள்தான்.

இது போக பிரான்சிடமும் இத்தாலியிடமும் டென்மார்க்கிடமும் ஸ்லோவேனியாவிடமும் சிறிய சிறிய ஜெர்மானிய பகுதிகள் உள்ளன.

ஸ்விட்சர்லாந்தின் முக்கால்வாசி ஜெர்மானியரே.

போலந்திலும் செக் குடியரசிலும் இருந்த ஜெர்மானியர் உலகப்போருக்குப் பிறகு விரட்டப்பட்டுவிட்டனர்.

நீல நிற கோடு 1910வரை ஜெர்மானியர் வாழ்ந்த நிலப்பரப்பு.

இதை நமது சூழலுக்கு பொருத்திப் பார்த்தோமானால்

இன்று தமிழ்நிலம் ஏழுதுண்டுகளாக சிதறுண்டு உள்ளது.
1.தமிழகம்
2.ஈழம்
3.கிழக்கு கேரளம்
4.தென் கன்னடம்
5.தென் ஆந்திரம்
6.புதுச்சேரி
7.மலையகம்

ஐரோப்பாவிற்கு ஜெர்மானியர் எப்படியோ அதேபோல இந்திய துணைகண்டத்திற்கு தமிழர்.

ஒருவேளை அண்டை மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்கமுடியாது போனாலும்

ஈழம் தனிநாடாக ஆனாலும்

தமிழகம் மட்டும் தன் வலிமையால் தனிநாடாகி மாபெரும் வல்லரசாக உருவெடுக்கமுடியும்.

Sunday, 31 August 2014

ஷாங்காயிலிருந்து பெர்லின்

ஷாங்காயிலிருந்து பெர்லின்

இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகும் ஜெர்மனி வல்லரசாகத் திகழக் காரணம் என்ன?

ஒரு நிகழ்ச்சியின் மூலம் விளக்கவா?

ஸார் (saar) என்ற பகுதி பிரான்சின் எல்லையைத் தொட்டவாறு இருக்கும் ஒரு ஜெர்மானியப் பகுதி;
நிலக்கரி வளமிக்கது இந்தப் பகுதி.

முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றது; வழக்கம்போல போரில் தோற்ற மக்களின் தாய்நில வளங்களை வென்ற மக்கள் பங்குபோட்டுக் கொண்டனர்;
15ஆண்டுகளுக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வாக்குறுதியோடு ஸார் பகுதி ஜெர்மனியிடமிருந்து பறிக்கப்பட்டது;
15 ஆண்டுகள் வென்ற நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது; போரில் வென்ற பிரான்சு நிலக்கரியை தாராளமாக அள்ளிக்கொண்டிருந்தது;
அப்பகுதி ஜெர்மானியர்கள் ஓரளவு வேலைவாய்ப்பு கிடைத்து நோடிந்துபோகாத வாழ்க்கையைப் பெற்றனர்;
ஆனால் ஜெர்மனியின் நிலையோ மிக மோசமாக இருந்தது; அங்கே போருக்கு முன் ஒருவரின் ஒரு திங்களுக்கு(மாதத்திற்கு) போதுமான வருமானம், போருக்குப் பிறகு ஒரு நாளுக்குக்கூட போதவில்லை;
நாடே சின்னாபின்னமாகிக் கிடந்தது;
முதல் உலகப் போரில் தாய்மண்ணைக் காக்க ஆஸ்திரியா(அதுவும் ஜெர்மானிய நாடுதான்) நாட்டிலிருந்து வந்து போர்வீரனாகச் சேர்ந்து போராடிய ஹிட்லர்  நாஜிக் கட்சியின் தலைவனாக ஆட்சியைப் பிடித்து ஜெர்மனியை மெல்ல மெல்ல சீர்செய்து கொண்டிருந்தார்;
பதினைந்து ஆண்டுகள் முடியும் தருவாயில் ஸார் பகுதியில் பொதுவுடைமையாளர்களும்(கம்யூனிஸ்ட்), கத்தோலிக்கர்களும், பிரான்சு முதலாளிகளும், ஸாரை ஆண்ட 'வென்ற நாடுகளின் கூட்டரசின்' அனைத்து அரசியல் இயந்திரங்களும் ஜெர்மானிய மக்களிடம் வாக்கெடுப்பின் மூலம் ஜெர்மனியுடன் இணையவேண்டாம் என்று தீவிர பரப்புரை செய்தனர்;
நாஜிக் கட்சியினர் யூதர்களை ஒடுக்கிவருவதைக் காட்டி அவர்கள் பேச்சைக் கேட்கவேண்டாம் என்றும் கூறினர்;
ஜெர்மனி பொருளாதாரத்தில் சீர்குலைந்திருப்பதையும் ஸார் ஜெர்மனியுடன் இணைந்தால் வறுமையை சந்திக்கவேண்டிவரும் என்றும் சுட்டிக்காட்டினர்;
மறுபடியும் போர் வந்தால் அழிவு நேரிடும் என்று கணித்துச் சொன்னார்கள்;
வென்ற நாடுகளின் கீழிருந்தால் தனி நாடாக அமையலாம் என்றும் ஆசை காட்டினர்.

