பழைய சுப.வீ
இன்று திராவிட கருத்தியலுக்கு பிரச்சார பீரங்கியாகவும் தி.மு.க -வுக்கு விசுவாசமான அடிமையாகவும் மாறிக்கிடக்கும்
சுப.வீ (எ) சுப.வீரபாண்டியன் தமிழினத்தில் பிறந்த ஒரு இனத்துரோகி ஆவார்.
ஆனால், இவர் 1990 களில் திராவிடத்தை விமர்சித்தும் தமிழ்தேசியத்தை ஆதரித்தும் எழுதிவந்தார் என்பது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கலாம்.
தி.மு.க இவரை எதைக் காட்டி வளைத்தார்களோ தெரியாது.
அப்போது நிறம் மாறிய பச்சோந்தியான சுப.வீ இப்போது நாயினும் கேடாக நக்கிப் பிழைக்கும் இழிபிறப்பாகி நிற்கிறார்.
இவரை சான்றுடன் தோலுரிப்பது நமது கடமையாகும்.
1990 இல் துக்ளக் இதழில் தனித்தமிழ்நாடு ஆதரவாளர்கள் நடத்திய ஒரு கருத்தரங்கம் பற்றி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் சுப.வீ பேசியது இடம்பெற்றுள்ளது.
அது வருமாறு,
"1963 -ல் பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
அந்த சட்டத் திருத்தத்தின் மூலம் பிரிவினை என்றே சொல்லவே கூடாது என்று பேச்சுரிமை பறிக்கப்பட்டது.
அந்தச் சட்டம் வந்தவுடனேயே அண்ணா திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார்.
அதற்கு அவர் சொன்ன காரணங்கள் சாதூர்யமான பேச்சுதான்.
பிறகு 1965 -ல் மாணவர்கள் நடத்திய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஏற்படுத்திய எழுச்சி 67 -ல் முடிந்துவிட்டது.
அதற்கு காரணம் (தி.மு.க) ஆட்சிக்கு போனதுதான்.
திருச்சி (தி.மு.க)மாநாடு ஒரு திருப்புமுனை என்றார்கள்.
ஆனால் ஒரு மாற்றமும் இல்லை.
குடியரசு, விடுதலை, குத்தீட்டி, எரியீட்டி என்று ஒரு காலத்தில் (திராவிட) பத்திரிக்கைகள் வந்தன.
ஆனால் இன்று திராவிட இயத்திலிருந்து குங்குமம், முத்தாரம், மெட்டி என்று வருகின்றன.
குங்குமம் பத்திரிக்கையிலே ஆபாச இலவச கிளுகிளுப்பு இணைப்பு வெளியிட்டு அதை எதிர்த்து ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.
ஏ.பி.வி.பி யும் ஆர்.எஸ்.எஸ்ஸும் ஒவ்வொரு கல்லூரியிலும் பள்ளியிலும் வேலை செய்கிறார்கள்.
நாம் இலவச கிளுகிளுப்பு வெளியிட்டுக்கொண்டு இருக்கிறோம்.
திராவிட இயக்கம் எந்த தேய்வுக்கு வந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இரண்டு திராவிட இயக்கங்களும் மாறி மாறி டெல்லிக்கு காவடி எடுத்ததால் இங்கு தமிழ் தேசிய உணர்வு பட்டுப் போயிருக்கிறது"
[துக்ளக் 16.02.1990]
இன்னொரு சான்றையும் பார்ப்போம்.
சுப.வீ 'இனி' என்கிற பெயரில் நடத்தி வந்த மாத இதழில் 1994 இல் எழுதியது வருமாறு,
"மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப் பெறாமல் இருந்த சென்னைத் தலை மாகாணத்தில் ஆந்திரர்கள் பெரும் செல்வாக்குடன் இருந்தனர்.
காங்கிரசு எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு மூன்றும் தெலுங்கர் முதலான பிற திராவிட இனத்தவருக்கும் உரியதாக இருந்தமையால், அவர்களையும் அணைத்துக் கொண்டு போக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதனால் தமிழ்த் தேசிய உணர்வை திராவிட தேசிய உணர்வு விழுங்கி விட்டது.
