Showing posts with label காவிரி. Show all posts
Showing posts with label காவிரி. Show all posts

Friday, 6 June 2025

இறுதிக் கட்டத்தில் கன்னடர் தமிழர் மோதல்

இறுதிக் கட்டத்தில் கன்னடர் தமிழர் மோதல் 

 இதே நாம் தனிநாடாக வல்லரசாக இருந்திருந்தால் கன்னடர் தமது மொழி தமிழில் இருந்து வந்தது என்பதை ஒத்துக்கொண்டு இருப்பார்கள்!
 கன்னடம் தமிழில் இருந்து வரவில்லை என்று கன்னடர் சொல்வது ஒருவன் தனக்கு அப்பன் பெயரே தெரியாது என்று சொல்வதைப் போன்றதாகும்!
 கன்னடரை நாம் குறைத்து எடைபோடக் கூடாது!
நமக்கு அழிவு அவர்களால்தான் நடக்கப் போகிறது!
 இது 2000 ஆண்டுகள் தொடரும் பகை!
 அதாவது கரிகாலன் தந்தை காலத்தில் இந்திய துணைக்கண்டத்தை விழுங்கிவிட்டு எஞ்சியிருந்த தமிழகத்தை நோக்கி வந்த மௌரிய பேரரசை வழிநடத்தி வந்தது கர்நாடகப் பகுதி வடுகரே! 
 அன்று மூவேந்தர் கூட்டணிப்படை பெரும்பாடுபட்டு இப்படையெடுப்பை முறியடித்தது!  
 கர்நாடகத்தின் பாழி நகரில் இருந்த படைமையத்தை அழித்தே போர்முடிவுக்கு வந்தது.
 அப்போது கன்னடம் ஒரு தனிமொழியாகவே இல்லை திரிந்த மொழியாக இருந்தது!
 அதாவது கன்னடர் கன்னடராவதற்கு முன்பே நமக்கு எதிரிகளாகி விட்டனர்.
 அதன் பிறகும் கன்னடர் மூன்று முறை தமிழகத்தைப் புரட்டிப்போட்டு உள்ளனர்!
 வடதமிழகம் தவிர்த்து பாண்டிய நாடு வரை பிடித்த களப்பிரர் கன்னடரே! 
 விஜய நகர அரசாக தமிழகத்தைப் பிடித்ததும் கன்னடர்தான்!
 (கன்னடரால் நாயக்கர்களாக நியமிக்கப்பட்ட தெலுங்கர் பிறகு தனியரசுகளை நிறுவினர்.
 இந்த நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பெருமளவு ஆந்திராவிலிருந்து தெலுங்கர் குடியேறி நிலவுடைமை பெற்று தமிழகத்தில் வலுவாக நிலைபெற்றனர்)
 நாயக்கர் காலத்திலும் தென்தமிழக பாண்டிய சிற்றரசுகளை ஒழிக்க முடியாமல் திணறிய தெலுங்கு நாயக்கர்கள் வித்தலராயன் (அ) வெங்கலராசன் எனும் கன்னட தளபதியை அழைத்து வந்தே பாண்டிய வாரிசுகளை இல்லாதொழித்தனர்.
 இந்த படுகொலைக்கு பரிகாரமாக திருநெல்வேலியில் இவன் வெட்டியதே கன்னடியன் கால்வாய் எனும் மாபெரும் கால்வாய் என்று நம்பப்படுகிறது! 
 வித்தலராயன் பற்றி மறைத்து தாமே பாண்டியரை வென்றதாக நாயக்கர்கள் காட்டிக்கொண்டனர்!
 கன்னடியன் கால்வாய்க்கு வேறொரு கட்டுக்கதையை எழுதிவைத்தனர்! 

