Thursday 31 August 2017

ஜெயராமின் உருமறைப்பு

உருமறைப்பு

திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்தில் ஓடும் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம்...

கேரளா உணவு, பண்டிகை, கலாச்சாரம் ஆகியவற்றை காட்சிகளாகக் காண்பித்து
நடிகர் ஜெயராம் அதை ஒவ்வொன்றாகக் கண்டு 'என் நாட்டின் பண்டிகை பிடிக்கும், உணவு பிடிக்கும், கலாச்சாரம் பிடிக்கும்' என நெஞ்சில் கைவைத்து சொல்கிறார்.
இறுதியாக 'நம் நாட்டு உடை ராம்ராஜ் வேட்டிகள்' என்று முடிக்கிறார்.

ஜெயராம் ஒரு தமிழர்.
ராம்ராஜ் ஒரு தமிழர் நிறுவனம்.

Monday 28 August 2017

புலிகள் ஆதரவு! தனித் தமிழ்நாடு! ராஜீவ் கொலைக்குப் பாராட்டு! - 1992ல் இராமதாசு ஐயா முன்னெடுத்த தமிழ்தேசியம்

உயர்திரு. இராமதாசு அவர்கள்,

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பாராட்டியும்
புலிகளுக்கான ஆதரவு தெரிவித்தும்
தனித் தமிழ்நாடு பற்றியும்

இனப்பற்றுடன் வெளிப்படையாகப் பேசியபோது அதைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரை

ஏடு: செங்கோல்
நாள்: 20.09.1992
தலைப்பு:-
ராஜீவைக் கொன்றவன் என் தோழன்
தமிழகப் பிரிவினையும் கோருவோம்
பா.ம.க தலைவரின் தேசத் துரோகம்

நன்றி: சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் (முகநூல்)

Saturday 26 August 2017

தமிழின பார்ப்பனரும் இசுலாமியரும் ஒதுக்கப்படலாமா?

தமிழின பார்ப்பனரும் இசுலாமியரும் ஒதுக்கப்படலாமா?

* பார்ப்பனர் ஏன் தமிழில் தொழுவதில்லை?
அவர்களது புனிதநூல் ஏன் தமிழில் இல்லை?

* பார்ப்பனர் திருமண முறை ஏன் வேறுபட்டதாக உள்ளது?

* பார்ப்பனர் முடிவெட்டிக்கொள்ளும் முறை  ஏன் விசித்திரமாக உள்ளது?

* பார்ப்பனர் உடையணிவது ஏன் வேறுமாதிரி உள்ளது?

* பார்ப்பனர் வணக்கம், வாழ்த்து சொல்வது ஏன் தமிழல் இல்லை?

* பார்ப்பனர் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்கள், உறவுமுறை கூறி அழைப்பது போன்றவை வேறு மொழியில் ஏன் உள்ளன?

* பார்ப்பனர் ஏன் குலதெய்வ வழிபாடு செய்வதில்லை?

* பார்ப்பனர் வெளியிலிருந்து வந்த இனம் என்று சில கட்சிகள் பிரச்சாரம் செய்கிறார்களே?

* பார்ப்பனரின் மூதாதையர்கள் ஆட்சி செய்தபோது மக்களை கொடுமைப்படுத்தியதாக கூறுகிறார்களே?

* பார்ப்பனர் வீட்டிற்குள் வேறுமொழி பேசுவதாக கூறுகிறார்களே?

* பார்ப்பனர் ஏன் தமிழில் பெயர்வைப்பதில்லை?

* பார்ப்பனர் என்றால் நிறமாகத்தான் இருப்பார்கள்.

* பார்ப்பனர்கள் அனைவருமே மதவெறி பிடித்தவர்கள் என்று கூறப்படுகிறதே?

* பார்ப்பனர்கள் இன உணர்வு இல்லாதவராக உள்ளனரே?

* பார்ப்பனர்கள் வேறு ஒரு மொழியை படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி, பயிற்சி மையங்கள் நடத்துகின்றனரே?

* பார்ப்பனர் தமது புனித தலங்களாக தமிழகத்திலிருந்து வெகுதூரத்தில் உள்ள இடங்களைச் சொல்கிறார்களே?

மேற்கண்ட அனைத்திலும் பார்ப்பனர் என்று வரும் இடத்தில் இசுலாமியர் என்று போட்டு ஒரு முறை படிக்கவும்.

விளையாட்டில்லை ஒருமுறை படியுங்கள்.

தமிழினத்து இசுலாமியர் எப்படி தமிழரோ அப்படியே பார்ப்பனரும் தமிழரே!

பிற இனத்து பிராமணரை தமிழினத்து பார்ப்பனருடன் குழப்புவதென்பது
உருது முஸ்லீம்களை தமிழினத்து இசுலாமியருடன் குழப்புவது போன்றது.

