Showing posts with label இசுலாமியர். Show all posts
Showing posts with label இசுலாமியர். Show all posts

Tuesday, 4 November 2025

சென்னையை காத்த மபொசி பற்றி கா மு ஷெரீப்

சென்னையை காத்த மபொசி பற்றி கா.மு.ஷெரீப்

 'இழைத்தவன் பொண்டாட்டி எல்லாருக்கும் மச்சினி' என்பது கிராமிய பழமொழி.
 ஆந்திரர்கள் சென்னையை இந்த பழமொழிக்கு இலக்காக பார்க்கின்றனர்.
 சென்னையை என்ன, திருமலை நாயக்கர் ஆண்ட மதுரையை கூட தனதாக்கிக் கொள்ளலாம் என்று எண்ணினர் ஆந்திர வெறியர்கள்.
 அதற்கான திட்டத்தையும் நடத்த அவர்கள் தயங்கவில்லை.
பிரகாசம் முதல்மந்திரியாக வந்ததும் ஆந்திராவில் இருந்து ஆட்களை அழைத்து வந்து சென்னையில் பவனி வரச் செய்தார்.
 சும்மா அல்ல 'மதராஸ் மனதே!' என்று கூப்பாடுடன்!
 தட்டி கேட்க ஆளில்லை!
 சென்னை நகரில் ஓடும் பஸ்களில் எல்லாம் கூட தெலுங்கிலும் பெயர் போடச் செய்தார்கள்!
 இத்தனையும் கண்டு பாரா கண்கள் படைத்தவர்களாக தமிழக தலைவர்கள் இருந்தபோதுதான் 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று குரல் கொடுத்தது தமிழரசு கழகம்! 
வெறிபிடித்த ஆந்திரப்படை பின்வாங்கியது!
 அவர்களை துரத்திச் செல்வது போல பின் தொடர்ந்து சென்ற தமிழரசு கழகத்தினர் சித்தூர் பகுதிகளில் முகாமிட்டு திருப்பதி வரை தமிழர்களுடைய நிலம் என்பதை நிலைநாட்டி திரும்பினர்!
 இதன் பிறகு தார் கமிஷன்,  J.V.P ரிப்போர்ட் ஆகிய தீர்ப்புகளின் மூலம் 'சென்னை தமிழருடைய நகரம்',  'எல்லைப் பகுதிகள் ஆராயப்பட வேண்டியது' என்று முடிவு கட்டப்பட்டது.
 இதை அன்று 'அகில இந்திய காங்கிரஸ்' முதல் 'ஆந்திர காங்கிரஸ்' வரையிலும் நேரு முதல் சஞ்சீவ ரெட்டி வரையிலும் ஒப்புக்கொள்ளாதார் இல்லை!
 ஆனால் முன்பு அமைச்சராக இருந்த காலத்தில் தான் ஒப்புக்கொண்டதை மாற்றி 'ஆலோசிக்காமல் அவசரப்பட்டு தமிழர்களுக்கு அதிக சலுகை வழங்கி விட்டோம்! இப்பொழுது ஆலோசித்து சொல்கிறோம்! சென்னையை தமிழர்களுக்கு தர முடியாது!' என்று சஞ்சீவ ரெட்டி கூறுகிறார்.
 இந்த சஞ்சீவி ரெட்டியையும் மிஞ்சிப் போகிறார் பிரகாசம் 'சென்னையில் மட்டுமல்ல திருநெல்வேலி வரையும் கூட ஆந்திரா கேட்டால் அதில் நியாயம் இல்லாமல் இல்லை' என்கிறார்!
 ஆனால் 1947, 48 இல் இருந்தது போல் இன்று தமிழர்கள் அலட்சியமாக இல்லை!
 ஆந்திர படையெடுப்பை முறியடிக்க துணிந்து நிற்கிறார்கள்!
 சண்டித்தனம் பிடிக்கும் சாமியார், சஞ்சீவ ரெட்டி, பிரகாசம் போன்றோரை சென்னை நகரத்தில் அல்ல அவர் வாழும் ஆந்திர பகுதிக்கு சென்று அதட்டி கேட்கும் அளவிற்கு உணர்ச்சி பற்றி நிற்கிறார்கள்!
 1948 இல் நம்மை எதிர்த்த கட்சிகள் எல்லாம் இன்று நாம் சொல்வதை முன்னிறுத்தி தம்மை வளர்க்கப் பார்க்கின்றன.
 தார் கமிஷனிடம் 'தலைநகரம் தமிழனுக்கு போனாள் என்ன ஆந்திரனுக்கு போனால் என்ன இருவரும் திராவிடர்களே' என்று கூறிக் கொண்டிருந்த ஈ.வே.ரா இன்று விடுதலை மூலம் ஆந்திரரின் மண்வெளியை கண்டிக்கின்றார்.
 தமிழரசு கழக கோரிக்கையை புரிந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்த பத்திரிகைகள் எல்லாம் சஞ்சீவ ரெட்டியையும் பிரகாசத்தையும் கண்டித்து தலையங்கம் தீட்டுகின்றன.
 சென்னை ராஜ்ய முதல்மந்திரியே தீர்ப்பு கூறுகிறார் 'சென்னை ஆந்திரர்கள் நினைக்கக் கூடாது' என்பதாக!
இத்தனை தமிழரசு கழகத்தாரின் அரிய சாதனை என்றால் அது மிகையாகாது!
 'மொழிவாரி பைத்தியங்கள்' என்று பழித்துக் கூறிய கம்யூனிஸ்ட் சோசியலிஸ்டுகளை மொழிவாரி மாநில பிரிவினையை ஒப்புக்கொள்ள வைத்தது!
 'ஆந்திரமும் தமிழகமும் ஒன்றே தலைநகரச் சண்டை எங்களுக்கில்லை' என்ற தி.க கூட்டத்தினரின் ஏடான விடுதலையை ஆந்திரர்களைக் கண்டித்து எழுதும்படி திருத்தியது!
 'இது என்ன தமிழ் பாகிஸ்தான்?' என்று கேட்ட தேசிய வட்டாரங்களின் மத்தியில் 'தமிழகம் தனி ராஜ்யம்' என்ற எண்ணத்தை வளர்த்து விட்டது!
  இத்தனை பணிகளையும் ஐந்தே ஆண்டுகளில் தமிழரசு கழகத்தினரால் சாதிக்க முடிந்திருக்கிறது என்றால் ஆந்திரர்கள் யோசிக்க வேண்டும்.
 இனியும் 'சென்னை ஆந்திரர்களுடையது!' என்று கூறினால் தமிழரசு கழகம் அளிக்கும் பதில் "சென்னை என்று நீங்கள் ஜெபித்துக் கொண்டே இருங்கள். சென்னையை நீங்கள் அடைகிறீர்களா?! நாங்கள் பெறுகிறோமா?! என்பதை பிறகு கண்ணால் காணலாம்".
 ஆந்திரர்களே! ஆத்திரப்படாதீர்கள்!
 உங்கள் ஆசைக்கு சாவு மணி அடிக்கும் காலம் நெருங்கி விட்டது!
அதன் ஓசையை நீங்கள் 1953 ஜனவரி 24, 25 சென்னையில் நடைபெறவிருக்கும் தமிழரசு கழக இரண்டாவது மாநில மாநாட்டில் கேட்கலாம்!

கா.மு.ஷெரீப்
தமிழ் முழக்கம் 
01.11.1952

Friday, 20 December 2024

கூட்டணிக்காக நடந்த கோவை குண்டுவெடிப்பு

கூட்டணிக்காக நடந்த கோவை குண்டுவெடிப்பு 

 கோவை மண்டலம் தொழில் வளர்ச்சி பெற்றபோது கோயம்புத்தூரில் நாயுடுகள் திருப்பூரில் கவுண்டர்கள் தொழிலில் கோலோச்சுகின்றனர்.
 கோயம்புத்தூரில் இசுலாமியரும் வர்த்தகத்தில் கோலோச்சுகின்றனர்.
இவர்களுக்கு போட்டியாக மார்வாடிகளும் இருக்கின்றனர்.
 தொழிலாளர் அமைப்புகள் அங்கே அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றனர்.
 இப்போது வடக்கே பாஜக ஆட்சிக்கு வருகிறது.
இங்கே திமுக ஆட்சியில் இருக்கிறது.
 1997 ஆண்டு இறுதியில் அதிமுக பாஜக வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்கிறது.

திருப்பம்-1
 தொழிலாளர் அமைப்புகள் வளர்ச்சி பிடிக்காத முதலாளிகள் இங்கே மத அரசியலைக் கொண்டுவரத் தீர்மானிக்கின்றனர்.
 முதலில் திட்டமிட்டு திராவிட அமைப்பினர் கோவை இசுலாமியர் பகுதிகளில் கூட்டம் போட்டு நாத்திகம் பேசுகிற பெயரில் இந்து மதத்தை கேவலமாக பேசுகின்றனர்.

திருப்பம்-2
 பிறகு இதற்கு எதிர்வினை ஆற்றுவதாக இந்து அமைப்பினர் கோவை இந்துக்கள் பகுதிகளில் கூட்டம் நடத்தி இசுலாமிய மதத்தை கேவலமாக பேசுகின்றனர்.
 இது இசுலாமியர் ஆதரவுடன் நடப்பதாகக் காட்டப்படுகிறது

திருப்பம்-3
 இப்படி இந்து அமைப்பினருக்கும் இசுலாமிய அமைப்பினருக்கும் மோதல் உருவாக்கப்படுகிறது.
 அப்போது இங்கே இருந்த போலீசார் இந்து அமைப்புகளுக்கு ஆதரவாகவும் இசுலாமியரிடம் கெடுபிடியுடனும் நடந்துகொள்கின்றனர்.

திருப்பம்-4
 ஒரு இசுலாமிய ரவுடிக்கும் ஒரு டிராபிக் போலீசுக்ககும் தகராறு ஏற்படுகிறது.
 இதன் அந்த டிராபிக் போலீஸ் 1997 நவம்பர் இறுதியில் இசுலாமிய ரவுடிகளால் கொல்லப்படுகிறார்.

திருப்பம்-5
 இதனால் இந்து முசுலீம் கலவரம் வருகிறது!
இசுலாமிய நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீவைக்கப்படுகின்றன.
 பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு இசுலாமியல்களை போலீசும் சேர்ந்து கொலை செய்கிறது.
 இந்த கலவரத்தில் 18 இசுலாமியர்கள் 2 இந்துக்கள் கொல்லப்படுகின்றனர்.

திருப்பம்-6
 இதன் தொடர்ச்சியாக இசுலாமிய இயக்கம் அத்வானியின் தமிழக வரவை எதிர்க்கும் வகையில் 21 பொது இடங்களில் குண்டுவைக்கிறது.
 இதில் 12 குண்டுகள் வெடிக்கின்றன. மீதி கண்டறியப்பட்டு செயலிழக்கச் செய்யப்படுகின்றன.
 இந்த பயங்கரவாத சம்பவத்தில் 58 பொதுமக்கள் உயிரிழக்கின்றனர். தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நேரம்.

திருப்பம்-7
 இப்போது நடந்த (1998 பிப்ரவரி) தேர்தலில் அதுவரை இல்லாத வகையில் பாஜக வேட்பாளர் (சி.பி.ராதாகிருஷ்ணன்) பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார்.

திருப்பம்-8
 ஒரு ஆண்டுக்குள் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்து 1999 இல் திமுக - பாஜக கூட்டணி உருவாகிறது (2004 வரை தொடர்கிறது).

 கோவை மண்டலத்தில் பாஜக ஆதிக்கம் பெறுகிறது.
தொழிலாளர் அமைப்புகள் வலுவிழக்கின்றன.
கொங்கு மண்டலத்தில் வடவர்கள் குவியத் தொடங்குகின்றனர். 
முதலாளி தொழிலாளி என இருதரப்பும் வடவர் கைக்கு போகிறது.

 இன்றைய நிலையில் இருந்து கூர்ந்து நோக்கினால் அன்று இது மத்திய அரசும் மாநில அரசும் திட்டமிட்டு செய்த செயல் என்பது விளங்கும்.

ஏனென்றால் சம்பந்தமே இல்லாத திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன.

நாத்திக அமைப்புகள் இந்து மதத்தை திட்டினால் இந்து அமைப்பினர் சம்பந்தமே இல்லாமல் இசுலாமிய மதத்தை திட்டுகின்றனர்.
 அப்படி நடந்ததற்கு இஸ்லாமியர் சம்பந்தமே இல்லாத போலீசை  கொல்கின்றனர். 
 இதற்கு சம்பந்தமே இல்லாமல் இந்து - முஸ்லீம் கலவரம் வருகிறது.
 இதற்கு சம்பந்தமே இல்லாமல் அத்வானியைக் கொல்ல இஸ்லாமியர் திட்டமிடுகின்றனர்.
அதற்கு சம்பந்தமே இல்லாத பொதுமக்களை குண்டு வைத்துக் கொல்கிறார்கள்.
 ஒரு பணக்கார மரக்கடை வியாபாரி (எஸ்.ஏ.பாட்ஷா) அரசுக்கே தெரியாமல் வளைகுடா நாடுகளில் கோடிக்கணக்கில் பணம் திரட்டி ஒரே நேரத்தில் 21 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வைத்து 3 மனித வெடிகுண்டுகளும் தயார் செய்தார் என்பது அரசின் அறிக்கை! 

 இதில் எதிலுமே லாஜிக் இல்லை!
 இதில் நடந்த நிகழ்வுகளுக்கும் பொதுமக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
 அரசியல்வாதிகள் மக்களைப் பிரித்தாள மதவாத இயக்கங்களையும் காவல்துறையையும் பயன்படுத்தி சதி செய்துள்ளனர்!
 பொறுமையாக சிந்தித்தால் இது தமிழகத்தின் ஒரு பகுதியை வடவருக்கு தாரைவார்க்க தி.மு.க வும் பா.ஜ.க வும் இணைந்து நடத்திய நாடகம் என்பதும் விளங்கும்!

