Wednesday, 3 April 2024
பாமக இசுலாமியரை பயன்படுத்தி கொண்டது
Wednesday, 7 June 2023
மேல்பாதி கோவிலுக்கு சீல் வைத்தது சரியா?
Thursday, 10 October 2019
அரசியலில் வன்னியர் இழந்தது என்ன?!
அரசியலில் வன்னியர் இழந்தது என்ன?!
சில வன்னியர்கள்,
அதாவது வன்னியரில் உள்ள பள்ளிகளில் உள்ள பா.ம.க வினரில் உள்ள மிகச்சிலர்,
வன்னியர்களை பிற தமிழர்கள் அதுவும் குறிப்பாக நாடார், முக்குலம், கொங்கு வேளாளர் ஆகியோர் அடிமைப் படுத்த நினைப்பதாகவும்
அதனால் வடதமிழ்நாடு தனியாகத் தேவை என்றும் வாதிடுகின்றனர்.
இதில் சிறிதும் உண்மையில்லை!
--------
மக்கட்தொகையில் 12.5% உள்ள வன்னியர்கள் எம்.எல்.ஏ பதவிகளில் 19.7% இருந்தனர் (1967 இல்).
1971 இல் 16.7% ஆகவும்
1977 இல் 16.2% ஆகவும்
1980 இல் 16.7% ஆகவும்
குறைந்தனர்.
அப்போது
1980 இல் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட பின் இந்த சதவீதம் 17.5% என உயர்ந்த்து.
1989 இல் பா.ம.க தொடங்கப்பட்டு தேர்தலில் குதித்தது.
இதனால் அனைத்து கட்சிகளிலும் வன்னியர்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து ச.ம.உ பதவிகளில் வன்னியர்கள் 18.8% ஐப் பிடித்தனர்.
பா.ம.க பெற்ற வாக்கு எண்ணிக்கையைப் பார்த்த பிற கட்சிகள் மேலும் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.
1991 மற்றும் 1996 இல் வன்னியர் சட்டப் பேரவையில் 22.6% ஐப் பிடித்தனர்.
[CASTE IN POLITICAL RECRUITMENT: THE STUDY OF TWO
MAJOR DRAVIDIAN PARTIES IN TAMIL NADU]
-----------
இது M.L.A பதவி தற்போது M.P பதவிகளைப் பார்ப்போம்.
-------
1977 இல் வன்னியர்கள் அமைச்சர் பதவிகளில் 12.8% இருந்தனர்.
அதாவது 39 இருக்கைகளில் 5 பேர்.
வன்னியர் சங்கம் தொடங்கிய பின் 1980 இல் இது 15.4% ஆக உயர்ந்து
1984 இல் மீண்டும் 12.8% ஆனது.
பா.ம.க தொடங்கப்பட்ட பின்
1989 இல் 18.3% ஆக உயர்ந்தது.
1991 இல் 15.4% உயர்ந்து
1996 இல் 12.8% மீண்டும் ஆனது.
1998 இல் 25.6% ஆக உயர்ந்தது.
அதாவது 39 இல் 10 வன்னியர்கள்.
1999 இல் 20.51% ஆகவும்
2004 இல் 15.4% ஆகவும்
2009 இல் 12.8% ஆகவும்
இருந்து வந்துள்ளது.
[புள்ளி விபரங்களுக்கு நன்றி: 'அச்சமில்லை' இதழ்]
மக்கட்தொகையில் 12.5% உள்ள வன்னியர்கள் பல்வேறு கட்சிகளிலும் இருந்துகொண்டு தனது பங்கிற்கு அதிகமாகவே பதவிகளைப் பெற்று வந்துள்ளனர்.
-----
Monday, 20 August 2018
வன்னியர் பறையர் இணைந்து வணங்கும் கொடைக்காரியம்மன்
வன்னியர் பறையர் இணைந்து வணங்கும் கொடைக்காரியம்மன்
தர்மபுரி , நாயக்கன்கொட்டாய் இளவரசன் திவ்யா காதல் திருமணத்திற்குப் பிறகு நடந்த கலவரங்கள் சம காலத்தில் தமிழகத்தை அதிரவைத்ததாகும்.
இரு சாதிகளிடையே முரண்பாடுகள் அதிகரித்த பின்னரான சூழலிலும் அங்குள்ள “கொடைகாரியம்மன்” திருவிழா பல இடர்ப்பாடுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில் இன்றும் நடந்து வருகிறது.
