கயவாளி கட்டபொம்மன்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் முன்னோரின் வரலாறு
பதிவர்: அன்பெழில் (anpezhil)
பகுதி-2
காட்ர கட்டபிரமையா
----------------
கட்டபொம்மன் பரம்பரைத் தொடக்கத்தில் ஒரு மாமன்னனைத் தேடிப்பார்த்தால் எட்டயபுர பாளையக்காரனுக்கு வெற்றிலை பாக்கு மடித்துக் கொடுத்து எச்சில் துப்ப சொம்பு தூக்கித் திரிந்த ‘காட்ர கட்டபிரமையா’ எனும் மாமா மன்னன்தான் அகப்படுகிறான்!
இவன்தான் கட்டப்பொம்மன் பரம்பரையின் முதல் கட்டப்பொம்மன்.
சொம்பு தூக்கி எப்படி மன்னனான்?
கட்டப்பொம்மன் பரம்பரையிலேயே வரலாற்றின் கண்ணுக்குப் புலப்படுகிறவன் காட்ர கட்டப் பிரமையாதான்.
இவன் 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் எட்டயபுர பாளையக்காரன் எட்டப்ப நாயக்கனுக்கு அடப்பக்காரனாக இருந்தவன்.
அடப்பக்காரர்களின் தலையாய பணி எதுவெனில் பாளையக்காரருக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பது, மென்ற வெற்றிலைச் சாற்றினை ‘புளிச்’ எனத் துப்பும் போது சிந்தாமல் ஒரு சொம்பில் பிடித்துக்கொள்வது,
மன்னவருக்கு அலுப்பாக இருக்கும் வேளைகளில் கைகால் அமுக்கி விடுவது போன்ற ராஜபணிகள்!
கட்டப்பொம்மனின் பரம்பரையினர் கம்பளத்தார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
கம்பளத்தாரில் கொல்லவார், சில்லவார், தோகலவார் என ஒன்பது பிரிவு.
தோகலவார் என்றால் பசுமாடுகளை ஊர்ஊராக ஓட்டிச் சென்று மேய்க்கும் நாடோடிகள் எனப் பொருள்.
கெட்டிப்பொம்முவின் ஆண்ட(!) பரம்பரை மூதாதையர்கள் இந்த தோகலவார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான்.
சில்லவார் பிரிவு கம்பளத்தாரான எட்டப்ப நாயக்கருக்கு அடப்பக்காரனாக அரும்பணியாற்றும் பேறுபெற்றவுடன் காட்ரகட்டபிரமையா ஆடுமாடு மேய்க்கும் குலத்தொழிலை புறந்தள்ளி எட்டயபுரத்தில் விளக்கி வைத்த சொம்புகளுடன் ஐக்கியமானான்.
காட்ர கட்டப் பிரமையாவால் தோற்றுவிக்கப்பட்ட கட்டப்பொம்மன் பரம்பரை ஐந்தே தலைமுறையோடு கயத்தாறின் புளியமரத்தில் முடிவுக்கு வருகிறது.
1) காட்ர கட்டபிரமையா
2) கட்டப்பிரமையா என்கிற முதலாம் ஜெகவீர பாண்டியன் (1709-1736).
3) பொல்லாப்பாண்டிய கட்டப்பொம்மன் (1736-1706).
4) இரண்டாம் ஜெகவீர பாண்டிய கட்டப் பொம்மன் (1760-1790).
5) வீரபாண்டியக் கட்டப்பொம்மன் (1790-1799).
இதில் ஐந்தாவதாக வருபவன்தான் பி.ஆர். பந்துலு நாயக்கன் தயாரிப்பில் நாம் பார்த்த ‘வானம் பொழிகிறது பூமி விழைகிறது’ சிவாசிக்கணேச கட்டப்பொம்மன்!
அது சரி, எட்டப்ப நாயக்கனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்து சொம்பு தூக்கித் திரிந்த காட்ர கட்டப் பிரமையா எப்படி அரியணை ஏறினான்?!
பாஞ்சாலங்குறிச்சி பாளையம் அமைந்ததற்கு வழக்கமா ஒரு முயல் நாயை விரட்டின கதையைச் சொல்லி நமது காதில் பூந்தோட்டத்தைச் சுத்துவாங்கெ.
ஆனால், பாஞ்சாலங்குறிச்சி பாளையம் தோன்றிய கதையைத் தோண்டிப்பார்த்தால் வடுகர்களின் பிறவி இரட்டைவேடக் குணம்தான் தன் அவுசப் பல்லை காட்டி இளிக்கிறது.
எட்டையபுரம் பாளையத்தை அடுத்து செக்காரப்பட்டி எனும் ஊர் இருந்தது.
அந்த ஊரில் வசித்த தமிழ் வேளாளர்கள் அந்தப் பூமியை தங்கள் உழைப்பால் வளம் மிகுந்ததாக மாற்றியிருந்தனர்.
எட்டப்பனுக்கு செக்காரப்பட்டி மீது ஒரு இது..!
எப்படியாவது அதை அபகரித்து தன் பாளையத்தோடு இணைத்து விட மையல் கொண்டிருந்தான்.
எட்டப்பனின் இந்த ஆசையை மடித்துக் கொடுத்த வெற்றிலையோடு ஆதியும் அந்தமுமாக தூபம் போட்டு வளர்த்தெடுத்தவன் அடப்பக்கார காட்ர கட்டபிரமையா!
திட்டம் உருவானது.
