Tuesday 6 June 2017

கன்னடர்தான் வைரவிழா எடுக்கவேண்டும்

கன்னடர்தான் வைரவிழா எடுக்கவேண்டும்

'' நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்...
கபினி , ஹேமாவதி ,ஹேரங்கி அணைகள் மட்டுமல்ல..
இன்னும் எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கர்நாடகம் கட்டிக்கொள்ளட்டும்...
எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை...
நாங்கள்  உங்களைப்போல ( அதாவது காங்கிரஸ்காரர்கள்) நிலச்சுவான்தார்கள் அல்ல... பாட்டாளிகள்...
கன்னடர்கள் எங்கள் திராவிட சகோதர்கள்...
நாங்கள் அவர்களோடு பேசி தமிழகத்துக்கு தேவையான நீரைப்பெற்றுக்கொள்வோம்... (அதாவது அணை கட்டியபிறகு) 
நீங்கள் அதைப்பற்றி கவலைப்படவேண்டாம்...'' 

[ 06.03.1970 அன்று தமிழக சட்டசபையில்   கருணாநிதி எதிர்க்கட்சித்தலைவரான கருத்திருமன் அவர்களுக்கு அளித்தபதில்.... ]

இதன்பிறகு கர்நாடகா விதிமுறைகளை மீறி அணைகளைக் கட்டிக்கொண்டது.
பிறகு விவசாய சங்கம் வழக்கு தொடுத்தது.
அதிலும் தமிழக அரசு சேர்ந்துகொண்டது.
பேச்சுவார்த்தைக்கு வர வழக்கை திரும்பப்பெற கர்நாடகா நிபந்தனை விதிக்க அதையும் செய்தது கருணாநிதி அரசு.

தண்ணீர் கிடைக்காமல் தமிழக விவசாயம் 40% அழிந்தது.
கர்நாடக விவசாய நிலம் இருமடங்கு ஆனது.
 
ஆக வைரவிழா எடுக்கவேண்டியவர்கள் தமிழர்கள் அல்ல.... கன்னடர்கள்...!

நன்றி: சரவணக்குமார்.

No comments:

Post a Comment