Showing posts with label வணிகம். Show all posts
Showing posts with label வணிகம். Show all posts

Friday, 15 December 2023

துணைநகர வணிகம்

துணைநகர வணிகம்

 ஒரு புதுமாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்து வேலையை விட்டுவிட்டு உள்ளூரில் ஒரு வேலைக்கு சென்றபோது அங்கே அந்த முதலாளி ஏறத்தாழ திவால் ஆகி இருந்தார்.
 வங்கியிலும் கந்துவட்டியிலும் வாங்கிய கடன் அவர் கழுத்தை நெறித்தது.  
 அவர் முதலீடு செய்திருந்த கார்ப்பரேட் நிறுவனம் அவர் ரத்தத்தை உறிஞ்சி துப்பிவிட்டது!
 அவர் வீடு, நகைகள் எல்லாம் கரைந்துவிட்டது!
 மீதமிருந்த அந்த நிறுவனத்தின் பொருட்களை திரும்ப ஒப்படைத்து கணக்கு முடிக்கத்தான் அவன் வந்திருந்தான்.

 அவனுக்கு வணிகம் பற்றி எதுவும் தெரியாது.
ஆனால் அவன் தன் முதலாளி இழந்த எல்லாவற்றையும் மீட்டு அந்த பெரிய நிறுவனத்தை பழிவாங்குவான் என்று அப்போது யாருக்கும் தெரியாது.

 கதையை முதலில் இருந்து தொடங்குவோம்! 
அது ஒரு பெருநகரம்! அதற்கும் 25 கி.மீ தொலைவில் இருந்த மாநில எல்லைக்கும் இடையில் ஒரு துணைநகரம் இருந்தது.
இந்த துணைநகரம்தான் கதைக்களம்!

 ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனம்! நாடு முழுவதும் ஏன் அண்டைநாடுகள் வரை கோலோச்சும் நிறுவனம்!
நூறாண்டு கடந்த வெள்ளைக்கார நிறுவனம்! தொலைக் காட்சியில் வரும் விளம்பரங்களில் பாதி அதன் தயாரிப்புகள்தான்.

 அந்த துணைநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு அந்நிறுவனப் பொருட்கள் (வாங்கி வைத்து விற்பனை செய்யும்) விநியோக உரிமையை அந்த துணைநகரத்தின் வியாபாரி ஒருவர் பெருமுயற்சி செய்து வாங்கினார்.

 அந்த நிறுவனத்தின் பொருட்கள் சந்தையில் தினசரி வீட்டு உபயோகப் பொருட்களில் 40% அளவுக்கு புழக்கத்தில் இருந்தது.
 கடை ஒன்று நடத்தி 30 ஆண்டுகாலம் ஏற்படுத்திய சேமிப்பை இதில் முதலீடு செய்தார். வியாபாரிகள் பலரும் அந்த நிறுவனம் பற்றி எச்சரித்தனர். இருந்தாலும் அவர் நம்பிக்கையுடன் இதில் இறங்கினார்.

 முதல்கட்டமாக 30 லட்சம் கொடுத்து பொருட்கள் வாங்கினார். மாதம் ஒரு கோடிக்கு மேல் புரளும். அதன் 4% அதாவது நான்கு லட்சம் லாபமாக நிற்கும் என்பது அந்த நிறுவனம் அளித்த வாக்குறுதி.

ஊருக்கு சற்று வெளியே மூன்று பெரிய அறைகள் உள்ள தகரம் வேய்ந்த கிட்டங்கி வாடகைக்கு எடுத்தார். இரண்டு சின்னயானை வண்டிகள், நான்கு பைக் வண்டிகள், ஒரு எக்செல் வண்டி தவணையில் வாங்கினார்.

 கல்லூரி செல்லமுடியாத ஓரளவு ஆங்கிலம் தெரிந்த இளைஞர்கள் 4 பேர் பெரிய கடைகள் முதல் பெட்டி கடைகள் வரை பைக்கில் சென்று கைபேசியில் ஆர்டர் எடுப்பார்கள். 
கணினிக்கு  ஒரு ஆள்! பொருட்களை எடுத்து வைத்து கடை வாரியாக பெட்டியிட நான்கு படித்த பெண்கள். வண்டிகளுக்கு இரண்டு ஓட்டுநர்கள். வரவு செலவு பார்க்க ஒருவர் உதவிக்கு சிலர் என மொத்தம் 15 பேர் வரை வேலைவாய்ப்பு பெற்றனர். இதுபோக வாரம் இருமுறை பாதி லாரி அளவு 10 லட்சம் வரை பெறுமானமுள்ள பொருட்கள் வரவழைக்கப்பட்டு இறக்கி அடுக்கப்படும்.

 மொத்தம் 300 கடைகள், 350 வகையான பொருட்கள், அவற்றில் ஒரு நாளைக்கு தோராயமாக 50 என்று ஒவ்வொரு வாரமும் கடைகள் சப்ளை செய்யப்படும். 

 அந்நிறுவனம் கெட்டுப்போகாத பொருட்கள் தயாரித்து விற்கும். சோப், ஷாம்பு, க்ரீம், பற்பசை, கழுவும் திரவங்கள், தேயிலை, காபி, வாசனை திரவியம், பவுடர் ஆகியன அடங்கும்.

 முன்பு ஒரு நகரத்தில் எது எவ்வளவு எப்போது விற்கும் எது விற்காது போன்ற விபரங்கள் இப்படி விநியோகஸ்தர் கூறித்தான் நிறுவனத்திற்கு தெரியும். எதையாவது அழுத்தி விற்கவேண்டும் என்றால் அதற்கு நிறுவன பிரதிநிதி வருவார். விளம்பரம், சலுகை, இலவசம் என செய்து தள்ளிவிடுவார்கள். 

 சரக்குகள் தொழிற்சாலையில் உற்பத்தி ஆகி அங்கிருந்து மைய  கிடங்கு அங்கிருந்து கிட்டங்கி  அங்கிருந்து பெரிய கடை அங்கிருந்து சிறிய கடை அங்கிருந்து வாடிக்கையாளர் என்று போகும்.
அதாவது மனிதர்கள் வணிகம் செய்தனர். 

 தொடுதிரை கைபேசி வந்தபிறகு எல்லாம் மாறிவிட்டது. ஒரு பெட்டிக்கடை என்னென்ன பொருட்கள் வாங்குகிறது என்பது வரை தரவுகள் மென்பொருளில் சேகரிக்கப்பட்டு செயற்கை மூளை அதைப் பதிந்து வைத்துக்கொள்ளும். 


 மனிதர்கள் இல்லாமலேயே நிறுவன மென்பொருள் கடைகளை வகைப்படுத்தி ஆர்டர்களைக் கண்கானித்து மனிதர்களுக்கு கட்டளை இடும்.
 ஒரு பெட்டிக்கடையில் 10 பொருட்கள் விற்றால் அடுத்தமுறை 11 பொருட்கள் விற்கச் சொல்லும். கடைகளுக்கு இலக்கு நிர்ணயித்து அதைத் தாண்டினால் சலுகை என்று முடிவு செய்யும்.

 வணிகத்திற்கு மனிதர்கள் தேவையில்லாமல் போனார்கள். முன்பெல்லாம் விநியோகஸ்தர்கள் அனுபவம் வியாபாரத்திற்கு தேவையாக இருந்தது இப்போது அந்த அனுபவம் மென்பொருள் வசம் இருக்கும்.

 காலையில் கைபேசியுடன் ஒரு புதிதாக வேலைக்கு வந்த பையன் கிளம்பினாலும் அதுவே வழிகாட்டி அதுவே ஆர்டர் கேட்கச் செய்து அதுவே புதிய பொருளைப் பரிந்துரைத்து அதுவே பில் ரெடி செய்து அனுப்பிவிடும். போட்டிப் பொருட்களையும் விசாரித்து தெரிந்துகொள்ளும்.

 பொருட்களுக்கு விநியோகஸ்தர் விலை வைக்கமுடியாது. பில்லைப் பார்த்து பொருட்களை எடுத்து சரிபார்த்து பெட்டியிட வேண்டும்.
 வாகனங்களில் ஏற்றி மறுநாள் கடைகளுக்கு சப்ளை செய்து வசூல் செய்து வரவு செலவு பார்க்கவேண்டும். சிறுசிறு கடைகள் வரை சப்ளை செய்ய அந்நிறுவனம் கட்டாயப் படுத்தியது. இதனால் வண்டிக்கான செலவு அதிகரித்தது. 

 100 ரூபாய் பொருள் அனுப்பினால் 50 ரூ வசூல் 50 ரூ பற்று என்று நிற்கும். இப்படி முதலீட்டில் ஒரு பகுதி பற்று என்று வெளியே நிற்கும். பொருள் போய்ச் சேர்வது மட்டுமே நிறுவனத்தின் கவலை பணம் வசூலிப்பது விநியோகஸ்தர் பாடு. கடைசியில் கணக்கு பார்த்தால் 1% அல்லது 1.5% சதவீதமே லாபம் நிற்கும். கடைக்காரருக்கு 8% அதுபோக விநியோகஸ்தர் கடனும் தரவேண்டும். உடனடி பணம் அளித்தால் 2% தள்ளுபடி தரவேண்டும்.

 இப்படியாக தினசரி இலக்கை முடித்து மாத இறுதியில் நிறுவனம் நிர்ணயித்த இலக்கை நெருங்க வேண்டும். அதை அடைந்துவிட்டால் 2% லாபம் நிறுவனம் தரும்.

