Saturday, 8 September 2018

ஒரு மதம் ஒரு இனத்தை என்னவெல்லாம் செய்யமுடியும்?

ஒரு மதம் ஒரு இனத்தை என்னவெல்லாம் செய்யமுடியும்?


ஒரு கரும்புச்சாறு கடைக்குச் சென்றேன்.
பர்தா (புர்கா) போட்ட பெண்தான் அதை நடத்திவந்தார்.
நான் அவரை "அக்கா" என்றுஅழைத்தேன்.
அவர் புன்னகைத்தபடி "உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டாள்.
பதிலாக "நான் முஸ்லீம் இல்லை" என்று கூறினேன்.


புரிந்துகொண்ட அந்த அக்கா கூறினார் சேலை மட்டும் கட்டி வந்தால் எல்லாரும் "அக்கா" என்று அழைப்பார்களாம்.
பர்தா போட்டுக்கொண்டு வந்தால் இசுலாமியர் மட்டுமே "அக்கா" என்று அழைப்பார்களாம்.


ஒரு உடை அது அளிக்கும் தோற்றம் ஒருவரது அடையாளத்தை மாற்றி பிறரிடமிருந்து அந்நியமாக்கிவிட்டது பார்த்தீர்களா?!


உறவினரல்லாதோரையும் முன்பின் தெரியாதோரையும் அக்கா, அண்ணா, அம்மா, ஐயா, தம்பி, மாமா என்று உறவுமுறை சொல்லி அழைப்பது நம் பண்பாடு.


அவ்வாறு இசுலாமியரல்லாத யாராவது ஒரு பர்தா போட்ட பெண்ணையோ அல்லது மீசையில்லாத தாடி வைத்த ஆணையோ சகோதர உறவு சொல்லி அழைத்து நீங்கள் பார்த்துள்ளீர்களா?!


பாய் என்று வேண்டுமானால் அழைப்பர்.


இது கவலைப்படவேண்டிய விடயம்.


நான் மட்டும் ஒரு இசுலாமியத் தமிழனாகப் பிறந்திருந்தால்,
"ஒரு மதம் ஒரு இனத்தை என்னவெல்லாம் செய்யமுடியும்" 
என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருப்பேன்.


அதில் ஒரு இனத்து மக்களின் மீது 'ஒரு அந்நிய நாட்டு மதம்' அதன் அந்நிய மொழி, கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கத்தைத் திணித்து சொந்த மண்ணிலேயே அம்மதத்தை தழுவியோரை எப்படி அகதிகளாக ஆக்குகிறது என்று விரிவாக எடுத்துரைப்பேன்.


அத்தோடு இசுலாமிய மதவெறியர்கள் இசுலாத்தில் சொல்லப்படாத மற்றும் கட்டாயமாக்கப்படாத விடயங்களையும் தன் மதத்தாரிடம் புகுத்தி எப்படி "பூமியில் ஒரு ஏலியன்" போல திரியவிடுகிறார்கள் என்பதையும் விரிவாக எழுதுவேன்.


நான் பிறந்த மதத்தைப் பற்றி இப்படி எழுதலாம் என்றால் அது ஒரு மதமே இல்லை.
அது மதமாகவே இருந்தாலும் எனது இனத்தின் பண்பாட்டை பெரிதாகப் பாதிக்கவும் இல்லை.


நான் பிறந்த மதத்தின் வெறியர்களும் இசுலாமியரைப் பார்த்து எதிர்வினையாக மதவெறியை வளர்த்துக் கொண்டார்களே தவிர தானே வெறிபிடித்து அலைவதும் இல்லை.


தமிழகத்தைப் போலவே ஈழத்திலும் 1984 வரை ஒன்றுக்குள் ஒன்றாக இருந்த சைவ-கிறித்துவ தமிழர்களும் இசுலாமியத் தமிழர்களும் அதன் பிறகு மிக எளிதாக பிரித்தாளப்பட்டு ஒருவரை ஒருவர் கொலை செய்துகொண்டனர்.
இன்று இருதரப்பினரும் பழைய கதைகளையெல்லாம் மறந்து ஒருவரை ஒருவர் கொல்லக் காத்திருக்கும் நிலை உள்ளது.


ஆக ஒரு இனத்தில் பின்பற்றப்படும் மதம் என்பது 
ஒரு வீட்டில் வளரும் (காட்டு)யானை போன்றது.
எப்போது மதம் பிடித்து வீட்டை ரெண்டாக்கும் என்று தெரியாது.


என்னைப் பொருத்தவரை வாழ்வதற்கு மதமோ கடவுளோ தேவையில்லை.


என் இனத்தில் அதன் பண்பாட்டில் அதன் கலாச்சாரத்தில் இல்லாத எந்த சிறப்பம்சம் ஒரு மதத்தில் உள்ளது என்று எனக்குப் புரியவில்லை.


இனத்தை துண்டாடும் மதங்கள் எனக்குப் பிடிப்பதில்லை.


குறிப்பாக இசுலாம் மதத்தை நான் அடியோடு வெறுக்கிறேன்.


ஆனால் இசுலாமியத் தமிழரை அல்ல!


இசுலாமியத் தமிழரை அவர்களது மதத்தை உதறித்தள்ளிவிட்டு வாருங்கள் என்றெல்லாம் நான் கூறமாட்டேன்.


மதம்தான் பெரிது இனம் பிறகுதான் என்பவன் எந்த மதத்தான் ஆனாலும் இனத்துரோகி ஆவான்.


தமிழகத்தில் பெரும்பான்மையான இசுலாமியர் அவ்வாறு இல்லை.
  அவர்கள் இப்படியே இருந்துவிட்டால் நம் இனத்திற்கு நல்லது.


அவ்வளவுதான்.


படம்:- 
கார்த்திகேயன் மற்றும் யாஸ்மினா திருமணத்தை விபச்சாரம் என்று கண்டிக்கும் திருவையாறு இசுலாமிய அமைப்பு




No comments:

Post a Comment