Sunday 31 March 2024

பெங்களூர் தண்ணீர் பஞ்சம் பொய்

பெங்களூர் தண்ணீர் பஞ்சம் பொய்!
இனப்படுகொலை நடத்த காத்திருக்கும் கன்னடர்!
அமைதியாக வேடிக்கை பார்க்கும் திராவிடம்!

 தலைக்கு ஒருநாளுக்கு 108 லிட்டர் கையிருப்பு வைத்துள்ளது கர்நாடகா!
 தரவேண்டிய நீரில் பாதி தான் தந்துள்ளது!
உச்ச நீதிமன்றம் கூறினாலும் தண்ணீர் தரமுடியாது என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டது கர்நாடக அரசு!

கீழ்க்காண்பது விகடன் 29.03.2024 இல் வெளியிட்டுள்ள கட்டுரை

 பெங்களூரு தண்ணீர் பஞ்சம்: 
உண்மைகளும் உருட்டுகளும்!

மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கு கர்நாடகம் பல முயற்சிகளைச் செய்து வருகிறது.
 அதன் ஒரு கட்டமாக கடந்த சில மாதங்களாக பெங்களூரு மாநகரில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்ற தகவலை பரப்பி வருகிறது கர்நாடக அரசு.
 கர்நாடகம் சொல்வதெல்லாம் உண்மையா, இல்லை வழக்கம்போல உருட்டுகளா என்பது குறித்து தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கத்தில் மாநிலச் செயலாளர் முனைவர் வீரப்பனிடம் பேசியபோது, “சென்ற ஆண்டு (2023) பருவமழை மிகக் குறைவாகப் பெய்ததால் பெங்களூரு மாநகர மக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கிறது கர்நாடக அரசு.
 அம்மாநில துணை முதலமைச்சரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் 'கர்நாடகாவில் இந்த ஆண்டு மிகக் குறைவாகவே மழை பெய்தது.  பெங்களூருவில் வசிக்கும் மக்களுக்குக் குடிநீரும் தேவைக்கேற்ப வழங்க முடியவில்லை. எனவே காவிரி நதியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை காவிரி மேலாண்மை ஆணையம், ஏன் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தினாலும், ஒரு சொட்டுத் தண்ணீரையும் கர்நாடகா வழங்க முடியாது' என்று தெரிவிக்கிறார். 
அதே சமயம் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் 67.16 டி.எம்.சி கொண்ட நீர்த்தேக்கத்தைக் கட்டியே தீருவோம் என்றும் முழங்குகிறார். 
இத்தனையும் பார்த்துக் கொண்டு தமிழ்நாடு அரசு மிக மிக அமைதியாக இருக்கிறது.
இந்த சூழ்நிலையிலும் காவிரி டெல்டா பகுதி உழவர் சங்கங்களும் காவிரி உரிமை மீட்புக் குழுவும் தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. 
இருப்பினும் தமிழ்நாட்டின் உயர் அலுவலர்களும் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர்களும் இன்னும் குறிப்பாக இந்நிலை பற்றி உரத்துப் பேச வேண்டிய காவிரி தொழில் நுட்பக் குழுமமும் உண்மைநிலை பற்றிப் பேசாமல் இருப்பது நம்மைப் போன்றோர்க்குப் பெரும் கவலையளிக்கிறது.


இணையதளத்தில் தேடினால் கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளில் (2019 - 2023) பெய்த மழையளவு கிடைக்கிறது. நம்மைப் பொறுத்த வரை கர்நாடகா மாநில முழுமையும் பார்க்காமல் காவிரி ஆறு பாயும் பகுதியிலுள்ள மழைப் பொழிவை மட்டும் பார்த்தால் சராசரி ஆண்டு மழைப் பொழிவு 714 மி.மீ. 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் ஆண்டு சராசரியை விடக் (+75 சதவிகிதம் வரை) கூடுதலாகவே மழைபெய்துள்ளது. ஆனால் 2023-ல் பெய்த மழை அளவு 572 மி.மீ. இது சராசரி மழைப்பொழிவை விட 20 சதவிகிதம் குறைவு.
இதன்படி காவிரியில் தமிழ்நாட்டுக்கு 177.25 – டிஎம்சியில் 20 சதவிகிதம் (34.35 டிஎம்சி) குறைத்து 137.80 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட்டிருக்க வேண்டும். 
நமக்கு பில்லிகுண்டுலுவில் வந்த காவிரி நீரின் அளவோ வெறும் 78.10 டி.எம்.சி மட்டுமே. 
பொய்யான யதார்த்த கள நிலவரத்திற்கெதிராக அரசியல் நாடகமேடை நிகழ்வுகளை காவிரியில் நமக்குத் தராமலிருக்கவும் மேக்கேதாட்டூ அணையினைக் கட்டவும் அழுத்தம் தர அரங்கேற்றிவருகிறது.
 இத்தகைய பொய்ப்புனைவுப் பரப்புரைகளை வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது. 
காலதாமதமின்றி அலட்சியமாக இல்லாமல் உடனே செயற்படவேண்டும். 
அப்பொழுதுதான் நம் தமிழகத்தின் உரிமைகளைக் காத்திட முடியும். 
சட்டநடவடிக்கைகளைக் கர்நாடகா அரசு எப்போதும் சட்டை செய்வதில்லை.

