Showing posts with label ஒரிசா பாலு. Show all posts
Showing posts with label ஒரிசா பாலு. Show all posts

Friday, 6 October 2023

ஓய்வெடுங்கள் ஒரிசா பாலு ஐயா

ஓய்வெடுங்கள் ஒரிசா பாலு ஐயா!

 வரலாறு ஒரு சக்கரம் போன்றது. தமிழர் வரலாறு ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை (இமயம் வரை) ஆதிக்கம் செலுத்துவதாக சுழலும் (அப்படியே ஜெர்மனி போல).
 கரிகாலன் இமயத்தைக் குடைந்த ஆயிரம் ஆண்டு கழித்து ராஜேந்திரன் இமயம் வரை ஆண்டான். அதிலிருந்து ஆயிரம் ஆண்டு ஆகி தற்காலம் தமிழர்கள் அந்த எழுச்சிக்கு தயாராக இருந்தோம்.

 இதற்கு ஆரம்ப அடிப்படை  தேவையான கருத்தியல் சிந்தனைகள் தோன்றியிருந்தன.
 தனிநாடு, அகன்ற தமிழர்நாடு, குமரிக் கண்டம் போன்ற நிலம் சார்ந்த சிந்தனையும் நம்மிடம் வந்துவிட்டது. 

மாநில அதிகாரம், இந்திய அரசியலில் ஆதிக்கம், ஈழம், புலிகள், வீரப்பன், ஆயுதக் குழுக்கள், மும்பை முதல் மலேசியா வரை நிழலுலக ஆதிக்கம், உலகளாவிய குடியேற்றம், பொருளாதார பெருக்கம்,  மொழி வளர்ச்சி என நாம் 1980 - 2000 காலவாக்கில் ஏறத்தாழ பாதி வெற்றி அடைந்திருந்தோம்.

 நியாயப்படி நாம்  இந்நேரம் ஈழம் அடைந்து அவ்வழியே தமிழகத்தை ஆயுதப் புரட்சி மூலம் விடுதலை செய்து எல்லைகளை விரிவாக்கி சிங்களத்திற்கு பதிலடி கொடுத்து நம் தாய்நிலத்தில் ராணுவ பலத்துடன் தன்னாட்சியுடன் இருந்திருக்க வேண்டும்.
 இதன் விளைவாக தேசிய இனங்கள் எழுச்சி பெற்று அடுத்த கால் நூற்றாண்டில் (சோவியத் போல) இந்தியா உடைந்து தென்னிந்திய இனங்களின் நாடுகள் கூட்டாட்சி உருவாகி அதன் ஆதிக்கம் இமயம் வரை பாகிஸ்தான் வரை பரவியிருக்க வேண்டும் (ஐரோப்பிய யூனியன், நேட்டோ போல).

 ஆனால் இது எல்லாமே மண் கோட்டை போல இடிந்துவிழுந்தது. காரணம் வடுக சதி, அதன் நீட்சியான வந்தேறிகள், அதன் மையமான கருணாநிதி குடும்பம்.
 கருணாநிதி என்கிற கொடூர நரி வரலாற்று சுழற்சியையே நிறுத்தி விட்டான் என்றால் அது மிகையில்லை. 
 தமிழக முதலமைச்சர் பதவியை கைப்பற்றாமல் விட்டதன் விளைவு இன்று எல்லாவற்றையும் இழந்து ஈழம் அழிந்து, மக்கட்தொகை குறைந்து, வாழ வக்கில்லாமல், தண்ணீருக்கு பிச்சை எடுத்து உதை வாங்கும் நிலையில் நிற்கிறோம்.

 ஆயுதம் ஏந்திய அத்தனை பேரும் கொல்லப்பட்டு தமிழுக்காக தமிழருக்காக உழைத்தவர்கள் நாதியில்லாமல் நல்ல சாவு கூட வாய்க்காமல் அழிந்து போய்விட்டார்கள்.

 கால சுழற்சி படி நாம் வல்லரசாக இருந்து ஒரிசா பாலு ஐயாவை கடலில் இறக்கி குமரிக் கண்டத்தை மீட்டு உலக கடற்கரை நகரங்கள் நமதே என்று நிறுவி இருந்திருக்க வேண்டும்.

 எதுவுமே நடக்காமல் போய்விட்டது!
இன்று தமிழினம் மிகவும் பரிதாப நிலையில் தற்கொலை செய்யப்போகும் ஒருவன் போல சோர்ந்து நிற்கிறது.

கடல் ஆய்வுகள் மட்டுமல்லாது உலகத் தமிழரை ஒருங்கிணைக்க தன் சக்திக்கு மீறி உழைத்த பாலு ஐயா போய்விட்டார்!

இனி நாம் என்ன செய்யப் போகிறோம்?!