Showing posts with label தமிழக அரசியல். Show all posts
Showing posts with label தமிழக அரசியல். Show all posts

Thursday, 30 January 2020

இங்கு திராவிடம் விற்கப்படும்

இங்கு திராவிடம் விற்கப்படும்

தமிழகத்தின் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க விடம் பணம் பெற்ற தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.
இதற்கு முன்னோடியும் ஈ.வே.ரா தான்.

  திராவிட கட்சி இரண்டாகி அதன் ஒரு பிரிவை ஜெயலலிதா கைப்பற்றி 1991 இல் ஆட்சியமைக்கிறார்.

தி.மு.க வை சமாளிக்க திராவிட கூடாரத்தில் இருந்து யாரையாவது தன் பக்கம் இழுக்க முடியுமா என்று பார்க்கிறார்.

பணம் தருவதற்கும் தயாராக இருந்தார்.

அதெப்படி நடக்கும்?
கேவலம் பணத்துக்காக இத்தனைக் காலம் யாரை எதிர்த்தார்களோ அவர்களுடனே வந்து ஒட்டிக் கொள்வார்கள்?
அந்த அளவுக்கு மானம் கெட்ட யாரும் உண்டா?
என்று அனைவரும் நினைத்தபோது வீரமணி போய் ஜெயலலிதாவுடன் சேர்ந்துகொண்டார். வெளிப்படையாக 5 லட்சம் ரூபாய் பணமும் வாங்கிக் கொண்டார்.

இது பற்றி கேள்வி எழுந்தபோது விடுதலை (03.10.1991) இதழில்
அது எனக்காக வாங்கவில்லை,
"சுயமரியாதை இயக்க பிரச்சார நிறுவனத்தின்" வளர்ச்சிக்காக வாங்கிய நிதி என்று விளக்கமளித்தார்.
(நிறுவனத்தின் பெயரைக் கவனத்தீர்களா ராமகிருஷ்ண சந்திரபோஸ் மாதிரி)

அதோடு நில்லாமல் பெரியாரும் பார்ப்பன முதலாளிகளிடம் பணம் பெற்றுள்ளார் என்பதையும் அதனால் கொள்கை தவறிவிட்டதாக அர்த்தமில்லை என்றும் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

(அன்று தமிழ்தேசியத்தின் குரலாக ஒலித்த அறிஞர் குணா அவர்களை கருத்தியல் ரீதியில் எதிர்கொள்ள இயலாமல் ஜெயலலிதாவிடம் சொல்லி தடா வில் உள்ளே தள்ளியதும் வீரமணிதான்)



Thursday, 2 May 2019

சாதியம் vs தமிழ்தேசியம்

சாதியம் vs தமிழ்தேசியம்

எப்படி ஒரு திராவிடவாதியின் வடவர் எதிர்ப்பு தமிழ்தேசியம் ஆகாதோ....
அதேபோல,
ஒரு சாதியவாதியின் திராவிட எதிர்ப்பு தமிழ்தேசியம் ஆகாது.
-------
சில சாதி வெறியர்கள் இருந்தனர்.
அவர்கள் தமிழ்தேசியம் பேசிக்கொண்டே
"நாங்கதான் பாண்டியர்! நாங்கதான் மள்ளர்!
விவசாயத்தை கண்டுபிடித்ததே நாங்கள்தான்!
எங்க திணை மருதம்!
பாவாணரே கூறிவிட்டார்!
எங்க இம்மானுவேல் சேகரனை தேவர் கொன்னுட்டாரு!"
என்று கத்தினார்கள்.

வடநாட்டு கூர்மி சாதியை அழைத்து வந்து குடும்பர் மாநாடு போட்டார்கள்.
போட்டியாக இம்மானுவேல் சேகரனார் குருபூஜை நடத்தினார்கள்.
பசுபதி பாண்டியன் வளரவிடாமல் தடுக்க தி.மு.க களமிறக்கிய கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்று தெரிந்தும் அரசியல் அடையாளம் போய்விடக்கூடாது அவரை ஆதரித்துவந்தனர்.
இறுதியாக தென்தமிழ்நாடு தனியாக பிரியவேண்டும் என்பதில் போய் நின்றனர்.

பதிலடியாக ,
"மள்ளர் என்பது வீரர் என்று பொருள் தரும் பொதுவான சொல்.
மருதம் மட்டுமுன்றி பிற திணைகளிலும் மள்ளர் இருந்தனர்.
பள்ளருக்கும் பாண்டியருக்கும் பொதுவான வேர்ச்சொல் உள்ளதென்று பாவாணர் கூறவதாக நீங்கள் கூறுவது பொய்.
இம்மானுவேல் சேகரன் அத்தனை பெரிய ஆள் கிடையாது.
அவர் பற்றி வந்த ஆகப்பெரிய புத்தகத்தில் 300 பக்கங்கள் உண்டு.
அதில் சொந்தக்கதை சோக கதை போக 3 பக்கம் கூட அவர் போராடிய வரலாறு இல்லை.
தேவர் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தமைக்கு சாதி காரணம் இல்லை.
சமாதான கூட்டத்திற்கு வரவேண்டிய எம்.எல்.ஏ (அவரும் பள்ளர்) வராமல் அவரது எடுபிடி இம்மானுவேலை அனுப்பியதுதான் காரணம்.
பிறகு இருவரும் சமரசமாகி சாமாதானத்திற்கு அழைப்பு விடும் கூட்டு அறிவிப்பில் கையெழுத்தும் போட்டனர்.
அந்த சமாதான அறிக்கை வெளிவரக்கூடாது.
சாதியாக நாம் பிரிந்து கிடக்க வேண்டும் என்றுதான் அன்றிரவே இம்மானுவேலைக் கொன்று தேவர் மீது பழிபோட்டுவிட்டனர்.
(தேவருக்கு நியாயம் கேட்பது போல காமராசரை வீழ்த்தி ஆட்சியையும் பிடித்துவிட்டனர்.)
இம்மானுவேலார் கொலையான பிறகும் கூட பள்ளர் அதிகமாக வாழ்ந்த தொகுதியில் தேவர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
இறக்கும்போது தேவர் சொத்தில் 5 இல் 1 பங்கு பள்ளருக்கு கிடைத்தது.
மள்ளர் என்கிற பெயரில் குடும்பர் மீதி பள்ளர்களை ஏய்க்கின்றனர்.
மள்ளரியத்தை தமிழ்தேசியம் சுமப்பது அதிகநாள் நீடிக்காது"
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
---------------
அடுத்து சில சாதிவெறியர்கள் இருந்தனர்,
"நாங்கதான் தேவரு!
முக்குலம் நாங்க ஒரே சாதியோட மூன்று பிரிவு!
நாங்கதான் மூவேந்தரு!
தேவர்கள காமராஜ் நாடார் பழிவாங்கிட்டாரு!
தமிழ்நாட்டுல எங்கள விட்டா வீரனே கிடையாது.
அந்த படம் இருக்கு இந்த பாட்டு இருக்கு!
போர்த்துகீஸ் வரைபடத்துல மறவர்நாடு இருக்கு.
10,15 ஜமீன் நாங்கதான்!"
என்று ஆரம்பித்தார்கள்.
தேவர் குருபூஜை என்ற பெயரில் ரவுடித்தனம்.
ஊருக்கு ஊர் முச்சந்தியில் தேவர் சிலை.
4,5 சாதிக்கட்சிகள்.
எதற்கெடுத்தாலும் பள்ளரை வம்புக்கு இழுப்பது என்று சாதிவெறிக்கு இலக்கணமாக மாறி நின்றனர்.

