Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

Thursday, 30 January 2020

இங்கு திராவிடம் விற்கப்படும்

இங்கு திராவிடம் விற்கப்படும்

தமிழகத்தின் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க விடம் பணம் பெற்ற தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.
இதற்கு முன்னோடியும் ஈ.வே.ரா தான்.

  திராவிட கட்சி இரண்டாகி அதன் ஒரு பிரிவை ஜெயலலிதா கைப்பற்றி 1991 இல் ஆட்சியமைக்கிறார்.

தி.மு.க வை சமாளிக்க திராவிட கூடாரத்தில் இருந்து யாரையாவது தன் பக்கம் இழுக்க முடியுமா என்று பார்க்கிறார்.

பணம் தருவதற்கும் தயாராக இருந்தார்.

அதெப்படி நடக்கும்?
கேவலம் பணத்துக்காக இத்தனைக் காலம் யாரை எதிர்த்தார்களோ அவர்களுடனே வந்து ஒட்டிக் கொள்வார்கள்?
அந்த அளவுக்கு மானம் கெட்ட யாரும் உண்டா?
என்று அனைவரும் நினைத்தபோது வீரமணி போய் ஜெயலலிதாவுடன் சேர்ந்துகொண்டார். வெளிப்படையாக 5 லட்சம் ரூபாய் பணமும் வாங்கிக் கொண்டார்.

இது பற்றி கேள்வி எழுந்தபோது விடுதலை (03.10.1991) இதழில்
அது எனக்காக வாங்கவில்லை,
"சுயமரியாதை இயக்க பிரச்சார நிறுவனத்தின்" வளர்ச்சிக்காக வாங்கிய நிதி என்று விளக்கமளித்தார்.
(நிறுவனத்தின் பெயரைக் கவனத்தீர்களா ராமகிருஷ்ண சந்திரபோஸ் மாதிரி)

அதோடு நில்லாமல் பெரியாரும் பார்ப்பன முதலாளிகளிடம் பணம் பெற்றுள்ளார் என்பதையும் அதனால் கொள்கை தவறிவிட்டதாக அர்த்தமில்லை என்றும் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

(அன்று தமிழ்தேசியத்தின் குரலாக ஒலித்த அறிஞர் குணா அவர்களை கருத்தியல் ரீதியில் எதிர்கொள்ள இயலாமல் ஜெயலலிதாவிடம் சொல்லி தடா வில் உள்ளே தள்ளியதும் வீரமணிதான்)



Monday, 26 December 2016

எல்லையில் நம் ராணுவ வீரர்கள்....

எல்லையில் நம் ராணுவ வீரர்கள்....

ஆமாப்பா 10 நாளைக்கு ஒரு ஹிந்திய அரசின் இராணுவ வீரன் கொல்லப்படுகிறான்.

நீங்களும் அதேமாதிரி சாவுங்க.

2011 ல் 30 பேர்
2012 ல் 17 பேர்
2013 ல் 60 பேர்
2014 ல் 51 பேர்
2015 ல் 41 பேர்
2016 செப்டம்பர் வரை 64 பேர்

என சராசரியாக 10 நாட்களுக்கு ஒரு இராணுவ வீரனை பாகிஸ்தான் கொல்கிறது.

அதுக்கே ஒண்ணும் கிழிக்காத ஹிந்தியா

வங்கி வாசலில் சாவும் மக்களை திரும்பியா பாக்கும்?

இவனுகளால முடிஞ்சது கிரிக்கெட்ல வீரத்த காட்றது மட்டும்தான்.

(>.<)

Monday, 14 November 2016

என்னாங்கடா மோடி சாதனை?!

என்னாங்கடா மோடி சாதனை?!

நானெல்லாம் பணமே இல்லாத நாடா தமிழர்நாடு இருக்கணும்னு கனவு கண்டவன்.

அத்தியாவசியக் கொலைகள்
vaettoli.blogspot.co.id/2015/11/blog-post_86.html?m=1

பணமில்லாத நாடு
vaettoli.blogspot.co.id/2015/10/blog-post_27.html?m=1

மோடி மண்டையன் உண்மையிலேயே கறுப்பு பணத்த ஒழிக்கணும்னு நெனச்சா ஒரே நாள்ல முடியும்.

