Monday 24 September 2018

கயவாளி கட்டபொம்மன் - 6

கயவாளி கட்டபொம்மன் - 6

  ஏற்கனவே கட்டபொம்மனின் முன்னோர் பற்றி ஐந்து பகுதிகளாக பார்த்துவிட்டோம்.
இதுவரை அன்பெழில் என்பவர் எழுதியது.
இனி அவரது நகைச்சுவை நடையிலேயே தெலுங்கர் தலையில் வைத்து கொண்டாடும் கடைசி கட்டபொம்மனைப் பற்றி நாம் அடுத்த வரும் பகுதிகளில் எழுதுகிறோம்.
--------
பதிவர்: ஆதி பேரொளி

பகுதி - 6
கடைசி கட்டபொம்மன்
---------
கட்டபொம்மன் பரம்பரையில் கடைசி வாரிசு 'வீரபாண்டிய கட்டபொம்மன்' ஆவான்.
இவன் பிறந்த்து 1760.
'விளக்கமாற்றுக்குப் பெயர் பட்டுக்குஞ்சலம்' என்பதுபோல பாண்டியர் பெயரை இவனும் சூடிக்கொண்டு திரிந்தான்.

முப்பது வயதில் 1790இல் தந்தை இறந்ததை அடுத்து இவன் பதவிக்கு வந்தான்.

இவன் தன் முன்னோர்களையும் விட பயங்கரமான கொலைகாரனாக, கொள்ளைக்காரனாக இருந்ததோடு புதிதாக கூலிப்படைத் தலைவன் என்ற அவதாரமும் எடுத்தான்.

இவன் காலத்தில் நடத்திய கொள்ளைகள் பற்றி கும்மி பாடல்கள் உண்டு.
வெள்ளைக்கார துரையிடம் கொடுத்த பிராது மனுக்களும் உண்டு.

அருங்குளத்தில் கம்பஞ்சோலையில் புகுந்து ஆயிரம் கட்டு அறுத்துச் சென்றான்.
வருமாங்குளம் தட்டைப் பயிரில் நெருப்பு வைத்துவிட்டான்.
இரவு நேரங்களில் எல்லை தாண்டி பொதுமக்கள் வீடு புகுந்து கொள்ளையிட்டான்.
காட்டிநாயக்கன்பட்டி எல்லையில் மேய்ந்த முப்பது காளைகள் மற்றும் நாற்பது பசுக்களை ஒட்டிக்கொண்டு போனான்.
பக்கத்து சீமைகளில் ஆடிக்காற்று வீசும் நேரம் வயல்வெளிகளில் நெருப்பு மூட்டிவிட்டான்.
இதிலே பயிர்களுடன் பட்டி போட்டிருந்த ஆடுகள் எரிந்து இறந்தன.
இதெல்லாம் ஒரு சாம்பிளுக்கு சொல்லியவை.

அப்போதைய திருநெல்வேலி கலெக்டர் டோரின் என்பவன்.
அவனிடம் பொதுமக்களின் பிராதுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.
இதோடு எட்டயபுரமும் கட்டபொம்மன் தமது எல்லைக்குள் வந்து கொள்ளையடிப்பதாக தொடர்ந்து புகார் அனுப்பி வந்தது.

திப்பு சுல்தானுடன் போர்மூளும் சூழல் இருப்பதால் தெற்கே படை நடவடிக்கை எதுவும் செய்யமுடியாத நிலை எனவே டோரின் கர்னல் மாக்ஸ்வெல் என்பவனை அனுப்பி எல்லைகளை வரையறுக்க சொன்னான்.

இதன்படி தந்தைக் காலத்திலே ஆட்டையைப்போட்ட (எட்டயபுரத்திற்கு சொந்தமான) அருங்குளம் மற்றும் சுப்பலாபுரம் ஆகிய கிராமங்களை கட்டபொம்மன் ஆண்டு அனுபவித்து வருவது தெரிந்தது.