பதிலடியாக,
" தேவர் என்பது சாதி கிடையாது அது ஒரு பட்டம்.
முக்குலம் மூன்றும் தமக்குள் எந்த தொடர்பும் அற்றவை.
முக்குலத்தோர் என்கிற பெயரில் அம்மூன்று குல மக்கட்தொகையில் 60% இருக்கும் அகமுடையார்களை ஏய்த்து அரசியல் செய்கிறீர்கள்.
பாவாணர் பார்வையில் அகமுடையார் நாட்டுப்படை, கள்ளர் காட்டுப்படை.
மறவர் பொதுவான வீரர் பெயர்.
காமராசர் காலத்தில் நடந்தது இரு கட்சிகளுக்கு இடையேயான மோதல்.
அப்போது காமராசர் பக்கம் அதிகம் இருந்தோர் முக்குலம்.
தேவர் பக்கம் அதிகம் நின்றது பள்ளர்கள் (தேவரின் அப்பா கூட எதிர்க்கட்சிதான்).
மற்றபடி காமராசர் நேரு குடும்பத்தின் அடிமை.
அவரால் நாடார்கள் அடைந்த சீரழிவுக்கு பதிலடியாகத்தான் தேர்தலில் அவரை சொந்த சாதி என்றும் பாராமல் தோற்கடித்தனர்.
பள்ளரும் மறவரும் பூலித்தேவன் காலத்தில் இருந்தே ஒன்றுக்குள் ஒன்று.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் கூட 8 பேர் பள்ளர்தான்.
நீங்கள் சண்டையிட்டு வருவதால் பூலித்தேவன் இடத்தில் கொள்ளைக்காரனான கட்டபொம்மனை அமரவைத்து புகழ்கின்றனர்.
கள்ளர் தன்னரசு கூட்டமைப்பு வெள்ளையரிடம் பேசிய வீரவசனத்தை கட்டபொம்மன் பேசியதாக படமெடுத்துவிட்டனர்.
மறவர் பாளையங்கள் கொசுறு.
அதைவிட தெலுங்கு பாளையங்கள்தான் தமிழகம் முழுவதும் இருந்தது."
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
----------------
அடுத்து சில வன்னியசாதி வெறியர்கள்,
"நாங்கதான் வன்னியகுல சத்திரியர்.
அக்கினி குண்டால இருந்து பொறந்த அக்னிகுலம்.
தமிழினத்திலேயே பெரும்பான்மை நாங்கதான்.
வீரப்பன், தமிழரசனை நீங்க யாருமே கொண்டாடலை.
வன்னியர்களை காமராசர் ஏமாத்திட்டார்.
எங்கயும் தெற்கத்தி ஆதிக்கம்.
சென்னை முழுக்க நாடார் ஆதிக்கம்.
அதனால தனி வடதமிழ்நாடு வேணும்"
என்று கத்தினார்கள்.

பதிலடியாக,
" வன்னியர் என்பது பட்டமே!
வன்னியர் என்கிற பட்டத்தை பயன்படுத்தி பள்ளிகள் படையாச்சிகளை முட்டாளாக்குகிறீர்கள்!
வீரப்பன், தமிழரசன், காடுவெட்டி குரு எல்லாரும் படையாச்சிதான்.
பதவியில் மட்டுமே இருப்பது பள்ளி!
திராவிட கட்சிகளை தூக்கி சுமப்பது வடக்குதான்.
பெரியார் கூடவே இருந்ததும் கருணாநிதி கூடவே இருந்ததும் வன்னியர்தான்.
தெற்கை விட வடக்கு பின்தங்கியதாகவோ
வடக்கில் தெற்கத்திகள் ஆதிக்கம் செலுத்துவதாகவோ நீங்கள் நிறுவ முடியாது.
தலைநகர் அனைவருக்கும் பொது.
சென்னையை ஆந்திராவுக்கு போகாமல் தடுத்ததே ம.பொ.சி என்கிற நாடார்தான்.
நாடார்களை இழிவு படுத்தும் மத்திய பாடத்திட்டம் வந்தபோது அதை கண்டித்து நீக்கியது ராமதாஸ்தான்.
நாடாரான சீமான் அளவுக்கு வீரப்பனுக்கு வெளிப்படையான ஆதரவு எந்த இயக்கமும் கட்சியும் தெரிவித்ததே கிடையாது.
தற்போதுகூட உங்கள் இருப்பிடத்துக்கு வந்த பெரிய ஆபத்தான எட்டுவழிச் சாலையை எதிர்த்து முதலில் சிறை சென்றதும் முதலில் வழக்கு போட்டு அந்த ஆபத்தை தடுத்து நிறுத்தியதும்கூட நாம்தமிழர்தான்."
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
-------
அடுத்து, சில சாதிவெறியர்கள் இருந்தனர்.
"நாங்கதான் பரையர்.
சாவுக்கு அடிக்கிற பறைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.
பரைனா பழமை.
நாங்கதா மூத்தகுடிக்கே மூத்தகுடி!
ஆதாரம் அந்த பழமொழி இந்த பழமொழி!
நாங்கதான் பூணூல் போட்ட ஒரிஜினல் பார்ப்பனரு.
வேதம் படித்த பறையூர் சாக்கையன் பற்றி இலக்கியத்துல வருது.
குலதெய்வ பூசாரிகள்லாம் நாங்கதான்!
திருவள்ளுவர், புத்தர் நாங்கதான்!
பௌத்தம்தான் எங்க நெறி!"
என்று கத்தினார்கள்.
சாதிவெறியையும் தலித்தியத்தையும் கலந்து தூக்கிக்கொண்டு
திருமாவளவன் (கருணாநிதி காலை நக்கிய அதே நாவால்) இடும் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு வன்னியர் பெண்களை துரத்த ஆரம்பித்தனர்.
இவர்களுக்கு ஆதரவாக தி.மு.கவும் பறையர் சாதி போலீஸ் வக்கீல் அடங்கிய கட்டப்பஞ்சாயத்து கும்பலும் இருந்தது.
இறுதியில் ராஜபக்ச புத்தரை வணங்கும் படத்தைப் போட்டு சாக்கியமுனிகள் வாழ்த்தியதில் போய் முடிந்தது.