 ஆரம்பத்தில் ராஜாவாக இருந்த விநியோகஸ்தர்கள் இப்போது வேலைக்காரர்கள் ஆயிருந்தனர்.
 அவர்களுக்கு இலக்கை அடைந்து 2% வாங்குவதைத் தவிர வேறு வழி இல்லை. நிறுவன பிரதிநிதி தன் பங்குக்கு அழுத்தம் கொடுப்பார். இலக்கை அடையாவிட்டால் ஒரே இரவில் கூட விநியோக உரிமை பறிக்கப்படலாம்.

 அந்த நிறுவனத்தில் ஒரேயொரு நல்ல கொள்கை இருந்தது. விற்காத பொருட்களை அதன் ஆயுட்காலம் முடிந்துவிட்டால் திருப்பிக் கொடுத்து அசலை வாங்கிக்கொள்ளலாம்.
 ஆனால் இதையும் கெடுக்க பிரதிநிதிகள் இலக்கை அடைய விற்காத பொருட்களை விற்றதாக காட்டச் சொல்வர். இந்த படித்த ஏமாற்றுக்கார பிரதிநிதிகளை நம்பி அந்த முதலாளி மோசம் போனார். 

 இதுபோக அருகில் இருக்கும் பெருநகரத்தில் பெரிய கடைகளில் இந்நிறுவன சரக்கு வாங்கி இந்த துணைநகரத்தில் வந்து விற்கும் சிலர் இருந்தனர். இவர்கள் சிறு திருடர்கள்.
 ஒரு கடை ஒரு சோப்பு வாங்கும் என்ற நம்பிக்கையில் விநியோகஸ்தர் சோப்புகளை வாங்கி அது கிடைக்க அதிகம் விற்காத இன்னொரு சோப்பை வாங்க கட்டாயப் படுத்தப்பட்டு அதையும் வாங்கி கடைக்கு போனால் அந்த சோப்பு ஏற்கனவே அந்த சிறுதிருடன் மூலம் அங்கே வந்திருக்கும். 
 கடைக்காரர் ஒரு முறை அவனிடம், ஒருமுறை விநியோகஸ்தரிடம் என வாங்கி இருவரிடமும் பாக்கி வைத்து கடன் பெற்றுக் கொள்வார். 

 அந்த முதலாளி இதைக் கூட சமாளித்துவிட்டார்.

 ஆனால் ஒரு விநியோகஸ்தர் எல்லைக்குள் இன்னொரு விநியோகஸ்தர் வந்து சப்ளை செய்வதும் நடந்தது. நிறுவன மேலிடத்தில் புகாரளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படமாட்டாது. இதனால் இந்த புதிய விநியோகஸ்தர் மிகவும் திணறினார். 

 அப்போதும் பிரதிநிகள் தவறான யோசனை கொடுத்தனர். அத்துமீறும் விநியோகஸ்தர் எல்லைக்குள் ஒரு பெரிய கடைக்கு குறைந்த விலைக்கு சப்ளை செய்து இதை ஈடுகட்டுமாறு கூறினர். இரவில் திருட்டுத்தனமாக ஒரு வண்டி சரக்குகள் குறைந்த விலைக்கு எல்லை தாண்டி அந்த பெரிய கடைக்குள் சென்று இறக்கப்பட்டன. 

 இதையெல்லாம் விட ஒவ்வொரு கடைக்காரருக்கும் கைபேசியில் அந்நிறுவன (சலுகைகளை அறிந்து ஆர்டர் போடும் வகையில்) செயலியை கொண்டுசேர்த்தனர்.
 இப்போது கடைக்காரர் பொருட்களை சலுகை விலை, இலவச இணைப்பு போன்ற வசதிகளைப் பார்த்து எந்நேரமும் ஆர்டர் செய்வார். விற்க சிரமமான பொருட்களைத் தள்ளிவிடுவது மேலும் சிரமமானது.

 இப்படியாக உள்ளே முதலீடு செய்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது. இதைவிட்டு விட்டு ஓட்டல் தொடங்கலாம் என்ற முடிவை எடுத்தபோது காலம் கடந்துவிட்டது.

 இந்த நிலையில் அந்த புதியவன் வந்தான். அப்போது அந்த விநியோகஸ்தர் திவாலாகும் நிலையில் இருப்பது வெளியே தெரியாது. அதனால் வேலையாட்கள் விட்டுச் செல்லாமல் இருந்தனர். 30 லட்சம் புழங்க வேண்டிய இடத்தில் 7 லட்சம் அதுவும் மிகவும் கடினப்பட்டு புழங்கிக் கொண்டிருந்தது.
 அவன் வந்தவுடனே அவன் தன் உறவினன் என்பதால் முதலாளி தன் நிலையை அவனிடம் மட்டும் கூறினார். 

 அவன் முதலில் ஒரு மாதம் உன்னிப்பாக கவனித்தான். பிறகு களத்தில் இறங்கினான்.பெரிய கடைகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை விட்டுவிடச் சொல்லிவிட்டான்.
 விற்காத பொருட்களை கணக்கெடுத்தான்.
ஒவ்வொரு கடைக்காரராக அழைத்து வந்து காட்டி அசல் விலைக்கு முடிந்தவரை பொருட்களைத் தள்ளிவிட்டான். விற்றதாகக் காட்டப்பட்ட மீதி பொருட்களை மென்பொருளுக்கு உள்ளே கொண்டுவர அதை விற்ற கடைக்காரர்கள் திருப்பித் தந்தது போல காட்டி நிறுவன மென்பொருளின் இருப்பிற்குள் கொண்டுவந்து அவற்றை திரும்ப ஒப்படைத்து அசலை வாங்கினான்.
 இப்படியாக பொருட்கள் காலியாகி அந்த பணம் கைக்கு வந்தது.
 வாகனங்களையும் ஆட்களையும் பாதியாகக் குறைத்தான்.
 கடைக்காரர்கள் வைத்திருக்கும் பாக்கியை வசூலிக்க திறமையான ஒரு பையனை நியமித்தான். 
 
 இப்படி ஒவ்வொரு ரூபாயும் முதலாளிக்கு கிடைக்கும்படி செய்தான். இப்போது முதலாளியின் கடன் கொஞ்சம் குறைந்தது. கணக்கு முடித்து பணத்தை வாங்க பிரதிநிதி உதவவில்லை. நிறுவனமும் அலைக்கழித்தது. அவனுக்கு அந்த நிறுவனத்தின் மீது கோபத்தை வரவழைத்தது.
 எல்லைக்குள் வந்து விற்றவனுக்கே விநியோக உரிமையை அளித்தது அவனுக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது. 

 கட்டிடத்தையும் வாகனங்களையும் அந்த புதிய அராஜக விநியோகஸ்தரிடரிமே விற்றுவிட்டு வேலையாட்களும் அங்கேயே வேலைக்கு சேர்ந்துகொள்ள முதலாளி முடிவு செய்துவிட்டார்.
 பூர்வீக வீட்டை விற்று மீதி கடனைக் கொடுக்க அவர் நினைத்தார்.
அப்போதும் அவருக்கு 8 லட்சம் வரை கடன் இருக்கும்.
  
 அவனால் இதைப் பொறுக்க முடியவில்லை. நிறுவனத்தின் இலக்கை நியாயமாக எட்ட முடியாமல் விநியோகஸ்தரை ஏமாற்றி போலி விற்பனையைக் காட்டிய பிரதிநிதி, அடுத்தவன் எல்லைக்குள் அத்துமீறி சப்ளை செய்து அவனை விரட்டி அந்த பகுதியைக் கைப்பற்றும் இன்னொரு விநியோகஸ்தன், இதை கண்டுகொள்ளாமல் லாபவெறியில் இயங்கும் நிறுவனம் என அனைவரையும் பழிவாங்க அவன் முடிவெடுத்தான்.

 முதலாளியிடம் தன் திட்டத்தைக் கூறினான். அவனுக்கு வழிகாட்டி அந்த சிறுதிருடன். முதலில் அந்த சிறுதிருடனைப் பிடித்து உதைத்து அவனிடம் அருகில் இருக்கும் பெருநகரத்தின் பெரிய கடையின் விபரங்களைக் கேட்டறிந்தான். அந்த பெரிய கடை மொத்தமாக பெரிய அளவில் பொருட்களை வாங்குவதால் பெரிய சலுகை கிடைக்கும். அவர்களால் விநியோகஸ்தரை விட குறைந்த விலைக்கு தரமுடியும். ஆனால் சில கிடைக்காத அல்லது ஸ்பெசலான பொருட்கள் விநியோகஸ்தரிடம் மட்டுமே கிடைக்கும். இதுதான் வித்தியாசம்.

 அந்த பெரிய கடைக்கு தன் முதலாளியை அழைத்துச் சென்றான். அங்கே ஒரு ஊரின் கடைவீதியில் இருக்கும் அத்தனை கடைகளுக்கும் தேவையான அத்தனை பொருட்களும் மொத்தமாகக் கிடைக்கும்.
 தங்கள் கிட்டங்கியைக் கடையாக மாற்றி மொத்த வியாபாரம் செய்யப் போவதாகவும் கடனாகப் பொருள் கொடுத்தால் விற்க விற்க காசு தருவதாகவும் கூறி உதவி கேட்டனர்.
 இரண்டு நாட்கள் கழித்து வரச் சொன்ன அந்த பெரிய கடைக்காரர் அந்த துணைநகரத்தில் அவருக்கு இருந்த மரியாதையை விசாரித்து அறிந்துகொண்டு முதல்கட்டமாக 5 லட்ச ரூபாய்க்கு சரக்கு தரத் தயாராக இருந்தார்.

 அவன் வேகமாக விற்கும் பொருட்களை வாங்கினான்.
 அந்நிறுவன சரக்குகள் கடைவாரியாக எது விற்கும் என்பது அவனுக்கு மென்பொருள் புண்ணியத்தில் தெரியும் அதுமட்டுமின்றி அந்நிறுவனத்திற்கு போட்டியான பொருட்களையும் (கடைக்காரர்களிடமும் ஆர்டர் எடுக்கும் பையன்களிடமும்) விசாரித்து வைத்திருந்தான். 
அந்த பொருட்களை வாங்கி கிட்டங்கியில் வைத்தான்.
 கிட்டங்கியை கடை போன்று காட்டிக்கொள்ள பெயர்பலகை மாட்டினான்.