டோரின் ஒரு எல்லைக்கோடு வரைந்து "இதைத்தாண்டி நீயும் வரக்கூடாது அவனும் வரமாட்டான்" என்று கூறிச் சென்றான்.
ஆனால் கட்டபொம்மன் கேட்கவில்லை.
'போடா ஹைகோர்ட்டு' என்று எப்போதும்போல தன் அடாவடியைத் தொடர்ந்தான்.

கட்டபொம்மன் 'ரொம்ப தைரியமான ஆள்' என்று  இதற்கு அர்த்தமல்ல.
டோரினின் அல்லக்கை ஒரு கம்பளத்து நாயக்கன்.
அவனை கட்டபொம்மன் கைக்குள் போட்டுக் கொண்டான்.
ஆங்கிலப்படை திப்புவை அடக்குவதில் கவனமாக இருப்பதையும் தெற்கே படை நடவடிக்கை நீண்டகாலத்திற்கு இருக்காது என்றும் அவன் கட்டபொம்மனிடம் 'செப்பி' இருந்தான்.

கட்டபொம்மன் தனது கொள்ளைப்படையை தற்போது கூலிப்படையாகவும் பயன்படுத்தினான்.
ஆட்களை கடத்திவந்து பணயம் கேட்டு பணம்பெற்றுக்கொண்டு விடுவிப்பது, பணத்திற்கு கொலைசெய்வது,  கட்டப்பஞ்சாயத்து செய்வது என திருநெல்வேலி ஏரியாவில் பெரிய ரவுடியாக அவன் ஃபார்ம் ஆகிவிட்டான்.

அப்போது சிவகிரி மறவர் பாளையத்தில் பதவியில் இருந்தவர் வயதானவர்.
அவரது மருமகனும் அல்லக்கை ஒருவனும் சேர்ந்து அவரது மகனை பதவியில் அமர்த்த திட்டமிட்டனர்.

சிவகிரி பெரியவரைத் தீர்த்துக்கட்ட கட்டபொம்மனே சரியான ஆள் என்று நினைத்து இம்மூவரும் அவனை நாடினர்.

கட்டபொம்மன் சதித்திட்டம் தீட்டிக் கொடுத்தான்.
அதன்படி ஒரு விழாவில் விருந்தினனாக கட்டபொம்மனை அழைத்தனர்.
அன்றிரவு பெரியவரைக் கொலைசெய்வதாகத் திட்டம்.
ஆனால் கட்டபொம்மனின் 'நல்ல குணத்தை' அறிந்திருந்த பெரியவர் இதை யூகித்து இரவே தப்பி தனது நண்பரான சேத்தூர் பாளையக்காரரிடம் தஞ்சமடைந்தார்.

பிறகு அவரது மகனும் அரியணை ஏறினான்.
அவனது சகாக்களும் பெரிய பதவிகளில் அமர்ந்தனர்.
கட்டபொம்மனுக்கு பெரிய தொகை கிடைத்தது.

ஆனால் சேத்தூர் பாளையக்காரர் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்றெண்ணி கட்டபொம்மன் தொடைநடுங்கிக் கிடந்த வேளையில் சிவகிரி பெரியவரை சேத்தூரில் இருந்து கடத்தி கொண்டுவரும் ப்ராஜக்ட் அவனிடம் வந்தது.

பணம் என்றவுடன் ரிஸ்க் எடுக்க முடிவுசெய்த கட்டபொம்மன் சேத்தூர் பாளையக்காரருக்கு, சிவகிரியார் தன்னை தவறாகப் புரிந்துகொண்டதாகவும் நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க விரும்புவதாகவும் ஒரு கடிதம் எழுதினான்.

சேத்தூரில் சமாதானக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
கட்டபொம்மன் நல்லவன் போல திறம்பட நடித்தான்.
ஆனால் சிவகிரியார் மசியவில்லை.
'நீ படம் ஓட்டுனது போதும்' என்று கூறிவிட்டார்.

எனவே சிவகிரி பெரியவர் சேத்தூரிலேயே தங்கிவிடுவது என்றும் அதற்கு சிவகிரி பாளையம் மாதாமாதம் ஒரு தொகை கொடுக்கும் என்று பேசி முடிக்கப்பட்டது.

கட்டபொம்மன் 'நான் ட்ரீட் தருவேன்' என்றான்.
தூத்துக்குடியில் கள்ளக்கடத்தல் செய்யும் டச்சுக்காரர்கள் தன் 'அருமை நண்பா கட்டபொம்மா'வுக்கு பரிசாகத் தந்த 'ஃபாரின் சரக்கு' பாட்டில்களை எல்லார் முன்பும் அடுக்கினான்.

புதுவித சரக்கு என்றதும் எல்லாருக்கும் ஜொள்ளு வடிய 'ஓகே' என்றனர்.
மதுவில் மயக்க மருந்து கலந்திருந்ததால் அனைவரும் சிறிது நேரத்திலேயே மட்டையாகினர். பார்ட்டி முடிந்தது.

அப்போது சிவகிரியாரை ஒரு மூட்டையில் கட்டினான் கட்டபொம்மன்.
அப்போது லேசாக விழிப்பு தட்டிய சேத்தூரார் சத்தம் போடத் தொடங்கினார்.
அவர் தொண்டையில் வாளைப் பாய்ச்சி கொலை செய்தான் கட்டபொம்மன்.
விருந்திட்டவனையே ஊற்றிக்கொடுத்து படுகொலை செய்தான்.

சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி வெட்டி கொலைசெய்தான்.

சிவகிரி பெரியவரை கட்டித் தூக்கிக் கொண்டு சிவகிரிக்கு கொண்டுவந்து சிறையில் இட்டு நல்ல கூலி வாங்கிக்கொண்டான்.

ஆம். வீராதி வீரனென்று தலையில் வைத்தாடும் கடைசி கட்டபொம்மன் ஒரு  முதியவரைக் கொல்லப்பார்த்தவன்.
ஒரு நிராயுதபாணியையும் ஒரு பெண்ணையும் பச்சிளம் குழந்தைகளையும் கொலை செய்த படுபாவி.
எல்லாம் பணத்துக்காக.

இந்த சதிக்கூட்டணி செய்த ஒரே தவறு சிவகிரியாரை உயிரோடு விட்டது.

சிறையில் கிடந்த அந்த முதியவர் வேறுவழியின்றி நடந்ததை நம்பிக்கையான ஒரு ஆள் மூலம் ஆங்கிலேயருக்கு செய்தி அனுப்பி தன்னைக் காப்பாற்றுமாறு கோரினார்.
இதைச் செய்தால் ஆங்கிலேயருக்கு என்றும் விசுவாசமாக இருப்பதாக வாக்களித்தார்.

ஒரு கூலிப்படைக்கு பதிலடி கொடுக்க இன்னொரு கூலிப்படைதானே வரவேண்டும்?!

ஆகா! சிவகிரியை வளைக்க நல்ல தருணம் என்று படையோடு ஓடோடி வந்தான் கர்னல் மாக்ஸ்வெல்.

'படை எதுவும் வராது' என்று எண்ணியிருந்த கட்டபொம்மன் மாக்ஸ்வெல் வருவது தெரிந்ததும் சிவகிரி சின்னவனை நட்டாற்றில் விட்டுவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய்விட்டான்.

கட்டபொம்மு காணாமல் போய்விட்டான் என்றறிந்த சிவகிரி சின்னவன் 'மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு' என்று  தன் சகாக்களைத் தேட அவர்களும் கம்பிநீட்டிவிட்டது தெரிந்தது.
வேறுவழியின்றி ஆங்கிலேயரிடம் சரணடைந்தான்.

சிவகிரி பெரியவரை மீண்டும் பதவியில் அமர்த்தினான் மாக்ஸ்வெல்.
ஓடிப்போன இருவரையும் தேடும் குற்றவாளியாக அறிவித்தான்.