 தமிழரும் சளைத்தவர் இல்லை!
 இந்திய துணைக்கண்டத்தின் மையம் அதாவது கன்னோசி வரை வென்ற புலிகேசி தமிழகத்தில் பல்லவ நாட்டை நிர்மூலமாக்கிவிட்டு பாண்டிய நாடு வரை வந்து கொடி நாட்டிச் சென்றவன்!
 நமக்கு ராசராசன் போல கன்னடருக்கு புலிகேசி!
 பல்லவர் மீண்டெழுந்து பாண்டியருடன் கைகோர்த்து சாளுக்கிய அரசை வென்று தலைநகர் வாதாபியை அழித்து புலிகேசியின் கொட்டம் அடக்கினர். 
 ராசேந்திரன் படையெடுத்த காலத்தில் கன்னட நாட்டு பிராமணரையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்றதாக அந்த நாட்டு கல்வெட்டு கூறுகிறது!
 (சில ஆண்டுகளுக்கு முன் அன்னிகேரி எனுமிடத்தில் பல எலும்புக்கூடுகள் ஓரிடத்தில் கிடைத்த போது இந்த படுகொலை சோழர் செய்தது என்று கன்னடர் வதந்தி பரப்பினர்)
 மைசூர் அரசு திருமலை நாயக்கர் காலத்தில் தமிழகத்தின் மீது படையெடுத்து மதுரைக்கு மிக அருகேவரை முன்னேறி வந்தபோது ராமநாதபுரம் மறவர் படைகள் வந்துதான் அப்படையெடுப்பை திருப்பியடித்து புறப்பட்ட இடத்திற்கே தள்ளியது!
 இப்படி வரலாறு நெடுக தமிழரும் கன்னடரும் மோதிக்கொண்டே இருந்துள்ளனர்!
 தமிழக கன்னட எல்லையும் கூட இழுபறியிலேயே இருந்து வந்துள்ளது!
 அதாவது நம் எல்லையை அவர்கள் ஆக்கிரமிப்பதும் நாம் மீட்பதும் என!
 கர்நாடகத்திற்குள் ஏறத்தாழ அம்மாநில மத்தியில் உள்ள தமட்டக்கல் எனுமிடத்தில் 6 ஆம் நாற்றாண்டு தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது! 
 அதில் ஏழூர் சாத்தன் எனும் பெயருள்ளது.
 அப்போது அங்கே தமிழர் அரசாட்சி பரவியிருக்கவும் இல்லை! 
தமிழகத்தினுள் இத்தகைய பழமையான கன்னட சான்று எதுவும் கிடையாது!
 1956 இல் தமிழகத்திற்கு சேரவேண்டிய எல்லை மாவட்டங்களை எத்தனையோ சான்றுகள் இருந்தும் தமிழகத்திற்கு கிடைக்கவிடாமல் பறித்த கன்னடர் ஏற்கனவே இருந்த எல்லையைத் தாண்டி அன்றைய கோவை மாவட்ட ஒரு பகுதியையும் எடுத்துக் கொண்டனர்!
 திராவிட மாயையில் கிடந்த , கிடக்கும் தமிழர் இதை மீட்க முயலவே இல்லை!
 இதுவே நமது இன்றைய தோல்விக்குக் காரணம்!
 குடகு மொழி பேசும் கொடகர் பகுதியில் காவிரி உற்பத்தி ஆகிறது! 
 அவர்களையும் அடக்கி ஒடுக்கிவிட்ட கன்னடர் காவிரி நீரை மறித்து தேவையில்லாமல் தேக்கி தமது மாநில தொழிற்சாலைகளுக்கு வழங்கியும் தமிழகத்தில் அவர்களின் பங்காளிகளான திராவிட அரசுகள் நீரில்லாத ஆற்றில் மணலை அள்ளி விற்றும் மனிதத்தன்மை அற்ற அரசியல் செய்கின்றனர்!
 கேட்டால் கன்னடர்கள் நல்லவர்களாம் சில கன்னட வெறியர்கள் இப்படி அரசியல் செய்கின்றனராம்!
 எனவே நாம் இருவருமே சண்டை போடாமல் இருக்க வேண்டுமாம்!
 இதுவும் ஒரு திராவிடப் பிரச்சாரம்!
அடிப்பவனையும் அடிவாங்குபவனையும் ஒரே தரத்தில் வைப்பது!
 ஒரு உயிருக்கு தண்ணீரை மறுப்பது எவ்வளவு பெரிய பாவம் என்று விலங்குகளுக்கு கூட புரியுமே?!
 கன்னட இனத்தில் ஒருவருக்கு கூடவா இந்த அறிவும் இரக்கமும் இல்லை!
 கர்நாடக ஆறுகள் ஆண்டுக்கு ஆயிரம் டிஎம்சி கடலில் சென்று கலக்கின்றன. 
 ஆனால் தமிழகத்துக்கு வரும் 100 டிஎம்சி நீரை மறித்து அரசியல் செய்கின்றனர்.
 கேட்டால் கடலில் கலக்கும் 10 டிஎம்சி காவிரி நீரை சேமிக்கிறார்களாம்.
 கன்னடரோ உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டது இல்லை!
 அவர்கள் பணிந்தது வீரப்பனார் நீட்டிய துப்பாக்கிக்கு மட்டும்தான்!
 இன்றுவரை தமிழகத்தை ஒரு வெள்ள வடிகாலாக ஒரு சாக்கடையாகவே  பயன்படுத்துகின்றனர் கன்னடர்.
 இதனால் நெற்களஞ்சியமான டெல்டா விவசாயம் பெரும்பங்கு அழிந்துவிட்டது.
 மன்னார்குடி வரை நிலத்தடியில் கடல் நீர் புகுந்துவிட்டது.
 ஹிந்திய அரசு இதைத் தட்டிக்கேட்கவில்லை.
 ஹிந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இத்தனை ஆண்டுகால பகையிருந்த போதும் இப்போது வரை சிந்து நதியை மறிக்கவில்லை!
 தற்போது ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளனரே தவிர நடைமுறையில் எதுவும் செய்யவில்லை! 
 ஹிந்தியாவை நம்பி பல ஆண்டுகளாக போராடி அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தையும் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக பயன்படுத்துகிறது.
 பாகிஸ்தானுக்கு தண்ணீர் விடும் ஹிந்தியருக்கு ஒரு தமிழ்க் குழந்தை தண்ணீர் குடிப்பதில் உடன்பாடில்லை!
 ஹிந்தியர் ஆதரவுடன் காவிரி ஆணையத்திலேயே தீர்மானத்தை நிறைவேற்றி மேகதாது அணை கட்ட கன்னடர் தயாராகிவிட்டனர். 
 இந்த ஆணையம் சூழ்ச்சியாக டெல்டா கால்வாய்களைத் தூர்வார கடன் பெற்றுத்தருவதாக ஒரு அம்சத்தைச் சேர்த்து தமிழக அரசை ஆணைய கூட்டத்திற்கு வரவழைத்து மேகதாது கட்ட தீர்மானம் கொண்டுவந்து தமிழகமும் புதுச்சேரியும் எதிர்த்தும் கூட அத்தீர்மானம் நிறைவேறியுள்ளது.
 இதன் மூலம் வெளிநாட்டு கடனாக தமிழக அரசுக்கு கிடைக்கும் 1400 கோடியில் ஏறத்தாழ 40% திமுகவுக்கு கமிசன் கிடைக்கும்.
 இந்த பணத்திற்காக தீர்மானம் நிறைவேறும் என்று தெரிந்தும் பல ஆண்டுகள் செய்தது போல புறக்கணிப்பு செய்யாமல் கூட்டத்தில் கலந்துகொண்டு பிறகு வெளியே வந்து அயோக்கித்தனம் செய்துவிட்டார்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாடகமாடி பேட்டி கொடுக்கிறார்.
 அதாவது இன்னும் சில ஆண்டுகளில் சொட்டு நீர் கூட தமிழருக்கு கிடைக்காது.
 5கோடி தமிழர்களுக்கு தண்ணீர் இருக்காது!
 இது ஒரு வெளிப்படையான இனப்படுகொலை ஆகும்.
 இந்த இனப்படுகொலை குற்றவாளிகளைத் தான் அதுவும் அவர்கள் வெளிப்படையாக இனவெறுப்பு பேசிக் கொண்டிருந்த போது தான்  தமிழக முதலமைச்சரே நேரில் சென்று பிரச்சாரம் செய்து ஆட்சியில் அமர்த்தினார்.
 ஈழத்தில் ஹிந்தியாவும் சிங்கள அரசும் செய்த இனப்படுகொலைக்கு துணைநின்றது போலவே 
 தமிழகத்திலும் ஹிந்தியரும் கன்னடரும் செய்யவுள்ள நேரடி இனப்படுகொலைக்கு திமுக துணை நிற்கிறது.
 நியாயப்படி தமிழர்தான் கன்னடரை கொலைவெறி கொண்டு அடிக்க வேண்டும்.
 ஆனால் கன்னடர் தொடர்ந்து தமிழரை அடிப்பதும் கொல்வதும் நடக்கிறது.
1982 இல் கன்னடத் திணிப்பை எதிர்த்து போராடிய நான்கு கோலார் தமிழர்களை சுட்டுக் கொன்றதன் மூலம் தொடங்கியது கொலைத் தாண்டவம். 1991 இல் மிகப்பெரிய கலவரம் நடத்தி நூறு பேர் வரை கொன்று பல நூறு பேரை முடமாக்கி 2 லட்சம் தமிழரை அடித்து விரட்டிவிட்டனர் கன்னடர்.
 தொடர்ச்சியாக அவ்வப்போது தமிழரைத் தாக்கியே வந்துள்ளனர்.
 2016 இல் கூட தமிழர்களைக் குறிவைத்து கலவரம் நடந்தது.
 தற்போது நடந்த கிரிக்கெட் மோதல்களையும் இதில் சேர்க்கலாம்.
 இப்படி முழுவெறியுடன் இருக்கும் கன்னடர் மேகதாது அணையைக் கட்டிவிட்டால் தமிழர் அழிவுக்காலம் தொடங்கிவிடும்.
 நாம் குடகு மழைக்குப் போகும் மழை மேகங்களை தடுத்து செயற்கை முறையில் மழை பொழிய வைப்பதைத் தவிர வேறு வழியிருக்காது!
 அப்படிப் பொழிந்தாலும் அது அமில மழையாகவே இருக்கும்!
 திராவிடத்தை வீழ்த்தி இனப்பற்றுள்ள தமிழரை ஆட்சியில் அமர்த்தி மேகதாது அணையைத் தடுக்க வேண்டும்! 
 கன்னடர் கொட்டமடக்க இன்னொரு வீரப்பன் உருவாக வேண்டும்! 
 இந்த தேர்தலை விட்டால் மேகதாது கட்டப்படும்! தமிழகத்தில் நிரந்தர பஞ்சம் வரும்!
 நாம் இன்னொரு சோமாலியா ஆக வேண்டியதுதான்! 
 அதன்பிறகு எத்தனை வீரப்பன்கள் உருவானாலும் பலனில்லை! 
 
 
 
 

Sunday, 31 March 2024

பெங்களூர் தண்ணீர் பஞ்சம் பொய்

பெங்களூர் தண்ணீர் பஞ்சம் பொய்!
இனப்படுகொலை நடத்த காத்திருக்கும் கன்னடர்!
அமைதியாக வேடிக்கை பார்க்கும் திராவிடம்!

 தலைக்கு ஒருநாளுக்கு 108 லிட்டர் கையிருப்பு வைத்துள்ளது கர்நாடகா!
 தரவேண்டிய நீரில் பாதி தான் தந்துள்ளது!
உச்ச நீதிமன்றம் கூறினாலும் தண்ணீர் தரமுடியாது என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டது கர்நாடக அரசு!

கீழ்க்காண்பது விகடன் 29.03.2024 இல் வெளியிட்டுள்ள கட்டுரை

 பெங்களூரு தண்ணீர் பஞ்சம்: 
உண்மைகளும் உருட்டுகளும்!

மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கு கர்நாடகம் பல முயற்சிகளைச் செய்து வருகிறது.
 அதன் ஒரு கட்டமாக கடந்த சில மாதங்களாக பெங்களூரு மாநகரில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்ற தகவலை பரப்பி வருகிறது கர்நாடக அரசு.
 கர்நாடகம் சொல்வதெல்லாம் உண்மையா, இல்லை வழக்கம்போல உருட்டுகளா என்பது குறித்து தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கத்தில் மாநிலச் செயலாளர் முனைவர் வீரப்பனிடம் பேசியபோது, “சென்ற ஆண்டு (2023) பருவமழை மிகக் குறைவாகப் பெய்ததால் பெங்களூரு மாநகர மக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கிறது கர்நாடக அரசு.
 அம்மாநில துணை முதலமைச்சரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் 'கர்நாடகாவில் இந்த ஆண்டு மிகக் குறைவாகவே மழை பெய்தது.  பெங்களூருவில் வசிக்கும் மக்களுக்குக் குடிநீரும் தேவைக்கேற்ப வழங்க முடியவில்லை. எனவே காவிரி நதியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை காவிரி மேலாண்மை ஆணையம், ஏன் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தினாலும், ஒரு சொட்டுத் தண்ணீரையும் கர்நாடகா வழங்க முடியாது' என்று தெரிவிக்கிறார். 
அதே சமயம் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் 67.16 டி.எம்.சி கொண்ட நீர்த்தேக்கத்தைக் கட்டியே தீருவோம் என்றும் முழங்குகிறார். 
இத்தனையும் பார்த்துக் கொண்டு தமிழ்நாடு அரசு மிக மிக அமைதியாக இருக்கிறது.
இந்த சூழ்நிலையிலும் காவிரி டெல்டா பகுதி உழவர் சங்கங்களும் காவிரி உரிமை மீட்புக் குழுவும் தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. 
இருப்பினும் தமிழ்நாட்டின் உயர் அலுவலர்களும் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர்களும் இன்னும் குறிப்பாக இந்நிலை பற்றி உரத்துப் பேச வேண்டிய காவிரி தொழில் நுட்பக் குழுமமும் உண்மைநிலை பற்றிப் பேசாமல் இருப்பது நம்மைப் போன்றோர்க்குப் பெரும் கவலையளிக்கிறது.


இணையதளத்தில் தேடினால் கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளில் (2019 - 2023) பெய்த மழையளவு கிடைக்கிறது. நம்மைப் பொறுத்த வரை கர்நாடகா மாநில முழுமையும் பார்க்காமல் காவிரி ஆறு பாயும் பகுதியிலுள்ள மழைப் பொழிவை மட்டும் பார்த்தால் சராசரி ஆண்டு மழைப் பொழிவு 714 மி.மீ. 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் ஆண்டு சராசரியை விடக் (+75 சதவிகிதம் வரை) கூடுதலாகவே மழைபெய்துள்ளது. ஆனால் 2023-ல் பெய்த மழை அளவு 572 மி.மீ. இது சராசரி மழைப்பொழிவை விட 20 சதவிகிதம் குறைவு.
இதன்படி காவிரியில் தமிழ்நாட்டுக்கு 177.25 – டிஎம்சியில் 20 சதவிகிதம் (34.35 டிஎம்சி) குறைத்து 137.80 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட்டிருக்க வேண்டும். 
நமக்கு பில்லிகுண்டுலுவில் வந்த காவிரி நீரின் அளவோ வெறும் 78.10 டி.எம்.சி மட்டுமே. 
பொய்யான யதார்த்த கள நிலவரத்திற்கெதிராக அரசியல் நாடகமேடை நிகழ்வுகளை காவிரியில் நமக்குத் தராமலிருக்கவும் மேக்கேதாட்டூ அணையினைக் கட்டவும் அழுத்தம் தர அரங்கேற்றிவருகிறது.
 இத்தகைய பொய்ப்புனைவுப் பரப்புரைகளை வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது. 
காலதாமதமின்றி அலட்சியமாக இல்லாமல் உடனே செயற்படவேண்டும். 
அப்பொழுதுதான் நம் தமிழகத்தின் உரிமைகளைக் காத்திட முடியும். 
சட்டநடவடிக்கைகளைக் கர்நாடகா அரசு எப்போதும் சட்டை செய்வதில்லை.

எனவே இந்திய அரசியல் சட்டப் பிரிவு 365-இன்படி குடியரசுத் தலைவருக்குக் கடுமையான அழுத்தம் தரவேண்டும். 
தமிழக அரசியல் கட்சிகளும் விவசாய சங்கங்களும், காவிரி உரிமை மீட்புக்குழுவும் தங்களுக்குள்ள அரசியல் பக்திப் பரவசங்களை ஒதுக்கிவிட்டு கர்நாடகாவின் பொய்ப்பரப்புரைகளை மேற்குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மறுத்து விளக்கித் தொடர் எழுச்சிப் போராட்டங்களை நடத்திட வேண்டும்.

காவிரியிலிருந்து பெங்களூரு மாநகரத்திற்கு நாள் ஒன்றுக்கு 1450 எம்எல்டி அளவுக்குக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக காவிரி ஐந்தாம் நிலை திட்டத்திலிருந்து 750 எம்எல்டி குடிநீர் வழங்கிடப் பணிகள் நடந்துவருகின்றன. 2023-ல் பெங்களூரு மாநகரின் மக்கள் தொகை 1 கோடியே 29 லட்சம். ஓர் ஆளுக்கு, நாள் ஒன்றிற்கு 108 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. சென்னை மாநகர் (2023) மக்கள் தொகை 1 கோடியே 18 லட்சம். வழங்கப்படும் குடிநீரின் அளவு 1000 எம்.எல்.டி. 
ஓர் ஆளுக்கு, நாள் ஒன்றிற்கு 85 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது.

சென்னை மாநகரில் குடிநீர்த் தட்டுப்பாடு இருப்பதாக சென்னைக் குடிநீர் வாரியமோ செய்தி ஏடுகளோ தமிழகத் தொலைகாட்சிகளோ பரப்புரை செய்யவில்லை. ஆனால், சென்னை மக்களைவிடக் கூடுதலாகக் குடிநீர் பெறும் பெங்களூரு மாநகரில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு இருப்பதாக நாள்தோறும் பரப்புரை செய்வதை ஏன் தமிழ்நாடு அரசு மறுதலித்துப்பேசவில்லை. இதிலிருந்தே கர்நாடகா அரசு எப்படி நாடகமேடைகாட்சிகளை அரங்கேற்றுகிறது என்று தெளிவாகப் புரியும்.

நம் சென்னைக் குடிநீர் வழங்கு வாரியம் 15-03-2024-ல் வெறும் 10.11 டிஎம்சி அளவுக்குத் தண்ணீர் இருப்பை வைத்துக் கொண்டு தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாமல் வரும் 9 மாதங்களுக்கு வழங்குவோம் என்று தெரிவிக்கிறது. ஆனால் கர்நாடகா அரசோ காவிரி அணைகளில் 60 டிஎம்சி க்குமேல் தண்ணீரை இருப்பில் வைத்துக் கொண்டு பெங்களூரு மாநகரில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது என்று வேண்டுமென்றே நாடகமாடுகிறது. 

 நம் தமிழக அரசு ஏன் இதை வெளிப்படுத்தி மறுத்து அறிக்கை விடவில்லை என்பது புதிராக உள்ளது.
உண்மை நிலைமை இப்படியிருக்கும்போது செய்தி இதழ்களும் நம் ஊர் தொலைகாட்சிகளும் கூட பெங்களூருவில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கின்றன. 
இவற்றைப்பார்த்து அமெரிக்க நண்பர் இச்செய்தி உண்மையா என கேட்கிறார். 
கர்நாடகத்தின் பொய் பிரசாரங்களை தமிழக அரசு கண்டிக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது” என்றார்.
 பெங்களூரில் எங்களுடைய தொடர்பில் குடும்பத்தினர்களும் பணிபுரிபவர்களும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள்.

Also Read
மேக்கேதாட்டூ... நெருங்கிவிட்ட ஆபத்து... காவிரி ஆணையம் அனுமதி! துணைபோகிறதா தமிழக அரசு?

Also Read
மேக்கேதாட்டூ அணை விவகாரம்: அடித்து ஆடும் கர்நாடக காங்கிரஸ் அரசு... அமைதி காக்கிறதா திமுக?

Also Read
பெங்களூரு தண்ணீர் பஞ்சம்... கேவலமான அரசியல்!

Also Read
`தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர நாங்கள் முட்டாள்கள் அல்ல'-கடுகடுக்கும் சிவக்குமார், மௌனம் காக்கும் திமுக

Saturday, 23 September 2023

கன்னட பொதுமக்களே

கன்னட பொதுமக்களே!
 ஒரு குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது அதைத் தாயிடமிருந்து பிடுங்குவது போன்ற செயல் கர்நாடகாவில் நடக்கிறது!
 காவிரி தாய் என்றால் நாம் இருவருமே பிள்ளைகள், நம் இருவருக்கும் பசி தீர்ந்துகொள்ள சம உரிமை உள்ளது!
 இந்த உரிமையில்  நம்மில் யார் மூத்தவன் இளையவன் என்கிற பேச்சுக்கே இடமில்லை. 
 ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவிடாமல் தடுப்பது இனப்படுகொலை ஆகும்! 
 இந்த படுபாதகத்தைச் செய்யாதீர்கள்! 
அரசியல்வாதிகள் மீது பழியை போட்டுவிட்டு நீங்கள் காரணமில்லை என்பது போல நடந்துகொள்ளாதீர்கள்!
 கர்நாடகாவில்  உபரியாகத் தண்ணீரைத் தேக்கி அதை பன்னாட்டு நிறுவனங்கள் உறிஞ்சிக் கொள்கின்றன.
 தண்ணீர் வராத தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை நடக்கிறது.
 இந்த அரசியல் சதியைப் புரிந்துகொள்ளுங்கள்!
"ஆறு தோன்றும் இடம் எங்களுடையது அதனால் ஆறு எங்களுக்கு சொந்தம்" என்பது உலகில் யாருமே சொல்லாத கூற்று!
இதை அறிவுள்ள எவருமே ஏற்க மாட்டார்கள்!
 நியாயமான அளவு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மனசாட்சியுள்ள கன்னடர்கள் குறைந்த பட்சம் இணையத்திலாவது குரல் எழுப்புங்கள்!
 காவிரி விடயத்தில் கன்னட அமைப்புகள் நடத்தும் முழு அடைப்புக்கும் போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுக்காதீர்கள்!
 கர்நாடகத்தின் இந்த மனிதத்தன்மை அற்ற அரசியல் தொடர்ந்தால் ஒவ்வொரு கன்னடரும் கொலைவெறி பிடித்தவர் என்கிற பொது பிம்பத்தை உருவாக்கும்! 
 கடைசி கட்டத்திற்கு வந்துவிட்ட காவிரிப் பிரச்சனை விரைவில் இனமோதலில் முடியவுள்ளது!
அதனால் நமக்கு லாபம் இல்லை! நஷ்டம் மட்டுமே!
 நம்மை மோதவிட்டு லாபம் பார்ப்பவர்கள் பணக்காரர்களும் அரசியல்வாதிகளும்!
 கன்னடர் தமிழர் கலவரம் வெடித்து இரு தரப்பிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு பல நூறு உயிர்கள் போனபிறகு தவறு உணர்ந்து கண்ணீர் விடுவதை விட இப்போதே சமாதானம் செய்துகொள்வது சிறந்தது!
 "மற்ற விடயத்தில் கன்னடர்களாகிய நாங்கள் நல்லவர்கள்தான் ஆனால் காவிரியை மட்டும் கொடுக்கமாட்டோம்" என்பது ஒரு ஒருவனுக்கு விருந்து வைத்துவிட்டு கழுத்தை நெறித்துக்கொண்டு நிற்பது போன்றது!
  நாங்கள் பிச்சை கேட்கவில்லை! 
எங்கள் உரிமையைத் தான் கேட்கிறோம்! 
 மனசாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள்! 
 
 

Sunday, 1 January 2023

காவிரிக்காக புதுச்சேரி தமிழகத்துடன் இணைதல்

காவிரிக்காக புதுச்சேரி தமிழகத்துடன் இணைதல் 

 புதுச்சேரிக்கு மாநில அதிகாரம் கோருவது ஏற்புடையது இல்லை!
 புதுச்சேரி தனது சிறப்பு அந்தஸ்தை கைவிட்டு தமிழகத்துடன் இணைதல் வேண்டும்!
 அதுவும் துண்டு துண்டான அதன் பகுதிகள் அந்த அந்த மாவட்டத்திற்குள் இணைக்கப்பட வேண்டும்.
 புதுச்சேரிக்குச் சொந்தமான மாஹே கேரளாவிலும் ஏனாம் ஆந்திராவிலும் உள்ளது. அவற்றை அந்த அந்த மாநிலங்களுக்கே வழங்கவும் வேண்டும். இதை காரணமில்லாமல் செய்யக்கூடாது. 

 காவிரி உற்பத்தியாகும் குடகு பகுதி மக்கள் புதுச்சேரி போன்ற சிறப்பு சி- அந்தஸ்து கோரி வருகின்றனர். தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கன்னடர் அட்டூழியத்தை எடுத்துக்கூறி தமக்கு அதிகாரம் கிடைத்தால் தமிழகத்திற்கு தண்ணீர் தருவதாக வாக்களித்துள்ளனர்.

 கன்னடர் காவிரியை மறித்து செய்யும் மனிதத்தன்மை இல்லாத அரசியலுக்கு தகுந்த பதிலடியாக நமது புதுச்சேரி அந்தஸ்தை குடகுக்கு விட்டுக்கொடுக்க தமிழகம் மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் முன்வர வேண்டும்.
 புதுச்சேரி மக்கள் குடகு நோக்கியும் குடகு மக்கள் புதுச்சேரி நோக்கியும் ஒரே நேரத்தில் பேரணி சென்று வீரமிகு போராட்டங்கள் நடத்த வேண்டும்.

 கன்னடர் ஏற்கனவே மராத்தியர்களுடன் எல்லைச் சிக்கலில் மோதல் வெடிக்கும் நிலையில் உள்ளனர்.
 இந்த நேரத்தில் இந்த நகர்வு இந்திய அரசியலையே புரட்டிப்போடும்.

 நமது இந்த நகர்வுக்கு மாஹே, ஏனாம் பகுதிகளை விட்டுக் கொடுப்பதாக பேரம் பேசி கேரளா மற்றும் ஆந்திரா மக்களை இப்போராட்டத்திற்கு ஆதரவு தரக் கோரவேண்டும். மராத்தியர் ஆதரவும் கிடைக்கும்.
 கர்நாடகா நான்கு புறமும் எழும் எதிர்ப்பினாலும் எல்லைதாண்டும் புதுச்சேரி பேரணியாலும் குடகு எழுச்சியாலும் நிலைகுலைந்து போகும்.
 
 புதுச்சேரி மக்களே! 
 உங்கள் பகுதி புதுக்கோட்டை சமஸ்தானம் போல சொந்தமாக நீங்கள் உருவாக்கியது இல்லை! எவனோ ஒரு வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற பகுதி மீது அமர்ந்து கொண்டு நீங்கள் அதிகாரம் செலுத்துவது அதிலும் பிற மாநில பகுதிகளை ஆக்கிரமித்து அதிகாரம் செலுத்துவது நியாயம் இல்லை. நீங்கள் நினைத்தால் தமிழகத்திற்கு காவிரியைக் கொண்டுவர முடியும். தமிழகத்துக்கு சாராயம் ஊற்றிக்கொடுக்கும் மக்களாகவே இருக்கப் போகிறீர்களா? அல்லது குடிநீர் கொணர்ந்த மக்களாக இருக்கப் போகிறீர்களா? கஷ்டமோ நஷ்டமோ சக தமிழர்களுடன் இணைந்து ஒற்றை ஆட்சியில் வாழ்வதே முறை! 

 இந்த துணிச்சலான அரசியலை புதுச்சேரி முதல்வர் முதலில் முன்னெடுக்க வேண்டும்.
 ஏனெனில் தமிழக முதலமைச்சர் தமிழரல்லர்! கேரள அரசு தமிழக எல்லைப் பகுதிகளை தமது எல்லைக்குள் கணக்கெடுத்து பதிவு செய்துவருவதைக் கூட கண்டுகொள்ளாத கையாலாகாத இன வன்மம் கொண்ட முதல்வர்தான் ஆட்சியில் இருக்கிறார். 
 
 புதுச்சேரி முதல்வர் இந்த போராட்டத்தை அறிவித்தால் தமிழக மக்களையும் தன்னெழுச்சியாக  இதில் கலந்துகொள்வர். தமிழக முதல்வர் வேறு வழியின்றி இணைவார்! இந்த போராட்டத்தை நடத்திவிட்டால் அடுத்த தமிழக முதல்வராக்கூட ஆகலாம்!

 இதற்கு முதலில் புதுச்சேரி மக்கள் போராட்டங்கள் செய்ய வேண்டும்! தமது முதல்வருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்!

 இந்த போராட்டம் வெற்றி பெற்று குடகு அதிகாரம் பெற்றதும் காவிரிக்கான ஒப்பந்தம் போட்டுக்கொள்ளவும் வேண்டும்.

 கன்னடர் கொட்டம் அடக்க காலம் கனிந்துள்ளது!
இதைச் செய்ய தமிழர்கள் முன்வந்தால் தலைமுறைகள் தாண்டியும் நன்மை அடையலாம்!
 

Friday, 17 April 2020

இலக்கியத்தில் வடமேற்கு மலைகள்

இலக்கியத்தில் வடமேற்கு மலைகள்

  ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒரு குறிப்பிட்ட மொழியினர் உரிமை கோர முதன்மையான தேவை இலக்கியச் சான்று ஆகும்.

 அப்படி இலக்கிய அடிப்படையில் தற்போதைய கேரளா மட்டுமல்லாது அதையும் தாண்டி கர்நாடகாவின் மைசூர், கூர்க் ஆகியவற்றுடன் சிக்கமகளூர் வரை நமக்குச் சொந்தமானது என்றாகிறது.

 மைசூர் எனும் எருமைநாடு பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
 தற்போது மலைகள் பற்றி பார்ப்போம்.

நளிமலை :-

 நீலகிரி மாவட்டத்தில் ஒருபக்கத்தில் இருந்து கன்னடரும் இன்னொரு பக்கத்திலிருந்து மலையாளிகளும்  குடியேறி இன்று தமிழரை விட அதிகமாகிவிட்டனர்.
 இப்பகுதி அரசியல் தலைமைகளும் வேற்றினத்தவர் கைகளுக்குச் சென்றுவிட்டது.

 நீலகிரி சங்ககாலத்தில் நளிமலை என்று அழைக்கப்பட்டது.
 நளி என்றால் குளிர்ச்சி என்று பொருள்.
 தமிழர் நிலத்திலேயே மிகவும் குளிர்ச்சியான இடம் இதுவே!

 குளிர்ந்த நளிமலை பற்றியும் அதை ஆண்ட வேட்டுவ குலத்தைச் சேர்ந்த நள்ளி (முழுப் பெயர்:  கண்டீரக் கோப்பெருநள்ளி இவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன்) எனும் காட்டு அரசன் பற்றியும் புறநானூறு (148 - 150) கூறுகிறது.

 சிலப்பதிகாரம் கால்கோட் காதையில் சேரன் செங்குட்டுவன் 'நீலகிரி' வந்து தங்கியிருந்தது பற்றியும்
அப்போது மிக்கரிய நிறமுடைய 'கொங்கணக் கூத்தர்' மற்றும் 'கருநாடர்' ஆகியோர் தமக்கே உரிய தனிப்பட்ட கலாச்சாரத் தோற்றத்துடன் வந்து 'மாதர்ப் பாணி' எனும் காதல்கலந்த பாடலைப் பாடி ஆடினர் என்று குறிப்பு உள்ளது
(இதை கன்னடர் தமது சான்றாக முன்வைக்கலாம்).
 இதேபோல குடகர்களும் ஓவர்களும் வந்து ஆடிப்பாடி சேரனை மகிழ்வித்து பரிசு பெற்றுச் சென்றனர்.

 --------------

கண்டீரமலை :-

  நீலகிரி மலைகளில் ஒன்று கண்டல் மலை.
இதுவே சங்ககாலத்து கண்டீரமலை ஆகும் (ஈரம் துண்டுதுண்டாக அதாவது பனிக் கண்டுகள் கிடக்கும் மலை என்று பொருள்).
 புறநானூறு 151 இல் நள்ளியின் தம்பி கண்டீரக்கோன் பற்றி உள்ளது.
---------

தோட்டிமலை :-

 தொட்டபெட்டா சிகரம் தோட்டி என்று இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 தோட்டி என்பது யானையை செலுத்த பாகன் பயன்படுத்தும் கோலைக் குறிக்கும்.
 அதைப்போன்ற கூரிய வளைந்த தோற்றம் உடைய மலைச் சிகரம் என்கிற பொருள்படும்படி தோட்டிமலை என்று அழைக்கப்பட்டது.