 சமீபத்தில் நடந்த கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவமும் இத்தகையது.
 தேசிய புலனாய்வு (NIA) கண்கானிப்பில் இருக்கும் ஒருவர் (ஜமேஷா முபின்) இந்திய ராணுவத்தில் மட்டுமே கிடைக்கும் வெடிபொருள் மற்றும் இந்தியாவிற்குள் கிடைக்க வாய்ப்பில்லாத வெளிநாட்டு வெடிபொருள் வைத்திருந்தார் என்பதும் இதற்கு சான்று.
 ஆனால் எப்படியோ அதிர்ஷ்ட வசமாக இந்த கோவை குண்டுவெடிப்பு பார்ட்-2 தோல்வியில் முடிந்துள்ளது. 

நன்றி: பத்திரிக்கையாளர் மணி அவர்களது பேட்டி

Wednesday, 3 April 2024

பாமக இசுலாமியரை பயன்படுத்தி கொண்டது

பா.ம.க இசுலாமியரை பயன்படுத்தி கொண்டது 

2013 இல் எழுதப்பட்ட பதிவு 

பாட்டாளி மக்கள் கட்சியின் 'இப்தார்' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முஸ்லிம் தலைவர்கள்!
பழனி பாபா அவர்களால் வளர்க்கப்பட்ட பா.ம.க, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட போது, 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம்களை வேட்பாளராக்கி முஸ்லிம்களின் பணம் பொருளை வீணாக்கியது.

 திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து அகரம் கான் என்ற முஸ்லிமை தான் களத்தில் இறக்கியது.
ஆனால், 2001ல் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளைப் பெற்றபோது (20 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர்) ஒரு முஸ்லிமுக்கு கூட வாய்ப்பளிக்கவில்லை.

 2006ல் திமுக கூட்டணியில் 31 இடங்கள் பெற்றபோது (17 எம் எல் ஏக்கள் வெற்றி பெற்றனர்) கூட ஒரு முஸ்லிமும் நிறுத்தப் படவில்லை.

2011 தேர்தலில் திமுக கூட்டணியில் 30 தொகுதிகளில் போட்டியிட்ட போதும் ஒரு முஸ்லிமுக்கும் வாய்ப்புத்தரவில்லை.

குறிப்பாக, ஏற்கனவே முஸ்லிம்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,க்களாக இருந்த தொகுதிகள் உள்ளிட்ட 'நிச்சய வெற்றி' தொகுதிகளில் கூட முஸ்லிம்கள் நிறுத்தப் படவில்லை.
1. புவனகிரி
2.திண்டுக்கல்
3.பூம்புகார்
4.ஆற்காடு
5.ஆலங்குடி
6. திண்டிவனம்
7.நெய்வேலி
8.திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) போன்ற தொகுதிகளை தன் வசம் வைத்திருந்த பாமக, ஒரு இடத்தில் கூட முஸ்லிம்களை நிறுத்தாமல் 'ஓரவஞ்சனை' செய்தது.

திமுக கூட்டணியில் கணிசமான உள்ளாட்சி இடங்கள் கிடைத்த போதும் முஸ்லிம்களை
புறக்கணித்த கட்சி தான், பாமக.
நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இதே நிலை தான்.
Maruppu - மறுப்பு
05.08.2013

Monday, 4 December 2023

கோயிலுக்கு இஸ்லாமியர் தானம்

கோயிலுக்கு இஸ்லாமியர் தானம் 

 நெல்லையப்பர் கோயில் உள்ள கிபி 1751 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சொத்து பட்டயம் ஒன்றில் லாலுகான்சவான் சாயுபு என்பவர் நெல்லை பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் நித்ய பூஜைக்கு தானம் வழங்கிய செய்தி குறிக்கப்பட்டுள்ளது.
 அதுபோல் குற்றாலநாதர் சுவாமி கோயிலுக்கு கிபி 1848 ஆம் ஆண்டு நித்திய பூஜை மற்றும் நெல்லை காந்தியம்மன் சிறுகால பூஜைக்கான கட்டளைக்கு அசாதுவால சாயுவும் இசுமாலிராவுத்தரும் வேறு சிலரும் சேர்ந்து தான பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

செய்தி: தினகரன் (04.12.2023)
தலைப்பு: குற்றாலம் கோயிலில் செப்பு பட்டயங்கள் கண்டுபிடிப்பு

 ஏற்கனவே தென்காசியை சேர்ந்த அகமதுபேட்டை (ஆமது பேட்டை) முஸ்லீம்கள் குற்றால நாதர் நித்திய பூசைக்கு மகமைப் பணம் கொடுக்க (கி.பி. 1788ல்) இணங்கி எழுதிய பட்டயம் ஒன்று பற்றி ஏற்கனவே பதிவிட்டுந்தேன்.

Sunday, 6 August 2023

புலிகளும் பழனி பாபாவும்

புலிகளும் பழனி பாபாவும் 

  புலிகள் உட்பட ஈழப் போராளி இயக்கங்கள் தமிழகத்திற்கு அடைக்கலம் தேடி வந்த போது அவர்களை ஆதரித்தவர்களில் பழனி பாபாவும் ஒருவர் (இவர் தமிழரசன் அவர்களுக்கும் ஆதரவளித்து வந்தார்).
 ஐந்து ஆண்டுகள் புலிகளுக்கு அனைத்து வகையிலும் உதவி வந்த பாபா ஈழத்திற்கு சுற்றுப்பயணம் செய்து அங்கே தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்து வந்தார்.
 இந்த நிலையில் அவருடைய பாஸ்போர்ட்டை இந்திய அரசு முடக்குகிறது.

 இஸ்ரேலின் வழிகாட்டுதலின் பெயரில் ஈழத்தில் இஸ்லாமியரை தனியாக பிரித்தெடுக்கும் வேலையை சிங்களவர்கள் செய்கிறார்கள்.
புலிகளுக்கு நிதி தருவதில் விருப்பம் இல்லாத சில இஸ்லாமியர்களையும் இரவில் தனியாக மாட்டும் அப்பாவி இசுலாமியர்களையும் படுகொலை செய்து புலிகள் மீது பழியைப் போடுகின்றனர்.
 புலிகளில் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களை அவர்களின் குடும்பத்தை மிரட்டுவதன் மூலம் அவர்களை திரும்பி வரச் செய்கின்றனர். திரும்பி வராதோரின் குடும்பங்கள் இலங்கை ராணுவத்தால் சீரழிக்கப்பட்டன.
 ஊர்க்காவல் படை என்கிற பெயரில் இஸ்லாமியரில் சில பொறுக்கிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து இஸ்லாமியர் அல்லாத தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த ஏவி விடுகின்றனர்.  அவர்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்கின்றனர். ஊர்க்காவல் படைக்கு எதிராக புலிகள் எடுத்த நடவடிக்கைகள் இஸ்லாமியருக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.
 புலிகள் போல உடைய அணிந்து முழுக்க இலங்கை ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் இருந்த காத்தான்குடி பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தி இஸ்லாமியர்களை கொன்று அந்த பழியையும் புலிகள் மீது போடுகின்றனர்.

  இந்த நிலையில் பழனி பாபாவை இலங்கை அரசே நேரடியாக தமிழகம் சென்று அழைத்து வந்து சிறிமாவோவின் கணவரே தனிப்பட்ட முறையில் அவரை கூட்டிச்சென்று இஸ்லாமியர்களை புலிகள் கொன்று வருவதாக கூறி கலவரம் நடந்த இடங்களைக் காட்டுகிறார்.
 இசுலாமிய மக்களை மிரட்டி பாபாவிடம் பொய் சாட்சி கூற வைக்கிறார்.
 சில இஸ்லாமிய தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களையும் பழனி பாபாவிடம் புலிகள் பற்றி தவறாக கூறவைக்கிறார்.
 பழனி பாபா இதை நம்பி விடுகிறார்.
 பிறகு தமிழகத்திற்கு வந்து புலிகளுக்கு எதிராக பேசுகிறார்.
 ஈழத்திற்கு இந்திய அமைதிப் படை சென்றபோதும் அதை ஆதரிக்கிறார்.
 இதைத்தான் தற்போது இஸ்லாமிய மதவெறியர்கள் பரப்பி வருகின்றனர்.

ஆனால் இதன் பிறகு பாமக உடன் பாபா நெருக்கமாகிறார். பா.ம.க தலைவர் ராமதாஸ் புலிகள் பற்றி எடுத்துக் கூறுகிறார்.பா.ம. கட்சி ஈழம் மற்றும் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் பொழுது பழனிபாபா ஈழத்திற்கு முழு ஆதரவு தருவதாகவும் புலிகளை எதிர்ப்பதாகவும் கூறி பாமகவின் ஈழ ஆதரவு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கிறார். அப்போது திண்டுக்கல் லில் பேசிய பேச்சுதான் இது.
ஈழத்து இசுலாமியர் தனி ஈழம் அமைய ஆதரவளிக்க வேண்டும் என்றும் பேசுகிறார்.
 புலிகளுடன் இருக்கும் பங்காளி சண்டையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.

 இதன் பிறகும் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபொழுது எந்த தலைவருமே புலிகளுக்கு ஆதரவாக பேசவில்லை.
 ஆனால் பழனி பாபா ராஜீவ் காந்தி தன்னுடைய இடுப்பில் வைத்திருந்த பாதுகாப்பு குண்டு வெடித்துதான் இறந்தார் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து புலிகளை காப்பாற்ற முயற்சி செய்கிறார். 

 புலிகளுடன் முரண்பட்டாலும் பழனி பாபா அவர்கள் ஈழம் அமைய வேண்டும் என்பதில் இறுதி வரைக்கும் உறுதியாக இருக்கிறார்.

Sunday, 29 May 2022

அண்ணே நீங்க பாயா

அண்ணே நீங்க பாயா?

 சலீம், ரகுமான், இர்ஷாத் மூவரும் பள்ளிவாசல் நண்பர்கள்.

 சலீம் ஒரு வங்கியில் கலெக்சன் ஏஜென்ட்டாக இருக்கிறான்.
 ரகுமான் பெட்டிகடை வைத்திருக்கிறான். 
இர்ஷாத் ஒரு வெட்டி ஆபிசர். அவனது அப்பா டவுனில் பெரிய கடை வைத்திருக்கிறார்.

 அன்று இந்த நண்பர் குலாம் நகர விலக்கு முக்கில் ஒரு மலையாளி திறந்திருந்த பேக்கரியுடன் கூடிய தேநீர் கடைக்குப் போனார்கள்.
 சலீம் முதலில் நுழைய இர்ஷாதும் ரகுமானும் சுவாரசியமாகப் பேசியபடி அடுத்ததாக நுழைந்தனர்.

 "வாங்க அண்ணே"

 இந்த குரலைக் கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான் ரகுமான்.

 அங்கே வாசலில் ஒருவனை நிறுத்தி அனைவரையும் வரவேற்குமாறு செய்திருந்தனர். 

 அவன்தான் சலீமை அவ்வாறு வரவேற்றிருந்தான்.
 இவர்கள் நுழையவும் "வாங்க பாய்" "வாங்க பாய்" என்று வரவேற்றான் அந்த பையன்.

 சலீம் தாடி வைத்திருக்க மாட்டான். பேன்ட், சட்டை, வாட்ச், பெல்ட் என வங்கி ஊழியர் தோரணையில் எப்பவும் இருப்பான். தொப்பியும் தொழுகையின்போது மட்டுமே அணிவான். அவன் முசுலீம் என்று தெரியாததால் சலீமை அண்ணே என்றும் இவர்களை பாய் என்றும் அழைத்து வரவேற்றுள்ளான் அந்த பையன்.

 ரகுமானுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன தன் தம்பியின் நினைவு வந்தது. அவனுக்கு அந்த வரவேற்பாளன் வயதுதான். அவனைப் போன்ற குரல்தான்.
 ரகுமான் சவுதியில் சில ஆண்டுகள் வேலை பார்த்தான். ஊருக்கு வந்திருந்தபோது தன் தம்பியின் பிறந்தநாளுக்கு விலையுயரந்த பைக் ஒன்றை பரிசளித்தான். ஒரு வாரத்திற்குள்ளாகவே அதில் அதிவேகமாக சென்ற அவனது தம்பி விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் ரகுமான் மடியில்தான் உயிரை விட்டான்.
அவன் கடைசியாகக் கூறிய வார்த்தை "அண்ணே...".

 அவன் இறந்த பிறகு யாராவது தன்னை அண்ணன் என்று கூப்பிட்டார்களா என்று யோசித்து யோசித்து பார்த்தான்.
யாரோ ஒருவர் எப்போதோ பின்புறமிருந்து அண்ணே என்று கூப்பிட்டு தான் திரும்பியதும் பாய் என்று மாற்றி கூப்பிட்டது நினைவுக்கு வந்தது.

  தேநீரைக் கையில் எடுக்காமல் ரகுமான் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிட்டதை பார்த்துக்கொண்டிருந்த சலீம் "என்னாச்சு பாய் ஏதோ தீவிரமா யோசிச்சிட்டு இருக்கீங்க?" என்று கேட்டார்.

 சுயநினைவுக்கு வந்த ரகுமான் "இல்ல பாய் அடுத்த வெள்ளிக்கிழமை தொழுகைல நான் உரையாற்றணும். அதான் எதைப்பற்றி பேசலாம் னு யோசிச்சிட்டு இருக்கேன்" 

 அதற்கு சலீம் "இது என்ன பிரமாதம் !?பக்கத்து ஊர் கோவிலில் கொடை நடக்குது. பெற்றோரைப் பேணுவோம் ங்கற தலைப்பில் ஒருத்தர் உரையாற்றுறார். அதைக் கேட்டு அப்படியே இங்கே பேசிவிடுங்கள். இடையிடையே அரபி வார்த்தைகளைப் போட்டு குரானிலிருந்து ஓரிரு வசனத்தை செருகினால் முடிந்தது"

 இர்ஷாத் உடனே "நீங்களும் உப்புசப்பில்லாம எதையோ பேசிவைக்காதீங்க பாய். உலகத்தில் முஸ்லீம்களுக்கு எத்தனையோ பிரச்சனை இருக்கு. அதை இங்கே பேசி விழிப்புணர்வு கொண்டுவரலாம்"

 ரகுமான் "எந்த நாட்டுல அப்படி பிரச்சனை இருக்குனு சொல்லுங்க விசயம் சேகரிச்சு பேசிடறேன்"

 சலீம் சிரித்தபடி "முஸ்லீம்கள் பெரும்பான்மையா இருக்குற நாடுகள்லதான் பிரச்சனை. சிறுபான்மையா இருக்கிற நாடுகள்ல அவங்க நிம்மதியா இருக்காங்க" 

 இர்ஷாத் கடுப்பாகி முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
பரந்த அறிவு பெற்ற சலீமுடன் வாதம் செய்து வெல்லமுடியாது என்பது அவனுக்குத் தெரியும்.

 சலீம் ரகுமானைப் பார்த்து "நீங்க ஏன் சம்பந்தமில்லாத நாடுகள் பற்றி இங்க பேசணும் நம்ம ஊர்ல நமக்கு இருக்குற பிரச்சனை எதாவது பற்றி பேசுங்க"

 அவர்கள் கிளம்பி சென்றனர்.

 ரகுமான் வீட்டுக்கு யோசித்துக்கொண்டே பைக்கில் வந்துகொண்டிருந்தான்.
 இங்கே நமக்குதான் எந்த பிரச்சனையுமே இல்லையே எதைப் பேசுவது என்று எண்ணிக்கொண்டே வந்தான்.
அப்போது எதிரில் பர்தா போட்டுக்கொண்டு ஒரு பள்ளி மாணவி எதிரில் வந்தாள்.
 ரகுமான் மனதில் கர்நாடகாவில் நடந்த புர்கா பிரச்சனை பற்றி பேசலாம் என்று முடிவெடுத்து வீட்டிற்கு வந்தான்.
 
 அவன் வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டியிருந்தது.
பக்கத்து வீட்டு செல்வம் அங்கே நின்றிருந்தான்.
 அவன் ரகுமானைப் பார்த்து "அக்கா பக்கத்துல போயிருக்காங்க பாய்! இந்தாங்க சாவி" என்று கொடுத்தான். 

 அவனுக்கு ஏதோ உறுத்தியது. என்னவென்று புரியவில்லை. தொழுகையின் போது மாட்டிய தொப்பியை கழற்ற மறந்திருந்தான். அதை கழற்றி பையில் வைத்துக்கொண்டான்.

அன்று மாலை ஒரு நிச்சதார்த்த நிகழ்விற்கு அவனும் அவனது மனைவியும் சென்றனர்.
 அவன் வெள்ளை ஜிப்பா வேட்டி அணிந்துகொண்டான்.
அவன் மனைவி பட்டு சேலை உடுத்தி அதன் மேல் பர்தா போட்டுக்கொண்டாள்.
 தன் மகள் மற்றும் கைக்குழந்தையுடன் அவன் சென்று இறங்கினான்.
 வாசலில் பன்னீர் தெளித்து வரவேற்ற அக்குடும்ப பெண் "பாய் வாங்க! அக்கா வாங்க!" என்று வரவேற்றாள்.
 அப்போதுதான் இவனுக்கு உரைத்தது பர்தா போட்டாலும் அவள் மட்டும் 'அக்கா' கொஞ்சம் அடர்த்தியாக திருத்திய தாடிவைத்தால் நான் மட்டும் 'பாய்'. இது என்ன நியாயம்?

 அன்றிலிருந்து இவன் சுற்றிலும் கவனிக்கத் தொடங்கினான். அனைவருமே அனைவரையுமே அண்ணே, தம்பி, மச்சான், தங்கச்சி, மாமா என்று முறைவைத்து வாய்நிறைய மகிழ்ச்சி பொங்க உரிமையுடன் கூப்பிடுகிறார்கள். தன்னை மட்டும் இந்த சமூகம் அந்நியனாக ஒதுக்கிவிட்டதாக உணர்ந்தான்.

 சவுதியில் யாராவது தமிழில் பேசமாட்டார்களா என ஏங்கிய காதுகள் இப்போது அண்ணன் என்ற சொல்லுக்கு ஏங்கியது.

 ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மதியம் சாப்பிட்டு விட்டு நாற்காலியில் அமர்ந்து சுகர் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டான். அப்படியே கண்ணயர்ந்தான். எதிரில் கொலுசு சத்தம் கேட்டது. தன் மகள்தான் என்று கண்ணைத் திறந்தான். அவனது பத்து வயது மகள் பர்தா போட்டுக்கொண்டு நின்றாள் "பாய் எந்திரிங்க" என்றாள். சட்டென்று விழித்து எழுந்தான். நல்லவேளை கனவு.

 அவனது குழந்தை ஒருநாள் "ப..." "ப்ப..." என்று குரல் எழுப்பியது. அவன் மிக அருகில் சென்று ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். முதல் வார்த்தையாக அப்பா என்று சொல்லப்போகிறது என்று நினைத்தான். ஆனால் அது "ப்ப...", "ப்ப...இ", " ப....இ" என்று சொன்னது. அவன் பாய் என்று கூறிவிடுமோ என்று பதறிவிட்டான்.

 சலீமை சந்தித்து பேசினால் தெளிவு கிடைக்கும் என்று தோன்றியது. அப்படியே செய்தான். அதன்படியே தெளிவும் கிடைத்தது. 

 தானும் சலீம் போல தாடியை மழித்துவிட்டு நன்றாக மீசை வைத்துக்கொண்டான். இர்ஷாத் "குரானில் தாடிவைக்க சொல்லிருக்கு" என்று இதைக் கண்டித்ததற்கு "வேணும்னா வெச்சிக்கோங்க னுதா குரான் சொல்லுது. அரபு மன்னர்களும் இளவரசர்களும் இப்படித்தான் இருக்கிறாங்க. நீதா மீசையில்லாம கொத்துத்தாடியோட அல் கொய்தா தீவிரவாதி மாதிரி அலையிற " என்று கூறிவிட்டான். அன்றிலிருந்து இர்ஷாத் இவனிடம் பேசுவதில்லை.
 
 பக்கத்து ஊருக்கு போய் ஒவ்வொரு கடையாக போய் எதாவது பேச்சு கொடுப்பான். அவனை முன்பின் தெரியாத யாராவது அவனை அண்ணன் என்று கூப்பிட்டால் மகிழ்ச்சி அடைவான்.

 அவனது பத்து வயது மகளுக்கு தலையை மறைக்கும் துப்பட்டி போட ஜமாத் வற்புறுத்தியபோது மறுத்துவிட்டான். தன் மனைவியையும் "நாகரீகமாக உடை உடுத்தத்தான் குரான் சொல்லுது" என்று பர்தா போடவேண்டாம் என்று கூறிவிட்டான்.

 ஜமாத் இவன் குடும்பத்தை தள்ளிவைத்தது.
'போங்கடா நீங்களும் உங்க ஜமாத்தும்! இது தமிழ்நாடு! நா இருக்கிறது இந்துக்கள் ஏரியா!" என்று கூறிவிட்டு வந்துவிட்டான்.

 அவனது சித்தப்பா மகள் ஒரு இந்துவை காதலித்து திருமணம் செய்து பக்கத்து ஊரில் வாழ்ந்து வந்தது நினைவுக்கு வந்தது. 
 அவளையும் இந்த ஜாதி சங்கம் அதாவது ஜமாத் ஊரைவிட்டு தள்ளிவைத்தது. அவள் தன்னை அண்ணன் என்று அழைப்பாள் என்பதற்காக அந்த ஊருக்குப் போய் அவர்கள் வீட்டைத் தேடி கண்டுபிடித்து போய்ப் பார்த்தான். சொந்தங்கள் எல்லாமே விட்டுப்போயிருந்த அந்த பெண் இவனைப் பார்த்ததும் "அண்ணே வாங்கண்ணே! அண்ணே இருங்கண்ணே! அண்ணே சாப்பிடுங்கண்ணே!" என்று  இவன் காதுகள் குளிர கண்ணெல்லாம் கலங்க பாசமழை பொழிந்தாள். அவளை கட்டியணைத்து கண்ணீர் விடலாம் என்று தோன்றியது.

 அவளது கணவரும் மச்சான் என்று அழைத்தது அவனுக்கு பேரின்பமாக இருந்தது. விடைபெறும்போது அவரை கட்டித் தழுவினான். "தங்கச்சிக்கு யாருமில்ல மாப்ள! நீங்க நல்லா பாத்துக்கிறீங்க! ரொம்ப சந்தோசம் மாப்ள! உங்க பிள்ளைகளுக்கு தாய்மாமன் நா இருக்கேன் மாப்ள! நேரம் கெடைக்கும்போது குடும்பத்தோட வீட்டுக்கு வாங்க மாப்ள!" என்று கூறிவிட்டு வந்தான்.
 