இன்றும் அத்திருவிழா இணக்கமாக நடந்திடக் காரணமே அக்கோயிலின் தெய்வமான கொடைகாரியம்மன் பறையர்களுக்கும் வன்னியர்களுக்கும் பொதுவான குலசாமி என்பதாலேதான்.
அவ்வூர்களில் இரண்டு சாதிகளிலும் கொடைகாரி, கொடைகாரன் என்ற பெயர்களில் பலர் இருப்பதைக் காணலாம்.
நாய்க்கன்கொட்டாய் கலவரத்தைப் பற்றிய ஆய்வைச் செய்த திரு.ச.சிவலிங்கம் அவர்கள் கொடைகாரியம்மன் திருவிழாவைப் பற்றி பின் வருமாறு எழுதுகின்றார்….
“ஆண்டு தோறும் காணும் பொங்கல் தினத்தன்று கொடைகாரியம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது.
நத்தம் காலனியிலிருந்து கொடைகாரியம்மனை கரகமாக அலங்காரித்து தலையில் சுமந்து செல்வார் பூசாரி (பறையர்).
முதலில் பறையர் சாதியினர் பூசை செய்து வழிபாடு செய்வார்கள்.
பின்னர் வன்னியர் சாதியினர் பூசை செய்து வழிபாடு செய்வார்கள் (அதே பறையர் சாதி பூசாரி மூலமாக).
கொடைகாரியம்மனின் ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக ஊர்மக்கள் (பறையர் சமூகம்) சார்பாக ஓர் ஆட்டுக்கிடா முதல் பலியாகக் கொடுக்கப்படும்.
பின்னர் பிரார்த்தனை செய்பவர்கள் பலி கொடுப்பார்கள்.
அதே போல் ஊர்வலம் கோயிலை அடைந்த பிறகும் ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்படும்.
அவ்வூரைச் சேர்ந்த வன்னியர் மற்றும் பறையர் மக்கள் அவர்கள் எங்கு குடியேறி வாழ்ந்து வந்தாலும் அத்திருவிழாவிற்கு கூடிவிடுவார்கள்.
அவ்வாறு ஆயிரக்கணக்கான பறையர், வன்னியர் மக்கள் அங்கு கூடுவார்கள்.
அன்று அவ்விரு மக்களின் மனங்களில் எல்லையில்லா ஆனந்தம் கூத்தாடுவதைக் காணலாம்.
காலங்காலமாக மனவுணர்வைக் கிழித்துப் புண்ணாக்கியிருக்கும் சாதியிலிருந்து அந்த நாளில் கொடைகாரியம்மன் விடுதலையளித்துவிடும் அடையாளமாக அந்தத் திருவிழா நிறைவு பெறும்”
நன்றி :- காளிங்கன்
Monday, 23 July 2018
OBC ஒதுக்கீட்டில் வந்தேறிகள் ஆதிக்கம்
OBC ஒதுக்கீட்டில் வந்தேறிகள் ஆதிக்கம்
கீழ்க்கண்ட பதிவில் 1985 இல் அப்போதைய OBC சாதிகளில் தமிழரல்லாதார் செலுத்திய ஆதிக்கம் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
(படிக்க சோம்பல்படுவோர் கீழ்க்கண்ட பத்தியை மட்டும் படிக்கவும்)
1985 ல் தமிழரல்லாதார் (ஓபிசி மக்கட்தொகையில்) தமது சமூக சதவீதத்தை விட அதிகமான இடங்களை ஆக்கிரமித்து இருந்தனர்....
[1] (தெலுங்கு) மேளக்காரர் 5.25 மடங்கு
[2] (குஜராத்தி) சவுராஸ்டிரர் 3.80 மடங்கு
[3] (கன்னட) கவுடா 3.0 மடங்கு
[4] (தெலுங்கு) கவரா 2.67 மடங்கு
[5] (தெலுங்கு) தேவாங்கர் 2.41 மடங்கு
[6] (கன்னட) ஜங்கம் 1.87 மடங்கு
[7] (தெலுங்கு) கஞ்ச ரெட்டி 1.75 மடங்கு
[8] (ஹிந்திய) சேட்டு 1.75 மடங்கு
[9] (தெலுங்கு) ஈடிகா 1.50 மடங்கு
[10] (உருது) தெக்கணி முஸ்லீம் 1.42 மடங்கு
[11] (கன்னட) கன்னடிகா ஜைன் 1.37 மடங்கு
[12] (கன்னட) வொக்கலிகர் 1.18 மடங்கு
[13] (தெலுங்கு) சாத்துச்செட்டி 1.77 மடங்கு
என அதிகமான பயனடைந்துள்ளனர்.
அதாவது அத்தனை மடங்கு இடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.
