Showing posts with label பயணி. Show all posts
Showing posts with label பயணி. Show all posts

Thursday, 15 March 2018

அந்நியர் ஆட்சிக்கு முந்தைய தமிழகம்

அந்நியர் ஆட்சிக்கு முந்தைய தமிழகம்
**********************************

சோழர் வீழ்ந்து பாண்டியர் எழுச்சிபெற்றிருந்த காலம் அது.

கி.பி. 1251ல் ஆட்சிக்கு முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் 12 ஆண்டுகள் தொடர்ந்து போர் புரிந்து தமிழகத்தை ஒற்றையாட்சியில் கொண்டுவருகிறான்.

அவனது மகன் முதலாம் குலசேகர பாண்டியன் ஆண்ட காலத்தில் பாண்டிய நாடு அமைதியாகவும் வலிமையாகவும் விளங்கியது.

உண்மையில் இவனே கடைசி தமிழ் அரசன் ஆவான்.

இவனது  காலத்தில்தான் கி.பி. 1293 இல் மார்க்கோ போலோ எனும் இத்தாலி நாட்டு பயணி தமிழகம் வருகிறார்.

இவரது குறிப்புகள் அந்நியர் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன் தமிழகத்தின் நிலையை அறிய பெரிதும் உதவுகின்றன.

மார்க்கோபோலோ காலத்திற்கு பிறகு பாண்டிய வாரிசுகளிடையே உள்நாட்டுப் போர்,
அதன் விளைவாக 1311ல் டெல்லி சுல்தானிய படையெடுப்பு,
அதன் விளைவாக 1362 இல் நாயக்கர் படையெடுப்பு என தமிழகத்தின் வீழ்ச்சிக்காலம் தொடங்கியது.

தமிழகம் வலிமையாக இருந்தபோது வருகை தந்த மார்க்கோபோலோவின் குறிப்புகள் அவரது நண்பரால் "இல் மிலியோன் - மார்க்கோபோலோவின் பயணங்கள" (il milion - the travels of marcopolo) என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது.

1293 இல் தஞ்சைக்கு அருகே உள்ள காவிரி பூம்பட்டிணம் வந்திறங்கிய மார்க்கோபோலோ ஓராண்டு தமிழகத்தில் சுற்றித் திரிந்துள்ளார்.
கடைசியாக மயிலாப்பூருக்கும், புனித தோமையார் ஆலயத்திற்கும் சென்றார்.
அவரது குறிப்புகள் இன்று நூறுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகளுடன் வெவ்வேறு திரிபுகளுடன் கிடைக்கிறது.

மார்க்கோபோலோவின் குறிப்புகளே ஐரோப்பியருக்கு தமிழகத்தின் மீது வணிக ஆர்வத்தைத் தூண்டியதாகவும்
அதன் விளைவாக தமிழகத்தின் குழப்ப நிலையை பயன்படுத்தி ஆங்கிலேயர் ஆட்சியைப் பிடிக்க முடிந்ததாகவும் கூறுவர்.

தமிழகத்தை பற்றி மார்க்கோபோலோ குறித்தவற்றில் முக்கியமானவை கீழே,

* தமிழக அரசர்களும் பிரபுக்களும் தரையிலேயே எப்போதும் அமர்கின்றனர்.
கேட்டால் "மண்ணில் அமர்வதே பெருமை! மண்ணிலிருந்து தோன்றினோம்! இறந்த பிறகு மண்ணுக்குள்ளேதான் போகப்போகிறோம்" என்று பதிலளித்தனர்.

* தமிழகம் வெப்பமான பிரதேசம்.
மெல்லிய ஆடைகளே அனைவரும் உடுத்துகின்றனர்.
அரசனும் அவ்வாறே. ஆனால் அவனது ஆடையில் நவரத்தினம் பதிக்கப்பட்டு இருந்தது.

* வர்த்தகம் சிறந்து விளங்கியது.
இரவிலும் பயணிகள் நெடுஞ்சாலைகளில் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு பயமில்லாமல் பயணம் செய்கின்றனர்.

* நான் பயணம் செய்த இடங்களிலேயே தமிழகம்தான் செல்வச் செழிப்பான இடம்.
(தமிழகம் வரும் முன்பே ஐரோப்பா முதல் சீனா வரை பயணம் செய்தவர்)

* உலகிலேயே பெரும்பான்மை முத்துக்களும் ரத்தினங்களும் தமிழகம் மற்றும் இலங்கையில்தான் கிடைக்கின்றன.

* பொதுவான தமிழர்கள் மது அருந்துவதில்லை

* அரிசி மட்டுமே பயிரிடப்படும் ஒரே தானியம்

* தமக்கென்று தனியே ஒரு குடுவை வைத்துக்கொண்டு அதிலே தண்ணீரை சேமித்து வைத்து பருகுகின்றனர்.
அதை உதடு படாமல் பருகுகின்றனர்.

* வெற்றிலை, சுண்ணாம்பு, வாசனை திரவியங்களுடன் தாம்பூலம் போட்டு கண்ட இடங்களில் துப்புகின்றனர்.

* அவமானப்படுத்த காறித் துப்பும் வழக்கம் உள்ளது.
இதனால் சண்டைகள் வருகின்றன

* ஆருடம் பார்ப்பது, குறிகேட்பது, சகுனம் பார்ப்பது ஆகியனவற்றில் உலகிலேயே அதிக கவனம் செலுத்துவோர் தமிழர்களே.

* முத்துக்குளிக்க செல்பவர்களை சுறாமீன் தாக்காமல் இருக்க பார்ப்பனர்கள் கரையில் மந்திரம் ஓதுகின்றனர்.
20 முத்துக்கு ஒரு முத்து சம்பளமாகப் பெறுகின்றனர்.

* தமிழர்கள் போரிட ஈட்டியும் நீண்ட கேடயமும் பயன்படுத்துகின்றனர்.
பெரிய பலசாலிகள் என்று கூறமுடியாது.

* பசுக்களை தெய்வமாக வணங்குகின்றனர். மாட்டிறைச்சி தின்பதில்லை

* கடல் தாண்டி பயணிப்பது வறுமையின் அடையாளமாக எண்ணுகிறார்கள்.

* உடலுறவின்போது எந்த விதமாக உறவு கொண்டாலும் தவறாக பார்க்கப்படுவதில்லை
(அந்த காலத்து ஐரோப்பா கிறித்துவ மதவெறி ஓங்கி எப்படி உடலுறவு கொள்ளவேண்டும் என்றெல்லாம் சட்டம் போட்டிருந்த காலம்)

* மாதம் ஒருமுறை கன்னிப் பெண்கள் கூடி தெய்வங்களுக்கு உணவும் மாமிசமும் படைத்து ஆடி பாடி வழிபடுகிறார்கள்.
இது தெய்வக்குற்றம் ஆகாமல் இருக்க செய்யப்படுகிறது.
அடுத்தநாள் பூசாரி தெய்வங்கள் இறங்கி வந்து படையலை ஏற்றுக்கொண்டு அருள்பாலித்ததாக கூறுகிறார்.
(மார்க்கோபோலோ தீவிர கிறித்தவர் அதனால் பிற மதங்களையும் சடங்குகளையும் அவர் சிறிது மதிப்பு குறைவாகவே குறித்துள்ளார்)

* கருப்பு நிறமாக இருப்பது அதிகம் மதிக்கப்படுகிறது.
குழந்தை பிறந்தவுடன் வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுகின்றனர்.
இதனால் குழந்தை அதிக கறுப்பு நிறத்துடன் வளருமாம்.
கடவுள்களை கறுப்பு நிறமாகவும் சாத்தான்களை பனி போல வெண்மையான நிறமாகவும் உருவகப்படுத்துகின்றனர்.

* துறவிகள் பரவலாக காணப்படுகின்றனர்.
காய்ந்த இலைகளில் குறைந்த அளவு உணவு உண்டு 200 ஆண்டுகள் வரை கூட வாழ்கின்றனர்.
நிர்வாண யோகிகள் உண்டு.
ஆணுறுப்பை பாவத்திற்கு பயன்படுத்தாத்தால் அதை மறைப்பதில்லை என்று கூறுகின்றனர்.
எல்லா உயிர்களையும் ஆன்மா இருப்பதால் உயர்வாக மதிக்கின்றனர்

* அரசர்களுக்கு 500 மனைவிகள் வரை உண்டு.
பெண்களின் பொருட்டு இரண்டு சகோதரர்களுக்கு இடையே சண்டை வந்தால் அவர்களது தாய் தலையிட்டு சண்டையை நிறுத்தாவிட்டால் பாலூட்டிய மார்பகங்களை அறுத்தெறிவதாகக் கூறி சமாதானத்திற்கு தள்ளுகிறாள்