பதிலடியாக,
"பரையர் என்பது தவறு.
சங்க இலக்கிய பாடலில் கடம்பன், துடியன், பாணன் என நான்கு குடிகள் சிறப்பித்து கூறப்படுகின்றன.
அதில் நான்குமே இசைக்கருவி சார்ந்த பெயராக இருக்கும்போது நீங்கள் எப்படி பழமை சார்ந்த பெயராக இருக்க முடியும்?!
பழமொழிகள் காலத்துக்கு காலம் திரியும். அவை சான்றாகாது.
இலக்கியத்தில் வரும் பறையூர் சாக்கையன் சாக்கைக்கூத்து ஆடும் கலைஞன் என தெளிவாகவே உள்ளது.
பூணூல் பல சாதியினர் போடுவது.
அது வில்லின் நாண்.
150 ஆண்டு முந்தைய பூணூல் போட்ட குயவர் ஓவியமும் பூணூல் போட்ட ராசராச சோழன் பெரியம்மா சிலையும் கூட உண்டு.
பறை என்றால் கேவலமில்லை.
பறையில் பலவகை உண்டு.
பூசைக்கு திருமணத்துக்கு என்று பலவிதமான பறைகள் இருந்தன.
ஆண்டாள்கூட பறையடித்து பாடுகிறாள்.
குறவர்தான் உண்மையில் மூத்தகுடி (நரிக்குறவர் இல்லை. அவர்கள் மராத்தியர்).
உங்களை ஆதித் தமிழர் என்று குறிக்காமல் ஆதி திராவிடர் பதிவாக்கி வைத்துள்ளனர்.
திருமாவளவன் என்கிற திமுக கொத்தடிமையை நம்பாதீர்கள்.
அவன் மலைச்சாமி தேவேந்திரன் ஆரம்பித்த தலித் பேந்தர்ஸ் அமைப்பை ஆட்டையைப் போட்டவன்.
இடைக்காலத்தில் நன்றாக இயங்கி பிரபாகரனாரைச் சந்திக்கும் அளவு போனான்.
பின் அவனது அசிங்கம் ஏதோ திமுக விடம் மாட்டி இன்று வரை பல அவமானங்களைச் சந்தித்து வருகிறான்.
ராஜபக்சவை சந்தித்து பல்லைக் காட்டியபிறகும் அவனை நம்புவது பச்சையான சாதிவெறி.
வெறுமனே ஆதரவு தெரிவித்தே வந்தேறி சக்கிலியர் இட ஒதுக்கீடில் தனியாக உள் ஒதுக்கீடு வாங்கி 1% அதிகம் பயனடைந்து உங்களை பின்னுக்குத் தள்ளி நன்கு முன்னேறிவிட்டனர்.
ஏக ஹிந்தி வெறியன் அம்பேத்கரை தூக்கிக்கொண்டு திரியாதீர்கள்.
அவன் ஆங்கில அடிமை.
வன்னியரையும் உங்களையும் மோதவிட்டு அந்த இடைவெளியில் படுத்துதான் திமுக இறுதி மூச்சை விட்டுக்கொண்டு இருக்கிறது"
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
----------
அடுத்து சில சாதி வெறியர்கள் இருந்தனர்.
"நாங்கதான் ஆரியர்.
நாங்கதான் பகவான் தலைல இருந்து பிறந்து மனுதர்மம் படைச்சு சாதிய உருவாக்கினது.
ஹிந்து மதம்தான் பழமையானது.
அகண்ட பாரதம் அமைப்போம்"
என்று எவனோ எழுதிக்கொடுத்ததை ஒப்பித்து செய்துவந்தனர்.

பதிலடியாக,
" ஆரியர் என்பதே கற்பனை!
அதை உருவாக்கிய மாக்ஸ் முல்லரே அதைத் தவறு என்று ஒத்துக் கொண்டார்.
ஆரியருகும் சமஸ்கிருத மொழிக்கும் பார்ப்பனருடன் தொடர்பு எதுவும் இல்லை.
பார்ப்பனர் வேறு பிராமணர் வேறு.
சாதி தொழில்வழி வந்தது.
ஆரியர் காலம் என்று கூறப்படும் காலத்தில் வடயிந்தியா வந்த ரோம் நாட்டு பயணி ஏழ்வர்ணம் நடைமுறையில் இருப்பதாகவும் அதில் உயர் அடுக்கு கவிஞர் மற்றும் விவசாயிகள் என்றும் குறித்துள்ளார்.
மிகப் பழமையான தொல்காப்பியம் கூட பார்ப்பனர் பற்றி நல்ல விதமாகக் கூறுகிறது.
தமிழுக்காகவும் தமிழர் உரிமைக்காகவும் பாடுபட்ட எத்தனையோ பார்ப்பனரைக் காட்டமுடியும்.
இன்று இந்துத்துவ வெறியரில் பல சாதியினரும் உண்டு.
நீங்கள் இந்துத்வா என்ற பெயரில் உள்ளே நுழைந்திருக்கும் வந்தேறி  பிராமணர்களின் மூளைச் சலவைக்கு ஆளானவர்கள்.
மதத்தின் அடிப்படையில் நாடுகள் அமைவதில்லை.
எங்கள் பார்ப்பனர்கள் இனப்பற்றுக்கு முன் பிராமணிய-இந்துத்வா கட்டாயம் தோற்கும்"
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
-------
அடுத்து,
" நாங்கதான் நாடாரு!
காமராசர் இல்லனா எவனும் படிச்சிருக்கவே முடியாது!
நகை கடை, ஜவுளிக்கடை, மளிகைக் கடை எல்லாம் எங்க கைல தான்!"
என்று சரத்குமார் படத்தை வைத்துக்கொண்டு திரிந்தனர்.