1 - Sonia Gandhi (568000)​
2 - A Raja(7800)​
3 - Rahul Gandhi (158000)​
4 - Sharad Pawar (82000)
5 - P. Chidambaram (15040)​
6 - Digvijay Singh (28900)
7 - Ahmed Patel (9000)
8 - Jay Lalita (15000)​
9 - Harish Rawat (75000)
10 - Kapil Sibbal (28000)

விக்கிலீக்ஸ் வெளியிட்ட இந்த பத்துபேர புடிச்சு உண்மை கண்டறியும் சோதனை நடத்தி இவங்க சுவிஸ் வங்கில பணம் வச்சிருக்குறது உண்மையானு கண்டுபிடிக்கணும்.

இருக்குனா அந்த பணத்த அவங்களால மட்டும்தான் எடுக்கமுடியும்.

அதனால "ஐயா ராசா அந்த பணத்த எடுத்து நாட்டுக்கு குடுத்துருமா" னு கெஞ்சணும்.

அதுக்கு மாட்டேன்னு சொன்னா அவங்களுக்கு உள்நாட்டுல இருக்குற சொத்துகளையாவது கையகப்படுத்தணும்.
இதுல எதாவது ஒருத்தர் பணத்த நாட்டுக்கு கொடுத்தா கூட பெரிய மாற்றம் ஏற்படும்.

இதுக்கு முன்னால RBI கவன்னரா இருந்த தமிழன் ரகுராம் ராஜன் பணமுதலைகளுக்கு எதிரா உருப்படியான நடவடிக்கை எத்தனை எடுத்தான்?
அவன கழுத்த பிடிச்சு வெளிய தள்ளிட்டு இப்ப என்னடா படம் ஓட்டுறீங்க?

அத விட்டுட்டு 500, 1000 பணத்தாள ஒழிக்கிறானாம்.

எந்த பணக்காரன் பணத்தாளா கறுப்பு வைச்சிருக்கான்.

பணமா வைச்சிருந்தா மறைக்கிறது பெரும்பாடு.
வைரமாவோ, தங்கமாவோ மாத்தி வச்சிக்குவானுக.
கைச்செலவுக்கு கொஞ்சம் பணம் வச்சிருப்பான்.
அது வேணா வெளிய வரும்.

அதயும் சொந்தக்காரன் தெரிஞ்சவனுக்கு ஒரு ஒரு லட்சமா கடன் மாதிரி கொடுத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டு மாத்திதர சொல்லிருவான்.
அவனுகளும் கொஞ்சம் கமிசன் எடுத்துகிட்டு மாத்தி கொடுத்துருவான்.

ஆக பாதிக்கப்படப் போறது சராசரி மக்கள்தான்.

கள்ளப் பணத்தாள் அதிகம் புழங்குது.
அத தடுக்க துப்பில்லாம வேற வழியில்லாம இந்த நடவடிக்கை.

கறுப்பு பணத்துக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்னுதா புரியல.

Friday, 3 June 2016

570 கோடி கண்டெய்னர்களும், ஜெயா, மோடி & லக்கானியின் கூட்டும், நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளும்

570 கோடி கண்டெய்னர்களுக்கு பின்னால்
ஜெயா, மோடி & லக்கானியின் கூட்டும்,
நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளும்

விடை தெரியாத கேள்விகள்..

14.5.2016 சனிக்கிழமை நள்ளிரவு ஒரு மணிக்கு செங்கப்பள்ளி அருகே மூன்று கண்டெய்னர்கள் பணத்துடன் பிடிபடுகின்றன!

சரியாக 18 மணி நேரம் கழித்து ஸ்டேட் பேங்க் அது தங்கள் பணம் என்று சொந்தம் கொண்டாடுகிறது!
அதற்கான சில ஆவணங்களையும் அது சமர்ப்பிக்கிறது!

அந்த ஆவணத்திலிருக்கும் தேதி கன்டெய்னர் லாரியின் எண் உட்பட பல விஷயங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன!