* தமிழகத்தில் குதிரைகள் இனப்பெருக்கம் செய்வதில்லை.
ஏடன் நாட்டிலிருந்து ஆண்டுக்கு சுமார் 2000 குதிரைகள் வந்திறங்குகின்றன.
சரியான பராமரிப்பு இன்றி அவற்றில் 100 குதிரைகள் மட்டுமே ஓராண்டுக்கு மேல் உயிருடன் இருக்கின்றன.
குதிரை வணிகர்கள் வேண்டுமென்றே குதிரை மருத்துவர்களை இங்கே அனுப்புவதில்லை.
இதனால் குதிரை விரைவிலேயே இறக்கும், அவர்களுக்கு வணிகம் பெருகும்.
ஒரு குதிரை 200 தினார் வரை விற்கப்படுகிறது.

* நான் பார்த்ததிலேயே காயல் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பழைய காயல்)
துறைமுகமே மிகப்பெரியது.
உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இங்கே கப்பல்கள் வருகின்றன.

* அரசர் தமிழகத்திற்கு வரும் வணிகர்களையும் மற்றவர்களையும் வெகுமதிகள் வழங்கி கவனிப்பதால் வெளிநாட்டவர் தமிழகம் வர ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

* அரசர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் திறமையாகவும் பாரபட்சம் காட்டாமலும் ஆட்சி செய்கிறார்.
அவரது ஸ்திரமான ஆட்சியால் கருவூலம் நிரம்பி வருகிறது.

இவ்வாறு தமிழகத்தின் நிலையை குறித்துள்ளார் மார்க்கோபோலோ.

அதாவது 725 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தில் ஓரளவு மூட நம்பிக்கைகளும்  பெண்ணடித்தனமும் நிலவியுள்ளது.
ஆனாலும் செல்வ செழிப்பும் ஒழுக்கமும் சமத்துவமும் நிலவியதாகத் தெரிகிறது.

Sunday, 11 June 2017

ஆரியர்தான் சாதியை உருவாக்கினரா?

ஆரியர்தான் சாதியை உருவாக்கினரா?

ஆரியர் நுழைந்த காலத்தை உறுதியாக எவராலும் கூறமுடியாது போனாலும்
பக்கத்தில் இருந்து பார்த்தது போல ஒரு கதை மட்டும் அனைவராலும் கூறமுடியும்.

ஆரியர் கைபர் போலன் கணவாய் வழியாக நுழைந்தனராம்.
பிறகு மனுதர்மம் எழுதி அதில் வர்ணாசிரம சிந்தனையை படைத்து அதன் மூலம் மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்து சாதியை உருவாக்கினார்களாம்.

இந்த கற்பனையை தமிழகத்தில் தனது பார்ப்பன எதிர்ப்புக்கு (பிராமண எதிர்ப்பு அல்ல) பயன்படுத்திக்கொண்டனர் வந்தேறிகள்.

இந்த கதை எப்படி இருக்கிறது என்றால் அகராதியை எழுதியவன்தான் மொழியைப் படைத்தான் என்பது போல இருக்கிறது.

ஒருவேளை நால்வர்ணம் தானாக உருவாகியிருக்கலாம்.
ஆரியர் அது பற்றி எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது இல்லையா?!

ஆனால் நால்வர்ணமும் கற்பனைதான்.

அதாவது 2300 ஆண்டுகள் முன்பு இந்திய துணைக்கண்டம் முழுதும் பயணம் செய்த மெகஸ்தனிஸ் (Megasthenes) எனும் கிரேக்க பயணி மக்கள் ஏழு சாதிகளாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

1) தத்துவஞானிகள்
2) விவசாயிகள்
3) மேய்ப்பர்கள்
4) வணிகர்கள்
5) போர்வீரர்கள்
6) ஒற்றர்கள்
7) அரசு அலுவலர்கள்

சான்று நூல்: Anciant india as described by Megasthenes and Arrian

அதாவது 2300 ஆண்டுகள் முன்புவரை வடயிந்தியாவில் நால்வர்ணம் இல்லை.

ஆரியர் அதன்பிறகு நுழைந்ததாக சான்றும் கிடையாது.
ஏனென்றால் கடந்த 2500 ஆண்டுகளாக வரலாறு ஓரளவு  தெளிவாக உள்ளது.
அதனாலேயே ஆரியர் 3000 ஆண்டுகளுக்கு முன் நுழைந்ததாக கதைகட்டி வந்தனர்.