 அன்று வெள்ளிக்கிழமை. ரகுமான் மேடையில் ஏறி பேசத் தொடங்கினான் , "எனக்கு மேடையில் பேசி பழக்கமில்ல! மனசில பட்டதை பேசிடறேன்! நாம முசுலீம்கள் சிறுபான்மையா இங்க வாழுறோம்! யார் சிறுபான்மையோ அவங்க பாதுகாப்பா இருக்க ஒற்றுமையா சமுதாய உணர்வோட இருக்கிறது இயல்பு! அதுல தப்பில்ல! ஆனா நாம நம்மளை அறியாமலே மற்ற மக்கள்ட்ட இருந்து அந்நியம் ஆகிட்டு இருக்கோம்! இசுலாமைத் தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கோம்! என்னோட சின்ன வயசுல ஒருத்தர் பேர வச்சுதான் முசுலீமா இல்லையா னு கண்டுபிடிக்க முடியும். ஆனா இப்ப அப்பிடி இல்ல! ஒரு கிலோமீட்டர் தூரத்துல பாத்தா கூட முஸ்லீம்கள் தனியா தெரியிறாங்க! ஒரு முசுலீம் பாக்க இப்படித்தான் தெரியணும்னு இசுலாம் எதையுமே சொல்லல! நாம நம்மளோட தோற்றத்தையும் பேரையும் மாத்திவைக்கிறதால இசுலாத்துக்கு எந்த நன்மையும் இல்ல. இதனால சக மனிதர்கள் கிட்ட இருந்து பிரிஞ்சு நிக்கிறோம். இப்ப நம்மள எல்லாரும் பாய் னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க! பாய் ங்கறது முஸ்லீம் வார்த்தை இல்ல! வடநாட்டுல எல்லா மதத்துகாரங்களும் அண்ணன் அல்லது தம்பினு கூப்ட சொல்ற வார்த்தை! மும்பை பக்கம் பாய் னா ரவுடி தாதா னு அர்த்தம்! 
கூடப் பொறந்த தங்கச்சிய பெஹன் னு இந்தில கூப்டுற மாதிரி இது பைத்தியக்காரத்தனம்! உருது முசுலீம்கள் அவங்க தாய்மொழில ஒருத்தர ஒருத்தர் பாய் னு கூப்பட்டுக்குவாங்க! அவங்கள பாத்து நாமளும் நமக்குள்ள பாய்னு கூப்பிட்டுக்க ஆரம்பிச்சோம்! இப்ப மத்த மதக்காரங்களும் நம்மள பாய்னு கூப்ட ஆரம்பிச்சிட்டாங்க! இது அவங்க தப்பில்ல! நாமளும் அத விரும்பறோம்! உருது முசுலீம் மாதிரி ஆக ட்ரை பண்றோம்! வணக்கம் னு சொல்லாம சலாமலைக்கும் சொல்றோம்! ஆனா அவங்களுக்கு முன்னாடியே இசுலாமைத் தழுவியது நாமதான். அவங்க முஸ்லீம்கள் அரசாண்டப்ப கட்டாயத்தாலயோ அல்லது சலுகைக்காகவோ மதம் மாறினவங்க! நாம கொள்கை பிடித்துப் போய் விருப்பப்பட்டு  மதம் மாறினவங்க! 
அப்பாவை அத்தா னு கூப்பிடற சில முஸ்லீம்கள் உண்டு! அத்தா அப்டின்னா அப்பானு அர்த்தம்! தமிழ் வார்த்தைதான்! சிவனை அத்தா னு பாடிருக்காங்க! ஆனாலும் அப்படி கூப்பிடறது பிற பொதுமக்கள்ட்ட இல்லை. அதனால அதையும் கைவிடணும்! நம்மளால மத்தவங்களோட ஒட்டமுடியாம இருக்க இன்னொரு காரணம் நம்ம பேரு! நாம மதம் சாராத பெயர்களை வைக்கலாம்! இன்னைக்கு நாம வைச்சுக்கிற பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் இல்ல! சாதாரண பெயர்களை அரபில வெச்சுக்கிறோம்! இப்படித்தான் பேரு வைக்கணும்னு குரான் எதுவும் சொல்லல! அப்படியே அரபி பேருதான் வைக்கணும்னா நம்ம தாத்தாக்கள் மாதிரி வாய்ல நுழைற பேரையாவது வைங்க! முசுலிம் பேரு இல்லனா மக்கா மதினா போகமுடியாதுனு சொல்றாங்க! அது உண்மையில்ல! அப்படி பாத்தா உலக முசுலீம்கள்ல முக்கால்வாசி பேரு ஹஜ் பயணம் போறதில்ல! இசுலாத் சொல்ற கடமைகளை எதையுமே பின்பற்றாத நாம சக மனிதர்கள் கிட்ட இருந்து அந்நியப்படுத்தற அத்தனையையும் ஒண்ணுவிடாம செய்யிறோம்! நாம முஸ்லீம் னு வெளியில தம்பட்டம் அடிச்சு காட்டிக்கிறதுல குறியா இருக்கோம்! ஒரு சமுதாயம் தனித்தன்மையை வெளிக்காட்டுறது தப்பில்ல! ஆனா நாம காட்டுறது தனித்தன்மையா? ஆப்கானிஸ்தான் முஸ்லீம் மாதிரி இங்க திரியிறது எப்படி தனித்தன்மை ஆகும்?! பாபர் மசூதிக்காக நாம ஏன் பொங்கணும்?! அதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அந்த பாழடைஞ்ச மசூதிய இடிச்சப்ப தமிழ்நாட்டில எங்க கலவரம் நடந்துச்சு?! காஷ்மீர் பிரச்சனைக்கு நாம ஏன் குரல் எழுப்பணும்?! இது தப்பு! நம்ம பிரச்சனை எதுக்காவது மாநிலம் தாண்டி ஆதரவு வந்திருக்கா?! உலக முஸ்லீம்கள் ஒரே சமுதாயம்னு எப்படி ஆகும்?! முஸ்லீம் நாடுகளோட பிரச்சனைகளை இங்க பேசுறதால நீங்க மார்க்கத்துக்கு எந்த நன்மையும் தேடித்தரல! பிறந்த மண்ணுக்கு சக மனிதர்களோட ஒத்து இருக்கிறது மார்க்கத்துக்கு செய்ற துரோகம் ஆகிடுமா? நான் உங்களை பட்டையும் கொட்டையும் போடச்சொல்லல. மற்றவர்கள் மாதிரி இருங்க. பாக்க டீசன்டா இருங்க! அளவா தாடி மீசை வச்சிக்கங்க! பேன்ட் சட்டை போட்டுக்கங்க! அல்லது வேட்டி சட்டை! பசங்கள யூனிபாம் போட விடுங்க! இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி நாகரீகமா உடைபோட விடுங்க! வீட்டில இருக்கும்போது பனியன், சாரம் போதும் எதுக்கு குல்லா?! பெண்கள் சேலை, சுடிதார், நைட்டி னு இயல்பா இருங்க! பர்தா போட குரான் சொல்லவே இல்ல! ஸ்கூல் பிள்ளைங்களுக்கு நடுவில எந்த வித்தியாசமும் இருக்ககூடாதுனுதா யூனிபாம் கொண்டுவந்தாங்க! அங்கயும் நம்ம பிள்ளைகளை தனியா பிரிக்கிறீங்க! போலீஸ் வேலைல சேந்தா காக்கி சட்டை போட்டுதான் தீரணும்! உயரதிகாரிக்கு சல்யூட் அடிச்சிதான் ஆகணும்! கடவுளைத் தவிர யாரையும் வணங்கமாட்டேன் னு வணக்கம் சொன்னா ஒரு கையால சலாம் சொல்றதுலாம் முட்டாள்த்தனம்! ஹலால் பண்ணாத கறி சாப்பிட மாட்டேன், பூஜைல வச்ச பிரசாதத்தை சாப்பிடமாட்டேன்னு சொல்றதுலாம் மதவெறி! சாப்பாட்டுல என்ன மதம்?! இசுலாத் அப்படி எதுவும் சொல்லல! தீபாவளி, பொங்கலுக்கு வீடு தேடி வர்ற பலகாரங்கள் இப்ப குறைஞ்சு போச்சு! கூடிய சீக்கிரம் ரம்ஜானுக்கு நம்மட்ட உரிமையோட பிரியாணி கேக்குற பழக்கமும் நின்னுடும் போல இருக்கு! ஒரு படத்துல பொணத்துக்கு ஆண்குறி முன்தோலை வெட்டி இசுலாத்துல சேக்கிறத காட்டுறாங்க! அந்த சுன்னத் அல்லது கத்னா சடங்கை இசுலாத் வற்புறுத்தல! யூதர்களும் அப்படி சுன்னத் பண்றாங்க! இசுலாம் தோன்றுரதுக்கு முன்னாடியே அரபிகள் கத்னா செய்யிற பழக்கம் இருந்திருக்கு! மாத நோன்பும் இருந்திருக்கு! வெயில் அதிகமாகுற காலத்தில் பகலில் சாப்பிடாம தூங்கிட்டு இரவு இயங்குற பாலைவன பழக்கத்தை நாம சம்பந்தமில்லாம இங்க கடைபிடிக்கிறோம்.  நீங்க சுன்னத் பண்ணாமலும், கொத்துதாடி வைக்காமலும், அரபியில் தொழாமலும், நோன்பு இருக்காமலும், யாரையும் மதம்மாத்த முயற்சி பண்ணாமலும், அரபி பெயர் வைக்காமலும், சாதாரண உடைகள் போட்டுக்கிட்டும் உண்மையான முசுலீமா இருக்க முடியும்! வரதட்சணை வாங்காம, ஏழைகளுக்கு ஜகாத் கொடை கொடுத்து, வட்டிக்கு விடாம, பொய்யோ பொய்சாட்சியோ சொல்லாம, மனசாட்சி உள்ள நல்ல மனுசனா இருந்தாலே இறைவன் அதாங்க அரபில அல்லா உங்களுக்கு சொர்க்கத்துல இடம் ஒதுக்கி வச்சிருப்பான்! அப்படி இறைவனே கைவிட்டாலும் நம்ம மக்கள் ரத்த சொந்தங்களான நம்மை எப்பவும்போல கைவிடமாட்டாங்க! இப்படிப்பட்ட மக்களுக்காக மதத்தையே தூக்கிப்போடலாம்! அப்டிங்கும்போது மதம் கட்டாயமாக்காத விசயங்கள விட்டுக் கொடுக்கிறதுல தப்பில்ல! என்னைப் பொருத்தவர மக்கள்தான் முதல்ல! மதம் அப்பறம்தான்! ஏன்னா நான் அல்லானு சொல்றதுக்கு முன்னாடி அம்மா னுதான் சொன்னேன்! பிறக்கும்போது மனுசனாத்தான் பொறந்தேன்! அப்பறம்தான் நான் முசுலீம்னு தெரிஞ்சது! நான் பேசினது யாரையாவது காயப்படுத்திருந்தா மன்னிச்சிருங்க! எனக்கு ஒண்ணுன்னா அந்த கடவுளுக்கு முன்னாடி என் மதக்காரனுக்கு முன்னாடி பக்கத்து வீட்டு செல்வம்தான் ஓடிவருவான்! நான் இந்த மண்ணோட மக்களோட நகமும் சதையுமா... இல்ல இல்ல ரத்தமும் நரம்புமா கலந்து இருக்கணும்னு ஆசைப்படறேன்! இசுலாத்தை ஏத்துக்கிட்டதால அது சொல்லாததைச் சொல்லி என்னைப் போன்ற சாமானியர்களை சமூகத்திட்ட இருந்து பிரிக்காதீங்க! நான் என் உண்மையான அடையாளத்தை தக்க வைக்க மத அடையாளத்தை தூக்கிபோட தயங்கமாட்டேன். நீங்களும் அப்படி இல்லைன்னாலும் மதம்தான் பெரிசு மனுசங்க அப்பறம் னு நெனைக்காம இருங்க! மதம் நாலு சுவத்துக்குள்ள இருந்தா போதும்! மிஞ்சிப்போனா விழாக்கள் கொண்டாடும்போது வெளிக்காட்டுங்க! மற்றபடி இந்துக்களோடயும் கிறித்தவர்களோடயும் இணக்கமா ஒண்ணுமண்ணா இருக்குறதுதா நம்ம வருங்கால சந்ததிக்கு நல்லது. இசுலாத்துக்கும் நல்லது. நா சொன்னது புரிஞ்சவங்க இனியாவது மாறுங்க.
முதல் கட்டமா யாராவது பாய்னு கூப்டா அப்டி கூப்டாம அண்ணன்னோ தம்பின்னோ கூப்ட சொல்லுங்க! இது என்னோட பணிவான வேண்டுகோள். நன்றி!"
 டிசம்பர் 6 அன்று பள்ளிவாசலுக்கு வெளியே கூடியிருந்த ஒரு சிறிய கூட்டத்தில் படபடவென்று பேசிவிட்டு ரகுமான் இறங்கியதும் சிறிது நேர அமைதிக்குப் பின் கைதட்டல் வானைப் பிளந்தது.

Friday, 14 May 2021

நோன்பு கட்டாயமா?

நோன்பு கட்டாயமா?

இசுலாமியர்கள் மீது திணிக்கப்படும் ஒரு பழக்கம்தான் இந்த ஒரு மாத நோன்பு.
ஆனால் இஸ்லாமிய கொள்கைப்படி இது இறை வழிபாடு என்கிற கணக்கில் வராது!
இசுலாமிய நோன்பு வைக்கும் முறை மக்கள் பசியை உணரவேண்டும் என்றோ இறைவனை நினைக்கவேண்டும் என்றோ உருவாக்கப்பட்டது இல்லை!
அரேபிய பாலைவனத்தில் வெயில் உச்சத்திற்கு செல்லும் மாதத்தில் பகலில் ஓய்வெடுத்துக்கொண்டு இரவில் இயங்குவது வழக்கம். அந்த வழக்கத்தை இசுலாம் சட்டமாக்கியது.
ரமளான் மாதம் பல்வேறு காலநிலையிலும் வருகிறதே என்று சிலர் கேட்கலாம்.
அரேபிய நாட்காட்டி படி ஒரு வருடத்திற்கு (29×6 மாதம் + 30×6 மாதம்) 354நாட்கள். மீதமாகும் 11 நாட்களை அவர்கள் 3 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாதமாக ஆக்கி சேர்த்துக் கொள்வார்கள். அதாவது அந்த வருடத்திற்கு 13 மாதங்கள் இருக்கும்.
நபிகள் நாயகம் தவறுதலாக இந்த 13-வது மாதம் வேண்டாம் என்று விட்டுவிட சொல்லிவிட்டார். இதனால் இஸ்லாமிய நாட்காட்டி காலநிலையுடன் பொருந்தாமல் சுழன்றுகொண்டிருக்கிறது. இதனால்தான் ரமலான் மாதம் வெவ்வேறு கால நிலைகளில் வருகிறது.
நோன்பு இருக்கும் பழக்கம் எல்லா மதங்களிலும் இருக்கிறது. அது உடலுக்கு நல்லது. ஆனால் பாலைவன சூழலுக்கு தொடர்பில்லாத மக்கள் அதிலும் உழைக்கும் வர்க்கம் பகல் முழுவதும் உண்ணாமல் உழைப்பது அதுவும் ஒரு மாதத்திற்கு தொடர்வது உடலுக்கு நல்லது இல்லை. ஓரிரு நாட்கள் இருக்கலாம். இடைவெளி விட்டு அடிக்கடி கூட இருக்கலாம். வாரம் இரண்டு நாட்கள் இருக்கலாம்.
நோன்பை இஸ்லாத் கடமை என்று கூறுகிறது கட்டாயம் என்று கூறவில்லை. இதை கடைபிடிப்பதால் இறையருள் கிடைக்கும் என்றோ தவறினால் தண்டனை என்றோ கூறப்படவில்லை.
நம் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தினர் இவர்கள் நாள் முழுவதும் உண்ணாமல் உழைப்பது மிகவும் கடினம். எனவே உடலுழைப்பு அதிகம் செலுத்துபவர்கள் இதனை விட்டுவிடலாம் என்பது என் கருத்து.
மதவாதிகளின் பேச்சை எப்போதுமே கேட்காதீர்கள். சளியை விழுங்கக் கூடாது என்று பிற்கால இசுலாமிய நூல்களில் கூறியதை உமிழ்நீரைக்கூட விழுங்கக் கூடாது என்று இஸ்லாமிய வெறியர்கள் மாற்றிவிட்டார்கள்.
மதத்தின் பெயரால் மக்களை வதைப்பதில் இவர்களுக்குத்தான் என்னே இன்பம்?!

நோன்பை இப்படித்தான் கடைபிடிக்க வேண்டும், இப்படித்தான் முறிக்கவேண்டும், இவரிவருக்கு விலக்கு என்று பிற்காலத்தில் வந்த இஸ்லாமிய நூல்கள் விளக்கம் கூறுகின்றன. அதில் கூட பசியை உணர்வதற்கு என்கிற சிந்தனை இல்லை.
ஆனால் குர்ஆன் நோன்பு பற்றி இரண்டு வசனங்களில் கூறி முடித்து விடுகிறது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
- குர்ஆன் 2:184

இதில் இறைவன் என்ற சொல் புரிந்துகொள்ள மொழிபெயர்ப்பாளரால் சேர்க்கப்பட்டது. உங்கள் முன்னோர் மீது கடமையாக்கப்பட்டது என்று வருகிறது. அதற்கு முன் இசுலாம் கிடையாது. என்றால் முன்னோரை கடைபிடிக்கவைத்தது எது? அரேபிய கலாச்சார சட்டம் என்று புரிந்துகொள்ளலாம்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
- குர்ஆன் 2:185

முதலில் குறிப்பிட்ட நாட்களில் என்று கூறுகிறது. இரண்டாவது ஒரு மாதத்தில் என்று கூறுகிறது. மாதம் முழுவதுமா என்பதும் தெளிவாகக் கூறப்படவில்லை.

பிற்கால விளக்கவுரை நூல்கள் நோன்பு பற்றி பல விடயங்களைக் கூறுகின்றன. ஆனால் குரான் நோன்பைக் கடைபிடிக்க அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

மனிதத்திற்குப் பிறகுதான் மதம்!
பசியில் வாடும் சக மனிதர் மீதான அக்கறையில் எழுதப்பட்டது இந்த பதிவு.

Monday, 8 March 2021

அரேபிய கலாச்சாரம்

அரேபிய கலாச்சாரம்
------------

நாள்: 02.12.2047
நேரம்: இரவு 11 மணி...

பிரபாகரன் படம் பொறித்த அந்த கார் ஆள் அரவமற்ற சாலையில் சென்று கொண்டிருந்தது.

"வேகமா போங்களேம்ப்பா"

"ஏன்டா?...
கார் ஓட்டும்போது இளையராஜா பாட்டு கேக்குறது என்ன ஒரு சுகம்?!"