 துணைநகரத்தி்ல் பெரிய கடைகள் பத்துதான்.
 அவற்றில் போய் அனைத்து நிறுவன பொருட்களையும் ஆர்டர் எடுத்தான்.
 ஒரு நாளைக்கு இரண்டு கடை என்று அவன் சப்ளை செய்தான். ஒவ்வொருவரிடமும் நயமாகப் பேசி முடிந்த அளவு 'பணம் கொடுத்த பிறகே பொருள் ஒப்படைப்பது' என்ற முறையில் வியாபாரம் செய்தான்.
 விநியோகஸ்தரை விட குறைவான விலை என்பதால் முக்கிய கடைகள் அவனிடமே பொருள் வாங்குவதாக வாக்களித்தனர்.
  ஒரு வாரத்திற்குள் 4 லட்சம் திருப்பிக் கொடுத்து அடுத்த கட்டமாக பத்துலட்ச ரூபாய் சரக்கு வாங்கி வந்தான்.
 
 இப்போது அராஜக விநியோகஸ்தன் பதறிக்கொண்டு நிறுவனத்தில் புகாரளித்தான்.
 கடைகளுக்கு இவர்கள் சப்ளை செய்கிறார்கள் என்று.
 பிரதிநிதி ஓடோடி வந்தான். "நீங்கள் எங்கள் நிறுவன பொருட்களை வாங்கி விற்பது எங்கள் விதிமுறைக்கு புறம்பானது" என்றான். 
  "ஆனால் பொதுவான விதிமுறைப்படி அது தவறில்லையே! ஒரு கடை வேறொரு கடையில் மொத்தமாக பொருள் வாங்கக்கூடாது என்றோ இன்னொரு கடைக்கு பொருட்கள் விற்கக் கூடாது என்றோ சட்டமில்லையே?" இவன் திருப்பிக் கேட்டான். "எந்த கடை இன்னொரு கடைக்கு டோர் டெலிவரி செய்கிறது?" பிரதிநிதி வாக்குவாதம் செய்ய அவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான்.
 பிரதிநிதி கைகளை நெறித்தபடி அந்த விநியோகஸ்தன் முன்னால் போய் நின்றான். 
" இங்கே இத்தனை கட்டுமானம் செய்து ஆட்களைப் போட்டு  வரி கட்டி விற்பதற்கு கடினமான பொருட்களில் முதல் முடக்கி ஒவ்வொரு சந்துக்குள்ளும் வண்டியை ஓட்டி நான் வியாபாரம் நடத்துகிறேன். அவன் ஒரு பழைய நோட்டில் ஆர்டர் எழுதி மறுநாள் கொடுத்துவிடுகிறான். இலக்கு இல்லை. தேவையற்ற அழுத்தம் இல்லை. மெதுவாக விற்கும் பொருட்களில் முதல் முடக்கமில்லை. எல்லா நிறுவன பொருட்களும் கிடைக்கும். வாசல் வரை சப்ளை வேறு, இனி நான் எப்படி இங்கே பெரிய கடைகளுக்கு பொருட்களை விற்பேன்?!" என்று பொருமினான்.

அவர்களது கிட்டங்கி அந்த துணைநகரத்தில் இருந்து பெருநகரை நோக்கி செல்லும் சாலையிலேயே அமைந்திருந்தது வசதியாக இருந்தது. இதனால் அந்த துணைநகரத்தின் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பெருநகரம் சென்று பொருட்கள் வாங்கும் சிறு வியாபாரிகள் அதே விலைக்கு இவன் கடையிலேயே வாங்கினர். அதாவது பெருநகரத்தில் இருக்கும் அந்த பெரிய கடையின் ஒரு கிளை துணைநகரக்கு அருகே வந்துவிட்டதாகவே இதைக் கொள்ளலாம். பழைய முறைப்படி இவன் விலை வைக்க முடிந்தது. பெரிய கடைகள் மூலம் சிறிய கடைகளுக்கு பொருள் போய்ச் சேர்ந்தது.

 துணைநகரின் பெரிய கடைகள் விநியோகஸ்தர் வழியே பொருட்களை வாங்குவது மிகவும் குறைந்து போனது சிறிது காலத்தில் அந்த அராஜக விநியோகஸ்தன் நஷ்டத்துடன் இந்த எல்லையை விட்டுவிட்டு தன் எல்லைக்குள் போய்விட்டான். அருகிலுள்ள வேறொரு விநியோகஸ்தருக்கு இந்த எல்லையை சேர்க்க நிறுவனம் முயல அவர்கள் இந்த விநியோகஸ்தன் பின்வாங்கிய கதை அறிந்து மறுத்துவிட்டனர். அது மாநில எல்லை என்பதால் அருகே வேறு விநியோகஸ்தரும் இல்லை. 

 இப்போது நிறுவனம் அந்த துணைநகரத்தில் வேறு புதிய விநியோகஸ்தரை பிடிக்க முயன்றது. இவரின் நிலைகண்டு எவரும் அதற்குத் தயாராக இல்லை. 
 இப்போது அந்த நிறுவனம் இறங்கி வந்து அவரிடம் மண்டல பிரதிநிதியை அனுப்பி பேசியது. உங்களுக்கே விநியோக உரிமை தருகிறோம். மேற்கொண்டு அரை பைசா வட்டியில் 30 லட்சம் கடனும் தந்து சரக்கும் தருகிறோம். ஒரு வாரம் கழித்து சரக்குக்கு பணம் போட்டால் போதும் எந்த வகையிலும் அழுத்தம் இருக்காது என்று கெஞ்சியது.

 முதலாளி அவனிடம் கேட்டார் அவன் முடியாது என்று கூறிவிட்டான்.  இப்படியாக சில ஆண்டுகள் அந்தப் பகுதியில் பாதி விற்பனையை இழந்தது அந்த நிறுவனம். அதை அந்த முதலாளி அடைந்தார். அதன் பிறகு ஒரு பெரும்பணக்காரர் விநியோக உரிமை வாங்கினார். அவர் இந்த மோதல் போக்கைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

 இப்போது முதலாளி கடனை அடைத்து பிள்ளைகளை ஆளாக்கி வீடும் கட்டிவிட்டதால் இந்த தொழிலை அவனிடமே ஒப்படைப்பதாக சொன்னார்.
அவனுக்கு ஏனோ இந்த தொழிலை தொடர விருப்பம் இல்லை. புதிய விநியோகஸ்தரும் வேலைக்கு அழைத்தார் அங்கும் அவன் செல்லவில்லை.

  ஒருநாள் அந்நிறுவன அதிகாரிகள் அவன் வீடு தேடி வந்தனர். 
"நீங்கள் எங்கள் நிறுவனத்தில் பிரதிநிதியாக சேரமுடியுமா?" என்று கேட்டனர். 

அதற்கும் அவன் மறுத்துவிட்டான்.
கட்டுப்பாட்டுக்குள் சிக்குண்டு வாழ்வது அவனுக்குப் பிடிக்கவில்லை.

 அவன் அந்த பெருநகர கடை முதலாளியிடம் போய் சேர்ந்துகொண்டான்
 
 
 

Friday, 7 December 2018

இனி சேலம் இன்னொரு சௌகார்பேட்டை

இனி சேலம் இன்னொரு சௌகார்பேட்டை 

எட்டுவழிச் சாலை வருவது யாருக்காக?!

சேலத்திற்கு ரோகிணி கலெக்டராக அமர்த்தப்பட்டு அவரது விளம்பரத்திற்கு செலவு செய்வது  யார்?!

சேலம் உட்பட சென்னை முதல் கோவை வரை வடமாவட்டங்களில் மகாவீரர் ஜெயந்தி அன்று கறிக்கடைகளை திறக்கவிடாமல் தகராறு செய்து கடைசியில் கலெக்டர்கள் மூலம் தடை விதித்து லோக்கல் சட்டமாகவே கொண்டுவந்து யார்?!

புதுச்சேரி முதல்வரையே வரவைத்து சாதாரண ஆள்போல தேரை இழுக்கவைத்தது யார்?!

பெரிதாக எதையுமே சாதிக்காத சேலம் பியூஸ் மானூஸ் எப்படி திடீரென்று பிரபலமானார்?!

இசுலாமியர் நாய்க்கறி போடுவதாக கொளுத்திப் போட்டது யார்?!

விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்...

சேலம் எருமாபாளையம் அருகில் 1995-ஆம் ஆண்டு சில ஜெயின் மதத்தை சார்ந்தவர்கள் (அதாவது பனியா சமூகம்) குஜராத் ராஜஸ்தான் பகுதிகளில் இருந்து வந்து குடியேறினார்கள்.

மிகச் சிறுபான்மையாக இருந்த இவர்கள் வெறும் 20 ஆண்டுகளில் சேலத்தை கைப்பற்றி தமது கைக்குள் கொண்டுவந்து விட்டார்கள்.

நம்ப முடியவில்லையா?!
ஆனால் இதுதான் உண்மை.

ஒரு பக்கம் மார்வாடிகளும் ஒரு பக்கம் ஜெயின்களும் மெல்ல மெல்ல குடியேறி சத்தமேயில்லாமல் படு சாமர்த்தியமாக எருமாபாளையம் தொடங்கி பழைப்பேருந்து நிலையம், செவ்வாய்பேட்டை, அரசிபாளையம், நான்கு ரோடு, சங்கர் நகர், காந்தி ரோடு என ஒரு வட்டமான பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான கடைகளையும் வீடுகளையும் வாங்கி குவித்துவிட்டார்கள்.