மேற்படி சாதிகளும் கூட முதல் மற்றும் கடைசி இரு படிநிலைகள் பிறப்பின் வழி வருவதாகத் தோன்றவில்லை.
அறிவு முதலிடத்திலும் உணவு இரண்டாம் இடத்திலும் பணம் மூன்றாம் இடத்திலும் வைக்கப்பட்டுள்ளது.

ஆக ஆரியர் நுழைவும் கற்பனையே
நால்வர்ணமும் கற்பனையே

இன்றைய சாதி அமைப்பு தொழில்வழி வந்ததே ஒழிய நால்வர்ணத்தில் இருந்து வந்ததில்லை என்பதே உண்மை.
_____________________________

மெகஸ்தனிஸ் குறிப்பு மேலும் அறிய,
ஒரு கிரேக்கப் பயணியின் பயணக் குறிப்புகள் - வழிப்போக்கனது உலகம்

ஆரியநுழைவு கட்டுக்கதை  பற்றி அறிய,
யார்தான் ஆரியர்? - வேட்டொலி

Sunday, 23 April 2017

சீனப்பயணியின் தமிழ்க் கல்வெட்டு தென்னிலங்கையில் !

சீனப்பயணியின் தமிழ்க் கல்வெட்டு தென்னிலங்கையில் !

கி.பி. 1409 ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு தென்னிலங்கையில் காலி (Galle)யில் எஸ்.எச்.தொம்லின் என்பவரால் 1911ல் கண்டெடுக்கப்பட்டது.

இது செங் ஹெ (Zheng He) எனும் சீன கடலோடி சீனம், தமிழ், பாரசீகம் என மூன்று மொழிகளில் காணப்படுகிறது.

சிங்களத்தில் இல்லை.

சிவனொளிபாதமலை மீது இருக்கும் அல்லா,
தமிழர் கடவுளான தேனாவரை நாயனார்,
மற்றும் புத்தர் கோவில்களுக்கு கொடுத்த கொடை பற்றி கூறுகிறது.

  அதாவது புத்தமதம் பற்றி இருக்கிறதே தவிர சிங்களவர் பற்றி எதுவுமே இல்லை.

செங் ஹே எனும் சீனக் கடற்படைத் தளபதி மற்றும் நாடுகாண் பயணி ஒரு இசுலாமியர் ஆவார்.
இவர் சிவனொளிபாத மலையின் (Adam's peak) அல்லா என்று குறிப்பிடுவது இறைவன் எனும் பொருளில் இருக்கலாம்.
ஏனென்றால் 1766ல் தான் முதன்முதலாக சிவனொளிபாதமலை பௌத்தர்களுக்கும் திறந்துவிடப்பட்டது.
அதுவரை அது சைவர்களின் புனிதத்தலமே.

தேனாவரை நாயனார் கோயில் தென்னிலங்கையின் தொண்டீஸ்வரம் (donra) ஆகும்.
இது போர்த்துகேயர்களால் இடிக்கப்பட்டுவிட்டது.

இது இருந்த தேவேந்திரமுனை (தேவிநுவர)யில் பெருமாள் கோவில் ஒன்று சிங்களவர்களால் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் வைணவ பற்றாளரான நாயக்கர் வம்சாவழி சிங்களவராக இருக்கலாம்.

தென்னிலங்கையில் தற்போதைய தலைநகரம் கொழும்பு அருகே  கோட்டை கட்டி ஆண்ட அழகேஸ்வரன் என்ற மன்னன் அழகேஸ்வரன்.
இக்கோட்டை ஸ்ரீ ஜயவர்த்தன கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
அழகேஸ்வரன் என்ன காரணத்தாலோ செங் ஹே வருகையை எதிர்த்துள்ளான்.
செங் ஹே படையுடன் அவன் நாட்டில் இறங்கி போர் செய்து தோற்கடித்து கைது செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பிறகு விடுவித்துவிட்டனர் என்றாலும் அழகேஸ்வரனின் கோட்டை அரசு (kotte kingdom) சிங்களவர் கைக்குப் போனது.
பிறகு இந்த கோட்டை அரசின் காலமே சிங்கள மொழியின் பொற்காலம் எனுமளவு சிங்களம் வளர்ச்சியடைந்தது.

அதாவது 1400களில் சிங்களவர்கள் மொழியாலும் நாகரீகத்தாலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துள்ளனர் எனலாம்.

600 ஆண்டுகள் முன்பு வரை கூட தென்முனை வரை தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். ஆண்டுள்ளனர்.

இதற்கு அசைக்கமுடியாத சான்று செங் ஹே அவர்களின் "காலி மும்மொழி கல்வெட்டு"ஆகும்.