Friday 31 January 2020

பெங்களூர் எங்களூர் - 2










பெங்களூர் எங்களூர் -2

 பெங்களூர் நகரை நிர்மாணித்தவர் கேம்பே கவுடா (1526 - 1574) என்பவர்.

 இவர் உண்மையில் வன்னியக் கவுண்டர் ஆவார்.

 கன்னடருக்கு தமிழர் என்று சொல்லவராமல் திகிளர் என்றுதான் கூறுவார்கள்.
 கேம்பே கவுடா ஒரு திகிளப் பள்ளி என்று குறிக்கப்படுகிறார்.

 இவர் பூர்வீகம் காஞ்சிபுரம்.
அங்கிருந்து 'முரசு ஒக்கல்' எனும் குடியினர் கன்னடநாட்டிற்கு போய் குடியமர்ந்தனர்.
 இவர்கள் இன்று முரசு ஒக்கலிகர் என்று அறியப்படுகின்றனர்.
 இவர்களின் குலதெய்வம் காஞ்சி காமாட்சி.

 மேலும் ஒரு சான்று உள்ளது.
கேம்பே கவுடா வம்சாவழியான மும்முடி தம்மபூப்பா என்பவர் "ராஜேந்திர சோழ சரித்தா" எனும் நூல் எழுதியுள்ளார்.
 [Mysore gazetteer, Vol 5, page 45, 1930.]

 தென் கர்நாடகத்தின் ஆதிகுடிகளான தமிழர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழை மறந்துவிட்டனர்.
 இவர்கள் திகிளர் என்றே இப்போது அழைக்கபடுகின்றனர்.
 பெங்களூரில் கொண்டாடப்படும் பச்சைக் கரகத் திருவிழா இவர்கள் நடத்துவதே ஆகும்.

 கைகளில் வாளேந்தி "பவளமலை எங்கள் மலைநாடே!" என்று தமிழில் பாடியவாறே பச்சைக் கரகத்தை தலையில் ஏந்துவர்.

 1930 இல் பெங்களூர் மாவட்ட மக்கட்தொகை 3,07,124 ஆகும்.
 இதில் திகிளர் 31,644 பேர்.

 (பெங்களூர் எங்களூர் -1 இல் உள்ள வரைபடத்தை ஒருமுறை பார்க்கவும்)

 1799 இல் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு ஆங்கிலேயர் கைக்கு பெங்களூர் வந்தது முதல் 1947 வரை மைசூர் அரசுக்கும் இந்த பெங்களூர் மைய நகருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
 மைசூர் அரச அதிகாரம் புறநகர் பகுதியான பேட்டை வரை மட்டுமே.
 மற்றபடி பெங்களூர் சென்னை மாகாணத்தின் கீழ்ஆங்கிலேயரின் நேரடி நிர்வாகத்தில் இருந்தது.

 ஆம். 1809 இல் ஆங்கிலேயர்களது படைமுகாமாக பெங்களூர் தண்டு பகுதி (cantonment) இருந்தது.

 1815 இல் மன்னர் எழுத்துப் பூர்வமாக இதை ஆங்கிலேய தூதமைச்சருக்கு தனிச் சொத்தாகக் கொடுத்து வரிவசூலிலும் தலையிட மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தார் (release deed).

 அவ்வாறு மைசூர் மன்னர் கொடுத்தது அன்று 22 ஊர்களாக இருந்தது.
 அவை
அலசூர்,
ஆடுகோடி,
செல்லகட்டா,
தொம்மளூர்,
உப்பாரப்பள்ளி,
குப்பசந்திரா,
மாவள்ளி,
குறமங்கலம்,
நீலசந்திரா,
பேடரள்ளி,
சொன்னேனள்ளி
ஆகியனவாகும்.

 1881 இல் பெங்களூர் கோட்டையை மட்டும் ஆங்கிலேயர் மன்னருக்கு கொடுத்தனர்.
 இதே ஆண்டில் cantonment என்று அழைக்கப்பட்டதை மாற்றி civil and military என்று பெயர் மாற்றினர்.

