Showing posts with label தி.க. Show all posts
Showing posts with label தி.க. Show all posts

Thursday, 30 January 2020

இங்கு திராவிடம் விற்கப்படும்

இங்கு திராவிடம் விற்கப்படும்

தமிழகத்தின் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க விடம் பணம் பெற்ற தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.
இதற்கு முன்னோடியும் ஈ.வே.ரா தான்.

  திராவிட கட்சி இரண்டாகி அதன் ஒரு பிரிவை ஜெயலலிதா கைப்பற்றி 1991 இல் ஆட்சியமைக்கிறார்.

தி.மு.க வை சமாளிக்க திராவிட கூடாரத்தில் இருந்து யாரையாவது தன் பக்கம் இழுக்க முடியுமா என்று பார்க்கிறார்.

பணம் தருவதற்கும் தயாராக இருந்தார்.

அதெப்படி நடக்கும்?
கேவலம் பணத்துக்காக இத்தனைக் காலம் யாரை எதிர்த்தார்களோ அவர்களுடனே வந்து ஒட்டிக் கொள்வார்கள்?
அந்த அளவுக்கு மானம் கெட்ட யாரும் உண்டா?
என்று அனைவரும் நினைத்தபோது வீரமணி போய் ஜெயலலிதாவுடன் சேர்ந்துகொண்டார். வெளிப்படையாக 5 லட்சம் ரூபாய் பணமும் வாங்கிக் கொண்டார்.

இது பற்றி கேள்வி எழுந்தபோது விடுதலை (03.10.1991) இதழில்
அது எனக்காக வாங்கவில்லை,
"சுயமரியாதை இயக்க பிரச்சார நிறுவனத்தின்" வளர்ச்சிக்காக வாங்கிய நிதி என்று விளக்கமளித்தார்.
(நிறுவனத்தின் பெயரைக் கவனத்தீர்களா ராமகிருஷ்ண சந்திரபோஸ் மாதிரி)

அதோடு நில்லாமல் பெரியாரும் பார்ப்பன முதலாளிகளிடம் பணம் பெற்றுள்ளார் என்பதையும் அதனால் கொள்கை தவறிவிட்டதாக அர்த்தமில்லை என்றும் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

(அன்று தமிழ்தேசியத்தின் குரலாக ஒலித்த அறிஞர் குணா அவர்களை கருத்தியல் ரீதியில் எதிர்கொள்ள இயலாமல் ஜெயலலிதாவிடம் சொல்லி தடா வில் உள்ளே தள்ளியதும் வீரமணிதான்)



Saturday, 8 September 2018

பேரறிவாளனும் திராவிடமும்

பேரறிவாளனும் திராவிடமும்

கேள்வி: பெரியாரிய கொள்கைகளைப் பின்பற்றும் பேரறிவாளனின் விடுதலைக்கு திராவிடர் கழகம் செய்த பங்களிப்பு என்ன?

அற்புதம் அம்மாள்: அதுவொரு கொடுமை.
முதல் துரோகமே பெரியார் திடல்லதான் கெடச்சது.
பெரியார் சிலைகிட்ட இருந்துதான் என் மகன சிபிஐ கூட்டிட்டுப் போனாங்க.
ஆனா, அதப்பத்தி விடுதலை பத்திரிக்கைல ஒரு அறிக்கையோ, செய்தியோ வரல.
வந்திருந்தா, சிபிஐ நடவடிக்கை வேறுமாதிரி இருந்திருக்கும்ன்னு நான் இன்னைக்கும் நம்புறேன்.
ஏன்னா அறிவுக்காக குரல் கொடுக்க யாருமே இல்லன்னுதான் அவன் மேல நிறைய குற்றம் சுமத்துனாங்க.

கேள்வி: திமுகவாவது உங்க மகனின் விடுதலைக்கு ஏதாவது செய்ததா?

அற்புதமம்மாள்: கலைஞர் கருணாநிதி முதலமைச்சரா இருந்தப்ப நெடுமாறன் ஐயா தலைமைல ஆயிரக்கணக்கான பேர் திரண்டு ஒரு கோரிக்கை மனு வச்சோம்.
அப்ப நாலு பேருக்கு மரண தண்டனை இருந்தது. குழந்தைகள், பெண்கள்ன்னு எல்லா அமைப்புகளும் திரண்டு போனோம்.
தண்டனைக் குறைப்பு வழங்குங்க. உங்களுக்கு அதிகாரம் இருக்குன்னு கோரிக்கை மனு கொடுத்தோம்.
நளினிக்கு தண்டனைக் குறைப்பு செஞ்சாரு.
அறிவுக்கு பண்ணுவாருன்னுதான் நெடுமாறன் ஐயா உட்பட எல்லாரும் எதிர்பார்த்தோம்.
ஆனா, செய்யல.
நளினிக்கும் தண்டனைக்குறைப்பு செஞ்சாங்களே ஒழிய விடுதலை செய்யல.
அவரது ஆட்சியில செம்மொழி மாநாடு, அண்ணா பிறந்த நாள்ன்னு எத்தனையோ பேர விடுதலை செஞ்சாங்க.
அப்பகூட நளினிய விடுதலை செய்யல.

நன்றி: சீனி. மாணிக்கவாசகம்
(முகநூல் பதிவு, 31.05.16)
தீ இதழ் (மே 2016)

----------------------

கேள்வி: ஏன் அரசியல் கட்சிகள் பகிர்ந்துகொள்ளவில்லையா?

