Sunday, 31 March 2024
பெங்களூர் தண்ணீர் பஞ்சம் பொய்
Sunday, 25 December 2022
தமிழ்க் கங்கர்
Friday, 31 January 2020
பெங்களூர் எங்களூர் - 2
பெங்களூர் எங்களூர் -2
பெங்களூர் நகரை நிர்மாணித்தவர் கேம்பே கவுடா (1526 - 1574) என்பவர்.
இவர் உண்மையில் வன்னியக் கவுண்டர் ஆவார்.
கன்னடருக்கு தமிழர் என்று சொல்லவராமல் திகிளர் என்றுதான் கூறுவார்கள்.
கேம்பே கவுடா ஒரு திகிளப் பள்ளி என்று குறிக்கப்படுகிறார்.
இவர் பூர்வீகம் காஞ்சிபுரம்.
அங்கிருந்து 'முரசு ஒக்கல்' எனும் குடியினர் கன்னடநாட்டிற்கு போய் குடியமர்ந்தனர்.
இவர்கள் இன்று முரசு ஒக்கலிகர் என்று அறியப்படுகின்றனர்.
இவர்களின் குலதெய்வம் காஞ்சி காமாட்சி.
மேலும் ஒரு சான்று உள்ளது.
கேம்பே கவுடா வம்சாவழியான மும்முடி தம்மபூப்பா என்பவர் "ராஜேந்திர சோழ சரித்தா" எனும் நூல் எழுதியுள்ளார்.
[Mysore gazetteer, Vol 5, page 45, 1930.]
தென் கர்நாடகத்தின் ஆதிகுடிகளான தமிழர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழை மறந்துவிட்டனர்.
இவர்கள் திகிளர் என்றே இப்போது அழைக்கபடுகின்றனர்.
பெங்களூரில் கொண்டாடப்படும் பச்சைக் கரகத் திருவிழா இவர்கள் நடத்துவதே ஆகும்.
கைகளில் வாளேந்தி "பவளமலை எங்கள் மலைநாடே!" என்று தமிழில் பாடியவாறே பச்சைக் கரகத்தை தலையில் ஏந்துவர்.
1930 இல் பெங்களூர் மாவட்ட மக்கட்தொகை 3,07,124 ஆகும்.
இதில் திகிளர் 31,644 பேர்.
(பெங்களூர் எங்களூர் -1 இல் உள்ள வரைபடத்தை ஒருமுறை பார்க்கவும்)
1799 இல் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு ஆங்கிலேயர் கைக்கு பெங்களூர் வந்தது முதல் 1947 வரை மைசூர் அரசுக்கும் இந்த பெங்களூர் மைய நகருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
மைசூர் அரச அதிகாரம் புறநகர் பகுதியான பேட்டை வரை மட்டுமே.
மற்றபடி பெங்களூர் சென்னை மாகாணத்தின் கீழ்ஆங்கிலேயரின் நேரடி நிர்வாகத்தில் இருந்தது.
ஆம். 1809 இல் ஆங்கிலேயர்களது படைமுகாமாக பெங்களூர் தண்டு பகுதி (cantonment) இருந்தது.
1815 இல் மன்னர் எழுத்துப் பூர்வமாக இதை ஆங்கிலேய தூதமைச்சருக்கு தனிச் சொத்தாகக் கொடுத்து வரிவசூலிலும் தலையிட மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தார் (release deed).
அவ்வாறு மைசூர் மன்னர் கொடுத்தது அன்று 22 ஊர்களாக இருந்தது.
அவை
அலசூர்,
ஆடுகோடி,
செல்லகட்டா,
தொம்மளூர்,
உப்பாரப்பள்ளி,
குப்பசந்திரா,
மாவள்ளி,
குறமங்கலம்,
நீலசந்திரா,
பேடரள்ளி,
சொன்னேனள்ளி
ஆகியனவாகும்.
1881 இல் பெங்களூர் கோட்டையை மட்டும் ஆங்கிலேயர் மன்னருக்கு கொடுத்தனர்.
இதே ஆண்டில் cantonment என்று அழைக்கப்பட்டதை மாற்றி civil and military என்று பெயர் மாற்றினர்.
1906 ஆம் ஆண்டு தற்போது "இந்திய அறிவியற்கூடம் (Indian institute of science)" இருக்கும் நிலமும் சேர்க்கப்பட்டு ஆங்கிலேயரின் நேரடி ஆட்சிப்பகுதி பரப்பளவு 13.54 சதுரக்கல் (சதுரமைல்) என விரிந்தது.
