Saturday 15 July 2017

காமராசர் - ஒரு முடிந்துபோன கதை

காமராசர் - ஒரு முடிந்துபோன கதை

சில வன்னியர்கள்,
காமராசரால் அரசியலில் வன்னியர் ஓரம் கட்டப்பட்டதையும்

அதை எதிர்த்து வெளிய வந்த வன்னிய தலைவர்கள் (எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் மற்றும் மாணிக்கவேல் நாயகர்)
தனி கட்சி ஆரம்பித்து பெருவாரி வெற்றி பெற்றதையும் எழுதி

ஏதோ காமராசரை வன்னியர்களுக்கு எதிரானவர் என்றும்
நாடார் சாதிவெறியர் என்றும் அடையாளப்படுத்த முயல்கின்றனர்.

அடேய் தம்பிகளா !

அதே காமராசர்,
நேசமணி நாடார் தமிழ்நாடு காங்கிரசில் இணைய வந்தபோது முடியாது என்று மறுத்தார் என்பதையும்

அதன் பிறகு அவர் தனிக்கட்சி தொடங்கி நிறுத்திய 14 வேட்பாளர்களை எதிர்த்து
தாமே எதிர் வேட்பாளர்களை நிறுத்தி தாமே நேசமணி நாடாருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்  என்பதையும் அறிக.

அதோடு காமராசர் நிறுத்திய 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர் என்பதையும்
நேசமணி நாடாரின் வேட்பாளர்கள் பெருவாரி வெற்றிபெற்றனர் என்பதையும் அறிக.

காமராசரை முதலமைச்சர் பதவியிருந்து தூக்கி எறிந்தது சிவகாசி நாடார்கள் என்பதையும் அதனால் தெலுங்கரான சீனிவாசன் வெற்றிபெற்றார் என்பதையும் அறிக.

காமராசர் விசுவாசமாக இருந்தது நேரு குடும்பத்துக்கு மட்டும்தான்.

தன் சொந்த சாதிக்கோ இனத்திற்கோ எந்த நன்மையும் செய்ததில்லை.

தமிழர்களின் நலன்களையெல்லாம் காவு கொடுத்துதான் அவர் ஹிந்திய தலைவராக உருவெடுத்தார்.
அதாவது அவர் அந்த காலத்து அப்துல் கலாம்.

என்ன பயன்?

இன்று ஹிந்தியாவில் எவனுக்கும் அவர் பெயர்கூடத் தெரியாது

வன்னியர் - நாடார் மோதல் திராவிட தெலுங்கர்களை உள்ளே விட்டதால் 60 ஆண்டு தமிழினம் பட்டதெல்லாம் போதாதா?

முடிந்துபோன கதைகளை ஏன் இழுக்கிறீர்கள்?

உங்களுக்கு ஆளும் தெலுங்கனை எதிர்க்கத் துப்பில்லையா?

அல்லது வட மாவட்டங்களை உள்ளங்கையில் வைத்திருக்கும் மார்வாடிகளை கண்டு குலைநடுக்கமா?

No comments:

Post a Comment