 இந்த தோட்டி மலையை ஆயர் தலைவன் 'கழுவுள்' என்பவன் சேரனிடம் போரில் இழந்தான் என்று பதிற்றுப்பத்து (8 - 71) கூறுகிறது.

 பரிபாடல் (5-86) இம்மலையை இருந்தோட்டி என்று குறிப்பிடுகிறது.
------------

 குதிரைமலை :-

தற்போதைய சிக்கமகலூரு மாவட்டத்தில் உள்ள Kudremukh எனும் குதிரைமுக மலை பற்றி இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன.
 குதிரை முகம் போன்ற அமைப்புடைய உயர்ந்த மலையை ஒட்டி போக்குவரத்துக்கான ஒரு கணவாய் இருந்துள்ளது.
  அது பற்றியும் அம்மலையை ஆண்ட பிட்டன் பற்றியும் அகநானூறு (143) கூறுகிறது.

 பிட்டனின் மகன் பிட்டங்கொற்றன் பற்றி புறநானூறு (168) கூறுகிறது.
 அதில் ஊராக் குதிரை என்று குறிப்பிடப்படுகிறது குதிரைமலை. அங்கு வாழ்ந்த குறவர் பற்றியும் விலங்குகள் பற்றியும் தாவரங்கள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது.

 நீண்ட பாதையைக் கொண்ட குதிரைமலையை ஆண்ட அஞ்சி என்ற அரசன் பற்றி அகநானூறு (372) கூறுகிறது.

 உயர்ந்த குதிரைமலையை ஆண்ட எழினி பற்றி புறநானூறு (158) கூறுகிறது.

 குதிரைமலையின் மக்கள் மழவர் ஆவர்.
 ஆறு மலைமுகடுகளை உடைய யானை போன்ற மலையான  பொதினி (பழனி) மலையின் அரசன் முருகனிடம் தோற்றனர் என்று அகநானூறு (1) கூறுகிறது.

 Kutremukh என்பதற்கு கன்னடத்திலும் குதிரை முகம் என்றே பொருள்.
 அதன் பெயர் குதிரைமுகம் போன்ற தோற்றத்தினால் ஏற்பட்டது என 1908 இல் வெளிவந்த Imperial Gazetteerof Mysore & coorg ல் பக்கம் 233 மற்றும் 109 ல் பதிவாகியுள்ளது.
---------

ஏழில்மலை :-

 ஏழு மலைமுகடுகளைக் கொண்ட மலை என்பதால் ஏழில் மலை என்றழைக்கப்பட்டது.
 இதனூடாகவும் ஒரு மலைப்பாதை இருந்துள்ளது.
 சமஸ்கிருதத்தில் இது சப்தகிரி என்று அழைஐக்கப்பட்டது.
 பத்தாம் நூற்றாண்டிலிருந்து எலிமலை என்று மாறிவிட்டது.
 பிற்கால ஐரோப்பியர் குறிப்பிலும் எலி எனும் பெயராலேயே குறிக்கப்பட்டுள்ளது.
 (ஆனால் மலையாளத்தில் ezhi அதாவது எழி என்றே எழுதுகின்றனர்).

 இதை ஏழில்குன்றம் என்று குறிப்பிடும் நற்றிணை (391),
 கொங்காண அரசன் நன்னன் வளமான இம்மலையை ஆண்டு வந்தான் என்றும் கூறுகிறது.

[கொங்காண நாடு என்பது கொங்குநாட்டின் வடக்கே இருந்த நாடு.
 கொள் விளையும் காட்டுப் பகுதி என்று பொருள்.
 இன்றைய கர்நாடகத்தின் தென்மேற்கு பகுதியே இது.
 இங்கே எருமைகள் மிகுதி.
 கோவா மற்றும் அதைச் சுற்றி பேசப்படும் மொழி கொங்கணி ஆகும்.
 இவர்கள் கொங்கணர் என்கிற வேற்றினத்தவராக இலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ளனர்.
 இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
 கொங்காணத்தை ஆண்ட நன்னன் தமிழரான வேளிர் குலத்தவனே!
 இதற்குச் சான்றாக நன்னனை "வேண்மான்" என்று அகநானூறு (97) கூறுகிறது.
 "நன்னன் உதியன்" என்பவன் தொன்மையான வேளிர் குலத்தின் செல்வங்களை தன் பாழி நகரில் வைத்து பாதுகாத்தான் என்று அகநானூறு (258) கூறுகிறது]

 ஏழில் குன்றத்து கணவாய் பற்றியும் அங்கிருக்கும் யானைகள் பற்றியும் அகநானூறு (349) கூறுகிறது.

 யானைகளைப் பரிசாக அளிக்கும் வழக்கமுடைய நன்னனின் நாட்டில் மயில்கள் நிறைந்த ஏழில்மலை உள்ளதென்று அகநானூறு (152) கூறுகிறது.

 ஏழில்குன்றத்து பெண்கள் வேங்கைப் பூவைப்பிண்ணி இடையில் அணிவர் என்று அகநானூறு (345) கூறுகிறது.
--------

முதுமலை:-

 சங்ககாலத்தில் முதிரம் என்று அழைக்கப்பட்டது.
 மூங்கில்களும் பலாமரங்களும் குரங்குகளும் காய்கனிகளும் நிறைந்த இம்மலையை வள்ளலான குமணன் ஆண்டான் என்று புறநானூறு (158, 163) கூறுகிறது.
-----------

 குடகு மலை:-

 குடகு மலை தற்போது கொடகு என்றும் (ஆங்கிலத்தில் coorg அங்கே வாழும் இனத்தவர் கொடவா என்றும் அழைக்கப்படுகின்றனர்.

 குடகுமலையை குடமலை என்று குறிப்பிட்டு அங்கே காவிரி பிறக்கிறது என்று மலைபடுகடாம் (527) கூறுகிறது.

 குடமலையில் சந்தனமும் அகிலும் கிடைக்கும் என்று பட்டினப்பாலை (188) குறிக்கிறது.

 குடகுமலை உச்சியை (குடகக் கவடு) பிளந்து சோழன் காவிரியைக் கொண்டு வந்ததாக விக்கிரமசோழன் உலா (24) கூறுகிறது.

 காவிரி குடமலையில் பிறந்து கடலில் கலப்பதை சிலப்பதிகாரம் (10: 106) பாடுகிறது.

 குடமலையில் உள்ள மாங்காடு எனும் ஊரில் வாழ்ந்த அந்தணர் பற்றி சிலப்பதிகாரம் (11) கூறுகிறது.

 குடகுமலையை 'மேற்கில் இருக்கும் பொன்பதித்த மலை' எனுமாறு 'குடாஅது பொன்படு நெடுவரை' என்றழைத்து அங்கே காவிரி பிறப்பதாக புறநானூறு (166) கூறுகிறது.

 ஏற்கனவே கூறியதுபோல குடகர் சேரன் முன்பு நடனமாடி பரிசு பெற்ற செய்தி சிலப்பதிகாரத்தில் வருகிறது.
 ஆனால் அதில் கொங்கணரும் கருநாடரும் தனித்த தோற்றத்துடன் இருந்ததைக் குறிப்பிட்ட இளங்கோவடிகள்,
 ஓவர் (ஓவியர்) மற்றும் குடகர் தனித்த தோற்றம் உடையவரென எதுவும் கூறவில்லை.
 என்றால் இவ்விருவரும் தமிழரில் ஒரு அங்கமாக இருந்திருக்க வேண்டும்.

 அதாவது சேரன் இமயமலைக்குச் செல்ல படையுடன் தனது தலைநகரிலிருந்து புறப்பட்டு நாட்டின் எல்லையான நீலகிரிக்கு வருகிறான்.
 அப்போது அருகாமை இனத்தவரான கருநாடரும் கொங்கணரும் சேரநாட்டுக்குள் வந்து கலைநிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
 சேரநாட்டின் எல்லைப்புறத்து மக்களான குடகரும் ஓவியரும் கலைநிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர்.

 இதன்பிறகு சேரனின் நட்புநாட்டவரான "நூற்றுவ கன்னர்" (சாதவாகனர்) மிக அதிகளவு பரிசுகளுடன் நூற்றுக்கணக்கான கூத்தாடிகளையும் சஞ்சயன் எனும் தூதுவன் தலைமையில் அனுப்பி
"ஒரு கல்லுக்காக ஏன் இமயம் போகிறீர்கள் நாங்களே எடுத்துக்கொண்டுவந்து தருகிறோம்" என்று செய்தி சொல்ல வைக்கின்றனர்.
 இது எதைக் காட்டுகிறது என்றால் சேரன் இன்னும் தனது எல்லையைவிட்டு படையுடன் வெளியேறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

 கன்னடர் மற்றும் மலையாளிகள் நாம் காட்டிய இலக்கியச் சான்றினை விட பழமையான தமது மொழியின் இலக்கியச் சான்றினைக் காட்டினாலொழிய நாம் மேற்கண்ட மலைகளை விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

Tuesday, 7 April 2020

இலக்கியத்தில் எருமையூர்


இலக்கியத்தில் எருமையூர்
 
புராணங்களின் படி மகிஷாசுரனை மகிஷாசுரமர்த்தினி வதம் செய்த இடம் என்று கருதப்பட்டு மைசூருக்கு மகிஷாசுரமர்த்தினிபுரம் என்ற பெயர் இருந்ததாகவும் பிறகு சுருங்கி மகிஷபுரம் என்றாகி பிற்பாடு மைசூர் என்றானதாகவும் சிலர் கூறுகின்றனர்.
இது பொருத்தமான வாதமாகத் தோன்றவில்லை.
உண்மையில் மகிஷாசுரமர்த்தினி பற்றி வட இந்தியாவிலேயே கி.பி 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புராணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கர்நாடகத்தில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சான்றே காணப்படுகிறது.
மைசூர் என்பது உண்மையில் எருமையூர் ஆகும்.
எருமைகள் மிகுந்த ஊர் என்று பொருள்கொள்ளலாம்.
கர்நாடகம் இன்று எருமை வளர்ப்பில் பின்தங்கிவிட்டாலும் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் உள்ளது.
நமக்கு சல்லிக்கட்டு போல கன்னடர்க்கு எருது போட்டி (மரபணு ஆய்வின் படி உலகிலேயே பழமையான எருது வகை இந்திய நீர் எருமைகள் தான்).
எருமை என்பதற்குச் சமற்கிருதச் சொல் மகிஷம்.
எருமையூர் என்பது மகிசூர் என்றாகிப் பிறகு மைசூர் என்றாயிற்று என்பர்.

  ஆனால் எருமையூர் மையூர் என்றும் அழைக்கப்பெற்றுள்ளது.
மையூர் என்பதே மைசூர் என்று ஆகியிருக்கவேண்டும்.
இதுவே இயல்பான மாற்றமாகப் படுகிறது.
இதற்கு இலக்கியச் சான்றாக வேளிர் குடியைச் சேர்ந்த 'மையூர் கிழான்' என்பவர் சேரமன்னன் இளஞ்சேரல் இரும்பொறையிடம் அமைச்சராக இருந்ததாக பதிற்றுப்பத்து கூறுகிறது (காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு).
மைசூர் நகரின் பெயராலே அம்மாநிலம் முழுவதும் 1980 வரை வழங்கப்பட்டது.
பிறகுதான் கர்நாடகா என்று மாற்றினர்.
எருமையூர் பற்றி இலக்கியங்களில் உள்ள குறிப்புகள்,
வடிகட்டப்பட்ட கள் கிடைக்கும் எருமையூர் எனுமாறு
"நார் அரி நறவின் எருமையூரன்" அகநானூறு (36) கூறுகிறது.
குடநாடு என்பது சேரநாட்டின் வடபகுதி.
இதில் நுண்வேலைப்பாடு நிறைந்த பூண் அணிந்த (கொம்புகளை உடைய) எருமை மாடுகள் நிறைந்திருந்தன என்பதை 'நுண்பூண் எருமை குடநாட்டன்ன' (அகநானூறு 115) எனும் வரிகள் உணர்த்தும்.
சேரநாட்டு வளத்தைக் கூறும் சிறுபாணாற்றுப்படை (41- 46) செங்கழுநீர்ப் பூக்களை எருமைகள் மிகுதியாக மேய்ந்துவிட்டு பலாமர நிழலில் உறங்கின என்று கூறுகிறது.
அதாவது சேரநாட்டிலும் அதையொட்டிய எருமைநாட்டிலும் எருமைகள் அதிகளவு இருந்தன.
ஆனால் அயிரி ஆறு (ஹரங்கி ஆறு) பாயுமிடத்தில் வடுகரின் எருமை நாடு இருந்தது எனுமாறு,
"வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாடு"
என்று அகநானூறு (253) கூறுகிறது.
இதில் கூறப்பட்டுள்ள
'வடுகர் பெருமகன் எருமை நன்னாடு' என்பதை
'வடுகப் பெருமான் ஆளும் எருமை நாடு'
என்று பொருள் கொண்டால் 'எருமைநாடு' என்பது வடுகரின் நாடு என்றாகிறது.
இதை கன்னடர் தமது தரப்பு சான்றாக வைக்கக்கூடும்.
ஆனால் 'வடுகனான எருமை என்பான் ஆளும் நாடு'
என்று பொருள்கொள்வது சரியாக இருக்கும்.
ஏனென்றால் இப்பாடல் வரிகள் முதலில் அவனது பண்புகளைக் கூறி அத்தகைய எருமையின் நாட்டில் அயிரியாறு பாய்கிறது என்று அவனைப் பற்றித்தான் கூறுகிறதே தவிர அவனது நாட்டைப் பற்றி கூறவில்லை.

எருமை என்பவன் இரவில் தாக்குபவன் என்றும்
மாடுகளை மேய்க்கும் போது கோவலர் எழுப்பும்  ஒலிகளைக் கற்றுக்கொண்டு அதுபோல் ஒலியெழுப்பி காளைகளையும் கன்றுடன் பசுக்களையும் கவர்ந்து சென்று தனது மண்டபம் நிறைய கட்டிவைத்திருப்பவன் என்றும்
வலிமையான தோள்களை உடையவன் என்றும் கூறி
அவனை வடுகர் பெருமகன் என்றும் கூறுகிறது.
ஒரு குறிப்பிட்ட குடியின் தலைவனை அக்குடிப் பெயருடன் 'பெருமகன்' என்று சேர்த்துக் கூறுவது வழக்கம்.
எ.கா: ஆவியர் பெருமகன் (பேகன்)
கள்வர் பெருமகன் (தென்னன்)
குறவர் பெருமகன் (ஏறைக்கோன்)
ஆக 'வடுகரின் தலைவனான எருமை' என்று பொருள்கொள்வதே சரி!
அயிரி ஆறு எனும் ஹரங்கி ஆறு காவிரி உற்பத்தி ஆகி சிறிது தூரம் ஓடியதும் அதில் வந்து கலக்கும் குறுகிய நீளமுள்ள ஆறு ஆகும் (717 கி.மீ).
அயிர் என்பது நுண்ணிய அல்லது மிகச்சிறிய என்ற பொருளைத் தரும்.
எனவே இந்த ஆறுக்கு இது பொருத்தமான பெயரே!
(இவ்வாறு பற்றி அகநானூறு 177 இலும் வருகிறது)
இந்த சிற்றாறு எருமை ஆண்ட நாட்டின் முக்கிய நதி என்று கூறுவதன் மூலம் அவனது நாடு மிகவும் சிறியது என்பதையும் ஊகிக்கலாம்.
என்றால் குடகு வரை சேரர் ஆண்டதும்.
அதற்கு வடக்கே வடுகரின் மொழிபெயர் தேயம் இருந்ததையும் ஊகிக்கலாம்.
அதாவது தற்போதைய கூர்க் மாவட்டம் பாதிவரை சேரநாட்டுடையது.
பிற்பாடு ஹொய்சள அரசர் சாசனத்திலும் எருமை என்னும் பெயரால் மைசூர் குறிக்கப்பட்டுள்ளது
(சான்று: Epigraphia Carnatica., Vol X c. w. 20).
எனவே மகிஷூர் என்பது மைசூரின் பழைய பெயர் இல்லை.
படம்: எருமைநாடு மற்றும் அதனருகில் வடுகர் நாடு


Thursday, 13 December 2018

மேகதாது அணை அல்லது கன்னடரின் கொடூரத்தனம்

மேகதாது அணை அல்லது கன்னடரின் கொடூரத்தனம் 

சினிமாவில் ஒரு வில்லன்
அப்பாவி மக்களை ஓர் அறையில் அடைத்து
அவர்களுக்கு உணவு கொடுக்காமல்
சாகும்வரை பட்டினிபோட்டு
பார்த்து ரசிக்கும் காட்சி வந்தால்
அவனை எவ்வளவு கொடூரமானவன் என்று நினைப்போமோ....
அதே அளவு கொடூரமானோர் ஒவ்வொரு கன்னடரும்!

70 டி.எம்.சி!

கடந்த ஜூன் மாதம் அணைகள் அனைத்தும் உடையுமளவு மழை கொட்டித் தீர்த்தும் நமக்கு கிடைத்த தண்ணீர் இவ்வளவுதான்!

67 டி.எம்.சி!
இதுவே தமிழக எல்லைக்கு மிக அருகே அவர்கள் கட்டப்போகும் மேக்கேதாட்டு அணையின் கொள்ளளவு!

அதாவது தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட போகக்கூடாது என்பதில் கன்னடர் குறியாக இருக்கின்றனர்.

கன்னடவர் சட்டத்திற்கும் மனித நேயத்திற்கும் புறம்பாக அணை கட்டி தேவையில்லாமல் தண்ணீரைத் தேக்கிவைத்து அந்த நிரம்பிய அணைகள் மீது உட்கார்ந்து நாம் நீரும் உணவும் இல்லாமல் பஞ்சத்தில் சாவதை ரசிக்கப் போகிறார்கள்.

இதுவே குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வோரு கன்னடரின் கனவு!

உண்மை என்னவென்றால் இந்த கனவு முக்கால்வாசி நிறைவேறிவிட்டது.

ஆம். தமிழகத்தில் முப்போகம் விளைந்து 32 ஆண்டுகள் ஆகின்றன.

இருபோகம் விளைந்து 16 ஆண்டுகள் ஆகின்றன.

பல தகராறுகள் செய்து ஒரு போகத்திற்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.
இனி அதுவும் கிடைக்காது.

ஏற்கனவே நலிந்துபோய் தற்போது கஜா புயலால் உருக்குலைந்து கிடக்கும் நெற்களஞ்சியமான டெல்டா பகுதி மக்கள் இனி நிமிரவே முடியாது.

கன்னடவர் நேரம் பார்த்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளனர்!

'தமிழகத்தின் சம்மதம் இன்றி அணை கட்டக் கூடாது' என்கிற இறுதித் தீர்ப்பை மீறும் இச்செயலை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த வழக்கையும் இன்று (13.12.2018) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை!

மலையாளிகள் காட்டை அழித்து அதன் விளைவாக வந்த வெள்ளத்திற்கு
எந்த பாவமும் அறியாத முல்லைப்பெரியாறு அணையின் மீது பழி போட்டு
நீர்மட்டத்தை குறைத்தனரே அதை விட மோசமான செயல் இது!

மேக்கேதாட்டு அணை கட்ட அவர்கள் சொல்லும் காரணம் 'பெங்களூருக்கு குடிநீர்' வழங்குவது.
பெங்களூர் மக்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 10 லிட்டர் தண்ணீர் குடித்து 3 முறை குளித்து தீர்த்தாலும் அதற்கு 3 டி.எம்.சி அணை போதும்.
கடைசியாக தீபக் மிஸ்ரா வழங்கிய அநியாயமான தீர்ப்பில்  தமிழகத்தின் பங்கான 192 TMC இலிருந்து 147 TMC ஆக குறைக்கப்பட்டபோது பெங்களூர் நகர குடிநீருக்கு பங்கு ஒதுக்கியே கணக்கு காட்டப்பட்டது.

'மின்சாரம் எடுப்பதற்காக' என்று இன்னொரு காரணம் சொல்கின்றனர்.
கர்நாடகம் முழுவதும் ஆண்டுக்கு ஏறத்தாழ 410 டி.எம்.சி கடலில் கலக்கிறது.
அங்கேயெல்லாம் மின்சாரம் எடுக்காமல் அணை கட்டாமல் தமிழர்களுக்கு செல்லும் தண்ணீரை முற்றுமுழுதாக மறித்து நம் இனத்தையே ஒழித்துக்கட்ட இவ்வாறு செய்கிறார்கள்.

இந்த விடயத்தில் மட்டும் கன்னடவர் கட்சி, சாதி, மத, வட்டார பேதங்கள் தாண்டி உறுதியாக இருக்கின்றனர்.

2015 இலேயே இந்த அணைக்கு நிதி ஒதுக்கி கள ஆய்வும் செய்துவிட்டனர்.
ஆனால் யானை வழித்தடங்கள் அழிக்கப்படும் என்றும் எங்கள் கிராமங்கள் மூழ்கிவிடும் என்றும் அப்பகுதி பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எதைப் பற்றியும் கவலைப்படாத கன்னட காட்டுமிராண்டிகள் தங்கள் கொடூரத்தனத்தை நடைமுறைப் படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.

இதே நாளில் 1991 இல் பெங்களூர் நகரில் 50% ஆக இருந்த தமிழர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து,
1000 பேர் வரைக் கொன்று,
பல கோடி சொத்துகளைக் கொள்ளையடித்து,
ஒன்றரை லட்சம் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு கன்னடரால் விரட்டப்பட்டனர்.
அதற்காக இன்றுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

மேகதாது 1956 வரை கோயம்பத்தூர் மாவட்டத்தில் இருந்த கொள்ளேகால் வட்டத்தின் பகுதி.
1900களின் ஆரம்பத்திலேயே திட்டமிட்டு கொள்ளேகால் நகரத்தைச் சுற்றி கன்னடர் குடியேறி குடியேறி அந்த தாலுகாவின் பெரும்பான்மை ஆகினர்.
1956 இல் கொள்ளேகால் கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டபோது அந்நகரத்தில் பாதிக்கு பாதி தமிழர்கள் இருந்தனர்.

1924 இலிருந்து ஒவ்வோரு நீதிமன்றத் தீர்ப்பும் தமிழருக்கு எதிராகவே வந்து,
தண்ணீர் படிப்படியாகக் குறைக்கப்பட்டு,
சட்டவிரோதமாக அணைகள் வரிசையாகக் கட்டப்பட்டு,
அந்த அநியாயமான தீர்ப்பில் கூறிய தண்ணீரைக் கூட தராமல் அடாவடி செய்து,
அப்பாவிகள் மீது வன்முறை ஏவப்பட்டு,
இன்று கடைசிச் சொட்டு நீரும் மறுக்கப்படும்போதும்
கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கிறது ஜனநாயகம்.

இதற்கு தீர்வுதான் என்ன?

வீரப்பனார் காட்டிய அதிரடி வழிதான்.

பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின!
மேதாவிகள் பல புத்தகங்கள் போட்டனர்!
ஜனநாயகப் போராளிகள் பல முறை கத்தி கதறி சிறை சென்று மீண்டனர்!
நீதிமன்றங்கள் குழுக்கள் பல அமைத்து தீர்ப்புகள் பல வாசித்தன!

எதற்குமே பணியாத வெறிபிடித்த கன்னட இனம்,
50 பேரும் பத்து துப்பாக்கிகளும் வைத்திருந்த
வீரப்பனார் அனுப்பிய ஒரு பத்து ரூபாய் கேசட்டுக்கு பணிந்து காவிரியைத் திறந்துவிட்டது கண்முன் நடந்த வரலாறு.

எந்தக் கன்னடனும் கர்நாடகாவைத் தாண்டி பஞ்சம் பிழைக்க செல்வதில்லை.
அங்கே விவசாயிகள் வசதியாக உள்ளனர்.
எல்லாமே தமிழர்களிடமிருந்து பிடுங்கியது.
அவர்கள் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையும் தமிழன் தட்டிலிருந்து பிடுங்கப்பட்டது.
அவர்கள் கட்டிடம் கட்டும் ஒவ்வொரு செங்கலும் தமிழன் வீட்டிலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்டது.

நீர், உணவு, ஆற்று மணல், அரசியல் பதவி, விவசாயம் என அனைத்தையும் கன்னடரிடம் பறிகொடுத்துவிட்டு ஊர் ஊராக நாடுநாடாக பஞ்சம் பிழைக்க ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

இனி மனிதநேயம் பேசி பலனில்லை!

ஒவ்வொரு தமிழரும் ஒவ்வொரு கன்னடருக்கும் எதிரி!

உங்களுக்கு கன்னட நண்பர் இருந்தால் அவரை கைவிடுங்கள்!

கன்னட பணியாள் இருந்தால் வேலையை விட்டு தூக்குங்கள்!

கர்நாடகா வங்கிகளையும் நிறுவனங்களையும் புறக்கணியுங்கள்!

பிரச்சனை வந்தால் கன்னடர் சொத்துக்களை அடித்து உடையுங்கள்!

அங்கே ஒரு தமிழரைத் தாக்கினால் இங்கே இரண்டு கன்னடரைத் தாக்குங்கள்!

கன்னடர் இங்கே வாழ அசௌகரியமான சூழலை உருவாக்குங்கள்!

தமிழகத்து புலிகள் ஒருநாள் அணையை குண்டு வைத்து தகர்க்க நிதி கேட்டு வருவார்கள் அப்போது பணம் கொடுத்து உங்கள் வீட்டு இளைஞர்களைத் துணைக்கு அனுப்புங்கள்.

இதுதான் தீர்வு!

இல்லையென்றால் நாம் இன்னொரு சோமாலியா ஆகித்தான் தீரவேண்டும்!

இது கன்னட இனத்திற்கும் தமிழ் இனத்திற்கும் நடக்கும் போர்!

இரண்டில் ஒன்று அழியும் வரை இது தொடரும்!

Saturday, 28 July 2018

எது வீண்?

எது வீண்?

ஆறு கடலில் கலக்காமல் அணை கட்டித் தடுத்து பயன்படுத்த வேண்டும் என்று கூறும் தமிழர்,
கன்னடர் போல முட்டாள் ஆவார்.

நதிகளை இணைக்கவேண்டும் என்பார் ஹிந்தியர் போல அடிமுட்டாள் ஆவார்.

கடலில் ஆறு கலக்காவிட்டால் நமக்கு மூச்சு கிடைக்காது.

ஆம். விளையாட்டில்லை.
இதுதான் உண்மை.

காற்றில் ஆக்சிஜனை நிரப்புவது மரங்கள் மட்டுமல்ல.
நதி கடலில் கலக்கும் இடத்தில் வாழும் நுண்ணுயிரிகளும் அதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

நாம் விடும் மூச்சில் மூன்றில் ஒன்று அந்த நுண்ணுயிரிகள் போட்ட உயிர்வளி பிச்சை.