அற்புதம் அம்மாள்:
சில விஷயங்களை எல்லாம் பேச வேணாம்னு நெனைக்கிறேன்பா.
அவ்வளவு துரோகங்கள் இருக்கு அறிவு கதையில.
ரெண்டு உதாரணங்களை மட்டும் சொல்றேன்.
எந்த இயக்கத்தை எங்க உயிரா நெனைச்சோமோ, அந்தத் தி.க. என்ன பண்ணுச்சு தெரியுமா?
அறிவு கைதுசெய்யப்பட்ட உடனே, இயக்கத்துக்கும் அறிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு அறிவிச்சுச்சு.
சீக்கிரமே, பகுத்தறிவுக் கழக மாவட்டப் பொறுப்பாளரா இருந்த என்னோட கணவர் குயில்தாசனையும் ஒதுக்குச்சு.
அவசர நிலைக் காலகட்டத்துல, கலைஞர் அரசு கவிழ்க்கப்பட்டப்போ, எதிர்த்துப் போராட நிதி வசூலிச்சுக்கிட்டு, ஊரையே திரட்டிக்கிட்டுப்போய்,
“தலைவா! நாங்க இருக்கோம் உன்கூட”னு நின்ன குடும்பம் எங்களோடது.
ஆனா, அறிவு கைதுசெய்யப்பட்ட பின்னாடி இந்த 23 வருஷத்துல ஒருமுறைகூட அவரைச் சந்திக்க முடியலை.
இதையெல்லாம் குற்றச்சாட்டா சொல்லலை.
வேதனையாதான் சொல்றேன்.
இப்படி எவ்வளவோ கதைகளைச் சொல்லலாம்.
ஆனாலும், நெடுமாறன், நல்லகண்ணு, தியாகு, வைகோ, சீமான் இவங்கல்லாம் பெரிய ஆதரவைத் தந்திருக்காங்க.
எல்லாத்துக்கும் மேல இப்போ முதல்வர் அம்மா என் பிள்ளையை மீட்டுத்தர்றேன்னு சொல்லிட்டாங்களே…

தி ஹிந்து (26.02.2014)

Tuesday, 21 March 2017

இசுலாமியர் எங்களுக்கு எதிரி, இசுலாமியர் மலத்துக்கு சமம், இசுலாமியப் பெண்கள் உழைக்காதவர்கள் _ ஈ.வே.ரா

இசுலாமியர் எங்களுக்கு எதிரி,
இசுலாமியர் மலத்துக்கு சமம்,
இசுலாமியப் பெண்கள் உழைக்காதவர்கள்
_ ஈ.வே.ரா

இசுலாமிய மதவெறியை எதிர்த்த (பிறப்பால்இசுலாமியர்) பாரூக் என்பவர் இசுலாமிய வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

அவர் திராவிட இயக்கத்தில் இருந்ததால் ஏதோ முற்போக்கு இசுலாமிய சிந்தனையாளருக்கு திராவிடம் ஆதரவு கொடுத்துவருவது போல ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள்.

ஆனால் திராவிடத்தின் தந்தை ஈ.வே.ரா, இசுலாமியரையும் பிற சிறுபான்மை மக்களையும் எப்படி பார்த்தார் என்பதை இங்கே அறிந்துகொள்வது அவசியம்.

மூன்று சான்றுகளைத் தருகிறேன்.

(1) - - - - - - - -
பார்ப்பனர் = சாணி, 
இசுலாமியர் = மலம்

"பாப்பானுக்குப் பயந்துகொண்டு நாம் முஸ்லீம்களுக்கு இடம் கொடுத்துவிட்டோம்.
இது சாணியை மிதிக்க விரும்பாமல் மலத்தில் கால் வைத்ததுபோல் இருக்கிறது."
6.3.1962 விடுதலை தலையங்கத்தில் ஈ.வே.ரா.

(2) - - - - - - - - -
"மைனாரிட்டிகளான பார்ப்பனர், முஸ்லீம் ஆகியவர்களுக்கு அந்நிய ஆட்சியும், காங்கிரசும் காட்டி வந்த சலுகைகளாலும்,

தனி நீதி போன்ற காரணத்தினாலும்,
மேலும் அவர்களது ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்ததனாலும்,

நாடு வளர்ச்சி அடையாமலும், மெஜாரிட்டி மக்கள் மனிதத் தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள்!

குறிப்பாகத் தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.

இதற்கு உதாரணம், இந்த நாட்டில் இன்று மைனாரிட்டியாக உள்ள சமுதாயத்திற்கு இருந்து வரும் வசதியும், ஆதிக்கமும், நடப்பு வசதியுமேயாகும்.

அதாவது 100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாய பெண்கள் நாற்று களை பிடிங்கி, ரோட்டில் கல் உடைத்து, வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம் பெண்கள் உடலுமைப்பு வேலைகள் எதுவும் செய்யாமல்//
// பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் சொகுசாக அனுபவிக்கிறார்கள்!
- ஈவெரா (விடுதலை 6.3.1962)

(3) - - - - - - - - - - - -
ஈ.வே.ரா தானே வெளியிட்ட அவரது 85வது பிறந்தநாள் விழா மலரில் (17.09.1963) எழுதியதைப் பாருங்கள்.

// 1.பார்ப்பனர்கள்
2.நம்மில் கீழ்த்தர மக்கள்
3.முஸ்லீம்கள்
4.கிறித்துவர்கள்
ஆக இன்று நமக்கு சமுதாய எதிரிகளாக இந்த நான்கு கூட்டங்கள் இருக்கின்றன.//

அதாவது பிராமணரல்லாத சாதியாருக்கு பார்ப்பனர்களைப்போல கிறித்துவரும் இசுலாமியரும் கீழ்த்தர மக்களும் (தாழ்த்தப்பட்டோரும்) எதிரிகளாம்.

இவரா சிறுபான்மைக் காவலன்?

85 வயது வரை திருந்தாத ஒரு ஆளை பின்பற்றும் இயக்கங்களா இசுலாமியருக்கு காவல்?