நீதிக்கட்சி என்று அறியப்பட்ட 'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்' தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, தெலுங்கர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது என்பதனை ஹ்யூஜின் இர்ஷிக், கிறிஸ்டோபர் ஜான் பேக்கர், குணா முதலான ஆய்வாளர்கள் தத்தம் ஆய்வு நூல்களில் விளக்கமாகக் குறித்துள்ளார்கள்.
'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்றே குணா கருதுகின்றார்.
நீதிக்கட்சியை தொடங்கிய பி.டி.தியாகராயர், மருத்துவர் டி.எம். நாயர் இருவரும் தமிழரல்லர்.
பனகல் அரசரும் 1915ஆம் ஆண்டிலேயே ஆந்திர இயக்க மாநாட்டிற்குத் தலைமை தாங்கியுள்ளார்.
நீதிக்கட்சியின் சார்பாகத் தொடங்கப்பெற்ற தமிழ் ஏட்டிற்கு 'திராவிடன்' என்று பெயர் வைக்கப்பட்டது.
ஆனால், தெலுங்கு ஏட்டின் பெயர் 'ஆந்திர பிரகாசிகா' என்று தான் இருந்தது.
நீதிக்கட்சியின் சார்பில், சென்னை தலை மாகாணத்திற்கு முதலமைச்சர்களாகவும், அமைச்சர்களாகவும் பலர் (ஏ.சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர், கே.வேங்கட ரெட்டி நாயுடு, சித்தூர் வி.முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர், கூர்ம வெங்கட ரெட்டி) தெலுங்கர்களே.
நீதிக்கட்சியின் கூட்டங்கள் தெலுங்குப் பகுதியில் நடைபெற்றபோது தெலுங்கிலும், தமிழ்ப் பகுதியில்
நடைபெற்ற போது ஆங்கிலத்திலும் நடைபெற்றன.
மொழிவழித் தேசங்கள் உருவாகாத அன்றையச் சூழலில், தேசிய இன உணர்வை (National race) முன் நிறுத்த முடியாமல், சமூக நீதியில் சரியாக இயங்கினர் என்னும் நிறைவில், 'திராவிடர்' என்னும் மரபு இன உணர்வையே (Ethnic race) பெரியார் உட்பட அனைவரும் முன் நிறுத்திய சூழலை நாம் இன்று உணர முடிகிறது.
எவ்வாறாயினும், தமிழ்த் தேசிய உணர்வு பின்னடைந்தமைக்கு, திராவிட தேசிய உணர்வு ஒரு முகாமையான காரணம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை."
[இனி -சமூக மாத இதழ்,
திருவள்ளுவர் ஆண்டு 2025,
மடங்கல் -கன்னி, செப்டம்பர் '94 ]
இவ்வளவு தெளிவாக இருந்த சுப.வீ எப்படி மாறினார்?!
பெற்றோர் காலத்தில் இருந்தே திராவிட சிந்தனையுடன் வளர்க்கப்பட்ட சுப.வீ,
1970களில் பெருஞ்சித்திரனார் இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டு தமிழ்தேசியத்திற்கு மாறினார்.
'தமிழர் இயக்கம்' எனும் அமைப்பையும் தொடங்கினார்.
பிறகு தியாகுவின் தமிழ்தேசிய இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார்.
ஈழ ஆதரவு பணிகளில் ஈடுபட்டபோது 2002 இல் ஜெயலலிதாவினால் பொடா சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் இவருக்கு தி.மு.க உதவி செய்தது.
30 ஆண்டுகள் திராவிடத்தை விமர்சித்துவந்த சுப.வீ இவ்வாறு தி.மு.க வினால் விலைக்கு வாங்கப்பட்டு திராவிடத்திற்கு மாற்றப்பட்டார்.
2007 இல் 'திராவிட இயக்கத் தலைவர் பேரவை' என்ற அமைப்பை நிறுவி வெளியிலிருந்தே தி.மு.க வை ஆதரித்து வருகிறார்.
தி.மு.க 2009 இல் சாயம் வெளுத்து அம்மணமாகிவிட்ட நிலையிலும் இப்போதும் முட்டுக் கொடுத்து வருகிறார்.
No comments:
Post a Comment