அதுதான் இன்று சேலத்தின் இதயம்.
அந்த இதயத்தில் பனியாக்கள் குத்தவைத்து உட்கார்ந்து விட்டனர்.
இப்பகுதி முழுவதும் மார்வாடியும் ஜெயினும் பெரும் ஆதிக்க சக்தியாக மாறியதன் விளைவாக சங்கர் நகர் பகுதிகளில் நான்கு தெருவின் பெயரையே அரசு கெஜட்டில் "ஜெயின் தெரு" என்று மாற்றிவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏன் சேலத்தைக் குறிவைத்துள்ளனர்?!

இங்குதான் தமிழகத்தின் முக்கியமான கனிம வளம் குவிந்துள்ளது.
(பார்க்க படம்: Mineral map of Tamil Nadu)

சேலத்திலும் அதைச் சுற்றிலும் உள்ள கனிமங்களைக் கொள்ளையடிக்க பனியா கம்பெனிகள் பல ஆண்டுகளாக காய்நகர்த்தி வருகின்றன.

அதன் விளைவு சேலம் எட்டு வழிச்சாலை மற்றும் சேலம் உருக்காலை தனியார் மயமாக்கும் முயற்சி போன்றன.

இவர்களுக்கு ஒத்தாசையாக நடந்ததே மேற்படி குடியேற்றம் மற்றும் ஆதிக்க மாற்றம்.

இதை எப்படி செய்கிறார்கள்?!

பொதுவாக வடயிந்திய வணிக சமூகமான பனியாவில் இரு பெரும் பிரிவுகள் உண்டு.
மார்வாடி மற்றும் ஜெயின்.
அம்பானி, அதானி, மிட்டல், வேதாந்தா, ஜிண்டால் என கார்ப்பரேட் பணமுதலைகள் பனியா சமூகமே.
இவர்கள்தான் மத்திய அரசை இயக்குவது.

இதில் மார்வாடிகள் இந்து மதத்தையும் ஜெயின் மக்கள் மகாவீரரின் போதனைகளையும் பின்பற்றினாலும் இரண்டு தரப்பும் பாஜகவை ஆதரிப்பவர்கள்.

காரணம் அவர்களின் வியாபாரத்திற்கு  காங்கிரசை விட பாதுகாப்பாக பாஜக ஆட்சி இருக்கிறது என்பதால்.

இயல்பில் ஜெயினும் மார்வாடியும் ஒன்றிப்போவது இல்லை.
அவர் வீதியில் இவர் வசிப்பது இல்லை, இவர் வீதியில் அவர் வசிப்பது இல்லை.

இவர்கள் இரண்டு பேருமே முதலாளி சமூகம் என்பதால் இவர்கள் இந்தி பேசிக்கொண்டு வருகின்ற பீகாரிகளை தொழிலாளிகளாக அடிமாட்டு கூலிக்கு பயன்படுத்துகிறார்கள்.
(பொதுவாகவே கஞ்சத்தனம் உள்ளவர்கள்.
சொத்து சேர்த்துக்கொண்டே போவார்கள்.
ஆனால் அனுபவிக்க மாட்டார்கள்)

இம்மூன்று பேருக்குள்ளும் எதில் முரண்கள் இருந்தாலும் வியாபாரம், அரசியல், நில ஆக்கிரமிப்பு போன்றவற்றில் ஒத்த சிந்தனை உடையவர்களாக இருக்கின்றனர்.

உதாரணமாக ஒரு வீடு விற்பனைக்கு வந்தால் நான்கு குடும்பம் ஒன்று சேர்ந்து அதனை வாங்கி நான்கு அடுக்குமாடி வீடு கட்டி குடிவருகிறார்கள்.

அருகிலேயே ஒரு கொட்டகை போட்டு பீகாரிகளை குடியமர்த்தி வைக்கிறார்கள்.

இதன் விளைவாக நிலம் நீர் மின்சாரம் என்ற அனைத்தையும் சுரண்டுகிறார்கள்.

குறிப்பாக இவர்கள் கட்டும் வீடுகள் காலியாகவே கிடந்தாலும் வாடகைக்கு கூட தமிழர்களைத் தங்க வைப்பது இல்லை.

இதன் உச்சபட்ச கொடுமையாக எருமாபாளையத்தில் ஒரு ஏரியையே வளைத்து ஒரு பிரமாண்டமான ஜெயின் கோயிலை கட்டிவிட்டார்கள்
(சேலத்தின் பிரபலமான சமூக சேவகரென நாம் கொண்டாடுகின்ற பியூஸ் மானுஸ் இந்த கோயில் கட்டப்பட்டதற்கு முக்கிய காரணம்).

அதில் தமிழர்கள் நுழையத் தடை என்பது கூடுதல் செய்தி.
அங்கு மட்டும் அல்ல, அவர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் ஒரு ஜெயின் கோயில் கட்டி முடித்துவிட்டார்கள்.

தமிழர்களை அண்டவிடக் கூடாது என்பதில் மட்டும் இவர்கள் அனைவருமே தெளிவாக இருக்கிறார்கள்.

ஒரு தெருவில் வரிசையாக வீடுகளை வாங்கி அதன் பொதுவழியில் தடுப்பு போட்டு அதைத் தனி தீவுபோல ஆக்கிக் கொள்கின்றனர்.

உள்ளே நடப்பது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான புகையிலை மற்றும் பாக்கு உற்பத்தி.

இவற்றிற்கு தடை விதித்ததே இவர்கள்.
முதலில் போதைப் பொருட்களை மக்களுக்குப் பழக்கப்படுத்தி அவர்கள் அடிமையான பிறகு தடை விதித்து பத்து மடங்கு விலைக்கு விற்பார்கள்.

இதன் மூலமே இவர்கள் பெருமளவில் பொருள் ஈட்டுகின்றனர்.

இது தவிர வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வெளிப்பார்வைக்கு நகைக்கடை அல்லது அடகுக்கடை நடத்துவதும் இவர்கள் பல தலைமுறைகளாக செய்துவரும் உத்தி
(அயன் படத்தில் கூட காட்டியிருப்பர்).

இவர்களிடம் பணம் விளையாடுவது இந்த மாதிரியான சட்டவிரோத தொழில்களைக் காலங்காலமாக கச்சிதமாக செய்துவருவதால்தான்.

இவர்கள் தமது பண பலத்தால் சேலத்தில் முக்கிய விற்பனைப் பொருட்களான கட்டுமானப் பொருட்கள், தங்கம், வெள்ளி, துணி, பான்பாராக், புகையிலை, எலக்ட்ரானிக், கைவினைப் பொருட்கள், செருப்பு உட்பட அனைத்தையும் கைப்பற்றிவிட்டனர்.
இப்போது சேலத்தில் ஊசி முதல் பங்களா வரை உற்பத்தி முதல் விற்பனை வரை மார்வாடியோ ஜெயினோ தான் செய்கிறார்கள்.

அது சார்ந்த வேலைகளுக்கு பீகார் சார்கண்ட் உத்திரபிரதேச பகுதிகளை சார்ந்த 15 வயதிற்கு உட்பட்ட பல்லாயிரக்கணக்கான குழந்தை தொழிலார்களை கொண்டு வந்து சேலம் முழுவதும் நிரப்பிவிட்டார்கள்.

குடிவரும் அனைவருக்கும் பத்து நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டையும் மூன்று மாதங்களுக்குள் ரேசன் கார்டும் தேடி வருகின்றன.

  இந்த பனியா ஆக்டோபஸின் மூளை சென்னை செளக்கார்பேட்டை யில் உள்ளது.
அங்கு ஏற்கனவே இவர்களுக்கு ஆள், பத்திரிக்கை, பணம், சங்கம், பதவி, சரக்குப் போக்குவரத்து என அனைத்துக்கும் ஏற்பாடு உள்ளது.

இந்த ஆக்டோபஸ் சென்னை முதல் கோவை வரை தன் கால்களைப் பரப்பியுள்ளது.
இதன் அடுத்த குறி மதுரை ஆகும்.
தற்போது மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றி அனைத்து வீதிகளிலும் முக்கால்வாசி ஜெயின் - மார்வாடிகளுக்கு சொந்தம்.

மதுரையின் இரண்டு வார்டுகள் பீகாரிகள் குடியேறி வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்காளர்களாக ஐந்தே ஆண்டுகளில் ஆகிவிட்டனர்.

தமிழகம் முழுக்க இவர்களுக்கு போட்டி தெலுங்கர் மட்டுமே.
தெலுங்கர் வியாபாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டதால் இப்பொழுது தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள இவர்களும் இந்துத்துவ அமைப்புகளில் சேர தொடங்கிவிட்டார்கள்.

முதலில் குடியேற்றம்,
பிறகு கள்ளக் கடத்தல்,
பிறகு நில ஆக்கிரமிப்பு,
பிறகு சந்தை கைப்பற்றல்,
பிறகு அந்நிலத்தை தக்க வைக்கவும் தமது மக்களை ஒருங்கிணைக்கவும் ஜெயின் கோயில்,
கோயில் மூலம் கூட்டுநிதி,

அந்த நிதி மூலம் இனம் மொழி என்கிற வரையறையில் வராத தேசிய அல்லது மதவாத அரசியல் மற்றும் விளம்பரம்,
இதன் மூலம் வரும் பிரச்சனைகளைச் சமாளிக்க பனியா கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கண்கானி வேலை பார்த்து அதிகாரத்தை பெறுவது,
குடியேறி வாக்குவங்கி அளிப்பது, தேர்தல் பணி செய்வது, நிதி அளிப்பது, கார்ப்பரேட் ஆதரவு என மத்திய அரசை  ஆட்டிப்படைக்கும் ஒரு வலிமையான அரசியலை மார்வாடியும் ஜெயினும் இந்தியா முழுவதும் கட்டவிட்டனர்.
தமிழகத்தில் கட்டத் தொடங்கி பாதி வெற்றிபெற்று விட்டனர்.