இந்நிலையில் தலைமறைவான சிவகிரி பாளையத்தின் முன்னாள் அல்லக்கை ஊற்றுமலையில் பிடிபட்டான்.
அவன் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவானோ என்று பீதியடைந்த கட்டபொம்மன் கலெக்டர் டோரினின் அல்லக்கையான தன் சாதிக்காரனைத் தொடர்புகொண்டு இந்த வழக்கில் தன்னை சேர்க்காமல் இருந்தால் கலெக்டருக்கு லஞ்சம் தருவதாக கூறும்படி பேரம்பேச அனுப்பினான்.

டோரின் லஞ்சம் பெற்றுக்கொண்டு கட்டபொம்மன் சம்பந்தப்பட்ட சேத்தூர் கொலை வழக்கு ஆவணங்களைத் தீவைத்து கொளுத்தினான்.

இந்த டீலிங் கர்னல் மாக்ஸ்வெல்லுக்கு தெரிந்துவிட்டது.
அவன் கலெக்டர் டோரினையும் சேர்த்து மேலிடத்தில் போட்டுக்கொடுத்தான்.

டோரின் ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டான்.
அவனது அல்லக்கையான கம்பளத்தானைப் பிடித்து உள்ளே தள்ளி நொங்கைப் பிதுக்கிவிட்டனர்.

ஆவணங்கள் எரிந்துவிட்டதாலும் அல்லக்கை கம்பளத்தான் தன் இனத்தானைக் காட்டிக்கொடுக்காமல் இனப்பற்று காட்டியதாலும் கட்டபொம்மன் கொலைப்பழியில் இருந்து தப்பினான்.

கலெக்டர்கள் லஞ்சம் ஊழலில் ஈடுபடுவதைத் தடுக்க ஆங்கிலேய மேலிடம் கலெக்டர்களது சம்பளத்தை 250 வராகனாக உயர்த்தி அத்தோடு வசூலிக்கும் தொகையில் 1.5% கமிஷனும் தரப்படும் என்று உத்தரவிட்டனர்.

கொலைவழக்கிலிருந்து தப்பிய கட்டபொம்மனது அட்டகாசம் இன்னும் அதிகமானது.
எல்லைதாண்டி ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம் வரை சென்று இரவு நேரங்களில் கொள்ளையடித்தான்.
ஏழை எளிய பெண்களின் சிறிய கம்மலையும் காதோடு அறுத்ததால் 'காதறுத்தான் கட்டபொம்மன்' என்று பெயர்பெற்றான்.
கொஞ்சம் வசதியானவர்களைத் தூக்கிவந்து பணயத்தொகை பெற்றுக்கொண்டு விடுதலை செய்தான்.
(இதை கட்டபொம்மன் பற்றி நூலெழுதியோரில்  ம.பொ.சி தவிர அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கால்டுவெல் கூட தனது திருநெல்வேலி வரலாறு எனும் நூலிலும் கட்டபொம்மனின் கொள்ளைகளைப் பற்றிக் கூறியுள்ளார்)

கெட்டிபொம்முவை அடியொற்றி பல கொள்ளைக்கூட்டங்கள் முளைத்தன.
அவற்றில் சில கட்டபொம்மன் படையில் சேர்ந்தன.

இந்நிலையில் ஆங்கிலேயர் எதிர்பார்த்தபடி திப்பு சுல்தானோடு போர் மூண்டது.
சொல்லப்போனால் திப்பு சுல்தான் அந்த நாட்டு கட்டபொம்மன்.
குறுக்குவழியில் மைசூர் அரியணையில் அமர்ந்த ஹைதர் அலியின் மகன்.
பிரெஞ்சு ஆதரவுடன் தெற்குநோக்கி படையெடுத்த இவனை அடக்க கல்கத்தாவில் இருந்து காரன்வாலீசு வரவழைக்கப்பட்டான்.
வந்த சூட்டோடு அவன் திப்புவின் படைகளை திருச்சியிருந்து பெங்களூர் வரை அடித்து துவைத்து விரட்டி விரட்டி துவம்சம் செய்தான்.
கடைசி கட்டத்தில் பாதி ராஜ்யத்தையும் பெருமளவு பணத்தையும் பிணையாக தன் இரு மகன்களையும் அளித்து 'சமாதான' ஒப்பந்தம் போட்டுக்கொண்டான் திப்பு.
இது நடந்தது 1792 இல்.