ஆங்கிலேயர் தமது நிர்வாகப் பகுதியை ஆறு பிரிவுகளாக பகுத்திருந்தனர்.
அவை
1.அலசூர்
2.தென்பகுதி
3.கிழக்கு பொது அங்காடி (east general bazaar)
4.மேற்கு பொது அங்காடி (west general bazaar)
5.கிளீவ்லன்ட் நகர்
6. மேட்டுத்திடல் (high ground)
அதாவது இன்றைய பெங்களூரின்
வடக்கே பாரதி நகர்,
நடுவில் சிவன்செட்டி வட்டம்,
தெற்கே நீலசந்திரா மற்றும் ஆடுகோடி
கிழக்கே அலசூர் உட்பட்ட நிலப்பரப்பு.
இதில் தற்போதைய
தொம்மளூர்,
கப்பன் பூங்கா,
தூதமைச்சரக (residency) சாலை,
தலைமை அஞ்சலகம்,
சூளை,
ரிச்மண்ட் நகர்,
ரசல் அங்காடி,
அணிவகுப்பு திடல் (parade ground),
தூய யோவான் குன்று,
கிளீவ்லேண்ட் நகர்,
காக்ஸ் நகர்,
புகையிலைத் தொழிலகம்,
ஃபிரேசர் நகர் (பாப்பிரெட்டி பாளையம்),
பிளாக் பள்ளி,
பெங்களூர் கிழக்கு (Bangalore east),
ரிச்சர்ட் நகர்
முதலியன அடங்கும்.
மைசூர் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பேட்டை பகுதி 11 சதுரக்கல் பரப்பளவு மட்டுமே இருந்தது.
இதில் கோட்டை, சிக்கபேட்டை, தொட்டபேட்டை, சாமராஜப் பேட்டை, சங்கரபுரம், பசவன்குடி, சேசாத்திரிபுரம், மல்லேஸ்வரம், அரண்மனை ஆகியன இருந்தன.
1947 வரை தண்டுப் பகுதிக்கும் பேட்டை பகுதிக்கும் இடையில் 6 சுங்கச்சாவடிகள் இருந்தன.
அவை இன்றுள்ள
கண்டீரவா விளையாட்டரங்கம் எதிரிலும்
ஓசூர் சாலையில் உள்ள கிறித்துவர் கல்லறைக்கு அருகிலும்
ராமநாரயண் செல்லாராம் கல்லூரி மூலையிலும்
பழைய சென்னை சாலையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை பக்கத்திலும்
கன்னிங்காம் சாலையிலும்
தொம்மளூரிலும்
தலைமை அஞ்சலகம் அருகிலும்
இருந்தன.
1948 வரை தண்டு பகுதிக்கும் பேட்டை பகுதிக்கும் தனித்தனி நீதிமன்றங்கள் இருந்துள்ளன.
தண்டுப் பகுதிக்கான சிறை வேலூர் சிறைதான்.
1948 வரை இப்பகுதியில் பள்ளிகளில் கன்னடம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது.
1948 இல் மன்னர் வருகை தந்தபோது தண்டு மக்கள் மைசூர் அரசரை முதன்முதலாக பார்த்தனர்.
1950 இல் தான் தண்டு நகராட்சியும் பேட்டை நகராட்சி இணைக்கப்பட்டு பெங்களூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
அப்போதும் தமிழரே பெரும்பான்மையாக இருந்தனர்.
1956 வரை இப்பகுதி கல்வி நிர்வாகம் சென்னை பல்கலை மற்றும் சென்னை அரசிடம் இருந்து வந்தது.
1956 இல் எந்த பொருத்தமும் இல்லாமல் பெங்களூர் கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டது.
அப்போது அந்த மாநாகராட்சி எல்லைக்கும் தமிழக இல்லைக்கும் இடையே 4 கிலோமீட்டர் தொலைவுதான் இருந்தது.
நன்றி: அறிஞர் குணா அவர்கள் எழுதிய
விழுதுகள் (கட்டுரைத் தொகுப்பு)
Monday, 26 August 2019
பெங்களூர் எங்களூர் - 1
இன்று அது 1.5 கோடியைத் தாண்டும்.
ஆனால், தமிழகத் தமிழர் சிலரும் இவர்களை 'அங்கு போய் குடியேறியவர்கள்' என்று கூறுவது மன்னிக்க முடியாத வரலாற்று அறியாமை ஆகும்.
இவர்கள் அப்பகுதிகளின் பூர்வ குடிகள்தாம்.
இவர்கள்தான் பிறகு குடியேறியவர்கள்.