இவர்கள் அதிகாரத்தின் நீட்சித்தான் இப்பொழுது புதிதாக தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலும் ஆர்எஸ்எஸ் ஊர்வலம், ஜெயின் ஊர்வலம் ஆகியன நடத்தப்படுகிறது.

இவர்களின் முதல் இலக்கு சாதாரண மக்கள் அல்ல;
ஒவ்வொரு நகரத்திலும் இருக்கின்ற உள்ளூர் வியாபாரிகள்தான்.

இந்த வியாபாரிகளையும் சந்தையையும் கைப்பற்றிவிட்டால் நிலத்தையும் அரசியலையும் கைப்பற்ற முடியுமென திட்டமிடுகிறார்கள்.

இத்தகைய சூழலில் மொழி இனம் நிலம் என்று பேசுகின்ற ஒரு கட்சி தமிழ்நாட்டில் உருவானால் மார்வாடி மற்றும் ஜெயின் வியாபாரமும் அவர்களின் குடியேற்றமும் சிக்கலுக்கு உள்ளாகும் என்பதால்தான் நாம் தமிழர், தமிழ்தேசியப் பேரியக்கம் போன்ற தமிழ்தேசிய அரசியலை நசுக்க பார்க்கிறார்கள்.
பாரிசாலன் இரண்டு மாதம் உள்ளே இருந்தது இவர்கள் கைங்கர்யம்தான்.

இன்றைய சூழலில் தமது முதல் எதிரி நாம் தமிழர் கட்சிதான் என்பதில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் இளைஞர்கள் இந்த புரிதல்களுக்கு வந்துவிடாமல் தடுக்கவே இந்து முன்னணியை வளர்த்து விடுவது
ரஜினியை அரசியலுக்குள் இழுத்துவிடுவது
இன்டர்நெட்டில் வெட்டித்தனமான நடவடிக்கைகளை ஊக்குவிப்பது என காய்நகர்த்துகின்றனர்.

இன்னும் பத்தே ஆண்டுகளில் தமிழகத்திலும் இவர்கள் சொல்வதுதான் சட்டம் என்ற சூழல் வரும்.

உறவுகளே நம்புங்கள்...

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டு இருக்கிறோம்...

Thursday, 14 June 2018

உடலுறுப்பு வியாபாரம்

உடலுறுப்பு வியாபாரம்

இப்படித்தான் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் எனும் இளைஞனின் துடித்துக்கொண்டிருந்த இதயத்தை அறுத்தெடுத்து ஒரு சிறுமிக்கு சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தி அனுப்பினார்கள்.

இதை ஊடகங்களில் பெரிய சாதனையாகக் காட்டினர்.

இதைத் தழுவித்தான் "சென்னையில் ஒருநாள்" படம் எடுக்கப்பட்டது.

இதற்குப் பிறகு இந்தியாவில் தமிழகம் உடலுறுப்பு தானத்தில் தொடர்ந்து முதலிடத்திலும் உள்ளது.

மூடிமறைக்கப்பட்ட ஒரு விடயம் என்னவென்றால் ஹிதேந்திரன் இதயத்தை வாங்கிய அந்த சிறுமி ஒரே ஆண்டிற்குள் இதயம் பழுதடைந்து இறந்துவிட்டார் என்பது.

எடுக்கப்படும் உறுப்புகளில் 25% தான் சரியாக பயன்படுத்தப் படுவதாக வினோபா (பா.ம.க) அவர்கள் விவாதத்தில் கூறியதாகக் கேள்விப்பட்டபோது மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

எது மலிந்துகிடக்கிறதோ அதற்கு மதிப்பிருக்காது.

ஹிந்தியாவில் அது மனிதர்கள்!

Thursday, 15 March 2018

அந்நியர் ஆட்சிக்கு முந்தைய தமிழகம்

அந்நியர் ஆட்சிக்கு முந்தைய தமிழகம்
**********************************

சோழர் வீழ்ந்து பாண்டியர் எழுச்சிபெற்றிருந்த காலம் அது.

கி.பி. 1251ல் ஆட்சிக்கு முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் 12 ஆண்டுகள் தொடர்ந்து போர் புரிந்து தமிழகத்தை ஒற்றையாட்சியில் கொண்டுவருகிறான்.

அவனது மகன் முதலாம் குலசேகர பாண்டியன் ஆண்ட காலத்தில் பாண்டிய நாடு அமைதியாகவும் வலிமையாகவும் விளங்கியது.

உண்மையில் இவனே கடைசி தமிழ் அரசன் ஆவான்.

இவனது  காலத்தில்தான் கி.பி. 1293 இல் மார்க்கோ போலோ எனும் இத்தாலி நாட்டு பயணி தமிழகம் வருகிறார்.

இவரது குறிப்புகள் அந்நியர் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன் தமிழகத்தின் நிலையை அறிய பெரிதும் உதவுகின்றன.

மார்க்கோபோலோ காலத்திற்கு பிறகு பாண்டிய வாரிசுகளிடையே உள்நாட்டுப் போர்,
அதன் விளைவாக 1311ல் டெல்லி சுல்தானிய படையெடுப்பு,
அதன் விளைவாக 1362 இல் நாயக்கர் படையெடுப்பு என தமிழகத்தின் வீழ்ச்சிக்காலம் தொடங்கியது.

தமிழகம் வலிமையாக இருந்தபோது வருகை தந்த மார்க்கோபோலோவின் குறிப்புகள் அவரது நண்பரால் "இல் மிலியோன் - மார்க்கோபோலோவின் பயணங்கள" (il milion - the travels of marcopolo) என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது.

1293 இல் தஞ்சைக்கு அருகே உள்ள காவிரி பூம்பட்டிணம் வந்திறங்கிய மார்க்கோபோலோ ஓராண்டு தமிழகத்தில் சுற்றித் திரிந்துள்ளார்.
கடைசியாக மயிலாப்பூருக்கும், புனித தோமையார் ஆலயத்திற்கும் சென்றார்.
அவரது குறிப்புகள் இன்று நூறுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகளுடன் வெவ்வேறு திரிபுகளுடன் கிடைக்கிறது.

மார்க்கோபோலோவின் குறிப்புகளே ஐரோப்பியருக்கு தமிழகத்தின் மீது வணிக ஆர்வத்தைத் தூண்டியதாகவும்
அதன் விளைவாக தமிழகத்தின் குழப்ப நிலையை பயன்படுத்தி ஆங்கிலேயர் ஆட்சியைப் பிடிக்க முடிந்ததாகவும் கூறுவர்.

தமிழகத்தை பற்றி மார்க்கோபோலோ குறித்தவற்றில் முக்கியமானவை கீழே,

* தமிழக அரசர்களும் பிரபுக்களும் தரையிலேயே எப்போதும் அமர்கின்றனர்.
கேட்டால் "மண்ணில் அமர்வதே பெருமை! மண்ணிலிருந்து தோன்றினோம்! இறந்த பிறகு மண்ணுக்குள்ளேதான் போகப்போகிறோம்" என்று பதிலளித்தனர்.

* தமிழகம் வெப்பமான பிரதேசம்.
மெல்லிய ஆடைகளே அனைவரும் உடுத்துகின்றனர்.
அரசனும் அவ்வாறே. ஆனால் அவனது ஆடையில் நவரத்தினம் பதிக்கப்பட்டு இருந்தது.

* வர்த்தகம் சிறந்து விளங்கியது.
இரவிலும் பயணிகள் நெடுஞ்சாலைகளில் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு பயமில்லாமல் பயணம் செய்கின்றனர்.

* நான் பயணம் செய்த இடங்களிலேயே தமிழகம்தான் செல்வச் செழிப்பான இடம்.
(தமிழகம் வரும் முன்பே ஐரோப்பா முதல் சீனா வரை பயணம் செய்தவர்)

* உலகிலேயே பெரும்பான்மை முத்துக்களும் ரத்தினங்களும் தமிழகம் மற்றும் இலங்கையில்தான் கிடைக்கின்றன.

* பொதுவான தமிழர்கள் மது அருந்துவதில்லை

* அரிசி மட்டுமே பயிரிடப்படும் ஒரே தானியம்

* தமக்கென்று தனியே ஒரு குடுவை வைத்துக்கொண்டு அதிலே தண்ணீரை சேமித்து வைத்து பருகுகின்றனர்.
அதை உதடு படாமல் பருகுகின்றனர்.

* வெற்றிலை, சுண்ணாம்பு, வாசனை திரவியங்களுடன் தாம்பூலம் போட்டு கண்ட இடங்களில் துப்புகின்றனர்.

* அவமானப்படுத்த காறித் துப்பும் வழக்கம் உள்ளது.
இதனால் சண்டைகள் வருகின்றன

* ஆருடம் பார்ப்பது, குறிகேட்பது, சகுனம் பார்ப்பது ஆகியனவற்றில் உலகிலேயே அதிக கவனம் செலுத்துவோர் தமிழர்களே.

* முத்துக்குளிக்க செல்பவர்களை சுறாமீன் தாக்காமல் இருக்க பார்ப்பனர்கள் கரையில் மந்திரம் ஓதுகின்றனர்.
20 முத்துக்கு ஒரு முத்து சம்பளமாகப் பெறுகின்றனர்.

* தமிழர்கள் போரிட ஈட்டியும் நீண்ட கேடயமும் பயன்படுத்துகின்றனர்.
பெரிய பலசாலிகள் என்று கூறமுடியாது.