பார்ப்பனரை ஆரியருடன் தொடர்பு படுத்துவதென்பது
இசுலாமியரை அராபியருடனும்
கிறித்தவரை ஐரோப்பியருடனும் தொடர்புபடுத்துவது போன்றது.

மேலும் அறிய,

தேடுக: பார்ப்பனீயம் பிராமணீயம் வேறுபாடு வேட்டொலி

தேடுக: பார்ப்பனர் பிராமணர் வேறுபாடு வேட்டொலி

Thursday 24 August 2017

சதுர்த்தி

சதுர்த்தி

முன்பு தமிழர்கள் களிமண்ணால் ஆன உருண்டையை அருகம்புல் அல்லது எருக்கம்பூ உடன் கிணறு, குளம், குட்டை போன்றவற்றில் கரைப்பார்கள்.
(அந்த உருண்டையை பிள்ளையார் என்று அழைப்பார்கள். திருமுருகாற்றுப்படை இலக்கியத்தில் முருகன்தான் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்)
இதற்கு பின்னால் என்ன அறிவியல் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் இதிலிருந்து தோன்றிய பண்டிகையான  விநாயகர் சதுர்த்தி இன்று தமிழரல்லாத வடயிந்திய இந்து மதவெறியர்களால் கொண்டாடப்படுகிறது.
பண்டிகை என்ற பெயரில் வளமான களிமண்ணை தோண்டியெடுத்து
அதில் பெயிண்ட், பிளாஸ்டிக் போன்றவற்றை கலந்து ஆற்றிலோ கடலிலோ கொண்டு கரைத்து  மாசாக்குவது எந்தவகையிலும் அறிவார்ந்த செயலாகத் தோன்றவில்லை.

Tuesday 22 August 2017

ஈழத் தமிழர்கள் அடிமையில்லை, சுதந்திரத்திற்காகப் போராடுவார்கள் _ தேவர் அன்றே சொன்னார்

ஈழத் தமிழர்கள் அடிமையில்லை, சுதந்திரத்திற்காகப் போராடுவார்கள் _ தேவர் அன்றே சொன்னார்

இலங்கையில் தமிழர்கள் சிங்களருக்கு இணையாக வாழ விரும்புகிறார்கள்.
அவ்வாறு வாழ முடியாத போது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள் என்று தேவர் தனது கட்டுரையில் எழுதுகிறார்.

அந்தக் கட்டுரை இதோ...

"இனம் என்றால் சிங்கள இனமும் தமிழ் இனமும் என்று இருந்தால் பிரச்சனைக்கு இடமே இல்லை.
மொழி என்று இருந்தால் சிங்கள மொழியும் தமிழ்மொழியும் என்றிருந்தால் சிக்கலே கிடையாது.
இது சேன நாயகாவுக்குத் தெரியாத ஒன்றல்ல.
ஆயினும் அந்த நிலைமையை ஏற்படுத்த அவர் மறுக்கிறார்.
தம்மைப் பதவியில் அமர்த்தியவர்கள் சிங்களவர்களாம். சிங்களத்தை ஆட்சிமொழியாக்கவும் சிங்களவர்களைப் பாதுகாக்கவும் தம்மை அவர்கள் தெரிவு செய்தார்களாம்.
அவர்கள் விருப்பத்துக்கு மாறாக தாம் எதையும செய்ய முடியாது என்று கையை விரிக்கிறார்.
பாவம் பதவி போய்விடுமே என்ற பயம்.
பதவி என்ன அவ்வளவு பெரிதா?
அப்படி நினைத்தால் அதன் விளைவை அவர் அனுபவித்தே தீர வேண்டும்.
சிங்களவர்களுக்குச் சிங்களம் எப்படியோ அப்படித்தான் தமிழர்களுக்கும் தமிழ் உள்ளது.
சிங்களவர்களுக்குத் தமது மேம்பாட்டில் எவ்வளவு அக்கறையுண்டோ அவ்வளவு அக்கறை தமிழர்களுக்கும் தமது மேம்பாட்டில் உண்டு.
ஆகவே நாட்டில் ஒற்றுமை வேண்டும், அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகத் தமிழர்கள் இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு அடிமைகளாக வாழத் தேவையில்லை.
அடிமைகளாய் உரிமை அற்றவர்களாய் வாழ்வதைவிடச் சுதந்திரப் போராட்டத்தில் குதித்துச் சுத்த வீரர்களாய் மானம் உள்ளத் தமிழர்களாய் மடிவது மேல் என்று அவர்கள் கருதுகிறார்கள்"

பசும்பொன் தேவரின் அரசியல் முழக்கம் (1952)
- க.பூபதிராஜா
பக்கம்:141.

படம்: 1952 இலங்கை ஞவுஞ்சுவே-யின் இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் மாநாடு முடிந்தபின் தேநீர் விருந்தில் பசும்பொன் பெருமகனார் சௌமிய மூர்த்தி தொண்டைமான்......!!

