Showing posts with label இராஜாஜி. Show all posts
Showing posts with label இராஜாஜி. Show all posts

Monday, 18 April 2016

ஈ.வே.ரா காமராசரை ஏன் ஆதரித்தார்?

ஈ.வே.ரா காமராசரை ஏன் ஆதரித்தார்?

1951 ன் இறுதி மாதங்களில் தேர்தல் வரவிருந்ததை ஒட்டி
"அடித்துக் கொல்லப்பட வேண்டிய நச்சுப் பாம்பு"
என்று 'ஈ.வே.ரா' தனது 'விடுதலை' இதழில் எழுதிய

நச்சு பாம்புகள் பட்டியல் இதோ ,
1) கு.காமராஜ் (காமராசர்)
2) பி.டி. அனந்த சயனம் ஐங்கார்,
3) பி.எஸ்.குமாரசாமி ராஜா,
4) தேனி என்.ஆர்.தியாகராசன்,
5) வி.வி.கிரி,
6) டி.டி.கிருஷ்ணமாச்சாரி (டிடிகே)

ஆனாலும் காமராசர் வெற்றி பெற்றார்.
அவர் பதவிக்கு வந்த மறுநாளே அவரைப் பலவாறு புகழ்ந்து எழுதினார் ஈ.வே.ரா.
அதன் பிறகு  ஈ.வே.ரா காமராசரைத் தொடர்ந்து புகழ்ந்து பாராட்டி எழுதவும் பேசவும் தொடங்கினார்.

இதனை பரப்பிக்கொண்டு என்னமோ காமராசரின் வளர்ச்சிக்கே ஈ.வே.ரா தான் காரணம் என்பது போல பரப்புரை செய்கின்றனர் திராவிடர்கள்.

கதை இதோடு முடியவில்லை.
ஈ.வே.ரா எவ்வளவு மோசமான பிழைப்புவாதி என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

ஈ.வே.ரா தன்னை விட 46 வயது குறைந்த தன் வளர்ப்பு மகளைத் திருமணம் செய்தார்.
அதுவும் திராவிடத் தொண்டர்களைப் போல (அன்று சட்டப்படி செல்லாத) சுயமரியாதைத் திருமணம் செய்யவில்லை.
தன் சொத்துக்களைக் காப்பாற்ற முறைப்படி திருமணம் செய்தார்.
இதனால் கோபமடைந்த அண்ணாதுரை தனியாக கட்சி தொடங்கினார்.
அண்ணாதுரையும் ஈவேராவும் ஒருவரை ஒருவர் படுமோசமாக விமர்சித்து எழுதினர்.
அண்ணாதுரை தன்னை கொலை செய்ய முயல்வதாகவும் ஈ.வி.கே சம்பத் அதற்கு உதவுவதாகவும் ஈ.வே.ரா எழுதினார்.
அண்ணாவும் சம்பத்தும், பெரியார் மற்றும் மணியம்மை மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருவரையும் நீதிமன்றம் வந்து மன்னிப்பு கேட்க வைத்தனர்.

1960களில் தி.மு.க பெரிய அளவில் செல்வாக்கு பெறத் தொடங்கியது.

அண்ணாதுரையைப் பழி வாங்கவேண்டும் என்பதற்காகவே காமராசரை தீவிரமாக ஆதரித்தார் ஈ.வே.ரா.

ஆனாலும் காமராசர் தோற்றார். 1967ல் அண்ணாதுரை பதவிக்கு வந்தார்.

உடனே பழைய சண்டைகள் அத்தனையையும் மறந்துவிட்டு தி.மு.க ஆதரவாளராக மாறி மறுபடியும் அவர்களோடு போய் ஒட்டிக்கொண்டார் ஈ.வே.ரா.

Saturday, 9 April 2016

குலக்கல்வி என்ற அவதூறு

குலக்கல்வி என்ற அவதூறு

ஒரு பொய்யைத் திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டே இருந்தால் அது காலப்போக்கில் உண்மையாகிவிடும் என்பது கோயபல்ஸ் பரப்புரை அரசியல் உத்தி ஆகும்

இராஜகோபாலாச்சாரி மீது பரப்பப்பட்ட அவதூறுகள்,
1)இராஜாஜி குலக்கல்வியைக் கொண்டுவந்தார்.
2)நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி 600 பள்ளிகளை மூடினார்.
3)பிராமணருக்கு வேத பாடசாலைகளைத் திறந்தார்.

மூன்றுமே வடிகட்ட பொய்கள்.