------------------------
(இது பற்றி சற்று விரிவாக அறிய விரும்புவோர் தொடர்ந்து படிக்கவும்)
இதனால் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மற்ற ஓபிசி சாதியினருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய இடங்கள் கூட கிடைக்காமல் செய்தனர்.
மிக அதிக பலனடைந்தோர் தெலுங்கரான சின்னமேளம் (மேளக்காரர்) என்றால்,
மிகவும் பாதிக்கப்பட்டோர் வன்னியர்கள்.
இதனால் வன்னியர் தனி இடவோதுக்கீடு பெற 1989 இல் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் வடமாவட்டங்கள் முழுமையாக ஸ்தம்பிக்க போலிசால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
எம்.ஜி.ஆர் மத்திய அரசிடம் மன்றாட துணைராணுவம் வந்து 21 பேரை சுட்டுக்கொன்றது.
பிறகு OBC இல் மிகவும் பின்னடைந்த சாதிகளை தனியாக எடுத்து MBC மற்றும் DNC உருவாக்கப்பட்டது.
இதற்கான காரணத்தை ஆராய்வோம்.
1985ல் இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் (OBC commission) அறிக்கையின் படி கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஆதிக்க விழுக்காடு கணக்கிடப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு
1,00,000 பேர்களை 'இதர பிற்படுத்தப்படோர் ஒதுக்கீட்டில்' வேலைக்கு எடுப்பதாகக் கொள்வோம்
அதில் 0.2 உள்விழுக்காட்டை கொண்ட மேளக்காரர்கள் நியாயப்படி 200 பேர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் 1050 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதேபோல் நியாயப்படி கொங்கு வெள்ளாளக்கவுண்டரில் 6800 பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் 5916 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது.
இதர பிற்படுத்தப்பட்டோரில் 18% உள் விழுக்காட்டை கொண்டிருந்தாலும் வன்னியர் மிகவும் பின்னடைவில் உள்ளனர்.
இதற்கு காரணம் வேற்றின ஆதிக்கம்.
குறிப்பாக OBC ஒதுக்கீட்டில் 5.25 மடங்கு அதிக சலுகையை அனுபவித்து வந்த மேளக்கார சமூகம்.
ஆனால் வன்னியர் போராடி வாங்கிய MBC யில் சின்னமேளங்களும் சேர்க்கப்பட்டனர்.
(கருணாநிதியின் தனது சாதி மீதான பாசம் இதற்கு காரணம்.
இதனால் இன்றுவரை வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் பின்னடைவைச் சந்திக்கின்றன)
இதனால்தான் தமிழ்ச்சாதிகளுக்கு மட்டுமே இனவொதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும்.
அதுவும் பிசி, ஓபிசி, ஓசி என்று பொத்தம்பொதுவாக இல்லாமல் மக்கட்தொகையில் ஒரு சாதியின் சதவீதத்தைப் பொறுத்து சாதியின் பெயரிலேயே வழங்கப்பட கேட்கிறோம்.
இதுதான் பதிவின் சாராம்சம்.
----------------------
(இந்த விபரம் எப்படி கணக்கிடப்பட்டது என விரிவாக அறிய விரும்புவோர் தொடர்ந்து படிக்கவும்)
1985ல் இருந்த பழைய OBC யில் தற்போதுள்ள நான்கு குழுக்கள் வரும்.
அவை பிற்படுத்தப்பட்டோர் (BC),
பிற்படுத்தப்பட்ட இசுலாமியர் (BC -M),
மிகவும் பிற்படுத்தப்பட்
டோர் (MBC)
மற்றும் சீர்மரபினர் (DNC).
இது தகவலுக்காக மட்டும்.
பதிவில் 1985ல் என்ன நிலை என்று மட்டுமே விவாதிக்கவுள்ளோம்.
இதர பிற்படுத்தப்பட்டோரில் (OBC) குறிப்பிட்ட சதவீதம் உள்ள ஒரு சமூகம் (Caste) எவ்வளவு பயனடைந்துள்ளது என்று கணிக்க
OBC மூலம் பலனடைந்தோர் எண்ணிக்கையில் அச்சமூக சதவீதத்தை கணக்கிடவேண்டும்.
இந்த பலனடைந்தோர் சதவீதம் (ஓபிசியில்) அந்த சமூகத்தின் சதவீதத்துடன் சமமாக இருக்கவேண்டும்.
அதாவது ஒரு சமூகம் ஓபிசி சாதியினரில் 10% இருக்கிறார்கள் என்றால்,
பலனடைந்தோர் எண்ணிக்கையிலும் 10% இருக்கவேண்டும்.
