Wednesday, 5 July 2017

வடதமிழக மக்களுக்கு ஒரு வரலாற்றுக் கதை

வடதமிழக மக்களுக்கு ஒரு வரலாற்றுக் கதை
×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×

பிரான்ஸின் எல்லையை ஒட்டிய ஜெர்மனியின் ஒரு பகுதி 'ஸார்' (saar)

முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்றபோது பிரான்ஸ் அதை எடுத்துக்கொண்டது.
அங்கே பெருமளவு நிலக்கரி வளம் இருந்தது.
பிரான்ஸ் அதை நன்கு பயன்படுத்தியதுடன் அப்பகுதி ஜெர்மானியரையும் நன்றாக கவனித்துக்கொண்டது.

அதாவது ஒட்டுமொத்த ஜெர்மனியும் வறுமையில் திண்டாடியபோது ஸார் ஜெர்மானியர் ஓரளவு வசதியாக வாழமுடிந்தது.

பிறகு ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்ததும் இழந்த பகுதிகளை மீட்க முயற்சி மேற்கொண்டார்.
பிரான்ஸ் அதைத் திருப்பித்தரவேண்டும் என்று கேட்டார்.
பிரான்சுக்கு ஹிட்லரை நேரடியாக எதிர்க்கத் துணிவில்லை.
ஒப்பந்தத்தின்படி வாக்கெடுப்பு நடத்தி ஸார் மக்களே தீர்மானிக்கும்படி ஒரு ஏற்பாடு செய்தனர்.

பிரான்ஸ் ஸார் பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்தது.
"ஜெர்மனிக்கு ஸார் போனால் வறுமை வரும். நாஜிக்கள் இனவெறியால் போர் வரும்.
பிரான்ஸிற்கு வாக்களித்தால் உங்களை ஸார்லேன்ட் எனும் தனிநாடாக ஆக்கித் தருவோம்" என்றெல்லாம் ஆசை காட்டினர்.

பிரான்சிற்குள் இருக்கும் ஸாரில் நாஜிக்களால் நேரடியாக பிரச்சாரம் செய்யமுடியாத நிலை.
1935 ல் வாக்கெடுப்பு நடந்தது.
தமது பெரும் நிலக்கரி வளத்துடன் ஸார் ஜெர்மனிக்கு வாக்களித்து தம் தாய்நிலத்தோடு மீண்டும் இணைந்தது.

கதை இதோடு முடியவில்லை.

பிரான்ஸ் சொன்ன அத்தனையும் நடந்தது.
வறுமை, இரண்டாம் உலகப்போர், தோல்வி, பட்டினிச்சாவு, இனப்படுகொலை பழி என அத்தனையையும் ஜெர்மனியோடு ஜெர்மனியாக ஸார் சந்தித்தது.

இப்போது மீண்டும் பிரான்ஸ் ஸாரை எடுத்துக்கொண்டது.
முன்பு போலவே ஜெர்மனியின் பரிதாப நிலையைவிட ஸார் மக்கள் ஓரளவு நல்லநிலையில் இருந்தனர்.
பிரான்ஸ் முன்பை விட அதிக சலுகையாக ஸார் பகுதிக்கு தன்னாட்சி கொடுத்து தனது நாட்டில் வைத்துக்கொண்டது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது ஸார் மக்களுக்கு தனிநாடு ஆகலாமா? பிரான்சுடன் இணைவதா? ஜெர்மனியுடன் இணைவதா? என்று மூன்று வழிகள் இருந்தன.

அப்போது மீண்டும் ஜெர்மனிக்கே வாக்களித்து தன் தாய்நிலத்துடன் இணைந்தது ஸார்.

பேரதிர்ச்சியில் உறைந்தது பிரான்ஸ்!

ஜெர்மானியர் இனப்பற்றுக்கு முன் பிரான்சின் அத்தனை ராஜதந்திரங்களும் வீணாகிப்போனது.

அத்தகைய இனப்பற்றால்தான் இரண்டு உலகப்போர்களில் தோற்றும் இன்றும் உலகின் தலைசிறந்த வல்லரசாக நிமிர்ந்து நின்று ஐரோப்பா கண்டத்திற்கே தலைமை தாங்கி வழிநடத்துகிறது ஜெர்மனி.

அன்று பிரான்சைப் போல இன்று ஹிந்தியா கதிராமங்கலம் உட்பட வடதமிழ்நாட்டு வளங்களை சுரண்ட வடக்கை தனியாக பிரிக்க சதி செய்கிறது.

ஒருவேளை வடதமிழ்நாடு நமக்கு நன்மையாக அமையுமோ என்று யாராவது சிலர் சிந்தித்தால் அதற்கான பதில் மேற்கண்ட பதிவில் உள்ளது.

இனப்பற்று பிரச்சாரம் செய்து வருவதில்லை.

வட தமிழக மக்கள் ஸார் ஜெர்மானியரைப் போன்றவர்கள்தான்.

எதற்கும் இருக்கட்டுமே என்று இப்பதிவை இட்டுவைத்தேன்.

வரலாற்றில் அடையாளம் தெரியாமல் போய் ஆயிரம் ஆண்டுகள் கழித்து பேரெழுச்சி பெற்ற ஐரோப்பிய மூத்த இனமான ஜெர்மனி போல
தமிழர்நாடும் மீண்டு எழத்தான் போகிறது!

விரிவாக இட்ட பழைய பதிவு,
ஷாங்காயிலிருந்து பெர்லின்
(31 August 2014) வேட்டொலி

1 comment: