Friday 30 June 2017

மஞ்சள் முடி ஆரியர்

மஞ்சள் முடி ஆரியர்
-×÷-×÷-×÷-×÷-×÷-×÷-×÷-×÷-×÷-

ஆரியரின் வர்ணம் அதாவது உடல் நிறம் பற்றி வேதங்கள் கூறும் குறிப்புகளைப் பார்ப்போம்.

ஆரியர் என்ன நிறமாக இருந்தனர் என்பதை அவர்கள் தமது கடவுளரை வர்ணிப்பதில் இருந்து கணிக்கமுடியும்.
அதாவது எந்த மக்களும் தாம் வணங்கும்  கடவுளை தமது உருவமாகவே சித்தரிப்பார்கள் அல்லவா?!
இதை 'யதன்னம் புருஷோ ஹ்யத்தி, ததன்னம் தஸ்ய தேவதா' என்று ரிக் வேதமும் கூறுகிறது.
--------------
'மஞ்சள் நிறத் தாடியுடன், வெண்ணிற பற்களுடன், ஈடிணையற்ற மாபெரும் பலசாலியாவார்' (5-7-7)
என்று 'இஷ்' எனும் முனிவர் ரிக் வேதத்தில் அக்னிதேவனின் தாடியை வர்ணிக்கிறார்.

'அவர் மஞ்சள் நிற மீசை தாடியும், கூந்தலும் கொண்டு பாறையைப் போல திடமானவர்'
'நாங்கள் அந்த அற்புத வேகங்கொண்ட பச்சை, மஞ்சள் முடியுடைய ஒளிமயமான அக்னியை புதிய செல்வம் வேண்டி தொழுகிறோம்' (10-16-8)
என்று 'வரு' வர்ணிக்கிறார்.
-------------
'பொன்னிறக் கூந்தலுடையவர், மேகங்களைச் சிதறடிக்கும் புயலைப்போன்ற வேகமுடையவர்' (1-79-1)
என்று கோதம்-ராஹூ வர்ணிக்கிறார்கள்.

அதாவது பொன்னிற கூந்தலும் (அதாவது மஞ்சள் நிறத்தில் பளபளப்பான) மீசையும் தாடியும் 'ஹரிகேசம்' அல்லது 'ஹிரண்ய கேசம்' என்று கூறப்படுகிறது.
------------
'இவ்விதம் மஞ்சள் வண்ணமுடையோனான இந்திரன் நல்ல வரவேற்புக்கு உரியவர்' (6-29-6)
என்று பரத்வாஜர் வர்ணிக்கிறார்.
-------------
'விதிப்படி தெற்குநோக்கி கூந்தலை முடிந்துகொள்ளும் வெள்ளைநிற வசிஷ்ட இனத்தவர் என்னை மகிழ்விக்கின்றனர்' (7-33-1)
என்று வசிஷ்டர் தமது இனத்தைப் பற்றி கூறுகிறார்.

அவரே மற்றொரு இடத்தில் 'சுயமாகவே வலிமை படைத்த சூரியனைப் போன்ற சருமஸ் (நிறம்) கொண்ட 'மருத்' தேவர்களே' என்று 'மருத்' எனும் தேவர்களை விளிக்கிறார்.
------------
'நீ அபாலாவை சூரிய ஒளி போன்ற சருமத்தினள் ஆக்கினாய்' (8-80-7)
என்று 'அபாலா' எனும் பெண் தனது தோல் நோயை நீக்கி பழையபடி இந்திரன் ஆக்கியதை நன்றியுடன் கூறுகிறாள்.
------------
'தேவனே! எமக்கு வெண்ணிறமான நீடூழி வாழும் வேகங்கொண்ட தெய்வ பக்தனான வீரக் குழந்தையை அருள்வாயாக!' (23-10)
என்று கிருத்ஸமத் எனும் ரிஷி வேண்டுகிறார்.
------------
அதாவது ஆரியர்கள் வெள்ளை அல்லது சிறிது மஞ்சள் கலந்த வெள்ளை நிறமாகத் தோல் உள்ளவர்கள்.
அதோடு மஞ்சள் நிற முடி உள்ளவர்களாக இருந்துள்ளனர்.