அதன்படி, செக்காரப்பட்டியை உளவு பார்க்கவும், தாக்க தக்க தருனம் பார்த்து தகவல் அனுப்பவும் காட்ர கட்டப் பிரமையா செக்காரப்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
வஞ்சகமறியா செக்காரப்பட்டி வேளாளர்களும் வேலை கேட்டு வந்த காட்ர கட்டப்பிரமையாவை காலியாக இருந்த ஊர்க்காவலாளி வேலையில் அமர்த்தினர்.
காட்ர கட்டப்பிரமையாவோ மிதிவண்டி இடைவெளியில் வடுகரயிலை விட ஆரம்பித்தான்.
ஆங்காங்கே சிதறிக் கிடந்த தன் கம்பளத்து உறவினர்களை செக்காரப்பட்டியில் சிறுகச் சிறுக குடியேற்றினான்.
வந்தாரை வாழவைத்தே பழக்கப்பட்ட தமிழினத்தில் பிறந்த அவ்வூர் வேளாளர்களும் வஞ்சகமறியாமல் அதை அனுமதித்தனர்.
எட்டப்பனோ செக்காரப்பட்டிக்கு படையனுப்ப காட்ர கட்டப்பிரமையாவின் செய்திக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தான்.
ஆனால், அடப்பக்காரனோ எட்டப்பனுக்கும் சேர்த்து ஆப்பு ஒன்று சீவிக்கொண்டிருந்தான்.
உண்மையில் காட்ர கட்டப்பிரமையாவுக்கு செக்காரபட்டியை எட்டையபுரத்தானுக்கு பிடித்துக் கொடுக்கும் எண்ணமெல்லாம் சிறிதும் இல்லை.
தானே கைப்பற்றுவதுதான் திட்டம்.
அதற்காகவே தன் கம்பளத்து உறவுகளை அங்கே குடியமர்த்தினான்.
ஆனாலும், எட்டப்பனின் படைவலிமைக்கு முன்னால் இவர்கள் வெறும் தூசி.
பிறகு என்னதான் செய்வது?!
நாயக்கர்களின் வருகைக்குப் பின்பு வீழ்ச்சி அடைந்த பாண்டியர்களின் வம்சாவளியில் கடைசியாக எதிர்த்து நின்ற பஞ்சபாண்டியர்களின் வழிவந்த இளம்பஞ்ச பாண்டியர்கள் பொதிகை மலையில் வசித்து வந்தனர்.
அவ்வப்போது புரட்சிப் படைகளோடு ஆங்காங்கே நாயக்க பாளையங்களைத் தாக்கியும் வந்தனர்.
அவர்களைத்தான் தேடிப்போய்ச் சந்தித்தான் காட்ர கட்டப்பிரமையா.
எட்டப்பன் செக்காரப்பட்டியின் மீது திடீரென படையெடுக்கத் திட்டமிட்டிருக்கிறான்.
நான் அவன் சாதிக்காரனாக இருந்தாலும் இதற்கு என் மனம் ஒப்பவில்லை.
நீங்கள்தான் அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என காலில் விழுந்தான்.
இளம்பஞ்ச பாண்டியர்களும் உடனே தன் படையைத் திரட்டிக்கொண்டு செக்காரபட்டி வந்து சேர்ந்தனர்.
எட்டப்பன் வெற்றி பெற்றால் அவனோடு சேர்ந்து எட்டயபுர பாளையத்தில் மேலும் உயர்ந்து விடலாம்.
பாண்டியர்கள் வெற்றி பெற்றால் அவர்களோடு இணைந்து இங்கேயே இருந்து விடலாம்.
காட்ர கட்டப்பிரமையாவுக்கு இரு கல்லிலும் ஒரே மாங்காய்.
'உடனே படையை அனுப்பவும்' என எட்டப்பனுக்குச் செய்தியனுப்பினான் காட்ர கட்டப் பிரமையா.
வெற்றி நிச்சயம் என்ற மிதப்பில் இரவோடு இரவாக எட்டையபுர படைகள் செக்கார பட்டிக்குள் புகுந்தன.
அளவில் பெரியதாய் இருந்தாலும் முன் தயாரிப்புடன் காத்திருந்து தாக்கிய இளம்பஞ்ச பாண்டியர்களின் படைக்கு முன் எட்டையபுர படைகள் மண்ணைக் கவ்வியது.
காத்திருந்த காட்ர கட்டப் பிரமையா பஞ்ச பாண்டியர்களின் சார்பில் வெற்றிவிழா கொண்டாடினான்.
அவனது வஞ்சகத்தை அறியாத இளம் பஞ்ச பாண்டியர்களும் அவனை தன் படையில் ஒரு தளபதியாக நியமித்தனர்.
அப்போதுதான் எட்டப்பனுக்கு காட்ரகட்ட பிரமையா வைத்த ஆப்பு பற்றி விளங்கியது.
கொதித்தான். குமுறினான். எப்படியாவது அவனைப் பழிவாங்கியே தீருவது என முடிவெடுத்தான்.
ஆனாலும் அது அவன் காலத்தில் முடியவில்லை.
அந்த வஞ்சினமே பரம்பரை பரம்பரையாக இருபக்கமும் வளர்ந்து எட்டப்பனின் வழித்தோன்றலாக வந்த வேறொரு எட்டப்பனால் காட்ர கட்டப்பிரமையாவின் பரம்பரையில் வந்த கட்டப்பொம்மனை காட்டிக் கொடுத்து கயத்தாறு புளிய மரத்தில் கணக்குத் தீர்த்தது!
சரி! தெலுங்கின கம்பளத்து காட்ர கட்ட பிரமையாவின் வம்சம் வீரபாண்டியனானது எப்படி?!
-------------
அடுத்த பகுதி
கட்டபிரமையா என்கிற ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்
Tuesday 11 September 2018
கயவாளி கட்டபொம்மன் - 2
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment