Wednesday 3 April 2024

பாமக இசுலாமியரை பயன்படுத்தி கொண்டது

பா.ம.க இசுலாமியரை பயன்படுத்தி கொண்டது 

2013 இல் எழுதப்பட்ட பதிவு 

பாட்டாளி மக்கள் கட்சியின் 'இப்தார்' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முஸ்லிம் தலைவர்கள்!
பழனி பாபா அவர்களால் வளர்க்கப்பட்ட பா.ம.க, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட போது, 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம்களை வேட்பாளராக்கி முஸ்லிம்களின் பணம் பொருளை வீணாக்கியது.

 திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து அகரம் கான் என்ற முஸ்லிமை தான் களத்தில் இறக்கியது.
ஆனால், 2001ல் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளைப் பெற்றபோது (20 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர்) ஒரு முஸ்லிமுக்கு கூட வாய்ப்பளிக்கவில்லை.

 2006ல் திமுக கூட்டணியில் 31 இடங்கள் பெற்றபோது (17 எம் எல் ஏக்கள் வெற்றி பெற்றனர்) கூட ஒரு முஸ்லிமும் நிறுத்தப் படவில்லை.

2011 தேர்தலில் திமுக கூட்டணியில் 30 தொகுதிகளில் போட்டியிட்ட போதும் ஒரு முஸ்லிமுக்கும் வாய்ப்புத்தரவில்லை.

குறிப்பாக, ஏற்கனவே முஸ்லிம்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,க்களாக இருந்த தொகுதிகள் உள்ளிட்ட 'நிச்சய வெற்றி' தொகுதிகளில் கூட முஸ்லிம்கள் நிறுத்தப் படவில்லை.
1. புவனகிரி
2.திண்டுக்கல்
3.பூம்புகார்
4.ஆற்காடு
5.ஆலங்குடி
6. திண்டிவனம்
7.நெய்வேலி
8.திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) போன்ற தொகுதிகளை தன் வசம் வைத்திருந்த பாமக, ஒரு இடத்தில் கூட முஸ்லிம்களை நிறுத்தாமல் 'ஓரவஞ்சனை' செய்தது.

திமுக கூட்டணியில் கணிசமான உள்ளாட்சி இடங்கள் கிடைத்த போதும் முஸ்லிம்களை
புறக்கணித்த கட்சி தான், பாமக.
நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இதே நிலை தான்.
Maruppu - மறுப்பு
05.08.2013

No comments:

Post a Comment