பதிலடியாக,
"காமராசர் உங்களுக்கு என்று எதுவும் செய்யவில்லை.
கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைத்த நேசமணிக்கு அவர் எந்த ஆதரவும் தரவில்லை.
தமிழகத்திற்கு சேரவேண்டிய வளமான மாவட்டமான இடுக்கியை கேரளாவுக்கு தாரைவார்த்தார்.
ம.பொ.சி திருப்பதி வரை கேட்டு திருத்தணி வரை மட்டுமே கிடைத்தபோதும் சும்மாயிருந்தார்.
இந்தியெதிர்ப்பில் பல கொலைகளைச் செய்தது அவரே!
தமிழ்நாடு என்ற பெயர்மாற்ற உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்க நாடாரை சாகவிட்டது அவரே!
அதனால்தான் சிவகாசி நாடார்கள் அவரை பதவியிலிருந்து தூக்கியெறிந்தனர்.
உங்களுக்கான தலைவர் நேசமணிதான்.
நீங்கள் பெரும்பான்மையாக இருக்கும் குமரி மாவட்டத்தை மத ரீதியாக பிரித்து அடிமைகளை பதவியில் அமர்த்தி அடக்கியாள்கின்றனர்.
நீங்கள் கணிசமாக வாழும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் கொண்டுவந்து உங்களுக்கும் பள்ளர்-பரதவருக்கும் சாதிச்சண்டை மூட்டிவிட்டு ரவுடிகளை வளர்த்துவிட்டு  திசைதிருப்பியதே இன்று துப்பாக்கிச்சூடு வரை போய்விட்டது"
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
-------
சாதியம் எப்போதெல்லாம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் தமிழ்தேசியம் அதை நசுக்கத் தவறியதில்லை.

சாதியை அனைவரும் வெறுக்கின்றனர் என்றால் அது காரணமில்லாமல் இல்லை.

சாதி சமத்துவம் ஏற்பட வந்தேறிகள் போலவே சாதிவெறியர்களும் தடையாக உள்ளனர்.

எனவே சாதி ஒழிப்பு என்கிற வந்தேறிகளின் பித்தலாட்டத்தை எதிர்க்கும் அதே நேரத்தில்
சாதிவெறியர்களின் அளவுகடந்த அடாவடியையும் எதிர்த்தே வந்துள்ளோம்.

Wednesday, 1 August 2018

அம்பானிக்கு சவால்விடும் கருணாநிதி குடும்பம்

அம்பானிக்கு சவால்விடும் கருணாநிதி குடும்பம்

2011 இல் நேர்மையான அரசியல்வாதியாக அறியப்படும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் 'த அதர் சைடு’ (The Other Side) எனும் பத்திரிக்கை "கருணாநிதி குடும்பத்தின்" சொத்து பட்டியலை வெளியிட்டது.

அதை தமிழில் விகடன் வெளியிட்டது.

அது வருமாறு,

(1) 6,124 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட "கருணாநிதியின்" கோ பாலபுரத்து வீடு - மதிப்பு
5 கோடி.

(2) "முரசொலி மாறனின்" கோபாலபுரத்து வீடு - மதிப்பு
5 கோடி.

(3) 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட "முரசொலி செல்வத்தின்" கோபாலபுரத்து வீடு - மதிப்பு
2 கோடி.

(4) கோபாலபுரத்தில் "சொர்ணத்தின்" வீடு - மதிப்பு
4 கோடி.

(5) கோபாலபுரத்தில் "மு.க.முத்துவின்" வீடு - மதிப்பு
2 கோடி.

(6) கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு
5 கோடி.

(7) மகள் "செல்வி, எழிலரசியின்" கோபாலபுரம் வீடு - மதிப்பு
2 கோடி.

(8) சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் "ராஜாத்தி அம்மாளின்" வீட்டு மதிப்பு -
12 கோடி.

(9) மண்ணிவாக்கம் கிராமத்தில் "ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும்" இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு
4.5 கோடி.

(10) ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் "ராஜாத்தி அம்மாளின்" ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு -
10 கோடி.

(11) 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் "மு.க.ஸ்டாலின்" வேளச்சேரி வீட்டு மதிப்பு -
2 கோடி.

(12) நுங்கம்பாக்கத்தில் இருக்கும் "உதயநிதி ஸ்டாலினின்" ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு -
2 கோடி.

(13) சென்னை போட் கிளப்பில் இருக்கும் "கலாநிதி மாறனின்" 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் -
100 கோடி.

(14) கொட்டிவாக்கத்தில் இருக்கும் "மாறன் சகோதரர்களின்" பண்ணை வீட்டின் மதிப்பு -
10 கோடி.

(15) போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு -
2 கோடி.

(16) 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு -
20 கோடி.

(17) மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு -
5 கோடி.

(18) சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு -
100 கோடி.

(19) கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு -
50 கோடி.

(20) பெங்களூருவில் இருக்கும் "செல்வத்தின்" அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -
4 கோடி.

(21) பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் "செல்வியின்" ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -
80 கோடி

(22) "மாறன் சகோதரர்களின்" 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -
120 கோடி.

(23) பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு -
108 கோடி.

(24) பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் "மு.க.தமிழரசுவின்" 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு -
48 கோடி.

(25) அந்தியூரில் இருக்கும் "மு.க.தமிழரசுவின்" 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு
30 லட்சம்.

