Thursday, 27 July 2017

ஆயுதவழியை ஏன் நம்பவேண்டும்?

ஆயுதவழியை ஏன் நம்பவேண்டும்?

தோற்றுப்போன புலிகள்,
பாதி தோற்றுவிட்ட நக்சலைட் இயக்கம்,
இதையெல்லாம் பார்த்தபிறகும் ஆயுதவழி வெற்றி தரும் என்று உறுதியாகக் கூறமுடியுமா?

ஆம், ஆயுதவழி வெற்றி தரும்.
இதை உறுதியாகக் கூறமுடியும்.

இன்று நாம் தனிநாடாக இருந்திருந்தால்கூட
கார்ப்பரேட் அரக்கர்கள் நம்மீது போர்தொடுத்திருப்பார்கள்.

ஈராக் தனிநாடுதான், ஆப்கானிஸ்தான் தனிநாடுதான்,
சோமாலியா, எத்தியோப்பியா, சியரா லியோன் சுதந்திர நாடுகளாக இருந்தவைதான்.

ஆனாலும் வல்லாதிக்கம் போர்தொடுத்து தனக்குத் தேவையானதை மண்ணிலிருந்து உறிஞ்சிக்கொள்ளவில்லையா?

நான் சொல்லுவேன் 2009 வரை புலிகள் ஆண்ட நிலப்பரபப்பு தனிநாடு என்று.

நாடு என்பது ஐ.நா அளிக்கும் அங்கீகாரம் அல்ல.
நாடு என்பது எல்லையைக் கொண்டது.
எல்லை என்பது ராணுவம் வகுப்பது.
ஆக ராணுவம் பாதுகாக்கும் எல்லைதான் நாடு.

தன் தாய்மண்ணை,
அந்த மண்ணின் மைந்தன்,
அந்த மண்ணின் மக்களால் ஆன படையின் மூலம் எல்லையை பாதுகாத்து,
அந்நியர் தலையீடு இன்றி ஆளும் நிலமே உண்மையில் நாடு.

எம் தலைவர் பிரபாகரன் அப்படித்தான் எவருக்கும் அடிபணியாமல் ஆண்டார்.
எவர் ஆதரவையும் நாடாமல் தன் சொந்த பலத்தினால் ஆண்டார்.
அவர் செய்ததற்குப் பெயர்தான் ஆட்சி.

நாடுநாடாகப்போய் கண்டவனுக்கும் கூழைக்கும்பிடு போட்டு நரேந்திர மோடி செய்வதற்குப் பெயர் ஆட்சி இல்லை.

தன் நிலத்தில் தனது படையைக் கொண்ட ஒரு இனத்தின் வளங்களைச் சுரண்டுவதே பெருமுதலாளிகளுக்கு கடினம்.

நாடில்லாத,
அதாவது ராணுவம் இல்லாத,
வேற்றினத்தால் ஆளப்படும் இனத்தின் தாய்நிலத்தைச் ஆக்கிரமித்து சுரண்டுவது பெருமுதலாளிகளுக்கு  ஒரு பொருட்டே இல்லை.

அந்த மக்கள் ஆயுதம் தூக்காதவரை வெறும் லத்திகளை வைத்தே குறைந்த செலவில் அதிக சுரண்டல் நடத்த அவர்களால் முடியும்.

கோசம் போடுபவர்களையும் வாயாலே வடைசுடுபவர்களையும் அவர்களே வளர்த்துவிடுவார்கள்.

போர் புரிவது போல ஆடி
அதாவது போர் ஆட்டம் நடத்தி,
அடிவாங்குவதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்று நம்பவைத்து,
மக்களின் அன்றாட வாழ்க்கையை பாழாக்கி,
வென்றாலும் தோற்றாலும் மக்களுக்கே நட்டம் என்றாக்கி,
நீண்டகாலம் இழுத்து,
கடைசியில் கைவிரிப்பார்கள் சனநாயக அரசியல்வாதிகள்.

வழக்குபோட்டாலும் இதேதான் 30, 40 ஆண்டுகள் வழக்கு நடத்தி கடைசியில் கார்ப்பரேட்டுக்கு சாதகமான தீர்ப்புதான் வரும்.
அப்படியே தாமதமாக நீதி (அதாவது அநீதி) வழங்கப்பட்டாலும் அதற்குள் அரசியல்வாதிகள் அவனை பத்திரமாக வெளியே அனுப்பியிருப்பார்கள்.

கார்ப்பரேட் பெருமுதலாளிகளை சனநாயக வழியில் எதிர்க்கவே முடியாது.
இழப்பும் அதிகம். நேரமும் அதிகம். தீர்வு கிடைக்க 1% கூட வாய்ப்பு கிடையாது.
இதுதான் உண்மை.

ஆயுதவழியில் இழப்பு கிட்டத்தட்ட அதே அளவுதான்.
ஆனால் குறுகிய நேரத்தில் முடிவு தெரிந்துவிடும்.
தீர்வு கிடைக்க 50% வாய்ப்பு உள்ளது.

நீங்கள் ஒரு கையை முட்டிமுறுக்கி தூக்கி தூக்கி
தொண்டை வலிக்க கத்தி கத்தி எதுவும் ஆகப்போவதில்லை.
உங்களுக்குத்தான் வலிக்கும்.
உங்கள் போராட்டங்களால் வரும் பாதிப்புகள் அனைத்தும் உங்களுக்கே!

நீங்கள் திருப்பி அடியுங்கள்!

அப்போதுதான் ஆதரவு குவியும்!

எதிரிக்கு இழப்பு வரும்!

இப்போது உங்களை எந்த ஊடகமும் பதிவு செய்யாத நிலை மாறும்.
பத்திரிக்கைக்காரன் உயிரைப் பணயம் வைத்து தேடிவந்து காத்திருந்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்வான்.
அதை உலகமே ஆவலுடன் கேட்கும்.

மனிதன் என்றால் மானம் வேண்டும்
வீரம் வேண்டும்
மக்கள் என்றால் மண்பற்று வேண்டும்.

நீங்கள் அமைதியாக போராடினாலும் நக்சலைட் முத்திரை குத்தி அரசுக்கெதிராக போர்தொடுத்த தேசதுரோக வழக்குதான் போடுவார்கள்.

எதற்கு உங்களுக்கு குற்ற உணர்ச்சி?

எதிரி ஆயுதப்படையோடு வந்து நிற்கிறான்.
நீங்கள் தற்காப்புக்காக திருப்பி அடிப்பதில் என்ன தவறு?!

காட்டில் வாழும் நாடோடி இனங்களெல்லாம் ஆயுதமேந்தி
கார்ப்பரேட்களை கதறவிடும் இந்தக்காலத்தில்
முன்னேறிய இனமான தமிழர்களால் அது ஏன் முடியாது?
___________________
படம் : திருச்சி சிறையில் தினமும் நிர்வாண சோதனை: ஜாமீனில் வந்த மாணவி குற்றச்சாட்டு
(தினகரன் 21-05-2017)

No comments:

Post a Comment