Showing posts with label ஐக்கிய தமிழகம். Show all posts
Showing posts with label ஐக்கிய தமிழகம். Show all posts

Saturday, 4 November 2017

ஹிட்லர் ஏன் தோற்றார்?

ஹிட்லர் ஏன் தோற்றார்?

ஜெர்மானிய மக்கள் பல அரசுகளாக சிற்றரசுகளாக சிதறிக் கிடந்தனர்.
இதை ஜனநாயக வழியில் ஒரே நாடாக உருவாக்க வியன்னாவில் கூடிய ஜெர்மன் தேசியவாதிகள் மக்கட்புரட்சி மூலம் இதை செய்ய முடிவெடுத்தனர்.

1848 ல் இந்த முயற்சி ஆளும் வர்க்கம் அதிலும் குறிப்பாக சிற்றரசுகள் தனது அதிகாரம் போய்விடுமே என்று பயந்தன.
ராணுவ வலிமையால் இந்த எழுச்சி அடக்கப்பட்டது.

இதற்கு அடுத்து அன்றைய ஜெர்மனிய அரசுகளிலேயே பெரிய அரசான பிரஷ்யாவின் பிரதமராக வருகிறார் பிஸ்மார்க்.

1862 ல் இவர் நிகழ்த்திய உரை மிகவும் புகழ்பெற்றது.
அந்த பேச்சில் அவர் விவரித்த கொள்கையை 'இரத்தமும் இரும்பும்' (iron and blood) என்று சுருக்கமாகக் கூறுவர்.

அந்த உரையை சுருக்கமாகக் கூறினால்,
"ஜெர்மனிய அரசுகள் ஒன்றாக இணையவேண்டும்.
ஜெர்மானியர் வாழும் பகுதி ஒரே நாடாக இருக்கவேண்டும்.
இந்த ஒருங்கிணைப்பு ஜனநாயக வழியில் அல்லாது பிரஷ்யாவின் பலத்தால் (குருதியும் இரும்பும் செலவளித்து) நிறைவேற்றப்படும்"

இதன்பிறகு டென்மார்க் மீது படையெடுத்து அதனிடம் இருந்த ஜெர்மானிய பகுதியை மீட்டது பிரஷ்யா.
அடுத்து வடக்கு ஜெர்மனியில் இருந்த பல்வேறு சிற்றரசுகளை பேசியும் மிரட்டியும் பிரஷ்யாவில் இணைத்தனர்.

ஆனால் தெற்கே ஜெர்மானிய அரசான ஆஸ்திரியா அப்போது ஹங்கேரி உடன் இணைந்து ஆஸ்திரிய-ஹங்கேரி என்று பெரிய அரசாக இருந்தது.

ஆஸ்திரியா ஜெர்மனியுடன் இணைய மறுத்துவிட்டது.
காரணம் ஜெர்மனி கிறித்துவத்தில் புரோட்டஸ்டன்ட் பிரிவையும் ஆஸ்திரியா கத்தோலிக்க பிரிவையும் பின்பற்றுவது.
பிஸ்மார்க் ஆஸ்திரியா மீதும் படையெடுத்து அதைத் தோற்கடித்தார்.

"ஒற்றுமையே இல்லாத ஜெர்மானியர் இணைந்து ஜெருமானியப் பேரரசு அமைக்கப் போகிறார்களாம்" என்று பிரான்ஸ் இதை பரிகசித்தது.

பிஸ்மார்க் பிரான்சை ஆண்ட மூன்றாம் நெப்போலியனுக்கு துணிச்சல் இருந்தால் ஜெர்மனி மீது படையெடுக்குமாறு கடிதம் எழுதினார்.

போர் மூண்டது. பிரான்சை மிக எளிதில் படுதோல்வி அடையச்செய்தார் பிஸ்மார்க்.
இதைத் தொடர்ந்து வடக்கு முழுவதும் மத்திவரைக்கும் இருந்த ஜெர்மனிய அரசுகள் பிரஷ்யாவுடன் இணைந்தன.
ஆஸ்திரியா பெரிய ஜெர்மானிய பகுதியை இழந்தது.
1871ல் பிரஷ்யா ஜெர்மானிய பேரரசு ஆனது.
இது 80% ஜெர்மானிய பகுதியை உள்ளடக்கியது.

இதன்பிறகு முதலாம் உலகப்போர் மூண்டபோது ஜெர்மனிய பேரரசும் ஆஸ்திரிய-ஹங்கேரியும் இணைந்தே போர்புரிந்தன.

ஆனால் போரில் தோற்றபிறகு ஜெர்மனியின் எல்லைப் பகுதிகளைப் பறித்துக்கொண்டு சுருக்கி (முதல் படம்) பெரிய தொகை நட்ட ஈடாக தரவேண்டும் என்று ஒப்பந்தம் வென்றநாடுகள் போட்டன.

ஆஸ்திரியாவில் பிறந்த ஹிட்லர் ஜெர்மனிக்கு ஓவியனாகும் ஆசையில் வந்தார்.
அவருக்கு அதில் பெரிய திறமையில்லை என்று நிராகரிக்கப்பட்டார்.

பிறகு முதல் உலகப்போர் நடந்தபோது ராணுவத்தில் செய்தி கொண்டுசெல்லும் பணியில் சேர்ந்து திறமையாக செயல்பட்டு சிப்பாயாக ஆனார்.
போரில் காயமடைந்தார்.
அவர் மருத்துவமனையில் இருந்தபோது ஜெர்மனி தோல்வியடைந்தது.

எல்லைகளை இழந்து ராணுவமும் களைக்கப்பட்டு போர்ச் செலவாலும் கடனாலும் நாடே பஞ்சத்தில் சிக்கித்தவித்த அந்த வேளையில் இட்லர் கூலிவேலை செய்து பிழைத்து வந்தார்.

ஒருநாள் அவருக்கு அரசியல் எவ்வாறு நடக்கிறது என்று பார்க்க ஆர்வம் வந்தது.

சட்டமன்றத்திற்கு போன அவர் அங்கே யூதர்களே நிறைந்திருப்பதும் அவர்கள் மக்கள் பிரச்சனைப் பற்றி பேசாமல் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டு அவர்களை அவர்களே பெரிதாகப் புகழ்ந்துகொண்டு இருந்ததைக் கண்டு யூதர்களே எல்லாவற்றுக்கும் காரணம் என்று முடிவுசெய்தார்.

"ஒவ்வொரு அரசு அதிகாரியும் யூதனாக இருந்தான்.
ஒவ்வொரு யூதனும் அரசதிகாரியாக இருந்தான்.
இவர்கள் போர்க்களத்தில் குறைவாகவும் நாற்காலிகள் அதிகமாகவும் காணக்கிடைத்தனர்"
என்று யூதர்களைப் பற்றி அவர் எழுதுகிறார்.

ஏற்கனவே பிஸ்மார்க் பற்றி அறிந்திருந்திருந்த இட்லர் இனப்பற்றும் மிக்கவராக இருந்தார்.
பிஸ்மார்க் வழியில் தானும் பயணித்து ஜெர்மனியை ஒருங்கிணைப்பது என்று சூளுரைத்தார்.

அன்று ஏழுபேர் மட்டுமே இருந்த ஒரு கட்சியில் சேர்ந்தார்.
அவர்கள் மொட்டைமாடிகளில் கூட்டம் நடத்தினர்.
ஹிட்லர் தம்மால் முடிந்த அளவு உழைத்து கூட்டம் திரட்டி நன்கொடை பெற்று எழுச்சிப்பூர்வமாக உரை நிகழ்த்தி அந்தக் கட்சியை மிகப்பெரிய அளவில் உயர்த்தினார்.
பிறர் கழன்றுகொண்டபோதும் இட்லர் உறுதியாக கட்சியை நடத்தினார்.

இவ்வாறாக படிப்படியாக வளர்ந்த கட்சி ஜெர்மானிய தேசியத்தை மீண்டும் மக்கள் மனத்தில் துளிர்விடச் செய்தார்.

பிஸ்மார்க் போல தற்போது ஜெர்மனி பேசும் பகுதிகள் அனைத்தையும் இணைத்து ஒரே ஆட்சியில் கொண்டுவருவேன் என்று பரப்புரை செய்தார் (பிற மூன்று படங்கள்).
16 ஆண்டுகளில் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தார்.

ஆட்சிக்கு வந்ததும் இட்லர் ஜனநாயக முறைப்படி இரண்டு இழந்த பகுதிகளை மீட்டார்.