ஜிங்குன ஜிங்குன ஜனஜம்
தஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்....

ஜிங்குன ஜிங்குன ஜனஜம்
தஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்

கொத்தமல்லி வாசம் ....
கொத்துகொத்தா வீசும்...
அப்படித்தான் மாமா அத்தமக நேசம்....
வெண்ணயிலே மாமா நெய்வாசம்...
எந் திண்ணையிலே மாமா உன் வாசம்...
ஹேய்...
வாம் முனிம்...

"என்னப்பா நிறுத்திட்டீங்க?"

"இந்த பாட்டு இந்த வரி வரைக்கும்தான் இளையராஜா பாட்டு மாதிரி இருக்கும்.
அப்பறம் கானா பாட்டா மாறிடும்.
தேவா மேல எனக்கு இது ஒரு பெரிய வருத்தம்.
அப்டியே முழு பாட்டா வந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்?!"

திடீரென்று கார் நிறுப்படுகிறது.
அதன் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

"என்னாச்சுப்பா?!"

(மென்மையான குரலில்)
"முகில்! மெதுவா எறங்கி கொஞ்சம் பின்னாடி போய் புதர்ல ஒழிஞ்சிக்கோ!
இந்தா என் செல்போன்.
இதுல சக்திவேல் னு ஒரு அவசர நம்பர் இருக்கா?!
அதுக்கு நாம இருக்குற எடத்த சொல்லி. ஒடனே ஆட்களோட வரச்சொல்லு.
சைலன்ட்ல போட்டுக்கோ!"

"அப்.."

"எதுவும் பேசாதே! சீக்கிரம் போ"

சிறுவன் இறங்கிக்கொள்ள

கார் பத்தடி முன்னே செல்கிறது.
திடீரென்று ஒரு சிறியரக சரக்கு வண்டி மறைவிலேயே வெளியே வந்து  சாலையை மறித்தவாறு நிற்க கார் நிறுத்தப்படுகிறது.
ஏழு பேர் கொண்ட கும்பல் வண்டியை சுற்றிவளைக்கிறது.

அதில் இருவருக்கு வயது நாற்பதுக்கு மேல்.
மற்றவர்களுக்கு பதினெட்டு முதல் இருபது வயது.
அனைவரும் அரைக்குல்லா, கண்மை, கொத்து தாடி, ஜிப்பா, முழங்காலுக்கு மேல் வெள்ளை லுங்கி என்று ஒரே மாதிரி உடை அணிந்திருந்தனர்.

"டேய் ரவூப்! கீழ எறங்குடா"

"ரவுப் இல்லடா! தமிழ்ச் செல்வன்! த்தூ!"

வண்டியை விட்டு தமிழ்ச் செல்வன் கீழே இறங்குகிறார்.

"ஏ இவன பாருங்கடா! நெத்தில சாணிப்பொடி!  பளபளனு சட்ட! ஜரிக வேட்டி! கழுத்துல வேல் ! இவன பாக்க நம்மாளு மாதிரி இருக்கா?! இருந்த கொஞ்ச நஞ்ச இரக்கமும் போச்சு"

"வேற எப்படிப்பா இருக்கணும்?! அல் கொய்தா கமான்டர் மாதிரி இருக்கணுமா?!
இப்பிடி மாறுவேசம் போட்டு அலையவா மார்க்கம் சொல்லுது?!
நீங்க பின்பற்றுரது இஸ்லாத் இல்ல அரேபிய கலாச்சாரம்.
வடக்க திருநீறு பூசின ஒரு இந்துவ காட்டு பாப்போம்!
நா இப்பவும் முஸ்லிம்தான்"

"கழுத்துல என்ன வேல்?! ஓகோ முப்பாட்டன் முருகனா?! அல்லாவுக்கு எதையும் இணைவைக்கலாமா?!"

"கடவுள் ஒருத்தர்தான்
அதுக்காக அம்மா அப்பா தாத்தா பாட்டியை நன்றியோட நினைக்கக்கூடாதுனு இருக்கா?!
முருகன் எங்க முப்பாட்டன்.
குரானும் பைபிளும் சொல்ற இப்ராகிமும் நோவாவும் மாதிரி முருகன் நம்ம முன்னோர்.
அவர் கடவுளா இருக்கார்னு நாங்க சொல்லலயே!
பிரபாகரன் மாதிரி அவரும் நமக்கு ஒரு வழிகாட்டி"

"ச்சீ வாய மூடு! நமக்குனு சொல்லாத! நாங்க வேற"

"ஒன்னோட மொகரய பாத்தாலே தெரியுது! நீ நம்மாளுதான்.
உன்னோட வீடு எந்த தெரு, உன் அப்பன் தாத்தன் என்ன தொழில்னு சொல்லு நீ என்ன ஆளுகனு சொல்றேன்.
இதோ இந்த செவத்தவன் பேச்ச கேக்காத.
இவன் வெளில இருந்த வந்த வந்தேறி"

"டேய்! யாரப் பாத்துடா வந்தேறின்ன அவர் நம்ம சமூகத்துக்கு எவ்வளவு செஞ்சிருக்காரு.
பச்ச துரோகி நீயெல்லாம் அவரப்பத்தி பேசலாமா?!"

"யாரு?! நீ நம்ம தங்கப்பா பேரன்தானே?!
உன் தாத்தா முஸ்லீமா மாறியும் பேர மாத்தாம இருந்தவரு!
வாய்ல நுழையாத பேர வச்சாதான் அல்லா ஒத்துக்குவானானு கேப்பாரு!
நீயென்னடான்னா உன் பிள்ளைய தமிழ் படிக்க அனுப்பாம பள்ளிவாசல்ல உருது படிக்க அனுப்புற?!
நேத்து மதம் மாறின ஆட்கள்தான்டா ரொம்ப கொதிக்கிறீங்க!
நான் பரம்பரை முஸ்லீம்.
எங்க கட்சியோட துணைத்தலைவர் ஒரு மரைக்காயர்.
அவங்க ஆயிரம் வருசமா முஸ்லீம்.
அவர்ட்ட பேசுறியா?"

"யாரு முத்துமீரான சொல்றியா?!
அவனென்ன... உங்க பெரிய தலைவரே யாழ்ப்பாணத்துல இருந்து  எங்கள துரத்திதான விட்டாரு!
காத்தான்குடி கொலையை நாங்க மறக்கமாட்டோம்"

"என்னோட பெரிய தலைவன் அது பத்தி விளக்கம் கொடுத்து மன்னிப்பு கூட கேட்ருக்காரு.
எங்க அண்ணனும் பல தடவ வெளக்கம் சொல்லிட்டாரு.
சிங்கள பொதுமக்களயே கொல்லாத தலைவர் தன்னோட இனத்து முஸ்லீம்களையா கொல்வாரு.
எல்லாம் உங்கள மாதிரி மதவெறி பிடிச்ச ரவுடி கும்பல்களால வந்த வினை.
உங்களால இங்கயும் அதுதான் நடக்கும்.
உலகமே முஸ்லீம்கள கைவிட்டமாதிரி தமிழ்நாடும் கைவிடும்.
எங்கள மாதிரி தமிழ் கலாச்சாரத்துக்கு மாறிடுங்க.
நாலு சுவத்துக்குள்ள மதத்த வச்சிக்கோங்க.
எங்க அண்ணன்தான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு"

"பெரிய நொண்ணன்.
அந்த ஆமவாயன் பெரிய மாமா நீ சின்ன மாமா ரெண்டுபேரும் சேந்து கூட்டிக் கொடுக்குறீங்க.
இதோட எங்க பொண்ணுங்க நாலு பேர கைமாத்தி விட்ருக்க.
இப்ப கூட கூட்டிக்கொடுத்துட்டுதான வார.
இந்நேரம் ஒரு முஸ்லீம் ரத்தத்துல ஒரு சைத்தனோட விந்து கலந்திருக்கும்"

"ஹ... ஹ... என்னது ரத்தமா?! ரத்தத்துக்கும் மதத்துக்கும் என்னப்பா சம்பந்தம்.
உன்னோட ரத்தத்துல ஒன்னோட இனம் வேணா என்னனு பாக்கலாம்.
மதம் என்னனு பாக்கமுடியாது.
  ஆசப்பட்டவங்கள அவங்க பெத்தவங்க சம்மதத்தோட சேத்துவச்சேன்.
இதுல என்ன தப்பு?!
இதே நீங்க எத்தன பேருக்கு பொண்ணு கொடுத்து முஸ்லீமா மாத்திருக்கீங்க?!
எத்தன பொண்ணுகள மடக்கி மதம் மாத்தி கல்யாணம் பண்ணிருக்கீங்க?!
அதுக்கு பேரு என்ன?!
அதுக்கு கூலியா அல்லா சொர்க்கத்துல பொண்ணுங்கள.."

அதிலொரு இளைஞன் எறிந்த ஒரு பெரிய கல் தமிழ்ச் செல்வன் தலையில் விழ அவர் மயங்கி சரிகிறார்.

"டேய் உன்னாலதான்டா என் நிஷா எனக்கு கெடைக்காம போய்ட்டா?!
காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்துவந்தவன் கூட்டிட்டு போனானாம்.
ஒக்காலி சாவுடா! சாவுடா!"

என்றவாறு கத்தியால் வயிற்றில் பலமுறை குத்துகிறான்.

தூரத்தில் அதிவேகமாக கார் வரும் வெளிச்சம் தெரிகிறது.

ஒருவன் ஆடு வெட்டும் கத்தியால் தமிழ்ச் செல்வன் கழுத்தை வெட்டிவிட்டு தமிழ்ச் செல்வனது காரையும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடுகின்றனர்.

பின்னால் வந்த ஆட்டோ அங்கே வந்து நிற்கவும் இவர்கள் புறப்படவும் சரியாக இருக்கிறது.

"டேய் என் தம்பிக்கு மட்டும் எதாவது ஆச்சு உங்க வம்சமே இருக்காதுடா.."

என்கிற குரல் தப்பிச் செல்பவர்களின் காதில் விழுந்தது.

தமிழ்ச் செல்வனை தூக்கிக் கொண்டு ஆட்டோ எதிர்திசையில் பயணமானது.

காருக்குள் யாருமே பேசவில்லை சிறிது நேரம் கழித்து ஒருவன் பிளேயரை ஆன் செய்தான்.

ஜிங்குன ஜிங்குன ஜனஜம்
தஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்....

ஜிங்குன ஜிங்குன ஜனஜம்
தஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்...

கொத்தமல்லி வாசம் ....
கொத்துகொத்தா வீசும்...
அப்படித்தான் மாமா அத்தமக நேசம்....

வெண்ணயிலே மாமா நெய்வாசம்...
எந் திண்ணையிலே மாமா உன் வாசம்...
ஹேய்... வாம் முனிம்மா வா...

"ச்ச எவ்வளவு நல்ல பாட்டுய்யா! இத அப்டியே முழுசா ஒரு பாட்டா போட்ருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்.
கெடுத்துட்டானுகளே..."

முகநூலில் 05.09.2021

அப்பையா

அப்பையா

25 வயதில் மலேசியாவிலிருந்து வந்திருந்த அப்பு ஆளே மாறியிருந்தான். மழுங்க சிரைத்த மோவாய் மேலே சீரான முறுக்கு மீசை வைத்திருந்தான். ஒரு நல்ல பைக் வாங்கியிருந்தான். கழுத்தில் புலிப்பல் சங்கிலி. ஐந்தரை அடி உயரத்திற்கு ஏற்றவாறு சதைபோட்டிருந்தது. ஊர் பெரியவர்கள் 'உன் தாத்தன் மூக்கையன் மாதிரியே இருக்கியேப்பா!' என்று சொன்னார்கள்.
அவனும் அவனது நண்பன் மாரியின் தம்பியான அகிலனும் வெளிநாட்டு சாராயத்தை ருசிக்க அப்பு புதிதாக வாங்கியிருந்த தோப்பில் புதிதாக போடப்பட்டிருந்த தகரக் கொட்டகையில் அமர்ந்திருந்தனர். சிறிது தூரத்தில் வயல்வெளிகள் ஊடாக செல்லும் தார் சாலை தெரிந்தது. நேரம் இரவு  பதினொன்றைத் தாண்டிவிட்டதால் வாகனங்கள் எதுவும் செல்லவில்லை. இருவரும் பேசிக்கொண்டே குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு புல்லட் இவர்களுக்கு நேர் எதிரே ஓரங்கட்டியது. அதில் ஆறடி உயர தடியனும் அவனுடன் ஒரு ஐந்தடி உயர ஆளும் இறங்கி சாலையோர புதரில் எதையோ மறைத்துவைத்தனர். தகரக் கொட்டகையில் மின் இணைப்பு இன்னும் கொடுக்கப்படவில்லை எனவே அவர்களுக்கு இவர்கள் பார்த்துக் கொண்டிருப்பது தெரியவில்லை. ஆனால் சாலையில் விளக்கு இருந்ததால் அவர்களது கரிய உருவத்தை இவர்களால் பார்க்க முடிந்தது. பிறகு இருவரும் புதரில் சிறுநீர் கழித்துவிட்டு கிளம்பினர். அப்பு அகிலனைப் பார்த்தான். அவனோ கொலைவெறியுடன் அந்த இருவரும் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பு என்னவென்று வினவினான். அகிலன் "அந்த தடியன்தான் எங்கள் அம்மாவைக் கொன்றவன்" என்று கூறினான்.
அப்பு அதிர்ச்சியடைந்தான். அகிலனின் அம்மா வேணி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நின்றார். அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஏழை. சல்லிக்கட்டு காளையிடம் கணவனை இழந்து விதவையானவர். அவரை எதிர்த்து நின்ற ஆளுங்கட்சி வேட்பாளர் விலகிக்கொள்ளும்படி மிரட்டினார். வேணி மிரட்டலுக்குப் பணியவில்லை. அதனால் ஒருநாள் காலையில் அவர் தம் கூட்டாளிப் பெண்களுடன் நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு வேலைக்குச் சென்றபோது அந்த எதிர்த்தரப்பு வேட்பாளர் அனுப்பிய அவரது சமூதாயத்தைச் சேர்ந்த குண்டர்கள் வழிமறித்து அந்த அம்மாவை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். அப்பு மலேசியாவிற்குப் போன இரண்டாவது நாள் இது நடந்தது. வேணியின் மூத்த மகன் மாரியப்பன் அப்புவின் உயிர் நண்பன். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத படிப்பாளி மாணவன். பரமசாதுவான மாரிக்கா இப்படி நடக்கவேண்டும் என்று அப்புவின் மனம் பல நாள் நிம்மதியின்றி தவித்தது. வேணியம்மாவுக்கு மாரியப்பனுக்கு அடுத்து உலகம்மாள் என்கிற பெண் உண்டு. இந்த கொலையால் அவளுக்கு ஏற்பாடு செய்திருந்த திருமணம் நின்றுபோனது.
மாரியப்பன் இதுதொடர்பாக வழக்கு போட்டு  அலைந்து கொண்டிருக்கிறான்.
அப்பு அகிலனுக்கு ஆறுதல் கூறினான். நீதிமன்றம் எப்படியும் தண்டனை கொடுத்துவிடும் என்று நம்பிக்கை ஊட்டினான். அகிலன் விரக்தியுடன் "அதற்குள் இவன் வயதாகி தானே செத்துவிடுவான். இவனைக் கொல்லச் சொல்லி அனுப்பிய அந்த எம்.எல்.ஏ வும் ஆண்டு அனுபவித்து செத்துப்போவான். அப்பறம் அவன் மகன் எம்.எல்.ஏ ஆகிடுவான்" என்று கூறினான். அந்த கொலைக்குப் பிறகு படிப்பை விட்டுவிட்டு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட அகிலன் அன்று நன்கு குடித்துவிட்டு புலம்பியபடி உறங்கிப் போனான்.