முதல் பொய் இராசாசி குலக்கல்வியைக் கொண்டுவந்தார் என்பது.
அவர் பார்ப்பனராம், மனிதர்கள் எந்த எந்த குலத்தில் பிறந்தார்களோ அந்த அந்த தொழிலைச் செய்யவேண்டும் என்று மனுதர்மம் கூறுவதை நடைமுறைப்படுத்தப் பார்த்தாராம்.
உண்மை என்ன வென்றால் அது இராசாசி வகுத்த திட்டமே கிடையாது.
அதிலே குலம் பற்றி எதுவுமே விதிகள் இல்லை.
அவர் செய்தது நேரச் சீர்திருத்தம் மட்டும்தான்.
Hereditary Education Policy என்ற இந்த திட்டம் ஏற்கனவே 1949-50 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த பி.எஸ்.குமாரசாமிராஜாவின் ஆட்சியில் சில பகுதிகளில் செயல் படுத்தப்பட்டது.
அதை தமிழகம் முழுவதும் இராசாசி நடைமுறைக்குக் கொண்டுவந்தார்.
ஆசிரியர்கள் அப்போது குறைவு.
புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசிடம் பணமில்லை.
அதனால் ஆசிரியரின் 8 மணிநேர வேலை நேரத்தை ஒவ்வொரு வகுப்பிற்கும் மூன்று மூன்று மணிநேரமாக பிரித்துக்கொடுப்பதுதான் திட்டம்.
சாதி பற்றியோ பிறப்பு பற்றியோ எதுவுமே கூறப்படவில்லை.
இத்திட்டத்தால் ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்தது.
மூன்றுமணிநேரம் போக மீதி நேரம் மாணவர்கள் என்ன செய்வார்கள் என்று ஒரு பேட்டியில் கேட்டார்களாம்.
இராஜாஜி "மீதி நேரங்களில் பெற்றோருக்கு உதவி செய்யலாம்" என்று கூறினாராம்.
இதை அண்ணாதுரை பிடித்துக்கொண்டு 'பெற்றோரின் வேலையைத் தான் பிள்ளைகள் செய்யவேண்டும் என்று பார்ப்பனர் இராசி கூறிவிட்டார்' என்று அவதூறு பரப்பினார்.
இதற்கு 'குலக்கல்வித் திட்டம்' என்று பெயர் சூட்டி திராவிடவாதிகள் பொய்ப்பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டனர்.
இன்றுவரை இந்தப் பொய்ப் பெயரால்தான் இந்தத் திட்டம் அறியப்படுகிறது.

6000 பள்ளிகளை அவர் மூடினார் என்பதும் பச்சைப்பொய்.
அன்று கல்வி சேவை செய்யும் சில கிராமிய அமைப்புகளைக்கு அரசு நிதி கொடுத்துவந்தது.
அந்த நிதி முறையற்ற வகையில் செலவு செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதை இராசாசி நிறுத்தக்கூட இல்லை.
அது சரியாக நடக்கிறதா என்று முறைப்படுத்த ஆணை பிறப்பித்தார்.
ஆந்திராவுக்குக் கிடைக்கும் நிதி போய்விடுமோ என்ற பயத்தில் நீதிக்கட்சி எனும் திராவிடக் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
உடனே ஈ.வே.ரா, ஆந்திராவில் இந்த நிதி இல்லாமல் போனால் 6000 'பள்ளிகள்' மூடவேண்டி வரலாம் என்று உண்மைக்குப் புறம்பாக எழுதினார்.
அதையும் கோயபல்ஸ் பரப்புரை செய்துவருகின்றனர்.

நன்றி : எழுத்தாளர்.திரு.ஜெயமோகன்
---------------
அன்று இராசாசி எதைச் செய்தாலும் திராவிடவாதிகள் அதை எதிர்த்தனர்.
எடுத்துக்காட்டாக,
அன்று அவர்அரும்பாடு பட்டு மதுவிலக்கை அமல்படுத்தினார்.
உடனே ஈ.வே.ரா முழுமூச்சாக குடிக்கும் உரிமை கேட்டு மது ஆதரவுப் பிரச்சாரம் செய்தார்.
25 ஆண்டுகள் குடியை மறந்திருந்த திராவிடம் மீண்டும் சாராயக்கடைகளைத் திறந்தது.
( vaettoli.blogspot.in/2015/07/blog-post_65.html?m=1
vaettoli.blogspot.in/2015/12/blog-post_2.html?m=1 )

திராவிடம் என்பது அன்றைய ஆங்கிலேய ஆட்சியின் B-அணி ஆகும்.