இடவொதுக்கீட்டின் மூலம் கிடைக்கும் பலன்கள் நான்கு வகைப்படும்.
அவை
1) கல்வி வாய்ப்பு,
2) கட்டண விலக்குடன் ஸ்காலர்சிப்,
3) கட்டணத்துடன் ஸ்காலர்சிப்,
4) வேலைவாய்ப்பு
இந்த நான்கு பலன்களையும் பெற்றோர் எண்ணிக்கையை சமூக வாரியாக பிரித்து கணக்கிட்டால் அச்சமூகம் அடைந்த பலன் தெரிந்துவிடும்.
ஒரு நபருக்கே நான்கும் கிடைத்திருக்கலாம்.
அல்லது ஒரு சமூகத்திற்கு நான்கில் ஒன்று மட்டும் அதிகம் கிடைத்திருக்கலாம்.
எனவே சமூக வாரியாக நான்கையும் கூட்டி நான்கால் வகுத்தால் அச்சமூகம் அடைந்த மொத்த பயன் தெரிந்துவிடும் இல்லையா?
இதைக் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.
அதாவது,
ஒரு சமூகத்தற்கு கிடைத்த
கல்விவாய்ப்பு + கட்டண விலக்கு & ஸ்காலர்சிப் + ஸ்காலர்சிப்பு மட்டுர் + வேலைவாய்ப்பு இவற்றின் சராசரி விழுக்காடு அச்சமூகம் பெற்ற மொத்த பயன்.
எடுத்துக்காட்டுக்கு,
மேளக்கார சாதியை எடுத்துக்கொள்வோம்.
1985ஆம் ஆண்டறிக்கை படி,
* அச்சமூகத்தின் இடவொதுக்கீட்டில் கல்விவாய்ப்பு கிடைத்தோர் விழுக்காடு 0.4 ஆக உள்ளது.
* மேளக்கார சமூகத்தில் இடவொதுக்கீட்டில் கட்டண விலக்கு ஸ்காலர்சிப்பு பெற்றோர் விழுக்காடு 2.7 ஆக உள்ளது.
* மேளக்கார சமூகத்தில் இடவொதுக்கீட்டில் கட்டண ஸ்காலர்சிப்பு பெற்றோர் விழுக்காடு 0.4 ஆக உள்ளது.
* மேளக்கார சமூகத்தில் இடவொதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெற்றோர் விழுக்காடு 0.7 ஆக உள்ளது.
மேலுள்ள நான்கையும் கூட்டி நான்கால் வகுத்தால் 1.05 சதவீதப் புள்ளிகள் வரும்.
இப்புள்ளிகள் மொத்த ஓபிசி இடவொதுக்கீட்டில் மேளக்கார சமூகம் பெற்ற பலன்.
ஆனால் மேளக்கார சாதியினர் ஓபிசி மக்கட்தொகையில் 0.2% மட்டுமே.
1.05/0.2 = 5.1 என்பது மேளக்கார சாதியினரின் ஆக்கிரமிப்பு/ ஆதிக்கத்தைக் குறிக்கும்.
அதாவது மேளக்காரர் தாங்கள் இருக்கும் மக்கட்தொகையை விட ஐந்து மடங்குக்கும் மேல் 'இதரபிற்படுத்தப்
பட்டோருக்கான ஒதுக்கீட்டை' ஆக்கிரமித்துள்ளனர்.
உதாரணத்துக்கு 1,00,000 பேர்களை OBC ஒதுக்கீட்டில் வேலைக்கு எடுக்குறாங்கன்னு வச்சுக்குவோம்.
அதில் 0.2 உள்விழுக்காட்டை கொண்ட மேளக்காரர்கள் நியாயப்படி 200 பேர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் 1050 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுளனர்.