அப்பு இதே சிந்தனையாகவே இருந்தான். அதெப்படி எங்கிருந்தோ பிழைக்க வந்த ஒரு சமூகம் இன்று இவ்வளவு ஆதிக்கம் பெற்று விளங்குகிறது? எப்படி இவ்வளவு நிலங்களை வளைத்தார்கள்? எப்படி இவ்வளவு பெருகினார்கள்? எப்படி இவ்வளவு சம்பாதித்தார்கள்? மிகச் சிறுபான்மையாக இருந்துகொண்டு ஒரு கட்சியை உருவாக்கி எப்படி ஆட்சியிலும் இருக்கிறார்கள்? அவன் யோசித்து யோசித்துப் பார்த்தான் ஒன்றுமே புரியவில்லை.

இங்கே மண்ணின் மைந்தர்கள் இரு சமூகங்களாக பிரிந்து தமக்குள் சண்டையிட்டு ஒற்றுமையின்றி இருப்பதுதான் காரணம் என்று சலிப்புடன் சிலர் கூறினர். நன்கு யோசித்த பிறகுதான் புரிந்தது. இவர்கள் திட்டமிட்டே இரண்டு பெரும் சமுதாயங்கள் சரிசமமாக வாழும் பகுதிகளில் அவர்களுக்கு மத்தியில் குடியேறியுள்ளனர். பிறகு அந்த இரண்டு சமுதாயத்தையும் மோதவிட்டு அதற்கு நாட்டாமை செய்வது போல இடையில் புகுந்து தாம் தலைவன் ஆகின்றனர். அதிகாரம் கைக்கு வந்தால் பணம், செல்வாக்கு என மற்றதெல்லாம் தானாய் வந்து சேராதா?! அப்படியே நிலங்களை வளைத்து சொத்து சேர்த்து பல பிள்ளைகள் பெற்று தாமும் பெரும் ஆதிக்க சமூகமாக உருவெடுக்கின்றனர்.
இவர்கள் ஒரு கட்சியை நிறுவி இரு இனங்கள் சமமாக ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளில் தனது இனத்தவரை நுழைத்து வெற்றிபெற வைக்கின்றனர். பெரும்பான்மையாக ஒரேயொரு சமூகம் ஆதிக்கம் செலுத்தும் தொகுதி என்றால் அந்த பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு அடிமையை நிறுத்தி வெற்றிபெற வைக்கின்றனர். அக்கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தலைவர்களும் எல்லாவித சமூகங்களும் வசிக்கும் நகர்ப்புற தொகுதியில் நின்றுதான் வெற்றிபெறுவார்கள்.
சில பெரும்பான்மை சமூகங்கள் தமக்கென கட்சி நிறுவி இவர்களுடன் பேரம் பேசி கூட்டணி என்கிற பெயரில் சிறிதளவு மரியாதையுடன் பதவியில் இருக்கிறார்கள். இவ்வாறாக இவர்கள் மாநில அதிகாரத்தைக் கைப்பற்றி ஊழல் செய்து கொழுப்பதுடன் மத்திய அரசுக்கு மாநில அரசின் உரிமைகளையும்  கார்ப்பரேட் கம்பனிகளுக்கு மாநிலத்தின் வளங்களையும் விற்று பெரும் அரசியல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

தேர்தலுக்கு நான்கைந்து மாதமே இருந்தது. எங்கேயும் ஒரே பரபரப்பு! அந்த முரடனும் அவனது அல்லக்கையும் அவனது சகாக்களுடன் அங்குமிங்கும் போவதும். ஊரே அவர்களைக் கண்டு மிரள்வதையும் அப்பு கவனித்தான்.

ஒரு நாள் இரவு அதேபோல அகிலனும் அப்புவும் பக்கத்துத் தோப்பில் இருந்து இறக்கப்பெற்ற தென்னங்கள்ளை குடித்துக்கொண்டிருந்தனர். அதேபோல தடியனும் அவனது அல்லக்கையும் இறங்கி புதரில் எதையோ மறைத்துவைக்கத் தொடங்கினர். நிதானமான போதையில் இருந்த அப்பு சட்டென்று எழுந்துபோய் இருட்டில் எதையோ தேடினான்.  முரடன் புதர் அருகே சிறுநீர் கழிக்க உட்கார்ந்த வேகத்தில் புதரிலிருந்து ஒரு கால் இடது  தோள்பட்டையில் பலமாக மிதிக்க நிலை தடுமாறிக் கீழே விழுந்தான். ஏறிட்டுப் பார்த்தால் மரம் வெட்டும் அரிவாளுடன் அப்பு நின்றிருந்தான். அப்பு அரிவாளைக் கழுத்துக்கு வீசினான். அந்த முரடன்  தலையை பின்னிழுத்து இடது கையால் தடுக்கவும் செய்தான். இதனால் இடதுகை மணிக்கட்டு வெட்டிப்பட்டு துண்டாகி தொங்கியது. முரடன் அப்படியே குப்புற படுத்து தர தரவென கால்களைத் தரையில் தேய்த்து எழுந்து புல்லட்டை நோக்கி ஓடினான். அவனது அல்லக்கை புல்லட்டில் இருந்து ஒரு வாளை உருவி தடியனுக்குக் கொடுக்க ஓடிவந்தான். ஆனாலும் அப்புவின் தோற்றத்தையும் வெட்டுப்பட்டுவிட்ட முரடனின் பயத்தையும் பார்த்தவன் அப்படியே தடியனுக்கு ஒரு அடி முன்னால் அந்த கனமான வாளைப் போட்டுவிட்டு ஓடிவிட்டான். முரடன் குனிந்து வலக்கையால் வாளை எடுக்கவும் அப்பு அவன் புட்டத்தில் மிதித்துத் தள்ளினான். குப்புற விழுந்தாலும் சட்டென்று திரும்பி வாளை அப்புவின் காலுக்கு வீசினான். அப்பு சட்டென்று பின்வாங்கி ஒரு அடி எடுத்து வைக்கவே அவன் மறுபடி வீசினான். அப்புவின் வலது காலில் ஒரு ஆழமில்லாத வெட்டு ஒன்று விழுந்தது. அப்புவும் அரிவாளை வீசியிருந்தான். அது அவன் வலதுகை முட்டியில் ஆழமாக வெட்டி குபுகுபுவென ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. இரண்டு கைகளும் ஊனமானதால் முரடன் எதிர்ப்பதை விட்டுவிட்டு எழுந்து தலைதெறிக்க ஓடத் தொடங்கினான். அப்பு அரிவாளை வாயில் கவ்விக் கொண்டு சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டான். ஆனாலும் காலில் உள்ள காயத்தால் வேகமாக ஓட முடியவில்லை. ஒரு கருங்கல்லை எடுத்து முரடனின் பிடரிக்கு குறிவைத்து எறிந்தான். அந்த கல்லின் கூர்மையான பகுதி முரடனின் அடிக்கழுத்தில் போய் பலமாக மோதியது. முரடன் மறுபடி கீழே விழுந்தான். அப்பு அவன் அருகில் போனான். முரடன் இப்போதும் இடது கையால் வலது கையைப் பிடித்தபடி வாளை அப்படியும் இப்படியுமாக வீசிக் கொண்டிருந்தான். அப்பு சரியாக கணித்து இடது காலை விருட்டென்று செலுத்தி அவனது வலதுகையை தரையுடன் சேர்த்து மிதித்தான். முரடன் வாளைக் கைவிட்டான். பிறகு வலது காலால் அவனது இடது கையை விலக்கி தரையில் விழச்செய்து அந்தக் கையின் மேல் தன் வலதுகால் முட்டியை ஊன்றி முரடனின் மார்பு மீது அமர்ந்துகொண்டான். இரு கைகளும் சிறைப்பட்டு எழ முடியாத நிலையில் முரடன் கால்களை பலமாக உதறி திமிரினான். அப்பு தாமதிக்காமல் வாயில் கவ்வியிருந்த அரிவாளை எடுத்து இருகைகளாலும் இருமுனைகளையும் பிடித்து கூரான பகுதியை முரடனின் கழுத்தில் பாய்ச்சினான். ஓடி வந்த அகிலன் அப்புவின் முன்னால் வந்து நிற்கவும் அரிவாள் விழுக்கென்று கழுத்துக்குள் போய் பீய்ச்சியடித்த ரத்தம் அப்புவின் முகத்தில் அபிசேகம் செய்யவும் சரியாக இருந்தது. ஆட்டு கிடாயை மல்லாக்கக் கட்டி அதன் நெஞ்சைக் கீறி பழங்களைப் போட்டு அதை வாயால் சாப்பிடும் தன் குலதெய்வம் போல அகிலனின் கண்களுக்கு அப்பு தெரிந்தான்.

ஒரு வாரம் கழித்து பெருமாள் கோவில் கருவறை முன்பு தரையில் மண மக்கள் அமர்ந்திருக்க, ஐயர் மந்திரம் ஓதி மஞ்சளுடன் கட்டப்பட்டிருந்த தாலியை தட்டில் வைத்து நீட்ட, கெட்டி மேளம் முழங்க, அப்பு தாலி எடுத்து கொடுக்க, உமாவின் கழுத்தில் மாப்பிள்ளை கட்டினார். தன் தங்கையின் திருமணச் செலவுகளை ஏற்றுக்கொண்ட அப்புவை மாரியப்பன் கண்ணீருடன் தழுவிக்கொண்டான். கோயிலில் கல்யாணம் முடிந்து மேளதாளத்துடன் ஊர்சுற்றி வந்து அதே கோயிலின் கல்யாண மண்டபத்திற்கு அனைவரும் வந்துவிட்டனர். மாமன் - மைத்துனர் உறவுமுறை உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் புறங்கையில் சந்தனம் வைத்துக் கொள்ளும் சடங்கு நடந்தது. அப்பு உமாவின் கணவர் மற்றும் அவரது சகோதரர்களுக்கு புறங்கையில் சந்தனம் வைத்துக்கொண்டு இருக்கும்போது ஒரு காவலர் வந்து "இங்கே அப்துல்லா யார்?" என்று கேட்டார். நிமிர்ந்து பார்த்த அப்பு "நான்தான்" என்று கூறினான். "ஐயா வரச்சொன்னாங்க! கொஞ்சம் வர்றீங்களா?" என்று காவலர் கூற எழுந்து வெளியே வந்தான். அப்புவை ஜீப்பில் ஏற்றி கொண்டுசென்றனர். அங்கே யாரும் அதிர்ச்சியாகவில்லை.  அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். மாரியப்பனும் அகிலனும் பைக்கில் பின்னாலேயே போனார்கள்.

காவல்நிலையத்தினுள் யாரையும் விடவில்லை. உள்ளே அப்புவைச் சுற்றி நான்கைந்து காவலர்கள் அமர்ந்துகொண்டனர். ஒரு உயரதிகாரி மட்டும் கேள்விகளைக் கேட்டார்.

"ஆறு நாட்களுக்கு முன்பு பிரபு என்பவரை நீங்கள் கொலை செய்துள்ளீர்கள். கண்ணால் பார்த்த சாட்சி இருக்கிறது"

"ஆம்! உண்மைதான்"

"மதக் கலவரம் வரும் சூழலை உருவாக்கிவிட்டீர்கள். நீங்கள் உடனடியாக சரணடைந்திருந்தால் பிரச்சனை பெரிதாயிருக்காது"

"மதத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை. அவரை நான் கொன்றதற்கு வேற பல காரணங்கள் உள்ளன"

"பொய்! நீங்கள் இசுலாமியர்தானே?"

"ஆம்!"

"நீங்கள் மதத்தை வீடுவீடாகப் பிரச்சாரம் செய்யும் இயக்கத்தில் இருக்கிறீர்கள்தானே?!"

"இல்லை! அதிலிருந்து நான் விலகி ஆறு மாதம் ஆகின்றது"

"உங்களுக்கும் பிரபுவுக்கும் எந்த முன்விரோதமும் இல்லை. அவர் சார்ந்த கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சி இசுலாமியருக்கு பிடிக்காதவை அதனால் நீங்கள் இந்தக் கொலையைச் செய்துள்ளதாக புகார் கொடுத்திருக்கிறார்கள்"

"நான் மதப் பற்றுடன் இருந்தவன்தான். இப்போது அப்படியில்லை. இந்த கொலையை நான் மதத்திற்காக செய்யவில்லை"

"பிறகு பிரபுவை ஏன் கொலை செய்தீர்கள்?"

"பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் இருந்து சொல்கிறேன் கேளுங்கள். என் தாத்தாவின் அப்பா காலம் வரை எங்கள் குடும்பம்தான் இந்த ஊர் ஜமீன்தார். எந்த பிரச்சனை என்றாலும் எங்கள் குடும்பம்தான் தலையிட்டுத் தீர்த்துவைக்கும். ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட பிறகும் அது தொடர்ந்தது. என் தாத்தா பெயரைச் சொன்னால் இங்கே பெரிய மரியாதை கிடைக்கும்.  காரணம் அவர் நாட்டாமை என்பதால் இல்லை. அவர் இருந்தவரை இந்த சுத்துபட்டி கிராமங்களில் எந்த குற்றமும் நடக்கவில்லை. அவர் காலத்தில் இங்கே வந்த ஒரு போலீஸ்காரன் இந்த ஊர் பற்றித் தெரியாமல் இரவில் தனியே நடந்துசென்ற ஒரு பெண்ணை கையைப் பிடித்து இழுக்க அந்த பெண் தப்பித்து ஓடிவந்து வயல்வெளியில் காவலுக்குப் படுத்திருந்த என் தாத்தாவிடம் வந்து முறையிட்டதும் என் தாத்தா அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்திற்கே போய் அங்கிருந்த காவலர்களை சிலம்ப பயிற்சியின் உதவியுடன் அடித்துபோட்டுவிட்டு அந்த பெண் கைகாட்டிய போலீஸ்காரனின் கையை வெட்டிவிட்டார். இத்தனைக்கும் அந்த பெண் எங்கள் சொந்தமோ சமுதாயமோ கிடையாது. இதன் விளைவாக என் தாத்தா பல இன்னல்களை அனுபவித்தார் என்றாலும் அவர் தட்டிக்கேட்ட துணிச்சல் அவர் பெரிய பெயர்வாங்கக் காரணமாக இருந்தது. அதனால் எங்கள் குடும்பத்திற்கு பெரிய மரியாதை. எந்த பிரச்சனை என்றாலும் எங்கள் குடும்பத்தினரிடம் வந்து தீர்த்துக்கொள்வது தொடர்ந்தது. என் அப்பா காலத்திலும் அது தொடர்ந்தது. என் அப்பா தமிழகத்தில் குடிப்பழக்கம் அதிகரித்தபோது அதற்குப் பலியாகி இளமையிலேயே இறந்துவிட்டார். என் தாத்தா எங்களுக்கும் என் மூன்று அத்தைகளுக்கும் சொத்துகளைப் பிரித்துக் கொடுத்திருந்தார். என் அப்பாவின் குடிக்கும் அதன் மருத்துவத்திற்கும் எங்கள் சொத்து கரைந்துவிட்டது.
என் தாய்க்கும் உடன்பிறந்தார் யாருமில்லை. ஆதரவற்று நின்றிருந்த எங்களை என் அம்மா வேலை செய்த துணிக்கடை முதலாளியான இசுலாமிய பெரியவர்தான் ஆதரித்தார். இதனால் பக்கத்து நகரத்தில் அவர் வீடு இருக்கும் இசுலாமிய தெருவுக்கு குடிபுகுந்தோம். எனக்கு 15 வயது இருக்கும்போது எனக்கு அரபு நாட்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி எங்கள் குடும்பத்தை மதம் மாறக் கோரினர். நாங்களும் மாறினோம். அம்மையப்பன் என்கிற என் பெயரை அப்துல்லா என்று மாற்றினர்.  எனக்கு பள்ளிவாசலில் வகுப்புகள் நடத்தி 16 வயதிலிருந்தே இசுலாமிய பரப்புரைக்கான குழுவில் சேர்த்துக் கொண்டு இந்தியா முழுவதும் அழைத்துச் சென்றனர். பல வெளிநாடுகளுக்கும் போயிருக்கிறேன். 21 வயதில் வெளிநாட்டில் நல்ல வேலையும் வாங்கிக் கொடுத்தனர்.
ஆனாலும் என் பரம்பரை அடையாளத்தை விட்டு அந்நியமாகிப் போனது போன்ற உணர்வு எனக்குள் இருந்தது.
நான் கொலை செய்ய முதல் காரணம் என் நண்பனின் அம்மாவை அவன் கொன்றதுதான் என்றாலும் எனக்கு என் தாத்தா போல பெயர் வாங்க வேண்டும் என்றுதான் இதைச் செய்தேன். தேர்தலில் தாம்தான் வெல்லப்போகிறோம் என்கிற திமிரில் அவர்கள் போட்ட ஆட்டம் என்னை மிகவும் எரிச்சலூட்டியது. யார் இடத்தில் வந்து யார் தோரணை பீற்றுவது?! அதனால்தான் கொன்றேன். என் அறவுணர்ச்சி என்னை அப்படி செய்யவைத்தது"

29 வயதான அப்பு தன் அத்தை மகளுடன் முதலிரவு அறையில் அமர்ந்திருந்தான். அவள் மிரட்சியுடன் கேட்டாள் "உண்மையிலேயே நீங்கள்தான் அந்தக் கொலையைச் செய்தீர்களா?" அப்பு புன்னகையுடன் "ஆம்" என்றான்.
"எப்படி அவ்வளவு பெரிய தடியனை வீழ்த்தினீர்கள்?"
"எனக்கே புரியவில்லை. அன்று எப்போதும் போலத்தான் இருந்தேன். திடீரென்று அப்படி ஒரு வேகம் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. எல்லாம் நிமிடத்தில் நடந்து முடிந்துவிட்டது"
அவள் ஏறிட்டு காதலுடன் பார்த்தாள்.
"எப்படி இருந்த நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்!"
நினைவுகள் பின்னோக்கி சுழன்றன.

21 வயதான அப்பு தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு வந்து நான்கு மாதம் ஆகிறது. உடன் பணிபுரியும் கணேசனுக்காக காரில் காத்திருந்த அவன் முன்பாக ஒரு தமிழ் தம்பதி கடந்து சென்றனர்.
'அடடா! நம் ஆட்கள் ஆயிற்றே எங்கே போகிறார்கள்?! வேட்டி சட்டை, பட்டுப்புடவை, தலை நிறைய பூ, கையில் தாம்பூலம் என கோவிலுக்குப் போவது போல போகிறார்களே?!"
காரில் இருந்து இறங்கிய அப்பு அவர்களைப் பின் தொடர்ந்தான் "கற்பூர நாயகியே கனகவல்லி.." என்ற பாடல் காதில் விழுந்தது. சிறிது தூரத்தில் ஒரு பெரிய கோவிலின் கல்லால் ஆன மதில் தெரிந்தது. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படியே தமிழகத்துக் கோவில் போல வாயிலின் இருபக்கமும் உட்கார கல் திண்ணை அதற்கு கற்தூண்கள். வாசலின் மேலே சிறிய கோபுரம். சிமென்ட் சிலை செய்யும் சுதைச் சிற்பிகளின் கலைத்திறனுடன் வண்ணம் பூசும் ஓவியர்களின் கைவண்ணமும் சேர்ந்துகொள்ள தத்ரூபமாக நின்றிருந்தன தெய்வங்கள்.   அவனுக்கு உள்ளே போக தயக்கமாக இருந்தது. மீசை இல்லாத தாடியுடனும் குல்லாவுடனும் உள்ளே போவதா?!  அப்போது கணேசன் அங்கே வந்தார்.
"வாங்க சார்! போகலாமா?!" என்று கேட்டான். "வாங்க சாமி கும்பிட்டுட்டு போவோம்" என்று அழைத்தார். சரியென்று தலையாட்டிவிட்டு குல்லாவைக் கழற்றி பைக்குள் வைத்துக்கொண்டான். இருவரும் உள்ளே சென்றனர். அது மாரியம்மன் கோவில் கருவறைக்கு அருகில் நின்றான். அபிசேகம் நடக்கும்போது அம்மனின் முகத்தைப் பார்த்தான். கருப்பாக கன்னங்களில் சதையுடன் வட்டமான முகத்தைப் பார்த்தபோது அவனுக்கு தன் அம்மாவின் நினைவு வந்தது. கைகூப்பியபடி நின்றிருந்தான். ஐயர் கொண்டுவந்த தீபத்தை கண்களில் ஒற்றினான். அவர் திருநீறு பூசிவிட்டார் கையிலும் திருநீறு வாங்கிக் கொண்டான். பிரகாரம் சுற்றி ஓரிடத்தில் பிரசாதமும் வாங்கிக் கொண்டான். யாருமே முகம் சுழிக்கவில்லை. பிரகாரம் சுற்றும்போது அருகில் சுற்றிவந்த ஒருவர் கேட்டார் "தம்பி எந்த ஊர்?" என்று.
"திண்டுக்கல் பக்கம்"
"ஓ! அப்படியா! நான் தூத்துக்குடி"
"சரிங்க!"
"என்ன வேலை?"
"பெரிய மரங்களை கப்பலில் அனுப்பும் நிறுவனத்தில் வேலை"
"நான் குருவியாக வந்திருக்கிறேன்"
"சரிங்க"
"நல்லது, பார்ப்போம்"
அவர் விடைபெற்றார்.
அவர் "நீங்கள் இசுலாமியரா?" என்று அவர் கேட்கவேயில்லை. கணேசன் வேகமாக சுற்றிக்கொண்டு முன்னே போய்விட்டார். அப்பு வெளியில் வந்து கல் திண்ணையில் அமர்ந்தான். பிரசாதமாக தந்திருந்த சக்கரைப் பொங்கலை வாயில் போட்டான். அவனுக்கு அப்படியே பத்து ஆண்டுகள் முன்பு இறந்துபோன தன் பாட்டி நாச்சியம்மாளின் நினைவு வந்தது. அவனையும் அறியாமல் கண்ணீர் குபுக்கென்று கொட்டிவிட்டது. அப்போது அவன் அருகில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார்.
"தம்பி! உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டார். 'அடடா! இவர் என்னை இசுலாமியரா என்று தெரிந்துகொள்ள பெயரைக் கேட்கிறாரே' என்று நினைத்துக்கொண்டான்.
"அப்துல்லா" என்று கூறினான்.
அவர் "அப்படியா! என் பெயர் எட்வின் ஏசுதாசன்" என்று கையை நீட்டினார். அவன் கைகுலுக்கினான்.
"ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?"
"ஊர் நியாபகம் வந்துவிட்டது"
"போகப்போக பழகிவிடும். ஊர் நினைவு வந்தால் இங்கே வந்துவிடுங்கள்"
"சரிங்க"
கணேசன் பிரகாரம் சுற்றி வந்ததும் இருவரும் கிளம்பினர்.

அறை நண்பர் சாந்தவேலு அன்று கிளம்பி ஊருக்குப் போய்விட்டார். தனியே அமர்ந்திருந்த அப்பு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். மக்கா மதினாவிற்குப் போனபோது வராத அந்த பிணைப்பு உணர்வு மாரியம்மன் கோவிலில் ஏன் வந்தது?
கற்பூரநாயகி பாட்டு போல நெஞ்சைத் தொடும் ஒரு இசுலாமிய பாட்டு கூட ஏன் இல்லை?!
இந்துதான் நம் அடையாளம் என்றால் வட இந்தியா முழுக்க சுற்றி இந்துக்களுடனும் பழகியபோதும் அங்கே இருக்கும் இந்து கோவில்களைப் பார்த்தபோதும் அந்த உணர்வு ஏன் வரவில்லை?
கிறித்தவர்கள் இந்துக்களுடன் இவ்வளவு இணக்கமாக இருக்கும்போது நம்மால் ஏன் முடியவில்லை?
மலேசிய இசுலாமியருக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை. இங்கு உள்ள இந்திக்கார சேட்டுகளைப் பார்க்கும்போதும் அந்நியர் என்றே தோன்றுகிறது. ஆனால் தமிழ் இந்துக்களை பார்க்கும்போது மட்டும் அவர்கள் நம் சொந்த பந்தங்கள் என்று தோன்றுகிறதே! தமிழ் இசுலாமியரைப் பார்க்கும்போதுகூட அந்த அளவுக்கு பற்றான உணர்வு ஏன் வருவதில்லை?!
முப்பது அடிக்கு ஒரு கோவில் இருக்கும் தமிழகத்தில்தான் இந்துக்கள் பெருவாரியாக வாழும் தமிழகத்தில்தான் இந்து மதவெறி மிகவும் குறைவாக இருக்கிறது அது எப்படி?
தமது கடைகளில் மூன்று மத கடவுள்களையும் வைத்து 'எம்மதமும் சம்மதம்' என்று தமிழ்நாட்டு இந்துக்கள் வணங்குகிறார்கள். அவர்கள் அவ்வளவு இறங்கி வந்தாலும் நாம் ஏன் கொஞ்சமும் இறங்கிப் போவதில்லை. கல்லை வணங்கக் கூடாது என்கிறோம் ஆனால் மக்காவில் ஒரு நடுகல் மீது கல்லெறிந்து சாத்தான் ஒழிக என்கிறோம் ஏனிந்த முரண்?
அரபியில் பெயர் வைக்கிறோம், தாடி வைக்கிறோம்,  உருதில் எழுதுகிறோம், நம் மதத்தவர் நடத்தும் கடைகளில் மட்டும் பொருள் வாங்குகிறோம், வேறு மாதிரி உடை அணிகிறோம், சென்ட் கூட வேறுமாதிரி போட்டுக்கொள்கிறோம் அதாவது இசுலாத் கட்டாயமாக்காத பலவற்றையும் செய்து நம்மை நாமே அந்நியர் என்று காட்டிக் கொள்கிறோம். அப்படி இருந்தும் தமிழ்நாட்டு இந்துக்கள் நம்மை ஒதுக்கினார்களா என்றால் இல்லை. இது எப்படி சாத்தியம்?