நன்றி: ஈழத்தமிழர்களின் உணர்வுகளை பற்றி தேவர் திருகமனார் எழுதிய கட்டுரை..!
_ Tamil creators (youtube)

Saturday 19 August 2017

ராமகோபாலன் தெலுங்கரே!

ராமகோபாலன் தெலுங்கரே!

ராமகோபாலனின் தங்கை மகன் ரமேஷ்.
அவருக்கு சென்னையில் இரண்டு நிறுவனங்கள் உள்ளன.
Seetharam mechatronics மற்றும் Rameshwar engineering.
அதாவது ஒரே நிறுவனத்தை இரண்டாக பிரித்து ஒன்றை தனது மனைவி பெயரில் வீட்டிலேயே அலுவலகம் அமைத்து நடத்துகிறார்.
இவர் ஒரு ஹிந்துத்துவ இயக்கமும் நடத்திவருகிறார்.
அதன் பெயர் Sathsamhita.

இவர் நிறுவனத்தில் வேலை பார்த்த எனது நண்பர் அம்பத்தூர் பழைய நகரத்தில் (தொழிற்பேட்டை) உள்ள  இவர்கள் வீட்டிற்கு அலுவல் ரீதியாக பலமுறை சென்றுள்ளார்.
இவர்கள் வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் என்று அவர் கூறினார்.

Thursday 17 August 2017

செங்கோட்டை அக்ரகாரம் (விளக்கம்)

செங்கோட்டை அக்ரகாரம் (விளக்கம்)

இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு விவாதத்தில் நான் வாக்களித்தபடி செங்கோட்டை அக்கிரகாரத் தெருக்களில் நடப்பட்டுள்ள தடைக்கற்கள் பற்றி விளக்கம் அளிக்கவுள்ளேன்.

  வாஞ்சிநாதன் எழுதிய இறுதி கடிதத்தில் உள்ள வார்த்தைகளை திரித்து
அவரது இந்துமத பற்றினை சாதிவெறியாக மாற்றி
அதற்கு வலுசேர்க்க ஒரு கற்பனைக் கதையையும் இணைத்து பொய்ப் பரப்புரை செய்துவருகின்றனர் திராவிடர்கள்.

இந்த திரிப்பு வேலையை அம்பலப்படுத்தும் வகையில் வாஞ்சிநாதன் கடிதத்தின் உண்மையான பொருளையும்
அவர் காலத்தில் அவர் பிறந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலேயே இணைந்திருக்கவில்லை என்பதையும் பதிவாகப் போட்டபோது  எழுந்த விவாதத்தில் அக்கிரகார வழிகள் கற்கள் நட்டு அடைக்கப்பட்டுள்ளதாகவும் இது தீண்டாமையின் வடிவம் என்று ஒரு நண்பர் வாதிட்டார்.

அதற்கு நான் கோவில் வாசலுக்குச் செல்லும் வழியில் பெரிய வண்டிகள் நுழையாமல் இருக்கவே அவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாகவும்
மற்றபடி யாரும் சென்றுவர எந்தத் தடையும் இல்லை என்றும் வாதிட்டேன்.

பதிலுக்கு நண்பர் கற்கள் நடப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தைப் போட்டு அது பொதுமக்கள் வழி என்று கூறியிருந்தார்.

இன்று அந்த இடத்தைப் போய்ப் பார்த்தேன்.
அந்த வழி பொதுவழி இல்லை என்பதும்.
அது நேரே கிருஷ்ணன் கோவிலுக்குப் போகும் வழி என்பதையும் புகைப்படத்துடன் இங்கே போட்டுள்ளேன்.
தவிர நடப்பட்டிருந்த 6 கற்களில் 2 கற்களை போன மாதம் அகற்றியும் விட்டனர்.

(அப்பகுதி எழுத்தாளர் ஒருவருக்கு இது பற்றி செய்தி அனுப்பியிருந்தேன்.
அல்லது நடந்த விவாதத்தை செங்கோட்டைக்காரர் யாராவது அப்பகுதி பெரியவர்களிடம் கூறியிருக்கலாம்)

அக்ரஹாரத்தில் மொத்தம் மூன்று கோவில்கள் உள்ளன.
அழகிய மணவாளப் பெருமாள் கோவில், சிவன் கோவில், கிருஷ்ணன் கோவில்.

இதில் பெருமாள்கோவில் பிரதான வாசலுக்கு நேராக செல்லும் தெருவில் உயரம் குறைவான ஒரு கல் ஓரமாக உள்ளது.
அதே கோவிலின் வாசலுக்கு வந்துசேரும் இடப்பக்க (குறுகிய) தெருவில் இரு கற்கள் நடப்பட்டுள்ளன (வரைபடத்தில் சிவப்பு புள்ளிகளாகக் குறித்துள்ளேன்).

மேற்கண்ட எதுவும் பொதுவழி இல்லை.