இராணுவத்தைக் கட்டமைத்து பல சீர்திருத்தங்கள் செய்து ஜெர்மனியை குறுகிய காலத்தில் தன்னிறைவு பெறச்செய்து வளர்ச்சியை நோக்கி கொண்டு சென்றார்.

1938ல் ஆஸ்திரியாவை மிரட்டி பேச்சுவார்த்தை மூலமே ஜெர்மனியுடன் இணைத்து பிஸ்மார்க் சாதிக்கமுடியாததை தாம் சாதித்துக் காட்டினார்.

இழந்த பகுதிகளை மீட்க போலந்தின் மீது படையெடுத்து பாதியைப் பிடித்தார்.
பிரான்ஸ் மீது படையெடுத்து தோற்கடித்து அவர்கள் எந்த ரயில்பெட்டியில் தோற்றுப்போன ஜெர்மானியரை ஒப்பந்தம்போட வரச்சொல்லி நிற்கவைத்து அவமானப்படுத்தி கையெழுத்து வாங்கினார்களோ
அதே ரயில்பெட்டிக்கு பிரெஞ்சு பிரதிநிதிகளை வரச்சொன்னார்.
அவர்கள் வந்ததும் ஒப்பந்தத்தை கொடுத்துவிட்டு வெளியேறினார்.

செக்கோஸ்லோவாகியா நாட்டின் எல்லை மூன்று புறமும் இட்லர் கட்டுப்பாட்டில் இருந்தது.
எல்லையை ஒட்டி ஜெர்மானியர் வாழ்ந்த பகுதியை தந்துவிட்டால் போர்தொடுக்கமாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்து தாம் வாக்களித்தபடி ஜெர்மன் பேசிய பகுதிகள் அனைத்தையும் ஒரு ஆட்சியின் கீழ் இணைத்தார்.

ஹிட்லர் இதோடு நின்றிருந்தால் இன்று ஜெர்மனிதான் உலக வல்லரசு.

ஆனால் இட்லர் ஜெர்மானிய இனவெழுச்சியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தத் தொடங்கினார்.

வாக்குறுதி மீறி செக்கோஸ்லோவாகியா மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினார்.
இது ஜெர்மன் பேசாத பகுதி ஆகும்.

அதன் பிறகு இத்தாலியுடன் கூட்டுவைத்து முதலாம் உலகப்போர் தோல்விக்கு பழிவாங்கவும் நாடுபிடிக்கும் எண்ணத்திலும் இட்லர் எல்லைமீறி போனார்.

ஆனாலும் ஜெர்மானிய இனம் அவருக்கு முடிந்த அளவு ஈடுகொடுத்து வெற்றிமேல் வெற்றி குவித்தது.

யூதர்களை தனியாக அடையாளமிட்டு தனிமைப்படுத்தி பிறகு சொத்துக்களை பறிமுதல் செய்து முகாம்களில் அடைத்து கடைசியில் கொத்துக் கொத்தாக கொலை செய்யச் சொன்னார்.

வெற்றியைக் குவித்தாலும்  தொடர்ச்சியான போர்களால் சோர்ந்துவிட்ட ஜெர்மன் படை மிகப்பெரிய இனமான ரஷ்ய இனத்திடம் தாக்குப்பிடிக்க முடியாமல் தோற்றது.
அங்கு நிலவிய காலநிலையும் இதற்கு முக்கிய காரணம்.

இறுதியில் ஜெர்மனி தோல்வியைத் தழுவியது.
போலந்திடம் பெரிய அளவு நிலத்தை இழந்தது.
அங்கிருந்த ஜெர்மானியர் விரட்டப்பட்டு போலந்து மக்கள் குடியேறிக்கொண்டனர்.
அதில் ஒரு சிறு பகுதியை ரஷ்யா எடுத்துக்கொண்டது.

எல்லைப் பகுதிகளை இழந்து ஆஸ்திரியா தனிநாடாகியது.
ஜெர்மனியும் கிழக்கு மேற்காக இரண்டாக பிரிக்கப்பட்டு வென்றநாடுகள் அடக்கி ஆண்டன.

45 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்த இரு பகுதிகள் மக்கள் எழுச்சியால் பிரிவினை சுவர் இடிக்கப்பட்டு ஜெர்மனி ஒருங்கிணைந்தது.

ஜெர்மானிய தாய்நிலத்தில் பாதியை இழந்தாலும் ஜெர்மனி இன்றும் ஒரு வல்லரசு.