Saturday, 16 January 2016

குருதியில் நனைந்த குமரி -12

குருதியில் நனைந்த குமரி -12

1954 ஆகஸ்ட் 15
மாலை
திருநெல்வேலி தொடர்வண்டி நிலையம்

திருநெல்வேலி எம்.பி தாணுப்பிள்ளையும் அப்துல் ரசாக்கும் சென்னை செல்லும் தொடர்வண்டி அருகே நின்றுகொண்டு இருந்தனர்.

"ரசாக் அவர்களே!
முதல்வகுப்பில் பயணச்சீட்டு போட்டுள்ளேன்.
சென்னையில் என் நண்பர் வீட்டிற்குச் சென்றடைந்ததும் எனக்கு தகவல் தாருங்கள்"

"சரி ஐயா! முதல்வகுப்பில் பெரிய மனிதர்கள் யாராவது வருவார்கள்.
அப்படி வந்தால் நலமாக இருக்கும்"

"கட்டாயம் ஒருவரேனும் கிடைப்பார்கள்.
சரி ஐயா வண்டி கிளம்புகிறது.
நீங்கள் தினமும் மாலை என்னை தொலைபேசியில் அழையுங்கள்"

"சரி தினமும் அழைக்கிறேன்.
நீங்கள் குமரிக்கு காங்கிரஸ் குழு நேரில் செல்வதை துரிதமாக நிறைவேற்றுங்கள்"

வண்டி கிளம்பியது.

மதுரையில் பி.டி.ராஜன் ஏறினார்.

அப்துல் ரசாக் அவரைக் கண்டதும் உடனே சென்று பேசினார்

"ஐயா வணக்கம்"

"யாரது அப்துல் ராசாக்கா?
ஐயா என்ன இந்தப் பக்கம்?"

"கேரளாவிலிருந்து தப்பித்து வந்துள்ளேன்"

"ஓ ஆமாம். கேள்விப்பட்டேன்.
கேட்கவே வருத்தமாக உள்ளது.
இன்று காலை கூட செய்தித்தாளில் வந்துள்ளதே.
காங்கிரஸ் குழு அங்கே பார்வையிட செல்வதாக"

"ஆமாம் ஐயா, தாணுப்பிள்ளை அவர்களின் ஆதரவால் நடந்தது"

"சென்னை எதற்கு செல்கிறீர்கள் காமராசரைப் பார்க்கவா?"

"ஆமாம். காமராசரைப் பார்த்துவிட்டு அப்படியே டெல்லி போகிறேன்:

"அப்படியே ராஜாஜியையும் பார்த்துவிடுங்கள்"

"ராஜாஜி எங்களுக்கு உதவுவாரா?
அவர் ஒரு பிராமணர்,
இந்தி திணிப்புக்குத் துணைபோனவர்,
பிறந்த சாதிக்கான தொழிலைச் செய்யும் வகையில் குலக் கல்வித்திட்டம் வகுத்தவர்,
என்று தமிழகத்தில் பரவலான எதிர்ப்பு உள்ளதே?!"

"அவர் ஒரு புரிந்துகொள்ளமுடியாத மனிதர்.
ஆனால் தமிழ் பிராமணர் என்றவகையில் இனவுணர்வு உண்டு"

"ஆம். எல்லைப் போராட்டத்தில் அவர் ஆதரவாக இருந்ததை ம.பொ.சி குறிப்பிடுவார்.
ஆனால் அவர் பதவியில் இல்லையே?!
அவரைப் பார்ப்பது பலனுள்ளதாக இருக்குமா?"

"ஆச்சாரியாரைப் போல ஒரு பழுத்த அரசியல்வாதி வேறு யார் உண்டு?
நீங்கள் போய்ப் பாருங்கள்.
பிறகு புரியும்.
சரி இரவாகிவிட்டது.
காலை சென்னையில் இறங்கி என்னோடு வந்து தங்கிக்கொள்ளுங்கள்"

"இல்லை. நண்பர் ஒருவர் வீட்டில் தங்குவதாக வாக்களித்துவிட்டேன்"

"சரி நான் காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் தங்கியிருப்பேன்.
நாளை வந்து என்னைப் பாருங்கள்"
--------------------------------------------------
அதே ஆகஸ்ட் 15 1954 மதியம்.

இராஜாஜியின் வீட்டுத் தொலைபேசி அழைத்தது.

ராஜாஜியின் நண்பரும் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்வருமான மேகநாதன்தான் அழைத்திருந்தார்.