நாஜிக் கட்சியினரால் வேறொரு ஆட்சியின் கீழ் இருக்கும்  ஸார் மக்களிடம் நேரடியாகப் பெரிய அளவில் பரப்புரை செய்யமுடியாத நிலை.

வாக்கெடுப்பு நாளும் வந்தது;
யாருமே எதிர்பார்க்காத வண்ணம் 90% பேர் ஜெர்மனியுடன் இணைய வாக்களித்தனர்;
ஸார் பகுதியிலிருந்து வாழ்க்கை தேடி வெளியேறிய ஜெர்மானியர் பலரும் பெருமுயற்சி செய்து பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்து வாக்களித்தனர்;
நோயாளிகள் நாஜிக்கட்சியினரின் உதவியுடன் சென்று வாக்களித்தனர்;
எடுத்துக்காட்டாக, ஒரு வயதான பெண்மணி ஷாங்காயிலிருந்து பெர்லின் வந்தார்;
1935ல் இது 16நாட்கள்  தொடர்வண்டிப் பயணமாகும்(!!);
அவர் பெர்லினுக்கு வாக்கெடுப்பின் கடைசிநாளில் வந்துசேர்ந்தார்;
நாஜிக்கள் உடனடியாக வானூர்தி மூலம் ஸார் பகுதிக்கு அழைத்துச்சென்று வாக்குபோட வைத்தார்கள்.

1935 மார்ச் 1, ஸார் பகுதி ஜெர்மனியுடன் மீண்டும் இணைந்தது;
இணைந்த பிறகு வென்ற நாடுகளின் கூட்டணி சொன்ன அத்தனையும் நடந்தது;
வறுமை வந்தது; நாஜிக்களின் ஆதரவாளர் என்ற விமர்சனம் வந்தது; போர் வந்தது; அழிவு வந்தது; அத்தனையும் அறிந்துதான் அவர்கள் ஜெர்மனியுடன் இணைந்தனர்.

கதை இங்கே முடியவில்லை; இரண்டாம் உலகப் போரில் மீண்டும் ஜெர்மனி தோற்றது;
முதல் உலகப் போரைவிட மிகப்பெரிய சேதம்;
அப்போதும் ஸார் பகுதி ஜெர்மனியிடமிருந்து பறிக்கப்பட்டது;
1947-1956 காலகட்டத்தில் தன்னாட்சி பெற்ற பகுதியாக பிரான்சு அரசின் கீழ் வந்தது;

அதே பழைய நிலை; ஜெர்மனி சின்னாபின்னமாகிக் கிடந்தது;
1955ல் 'மேற்கு ஐரோப்பிய கூட்டணியின்' கீழ் ஸார் பகுதி தனி நாடாக அறிவிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது;
68% ஜெர்மானியர் தனிநாடு வேண்டாம் என்று (ஜெர்மனியுடன்தான் இணைவோம் என்று) வாக்களித்தனர்;
1957ல் ஸார் பகுதி மீண்டும் தனது தாய்நிலத்துடன் இணைந்தது; வறுமையைச் சந்தித்தது; இன்னொரு போரைச் சந்திக்கவும் ஆயத்தமாக இருந்தது.

வென்ற நாடுகள் தூக்கிப்போட்ட எலும்புத்துண்டுகளுக்காக ஜெர்மானிய மக்கள் வாலாட்டவில்லை.
வல்லரசுகளின் அத்தனை தந்திரங்களும் ஜெர்மானியரின் இன்பற்றுக்கு முன்னே தோற்றுப்போனது.

ஜெர்மானியர் தமது தாய்நாட்டை வல்லரசாக அமைத்துக்கொண்டதில் என்ன வியப்பு?

https://m.facebook.com/photo.php?fbid=486678444769147&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr&refid=13