ரிசர்வ் வங்கி, தனக்கு இந்தப் பணப் பரிமாற்றம் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று கையை விரிக்கிறது!

ஆனால் நாட்டின் நிதி அமைச்சர் இரண்டு நாள் கழித்து அது ஸ்டேட் வங்கியின் பணம்தான் என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார்!

அவ்வளவுதான்! அறிவு ஜீவிகள் எல்லோரும் இதைப்பற்றிக் கேள்வி கேட்பவர்களை எள்ளி நகையாடுகிறார்கள்!

வழக்கம்போல் கேள்வி கேட்பவன் முட்டாள் என்றும்,
வேறு வேலை இல்லாதவன் என்றும் ஒருமனதாகத் தீர்மானிக்கப் படுகிறது! சுபம்!

அப்படி முத்திரை குத்தப்பட்ட ஒரு முட்டாளின் சந்தேகங்களில் மிகச் சில!

1. செங்கப்பள்ளி, கண்டெய்னர் புறப்பட்டதாகச் சொல்லப்படும் கோவையிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது!
லாரிகள் ஒரு மணிக்கு செங்கப்பள்ளி வருகின்றது என்றால்,
கோவையிலிருந்து அதிகபட்சம் நள்ளிரவு 12 மணிக்குப் புறப்பட்டிருக்கவேண்டும்!
கோவையில் வங்கிப் பெட்டகம் நள்ளிரவு வரை திறந்திருக்குமா?
அப்படித் திறந்திருக்க ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறதா?

2. விடிந்தால் சனிக்கிழமை, அடுத்தநாள் ஞாயிறு, இரண்டு நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை!
அந்தக் கண்டெய்னர்கள் எந்த நாளில் அந்தப் பணத்தை எந்த வங்கியில் கொண்டுபோய் ஒப்படைக்கும்?
அதற்கும் ஆர் பி ஐ அனுமதி அளித்திருக்கிறதா?

3. வங்கியிலிருந்து பணம் எடுத்துச் செல்லவேண்டிய வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகள், நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன!
அதன்படி அந்த வண்டிகளில் GPS பொருத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டனவா?

4. அந்த பரிமாற்றத்துக்கான இன்ஸ்யூரன்ஸ் ஆவணங்கள் எங்கே?

5. இவ்வளவு பெரிய தொகை பரிமாற்றம் பற்றி நெறிமுறைகளின்படி உள்ளூர் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதா?

6. வழியிலிருக்கும் டோல்கேட்டைத் தவிர்ப்பதற்காக அந்த வண்டிகள் மாற்றுப் பாதையில் சென்றதாக அறிவித்திருக்கிறார்கள்!
அந்த மாற்றுப்பாதை, ஆள் நடமாட்டமற்ற வயல்வெளிகளிடையே சுமார் பத்து கிலோமீட்டர் வரை சுற்றிச் செல்ல வேண்டும்.
ஒரு பொதுத்துறை வங்கியின் 570 கோடி ரூபாயை எடுத்துச் செல்லும் வண்டிகள் ஒரு 350 ரூபாய் சுங்கவரி செலுத்தப் பயந்துகொண்டு ஆள் நடமாட்டமில்லாத பாதையில் செல்ல முடிவெடுத்தது எந்தவகையான சிக்கன நடவடிக்கை
அல்லது முட்டாள்தனமான ரிஸ்க்?
இதை யார் அனுமதித்தது?

7. தேர்தல் அதிகாரிகளை அடையாளம் தெரியாமல் கொள்ளையர்கள் என்று நினைத்து நிற்காமல் விரைந்துபோனதாகச் சொல்லியிருக்கும் வண்டியின் பாதுகாவலர்களுக்கு சக போலீஸ்காரர்களை அடையாளம் தெரியவில்லை என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும்,
அவர்களின் ஆயுதங்களும் பயந்து பதுங்கிக்கொண்டனவா?

8. கொள்ளையர்களுக்கு பயந்து செல்பவர்கள் ஆள்நடமாட்டமில்லாத பாதையைத் தேர்ந்தெடுப்பார்களா,
நடமாட்டம் மிக்க ஹைவேயைத் தேர்ந்தெடுப்பார்களா?