அதுவும் ஆங்கிலேயர்களால் இரும்புச் சுரங்களிலும், உருக்கு ஆலைகளிலும், தோட்டவேலைக்காகவும் கொண்டுசெல்லப்பட்டவர்கள்.
மேற்கண்டவர்களையும் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கூட்டங்கூட்டமாக வந்தேறி இன அடையாளத்தை மறைத்துக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழரை ஏமாற்றிவரும் தெலுங்கரையும் ஒப்பிடுவது எந்த விதத்திலும் நியாயமே இல்லை.
எடுத்துக்காட்டாக தமிழக எல்லையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ள பெங்களூர் பற்றி அறிவோம்.
என்றவாறு வாழ்ந்து வந்தனர்
[மொத்தம் 100081 பேர், தமிழர் 39079, கன்னடர் 6746].
தமிழர் 23%, கன்னடர் 31%
என வாழ்ந்துவந்தனர்
[மொத்தம் 69447 பேர், தமிழர் 15755, கன்னடர் 21936].
அல்லது இரண்டாவது பெரும்பான்மையான தெலுங்கருக்காவது போயிருக்கவேண்டும்.
வரலாற்று ரீதியில் ஆராய்ந்து அது கன்னடருக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அதுபற்றி ஆராய்வோம்.
இன்று 'எலவங்கா' என்றழைக்கப்படும் பெங்களூர் பகுதி பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழரால் உருவாகப்பட்ட 'இராசேந்திர சோழவளநாட்டின்' பிரிவுகளில் ஒன்றான 'இலைப்பாக்க நாடு' ஆகும்.
இது ஒய்சளர் காலத்தில் 'எலவக்கா' என்றாகி 'எலவங்கா' என்று திரிந்தது [4].
அப்படி கிடைத்துள்ள ஊர்களாவன
அகரம்,
ஐகண்டபுரம்,
ஆவதி,
பைச்சபுரம்,
பேகூர்,
பிண்ணமங்கலா,
தொம்மளூர்,
கங்காவரம்,
அலசூர்,
அசிகலா,
எக்குண்டா,
ஒசக்கோட்டை,
கொண்டரள்ளி,
கூடலூர்,
குப்பேப்பள்ளி,
மாகடி,
மண்குண்டா,
மண்ணே,
நந்தகுடி,
நெலமங்கலா,
திருமலை,
ஓகட்டா,
வணக்கணள்ளி,
வரநாயக்கனள்ளி.
[மேற்கண்ட ஊர்களில் நூற்றுக்கணக்கான தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
எண்ணிக்கை அடிப்படையில் பாதியளவுகூட கன்னடக் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை.
எல்லையோர மாவட்டங்கள் முழுவதுமே தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்து உள்ளன.
கிடைத்த இடங்களை வரைபடமாக ஏற்கனவே "பழைய மைசூர் மாநிலத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் (வரைபடம்)" எனும் பதிவாக இட்டுள்ளேன்.]
மேற்கண்ட ஊர்ப் பெயர்கள் தற்காலப் பெயர்கள்தாம். அதாவது திரிந்த தமிழ்ப் பெயர்கள்.
அதாவது,
'வணக்கனள்ளி' என்பது 'வண்ணக்கார பட்டணம்' [18].
பெங்களூருக்கு வடக்கே 'சோழநாயக்கனள்ளி' மற்றும் 'சோழதேவனள்ளி' ஆகிய பெயர்களுடைய பகுதிகள் உள்ளன.
சோழர் கல்வெட்டுகளை விட பழமையான ஒரு கன்னட நடுகல் கல்வெட்டு மிகவும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவந்தது.
அது மறைக்கப்பட்டிருக்க அதிகம் வாய்ப்புள்ளது.
இந்த இனவெறிப் போக்கு பற்றி ஜூனியர் விகடன் (18.06.2006), விகடன் (02.05.2013), மற்றும் தினமலர் (04.02.2018) ஆகிய பத்திரிக்கைகள் கட்டுரைகளும் வெளியிட்டுள்ளன.
நூல்: விழுதுகள் (கட்டுரைத் தொகுப்பு)
ஆசிரியர்: குணா
காலகட்டம்: 1991
வரைபடம்: பெங்களூர்
காலகட்டம்: 1914
(காண: https://vaettoli.wordpress.com/2019/08/27/பெங்களூர்-எங்களூர்-1/ )
Wednesday, 10 July 2019
கர்நாடகத் தமிழர் தோற்ற வரலாறு
பதிவர்: Paari Saalan
கோகாக் அறிக்கையும், மொழிப் படுகொலையும்:
கர்நாடக தமிழர்களின் கறுப்பு ஜூலை!