ஆஸ்திரியா ஹங்கேரி போன்றன இன்று சிறிய நாடுகள்.
ஆனாலும் ஆஸ்திரியா நல்லநிலையில் உள்ளது.

இட்லரின் பேராசையும் பழிவாங்கும் உணர்வும் வரம்பு மீறி போனதால் இன்று ஜெர்மனியர் தமது இயல்பான இனப்பற்றைக் கூட வெளிப்படையாகக் காட்டமுடியாத நிலையில் உள்ளனர்.

இட்லர் அரசியலில் காலடி எடுத்துவைத்த அன்றைய ஜெர்மனி அப்படியே இன்றைய தமிழகத்தை ஒத்திருக்கிறது.
எல்லைப் பகுதிகள் இழந்த நிலையில் தமிழகம், ஆஸ்திரியா இடத்தில் ஈழம், துண்டானபகுதி இடத்தில் மலையகம்  ஆகியன பொருந்தி உள்ளன.

கிழக்கு மேற்கு என்று ஜெர்மனியை எதிரிகள் பிரித்தது போல வடதமிழ்நாடு தென்தமிழ்நாடு என்று இன்று தமிழகத்தை பிரிக்க சதி நடக்கிறது.

ஐரோப்பாவில் மூத்த இனமான ஜெர்மனியின் வரலாறு இந்திய துணைக்கண்டத்தில் மூத்த இனமான நமது வரலாறுடன் ஒத்துப்போகிறது.

நாம் எங்கே தொடங்கவேண்டும் எங்கே முடிக்கவேண்டும் என்பதற்கான பாடம் ஜெர்மனியின் வரலாற்றில் இருக்கிறது.

Wednesday, 6 September 2017

தமிழர்நாடு (வட்டார எல்லைகள்)

தமிழர்நாடு (வட்டார எல்லைகள்)

ஏற்கனவே உள்ள மாவட்ட, வட்டார எல்லைகளைப் பெரிதும் பயன்படுத்தி
அதிக நீளம் வராதவாறு எல்லைக்கோடு வரைந்தால் இதுதான் நம் நாடு.

தமிழர்நாடு !

Saturday, 16 January 2016

குருதியில் நனைந்த குமரி -12

குருதியில் நனைந்த குமரி -12

1954 ஆகஸ்ட் 15
மாலை
திருநெல்வேலி தொடர்வண்டி நிலையம்

திருநெல்வேலி எம்.பி தாணுப்பிள்ளையும் அப்துல் ரசாக்கும் சென்னை செல்லும் தொடர்வண்டி அருகே நின்றுகொண்டு இருந்தனர்.

"ரசாக் அவர்களே!
முதல்வகுப்பில் பயணச்சீட்டு போட்டுள்ளேன்.
சென்னையில் என் நண்பர் வீட்டிற்குச் சென்றடைந்ததும் எனக்கு தகவல் தாருங்கள்"

"சரி ஐயா! முதல்வகுப்பில் பெரிய மனிதர்கள் யாராவது வருவார்கள்.
அப்படி வந்தால் நலமாக இருக்கும்"

"கட்டாயம் ஒருவரேனும் கிடைப்பார்கள்.
சரி ஐயா வண்டி கிளம்புகிறது.
நீங்கள் தினமும் மாலை என்னை தொலைபேசியில் அழையுங்கள்"

"சரி தினமும் அழைக்கிறேன்.
நீங்கள் குமரிக்கு காங்கிரஸ் குழு நேரில் செல்வதை துரிதமாக நிறைவேற்றுங்கள்"

வண்டி கிளம்பியது.

மதுரையில் பி.டி.ராஜன் ஏறினார்.

அப்துல் ரசாக் அவரைக் கண்டதும் உடனே சென்று பேசினார்

"ஐயா வணக்கம்"

"யாரது அப்துல் ராசாக்கா?
ஐயா என்ன இந்தப் பக்கம்?"

"கேரளாவிலிருந்து தப்பித்து வந்துள்ளேன்"

"ஓ ஆமாம். கேள்விப்பட்டேன்.
கேட்கவே வருத்தமாக உள்ளது.
இன்று காலை கூட செய்தித்தாளில் வந்துள்ளதே.
காங்கிரஸ் குழு அங்கே பார்வையிட செல்வதாக"

"ஆமாம் ஐயா, தாணுப்பிள்ளை அவர்களின் ஆதரவால் நடந்தது"

"சென்னை எதற்கு செல்கிறீர்கள் காமராசரைப் பார்க்கவா?"