'வெண்மை நிறம், புனித ஆசாரத்தைப் பின்பற்றுதல், தாமிர வண்ண, மஞ்சள் நிறக் கூந்தல் ஆகியவை பிராமணர் என்பதற்கான அடையாளங்கள்'
என்று ரிக் வேதகாலத்திற்கு ஐந்நூறு ஆண்டுகள் கழித்து பிராமணர் உருவம் பற்றி 'மகா பாஷ்யம்' எனும் நூலில் (2-2-6) பதஞ்சலி கூறுகிறார்.

தகவல்களுக்கு நன்றி: 'ரிக் வேத கால ஆரியர்கள்'
_ ராகுல சாங்கிருத்தியாயன்
__________________________

மேற்கண்ட சாயலில் ஒரு உருவத்தை பாகிஸ்தான் தாண்டி ஈரான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில்கூட இன்று பார்க்கமுடியாது.
ஐரோப்பாவில்தான் பார்க்கமுடியும்.
(பார்க்க: வரைபடம்)
அதனால்தான் ஆங்கிலேயர் தமது நுழைவை நியாயப்படுத்த ஆரிய நுழைவு கருத்தியலை கொண்டுவந்தனர்.

ஆனால் தமிழ் பூசாரிகளான பார்ப்பனரை அவர்கள் மற்ற தமிழர்களை விட கொஞ்சம் நிறமாக இருப்பதை வைத்து ஆரியர்களுடன் திரிக்கிறார்கள்.
என்றால் உடல் நிறத்தை விட மிக முக்கியமான அடையாளமாக கூறப்படும் மஞ்சள் முடி என்ன ஆனது?

மூன்று தலைமுறைக்கு முன்பு தமிழகத்திற்கு குடிவந்த மார்வாடிகள் கூட கருப்பாக ஆகிவிடுகிறார்கள்.

அப்படி இருக்கும் போது 3500 ஆண்டுகளாக இங்கே பார்ப்பனர் அதே நிறத்துடன் எப்படி இருக்கமுடியும்?

பார்ப்பனரின் நிறம் அவரது தொழிலின் காரணமாக வந்தது.
ஈரானுக்கு வந்தேறிய ஐரோப்பிய முன்னோர்களான ஆரியருக்கும்
தமிழர்களான பார்ப்பனருக்கும் 1% கூட குருதிவழி தொடர்பு கிடையாது.
வடயிந்திய பிராமணர் மற்றும் உயர்சாதி மக்களுக்கு வேண்டுமானால் 5% வரை தொடர்பிருக்கலாம்.
ஆனால் ஆங்கிலேயர் வரும்வரை ஹிந்தியாவுக்கு அடிபணியாமல் தனியரசு செலுத்திய தமிழகத்தின் எந்த மக்களோடும் ஆரிய தொடர்பிருக்க வாய்ப்பேயில்லை.

இது பொதுமையான அறிவு கொண்டு சிந்தித்தாலே அனைவருக்கும் புரியும்.

முன்னேறிய சமூகமான பார்ப்பனர் மீது பிற தமிழ்ச்சாதிகள் கொண்ட பொறாமையை வந்தேறிகள்  பயன்படுத்திக்கொண்டனர்.
ஆங்கிலேயர் தந்திரத்தை கடன்வாங்கி தமிழினத்திற்குள் ஊடுறுவி திராவிடம் எனும் பெயரில் தாம் ஆள வழிசெய்து கொண்டனர்.

வீழ்ந்தது பார்ப்பனர் மட்டுமல்ல!
தமிழர் அனைவரும்தான்!

பார்ப்பனர் தமிழரே!

No comments:

Post a Comment