செய்தி: கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் அமைப்பினர்.
இலங்கை தமிழர்களின் சரித்திரத்தைப் போன்று கர்நாடகத் தமிழர்களின் சரித்திரத்திலும் ஒரு 'ஜூலை மாதம்' ஆறாத ரணங்களாலும், வடுக்களாலும் நிரம்பி இருக்கிறது.
34 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை மாதத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் 3 தலைமுறைகளை கடந்தும் கர்நாடக தமிழர்களின் வாழ்வில் கறுப்பு தினமாக நிலைத்திருக்கிறது.
நெடிய வரலாறு:-
1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, ஷிமோகா, பத்ராவதி, ஹூப்ளி, கொள்ளேகால் உள்ளிட்ட பல இடங்களில் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர்.
1941-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பெங்களூருவின் மொத்த மக்கள் தொகை 4 லட்சத்து 6 ஆயிரத்து760.
இதில் தமிழர்களின் மக்கள் தொகை 1 லட்சத்து 24 ஆயிரத்து 334.
ஆனால் கன்னடர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 899 மட்டுமே!
1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த பெங்களூரு மற்றும் அதனையொட்டி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பல பகுதிகள் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
இதனால் பெரும்பான்மையாக வாழும் தமிழர்களை ஒடுக்க கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியது.
1961-க்கு பிறகு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் தமிழர்களின் எண்ணிக்கை குறைத்துக்காட்டும் சதிச்செயல்களில் ஈடுபட்டது.
எனவே பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு உள்ளிட்ட இடங்களில் கணிசமாக வாழ்ந்த தமிழர்கள் மொழி சிறுபான்மையினராக ஆக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டது.
தொடக்கத்தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பெரும்பான்மையான பதவிகளை வகித்த தமிழர்கள் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேறிய நிலையில் இருந்தனர்.
சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த கன்னடர்களை முன்னேற்றுவதற்கு கர்நாடக அரசு பல திட்டங்களை செயல்படுத்த தொடங்கியது.
கன்னடர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், கன்னட மொழியை வளர்க்கவும் ஆராய்வதற்கு எழுத்தாளரும், முன்னாள் துணைவேந்தருமான வி.சி.கோகாக் தலைமையில் 1980-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி குழு ஒன்றை அமைத்தது.
குரல்வளையை நெறி
த்த கோகாக் அறிக்கை:-
கோகாக் குழு கர்நாடகாவில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சென்று ஆராய்ந்து, 1982-ம் ஆண்டு ஜூன் மாதம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
அதில்,
* கர்நாடகாவில் கன்னடத்தை ஆட்சி மொழியாக்க வெண்டும் .
* அனைத்து பள்ளிகளிலும் கன்னடத்தை கட்டாய முதல்பாடமாக்க வேண்டும்.
* மூன்றாம் மொழியாக இருக்கும் தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளை தவிர்த்து அனைவரும் சமஸ்கிருதம் மற்றும் இந்தி யை படிக்க வேண்டும்.
* கன்னடம் படித்தால் மட்டுமே அரசு வேலை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
* அரசு மற்றும் தனியார் துறைகளில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்
என வலியுறுத்தியது.
இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட குண்டுராவ் தலைமையிலான கர்நாடக அரசு உடனடியாக அமல்படுத்தப் போவதாக அறிவித்தது.
கோகாக் அறிக்கையால் தமிழ், தெலுங்கு, மராத்தி, உருது உள்ளிட்ட மொழி சிறுபான்மையினருக்கு தாய்மொழியில் கல்வி உரிமையும், வேலை வாய்ப்பு உரிமையும் பறி போனது.
எனவே கர்நாடகாவில் உள்ள தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், உருது, துளு, குடவா உள்ளிட்ட மொழி அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மொழி சிறுபான்மையினரின் குரல்வளையை நெறிக்கும் கோகாக் அறிக்கை திரும்ப பெறப்பட வேண்டும் என வலியுறுத்தின.
இதனால் ஆத்திரம் அடைந்த கன்னட அமைப்பினர் போராட்டக்காரர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தன.
பெங்களூரு, கோலார் தங்கவயல் ஆகிய இடங்களில் தமிழர்களும்...
பெல்காம், ஹூப்ளி ஆகிய
இடங்களில் மராட்டியர்களும்...