"ஹலோ, ராஜா"

"சொல்லு மேகநாதா"

"என்னப்பா இப்படி ஆகிவிட்டதே?!
கேரளாவில் நம் மக்களை கொல்கிறார்கள்.
தமிழ்நாட்டை ஆளுபவர்கள் என்ன செய்துகொண்டு  இருக்கிறீர்கள்?"

"நான் என்னப்பா பண்ணமுடியும்?
காமராசுதான் நம்மை ஒதுக்கிட்டானே?"

"அதுக்காக நீ சும்மாயிருக்கலாமா?
நீ சொன்னா கேக்கமாட்டானா?"

"நான் போய் அவனிடம் கெஞ்சவேண்டுமா?"

"சரிப்பா, நீ ஒண்ணும் கெஞ்சவேண்டாம்.
நானே தனியாக நேரில் போய் நேசமணியைப் பார்க்கிறேன்.
ஏதேது உன்னை ஆரியன் என்றவன் பேச்செல்லாம் சரிதான் போலிருக்கிறதே?!"

"மேகநாதா கோபப்படாதே.
எனக்கு மட்டும் வேதனை இல்லாமல் இல்லை.
நீ நேரில் போய் நேசமணியிடம் நடந்ததை ஒரு அறிக்கையாக எழுதி வாங்கிவிட்டு வா.
நான் பார்த்துக்கொள்கிறேன்"

கூறிவிட்டு சட்ட புத்தகங்களை புரட்டி தீவிரமாக ஆராயத் துவங்கினார் ராஜாஜி.
-------------------------------------------
1954 ஆகஸ்ட் 16
மதியம்.
காஸ்மோ பாலிட்டன் கிளப்.
சென்னை.

சொன்னதுபோலவே அப்துல் ரசாக் பி.டி.ராஜனைச் சந்தித்தார்.
மலையாள வெறியர்களால் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமை தொடக்கத்திலிருந்து தற்காலம் வரை சுருக்கமாக விளக்கிக் கூறினார்.

தன் மகன் பழனிவேல் ராஜன் மற்றும் தனது குடும்ப வழக்கறிஞர் சந்தோசம் ஆகியோருடன் பி.டி.ராசன் உன்னிப்பாக அனைத்தையும் கேட்டுக்கொண்டார்.

சந்தோசம் தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டார்.

"ஐயா ரசாக் அவர்களே!
உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
பழனி! இனி எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு குமரிப் போராட்டத்தில் இறங்கிவிடு.
சந்தோசம்! இனி இவர்களுடைய வழக்குகளை நீங்கள் முன்னின்று நடத்தவேண்டும்.
இந்த பிரச்சனை முடிந்த பிறகு என்னிடம் நீங்கள் வந்தால் போதும்"
-----------------------------------
பட்டம் தாணுப்பிள்ளை கோபமாக அமர்ந்திருந்தார்.
திருநெல்வேலி காங்கிரஸ் குழு நேரில் வருவதைக் கேள்விப்பட்டதில் இருந்து அவர் நிலைகொள்ளாமல் தவித்தார்.

காவல்துறை உயரதிகாரி அலெக்சாண்டரை அழைத்தார்.

"எப்படி இந்த ரசாக் தப்பித்து போனான்?"

"ஐயா அதுவந்து..."

"போதுமையா, உமது விளக்கம் ஒன்றும் தேவையில்லை.
சரி. பாண்டிப் பகுதிகளில் காவலர்களைக் குறைக்கவேண்டாம்.
ஆயுதங்களை மட்டும் உள்ளேவைத்துப் பூட்டிவிடுங்கள்.
தூக்கிக்கொண்டு திரியவேண்டாம்.
மக்களை நடமாடவிடுங்கள்.
அந்த குழு வந்துபோகும்வரை இறுக்கத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
இனி இப்படி கோட்டைவிடாதீர்கள்.
போய்த் தொலையுங்களையா"

அடுத்த ஒருமணிநேரத்தில் தமிழர்கள் மீதான அடக்குமுறை குறைந்தது.
மக்கள் நடமாடலாம் என்று அறிவித்தனர்.
கடைக்காரர்கள் கடைதிறந்தனர்.
மூன்றுநாட்களாக பசியால் வாடிய மக்கள்
ஓடோடிச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவந்தனர்.
நோயாளிகள் மருத்துவமனை சென்றனர்.
மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பேருந்துகள் இயங்கின.

ஆனால் இயல்புநிலைதான் திரும்பவில்லை.

(தொடரும்)
--------------------------------------
குருதியில் நனைந்த குமரி -11
https://m.facebook.com/photo.php?fbid=648488261921497&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56