"ஆமாம். காமராசரைப் பார்த்துவிட்டு அப்படியே டெல்லி போகிறேன்:

"அப்படியே ராஜாஜியையும் பார்த்துவிடுங்கள்"

"ராஜாஜி எங்களுக்கு உதவுவாரா?
அவர் ஒரு பிராமணர்,
இந்தி திணிப்புக்குத் துணைபோனவர்,
பிறந்த சாதிக்கான தொழிலைச் செய்யும் வகையில் குலக் கல்வித்திட்டம் வகுத்தவர்,
என்று தமிழகத்தில் பரவலான எதிர்ப்பு உள்ளதே?!"

"அவர் ஒரு புரிந்துகொள்ளமுடியாத மனிதர்.
ஆனால் தமிழ் பிராமணர் என்றவகையில் இனவுணர்வு உண்டு"

"ஆம். எல்லைப் போராட்டத்தில் அவர் ஆதரவாக இருந்ததை ம.பொ.சி குறிப்பிடுவார்.
ஆனால் அவர் பதவியில் இல்லையே?!
அவரைப் பார்ப்பது பலனுள்ளதாக இருக்குமா?"

"ஆச்சாரியாரைப் போல ஒரு பழுத்த அரசியல்வாதி வேறு யார் உண்டு?
நீங்கள் போய்ப் பாருங்கள்.
பிறகு புரியும்.
சரி இரவாகிவிட்டது.
காலை சென்னையில் இறங்கி என்னோடு வந்து தங்கிக்கொள்ளுங்கள்"

"இல்லை. நண்பர் ஒருவர் வீட்டில் தங்குவதாக வாக்களித்துவிட்டேன்"

"சரி நான் காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் தங்கியிருப்பேன்.
நாளை வந்து என்னைப் பாருங்கள்"
--------------------------------------------------
அதே ஆகஸ்ட் 15 1954 மதியம்.

இராஜாஜியின் வீட்டுத் தொலைபேசி அழைத்தது.

ராஜாஜியின் நண்பரும் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்வருமான மேகநாதன்தான் அழைத்திருந்தார்.

"ஹலோ, ராஜா"

"சொல்லு மேகநாதா"

"என்னப்பா இப்படி ஆகிவிட்டதே?!
கேரளாவில் நம் மக்களை கொல்கிறார்கள்.
தமிழ்நாட்டை ஆளுபவர்கள் என்ன செய்துகொண்டு  இருக்கிறீர்கள்?"

"நான் என்னப்பா பண்ணமுடியும்?
காமராசுதான் நம்மை ஒதுக்கிட்டானே?"

"அதுக்காக நீ சும்மாயிருக்கலாமா?
நீ சொன்னா கேக்கமாட்டானா?"

"நான் போய் அவனிடம் கெஞ்சவேண்டுமா?"

"சரிப்பா, நீ ஒண்ணும் கெஞ்சவேண்டாம்.
நானே தனியாக நேரில் போய் நேசமணியைப் பார்க்கிறேன்.
ஏதேது உன்னை ஆரியன் என்றவன் பேச்செல்லாம் சரிதான் போலிருக்கிறதே?!"

"மேகநாதா கோபப்படாதே.
எனக்கு மட்டும் வேதனை இல்லாமல் இல்லை.
நீ நேரில் போய் நேசமணியிடம் நடந்ததை ஒரு அறிக்கையாக எழுதி வாங்கிவிட்டு வா.
நான் பார்த்துக்கொள்கிறேன்"

கூறிவிட்டு சட்ட புத்தகங்களை புரட்டி தீவிரமாக ஆராயத் துவங்கினார் ராஜாஜி.
-------------------------------------------
1954 ஆகஸ்ட் 16
மதியம்.
காஸ்மோ பாலிட்டன் கிளப்.
சென்னை.

சொன்னதுபோலவே அப்துல் ரசாக் பி.டி.ராஜனைச் சந்தித்தார்.
மலையாள வெறியர்களால் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமை தொடக்கத்திலிருந்து தற்காலம் வரை சுருக்கமாக விளக்கிக் கூறினார்.