தீண்டாமை எனுமளவுக்கு எதுவுமில்லை.
யார்வேண்டுமானால் போய்வரலாம்.
பல மாணவர்கள் டியூசன் படிக்க இங்கேதான் வருகிறார்கள்.
ஊர்மக்கள் அனைவரும் சாமி கும்பிடவும் வருகிறார்கள்.
எந்த தடையுமில்லை.

முகநூலில் சண்டைபோடுவதை விட அக்கிரகாரவாசிகளிடம் கற்களால் ஏற்படும் இடைஞ்சலை எடுத்துக்கூறியிருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.

Wednesday 16 August 2017

ஈ.வே.ரா மூவர்ணக் கொடியைக் கொளுத்தினாரா?

ஈ.வே.ரா மூவர்ணக் கொடியைக் கொளுத்தினாரா?

சில வந்தேறி திராவிடியா பயல்கள்
அவர்களது நைனா ஈ.வே.ரா தேசியக்கொடியைக் கொளுத்தினார் என்றும்
இந்திய வரைபடத்தில் தமிழகத்தை தவிர பிற பகுதிகளை கொளுத்தினார் என்றும்
இரண்டு பொய்களைக் கூறுவார்கள்.

ஈ.வே.ரா ஹிந்தியாவின் தேசியக்கொடி அல்லது வரைபடத்தைக் கொளுத்தியதற்கு எந்த சான்றுமே கிடையாது.

அவர் தேசியக்கொடி மீது மதிப்பு வைத்திருந்தார் என்பதற்கு ஒரு சான்று உண்டு.

1965ல் இந்தியெதிர்ப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை கடுமையாக விமர்சித்தும்
அவர்களை சுட்டுத்தள்ள வேண்டுமென கொலைவெறியுடனும் ஈ.வே.ராமசாமி தொடர்ந்து எழுதிய காலத்தில் 

"திருவல்லிக்கேணி பெரிய தெரு,
வாலாஜா ரோடு சாலை ஓரங்களில்குடியரசு தினத்திற்காக கட்டப்பட்ட தேசியக் கொடி தோரணங்களை
மாணவர்கள் அறுத்து சொக்கப்பனை போல் கொளுத்தி அவமதித்திருக்கின்றனர்.
(7 கல்லூரிகள் மாணவர்கள் கோட்டைக்கு ஊர்வலம் சென்று அமைச்சர் வெங்கட்ராமனை சந்தித்து மகஜர் கொடுக்க புறப்பட்ட வழியில்)"
என்று எழுதியுள்ளார்.
(விடுதலை, 13.02.1965)

இதிலிருந்து அவர் தேசியக்கொடியை எரித்தவரில்லை என்பது தெளிவாகிறது.

Wednesday 9 August 2017

அரக்கர்

அரக்கர்

அரக்கு நிறத்தில் இருப்போர் அரக்கர்.

அசுரன் என்பது வேறு.

சுராபானம் அருந்துவோர் சுரராம்.

அதை அருந்தாததவன் அசுரனாம் அவனே அரக்கன் என்றும் குறிக்கப்படுகிறானாம்.

பொதுமையான அறிவைப் பயன்படுத்தவும்.

ஒரு குறிப்பிட்ட மக்களை வேற்றினத்து மக்கள் அவர்கள் உடல்நிறத்தை குறிப்பிட்டு பெயர்வைத்து அழைப்பார்களா?

இல்லை அவர்கள் குடிக்கும் பானத்தை குறிப்பிட்டு பெயர்வைத்து அழைப்பார்களா?

-----------
சுர், சுள், சுல், சுறீர், சுரம் அனைத்தும் நெருப்பைக் குறிப்பது.
சூரன் என்பது கதிரவனைக் குறிக்கும்.
_ பாவாணர்
-----------
அதாவது குமரிக்கண்டம் முதல் இமயம் வரை தமிழர் வாழ்ந்தபோது
வடக்குத் தமிழர் காலநிலையின் காரணமாக தெற்குத் தமிழரை விட வெளுத்த நிறமாக இருந்திருப்பர்.
அவர்கள் தெற்குத் தமிழரது தோல் சிறிது சிவப்பு கலந்த கரியநிறமாக இருப்பதைக் குறிப்பிட்டு அவர்களை அரக்கர் என்று அழைத்திருப்பர்.
இலக்கியங்களில் இராவணன் அரக்கன் என்று அழைக்கப்பட்டுள்ளான்.

ஆக அரக்கன் இழிவான சொல் இல்லை.

Tuesday 8 August 2017

சக்கரவியூகம்

சக்கரவியூகம்

2012 ல் ஹிந்தியில் சக்ரவியுஹ் என்ற நக்சலைட் பற்றிய ஒரு படம் வந்தது.

சமீபத்தில்தான் அது நினைவுக்கு வந்தது.
விட்மேட் ல் பதிவிறக்கம் செய்து பார்த்தேன்.
பிரகாஷ் ஜ்ஹா என்ற பிராமணர் தயாரித்து இயக்கிய அந்த படம் உண்மையில் நான் எதிர்பார்த்தது போல இல்லை.