பெல்லாரி, பீஜாப்பூர் ஆகிய இடங்களில் தெலுங்கர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
தமிழ் மொழிக் கல்வியைப் பாதுகாக்க கோரியும், கோகாக்கு அறிக்கையை திரும்பப்பெறக் கோரியும் தமிழ் அமைப்புகள் 1982-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி பெங்களூருவில் மாபெரும் பேரணியை நடத்தின.
ஆயிரக்கணக்கான தமிழர்களுடன் ஊர்வலமாக சென்ற தமிழ் அமைப்பினர் அன்றைய கர்நாடக ஆளுநர் கோவிந்த் நாராயணையும், முதல்வர் குண்டுராவையும் சந்தித்து மனு அளித்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்:-
தமிழ்ப்பற்று கொளுந்து விட்டெரிந்த கோலார் தங்கவயலில் கோகாக் அறிக்கையை கண்டித்து அன்றாடம் போராட்டங்கள் வெடித்தன.
1982-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் உலக தமிழ் கழகம், தன்மான தமிழர் பேரவை, திமுக உள்ளிட்ட அமைப்புகளின் சார்பாக கோகாக் அறிக்கையை திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் பங்கேற்ற இந்த போராட்டத்தில் கோகாக் அறிக்கை தீயிட்டு கொளுத்தப்பட்டது.
இதனால் போலீஸாருக்கும் தமிழ் அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதே போல ஜூலை 5, 6, 7 ஆகிய தேதிகளில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர்.
ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்களும், தமிழ் அமைப்பினரும் இந்த போராட்டத்தில் குதித்ததால் கோலார் தங்கவயல் போர்க்களமாக மாறியது.
கன்னட திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழிக் கல்வி உரிமை கோரியும் மாரி குப்பம், சாம்பியன் ரீஃப், ஊரிகம் உள்ளிட்ட இடங்களில் தமிழ் அமைப்பினர் மாபெரும் பேரணி நடத்தினர்.
கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் கோலார் தங்கவயலே முடங்கியது.
தங்கவயல் தமிழர்களின் ஓயாத போராட்டத்தை ஒடுக்கும் வகையில் போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர்.
கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை களைத்தனர்.
சிதறி ஓடிய தமிழ் இளைஞர்களை குறி வைத்து போலீஸார் சட்டத்துக்கு விரோதமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் தங்கவயலை சேர்ந்த பரமேஸ்வரன், பால்ராஜ், மோகன், உதயகுமார் ஆகிய 4 தமிழ் இளைஞர்களும் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தாய்மொழி உரிமைக்காக போராடிய 500-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் படுகாயமடைந்தனர்.
பெங்களூருவில் சிவாஜிநகர், அல்சூர், ஸ்ரீராமபுரம் ஆகிய இடங்களில் தமிழர்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதால் வன்முறை வெடித்தது.
போலீஸாரின் சரமாரி தாக்குதலில் ஏராளமான தமிழர்கள் நையப்புடைக்கப்பட்டார்கள்.
இந்த தாக்குதலின் போது கூட்டத்தில் கலந்த கன்னட அமைப்பினரும், நடிகர் ராஜ்குமாரின் ரசிகர்களும் தமிழர்களை குறி வைத்து வேட்டையாடினர்.
பெங்களூருவில் இருந்த தமிழர்களின் கடைகள், நிறுவனங்கள், கட்டிடடங்கள், வீடுகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் சொல்லொண்னா பாதிப்புகளுக்கு ஆளான ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள்.
தாய்மொழி அறியா
தமிழ்ப்பிள்ளைகள் :-
கர்நாடக அரசு மற்றும் கன்னட அமைப்பினரின் திட்டமிட்ட ஒடுக்குமுறையால் தமிழர்கள் போராட்டத்தை கைவிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
தாய்மொழி கல்வி உரிமையையும், வேலைவாய்ப்பு உரிமையையும் இழந்து இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்பட்டனர்.
தமிழ் மொழி வழி கல்வி நிலையங்கள் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்தப்படுவதால் அவை மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.
கோகாக் அறிக்கைக்கு பிறகு கடந்த 34 ஆண்டுகளில் கர்நாடக அரசு தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை, போதிய வசதியின்மை உள்ளிட்ட காரணங்களைக் காட்டி, 75 சதவீதமான தமிழ் பள்ளிகளை மூடிவிட்டது.
தாய்மொழி கல்வியை கற்கும் வசதி இல்லாததால் லட்சக்கணக்கான தமிழர்கள் கன்னடமும், ஆங்கிலமும் கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கடந்த மூன்று தலைமுறைகளாக தமிழ் மொழி கல்வி மறுக்கப்பட்ட தமிழர்கள் இப்போது தாய்மொழி அறியா பிள்ளைகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.