அதோடு கடலில் நன்னீர் கலக்காவிட்டால் கடலின் உப்புத்தன்மை அதிகமாகும்.
அது ஆவியாவது குறைந்து மழைப்பொழிவு குறையும்.

கடலுக்கு தண்ணீர் வரவில்லை என்றால் அந்த வெற்றிடத்தை நிரப்ப கடல் நீர் நிலத்தினுள் புகும்.

இப்படி புகுந்து நமது நெற்களஞ்சியம் பாலைவனமாக ஆக வேண்டும் என்பதற்காகவே அணை கட்டுதல், நதிநீர் இணைப்பு போன்ற பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.

கரிகாலன் அசை கட்டினான் என்றால் அது கரையை பலப்படுத்தி வெள்ளத்தை கட்டுக்குள் வைக்கவே!

கடலின் தாகத்தைத் தணிக்காவிட்டால் கடல் நம்மைக் கொன்றுவிடும்.

இயற்கைப் பொறுத்து நாம் வாழவேண்டும்.

நமக்காக இயற்கையை மாற்றக்கூடாது.

கன்னடனின் கொட்டத்தை அடக்கி மழை நீரைச் சேமிப்பதே தீர்வு.

Friday, 15 June 2018

காவிரியின் பிறப்பிடமான குடகு தமிழகத்துக்கு ஆதரவாக...

காவிரியின் பிறப்பிடமான குடகு தமிழகத்துக்கு ஆதரவாக...

"குடகு மாநிலம் உருவானால் காவிரி நீர் தருகிறோம்"

"எங்கள் குடகுப் பகுதி 1956 க்கு முன்புவரை குடகு தனிமாநில அரசாகத்தான் இருந்தது"

"குடகுவாழ் மக்களை கர்நாடக அரசு நசுக்குகிறது"

"ஊர்களின் பெயர்களையெல்லாம் கன்னட மொழியில் பெயர் மாற்றம் செய்கிறார்கள்"

"கன்னட மொழியை குடகுமொழி பேசும் மக்கள்மீது திணிக்கிறார்கள்"

"கொடவா பகுதியில் சேரர், சோழர், பாண்டியர்கள் ஆட்சி நடத்தியதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன"

"புதுவை போல 'சி' அந்தஸ்துள்ள தனி மாநிலமாக குடகை அறிவித்தால் தமிழகத்திற்குத் தேவையான காவிரி நீரை தடையின்றி தருவோம்"

- நஞ்சப்ப கொடவா

ஜூனியர் விகடன் 06.06.2018

Sunday, 29 April 2018

நம் முன்னோர் காட்டிய வழி

நம் முன்னோர் காட்டிய வழி

உலகமே நம்மை ஆயுதம் தூக்கவைக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது.

அப்போதுதான் அவர்கள் 'தீவிரவாத ஒழிப்பு' என்ற பெயரில் ராணுவத்தை இறக்கி ஒரு இரும்புத்திரை கொண்டு மூடி நம் மண்ணை அதிவேகமாகச் சுரண்ட முடியும்.

ஆனாலும் நாம் ஆயுதம் தூக்கவே செய்வோம்!

தமிழர்நாட்டில் புலிப்படை மீண்டும் எழும்!

இம்முறை நாம் நேர்மையாக இருக்கமாட்டோம்!

நாம் ஹிந்திய படையினரை வகைதொகையில்லாது கொலை செய்வோம்!

ஹிந்திய ஆயுதங்களைக் கொள்ளை அடிப்போம்!

மிக மோசமாகத் தோற்கடித்து விரட்டுவோம்!

பிறகு தாய்நிலத்தில் பதுங்கியுள்ள வேற்றாரையெல்லாம் கொன்றொழிப்போம்!

துரோகிகளைக் கண்டெடுத்து தலையை வெட்டுவோம்!

நம் எல்லையோடு நில்லாது அண்டை நான்கு இனங்கள் மீதும் படையெடுப்போம்!

இன்னொரு நாட்டில் நுழையும் ராணுவம் வழக்கமாக என்னவெல்லாம் செய்யுமோ அத்தனையையும் நாம் செய்வோம்!

அதோடு நில்லாது நம் முன்னோர் போலவே நாம் இமயம் வரை முன்னேறுவோம்!

வழியில் நம்மால் நிகழ்த்தப்படும் அழிவு ஆயிரம் ஆண்டுகள் மறக்கமுடியாத வகையில் இருக்கும்!

இதையெல்லாம் இந்த உலகம் நம் பெயர் கேட்டாலே அஞ்சி நடுங்குமாறு நேர்த்தியாக செய்துகாட்டுவோம்!

பிறகு நாம் பத்திரமாக திரும்பிவந்து நம் தாய்நிலத்தில் அடங்கிக்கொள்வோம்!

என்றும் எப்போதும் போருக்குத் தயாராக இருப்போம்!

இதுவே நமது மூதாதையர் காட்டிய வழி!

இவ்வாறே நாம் இதுவரை தாக்குப்பிடித்து வாழ்ந்துள்ளோம்!

இன்று நம் இனத்தையும் தாய்மண்ணையும் காக்க நமக்கு வேறு வழியும் இல்லை!


Sunday, 22 April 2018

காவிரிக்காக எந்த பார்ப்பனராவது குரல் கொடுத்துள்ளாரா?

காவிரிக்காக எந்த பார்ப்பனராவது குரல் கொடுத்துள்ளாரா?

1971ல் காவிரிக்காக முதன்முதலில் வழக்கு தொடுத்தவர் திரு. சீனுவாச ஐயங்கார்.
அவர் வழக்கு தொடுக்க போகும்போது கடைசி நேரத்தில் வந்து ஒட்டிக்கொண்டனர் கருணாநிதி மற்றும் முரசொலி மாறன்.

பிறகு இந்திரா காந்தி மிரட்டியதும் வழக்கை கருணாநிதி வாபஸ் பெற்றனர்.

அதன்பிறகு சீனுவாச ஐயங்காரின் மகன் மன்னார்குடி ரெங்கநாதன் 8.11.1983 ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு போட்டார்.
அதன் மூலம் 1991ல் (419 TMC தமிழகத்திற்கும் 270 TMC கர்நாடகத்திற்கும் என) கிடைத்த முதல் தீர்ப்புதான் அடுத்த 11 ஆண்டுகள் தடையில்லாமல் தண்ணீர் வரக் காரணம்.

இன்றும் தனது 82 வயதிலும் காவிரிக்காக துணிந்து களத்தில் நிற்கிறார் ரங்கநாதன்.

காவிரி பிரச்சனை தீவிரமடைந்துள்ள இந்த நேரத்தில் நாலுவரி எழுதி மீம்ஸ் போட்டுவிட்டு 'ஆண்டாளுக்கு போராடின அவா இதுக்கு வரலை' என்று பார்ப்பனரைத் திட்டும் போராளிகள்,
காவிரிப் பிரச்சனையில் ஆரம்பகட்டத்திலேயே வெறும் 40 விவசாயிகள் கொண்ட அங்கீகாரமே இல்லாத ஒரு சங்கத்தை வைத்துக்கொண்டு தன் மாநில அரசாங்கம் காலைவாரிய பிறகும் கர்நாடக மாநில அரசுக்கு எதிராக வழக்கு போட்டு நியாயம் வாங்கித் தந்தது ஒரு பார்ப்பனர் என்ற உண்மையை தயவுசெய்து அறிந்துகொள்ளவும்.

நன்றியில்லாத உலகம்!

Monday, 2 April 2018

தென்கொரியத் தமிழர்களின் ஆதரவு

உலகின் மறுமூலையில்...

தென்கொரியா தலைநகர் சியோல் (seoul) நகரில் வாழும் தமிழர்கள்,
தங்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் நிலைப்பாட்டை பதிவு செய்தனர்.

https://m.facebook.com/story.php?story_fbid=1192340730869578&id=100002809860739

Thursday, 29 March 2018

குடகு

62 ஆண்டுகள் முன்பு வரை கர்நாடகாவின் பாகமாக இராத பகுதி குடகு.

1956 ல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தமிழகத்துடன் இணைய விரும்பிய பகுதி குடகு.

காவிரி உற்பத்தி ஆகும் இடமான தலைக்காவிரி இருக்கும் பகுதி குடகு.

கன்னடரை விட தனித்துவமான தேசிய இனமாக  இருந்தாலும் கர்நாடகாவுடன் சேர்க்கப்பட்டது குடகு.

காவிரிப் பிரச்சனைக்காக பதவியைத் தூக்கியெறிந்த அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி அதற்கு தீ்ர்வாகக் கேட்டது தனி குடகு.

மொழியும் கலாச்சாரமும் அழிந்து கன்னடவர் குடியேற்றத்தையும் ஆதிக்கத்தையும் சந்திக்கும் பகுதி குடகு.

நாளைய தமிழர்நாட்டின் ஒரு மாநிலம் குடகு.

(படம் உதவி: Veera VK)

செய்தி: காவிரி நீர் கிடைக்க குடகு போராட்டததுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்
வியனரசு பேட்டி
நாம் தமிழர் கட்சி