Sunday 11 June 2017

ஆரியர்தான் சாதியை உருவாக்கினரா?

ஆரியர்தான் சாதியை உருவாக்கினரா?

ஆரியர் நுழைந்த காலத்தை உறுதியாக எவராலும் கூறமுடியாது போனாலும்
பக்கத்தில் இருந்து பார்த்தது போல ஒரு கதை மட்டும் அனைவராலும் கூறமுடியும்.

ஆரியர் கைபர் போலன் கணவாய் வழியாக நுழைந்தனராம்.
பிறகு மனுதர்மம் எழுதி அதில் வர்ணாசிரம சிந்தனையை படைத்து அதன் மூலம் மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்து சாதியை உருவாக்கினார்களாம்.

இந்த கற்பனையை தமிழகத்தில் தனது பார்ப்பன எதிர்ப்புக்கு (பிராமண எதிர்ப்பு அல்ல) பயன்படுத்திக்கொண்டனர் வந்தேறிகள்.

இந்த கதை எப்படி இருக்கிறது என்றால் அகராதியை எழுதியவன்தான் மொழியைப் படைத்தான் என்பது போல இருக்கிறது.

ஒருவேளை நால்வர்ணம் தானாக உருவாகியிருக்கலாம்.
ஆரியர் அது பற்றி எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது இல்லையா?!

ஆனால் நால்வர்ணமும் கற்பனைதான்.

அதாவது 2300 ஆண்டுகள் முன்பு இந்திய துணைக்கண்டம் முழுதும் பயணம் செய்த மெகஸ்தனிஸ் (Megasthenes) எனும் கிரேக்க பயணி மக்கள் ஏழு சாதிகளாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

1) தத்துவஞானிகள்
2) விவசாயிகள்
3) மேய்ப்பர்கள்
4) வணிகர்கள்
5) போர்வீரர்கள்
6) ஒற்றர்கள்
7) அரசு அலுவலர்கள்

சான்று நூல்: Anciant india as described by Megasthenes and Arrian

அதாவது 2300 ஆண்டுகள் முன்புவரை வடயிந்தியாவில் நால்வர்ணம் இல்லை.

ஆரியர் அதன்பிறகு நுழைந்ததாக சான்றும் கிடையாது.
ஏனென்றால் கடந்த 2500 ஆண்டுகளாக வரலாறு ஓரளவு  தெளிவாக உள்ளது.
அதனாலேயே ஆரியர் 3000 ஆண்டுகளுக்கு முன் நுழைந்ததாக கதைகட்டி வந்தனர்.

மேற்படி சாதிகளும் கூட முதல் மற்றும் கடைசி இரு படிநிலைகள் பிறப்பின் வழி வருவதாகத் தோன்றவில்லை.
அறிவு முதலிடத்திலும் உணவு இரண்டாம் இடத்திலும் பணம் மூன்றாம் இடத்திலும் வைக்கப்பட்டுள்ளது.

ஆக ஆரியர் நுழைவும் கற்பனையே
நால்வர்ணமும் கற்பனையே

இன்றைய சாதி அமைப்பு தொழில்வழி வந்ததே ஒழிய நால்வர்ணத்தில் இருந்து வந்ததில்லை என்பதே உண்மை.
_____________________________

மெகஸ்தனிஸ் குறிப்பு மேலும் அறிய,
ஒரு கிரேக்கப் பயணியின் பயணக் குறிப்புகள் - வழிப்போக்கனது உலகம்

ஆரியநுழைவு கட்டுக்கதை  பற்றி அறிய,
யார்தான் ஆரியர்? - வேட்டொலி

No comments:

Post a Comment