இதே போல் மற்ற தமிழரல்லாத பிறமொழியாளர்களின் ஆதிக்க விழுக்காட்டை கணக்கில் கொண்டு கூறினால்,
மேளக்காரர் தான் இருப்பதை விட 5.1 மடங்கு
சவுராஸ்டிரர் தான் இருப்பதை விட 3.80 மடங்கும்
கவுடா தான் இருப்பதை விட 3.0 மடங்கும்
கவரா தான் இருப்பதை விட 2.67 மடங்கும்
தேவாங்கர் தான் இருப்பதை விட 2.41மடங்கும்
ஜங்கம் தான் இருப்பதை விட 1.87 மடங்கும்
கஞ்ச ரெட்டி தான் இருப்பதை விட 1.75 மடங்கும்
சேட்டு தான் இருப்பதை விட 1.75 மடங்கும்
ஈடிகா தான் இருப்பதை விட 1.50 மடங்கும்
தெக்கணி இசுலாமியர் தான் இருப்பதை விட 1.42 மடங்கும்
கன்னட ஜைனர் தான் இருப்பதை விட 1.37 மடங்கும்
வொக்கலிகர் தான் இருப்பதை விட 1.18 மடங்கும்
சாத்துச்செட்டி தான் இருப்பதை விட 1.77 மடங்கும் பயனடைந்துள்ளனர் அதாவது அத்தனை மடங்கு இடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் தான் இதரபிற்படுத்தப் பட்டோரில் (OBC) இருந்து மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தனியாக ஒதுக்கீடு வேண்டுமென வன்னியர் சங்கம் போராட்டம் (1989ல்) நடத்தியது.
இதன் விளைவாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) இடவொதுக்கீடு உருவானது.
ஆனால் OBC இடவொதுக்கீட்டில் பிற எந்த சமூகத்தையும் விட அதிகமான மடங்கு இடத்தை ஆக்கிரமித்து வன்னியர் போராடத்திற்கே முதல் காரணமாக இருந்துவந்த மேளக்கார சமூகமும் MBC பட்டியலுக்கு சத்தமில்லாமல் நகர்ந்து விட்டனர்.
1989 க்கு முன்பு இதர பிற்படுத்தப்பட்டோரில் 18% உள்விழுக்காடு கொண்ட வன்னியர்,
போராட்டத்தில் பலரை பறிகொடுத்து பெறப்பெற்ற MBC இடவொதுக்கீட்டால் பெரிய பலன்பெறாமல் இருந்துவருகின்றனர்.
இந்த லட்சணத்தில் இடவொதுக்கீட்டால் தான் இருக்கும் தொகையை விட 13 விழுக்காடு குறைவாக பெற்ற கொங்கு வெள்ளாள கவுண்டரோடு வன்னியர்களை மோதவிடுகின்றன ஹிந்திய, திராவிட, தலித்திய கும்பல்கள்.
ஆம்.
1985ன் அறிக்கையின் படி 1,00,000 பேரை வேலைக்கு இதர பிற்படுத்தப்பட்டோரில் எடுக்கின்றனர் என்றால்
அதில் நியாயப்படி கொங்கு வெள்ளாளக்கவுண்டரில் 6800 பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் 5916 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.
தமிழரல்லாதாருக்கு இங்கே சலுகை கொடுப்பதே கூடாது.
இதில் அவர்கள் பல மடங்கு ஆக்கிரமித்தும் வருவதை எப்படி ஏற்கமுடியும்?!
திராவிடவாதிகள் இடவொதுக்கீட்டில் பலனடைந்த சதவீதத்தை கணக்கிடாமல் எண்ணிக்கையை மட்டும் எண்ணி,
பயனடைந்த கொங்கு வெள்ளாளரின் எண்ணிக்கையை வன்னியர்களிடம் காட்டி மோதலைத் தூண்டுகிறார்கள்.
ஆனால் வேற்றின ஆதிக்கத்தால் கொ.வெ.கவுண்டரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள்தொகையின் அடிப்படையில் கொ.வெ.கவுண்டருக்கு 100பேருக்கு வேலைகிடைக்க வேண்டும் என்றால் 87 கொ.வே.கவுண்டருக்கே வேலை கிடைத்துள்ளது.
தகவல்களுக்கு நன்றி:
தென்காசி சுப்பிரமணியன்
(Rajasubramanian Sundaram Muthiah)
படத்திற்கு நன்றி: அசுஆ சுந்தர்
----------------
அண்டைமாநிலங்களில் பெரும்பான்மைச் சமூகம்கூட தமிழகத்தினுள் குடியேறி சிறுபான்மை ஆகலாம்.
அதிகாரத்தில் இங்கிருக்கும் வந்தேறிகள் துணையுடன் இடவொதுக்கீடும் பெற்று அதையும் தாண்டி பல மடங்கு ஆக்கிரமித்து வாழ்வாங்கு வாழலாம் என்ற நிலையே உள்ளது.
வந்தாரை வாழவைத்து நாம் சீரழிந்துகொண்டு போகிறோம்.
Wednesday, 1 November 2017
நான் நாடானே கெடயாதுடா!
நிறுத்துங்கடா அப்ரசன்டிகளா >.<
நான் நாடானே கெடயாதுடா!