(26) புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு
50 கோடி.

(27) எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு
தெரியவில்லை.

(28) தினகரன் பப்ளிகேஷன்ஸ்  மதிப்பு
தெரியவில்லை.

(29) சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் மதிப்பு
தெரியவில்லை

(30) முரசொலி அறக்கட்டளை மதிப்பு
தெரியவில்லை

(31) ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது.
இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக "கலாநிதி மாறனே" பிரகடனம் செய்திருந்தார்.

(32) மதுரை, மாடக்குளம் கிராமத்தில் "தயாளு அம்மாள்" அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு
தெரியவில்லை.

(33) தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் "கருணாநிதிக்கு" இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு -
தெரியவில்லை.

(34) திருவள்ளூர் மாவட்டத்தில் "தயாளு அம்மாளுக்கு" இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு -
1 கோடி.

(35) "துர்கா ஸ்டாலினுக்கு" திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு -
60 லட்சம்

(36) மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் "அழகிரியின்" 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு
2 கோடி.

(37) மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு -
2 கோடி.

(38) மதுரை தல்லாகுளத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு -
5 கோடி.

(39) மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு -
40 லட்சம்.

(40) மதுரை திருப்பரங்குன்றத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.

(41) மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு -
1 கோடி.

(42) மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு
2 கோடி.

(43) மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள "அழகிரி" வீட்டின் மதிப்பு -
2 கோடி.

(44) மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் "காந்தி அழகிரிக்கு" இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு -
60 லட்சம்.

(45) மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் "காந்தி அழகிரிக்கு" இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -
20 லட்சம்.

(46) மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் "தயாநிதி அழகிரிக்கு" இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.

(47) மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் "காந்தி அழகிரிக்கு" இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.

(48) கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் "காந்தி அழகிரியின்" பண்ணை வீட்டு மதிப்பு -
5 கோடி.

(49) மாடக்குளம் கிராமத்தில் "தயாநிதி அழகிரிக்கு" இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.

(50) சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் "தயாநிதி அழகிரிக்கு" இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு -
2.5 கோடி.

(51) சென்னை திருவான்மியூரில் "தயாநிதி அழகிரிக்கு" சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -
3 கோடி.

(52) மதுரை சத்ய சாய்நகரில் "தயாநிதி அழகிரிக்கு" சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு -
3 கோடி.

(53) சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் "தயாநிதி அழகிரியின்" அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -
1 கோடி.

(54) சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் "தயாநிதி அழகிரிக்கு" சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு -
2 கோடி.

(55) மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் "அழகிரிக்கு" சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு -
தெரியவில்லை.

(56) மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் "தயாநிதி அழகிரியின்" 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு -
தெரியவில்லை.

(57) மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு -
1 கோடி.

(58) சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271- ஏ) மதிப்பு -
5 கோடி.
இது "கனிமொழிக்குச்" சொந்தமானது.

(59) 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் "கனிமொழிக்கு" இருக்கும் பங்கின் மதிப்பு -
20 கோடி.

(60) கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு -
30 கோடி.

(61) ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு -
50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

(62) கலைஞர் டி.வி-யில் "தயாளு அம்மாளுக்கு" இருக்கும் பங்குகளின் மதிப்பு -
90 கோடி.

(63) அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது -மதிப்பு
தெரியவில்லை

(64) கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது -மதிப்பு
தெரியவில்லை.

(65) தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

(66) எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் "மாறன் சகோதரர்​கள்" உடையதே.

(67) தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - "மாறனின் மகள் அன்புக்கரசிக்கு" சொந்தமானது.

(68) சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை "மாறன் சகோதரர்கள்" கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

(69) கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து "கனிமொழிக்கு" சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்

- இவ்வாறு அந்தப் பட்டியல் உள்ளது.

நன்றி: விகடன் (10.08.2011)

இது 2011 ல் உள்ள நிலைதான்.
அதுவும் கணக்கில் வரும் சொத்துக்கள்.
மதிப்பு 'தெரியவில்லை' என்று உள்ள சொத்துக்களுக்கு 1 கோடி மதிப்பிட்டாலும் 14,300 கோடி வரை வருகிறது.

கணக்கில் வராத கறுப்புப் பணம் எப்படியும் பத்துமடங்கு வரை இருக்கலாம்.
அதாவது 1.4 லட்சம் கோடி.

(2008 ல் நடந்த 2ஜி ஊழல் இதில் சேர்க்கப்படவில்லை.
2010 ல் நீரா ராடியா ஒலிநாடா வெளியான பிறகே அது கவனம் பெற்றது.
அதையும் சேர்த்தால் ஒன்னேமுக்கால் லட்சம் கோடி சேர்த்து 1.6 லட்சம் கோடி வரும்)

இதே ஆண்டு 'உலகின் பணக்கார இந்தியன்' என்று முகேஷ் அம்பானி அறியப்பட்டார்.
அப்போது அவரது சொத்துமதிப்பு 1.2 லட்சம் கோடி கூட இல்லை.



Monday, 2 April 2018

தீக்கொளுத்தியின் சூளுரை

தீக்கொளுத்தியின் சூளுரை

"தீக்குளித்த ரவியின் நோக்கத்தை நிறைவேற்ற தமிழக உரிமைகளுக்காக இறுதிவரை போராடுவேன்"
- வைகோ

  "வைகோ புலிகளுடன் சேர்ந்து என்னைக் கொலைசெய்ய முயற்சிக்கிறார்" என்று கருணாநிதி ஒரு கொலைப்பழியை சுமத்தி கட்சியை விட்டு வைகோவை வெளியேற்றினார் கருணாநிதி.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், காமராஜபுரம் பாலன், மேலப்பாளையம் ஜகாங்கீர் ஆகியோர் தீக்குளித்தனர்.

அந்த அனுதாப அலையில் 1994ல் கட்சியைத் தொடங்கிய வைகோ "4 பேரை தீக்கிரையாக்கிய தி.மு.க வை வேரோடு சாய்ப்பேன்" என்று இதேபோல சூளுரைத்தார்.