திட்டமிட்ட மொழிப் படுகொலை :-
குறிப்பாக கோகாக் அறிக்கை வெளியான 1982-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த 90 சதவீதமான தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது.
கர்நாடக தமிழர்களின் மத்தியில் வீட்டில் பேசப்படும் மொழியாக தமிழ் சுருங்கிப் போயுள்ளது.
கன்னடம் மற்றும் ஆங்கில வழிக்கல்வியை கற்ற தமிழர்களின் வீடுகளில் தற்போது தமிழில் பேசும் நிலையும் மாறிவிட்டது.
தமிழ் மொழியை அறியாததால் தமிழர்கள் தங்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் இழந்து தற்போது கன்னடர்களாகவும், ஆங்கிலோ இந்தியர்களாகவும் மாறியுள்ளனர்.
பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, ஷிமோகா உள்ளிட்ட சில இடங்களில் ஓரிரு தமிழ் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
மரணிக்கும் நிலையில் உள்ள இந்த பள்ளிகளில் மிக சொற்பமான எண்ணிக்கையிலே மாணவர்கள் பயில்கின்றனர்.
பெரும்பான்மையான தமிழ் மாணவர்கள் ஆங்கில கல்விக்கு மாறிவிட்டதால், தமிழ் வேகமாக அழிந்து வருகிறது.
கிட்டத்தட்ட ஒருகோடி தமிழர்கள் வாழும் கர்நாடகாவில் ஓரிரு லட்சம் பேருக்கும் மட்டுமே தமிழ் எழுதப்படிக்க தெரியும்.
அதில் பெரும்பான்மையானவர்கள் 60 வயதை கடந்தவர்கள்.
90 சதவீதமான இளைய தலைமுறைக்கு தாய்மொழியான தமிழே தெரியாது என்ற அவலநிலையே தொடர்கிறது.
தமிழ்நாட்டில் இருந்து பிழைக்க வந்த கூலித் தொழிலாளர்களால் மட்டுமே தமிழ் மொழி ஒரளவுக்கு வாழ்கிறது.
'ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களது மொழியை அழிப்பார்கள்.
அதன்பிறகு அவர்களது வரலாற்றையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அழிப்பார்கள்.
பின்னர் அந்த சமூகம் தானாகவே அழிந்துவிடும்' என வரலாற்றியல் ஆய்வாளர்கள் சொல்வார்கள்.
கர்நாடகாவில் துப்பாக்கி தோட்டாவாலும், ஆட்சியின் அதிகார பேனா முனையாலும் தமிழ் மொழி மீது புதுவித யுத்தம் தொடங்கப்பட்டது.
கத்தியால் மக்களை கொல்லாமல், கோகாக் அறிக்கையால் தமிழர்களின் மொழி மீது மவுன படுகொலை நிகழ்த்தப்பட்டதாக தமிழ் உணர்வாளர்கள் சொல்கிறார்கள்.
தமிழக அரசு கைக்கொடுக்குமா? :-
இந்திய அரசியலமைப்பு சட்டம் தாய்மொழி கல்வி உரிமையை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுத்திருக்கிறது.
அதை கர்நாடக அரசும், தனியார் பள்ளிகளின் தலைமையும் தமிழர்களுக்கு தரமறுக்கின்றன.
கோகாக் அறிக்கையின் தாக்கம், உலகமயமாக்கலின் அசூர பாய்ச்சல் ஆகியவற்றின் காரணமாக மூன்று தலைமுறை தமிழர்கள் தாய்மொழியை கல்வி உரிமையை இழந்துள்ளனர்.
கர்நாடக கல்வித் துறையின் ஆவணங்களின்படி 1978-79 கல்வி ஆண்டில் கர்நாடகாவில் இருந்த 267 தமிழ்வழி தொடக்கப்பள்ளிகளில் 76,309 மாணவர்கள் படித்துள்ளனர்.
100 -க்கும் அதிகமான உயர்நிலை பள்ளிகளில் 13,455 மாணவர்கள் படித்துள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு தமிழ் வழி கல்வியை போதிக்க 1706 தமிழ் ஆசிரியர்கள் இருந்தனர்.
2015-16 கல்வி ஆண்டில் மொத்தம் 8.35 லட்சம் மாணவர்கள் கர்நாடகாவில் 10-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர்.