அந்த நாடார் இந்த நாடாச்சினு அவுரு இவுரு ஒரே நட்பு கோரிக்கையா கொடுத்தே கொல்றானுக :/
நானே 'ஆர்வக்கோளாறு வன்னியனுகள' அடக்கி பா.ம.க வைக் காப்பாத்த படாதபாடு பட்டுட்டு இருக்கேன் :(
இராமதாசு ஐயா மொழிவாரி தமிழ்நாடு வேணும்னும்
தமிழ்நாட்ட தமிழன் ஆளணும்னும் ட்வீட் போட்டுட்டு இருக்காரு.
அன்புமணி பச்சையா முழு தமிழ்நாடு வரைபடத்த போட்டுகிட்டு மாற்றம் முன்னேற்றம்னும்
காஷ்மீர் மாதிரி வெளியாள் நிலம் வாங்கமுடியாத 371 சிறப்பு சட்டம் தமிழ்நாட்டுக்கு வேணும்னும் பேசிகிட்டு இருக்குறாரு.
பா.ம.க-வச் சோலி முடிக்கணும்னே அது எப்பவோ கைவிட்டுட்ட வடதமிழ்நாடு கோரிக்கைய இப்ப சம்பந்தமே இல்லாம சொல்லிகிட்டு சாதிப்பேரோட மத்த தெற்கத்தி சாதிகளை வம்புக்கிழுத்து சில மூதேவிகள் முகநூல்ல கம்புசுத்திகிட்டு இருக்குதுக.
அப்பிரசண்டி வன்னியனுக சிலபேரு 'மகன் செத்தாலும் மருமவா தாலியறுத்தா போதும்'னு நெனைக்கிற மாமியார் மாதிரி அவனுகளுக்கு முட்டுகுடுக்கறானுக.
இதுல பள்ளர் சாதி வெறியனுக வேற தென்தமிழ்நாடுனு அவனுக பக்கம் நிக்கிறானுக.
அடேய்! நீதானே வடக்க இருந்து குர்மி சாதிக்காரன கூட்டிவந்து அகில இந்திய குடும்பர் மாநாடு போட்டவன்?
கேட்டா அம்பேத்கர் சொல்லிட்டாராம்.
இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லையாம்.
டேய் இந்தியாவும் அம்பேத்கரும் தேசிய இனங்களுக்கு எதிரானவனுகதானே?!
ஆ..ஊ..ன்னா அம்பேத்கர் பின்னாடி ஒண்டுறீங்கனுதானே தனி பதிவு போட்டு அந்த ஆள தோலுரிச்சேன்?!
ஒரு மாநிலத்துக்கு ரெண்டு மாநிலம் இருந்தா பலம் அதிகமாம்.
ஒரு ரூபாய கொடுத்துட்டு ரெண்டு 50பைசா வாங்கினா மதிப்பு கூடிருமா?!
இதெல்லாம் புரியாம 'நாடாருக்கு சப்போர்ட் பண்றான் இவன் நம்ம சாதிதான்'னு சொந்த சாதியையும் இனத்தையும் காவுகொடுத்தே பெரிய ஆளா ஆன காமராசர் படத்த வச்சிகிட்டு பிரண்டு ரிக்வெஸ்ட்டா கொடுத்து உயிர வாங்குறானுக நாடார் சாதிவெறியனுக
ச்சை
சில சமயம் இவனுகளுக்கா பாடா படுறோம்னு தோணும்
ஆனா நம்ம அப்பனும் தாத்தணும் பாடுபடாம ஹாயா இருந்ததாலதான் இப்டி ஆயிட்டானுகனு நெனைக்கும்போது மனசு மறுபடி திடமாயிடும்.
எங்கடா போயிருவீங்க!?
அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில எல்லா சாதிக்காரனும் தமிழனா தமிழ்தேசியம் பக்கம் வந்துதான் ஆகணும்.
Saturday, 15 July 2017
காமராசர் - ஒரு முடிந்துபோன கதை
காமராசர் - ஒரு முடிந்துபோன கதை
சில வன்னியர்கள்,
காமராசரால் அரசியலில் வன்னியர் ஓரம் கட்டப்பட்டதையும்
அதை எதிர்த்து வெளிய வந்த வன்னிய தலைவர்கள் (எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் மற்றும் மாணிக்கவேல் நாயகர்)
தனி கட்சி ஆரம்பித்து பெருவாரி வெற்றி பெற்றதையும் எழுதி
ஏதோ காமராசரை வன்னியர்களுக்கு எதிரானவர் என்றும்
நாடார் சாதிவெறியர் என்றும் அடையாளப்படுத்த முயல்கின்றனர்.