9. விதிமுறைப்படி GPS கண்காணிப்பில் இருக்கும் வாகனங்கள் மாற்றுப்பாதையை எந்த தைரியத்தில் தேர்ந்தெடுத்தன?
அது எப்படி கண்காணிப்பில் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது?

10. தகவல் பரிமாற்றத்துக்கு இவ்வளவு வழிமுறைகள் இருக்கும் காலகட்டத்தில் 18 மணிநேரம் எதற்காகத் தேவைப்பட்டது?
தேவையான ஆவணங்களைத் தயாரிக்கவா?

11. ரிசர்வ் வங்கி மண்டல அதிகாரி இந்தப் பரிமாற்றம் தங்களுக்குத் தெரியாமல் நடந்ததாகச் சொன்ன காரணம் என்ன?

12. இவ்வளவு பெரிய தொகை ஆர்.பி ஐக்குத் தெரியாமலே பரிமாற்றம் செய்யப்பட்டதா?
அப்படியெனில் அதற்கு அனுமதி அளித்தவர் யார்?

13. எல்லா விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டு இவ்வளவு அலட்சியமாக இந்தத் தொகைப் பரிமாற்றம் செய்யப்பட்டது எவ்வளவு பெரிய குற்றம் என்பது அதிகாரிகளுக்குத் தெரியாதா?
தாங்கள் பணிநீக்கம், கைது, செய்யப்படுமளவு ஒரு பெரிய ரிஸ்க் எடுக்க அவர்களைத் தூண்டியது யார், அல்லது எது?

14. சாதாரண நேரத்திலேயே கடும் விதிமுறைகளுக்கு உட்பட்ட பணப் பரிவர்த்தனை தேர்தல்கால விதிமுறைகள் கடுமையாக அமலில் இருக்கும்போது தீவிரமாக்கப்படுமா, அலட்சியப்படுத்தப்படுமா?

15. ஒரு சாதாரண தனி மனிதன் 50000 ரூபாய் கொண்டுசெல்லவே முறையான ஆவணங்கள் தேவைப்படும் தேர்தல் காலத்தில்,
மாநிலம் விட்டு மாநிலம் நள்ளிரவில் செல்லும் வங்கிப்பணம் ஆவணங்களே இல்லாமல் நள்ளிரவில் அனுப்பப்படுமா?

16. இத்தனை விதி மீறல்களோடு விடுமுறை நாளில் பணத்தை எடுத்துச் செல்ல அனுமதி அளித்ததற்கு எந்தப் புண்ணியவான் பொறுப்பேற்றுக்கொண்டார்?

17. இந்திய நிதி அமைச்சர் இதில் எல்லோருக்கும் முந்திக்கொண்டு துள்ளிக் குதிக்கும்போது, சம்பந்தப்பட்ட வங்கி, ஆர் பி ஐ உயர் அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை என்ன எடுத்திருக்கிறார்கள்?

18. இந்த அப்பட்டமான விதிமீறல்களை மத்திய நிதி அமைச்சர் அங்கீகரிக்கிறாரா?

19. 570 கோடி ரூபாய்க்கு மூன்று கண்டெய்னர் தேவையா?
அப்படியானால் அதன் டினாமிநேஷன் அனுப்பிய பெட்டகத்தின் லெட்ஜர்களில் இருந்து கொடுக்கப்பட்டதா?

20. உள்ளூர் வங்கிகளுக்கு இடையே நடக்கும் பரிவர்த்தனையின்போதே சீல் செய்து அனுப்பப்படுகையில் இத்தனை கோடி வங்கிப்பணம் அனுப்பப்பட்ட வாகனங்கள் ஒரு சாதாரணப் பூட்டால்தான் பூட்டப்படுமா?

இவை வெறும் அடிப்படைக்கேள்விகள்!

இவற்றுக்கான பதில்கிடைக்குமானால் இன்னும் சிலசந்தேகங்களைக் கேட்போம்!
நாம் வெறும் கேள்வி கேட்கும் முட்டாள்கள்தானே!

கடைசியாக ஒரு சின்ன வேண்டுகோள்!