* பசுக்களை தெய்வமாக வணங்குகின்றனர். மாட்டிறைச்சி தின்பதில்லை

* கடல் தாண்டி பயணிப்பது வறுமையின் அடையாளமாக எண்ணுகிறார்கள்.

* உடலுறவின்போது எந்த விதமாக உறவு கொண்டாலும் தவறாக பார்க்கப்படுவதில்லை
(அந்த காலத்து ஐரோப்பா கிறித்துவ மதவெறி ஓங்கி எப்படி உடலுறவு கொள்ளவேண்டும் என்றெல்லாம் சட்டம் போட்டிருந்த காலம்)

* மாதம் ஒருமுறை கன்னிப் பெண்கள் கூடி தெய்வங்களுக்கு உணவும் மாமிசமும் படைத்து ஆடி பாடி வழிபடுகிறார்கள்.
இது தெய்வக்குற்றம் ஆகாமல் இருக்க செய்யப்படுகிறது.
அடுத்தநாள் பூசாரி தெய்வங்கள் இறங்கி வந்து படையலை ஏற்றுக்கொண்டு அருள்பாலித்ததாக கூறுகிறார்.
(மார்க்கோபோலோ தீவிர கிறித்தவர் அதனால் பிற மதங்களையும் சடங்குகளையும் அவர் சிறிது மதிப்பு குறைவாகவே குறித்துள்ளார்)

* கருப்பு நிறமாக இருப்பது அதிகம் மதிக்கப்படுகிறது.
குழந்தை பிறந்தவுடன் வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுகின்றனர்.
இதனால் குழந்தை அதிக கறுப்பு நிறத்துடன் வளருமாம்.
கடவுள்களை கறுப்பு நிறமாகவும் சாத்தான்களை பனி போல வெண்மையான நிறமாகவும் உருவகப்படுத்துகின்றனர்.

* துறவிகள் பரவலாக காணப்படுகின்றனர்.
காய்ந்த இலைகளில் குறைந்த அளவு உணவு உண்டு 200 ஆண்டுகள் வரை கூட வாழ்கின்றனர்.
நிர்வாண யோகிகள் உண்டு.
ஆணுறுப்பை பாவத்திற்கு பயன்படுத்தாத்தால் அதை மறைப்பதில்லை என்று கூறுகின்றனர்.
எல்லா உயிர்களையும் ஆன்மா இருப்பதால் உயர்வாக மதிக்கின்றனர்

* அரசர்களுக்கு 500 மனைவிகள் வரை உண்டு.
பெண்களின் பொருட்டு இரண்டு சகோதரர்களுக்கு இடையே சண்டை வந்தால் அவர்களது தாய் தலையிட்டு சண்டையை நிறுத்தாவிட்டால் பாலூட்டிய மார்பகங்களை அறுத்தெறிவதாகக் கூறி சமாதானத்திற்கு தள்ளுகிறாள்

* தமிழகத்தில் குதிரைகள் இனப்பெருக்கம் செய்வதில்லை.
ஏடன் நாட்டிலிருந்து ஆண்டுக்கு சுமார் 2000 குதிரைகள் வந்திறங்குகின்றன.
சரியான பராமரிப்பு இன்றி அவற்றில் 100 குதிரைகள் மட்டுமே ஓராண்டுக்கு மேல் உயிருடன் இருக்கின்றன.
குதிரை வணிகர்கள் வேண்டுமென்றே குதிரை மருத்துவர்களை இங்கே அனுப்புவதில்லை.
இதனால் குதிரை விரைவிலேயே இறக்கும், அவர்களுக்கு வணிகம் பெருகும்.
ஒரு குதிரை 200 தினார் வரை விற்கப்படுகிறது.

* நான் பார்த்ததிலேயே காயல் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பழைய காயல்)
துறைமுகமே மிகப்பெரியது.
உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இங்கே கப்பல்கள் வருகின்றன.

* அரசர் தமிழகத்திற்கு வரும் வணிகர்களையும் மற்றவர்களையும் வெகுமதிகள் வழங்கி கவனிப்பதால் வெளிநாட்டவர் தமிழகம் வர ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

* அரசர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் திறமையாகவும் பாரபட்சம் காட்டாமலும் ஆட்சி செய்கிறார்.
அவரது ஸ்திரமான ஆட்சியால் கருவூலம் நிரம்பி வருகிறது.

இவ்வாறு தமிழகத்தின் நிலையை குறித்துள்ளார் மார்க்கோபோலோ.

அதாவது 725 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தில் ஓரளவு மூட நம்பிக்கைகளும்  பெண்ணடித்தனமும் நிலவியுள்ளது.
ஆனாலும் செல்வ செழிப்பும் ஒழுக்கமும் சமத்துவமும் நிலவியதாகத் தெரிகிறது.

Thursday, 31 August 2017

ஜெயராமின் உருமறைப்பு

உருமறைப்பு

திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்தில் ஓடும் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம்...

கேரளா உணவு, பண்டிகை, கலாச்சாரம் ஆகியவற்றை காட்சிகளாகக் காண்பித்து
நடிகர் ஜெயராம் அதை ஒவ்வொன்றாகக் கண்டு 'என் நாட்டின் பண்டிகை பிடிக்கும், உணவு பிடிக்கும், கலாச்சாரம் பிடிக்கும்' என நெஞ்சில் கைவைத்து சொல்கிறார்.
இறுதியாக 'நம் நாட்டு உடை ராம்ராஜ் வேட்டிகள்' என்று முடிக்கிறார்.

ஜெயராம் ஒரு தமிழர்.
ராம்ராஜ் ஒரு தமிழர் நிறுவனம்.

Friday, 3 February 2017

தமிழர்நாட்டில் ஊர்முறை ஆட்சி

தமிழர்நாட்டில் ஊர்முறை
ஆட்சி

/==/^^/==/^^/==/^^/==/^^/==/^^/

ஊழல் எவ்வாறு நடக்கிறது?

ஒரு கதை சொல்லி புரியவைக்கிறேன்.

ஒரு பெரிய ஊர் இருந்தது (நாடு).

அடுப்பு ஒன்றுதான் இருந்தது (அரசு கஜானா)
ஒரு தலைவர் இருந்தார் (அரசியல்வாதி)
ஒரு பெரிய பாத்திரத்தைக் கொடுத்து "எல்லோரும் ஒரு படி அரிசையைப் போடுங்கள்
சேர்ந்து உண்போம்" என்றார் (வரி வாங்குதல்).

"எல்லாரும்தான் போடுகிறார்களே நாம் குறைவாகப் போட்டால் தெரியவா போகிறது" என்று பலர் ஒரு படியை விட குறைவாகப் போட்டனர் (வரி ஏய்ப்பு).

எல்லாரும் போட்ட பிறகு தலைவர் "இதில் கொஞ்சம் எடுத்தால் தெரியவா போகிறது" என்று பத்து படி எடுத்துக்கொண்டார் (ஊழல்).

சோறு சமைக்கப்பட்டது.
தற்போது சோறு வாங்க வரிசையில் நிற்கவேண்டும்.
அரிசி எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்ததால் கடைசியில் வருவோருக்கு சோறு கிடைக்கவில்லை.
எனவே வரிசையில் முன்னால் செல்ல பல குறுக்கு வழிகளை ஆராய்ந்தனர்.

சிலர் வரிசையில் முன்னால் விட்டால் ஒரு குத்து அரிசி லஞ்சம் தர தயாராக இருந்தனர் (லஞ்சம்).
சில கூட்டமாக சேர்ந்து பலத்தால் மற்றவரைப் பின்னே தள்ள முற்பட்டனர் (இடவொதுக்கீடு).
சிலர் சோறுசமைக்கும் பணியில் சேர விரும்பினர் (அரசாங்க வேலை).
சிலர் வரிசையை ஒழுங்கு படுத்தும் காவலராக விரும்பினர் (காவல்துறை).
சிலர் தாம் தலைவராக வர விரும்பினர் (அரசியல் கட்சிகள்).

  ஆக எல்லாவற்றுக்கும் காரணம் அரிசி ஒன்றாக சேர்ந்து பிறகு பங்குபோடப்படுவதே.

இதை நாம் மாற்றவேண்டும்.
ஒவ்வொரு வீடும் தானே சமையல் செய்துகொள்ளவேண்டும்.

தமிழ் மண்ணில் ஒவ்வொரு ஊரும் தனி நாடு போல தன்னிறைவு அடைந்திருக்கவேண்டும்.

ஒரு ஊர் மக்கள் அவ்வூரின் தேவைகளை முடிந்தவரை தாமே நிறைவேற்றிக்கொள்ளுமாறு இருக்கவேண்டும்.

தற்போது இருப்பது போல ஒரு குடிமகனின் வரி நேரடியாக மத்திக்குப் போய் பெரும்பணமாகி பிறகு ஊழல் நடந்து அதன் பிறகு படிப்படியாக மக்களுக்கு வந்து சேர்வதற்குள் காணாமல் போகும் நடைமுறை இருக்கக்கூடாது.

ஒரு ஊர் என்பது குடும்பம் போல இருக்கவேண்டும்.

எப்படி ஒரு குடும்பத்தினர் குழந்தைகளைப் படிக்கவைத்து முதியோரை பராமரித்து வருமானம் ஈட்டி சேமிப்பு செய்து வீட்டைக் கட்டமைக்கின்றனரோ
அதுபோலவே

ஓர் ஊர் தமது குழந்தைகளைப் படிக்கவைத்து ஆளாக்கி முதியோரை நோயாளிகளை பராமரித்து தமது ஊரை தாமே கட்டமைக்க வேண்டும்.

அதாவது கல்வி இலவசம், மருத்துவம் இலவசம்.

