Saturday 8 September 2018

பேரறிவாளனும் திராவிடமும்

பேரறிவாளனும் திராவிடமும்

கேள்வி: பெரியாரிய கொள்கைகளைப் பின்பற்றும் பேரறிவாளனின் விடுதலைக்கு திராவிடர் கழகம் செய்த பங்களிப்பு என்ன?

அற்புதம் அம்மாள்: அதுவொரு கொடுமை.
முதல் துரோகமே பெரியார் திடல்லதான் கெடச்சது.
பெரியார் சிலைகிட்ட இருந்துதான் என் மகன சிபிஐ கூட்டிட்டுப் போனாங்க.
ஆனா, அதப்பத்தி விடுதலை பத்திரிக்கைல ஒரு அறிக்கையோ, செய்தியோ வரல.
வந்திருந்தா, சிபிஐ நடவடிக்கை வேறுமாதிரி இருந்திருக்கும்ன்னு நான் இன்னைக்கும் நம்புறேன்.
ஏன்னா அறிவுக்காக குரல் கொடுக்க யாருமே இல்லன்னுதான் அவன் மேல நிறைய குற்றம் சுமத்துனாங்க.

கேள்வி: திமுகவாவது உங்க மகனின் விடுதலைக்கு ஏதாவது செய்ததா?

அற்புதமம்மாள்: கலைஞர் கருணாநிதி முதலமைச்சரா இருந்தப்ப நெடுமாறன் ஐயா தலைமைல ஆயிரக்கணக்கான பேர் திரண்டு ஒரு கோரிக்கை மனு வச்சோம்.
அப்ப நாலு பேருக்கு மரண தண்டனை இருந்தது. குழந்தைகள், பெண்கள்ன்னு எல்லா அமைப்புகளும் திரண்டு போனோம்.
தண்டனைக் குறைப்பு வழங்குங்க. உங்களுக்கு அதிகாரம் இருக்குன்னு கோரிக்கை மனு கொடுத்தோம்.
நளினிக்கு தண்டனைக் குறைப்பு செஞ்சாரு.
அறிவுக்கு பண்ணுவாருன்னுதான் நெடுமாறன் ஐயா உட்பட எல்லாரும் எதிர்பார்த்தோம்.
ஆனா, செய்யல.
நளினிக்கும் தண்டனைக்குறைப்பு செஞ்சாங்களே ஒழிய விடுதலை செய்யல.
அவரது ஆட்சியில செம்மொழி மாநாடு, அண்ணா பிறந்த நாள்ன்னு எத்தனையோ பேர விடுதலை செஞ்சாங்க.
அப்பகூட நளினிய விடுதலை செய்யல.

நன்றி: சீனி. மாணிக்கவாசகம்
(முகநூல் பதிவு, 31.05.16)
தீ இதழ் (மே 2016)

----------------------

கேள்வி: ஏன் அரசியல் கட்சிகள் பகிர்ந்துகொள்ளவில்லையா?

அற்புதம் அம்மாள்:
சில விஷயங்களை எல்லாம் பேச வேணாம்னு நெனைக்கிறேன்பா.
அவ்வளவு துரோகங்கள் இருக்கு அறிவு கதையில.
ரெண்டு உதாரணங்களை மட்டும் சொல்றேன்.
எந்த இயக்கத்தை எங்க உயிரா நெனைச்சோமோ, அந்தத் தி.க. என்ன பண்ணுச்சு தெரியுமா?
அறிவு கைதுசெய்யப்பட்ட உடனே, இயக்கத்துக்கும் அறிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு அறிவிச்சுச்சு.
சீக்கிரமே, பகுத்தறிவுக் கழக மாவட்டப் பொறுப்பாளரா இருந்த என்னோட கணவர் குயில்தாசனையும் ஒதுக்குச்சு.
அவசர நிலைக் காலகட்டத்துல, கலைஞர் அரசு கவிழ்க்கப்பட்டப்போ, எதிர்த்துப் போராட நிதி வசூலிச்சுக்கிட்டு, ஊரையே திரட்டிக்கிட்டுப்போய்,
“தலைவா! நாங்க இருக்கோம் உன்கூட”னு நின்ன குடும்பம் எங்களோடது.
ஆனா, அறிவு கைதுசெய்யப்பட்ட பின்னாடி இந்த 23 வருஷத்துல ஒருமுறைகூட அவரைச் சந்திக்க முடியலை.
இதையெல்லாம் குற்றச்சாட்டா சொல்லலை.
வேதனையாதான் சொல்றேன்.
இப்படி எவ்வளவோ கதைகளைச் சொல்லலாம்.
ஆனாலும், நெடுமாறன், நல்லகண்ணு, தியாகு, வைகோ, சீமான் இவங்கல்லாம் பெரிய ஆதரவைத் தந்திருக்காங்க.
எல்லாத்துக்கும் மேல இப்போ முதல்வர் அம்மா என் பிள்ளையை மீட்டுத்தர்றேன்னு சொல்லிட்டாங்களே…

தி ஹிந்து (26.02.2014)

No comments:

Post a Comment