அறிவுசார் பொதுத்துறை வங்கி அதிகாரிகளே,
அந்தப் பணம் யாருடையதென்று அரசியல்வியாதிகள் அவர்களுக்குள் அடித்துக்கொள்ளட்டும்!
அவர்கள் வீசும் எலும்புகள் உங்கள் மாண்பைக் குலைக்காது காத்துக்கொள்ளுங்கள்!

N.B:
வங்கிகளிடையேயான பணபரிமாற்றத்துக்கான சில RBI விதிமுறைகள்:
1. In case of any movements of large amounts of cash report to the superiors and the nearest police station/Police Control Room.

2. While organizing movement of cash between branches, (currency chest or other branches) planning should be done by bank officials in consultation with security/police officers.

3. Avoid taxies or other hired vehicles and use own transport as far as possible, with facilities like proper cavity and it should be properly camouflaged.

4. The armed guards/police guards accompanying the treasure should always be in ready position and should not be taken by surprise.

5. It may be ensure that cash cages are fitted with grilles/wire-mesh nets with automatic locks.

6. Security Van Layout: Typical van layout should conform to the following standards:
• Make : LMV (Light Motor Vehicle) or any other vehicle of similar type. • Van should have 3 independent compartments.
The compartment for storing cash to be physically separated and locked from the other compartments.

7. Security: Vehicles should adhere to the following minimum security guidelines to ensure safe passage of cash and other valuables:
• Monitoring: Each van should be monitored at all time through a communications protocol.
The van should have a GPS installed and also the controlling technology for immobilizing the van whenever required.
• Cash Security: The cash compartment must be specially reinforced with steel, with only one door and should be inaccessible from outside the van unless operated internally by the custodians through levers controls.
•Each of the cash boxes must be secured to the floor with separate chains and should have 2 padlocks that can be opened or locked only by using separate keys available with different custodians.
•Cash for each bank should be carried in a separate box with the name of the bank written on it.

8.Incident security:
Vans should be equipped with hooters, fire extinguishers etc for quick reaction in case of an attack.

9. Armed security guards/Gunmen: One or more armed guard depending on the amount of cash carried and as per individual company’s insurance guidelines/ client contract.

10.Minimum cash carrying guideline:
Security vans should compulsorily be deployed for carrying cash of value more than Rs. 20 lakhs per trip.

11. Maximum cash carrying guideline:
Security vans should not carry more than Rs. 5 crores per trip.
Size of the crew for the security van
• Driver – 1
• Armed Security guards – 1 or 2 depending on cash carrying limit.
• ATM Officer / Custodians – 2 Weapons
• Single/double barrel guns to be used under valid licenses.

(வாட்சப் செய்தி)

Tuesday, 8 December 2015

ஹிந்தியாவுக்கு அண்டைநாடாவோம்

ஹிந்தியாவுக்கு அண்டைநாடாவோம்

தமிழகம் ஹிந்தியாவுக்கு கட்டும் வரி  ஆண்டுக்கு
85,000 கோடி.

வெள்ள நிவாரணத்திற்கு தமிழகம் 5,000 கோடி கேட்டது;
ஆனால் ஹிந்தியா தந்த வெள்ள நிவாரண நிதி
வெறும் 1000 கோடி.
இதுவே,
ஹிந்திய அரசு நேபாளத்திற்கு வழங்கிய உதவி
14,000கோடி.

ஹிந்திய அரசு பூட்டானுக்கு வழங்கிய உதவி
8,000கோடி.

ஹிந்திய அரசு இலங்கைக்கு வழங்கிய உதவி
10,000கோடி.

இந்திய அரசு ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிய உதவி
50,000 கோடிக்கும் மேல்.

எங்கோ இருக்கும் மங்கோலியாவுக்கு கடந்த மாதம் ஹிஅரசு வழங்கியது
6500 கோடி.

இதுக்குதான் நாமளும் அண்டைநாடாகணும்னு சொல்றது

(Bala Chandran அவர்தம் பதிவிலிருந்து)

Tuesday, 27 October 2015

பணமில்லாத நாடு

பணமில்லாமல் ஒரு நாடு இயங்கமுடியுமா என்று பலரும் கேட்கின்றனர்?