இலவசம் என்பது இங்கே முதலீடு.
பெற்றோர் ஒரு குழந்தைக்கு கல்வியையும் உணவையும் வழங்கி முதலீடு செய்கின்றனர்.
அக்குழந்தை வளர்ந்து தன் உடல்திறத்தாலும் திறமையாலும் பெற்றோருக்கு சம்பாதித்து தருகிறது.
இது ஒரு சுழற்சி போல நடக்கிறது.

இத்தகைய நடைமுறையைக் கொண்டுவர நாட்டின் நிலங்களை எல்லாம் அரசுடைமை ஆக்கவேண்டும்.

சொத்து என்று யாருக்கும் எதுவும் கிடையாது.
நகைகளும் ஒரு குடும்பத்திற்கு இவ்வளவுதான் என சட்டம் இருக்கும்.

தமிழ் மண்ணில் எங்கே விவசாய நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் இருந்தாலும் அவற்றை இடித்து தள்ளவேண்டும்.
சீமைக் கருவேல மரம் உட்பட தேவையில்லாத மரங்களை வேரோடு களையெடுக்கவேண்டும்.
நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும்.

நகரங்களில் வாழ்வோரை அவர்களது சொந்த ஊருக்கே திரும்பச் செய்யவேண்டும்.

முழுவீச்சில் இயற்கை விவசாயம் செய்யவேண்டும்.

நிர்வாகத்தில் மேலே நடுவணரசு,
அதன் கீழே மாவட்டம்,
அதன் கீழே வட்டம்,
அதன் கீழே ஊர்.

ஊர் என்பதன் எல்லை வரையறுக்கப்பட்டு அதன் தலைவர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஊரில் இருக்கும் எல்லாமே பகிர்ந்தளிக்கப்படும்.
வீடுகளை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்.
அதாவது இரண்டு, மூன்று வீடு வைத்திருப்பவரிடம் ஒரு வீடு தவிர மற்றதை பிடுங்கி வீடில்லாதோருக்கு வழங்கவேண்டும்.
இரண்டு கடை வைத்திருந்தால் அதில் ஒன்று வேறொருவருக்கு வழங்கப்படும்.

ஊரின் விவசாய நிலத்தின் வரப்புகளை அகற்றி அவ்வூர் மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

அந்த ஊரில் யாருக்கு என்ன தொழில் தெரியுமோ அதை பதிவு செய்து 'இவர் கொத்தனார்' 'இவர் விவசாயி' 'இவர் கடை வைத்திருப்பவர்' 'இவர் ஓட்டுநர்' 'இவர் பொறியாளர்' 'இவர் ஓவியர்' 'இவர் கால்நடை வளர்ப்பவர்'  என சான்றளிக்கவேண்டும்.
(எல்லா வேலைகளையும் கல்வியில் சேர்க்கவேண்டும்,
அதாவது விவசாயி என்பவர் அத்துறையில் படித்து பட்டம் பெற்றவராக இருக்குமாறு ஆக்கவேண்டும்)

அவ்வூரில் என்ன வேலைவாய்ப்புகள் இருக்கின்றனவோ அவை அம்மக்களுக்கே பகிர்ந்தளிக்கவேண்டும்.
விவசாயம் தெரிந்த அனைவரும் சேர்ந்து சங்கம் அமைத்து திட்டமிட்டு விவசாய வேலைகளைப் பகிர்ந்து செய்யவேண்டும்.
வீடுகட்ட தெரிந்த அனைவரும் சேர்ந்து சங்கம் அமைத்து எங்கே எந்த கட்டிட வேலைகள் உண்டோ அதைப் பகிர்ந்து செய்யவேண்டும்.
இதே போல ஆசிரியர்கள், கடைக்காரர்கள், ஓட்டுநர்கள் என அனைவரும் ஊர் ஊருக்கு சங்கம் அமைத்து வேலைகளைப் பகிர்ந்து செய்யவேண்டும்.
அனைவரும் தத்தமது ஊருக்காக தத்தமது வீட்டுக்காகவே வேலை செய்கின்றனர்.
எனவே ஈடுபாட்டுடன் வேலை செய்வர்.

(பெற்றோரின் தொழிலையே பிள்ளைகள் செய்ய எந்த கட்டாயமும் இல்லை.
அவரவர்க்கு எந்த தொழில் விருப்பமோ அதைச் செய்யலாம்.
சுத்தம் செய்ய தனியாக யாரும் கிடையாது.
தத்தமது வீடுகளை தாமே சுத்தம் செய்யவேண்டும்.
கடைகளிலும் தாம் பயன்படுத்தியதைத் தாமே சுத்தம் செய்யவேண்டும்.
பொது இடங்களை குப்பையாவதை  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுக்கவேண்டும்.
பொது இடங்களை சுத்தம் செய்ய மாணவர்களை சுழற்சிமுறையில் பயன்படுத்தலாம்)

எந்த தொழிலுக்கும் கருவிகள், பொருட்கள் வழங்குவது ஊர்தலைவர் பொறுப்பு.
அதாவது உழும் கருவி, புத்தகம், வாகனம், கால்நடைகள், உபகரணங்கள் என.

அனைவருக்கும் மாதந்தோறும் சேர்ந்த மொத்த வருவாய் ஊர் தலைவரால் பகிர்ந்தளிக்கப்படும் அதுவே சம்பளம்.
நடுவணரசு ஒரு வரித்துறை வைத்திருக்கும்.
அது இதையெல்லாம் கண்கானிக்கும்.
ஊர்தலைவர் ஆண்டு முடிவில் அத்துறையிடம் கணக்கு காட்டவேண்டும்.

என்ன உற்பத்தி செய்கிறோம்?
என்ன திட்டங்கள் செயல்படுத்துகிறோம்?
என்ன செலவு ஆனது?
ஊருக்கு வந்த வருவாய் என்ன?
அதை எவ்வாறு பகிர்ந்தளித்தோம்?
நடுவணரசு கேட்ட நிதி போக சேமிப்பில் எவ்வளவு வைத்துள்ளோம்?
என எல்லாமே பதிவு செய்யப்படும்.
ஊர் மக்களின் பார்வைக்கும் வைக்கவேண்டும்.

(தற்போதைய நிலை மொத்தமாக அரசிடம் பணம் கொடுத்துவிட்டு பிறகு தம் பகுதி அரசியல்வாதி மூலம் நிதி ஒதுக்க கோருவது என்றவாறு உள்ளது)

தலைவரைக் கண்கானிக்க நடுவணரசு அதிகாரி ஒருவர் இருப்பார்.
அவர் அந்த ஊருக்கு தொடர்பில்லாத ஊர்க்காரராக இருப்பார்.
இவர் ஆட்சியர் (கலெக்டர்) போல, தேர்வு மூலம் இப்பதவிக்கு ஆளெடுக்கலாம்.
தேவையானபோது ஆலோசனை வழங்குவார்.
நடுவணரசுக்கும் ஊருக்கும் பாலமாக இருப்பார்.

கடைகள் ஊர்தலைவர் பொறுப்பு.
விற்பனை செய்பவருக்கு சம்பளம் மட்டுமே.
கடையின் லாபம் ஊர் வங்கியில் சேரும்.
கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் இருக்காது.
அரிசி, பருப்பு, காய்கறி, எண்ணெய், வெல்லம் என அவ்வூரில் விளைந்த அத்தியாவசியப் பொருட்கள் அவ்வூர் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
எந்த அத்தியாவசியப் பொருள் அவ்வூரில் இல்லையோ அது (நடுவணரசுக்கு தகவல் தெரிவித்து) அருகிலிருக்கும் ஊரிலிருந்து வாங்கப்பட்டு கடைகளில் விற்கப்படலாம்.

(ரேசன் கடை போலதான் இதுவும்.
ஆனால் விவசாயிக்கு குறைந்த விலை கொடுத்து மாநிலம் முழுவதும் மொத்தமாக கொள்முதல் செய்து அதில் திருடி கலப்படம் செய்து மாதக்கணக்கில் சேமித்துவைத்து தரம்கெடுத்து காலாவதியாக்கி பிறகு மக்களுக்கு பிச்சைபோடும் இன்றைய நிலை இருக்காது)

அத்தியாவசியமல்லாத பொருட்கள் எது வேண்டுமென மாதந்தோறும் வீடுவீடாக கணக்கெடுத்து அதை நடுவணரசுக்கு அனுப்பி வாங்கிக்கொள்ளலாம்.
அதாவது ஒரு ஊர் தாண்டிய வணிகம் நடுவணரசின் பார்வையில் இருக்கவேண்டும்.

ஊரில் தயாரிக்க முடியாதவை நேரடியாக நடுவணரசிடமிருந்து வாங்கவேண்டும்.
அதாவது ஒரு ஊர் கணக்கெடுத்து நடுவணரசிடம் சொல்லி 1000 டிவி வாங்கலாம்.