இதில் 832 மாணவர்கள் மட்டுமே தமிழில் தேர்வு எழுதியுள்ளனர் (அதாவது 35 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில் 5% கூட இல்லை).
இதே நிலை நீடித்தால் ஆப்பிரிக்க தீவுகளிலும், தென்னாப்பிரிக்காவிலும் வாழும் மொழியை இழந்த தமிழர்களைப் போல கர்நாடக தமிழர்களும் மாறிப் போய் விடுவார்கள்.
மொழிப்போர் தியாகிகளின் நினைவை அனுசரிக்கும் இந்த கறுப்பு ஜூலையில், கர்நாடகாவில் சிதறிக் கிடக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து தாய்மொழி கல்விக்காக செயலாற்ற வேண்டும்.
கருத்து மாறுபாடு, சாதி வேறுபாடு, வர்க்க பேதங்களை கடந்து தமிழர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் கைக்கோர்க்க வேண்டும்.
கர்நாடக அரசை மட்டுமே வெறுமனே குறைகூறிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டும்.
தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் தொடங்கி தெருக்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும், வழிப்பாட்டு தளங்களிலும், திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும், ஐ.டி. கம்பெனிகளிலும் தாய்மொழியான தமிழை சொல்லி தர வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்கைப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் இளைய தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்ல வேண்டும்.
கர்நாடகாவில் தமிழ் மீண்டும் தளைப்பதற்கும் தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் தாமதமின்றி நிரூற்ற வேண்டும்!
---------
மேலும் அறிய,
http://vaettoli.blogspot.com/2017/05/blog-post_3.html?m=0
கன்னடன் சுட்டுக்கொன்ற தங்கத் தமிழர்
vaettoli.blogspot.com/2017/05/blog-post_64.html
கோலார் தங்கவயல் - தமிழர் இழந்த புதையல்
vaettoli.blogspot.com/search/label/கோலார்?m=0
Thursday, 22 February 2018
பெங்களூர் உதவி
பெங்களூர் உதவி
கன்னட வாரிசு கமலஹாசன் காவிரி பிரச்சனைக்கு "உக்காந்து பேசுவோம்" என்கிறார்.
அப்படி செய்தால் கன்னடன் ரத்தத்தைக் கூட தருவானாம்.
உதாரணத்திற்கு வெள்ளதின்போது பெங்களூரில் இருந்து உதவி வந்ததைக் கூறுகிறார்.
பெங்களூர் மக்கட்தொகையில் பாதிக்குமேல் தமிழர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் அனுப்பிய உதவியை கன்னடவன் அனுப்பியதாக மலஹாசன் திரிக்கிறார்.
மேலும் பெங்களூரில் இருந்து வந்து எவனோ இரத்ததானம் செய்ததை எல்லாம் சொல்லிக்காட்டுகிறார்.
கன்னடவரிடம் அடிப்படை மனிதநேயம் கூட கிடையாது என்பது பச்சிளம் தமிழ்க் குழந்தைக்கும் தெரியும்.
மராத்தியர் ரஜினியை "ஒரு நிமிசம் தலே சுத்திருச்சு" என கழுவி கழுவி ஊற்றியது போல
இங்கே பிறந்து வளர்ந்தாலும் தன் கன்னட இனத்திற்கு உண்மையாக இருக்கும் மலஹாசனை "உக்காந்து பேசுவோம்" என வைத்துசெய்ய வேண்டுகிறேன்.
#உக்காந்து_பேசுவோம்
Sunday, 24 September 2017
பழைய மைசூர் மாநிலத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் (வரைபடம்)
தமிழ் மொழியிலான கல்வெட்டுகள் அதிகமாக பழைய மைசூர் நாட்டின் எல்லை மாவட்டங்களான கோலார்,பெங்களூரூ,மைசூரின் பகுதிகளில்,
வட-தென் பெண்ணையாறுகளின் படுக்கை பிரிவுகள் தொடங்கி தென்மேற்காக காணப்படுகின்றன.
Source:Tribes and castes of Mysore (Vol.1) by L K A Iyer
நன்றி: சிவ் விஸ்வநாதன்.
Sunday, 17 September 2017
பெங்களூர், மைசூர், கோலார் சரியான வரைபடம் (தவறுக்கு வருத்தம்)
தவறுக்கு வருந்துகிறேன்.
8 May 2017 அன்று
பெங்களூர், மைசூர், கோலார் தமிழர் பூர்வீக மண்ணே!
எனும் பதிவு இட்டிருந்தேன்.