பொதுவாக இந்தி படம் எல்லாமே ஒரே கதைதான்.
கதாநாயகன் அல்லது கதாநாயகி வேறொருவருடன் காதலில் இருப்பார்.
அவரை ஓரங்கட்டி தான் இடம் பிடிப்பதுதான் ஒன்லைன்.

எல்லா இந்தி படங்களும் ஏதோ ஹிந்தியா செல்வத்தில் கொழிப்பது போலவும்
அவர்களுக்கு வரும் பணக்கார பிரச்சனைகளை மையமாக வைத்துமே இருக்கும்.

ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் முழுக்க முழுக்க நக்சலைட்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்டிருந்தது சக்ரவியுஹ்,
ஆதிவாசிகள் தரப்பு நியாயங்களை பாமரருக்கும் புரியும்படி சொல்லி,
கார்ப்பரேட் மீதும்
அது இயக்கும் அரசியல்வாதிகள் மீதும்
அதற்கு அடிமைவேலை செய்யும் காவல்துறை மீதும் கோபம் வருமாறு செய்கிறது.

கம்யூனிசம் என்பதையெல்லாம் தாண்டி எளிமையாகக் கூறவேண்டுமென்றால்
ஆதிவாசிகள் கிராமம் மொத்தமே 50 மண்வீடுகள் வரை கொண்டவை.
கிராமங்கள் காடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எந்த அடிப்படை வசதியுமற்று இருக்கின்றன.
அந்த நிலத்தின் கீழே கனிமங்கள் இருக்கின்றன.

அந்த மக்களை ஏறெடுத்தும் பார்க்காத அரசாங்கம் அவர்களது கிராமத்தை காலி செய்யக் கூறுகிறது.

ஆதிவாசிகள் மறுக்கிறார்கள்.
அரசாங்கம் வன்முறையில் இறங்குகிறது.
தமது நிலத்தை காத்துக்கொள்ள வேறு எந்த வழியும் இல்லாத ஆதிவாசிகள் ஆயுதம் தூக்குகிறார்கள்.

அரசும் ஆயுதம் தாங்கிய துணைராணுவத்தை களத்தில் இறக்குகிறது.

மேற்கண்ட படத்தில் ஆயுதக் காவல்படைக்கு தலைவனாக இருக்கும் சட்டத்தை நம்பும் நேர்மையான அதிகாரி ஒருவன்
தனது நண்பனை உளவாளியாக நக்சலைட்களுக்குள் அனுப்புகிறான்.
அவன் சிறையிலிருந்து தப்பிபோவதுபோல் தப்பித்து நக்சலைட்களிடம் தஞ்சமடைந்து அவர்களோடு சேருகிறான்.

அதன்பிறகு நக்சலைட் நடவடிக்கைகளை அவ்வப்போது துப்பு கொடுக்கிறான்.
இதன் மூலம் முக்கியமான நக்சலைட் தளபதி பிடிபட்டு அவர்களின் ஆயுதக் கொள்வனவும் பணப்பரிவர்த்தனையும் பாதிக்கப்படுகிறது.

காலப்போக்கில் உளவாளி நக்சலைட் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாக மாறுகிறான்.
தன்னால் ஏற்பட்ட இழப்பை தானே ஓரளவு சரிசெய்து தளபதியை மீட்டுக்கொண்டு வந்து இறுதியாக தான் பலியாகிறான்.

இந்த படத்தில் ஆதிவாசிகள் மீது அரசாங்கம் நடத்தும் அத்தனை ஒடுக்குமுறைகளையும் அப்படியே காட்டியுள்ளனர்.
நியாயமான வழியில் போராடும் நக்சலைட்டுகள்,
அவர்களை எதிர்த்து சிறிதும் நியாயமற்ற முறையில் கோழைத்தனமாக குறுக்குவழியில் எந்த தரைமட்டத்துக்கும் இறங்கி அடிக்கும் மனிதத்தன்மை அற்ற அரசாங்க படை
என உண்மையை முகத்தில் அறைகிறது இந்த படம்.

அதன்பிறகும் இந்த படம் ஹிந்தியாவில் ஓடுமா?
படம் தோல்வியைத் தழுவியது.

ரெட் அலர்ட் என்று ஒரு படம் பார்த்தேன்.
ஒரு அப்பாவியை நக்சலைட்கள் பிடித்துக்கொண்டு போய் வலுக்கட்டாயமாக ஆயுததாரி ஆக்குவது போலவும்
அவன் பிறகு அரசிடம் சரணடைந்து அவர்களைக் காட்டிக்கொடுப்பது போலவும் எடுக்கப்பட்ட அந்த படம்
நக்சலைட் தரப்பு நியாயங்களை ஓரளவு சொல்லியிருக்கிறது.
அதுவும் கூட வெற்றிப்படம் என்று கூறமுடியாது.