  பத்தாண்டு கழித்து 2004 ல் அதே திமுகவுடன் கூட்டணியும் வைத்தார்.

இதுதான் வைகோவின் நேர்மை

Tuesday, 27 March 2018

வைகோ: போராளியும் நானே புரோக்கரும் நானே

போராளியும் நானே! புரோக்கரும் நானே! - வைகோ

மூன்று மாநிலங்கள் துரத்தியடித்த ஸ்டெர்லைட்டுக்கு கருணாநிதி அனுமதி அளித்து,
ஜெயலலிதா அடிக்கல் நாட்டியதில் இருந்தே மக்கள் தீவிரமாகப் போராடி வந்துள்ளனர்.

வழக்குரைஞர் வி.பிரகாஷ் என்பவர் தொடுத்த வழக்கில் அரசியல் தரகர் வைகோ பிற்பாடு வந்து செருகிக்கொண்டார்.

தமிழகத்தில் அவ்வப்போது போராட்டம் வெடிக்கும்போது தானே கலந்துகொண்டு முதல் வரிசையில் நின்று வாயாலேயே வடை சுட்டு தலைமை தாங்குவது போல காட்டிக்கொள்வார்.

ஊடகங்களும் இவரையே முன்னிலைப்படுத்தும்.

போராடும் மக்கள் சிறிது சோர்வடைந்த்தும் வைகோ பல படங்களில் வரும் யூனியன் லீடர் போல நிர்வாகத்திடம் தனியே டீல் பேசுவார்.

பிறகென்ன! கமிசன் அவருக்கும் வாக்குறுதி மக்களுக்கும் கிடைக்கும்.

இவ்வாறாக வைகோவின் மகன் வையாபுரி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் 2% பங்குதாரர் ஆனது அனைவருக்கும் தெரியும்.

(வைகோவின் மகன் ஒரு மாவட்டத்திற்கே புகையிலை சப்ளை செய்யும் டொபாக்கோ ஏஜன்ட் என்பதையும் பலர் அறிவீர்கள்)

மேலும் தம்பி ரவிசந்திரனின் மைத்துனன் ஜெகதீஸ் என்பவருக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கான எரிபொருள் ஏஜென்சியை வைகோ பிடித்துக் கொடுத்துள்ளார் என்பதையும் தற்போது அறிவோமாக.

ஏதோ ம.தி.மு.க மட்டும்தான் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருவதுபோல வைகோவின் எடுப்புகள் ஊடகங்களில் பரப்பிவருகின்றனர்.

அதை யாரும் நம்பவேண்டாம்.

ஸ்டெர்லைட் பிரச்சனை இழுத்துக்கொண்டே போவதற்கு வைகோதான் காரணம்.

Thursday, 21 September 2017

நாம்தமிழர் மீதான குற்றச்சாட்டுகள்

நாம்தமிழர் மீதான குற்றச்சாட்டுகள்
. . . . . . . . . . . . . . . . .
குற்றச்சாட்டு: நாம்தமிழர் தனித்தமிழ்நாடு பற்றி பேசுவதில்லை.
தமிழரசன், சுப.முத்துக்குமார் படங்களை பயன்படுத்துவதில்லை

பதில்: தனித்தமிழ்நாடு பேசினால் பிரிவினைவாதி என்று முத்திரை குத்தப்பட்டு தேர்தலில் போட்டியிட முடியாதபடி தடை செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு விடுதலை அடைய போராடிய தலைவர்களை அவர்கள் வெளிப்படையாக முன்னிறுத்த முடியாது.
அதனால் அவர்கள்
"இந்தியன் எனும் இனம் கிடையாது.
இந்திய ஒன்றியத்தை தேசிய இனங்கள் மாநில அதிகாரங்களுடன் ஆள வேண்டும்"
என்று மறைமுகமாக தேசியவாதத்தை வலியுறுத்துகிறார்கள்.
காஷ்மீர் போராளிகளுக்கு ஆதரவு, சீக்கியர்களுக்கு ஆதரவு என காய்நகர்த்துகிறார்கள்.
. . . . . . . . . .

கு: ஓட்டுக்கு அரசியல் செய்கிறார்கள்.
முதலமைச்சர் பதவிதான் தமிழ்தேசியம் என்று கூறுகிறார்கள்

ப: நடைமுறையில் தமிழகத்தின் முதலமைச்சர் பதவிதான் உலகத் தமிழர்களுக்கு தலைமையாக உள்ளது.
அதை வேற்றின வந்தேறிகளே ஆக்கிரமித்து வருகின்றனர்.
அதை கைப்பற்றுவது தமிழ்தேசியத்தின் முதல்படி ஆகும்.
ஓட்டுதான் ஒரு சாதரண குடிமகனின் பலம் அதை திரட்ட ஓட்டரசியல்தான் செய்யவேண்டும்.
. . . . . . . . . . .

கு: வேற்றின வேட்பாளர்கள் 15 பேரை நிறுத்தினர்

ப: ஜனநாயகத்தில் தமிழக குடிமக்களில் வேற்றினத்தார் எத்தனை சதவீதம் உள்ளனரோ அதற்கான பிரதிநிதித்துவத்தை கொடுத்துதான் ஆகவேண்டும்.
234ல் 15 என்பது கொஞ்சம் அதிகம் என்றாலும் ஏற்கக்கூடியதுதான்.
. . . . . . . . . . . . . .

கு: எந்த பிரச்சனையையும் கையிலெடுத்து இறுதிவரை போராடுவதில்லை

ப: நாம்தமிழரும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வசதியானவர்களோ பதவி உள்ளவர்களோ கிடையாது.
அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்தேவருகிறார்கள்.
. . . . . . . . .

கு: சீமான் பாதி-தெலுங்கச்சியை திருமணம் செய்துள்ளார்.

ப: சீமானுடைய மாமியார் தெலுங்கர் என்பது உண்மை கிடையாது.
அவர் தமிழ்க்குடியான கம்மாளர் சாதியைச் சேர்ந்தவர்.
அவரது மாமனார் ஒரு மறவர் குலத் தமிழர்.
தவிர எந்த தமிழரும் எந்த இனத்திலும் திருமணம் செய்யலாம்.
அப்படி வேற்றினத்தில் திருமணம் செய்தால் பிறக்கும் வாரிசை மீண்டும் தமிழினத்தில் மணமுடிக்க மட்டுமே தமிழ்தேசியம் வலியுறுத்துகிறது.
தூய்மையான ரத்தம், இனக்கலப்பின்மை போன்றவை நடைமுறையில் 100% சாத்தியமில்லை.
. . . . . . . . . . .