முடியும்.
இது prepaid மற்றும் post paid க்கும் இடையேயான வேறுபாடு போன்றதுதான்.

ஏன். தமிழகத்திலேயே பணமில்லாமல் 'ஆரோவில்' (Auroville) என்ற நகரம் 50,000 மக்களுடன் நலலபடியாக இயங்கிவருகிறது.

இதை அறிந்ததும் என்னுடைய 'பணமில்லாத நாடு' சிந்தனை வெற்றிபெறும் என்ற நம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளது.

Sunday, 12 July 2015

தேவையற்ற தங்கம் ஒழிக

தேவையற்ற தங்கம் ஒழிக

தமிழர் நாடு தமிழர்களின் கட்டுப்பாட்டில் வந்ததும்

போரில் நம்மைத் தோற்கடிப்பது முடியாது என்று உணர்ந்தபிறகு

சுற்றியிருக்கும் நாடுகள் நம்மைத் தனிமைப்படுத்துவார்கள்
பொருளாதாரத் தடைவிதிப்பார்கள்

உணவுக்கு நம் தாய்மண் இருக்கிறது
பொருளாதாரத்திற்கு என்ன செய்வது?

அதற்குதான் காலம் காலமாக நாம் சேர்த்துவைத்திருக்கும் தங்கத்தை 80% தமிழ் அரசிடம் ஒப்படைக்கவேண்டும்

அதை வெளியே விற்று நமக்கு தேவையான ஆயுதங்களையும் போர்தளவாடங்களையும் மற்றும் வெளிநாட்டிலிருந்து எதையெல்லாம் கொண்டுவரவேண்டுமோ அவற்றையெல்லாம் கொண்டுவரவேண்டும்

ஆப்பிரிக்க நாடுகளில் ஆயுதக் குழுக்கள் வைரத்தை தமது பொருளாதாரத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்
(blood diamond, அயன் போன்ற படங்களில் காட்டியிருப்பார்கள்)

நம்மிடம் இருப்பது தங்கம்தான்.

தமிழர்கள் தங்கத்தின் மீதுள்ள ஆசையை துறக்கவேண்டும்.
ஐரோப்பிய நாடுகளில் தங்க மோகம் கிடையாது.
அங்கே அழகுக்கென்று வேறு பல பொருட்கள் பயன்படுகின்றன.

இங்கேயோ தங்க மோகம் தலைவிரித்தாடுகிறது.
ஒரு பெண்ணின் திருமணத்திற்கு நகை சேர்க்க பெற்றோர்கள் முழுவாழ்க்கையையும் உழைத்தே தொலைக்கவேண்டியுள்ளது.

தங்கம் அணிவது அழகு என்ற மனப்பான்மை மாறவேண்டும்.
தங்கம் வைத்திருப்பது சொத்து என்ற மனப்பான்மையும் மாறவேண்டும்.

தங்கத்தின் விலை கூடுகிறதே தவிர
தங்கத்தை பெரும்பொருள் கொடுத்து வாங்கி அதை அணிந்து சிறிது காலத்திற்குப் பிறகு விற்பவருக்கு நட்டம்தான் ஏற்படுகிறது.
பணத்தை முதலீடு செய்து பெருக்க தங்கம் வாங்குவதைவிடவும் எத்தனையோ உபயோகமான வழிகள் உள்ளன.

தமிழ்மண்ணில் தங்கத்திற்கு தனிமதிப்பு இருக்கக்கூடாது.
ஏன் உலகில் முழுவதுமே தங்கம் வைரம் போன்றவை ஒழிக்கப்படவேண்டியவை.

தங்கத்தை எடுக்கிறோம் என்ற பெயரில் நிலத்தைத் தோண்டிக்கொண்டே போகிறோம்.
தங்கம் கிடைப்பது அரிதாகிக்கொண்டே போகிறது ஆனாலும் அதற்கான தேவை இருக்கிறது
இதன் காரணமாக அதன் விலை உயர்ந்துகொண்டேபோகிறது.
ஆனால் தங்கச்சுரங்கங்களும் வைரச்சுரங்கங்களும் பல கிலோமீட்டர் ஆழத்திற்கு தோண்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

அந்த மண்ணை வேளாண்மைக்கும் குடியிருக்கவும் இன்னும் எத்தனையோ நன்மைகளுக்கும் பயன்படுத்தலாம்.