எனவே இந்திய அரசியல் சட்டப் பிரிவு 365-இன்படி குடியரசுத் தலைவருக்குக் கடுமையான அழுத்தம் தரவேண்டும். 
தமிழக அரசியல் கட்சிகளும் விவசாய சங்கங்களும், காவிரி உரிமை மீட்புக்குழுவும் தங்களுக்குள்ள அரசியல் பக்திப் பரவசங்களை ஒதுக்கிவிட்டு கர்நாடகாவின் பொய்ப்பரப்புரைகளை மேற்குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மறுத்து விளக்கித் தொடர் எழுச்சிப் போராட்டங்களை நடத்திட வேண்டும்.

காவிரியிலிருந்து பெங்களூரு மாநகரத்திற்கு நாள் ஒன்றுக்கு 1450 எம்எல்டி அளவுக்குக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக காவிரி ஐந்தாம் நிலை திட்டத்திலிருந்து 750 எம்எல்டி குடிநீர் வழங்கிடப் பணிகள் நடந்துவருகின்றன. 2023-ல் பெங்களூரு மாநகரின் மக்கள் தொகை 1 கோடியே 29 லட்சம். ஓர் ஆளுக்கு, நாள் ஒன்றிற்கு 108 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. சென்னை மாநகர் (2023) மக்கள் தொகை 1 கோடியே 18 லட்சம். வழங்கப்படும் குடிநீரின் அளவு 1000 எம்.எல்.டி. 
ஓர் ஆளுக்கு, நாள் ஒன்றிற்கு 85 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது.

சென்னை மாநகரில் குடிநீர்த் தட்டுப்பாடு இருப்பதாக சென்னைக் குடிநீர் வாரியமோ செய்தி ஏடுகளோ தமிழகத் தொலைகாட்சிகளோ பரப்புரை செய்யவில்லை. ஆனால், சென்னை மக்களைவிடக் கூடுதலாகக் குடிநீர் பெறும் பெங்களூரு மாநகரில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு இருப்பதாக நாள்தோறும் பரப்புரை செய்வதை ஏன் தமிழ்நாடு அரசு மறுதலித்துப்பேசவில்லை. இதிலிருந்தே கர்நாடகா அரசு எப்படி நாடகமேடைகாட்சிகளை அரங்கேற்றுகிறது என்று தெளிவாகப் புரியும்.

நம் சென்னைக் குடிநீர் வழங்கு வாரியம் 15-03-2024-ல் வெறும் 10.11 டிஎம்சி அளவுக்குத் தண்ணீர் இருப்பை வைத்துக் கொண்டு தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாமல் வரும் 9 மாதங்களுக்கு வழங்குவோம் என்று தெரிவிக்கிறது. ஆனால் கர்நாடகா அரசோ காவிரி அணைகளில் 60 டிஎம்சி க்குமேல் தண்ணீரை இருப்பில் வைத்துக் கொண்டு பெங்களூரு மாநகரில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது என்று வேண்டுமென்றே நாடகமாடுகிறது. 

 நம் தமிழக அரசு ஏன் இதை வெளிப்படுத்தி மறுத்து அறிக்கை விடவில்லை என்பது புதிராக உள்ளது.
உண்மை நிலைமை இப்படியிருக்கும்போது செய்தி இதழ்களும் நம் ஊர் தொலைகாட்சிகளும் கூட பெங்களூருவில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கின்றன. 
இவற்றைப்பார்த்து அமெரிக்க நண்பர் இச்செய்தி உண்மையா என கேட்கிறார். 
கர்நாடகத்தின் பொய் பிரசாரங்களை தமிழக அரசு கண்டிக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது” என்றார்.
 பெங்களூரில் எங்களுடைய தொடர்பில் குடும்பத்தினர்களும் பணிபுரிபவர்களும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள்.

Also Read
மேக்கேதாட்டூ... நெருங்கிவிட்ட ஆபத்து... காவிரி ஆணையம் அனுமதி! துணைபோகிறதா தமிழக அரசு?

Also Read
மேக்கேதாட்டூ அணை விவகாரம்: அடித்து ஆடும் கர்நாடக காங்கிரஸ் அரசு... அமைதி காக்கிறதா திமுக?

Also Read
பெங்களூரு தண்ணீர் பஞ்சம்... கேவலமான அரசியல்!

Also Read
`தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர நாங்கள் முட்டாள்கள் அல்ல'-கடுகடுக்கும் சிவக்குமார், மௌனம் காக்கும் திமுக

No comments:

Post a Comment