கு: சீமான் தமிழினப் பகைவர் ஈ.வே.ரா வை ஏற்றுக்கொண்டார்

ப: தற்போது அந்த நிலைப்பாட்டை அவர் கைவிட்டுவிட்டார்.
தொடக்கத்தில் திராவிட சிந்தனைகளின் தாக்கம் அவரிடம் இருந்தது.
தற்போது அவர் தெளிவாகிவிட்டார்.
. . . . . . . . . .

கு: சீமான் இனவெறி பிடித்தவர்.
தமிழன் ஆளவேண்டும் என்று ஏன் கூறுகிறார்.

ப: சீமான் கேட்பது ஒரு ஒன்றியத்தின் கீழ் வாழும் தேசிய இனத்திற்கான ஆகக்குறைந்த உரிமை ஆகும்.
இதைக் கூட தரமுடியாது என்பது ஒரு இனத்திற்கு எதிரான ஒடுக்குமுறைப் போக்கே ஆகும்.
சீமான் எந்த இனத்திற்கும் எதிரானவர் கிடையாது.
தன் இனத்திற்கான உரிமையைக் கேட்கிறார் அவ்வளவுதான்.
. . . . . . . . .

கு: சீமான் ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்.
ஆனால் ஈழத்திற்காக எதையும் செய்யவில்லை.

ப: சீமான் தமிழக முதலமைச்சராக ஆனாலும் கூட ஈழத்தில் நேரடியாக பெரிதாக எதையும் செய்யமுடியாது.
முதலில் ஈழத்திற்காக அரசியலுக்கு வந்தார்தான்.
ஆனால் தற்போது தமிழகமும் ஈழத்தைப் போலவே அடக்குமுறைகள் சுமத்தப்பட்டு ஒரு இனப்படுகொலையை எதிர்நோக்கியுள்ளதை அறிந்து அவர் தமிழக அரசியலில் முழு கவனத்தையும் செலுத்துகிறார்.
ஈழத்தமிழர்களும் சீமானை நம்பி இல்லை.
எம்.ஜி.ஆர் போல தமிழகத்திற்குள் ஈழத்தமிழருக்கு தேவையான ஆதரவை வழங்க சீமான் தயாராக இருக்கிறார்.
தமிழகத் தமிழருக்கு ஈழத்தின் நிலையை புரியவைத்ததில் சீமானின் பங்கு மறுக்கமுடியாது.
நாம்தமிழர் புலம்பெயர் தமிழகத் தமிழர்களிடம் நல்லதொரு கட்டமைப்பை உருவாக்கி ஈழத்தமிழரையும் சேர்த்துக்கொண்டு இயங்குகிறது.
அதற்குக்கூட விடாமல் அவரது பாஸ்போர்ட்டை முடக்கிவிட்டனர்.
. . . . . . . . . .

கு: சீமான் ஒரு கிறித்தவர் அவர் உண்மையான பெயரான சைமன் என்பதை மறைக்கிறார்.

ப: சீமானின் உண்மையான பெயர்  'செபாஸ்டியன் சீமான்' என்பதே.
அவரது தாய் பெயர் அன்னம்மாள்.
தந்தை பெயர் செந்தமிழன்.
அவரது குடும்பம் கிறித்தவத்திற்கு மாறியபிறகு செபாஸ்டியன் என்ற பெயர் சேர்க்கப்பட்டது.
மற்றபடி சைமன் என்பது அவரது பெயர் கிடையாது.
அவர் தொடக்கத்தில் திராவிடக் கட்சியில் இணைந்து கடவுள் நம்பிக்கையை கைவிட்டார்.
பைபிளை கூட விமர்சித்துள்ளார்.
. . . . . . . .

கு: நாத்திகரான சீமான் முருகனை தூக்கிப்பிடிக்கிறார்

ப: முருகன் உயிருடன் வாழ்ந்த மனிதன்.
தமிழர்களின் தலைவன்.
சீமான் முருகனை வணங்கச்சொல்லவில்லை.
முன்னோராக முப்பாட்டனாக ஏற்கும்படி சொல்கிறார்.
திருமாலையும் அவ்வாறே முன்வைக்கிறார்.
மற்றபடி அவர் இப்போதும் இறைமறுப்பாளர்தான்.
. . . . . . . . .

கே: சீமான் தலைவருடன் புகைப்படம் எடுத்ததைத் தவிர வேறு என்ன சாதித்தார்

ப: சீமான் தொடக்கத்தில் இருந்தே ஈழ ஆதரவாளர்.
புலிகளின் திரைத்துறை திரைப்படங்களை எடுத்தபோது சீமான் அங்கே பல நாட்கள் தங்கி இயக்குநராக பணியாற்றினார்.
தலைவர் பிரபாகரனின் 50வது பிறந்தநாளை ஒட்டி (2004ல்) புலிகள் வெளியிட்ட காணொளியில் பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சுப.வீ போன்றோருடன் சீமானின் பேட்டியும் இடம்பெற்றுள்ளது.
. . . . . . . . . .

கே: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் நடிகருக்கும் சீமானுக்கும் என்ன பெரிய வேறுபாடு

ப: 1996 முதல் இயக்குநராக பல படங்களை இயக்கியிருந்தாலும்
2009 இராமேஸ்வரத்தில் தன் இனம் படுகொலை செய்யப்படுவதை பொறுக்கமுடியாமல் சீமான் பேசிய உணர்ச்சிமயமான பேச்சு சமூக ஊடகங்களில் பரவும்வரை சீமான் எப்படி இருப்பார் என்பதுகூட பலருக்குத் தெரியாது.
அவரது அடையாளம் திரையின் மூலம் மக்கள் மனதில் பதிந்தது கிடையாது.
சினிமா மூலம் பிரபலமாகி நன்றாக சம்பாதித்து நாடிநரம்பு அடங்கியபிறகு ஓட்டு அறுவடை செய்ய அரசியலுக்கு வரவிரும்பும் நடிகர் போல அவர் சுயநலவாதி கிடையாது.
. . . . . . . . . .