இதேபோல ஹய்தெர் என்ற ஒரு படம் காஷ்மீர் பற்றி வந்தது.
அதிலும் முடிந்த அளவு காஷ்மீர் மக்களின் நியாயங்களைச் சொல்லியிருக்கின்றனர்.
இதை இயக்கியவரும் விஷால் பரத்வாஜ் என்ற பிராமணர்தான்.
அது ஓரளவு வெற்றியடைந்தது.

ஹய்தெர் படம் பார்க்கவிட்டாலும் சக்ரவியூஹ் படம் கட்டாயம் பாருங்கள்.
மொழி புரியாவிட்டாலும் புரியும்.
சப் டைட்டிலுடன் பார்த்தால் நன்கு தெளிவாகப் புரியும்.

புதியதொரு தமிழர் மதம், பழமையில் இருந்து.

புதியதொரு தமிழர் மதம், பழமையில் இருந்து.

பாவாணர் எழுதிய 'தமிழர் மதம்' எனும் நூலின் முதல் பகுதி

சமயம் என்பதன் வேர்ச்சொல் சமைதல்.
அதாவது முதிர்ச்சி அடைதல், பருவமடைதல், பக்குவமடைதல்.

கடவுள் என்பதன் வேர்ச்சொல் கடத்தல். அதாவது அனைத்தையும் கடந்து நிற்பது.

மதம் என்பதன் வேர்ச்சொல் மதித்தல். மரியாதை செலுத்துதல்.

தெய்வம் என்பதன் வேர்ச்சொல் தீ.
அழிவை ஏற்படுத்துவது. கட்டுப்படுத்தினால் நன்மை விளைவிக்கும்.

நாகரிகமற்று மாந்தர் வாழ்ந்த நிலையில் கொல்லும் தன்மையுடைய எல்லாவற்றையும் உயிர் அச்சம் காரணமாக தெய்வமென கருதி அதற்கு படையலிட்டு வணங்கத் தொடங்கினர்.
இதுவே மதம் உருவாகும் தொடக்கமாகும்.
பிறகு தமக்கு நன்மை செய்வனவற்றை நன்றியுணர்வினால் வணங்கத் தொடங்கினர் (கதிரவன், திங்கள், மரங்கள், ஆறு).

தனது மக்களைக் காக்க  உயிர் துறந்த மறவர்களையும் பாராட்டும் விதமாக வழிபடத் தொடங்கினர் (நடுகல்)
பிறகு தம்மை பாதுகாத்து வழிநடத்திய தலைவனை வணங்கத் தொடங்கினர் (இந்திரன்).

கொள்ளைநோய், பஞ்சம், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற புரிந்துகொள்ள முடியாத அழிவுகளுக்கு கண்ணுக்குப் புலப்படாத தெய்வத்தை வணங்கத் தொடங்கினர்.

முதலில் குறிஞ்சியில் மட்டும் வாழ்ந்த மாந்தர் பிற திணைகளுக்கும் பரவினர்.
பிறகு திணைக்கு ஒரு தெய்வம் தோன்றியது. (மாயோன், சேயோன், வேந்தன், வருணன், கொற்றவை)

அதாவது பாவாணர் கூற்றுப்படி,
உயிர் அச்சம் காரணமாக கொல்லும் தன்மை உடையவற்றையும்
தான் உயிர்வாழ உதவுவற்றையும்
வணங்குவது படையல் செய்வது மூலம் தன்னை தற்காத்துக் கொள்தல் சிறுதெய்வ வணக்கமாகவும்

நன்றி உணர்வால் திணைத் தலைவர்கள் இறந்த பிறகும் அவர்களை மறவாமல் நினைவு கூறுதல் பெருந்தேவ மதமாகவும் உருவாயின

  புரிந்துகொள்ள முடியாத அழிவுகளையும் அற்புதங்களையும் நிகழ்த்தும் கண்ணுக்கு புலப்படாத ஆற்றல் ஏற்படுத்தும் பேரழிவின் மீதான அச்ச உணர்வால் தன் தனிப்பட்ட வாழ்க்கையை சீரமைத்து ஒழுக்கமாக வாழ்வது கடவுள் சமயமாகவும்

அதாவது தற்காப்பை அடிப்படையாகக் கொண்ட (1)சிறுதெய்வ வணக்கம்

(தலைமைக்கு) கீழ்படிதலை அடிப்படையாகக் கொண்ட (2)பெருந்தேவ மதம்

(கண்ணுக்கு புலப்படாததால் ஏற்பட்ட) புரியாமையை அடிப்படையாகக் கொண்ட (3)கடவுள் சமயம் என மூன்றுவகை வழிபாடுகளும் குமரிக்கண்ட காலத்திலேயே அனைத்து தமிழர்களாலும் கடைபிடிக்கப்பட்டன என்று பாவாணர் கூறுகிறார்.