அதில் Census of india 1901,
Volume 24, Part 1. (Page 446)
_ T. Ananda Row. தரவுகள் படி வரைந்த வரைபடத்தில் பிழை உள்ளது.
பெங்களூர் நகரம் மற்றும் மாவட்டம், கோலார் நகரம் மற்றும் மாவட்டம் குடியிருப்புகள் தமிழர் கையில் இருந்தது.
ஆனால் மைசூர் நகரம் மட்டுமே தமிழர் கையில் இருந்தது. மைசூர் மாவட்ட நிலம் நம் கைவிட்டு போயிருந்தது.
படத்தில் பெங்களூர் மாவட்டத்தை விட்டுவிட்டு மைசூர் மாவட்டத்தை தமிழர் கையிலிருந்ததாக தவறாக வரைந்துவிட்டேன்.
கீழே உள்ளதே சரியான வரைபடம்.
பழுப்பு நிறமிட்ட பகுதிகளின் குடியிருப்பு நிலம் தமிழருக்கு சொந்தமாக இருந்தது.
(Residents were tamils)
இனம் இனத்தோடு சேரும்
இனம் இனத்தோடு சேரும்
பெங்களூரில் ஒரு பேருந்து நிலையத்திற்கு ஈ.வே.ராமசாமி நாயக்கரின் பெயர் சூட்டப்படும்
கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பெங்களூர் அரசு ஊழியர்கள் மாளிகையில் 'தலித் சங்கர்ஷ சமிதி' ஏற்பாடு செய்த விழாவில் அறிவிப்பு
---------
வடுகனை வடுகனே சிறப்பிப்பதில் என்ன வியப்பு?
Monday, 8 May 2017
பெங்களூர், மைசூர், கோலார் தமிழர் பூர்வீக மண்ணே!
பெங்களூர், மைசூர், கோலார் தமிழர் பூர்வீக மண்ணே
படத்தில் 1901 ல் எடுக்கப்பட்ட மக்கட்தொகைக் கணக்கெடுப்பு விபரம் காட்டப்பட்டுள்ளது.
இதில் மைசூர் நகரம், பெங்களூர் நகரம், பெங்களூர் மாவட்டம், கோலார் தங்கவயல் நகரம், கோலார் மாவட்டம், ஆகிய பகுதிகளில் தமிழர் குடியிருப்புகளே (Residence) கன்னடரை விட அதிகம்.
ஆனால் பிறகு குடிவந்த வந்தேறிகளால் மக்கட்தொகையில் தமிழர்கள் பின்தங்கிவிட்டனர்.
ஆனால் நிலம் தமிழர்கள் கையில்தான் இருந்தது.
அட்டவணையில் உள்ள விபரம் (பத்தாயிரத்தால் வகுக்கப்பட்டது)
கீழே,
மைசூர் நகரம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 371 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 97 ×10,000
பெங்களூர் நகரம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 841 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 54 ×10,000
பெங்களூர் மாவட்டம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 2365 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 1238 ×10,000
கோலார் தங்கவயல் (நகரம்) :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 1252 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 18 ×10,000
கோலார் மாவட்டம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 2341 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 146 ×10,000
மேற்கண்ட பகுதிகள் வரைபடத்தில் பழுப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.
சான்று : Census of india 1901,
Volume 24, Part 1. (Page 446)
_ T. Ananda Row.
கீழே ஒட்டுமொத்த மக்கட்தொகை அட்டவணையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் கோலார் தங்கவயலில் மட்டுமே தமிழர் அதிகம் உள்ளனர்.
(கன்னடர், தமிழர் தவிர பிற இனங்களுக்கு இந்த பகுதியில் உரிமை இல்லை என்பதால் அவர்களை ஒப்பிடவில்லை)
---------------
17.09.2017
தவறுக்கு வருந்துகிறேன்.
மேற்கண்ட தரவுகள் படி வரைந்த வரைபடத்தில் பிழை உள்ளது.
பெங்களூர் நகரம் மற்றும் மாவட்டம் குடியிருப்புகள் தமிழர் கையில் இருந்தது.
மைசூர் நகரம் மட்டுமே தமிழர் கையில் இருந்தது. மைசூர் மாவட்ட நிலம் நம் கைவிட்டு போயிருந்தது.
படத்தில் பெங்களூர் மாவட்டத்தை விட்டுவிட்டு மைசூர் மாவட்டத்தை தமிழர் கையிலிருந்ததாக தவறாக வரைந்துவிட்டேன்.
விரிவாக அறிய
search பெங்களூர், மைசூர், கோலார் சரியான வரைபடம் (தவறுக்கு வருத்தம்)