கே: சீமானை விட்டு பல இனவுணர்வாளர்கள் விலகியது ஏன்

ப: அவசரம்தான் காரணம். தமிழினத்தின் அரசியல் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது.
காலம் தேவை.
இனத்தின் மீது அதிக பற்று கொண்டோர் அந்த அளவு பொறுமையாக இருக்கமுடியவில்லை.
வெளியே வந்தவர்கள் பெரிதாக சாதிக்கவும் இல்லை.
. . . . . . . . . .

கே: சீமான் முதலமைச்சர் ஆகிவிட்டால் தமிழ்தேசியம் அமைந்ததாக ஆகிவிடுமா?

ப: சீமான் முதலமைச்சராவது தமிழ்தேசியத்தில் 5% ஐக் கூட பூர்த்தி செய்யாது.
ஆனால் முதல்படியாக அமையும்.
அதாவது மக்களிடம் இனவுணர்வும் மொழியுணர்வும் அரசியல் விழிப்புணர்வும் பொருளாதார பலமும் ஏற்படுவது முதல் அடி ஆகும்.
. . . . . . . .

கே: சீமான் பெரிதாக வாக்கு பெறவில்லையே!?

ப: இங்கே ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நம்பத் தகுந்தவை கிடையாது.
அதிலும் ஊழல் நடக்கிறது.
ஒரு கட்சி 50% மக்களின் ஆதரவைப் பெற்றால்தான் அவர்களுக்கு 20% ஓட்டாவது விழும்.
அதாவது நாம்தமிழருக்கு போடப்பட்ட ஓட்டில் மூன்றில் ஒன்றுதான் நாம்தமிழருக்கு பதிவாகும்.
திரும்ப சரிபார்க்க எந்த வழியும் கிடையாது.
அதனால்தான் வளர்ந்த நாடுகள் போல வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர பல்வேறு கட்சிகள் கோருகின்றன.
. . . . . . . .

கே: சீமான் மலையாளி என்கிறார்களே?

ப: சீமான் தமிழர்தான்.
அவர் பிறந்த நாடார் குலம் கேரளாவிலும் உள்ளதால் அதைவைத்து குழப்புகிறார்கள்.
கேரளாவில் பாதி தமிழர் மண்.
அதில் வாழும் நாடார்கள் உட்பட பல்வேறு தமிழ் பேசும் சாதிகள் தமிழர்களே!
பிரபாகரனே மலையாளிதான் என்று கதைகட்டி அவரது உறவினர்கள் என்று சில மலையாளிகளைப் பேட்டி எடுத்து வடயிந்திய ஊடகங்கள் வெளியிட்டன.
ஆனால் பிரபாகரன் குடும்பம் வல்வெட்டித்துறையில் பாரம்பரியமான பிரபலமான குடும்பம் ஆகும்.
சீமான் மலையாளி என்பதும் அதுபோல எந்த அடிப்படையும் இல்லாத கட்டுக்கதை.
. . . . . . .

கே: சீமான் தமிழர் என்ற ஒரு தகுதி போதுமா?

ப: போதாதுதான்.
சீமான் மாநில உரிமைகள் மூலம் முன்வைக்கும் திட்டங்களும் தீர்வுகளும் இதுவரை எந்த முதலமைச்சர் வேட்பாளரும் முன்வைத்த ஆட்சிமுறையை விட சிறப்பாக உள்ளன.
யார் யாருக்கோ வாய்ப்பு கொடுத்துவிட்டோம்.
சீமானுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பதில் என்ன தவறு?
வாய்ப்பு கொடுக்குமுன்னே குற்றம்சாட்டுவது நிராகரிப்பது எந்தவகையில் நியாயம்?
. . . . . . . .

கே: சீமான் எந்த குறையுமே இல்லாதவர் என்கிறீர்களா?

ப: இல்லை. குறைகளை விட நிறைகள் அதிகம் எனலாம்.
குறையே இல்லாத சொக்கத் தங்கம்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்றால் அப்படி ஒருவர் வரவே போவதில்லை.
. . . . . . . . . . 

கே: சீமான் மாவீரரான ஒரு ஈழப்போராளியின் மனைவிக்கு வாழ்க்கை கொடுப்பதாக இருந்ததே!
பிறகு ஏன் வசதியான வீட்டில் பெண் எடுத்தார்?

ப: சீமான் ஒரு ஈழத்தமிழரை மறுமணம் செய்வதற்கு பேச்சு நடந்தது. ஆனால் அந்த பெண் மறுத்துவிட்டார்.
பேச்சு ஆரம்பத்திலேயே முறிந்துவிட்டது.
இதேபோல விஜயலட்சுமி என்ற பெண்ணும் சீமான் மீது புகார் கொடுத்து அது ஆதாரம் எதுவுமில்லாமல் தள்ளுபடி ஆனது.
சீமான் மீது அவதூறு சுமத்தவே இவை பெரிதாக்கப்படுகின்றன.
. . . . . . . . . . .

கே: சீமான் தனித்தமிழ்நாடு விடுதலைப் போராட்டம் தொடங்கினால் ஆதரிப்பாரா?

ப: சீமான்தான் இந்தியாவிற்கு நாம் கொடுக்கும் கடைசி வாய்ப்பு.
சீமான் பதவியில் அமர்ந்து ஜனநாயக வழியில் காவிரி பங்கீடு மறுப்பு , மீனவர் கொலை, பேரழிவு திட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக போராடுவார்.
இந்தியாவில் ஜனநாயகம் பெரும்பாலும் நசுக்கவே படும்.
சீமான் முன்வைக்கும் மாநில உரிமைகள் மூலமான தீர்வு எடுபடாத பிறகு மக்கள் புலிகள் வழியில் ஆயுதம் தாங்கி விடுதலைக்காகப் போராடுவார்கள்.
ஈழத்தில் தந்தை செல்வா போல தமிழகத்திற்கு சீமான் அமையவுள்ளார்.
அவ்வளவுதான்.

(நான் நாம்தமிழர் கட்சியில் இல்லை. ஆதரவாளன் மட்டுமே)