இதில் பெருந்தேவ மதமான திணைத் தலைவர் வழிபாட்டில் இரண்டு நன்கு வளர்ச்சியடைந்து சைவமாகவும் வைணவமாகவும் சம காலத்தில் உருவானதாக பாவாணர் கூறுகிறார்.
மாயோன் திருமாலாகவும் சேயோன் சிவனாகவும் ஆகி இரண்டு மதங்கள் உருவாயின. (2:1 மற்றும் 2:2)
(இதில் வைணவமே சைவத்தை விட தமிழுக்கு நெருக்கமானது என்கிறார் பாவாணர்)

இந்த நூலில் மேற்கொண்டு மதங்களின் வளர்ச்சி மற்றும் திரிபு பற்றி விரிவாகக் கூறுகிறார்.
அதனால் முதல் பகுதியில் உள்ள பழமையான வழிபாட்டு முறைகள் பற்றிய முக்கியமான கருத்துகளை மட்டும் மேலே தெரிவித்துள்ளேன் .
இதிலிருந்து எனக்கு தோன்றுவதை இங்கே எழுதுகிறேன்.

(1) சிறுதெய்வ வணக்கம்
இது தனி மதம் கிடையாது. வணக்கம் மட்டுமே.
இது பேய், ஆவி, அணங்கு(மோகினி), பூதம் போன்ற மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது.
உயிரைக் காக்கும் இயற்கை அம்சங்களை வணங்குவதும் உண்டு.
(இதுவே பழமையான வழிபாட்டு முறை, நாகரிகம் வளராத காலகட்டம்)

(2) பெருந்தேவ மதம்
தலைமை தாங்கிய ஒருவர் இறந்த பின்னும் அவரை நினைவு கூர்ந்து அவர் காட்டிய வழியில் நடப்பது.
பத்தினி வழிபாடும் இதில் உள்ளது.
(இரண்டாவது வழிபாட்டு முறை திணைவழி நாகரிக காலகட்டம்)

(3) கடவுட் சமயம்
கண்ணுக்குத் தெரியாத ஒன்று தம்மை கண்கானிப்பதாகவும் உலகை இயக்குவதாகவும் நினைப்பது அதனால் தமது வாழ்க்கை முறையில் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பது.
(மூன்றாவது வழிபாட்டு முறை, நாகரிகம் நன்கு வளர்ந்துவிட்ட காலகட்டம், இன்றைய மதங்கள் பெரும்பாலும் இந்த சிந்தனையைத் தழுவியவையே.
தற்போது நாகரீகமும் அறிவியலும் பல மடங்கு வளர்ந்துள்ள நிலையில் அதற்குத் தகுந்த ஒரு சமயம் இன்னும் உருவாகவில்லை.
அதை நாம் உருவாக்கவேண்டும்.)

தமிழர்கள் இம்மூன்றையும் கடைபிடித்து இன்றும்கூட வருகின்றனர்,
ஆனால் ஒன்றோடு ஒன்றைக் குழப்பி.

முதல் வழிபாடான சிறுதெய்வ வணக்கம் பல பிரிவுகளைக் கொண்டிருந்தாலும் முக்கியமாக இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது
முதலாவது அச்சத்தை அடிப்படையாகக் கொண்டது (1:1)
இரண்டாவது நன்றியை அடிப்படையாகக் கொண்டது (1:2)

(1:1) பாம்பை வணங்குவது, தீயை வணங்குவது, ஆவி வரவழைத்து படையலிடுவது சிறுதெய்வ வணக்கம்.
அதாவது சிறுதெய்வ வணக்கத்தின் அச்சத்தின் மீதான அம்சம்.
குலதெய்வ வழிபாடும் இதிலிருந்து பிரிந்ததே.
(நடுகல் வழிபாடு குலதெய்வ வழிபாட்டுடன் குழப்பப்படுகிறது.
நடுகல் வழிபாடு இறந்தவரை அழைப்பதில்லை நினைவுகூர்தல் மட்டுமே)
ஆவிகளை கடவுளாக நினைப்பது அல்லது திணைத்தலைவராக உருவகப்படுத்துவதும் தவறு.

(1:2) ஆறு, மரம், கதிரவன் என உயிரைக் காக்கும் இயற்கை அம்சங்களை வணங்குவதும் இதிலிருந்தே வந்தது.
நடுகல் வழிபாடும் இதிலிருந்தே வந்தது.
காவல்மரம் ஒன்றை அரசன் பாதுகாத்தலும் இதிலிருந்து வந்ததே.
சிறுதெய்வ வணக்கத்தின் இந்த நன்றியுணர்வு அம்சம்தான் உண்மையில் பகுத்தறிவின் படி அமைந்துள்ளது.
அதாவது மரத்தை வணங்குவது, மாட்டை வணங்குவது, கதிரவனை வணங்குவது, நிலவை வணங்குவது போன்றவை.
(இதையே நாம் தனி மதமாக உருவாக்கவேண்டும்)