ஒரு ஊரின் அனைத்து பிரச்சனைகளும் ஊர்தலைவரே கவனிக்கவேண்டும்.
அவருக்கு உதவியாக பத்துபேரை நியமிக்கலாம்.
ஊரவை என்று அழைக்கலாம்.
இவர்களையும் தேர்தல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம்.
(ஊரில் 10% பேர் தலைவருக்கு எதிராக கையெழுத்து போட்டு புகாரளித்தால் அவர் மீது நடுவணரசு விசாரணை நடத்தப்படும்)

(பெரிய ஊராக இருந்தால் அதை இரண்டு மூன்று ஊர்களாகப் பிரிக்கலாம்.
மக்கட்தொகையை அளவீடாகக் கொள்ளலாம்)

ஒரு ஊருக்கு பாலம், சாலை, பள்ளிக்கூடம், பேருந்து நிலையம், காவல்நிலையம், விளையாட்டு மைதானம், பொதுவாகக் கூடுமிடம், திரையரங்கு, நூலகம், அரசு அலுவலகம், வழக்கு மன்றம், நீதி மன்றம், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனை, விவசாய ஆராய்ச்சி மையம், திருமண மண்டபம், திருவிழா என எல்லாவற்றையும் அவ்வூர் மக்களே நிதி திரட்டி அவ்வூர் மக்களே கட்டிக்கொள்ளவேண்டும்.
மருத்துமனையில் மருத்துவரும் காவல்நிலைய காவலர்களும்
பள்ளிக்கூட ஆசிரியரும் அவ்வூர் மக்களே முடிந்தமட்டும் இருத்தல் வேண்டும்.
(நீதி வழங்கும் பதவிகள் வெளியாட்கள் இருக்கலாம்)

ஊர் பெயரை தமது பெயருடன் சேர்த்து பயன்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கலாம்.
அதாவது சாதிக்குப் பதிலாக ஊர்.
(தந்தையின் ஊரை அடையாளமாக பயன்படுத்தலாம்)

ஊர் மாறினாலும் அடையாளப்பெயரை மாற்றவேண்டிய அவசியமில்லை.
ஆனால் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு (மணமான பெண்கள் தவிர) குடிபெயர்ந்தால் தகுந்த காரணம் கூறவேண்டும்

அவ்வூரின் வருவாய் மற்றும் வரிகள் அவ்வூரின் சேமிப்பு வங்கியிலேயே இருக்கும்.
ஊருக்கென்று தனியாக ஒரு வார இதழ் நடத்தப்படும்.

ஊர்மக்கள் முடிந்தவரை அவ்வூரிலேயே வாழவேண்டும்.
பிழைப்பு தேடி வேற்றிடம் செல்வதோ குடிபெயர்வதோ முடிந்த அளவு தடுக்கப்பட வேண்டும்.
ஊரே காவல்நிலையம் கட்டி ஊரின் இளைஞர்களே காவல்துறையாக இருப்பர்.
இவர்கள் மாவட்ட தலைவரின் பொறுப்பில் இருப்பார்.
மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய வேலை காவல்துறையை இயக்குவதே.

தமிழர்நாட்டு நடுவணரசின் முக்கிய வேலைகள் இராணுவத்தை பராமரிப்பது மற்றும் தகவல் தொடர்பு ஏற்படுத்துவது மட்டுமே.
(இராணுவத்திற்கு எல்லையோர ஊர் மக்களுக்கு முன்னுரிமை)

இது போக சுற்றுலா, ஆராய்ச்சி துறை, திரைப்படத் துறை, பெரிய தொழிற்சாலைகள், நீண்டதூர போக்குவரத்து என ஒரு ஊரால் முடியாதவை நடுவணரசின் கீழ் வரும்.
அதற்கு என்ன செலவு ஆகுமோ அதை கணக்கு செய்து நடுவணரசு அறிவிக்கும் அந்த செலவை ஊர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக நடுவணரசு ஒரு நெடுஞ்சாலை போடவேண்டுமானால் அச்சாலை செல்லும் ஒவ்வொரு ஊர் தலைவரிடமும் அனுமதி வாங்கவேண்டும்.
பிறகு நிதி பெற வேண்டும்.
சாலையை அமைப்பதும் பராமரிப்பதும் அந்த அந்த ஊரின் பொறுப்பு.

ஒரு அணை கட்டவேண்டுமானால் அந்த அணையால் எந்த ஊர்கள் நன்மையடைகின்றனவோ அவற்றிடம் அனுமதி வாங்கவேண்டும்.
நிதி வாங்கவேண்டும் பிறகு அவ்வூர் மக்களை வைத்தே கட்டித்தர வேண்டும்.

இதே போல மின் உற்பத்தி நிலையம், தொழிற்சாலை, சிறைச்சாலை, என ஒரு ஊரால் தனியாக முடியாததை பல ஊர்கள் அல்லது ஒரு வட்டார ஊர்கள் சேர்ந்து செய்யலாம்.
எந்த ஊர்கள் சேர்ந்து திட்டத்தை செய்கின்றனவோ அவை நடுவணரசுக்கு தகவல் தந்து இசைவு பெற்று பிறகே செய்துகொள்ளவேண்டும்.

ஒரு பல்கலைக் கழகம் அமைக்க அந்த வட்டார ஊர்களே நிதி தரவேண்டும்.
(அப்பல்கலையில் அவ்வட்டாரத்தில் என்ன தொழில் அதிகமோ அதை கற்றுத்தரவேண்டும்.
வேளாண் கல்லூரி, சிற்பக் கல்லூரி, கடல்வளம் என )
அது எந்த ஊரில் கட்டப்படுகிறதோ அந்த ஊர் அதை பராமரிக்கவேண்டும்.
வட்டார போக்குவரத்து அவ்வட்டார ஊர்களே நிதி திரட்டி பேருந்துகள் வாங்கி அவ்வூர்களின் ஓட்டுநர்களை அமர்த்தி அந்த அந்த ஊராரே பேருந்துநிலையம் கட்டி பராமரிக்கவேண்டும்.

ஆனால் முழு நாட்டையும் இணைக்கும் போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து,  கடல்வழிப் போக்குவரத்து ஆகியன நடுவணரசு பார்த்துக்கொள்ளும்.

ஊர்கள் அதாவது குடியிருப்புகள் இல்லாத பகுதிகள் (காடு, கடற்கரை, பொட்டல்) வட்டார அரசின் பொறுப்பில் இருக்கும்.
அல்லது அருகாமை ஊர்கள் அப்பகுதியை பகிர்ந்துகொள்ளலாம்.

இரண்டு ஊருக்கிடையே போடப்படும் ஒப்பந்தம் முறையாக பதிவு செய்யப்படவேண்டும்.
ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் பிரச்சனை வந்தால் அதை அவ்வட்டார ஊர்த்தலைவர்கள் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளவேண்டும்.
வட்டார பேச்சுவார்த்தையில் பிரச்சனை தீர்க்கமுடியாவிட்டால் வட்டார நீதிமன்றத்தில் (உயர்நீதி மன்றம்) சட்டப்படி வழக்கு போடவேண்டும்.
அங்கும் தீராவிட்டால் (உச்சநீதி மன்றம்) கொண்டுசெல்லலாம்.

நீதிமன்றங்கள் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை பணிச்சுற்றல் (ஷிப்ட்) முறையில் ஆண்டுக்கு 360 நாட்களாவது இயங்கும் (8-2, 2-8).

தமிழகத்தில் ஏறத்தாழ 15,500 ஊர்கள் (கிராமங்கள்) உள்ளன.
தமிழகம் இழந்த பகுதிகள் மற்றும் ஈழம் சேர்த்து அமையும் தமிழர்நாட்டில் கிட்டத்தட்ட 30,000 ஊர்கள் இருக்கும்.

ஆண்டுதோறும் சிறப்பான தனிமனிதருக்கு சங்கம் விருதளிக்கும்.
சிறப்பான சங்கத்திற்கு ஊர் விருதளிக்கும்.
சிறப்பான ஊருக்கு நடுவணரசு விருதளிக்கும்.

இது ஒரு அடிப்படை சிந்தனைதான்.
இதை நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் வரலாம்.

இது தற்போதைய நடைமுறையை விட மிக சிறப்பாக இருக்கும்.

ஏனெனில் தமிழகத்தில் பழங்கால முறை இதுவே.
எந்த ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் அது அரசின் உச்ச தலைமையை பாதித்ததே ஒழிய இந்த ஊர்முறையை பாதிக்கவில்லை
(நாயக்கராட்சி வந்து நிலவுடைமை சமூகத்தை உருவாக்கி சுரண்டலை ஆரம்பிக்கும் வரை).
இன்றும் கூட பல சிற்றூர்கள் இவ்வடிப்படையில் இயங்கிவருகின்றன.

ஊர்தலைவர் பழைய ஜமீன்தார் போல ஆதிக்க சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.
தேர்தல்முறை அதனை ஓரளவு தடுக்கமுடியும்.
ஊர்தலைவர் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கலாம்.
அதாவது இருமுறை தலைவராக இருந்தவரோ அவரது வாரிசுகளோ மூன்றாவதுமுறை ஆக இயலாது என்றவாறு.

மக்களின் அன்றாட வாழ்க்கை அடிப்படை நேர்மையையும் புரிந்துணர்வையும் சார்ந்தே இயங்குகிறது.
ஒரு நாடு இயங்குவது சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது அரசமைப்பின் அடிப்படையிலோ இல்லை.
சொல்லப்போனால் முதலமைச்சராக, பிரதமராக இருப்பவர் ஒவ்வொரு துறையையும் பற்றி தெரிநாதவர் கிடையாது.
நாடு தானே இயங்குகிறது.
ஒருங்கிணைப்பு மட்டும்தான் இவர்கள் வேலை.

ஆக மக்களின் புரிந்துணர்வு எப்படி ஒரு பெரிய ஊர்த்திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்கிறதோ அதே போல உள்ளூர் திட்டங்களை மக்கள் நடத்திக்கொள்ள முடியும்.

சுருக்கமாக,
ஒவ்வோரு ஊரிலும் ஒவ்வொரு வளம் இருக்கும்.
வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பும் அதைப் பயன்படுத்த மனிதவளமும் இருக்கும்.
இதை மக்கள் பயன்படுத்தி தன்னிறைவாக வாழமுடியும்.
ஊர்கள் சேர்ந்தே நாடு உருவாகிறது.
ஊர் தன்னிறைவு பெற நாடும் தன்னிறைவு பெறும்.

வளர்ந்த நாடுகள் சட்டங்களால் வளர்ந்தன அல்ல.

மக்களின் சிந்தனையையும் செயலையும் மேம்படுத்தியதாலேயே வளர்ந்தன.