அடேய் தம்பிகளா !
அதே காமராசர்,
நேசமணி நாடார் தமிழ்நாடு காங்கிரசில் இணைய வந்தபோது முடியாது என்று மறுத்தார் என்பதையும்
அதன் பிறகு அவர் தனிக்கட்சி தொடங்கி நிறுத்திய 14 வேட்பாளர்களை எதிர்த்து
தாமே எதிர் வேட்பாளர்களை நிறுத்தி தாமே நேசமணி நாடாருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார் என்பதையும் அறிக.
அதோடு காமராசர் நிறுத்திய 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர் என்பதையும்
நேசமணி நாடாரின் வேட்பாளர்கள் பெருவாரி வெற்றிபெற்றனர் என்பதையும் அறிக.
காமராசரை முதலமைச்சர் பதவியிருந்து தூக்கி எறிந்தது சிவகாசி நாடார்கள் என்பதையும் அதனால் தெலுங்கரான சீனிவாசன் வெற்றிபெற்றார் என்பதையும் அறிக.
காமராசர் விசுவாசமாக இருந்தது நேரு குடும்பத்துக்கு மட்டும்தான்.
தன் சொந்த சாதிக்கோ இனத்திற்கோ எந்த நன்மையும் செய்ததில்லை.
தமிழர்களின் நலன்களையெல்லாம் காவு கொடுத்துதான் அவர் ஹிந்திய தலைவராக உருவெடுத்தார்.
அதாவது அவர் அந்த காலத்து அப்துல் கலாம்.
என்ன பயன்?
இன்று ஹிந்தியாவில் எவனுக்கும் அவர் பெயர்கூடத் தெரியாது
வன்னியர் - நாடார் மோதல் திராவிட தெலுங்கர்களை உள்ளே விட்டதால் 60 ஆண்டு தமிழினம் பட்டதெல்லாம் போதாதா?
முடிந்துபோன கதைகளை ஏன் இழுக்கிறீர்கள்?
உங்களுக்கு ஆளும் தெலுங்கனை எதிர்க்கத் துப்பில்லையா?
அல்லது வட மாவட்டங்களை உள்ளங்கையில் வைத்திருக்கும் மார்வாடிகளை கண்டு குலைநடுக்கமா?
Monday, 3 July 2017
கதிராமங்கலமும் வடைதமிழ்நாடும்
கதிராமங்கலமும் வடைதமிழ்நாடும்
வியட்நாமை அடிமைப்படுத்த அதை வடக்கு-தெற்காக இரண்டாக பிரித்தார்கள் அமெரிக்கர்கள்
ஜெர்மனி போரில் தோற்றபிறகு கிழக்கு-மேற்காக இரண்டாக பிரித்து அடிமைப்படுத்தினார்கள் போரில் வென்ற கூட்டணியினர்
அயர்லாந்தை அடிமைப்படுத்தி அதை வடக்கு-தெற்காக உடைத்து அடிமைப்படுத்தினார்கள் ஆங்கிலேயர்கள்
ஈழத்தை வடக்கு-கிழக்கு என்ற பிரிவினையைத் தூண்டி கருணாவை உருவாக்கினார்கள்
ஆக ஒரு இனத்தை அடிமைப்படுத்த அதை உடைப்பது அவசியமாகிறது.
ஆனால் இந்த திட்டம் விடுதலையைத் தள்ளிப்போடுமே ஒழிய நிரந்தர வெற்றி எப்போதும் பெறாது
வடக்கு வியட்நாம் அமெரிக்கர்களை ஓட ஓட விரட்டி அப்படியே தென் வியட்நாமில் புகுந்து துரோகிகளை ஒழித்து ஒரே நாடானது
கிழக்கு ஜெர்மனி மக்களைத் திரட்டி பிரிவினை சுவரை உடைத்து மேற்கு ஜெர்மனியுடன் இணைந்தது
அயர்லாந்து தனது வடக்கு பகுதியைக் கைப்பற்ற கடுமையாக (அல்ஸ்டர்)போர் புரிந்தது தோற்றது.
ஆனாலும் வடக்கில் சிறு பகுதி தவிர பெரும்பகுதி தனிநாடானது.
ஈழத்தில் தலைவர் பிரபாகரன் அனுப்பிய படை சண்டையே போடாமல் கருணாவின் படையை அவருக்கே எதிராக திருப்பி சிங்களவன் காலில் போய் விழவைத்தது.