(2) கோவிலுக்குப் போவது சைவ படையல் படைப்பது பெருந்தேவ மதம் (அல்லது பெருந்தெய்வ வழிபாடு)
அந்த பெருந்தெய்வத்தை கடவுளாக நினைத்து இதுவே கடவுள் சமயம் என்று குழப்பப்படுகிறது.
திணைத் தலைவரான பெருந்தெய்வத்தை கடவுளாக நினைப்பதும் தவறு.
ஏனெனில் கடவுளுக்கு உருவம் கிடையாது.
திணைத் தலைவர் ஒரு கடந்த கால நினைவு மட்டுமே.
அவர் ஒரு வழிகாட்டி முன்மாதிரி அவ்வளவுதான்.
நிகழ்காலத்தில் அவர் ஆவியாக வருவதோ நிகழ்வுகளை வகுப்பதோ கிடையாது.

(3) தமிழரின் உண்மையான சமயம் கண்ணுக்குத் தெரியாத உருவமற்ற கடவுளை மனத்தில் வைத்து வணங்குவதே.
அது தம்மை கண்காணிப்பதாக நினைத்துக்கொண்டு ஒழுக்கமாக வாழ்வதே.

மேற்கண்ட மூன்று மதங்களும் ஒன்றுடன் ஒன்று குழம்பி இன்று எதுவுமே சரியாகக் கடைபிடிக்கப் படவில்லை.

அறிவியல் நன்கு வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் எல்லாவற்றுக்கும் மேலே இருந்து ஒரு சக்தி நம்மை ஆட்டிவைப்பது இல்லை என்பது தெரிந்துவிட்டது.
பேரழிவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதும்
உயிரினங்கள் எப்படி தோன்றி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதும் தெளிவாக விளக்கப்பட்டுவிட்டன.

ஆக நமது ஆதிகால வணக்கத்தில் அச்ச உணர்வினால் நாம் செய்த வழிபாடுகளை (பாம்பு வணக்கம், ஆவி வணக்கம், நெருப்பு வணக்கம்) தவிர்த்துவிட்டு
நன்றியுணர்வினால் நாம் செய்த வழிபாடுகளை (மரம், ஆறு, மலை, நடுகல் வணக்கம்) பின்பற்றி புதியதொரு மதத்தை உருவாக்க வேண்டும்.
அதாவது 1:1 ஐ விட்டுவிட்டு 1:2 ஐ பின்பற்றவேண்டும்.

நமக்கு உயிரளிக்கும் ஐம்பூதங்களையும் வணங்கவேண்டும்.

வணங்குதல் என்றால் வணக்கம் தெரிவித்தல் அதாவது மரியாதை செலுத்துதல்.
ஐம்பூதங்களை அதாவது இயற்கையை எப்படி மதிக்கலாம்?
அதை பாதுகாப்பதன் மூலம் அதற்கான மரியாதையைச் செலுதுதலாம்.

மக்களுக்காக வீரமரணம் அடைந்தோரை நடுகல் நட்டு வழிபடவேண்டும்.
வழிபடுதல் என்றால் அவர் காட்டிய வழி நடத்தல்.

மற்றபடி எல்லாவற்றிற்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று நம்புகிற கடவுள் சமயமும் ஒரு மூடநம்பிக்கையே.
இறந்தவர் திரும்புவார் என்று நம்புதலும் மூடநம்பிக்கையே.
(இவ்விரண்டையும் தவிர்க்கும் வழிபாட்டினை நம்பா மதம் என்கிறார் பாவாணர்)
நாம் நம்பா மதத்திற்கு மாறி இத்தகைய மூடநம்பிக்கைகளைக் கைவிடுதல் வேண்டும்.
இறை அல்லது ஆவி மீது பக்தி செலுத்துவதன் மூலமும் காணிக்கை கொடுப்பதன் மூலமும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் நமக்கு சாதகமாக மாற்றலாம் என்ற எண்ணத்தையும் பேராசையையும் அடியோடு கைவிட வேண்டும்.

சுருங்கக்கூறின்,
கடவுள் வழிபாட்டிற்கு செய்யப்படும் அத்தனை செயல்களும் இயற்கையைக் காக்க செய்யப்படவேண்டும்

குலதெய்வ வழிபாடு என்று செய்யப்படுபவை நடுகல் நடப்பட்ட மாவீரருக்கு செய்யப்படவேண்டும்.

தம்மை கண்கானிக்க மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பி
அதன் மீதான அச்சத்தில் ஒழுக்கமாக வாழ்வதை விட தமது மனசாட்சி படி ஒழுக்கமாக வாழ்தல் வேண்டும்.

மேலும் அறிய,

தேடுக: தமிழருக்கு (மட்டும்) உரித்தான மதம் வேட்டொலி

தேடுக: பொங்கலும் இறைமறுப்பும் வேட்டொலி