தன் மகன் பழனிவேல் ராஜன் மற்றும் தனது குடும்ப வழக்கறிஞர் சந்தோசம் ஆகியோருடன் பி.டி.ராசன் உன்னிப்பாக அனைத்தையும் கேட்டுக்கொண்டார்.

சந்தோசம் தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டார்.

"ஐயா ரசாக் அவர்களே!
உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
பழனி! இனி எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு குமரிப் போராட்டத்தில் இறங்கிவிடு.
சந்தோசம்! இனி இவர்களுடைய வழக்குகளை நீங்கள் முன்னின்று நடத்தவேண்டும்.
இந்த பிரச்சனை முடிந்த பிறகு என்னிடம் நீங்கள் வந்தால் போதும்"
-----------------------------------
பட்டம் தாணுப்பிள்ளை கோபமாக அமர்ந்திருந்தார்.
திருநெல்வேலி காங்கிரஸ் குழு நேரில் வருவதைக் கேள்விப்பட்டதில் இருந்து அவர் நிலைகொள்ளாமல் தவித்தார்.

காவல்துறை உயரதிகாரி அலெக்சாண்டரை அழைத்தார்.

"எப்படி இந்த ரசாக் தப்பித்து போனான்?"

"ஐயா அதுவந்து..."

"போதுமையா, உமது விளக்கம் ஒன்றும் தேவையில்லை.
சரி. பாண்டிப் பகுதிகளில் காவலர்களைக் குறைக்கவேண்டாம்.
ஆயுதங்களை மட்டும் உள்ளேவைத்துப் பூட்டிவிடுங்கள்.
தூக்கிக்கொண்டு திரியவேண்டாம்.
மக்களை நடமாடவிடுங்கள்.
அந்த குழு வந்துபோகும்வரை இறுக்கத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
இனி இப்படி கோட்டைவிடாதீர்கள்.
போய்த் தொலையுங்களையா"

அடுத்த ஒருமணிநேரத்தில் தமிழர்கள் மீதான அடக்குமுறை குறைந்தது.
மக்கள் நடமாடலாம் என்று அறிவித்தனர்.
கடைக்காரர்கள் கடைதிறந்தனர்.
மூன்றுநாட்களாக பசியால் வாடிய மக்கள்
ஓடோடிச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவந்தனர்.
நோயாளிகள் மருத்துவமனை சென்றனர்.
மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பேருந்துகள் இயங்கின.

ஆனால் இயல்புநிலைதான் திரும்பவில்லை.

(தொடரும்)
--------------------------------------
குருதியில் நனைந்த குமரி -11
https://m.facebook.com/photo.php?fbid=648488261921497&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

Wednesday, 6 January 2016

பரந்த தமிழ் மாநிலம்

பரந்த தமிழ் மாநிலம்

1930களில் மொழிவாரி மாநில உரிமைகள் அளிக்கப்பட்டபோது

முற்கால வரலாறு அனைத்தும் மறந்துவிட்டு
ஐனநாயக முறைப்படி நேர்மையாக
அன்றைய சூழலில் மக்களின் பெரும்பான்மை மற்றும் நில அமைப்பை அடிப்படையாகக் கொண்டு
"தமிழ் மாநிலம்"அமைக்கப்பட்டிருந்தால் அது இவ்வளவு பெரியதாக இருந்திருக்கும்.

இது தவிர குடகு நம்முடன் இணையத் தயாராக இருந்தது.

அந்தமான் தீவுக்கூட்டத்தில் பெரிய தீவான பெரிய-அந்தமானில் தமிழர் பெரும்பான்மை என்றவகையில் அத்தீவுக்கூட்டம் முழுவதும் நமக்குக் கிடைத்திருக்கும்.

இது நடந்திருந்தால் காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு, மீனவர் பிரச்சனை, ஈழப் பிரச்சனை, மலையகத் தமிழர் பிரச்சனை, அகதிப் பிரச்சனை என எந்த பிரச்சனையும் இருந்திருக்காது.

நாம் 1900களில் மற்ற இனங்களைப் போல அரசியல் விழிப்புணர்வும் இனவுணர்வும் பெற்றிருந்தால் நாம் இன்று சந்திக்கும் பல பிரச்சனைகள் இருந்திருக்காது.

மனம் சோராமல் இழந்ததை மீட்போம்.
__________________
மேலும் அறிய,

தமிழகம் இழந்த பகுதிகள்
vaettoli.blogspot.in/2016/01/blog-post_5.html?m=1