இந்நிலையில் ஆற்காடு நவாபு வரிவசூல் செய்ய தெற்கே ஒரு தாசில்தாரை அனுப்பினான்.
கம்பளத்து பாளையங்கள் அவனுக்கு முறைவாசல் செய்து அனுப்பின.
அதே குதூகலத்துடன் மேற்கே மறவர் பாளையங்களுக்கு போன அவனை கழுத்தறுத்து போட்டுவிட்டார்கள்.

நவாபும் மறவர் மீது ஆங்கிலேயரிடம் புகார் செய்தான்.

ஊற்றுமலையும் தலைவன்கோட்டையும் தமது எல்லையிலும் கட்டபொம்மன் கொள்ளையடிப்பதாக முறையிட்டனர்.

1793 க்கு பிறகு தெற்கில் நிலவிய இந்த குழப்பமான சூழலை கவனிக்க ஆங்கிலேய மேலிடம் முடிவெடுத்தது.
அப்போது வரிவசூலிலும் குழப்பம் இருந்தது.
இதனால் ஆங்கிலேயர் நவாபுகளின் அனைத்து அதிகாரங்களையும் பிடுங்கினர்.

இப்போது ஆங்கிலப் படை ப்ரீ ஆகிவிட்டது.
வரிவசூலும் ஆங்கிலேயர் பொறுப்பு.
போட்டியாக இருந்த புதுச்சேரி பிரெஞ்சுக்காரர் களையும் மற்றும் தூத்துக்குடி டச்சுக்காரர்களையும் ஆங்கிலேயர் தோற்கடித்து அடக்கினர்.

தன் பாளையத்து நெசவாளர்களிடம் துணிவாங்கி தூத்துக்குடி வழியாக இங்கிலாந்து அனுப்பும் கான்ட்ராக்ட் கட்டபொம்மனுக்கு கிடைத்தது.
அந்த அப்பாவி நெசவாளருக்கு ஆங்கில கம்பெனி அளித்த சொற்ப பணத்தையும் இடையில் குத்தவைத்த கட்டபொம்மன் அமுக்கிக்கொண்டான்.

இதனால் அப்பகுதி நெசவுத்தொழில் நலிந்தது, ஆங்கிலேய வணிகர்கள் இது பற்றி கம்பெனிக்கு புகார் எழுதினார்கள்.

பிளாக்மெயில், கிட்நாப்பிங், அசாசினேசன்,  கான்ட்ராக்ட் என பல படிகள் முன்னேறிவிட்ட கட்டபொம்மு ரவுடியில் இருந்து தாதாவாக பதவி உயர்வு அடைந்திருந்தான்.

இப்போது தூத்துக்குடியில் எஞ்சியிருந்த டச்சு வணிகர்களிடம் துப்பாக்கி வெடிமருந்து என ஆயுதங்கள் வாங்க ஆரம்பித்தான்.

இப்படியாக கெட்டிபொம்மு ஆட்சிக்கு வந்த ஏழாண்டுகள் ஏறுமுகமாக இருந்தது.

டான் ஆகும் முயற்சியில்  ஆங்கிலேயருக்கு தெரியாமல் மிகவும் ரகசியமாக இந்த ஆயுத கொள்வனவை நடத்தினான்.

இது உளவுத்துறை மூலம் ஆங்கிலேயர் காதுக்கும் போனது.

அப்போதுதான் 1797 இல் திருநெல்வேலி கலெக்டராக வந்தான் 'இரும்புத் தலையன்' என்றழைக்கப்பட்ட முரட்டு ஜாக்சன் துரை.

(தொடரும்)

1 comment:

  1. வரலாற்று பிழையை திருத்த முயற்சித்த உறவுக்கு நன்றிகள் பல

    ReplyDelete