பா.ஜ.க தூண்டுதலின் பெயரில் வன்னியர்களில் சில இனத் துரோகிகள் வன்னியர்கள் 45% வாழும் காவிரி வரையான தமிழகத்தை தனிநாடாக்குவோம் என்று கிளம்பியுள்ளனர்.
தமிழகம் இழந்த தென் கர்நாடகமும் தென் ஆந்திராவும் வன்னியர் பகுதிகளே!
அதை ஏன் சேர்த்து கேட்கவில்லை?!
கன்னடனையும் தெலுங்கனையும் எதிர்க்க துப்பு இல்லையோ?!
கன்னடனை ரத்தக்கண்ணீர் வடிக்கவைத்த வன்னிய குல தமிழரான வீரப்பனார் எந்த இடத்திலாவது நான் வன்னியன் என்று பேசியுள்ளாரா?
அவர் தமிழர்க்காக போராடி உயிரையும் விட்டார்.
தனித்தமிழ்நாடு ஆயுதப்படை நிறுவிய தமிழரசனும் அவரது குரு கலியபெருமாளும் வன்னியர் குலத்தில் பிறந்தாலும் எந்த இடத்திலாவது வடக்கு தனி என்று பேசியுள்ளனரா?
இதே கேள்விகள் கொங்குநாடு பிரிவினை பேசும் கவுண்டர்களுக்கும் பொருந்தும்.
கன்னட மலையாளிகளை எதிர்க்க துப்பு இல்லாமல் இருக்கும் தமிழகத்தையும் கூறு போட அலைகிறார்கள்.
உண்மை என்னவென்றால் 99% வன்னியர்களும் 99% கவுண்டர்களும் பிரிவினையை ஆதரிக்கவில்லை என்பதுதான்.
இன்று வன்னியர்களின் தலையாய பிரச்சனை கதிராமங்கலம் அதற்கு போராட வக்கில்லாமல் சத்திரியநாடு அமைப்போம் வடதமிழ்நாட்டை பிரிப்போம் என்று அலையும் சில வன்னியர்கள் துரோகிகளா? இல்லையா?
இதற்கு பதில் ஒவ்வொரு வன்னியனுக்கும் தெரியும்.
பாலாற்றை காக்க தெம்பில்லை! காவிரிக்காகப் போராடிய வீரப்பனாருக்கு ஆதரவாக குரல்கொடுக்க வாயில்லை!
செம்மரம் வெட்டப் போனவர்களைக் கொன்ற தெலுங்கனை அடிக்க கையில்லை!
எல்லை தாண்டி தமிழகத்தை ஆக்கிரமித்த ஆந்திரா போலீசை மிதித்து விரட்ட காலில்லை.
ஆனால் சக தமிழனிடம் பாகப்பிரிவினை மட்டும் வாய்கிழிய கேட்கத்தெரியும் அக்கினிகுண்ட ஆத்தா பெத்த சத்திரியர்களுக்கு!
தமிழகத்திற்கு எவ்வளவோ நல்லது செய்தும் தமிழகத்தின் தென்பகுதியை விட்டுக்கொடுத்த ஒரே காரணத்துக்காக காமராசரை அவரது சொந்த சமூகமே தோற்கடித்து முதல்வர் பதவியில் இருந்து தூக்கி எறிந்தது.
தமிழகத்தில் எந்த சமூகமேனும் தாம் கணிசமாக வாழும் பகுதியை தனியாக மாநிலமாகவோ தனிநாடாக பிரிக்கவேண்டும் என்று பேசினால் அந்த சமூக மக்களே அவர்களைத் தூக்கி எறிவார்கள் என்பதுதான் உண்மை.
ஈழமும் தமிழகமும் ஒரே நாடு என்று தொடர்ந்து கூறுபவன் நான்.
ஈழத்தின் தோல்விக்கு அதுவே காரணம் என்பவன் நான்.
வரலாறு அறிந்தவன் என்ற முறையில் கூறுகிறேன்.
டேய் அக்கினிகுண்ட அகண்ட சூத்திரய தேச தடவு தோன்றிய அயோக்கிய பன்னிகளே!
நீங்கள் ஹிந்தியாவின் காலடியில் வடதமிழ்நாடு என தனிநாடு ஆனாலும் சரி,
ஒருங்கிணைந்த தமிழர்நாட்டின் தமிழர்சேனை காவிரியைக் கடந்து வடக்கே நுழையும் உங்கள் முட்டியை உடைத்து மூலையில் தள்ளி ஒரே நாடாக ஆகத்தான் செய்யும்.
நூறு கோடி ஹிந்தியன் உங்கள் பக்கம் நின்றாலும் அதைத் தடுக்கமுடியாது.
