Friday 20 October 2023

எல்லாமே திட்டமிட்ட நாடகங்கள்

எல்லாமே திட்டமிட்ட நாடகங்கள் 

 அரசியல் ஆன்மீகம் சினிமா எதுவானாலும் பித்தலாட்ட முறை ஒன்றுதான்!
 பணம் கொடுத்து இவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட "தீவிர பற்றாளர்கள்" மற்றும் அவர்கள் செய்கிற கிறுக்குத்தனங்கள் இவர்களுக்கு விளம்பரம்!
 கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தருவதே இவர்களுக்கு வருமானம்!
 வெளித் தோற்றமோ ஏதோ பெருவாரியான மக்கள் கண்மூடித் தனமாக இவர்களை பின்பற்றுவதாக காட்டப்படுகிறது! 
உண்மையோ வேறு! 
 பணம் கொடுக்கப்பட்டு "பேய் விரட்டும் பாதிரியார் வீடியோக்கள்" போன்ற திட்டமிட்ட நாடகங்கள் நடத்தப் படுகின்றன.
 இதில் பங்கேற்கும் ரசிகர்கள் / பக்தர்கள் / தொண்டர்கள் அனைவருமே போலிகள்!
 இதைப் பார்த்து உண்மையிலேயே அப்படி மாறுபவர்கள் மிகவும் குறைவு!
 சிலரைத் தவிர பெரும்பான்மையான மக்கள் இவர்களை வெறுக்கின்றனர்.
நம்மை சுற்றி இருப்பவர்களில் அப்படி எத்தனை பேர் என்று கணக்குப் போடுங்கள் உண்மை புரியும்!
 உங்களுக்குத் தெரிந்தவர்களில் எத்தனை பேர் தீவிர விஜய் ரசிகர்? தீவிர பங்காரு பக்தர்? தீவிர திமுக தொண்டர்? என்று யோசியுங்கள். மிகச் சிலரே இருப்பார்கள்.
 அத்தனை பெரிய மார்க்கெட் இல்லாத இவர்களால் இத்தனை பெரிய வருமானத்தை கொடுக்க முடியுமா?! 
 ஒரு நடிகர் காட்டும் வசூல், அரசியல் கட்சிகள் காட்டும் தேர்தல் முடிவுகள் மற்றும் சாமியார்கள் காட்டும் அறக்கட்டளை சொத்து எல்லாமே மக்களின் மூலமாக வந்ததாக காட்டப்படுகிறது. 
 உண்மை அது இல்லை!
எல்லாமே கருப்பு பணம்!
 நாமோ மக்களை குறைசொல்லிக் கொண்டு இருக்கிறோம்! 
 மக்கள் நல்ல சினிமாவை மட்டுமே விரும்புகின்றனர்.
நல்ல அரசியல்வாதிக்கு தான் ஓட்டு போடுகின்றனர்.
சாமியார்களை நம்புவதும் இல்லை.
 இங்கே கண்ணால் காண்பதெல்லாம் பொய்! 
எல்லாமே திட்டமிட்ட நாடகங்கள் !


 
 

Friday 6 October 2023

ஓய்வெடுங்கள் ஒரிசா பாலு ஐயா

ஓய்வெடுங்கள் ஒரிசா பாலு ஐயா!

 வரலாறு ஒரு சக்கரம் போன்றது. தமிழர் வரலாறு ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை (இமயம் வரை) ஆதிக்கம் செலுத்துவதாக சுழலும் (அப்படியே ஜெர்மனி போல).
 கரிகாலன் இமயத்தைக் குடைந்த ஆயிரம் ஆண்டு கழித்து ராஜேந்திரன் இமயம் வரை ஆண்டான். அதிலிருந்து ஆயிரம் ஆண்டு ஆகி தற்காலம் தமிழர்கள் அந்த எழுச்சிக்கு தயாராக இருந்தோம்.

 இதற்கு ஆரம்ப அடிப்படை  தேவையான கருத்தியல் சிந்தனைகள் தோன்றியிருந்தன.
 தனிநாடு, அகன்ற தமிழர்நாடு, குமரிக் கண்டம் போன்ற நிலம் சார்ந்த சிந்தனையும் நம்மிடம் வந்துவிட்டது. 

மாநில அதிகாரம், இந்திய அரசியலில் ஆதிக்கம், ஈழம், புலிகள், வீரப்பன், ஆயுதக் குழுக்கள், மும்பை முதல் மலேசியா வரை நிழலுலக ஆதிக்கம், உலகளாவிய குடியேற்றம், பொருளாதார பெருக்கம்,  மொழி வளர்ச்சி என நாம் 1980 - 2000 காலவாக்கில் ஏறத்தாழ பாதி வெற்றி அடைந்திருந்தோம்.

 நியாயப்படி நாம்  இந்நேரம் ஈழம் அடைந்து அவ்வழியே தமிழகத்தை ஆயுதப் புரட்சி மூலம் விடுதலை செய்து எல்லைகளை விரிவாக்கி சிங்களத்திற்கு பதிலடி கொடுத்து நம் தாய்நிலத்தில் ராணுவ பலத்துடன் தன்னாட்சியுடன் இருந்திருக்க வேண்டும்.
 இதன் விளைவாக தேசிய இனங்கள் எழுச்சி பெற்று அடுத்த கால் நூற்றாண்டில் (சோவியத் போல) இந்தியா உடைந்து தென்னிந்திய இனங்களின் நாடுகள் கூட்டாட்சி உருவாகி அதன் ஆதிக்கம் இமயம் வரை பாகிஸ்தான் வரை பரவியிருக்க வேண்டும் (ஐரோப்பிய யூனியன், நேட்டோ போல).

 ஆனால் இது எல்லாமே மண் கோட்டை போல இடிந்துவிழுந்தது. காரணம் வடுக சதி, அதன் நீட்சியான வந்தேறிகள், அதன் மையமான கருணாநிதி குடும்பம்.
 கருணாநிதி என்கிற கொடூர நரி வரலாற்று சுழற்சியையே நிறுத்தி விட்டான் என்றால் அது மிகையில்லை. 
 தமிழக முதலமைச்சர் பதவியை கைப்பற்றாமல் விட்டதன் விளைவு இன்று எல்லாவற்றையும் இழந்து ஈழம் அழிந்து, மக்கட்தொகை குறைந்து, வாழ வக்கில்லாமல், தண்ணீருக்கு பிச்சை எடுத்து உதை வாங்கும் நிலையில் நிற்கிறோம்.

 ஆயுதம் ஏந்திய அத்தனை பேரும் கொல்லப்பட்டு தமிழுக்காக தமிழருக்காக உழைத்தவர்கள் நாதியில்லாமல் நல்ல சாவு கூட வாய்க்காமல் அழிந்து போய்விட்டார்கள்.

 கால சுழற்சி படி நாம் வல்லரசாக இருந்து ஒரிசா பாலு ஐயாவை கடலில் இறக்கி குமரிக் கண்டத்தை மீட்டு உலக கடற்கரை நகரங்கள் நமதே என்று நிறுவி இருந்திருக்க வேண்டும்.

 எதுவுமே நடக்காமல் போய்விட்டது!
இன்று தமிழினம் மிகவும் பரிதாப நிலையில் தற்கொலை செய்யப்போகும் ஒருவன் போல சோர்ந்து நிற்கிறது.

கடல் ஆய்வுகள் மட்டுமல்லாது உலகத் தமிழரை ஒருங்கிணைக்க தன் சக்திக்கு மீறி உழைத்த பாலு ஐயா போய்விட்டார்!

இனி நாம் என்ன செய்யப் போகிறோம்?!