அவன் எவ்வளவோ யோசித்துப் பார்த்தான். மதம் அவனுக்கு எதையுமே தரவில்லை. அப்படியே எதையாவது தந்தாலும் அது வேறொரு இனத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான். மொழி, பண்டிகை, நாட்காட்டி, சடங்குகள், நம்பிக்கைகள், உணவு, உடை, கலாச்சாரம், நட்பு வட்டம், உறவுமுறை என ஒரு இனத்தால் தரமுடிந்ததை மதத்தால் சுயமாக உருவாக்கித் தரமுடியவில்லை. மதம் கொடுப்பதெல்லாம் போலியான நம்பிக்கைகளும் கற்பிதங்களும்தான் அல்லது இறப்பிற்குப் பிறகு தருவதாகச் சொல்லும் கற்பனைப் பரிசுகள்  மட்டுமே!
எல்லா மதங்களும் அவ்வாறே என்று உணர்ந்தான்.
உலகம் முழுக்க இசுலாமியர் தத்தமது இனத்திலிருந்து அந்நியப்பட்டு பிற இனத்து இசுலாமியருடன் ஒட்டவும் முடியாமல் தன் இனத்திற்குள்ளேயே தனி தீவாக ஆகியுள்ளதையும் அதற்குள்ளும் பல உட்பிரிவுகள் உண்டாகி சுக்குநூறாக சிதறிக் கிடப்பதையும் கண்ணால் கண்டிருக்கிறான். ஆனால் தமிழகத்தில் மட்டும் அப்படி நடக்கவில்லை என்பதையும் அவன் கண்டுகொண்டான்.
இந்து மதத்தையும் ஆராய்ந்து பார்த்தான். இந்துமத தெய்வங்கள் எல்லாரும் மனிதர்களாகவே அவன் கண்களுக்குத் தெரிந்தனர். இந்துமத புராணங்களில் தெய்வங்கள் திருமணம் செய்து குழந்தை பெற்று தமக்குள் சண்டை போட்டுக்கொண்டு பக்தர்களிடம் விளையாடிக்கொண்டு மனிதர்களாகவே இருக்கிறார்கள்.
கோவிலிலும் கடவுளை காலையில் எழுப்பி குளிப்பாட்டி உடை உடுத்தி மலர் சூட்டி நகை அணிவித்து உணவு கொடுத்து திருமணம் செய்துவைத்து ஊர்சுற்ற வைத்து ஊஞ்சலாட்டி பாட்டு பாடி பரிசு கொடுத்து கதைசொல்லி தூங்கவைக்கிறார்கள். என்றால் இவர்கள் மனிதராக இருந்து கடவுளாக ஆக்கப்பட்டு இருக்க வேண்டும்.  தமிழக இந்துக்கள் விலங்குகளையும் மரத்தையும் கூட வணங்குவதன் மூலம் இயற்கையைப் பாதுகாக்க நினைக்கின்றனர். ஒரு போராட்டத்தில் ஒரு மசூதியில் இந்துக்களுக்கு சாப்பாடு போட்டதை அவர்கள் இன்னமும் மறக்காமல் இருக்கின்றனர். ஆனால் கோவில்களில் அன்னதானம் வருடம் முழுவதும் நடக்கிறது. அதை அவர்கள் பெருமை பீற்றியதில்லை. ஆக தமிழ் இனத்தின் மூதாதையர் வழிபாடும் தமிழ் கலாச்சாரமும் தமிழர்களின் கொடை உணர்வும் அரவணைக்கும் பண்பும் திரிந்து கலப்படைந்து  உருவானதுதான் இன்றைய இந்துமதம் என்கிற முடிவுக்கு வந்தான்.
இந்தியாவில் தமிழகத்தில்தான் பழமையான பிரம்மாண்டமான கோவில்கள் இருக்கின்றன. பிற தென்னிந்திய மாநிலங்களிலும் தமிழகத்திற்கு அருகிலுள்ள எல்லைப் பகுதியில்தான் சிறப்பான கோவில்கள் இருக்கின்றன. காசி, கங்கை, இமயமலை எல்லாம் நேரில் போய் பார்த்தால் தமிழக ஆன்மீக தலங்களின் கால்தூசுக்கு பேறாது என்பது புரியும். இப்படி ஆன்மீக பூமியாக இருந்தாலும் எவனாவது இசுலாமியரை வம்புக்கு இழுத்தால் முதல் ஆளாக இந்துக்கள் எதிர்ப்பார்கள். மதரீதியான சர்ச்சைகள் கிளம்பும்போது பரம்பரை இசுலாமியர்  எப்போதும் சாந்தமாக இருப்பதையும் புதிதாக இசுலாத்துக்கு மாறியவர்கள் அளவுக்கதிகமாக குதிப்பதையும் பார்த்தால் இது அப்படியே இந்து மதத்திற்கும் பொருந்துகிறது.  தமிழர்கள் இந்து மதத்தை உருவாக்கி கட்டமைத்து  நிறைகுடமாக அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் அதை ஏற்றுக்கொண்ட வடவர்கள் குறைகுடமாகக் கூத்தாடுகிறார்கள். அவன் கண்கள் திறந்துவிட்டன. அவனுக்கு எது தன் அடையாளம் என்பது புரிந்தது.

மறுநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு அதே கோவிலுக்குப் போனான். அங்கே நான்கைந்து பெரியவர்கள் கைகளில் தமிழ் பத்திரிக்கைகளை வைத்துக்கொண்டு தமிழகத்தில் நடக்கும் விசயங்களைப் பேசிக்கொண்டிருந்தனர். அவனும் அதில் கலந்துகொண்டான். அன்று அறைக்கு வந்தபோது அவனுக்கு நிறைவாக இருந்தது. கண்ணாடியைப் பார்த்தான். முதல் வேலையாக கொத்துத்தாடியை சுத்தமாக மழித்தான். குளித்துவிட்டு கட்டம்போட்ட சாரத்தைக் கட்டிக்கொண்டான். சாந்தவேலு வைத்திருந்த திருநீறை அள்ளி நெற்றி நிறைய பூசிக்கொண்டான். கண்ணாடியைப் பார்த்தான். தொழும்போது தரையில் படும் நெற்றிப் பகுதி மட்டும் கருப்பாக இருந்தது. தான் சொந்த ஊரில் இருப்பதாக நினைத்துக் கொண்டான். மடிக்கணினியில் திருவருட் செல்வர் படம் பார்த்தான். அதில் கடைசி காட்சியில் அப்பர் முன் சிவனும் உமையும் தோன்றி காட்சி தருவர். படம் அத்துடன் முடியப்போகிறது என்று நினைத்தான். ஆனால் அப்பனும் அம்மையும் அப்படியே பீடத்திலிருந்து இறங்கி வந்து நடனமாடுவார்கள். அவனுக்கு மெய்சிலிர்த்துவிட்டது.
மறுநாள் விடிந்ததும் கோவிலுக்குப் போனான். அங்கே அந்த அதிர்ச்சித் தகவல் வந்தது. மலேசிய அரசாங்கத்தின் ஆதரவுடன் அந்த மாரியம்மன் கோவிலை மூட சதி நடந்தது. சாதி, மத பேதம் மறந்து அத்தனை தமிழர்களும் திரண்டு பெரும் போராட்டம் செய்து அதைத் தடுத்தனர். அப்பு அதில் முதல் ஆளாக நின்றான்.

மலேசியாவில் பொங்கல் கொண்டாட அவன் போனபோது அவனது இசுலாமிய நண்பன் தடுத்தான். அப்பு அவனுடன் வாக்குவாதம் செய்தான்.
"இந்தியாவில் சுதந்திர தினம் குடியரசு தினத்தை இசுலாமியர் கொண்டாடுகிறார்களே அது தவறில்லையா?"
"அது தேசிய விழா அதில் என்ன தவறு?"
"அதே போல பொங்கலும் தமிழர்களின் தேசிய விழா"
"பொங்கல் என்பது கதிரவனை வணங்குவது கடவுளைத் தவிர எதையும் வணங்கக்கூடாது"
"அப்படியா? சுதந்திர தினத்தில் தேசியக் கொடிக்கு சல்யூட் அடிப்பது தவறா?"
"அது மரியாதை செய்வதற்காக"
"அதேபோலத்தான் இதுவும்! சூரியனுக்கு மரியாதை செய்வோம். கடவுளாக வணங்கத்தானே கூடாது"
"இந்து மதத்தில் மனிதர்களையும் கூட சாமி என்று கும்பிடுவார்கள்"
"போலிஸ் வேலையில் இருக்கும் ஒரு இசுலாமியர் உயரதிகாரிக்கு எழுந்து நின்று சல்யூட் அடித்துதானே ஆகவேண்டும். உங்கள் தாய் தந்தை இறந்துவிட்டால் அவரது புகைப்படங்களை வைத்து வணங்குவது தவறா?"
"போ! போய் பட்டைபோட்ட பொங்கல் பானையை கும்பிடு"

"மாட்டையும் கும்பிடுவேன்! மரியாதையாக வணங்குவது வேறு கடவுளாக நினைத்து தொழுவது வேறு"

"முப்பாட்டன் முருகன் என்பார்கள் போய் அலகு குத்தி காவடி தூக்கு"

"இந்துக்கள் செய்கிற வழிபாட்டு சடங்குகளில் அர்த்தம் இருக்கிறது. அலகு குத்தி, நடை நடந்து, விரதம் இருந்து, மலை ஏறுவது உடலுக்கு நல்லது. ராணுவ பயிற்சிக்கு சமம். இசுலாத்தில் அர்த்தமற்ற சடங்குகள் எத்தனை உண்டு சொல்லவா?"

"நீயெல்லாம் நரகத்துக்குத் தான் போவாய்!"

" சொர்க்கததிற்கு போக மதகுருக்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டாம் குரான் காட்டும் வழியில் நடந்தால் போதும்"

"குரானில் தாடி வைக்க சொல்லியிருக்கிறது. உன் தாடி எங்கே?"

"முதலில் குரானை ஒழுங்காகப் படி அது கட்டாயமாக வலியுறுத்துகிறதா? வேண்டுமானால் தாடி வைத்துக்கொள்ளுங்கள் என்றுதானே உள்ளது. குரான் கட்டாயமாக வலியுறுத்தும் வட்டி ஒழிப்பு, வரதட்சனை ஒழிப்பு, ஏழைகளுக்கு கொடுப்பது எதையாவது நாம் செய்கிறோமா? மீசையை மழித்து தாடியை வைத்துக்கொண்டு ஐந்து வேளை குனிந்து நிமிர்ந்தால் மட்டும் போதுமா?"

"நீ இசுலாத்தை விட்டு வெளியேறிவிடு"

"அதற்குத்தான் வழி இல்லையே! இருந்தாலும் இனத்திற்காக விட்டுக்கொடுக்கலாம். தவறில்லை. மதம் இல்லாமல் வாழ்ந்துவிடலாம். இனம் இல்லாமல் வாழமுடியுமா?"

"எனக்கு அல்லா மட்டும் போதும்"

"நீ சொர்க்கத்தில் சுகமாக இரு. வெளிப்பார்வைக்கு உலகமே இசுலாத்துக்கு மாறினாலும் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை"

அவன் முறைத்தான். அப்பு தன் மீசையை முறுக்கியவாறு பதிலுக்கு முறைத்தான். அவன் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது. அவன் போய்விட்டான். அப்பு தமிழர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாடினான். ஊரில் அம்மாவையும் கொண்டாடச் சொன்னான். அவன் அம்மாவும் கறுப்பு உடை அணிவதைக் கைவிட்டார்.

இப்போது அப்புவுக்கு 40 வயது.
ஊருக்கு வந்து அந்த கொலையைச் செய்த பிறகு அவன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுக்க போலீஸ் காவலுடன் ஊருக்கு வந்தபோது அந்த ஊரே அவனை மரியாதையுடன் பார்த்தது. பட்டியல் சாதியினரின் தெருக்களைக் கடத்துசென்ற போது அவர்கள் அப்புவை கையெடுத்து கும்பிட்டனர். மாரியப்பன் தேர்தலில் நின்று வெற்றிபெற்றான். அந்த வந்தேறி ஆதிக்க சமூகத்தினர் தேர்தலில் தோல்வியடைந்தனர். மாரியப்பன் மூலம் பேசி தன் மீது மையல் கொண்டிருந்த அத்தை மகள் மகேஸ்வரியை மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து அதை சட்டப்படி பதிவு செய்துகொண்டான். அப்பு இசுலாத்தை விட்டு வெளியேறவில்லை. ஒவ்வொரு இசுலாமியத் தமிழனும்  எப்படி வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தான். அவன் வெளிவேஷம் போடவில்லை. இசுலாத்தின் கட்டாயமான கோட்பாடுகளை அவன் பின்பற்றி வந்தான். அவன் மனைவி மதம் மாறவில்லை. அவனது குழந்தைகளுக்கு தமிழில் பெயர்வைத்தான், எந்த மதமும் சாராத தமிழ் கலாச்சாரப்படி அவர்களை வளர்த்தான். 18 வயதில் அவர்களுக்கு விருப்பமான மதம் எதுவோ அதைப் பின்பற்றட்டும் என்று கூறிவிட்டான்.
பத்து ஆண்டுகள் உள்ளேயும் வெளியேயும் தண்டனைக் காலம் முடிந்துவிட்டது. இப்போது அப்பு ஊர் நாட்டாமையாக இருக்கிறார். தேர்தலிலும் நின்று வென்றுவிட்டார். வேணியைக் கொன்ற மாஜி எம்.எல்.ஏ குடும்பத்துடன் ஊரைவிட்டு ஓடிவிட்டார். அவர்கள் பக்கத்து மாநிலத்தில் இருப்பதாகக்  கூறப்படுகிறது.
அப்புவை இப்போது அனைவரும் 'அப்பையா' என்று மரியாதையாக அழைக்கிறார்கள்.

4 பிப்ரவரி, பிற்பகல் 4:24 ·