தமிழர்கள் வாழும்பகுதியான கோலார் பகுதி கன்னடரிடம் பறிபோய் இருத்த தங்கம் அத்தனையும் தீர்ந்தபிறகு அப்படியே கைவிடப்பட்டுள்ளது.
கோலார் தமிழர்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மண் பாழானதுதான் மிச்சம்.

இதேபோல இயற்கை வளங்கள் அனைத்தும் அப்பகுதி மக்களுக்கு நன்மையாக அமையவிடாமல் பெருமுதலாளிகள் கொள்ளையடித்து தங்கள் வங்கிக்கணக்கில் அளவுக்கதிகமாக பணமாக மாற்றி தூங்கவைத்துள்ளனர்.

மண்ணைத் தோண்டவேண்டும் என்பதற்காக மக்கள் விரப்படுகிறார்கள்.
ஏமாற்றப்படுகிறார்கள்.
அடக்குமுறையை எதிர்கொள்கிறார்கள், போரை எதிர்கொள்கிறார்கள், பொருளாதார சுற்றிவளைப்பை எதிர்கொள்கிறார்கள்.
உயிரிழக்கிறார்கள், உடமைகளை இழக்கிறார்கள்.

இறுதியில் அரைவயிறு கஞ்சிக்கும் அற்ப கூலிக்கும் சொந்தமண்ணைத் தோண்டும் தொழிலாளியாக ஆகி கடினமாக வேலைவாங்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான செயல்களில் புகுத்தப்பட்டு உடல் வலு இழந்து உயிரைவிடுகிறார்கள்.

இதுவரை உலகில் தோண்டியெடுக்கப்பட்ட தங்கள் எகிப்தில் இருக்கும் பிரமீடு அளவு கூட கிடையாது.
ஆனால் அதற்காகப் பாழாக்கப்பட்ட மண் பல ஆயிரம் பிரமீடுகள் அளவு.

தங்கம் உடலுக்கு பெரிய அழகோ நன்மையோ அளிப்பதில்லை.

தங்கம் ஒரு மாயை அதை ஒழிப்போம்.
தங்கம் ஒரு பாவப்பொருள் அதை வெறுப்போம்.
மண்ணை அழித்து அழகைப் பெறும் முட்டாள்களாக நாம் இருக்கவேண்டாம்.

உலகம் திருந்தும் முன் நாம் திருந்துவோம்.
நம் மண்ணை நாம் பாதுகாக்க தங்கத்தை பயன்படுத்துவோம்.
தங்கம் அணியத் தடைவிதிப்போம்.

ஒரு நாட்டின் உண்மையான செல்வம் என்பது அதன் இயற்கைவளங்கள் ஆகும்.
ஒரு நாட்டின் உண்மையான ஆடம்பரம் என்பது அதனுடைய மக்களின் உடல் ஆரோக்கியம் ஆகும்.

நம்மைப் பார்த்து உலகம் திருந்தும்.
தங்கம் வைரம் போன்றவை ஒழியும்.
மண் காப்பாற்றப்படும்.
அதன் மீது வாழும் மக்கள் காப்பாற்றப்படுவர்.
சுரங்கத் தோண்டும் அடிமைத் தொழிலாளர்களின் உயிர்கள் காப்பாற்றப்படும்.
ஏழை பணக்காரன் தோற்ற வேறுபாடு குறையும்.
தங்கம் அணிவது கைவிடப்பட்டால் தங்கம் ஒரு வெறும் உலோகமே என்பது புரியும்.
அதன் தேவை குறையும்.
விலை குறையும்.
இறுதியில் அது ஒழிந்துபோகும்.

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .

பணம் ஒழிக்கப்பட்ட தமிழ்க்குடியரசு
https://m.facebook.com/photo.php?fbid=373157656121227&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13&__tn__=E