 1906 ஆம் ஆண்டு தற்போது "இந்திய அறிவியற்கூடம் (Indian institute of science)" இருக்கும் நிலமும் சேர்க்கப்பட்டு ஆங்கிலேயரின் நேரடி ஆட்சிப்பகுதி பரப்பளவு 13.54 சதுரக்கல் (சதுரமைல்) என விரிந்தது.

 ஆங்கிலேயர் தமது நிர்வாகப் பகுதியை ஆறு பிரிவுகளாக பகுத்திருந்தனர்.
அவை
1.அலசூர்
2.தென்பகுதி
3.கிழக்கு பொது அங்காடி (east general bazaar)
4.மேற்கு பொது அங்காடி (west general bazaar)
5.கிளீவ்லன்ட் நகர்
6. மேட்டுத்திடல் (high ground)

 அதாவது இன்றைய பெங்களூரின்
வடக்கே பாரதி நகர்,
நடுவில் சிவன்செட்டி வட்டம்,
தெற்கே நீலசந்திரா மற்றும் ஆடுகோடி
கிழக்கே அலசூர் உட்பட்ட நிலப்பரப்பு.

 இதில் தற்போதைய
தொம்மளூர்,
கப்பன் பூங்கா,
தூதமைச்சரக (residency) சாலை,
 தலைமை அஞ்சலகம்,
சூளை,
ரிச்மண்ட் நகர்,
ரசல் அங்காடி,
அணிவகுப்பு திடல் (parade ground),
 தூய யோவான் குன்று,
 கிளீவ்லேண்ட் நகர்,
காக்ஸ் நகர்,
புகையிலைத் தொழிலகம்,
ஃபிரேசர் நகர் (பாப்பிரெட்டி பாளையம்),
பிளாக் பள்ளி,
பெங்களூர் கிழக்கு (Bangalore east),
ரிச்சர்ட் நகர்
முதலியன அடங்கும்.

 மைசூர் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பேட்டை பகுதி 11 சதுரக்கல் பரப்பளவு மட்டுமே இருந்தது.
 இதில் கோட்டை, சிக்கபேட்டை, தொட்டபேட்டை, சாமராஜப் பேட்டை, சங்கரபுரம், பசவன்குடி, சேசாத்திரிபுரம், மல்லேஸ்வரம், அரண்மனை ஆகியன இருந்தன.

 1947 வரை தண்டுப் பகுதிக்கும் பேட்டை பகுதிக்கும் இடையில் 6 சுங்கச்சாவடிகள் இருந்தன.
 அவை இன்றுள்ள
கண்டீரவா விளையாட்டரங்கம் எதிரிலும்
 ஓசூர் சாலையில் உள்ள கிறித்துவர் கல்லறைக்கு அருகிலும்
ராமநாரயண் செல்லாராம் கல்லூரி மூலையிலும்
 பழைய சென்னை சாலையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை பக்கத்திலும்
 கன்னிங்காம் சாலையிலும்
 தொம்மளூரிலும்
தலைமை அஞ்சலகம் அருகிலும்
 இருந்தன.

  1948 வரை தண்டு பகுதிக்கும் பேட்டை பகுதிக்கும் தனித்தனி நீதிமன்றங்கள் இருந்துள்ளன.
 தண்டுப் பகுதிக்கான சிறை வேலூர் சிறைதான்.

 1948 வரை இப்பகுதியில் பள்ளிகளில் கன்னடம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது.

 1948 இல் மன்னர் வருகை தந்தபோது தண்டு மக்கள் மைசூர் அரசரை முதன்முதலாக பார்த்தனர்.

 1950 இல் தான் தண்டு நகராட்சியும் பேட்டை நகராட்சி இணைக்கப்பட்டு பெங்களூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
 அப்போதும் தமிழரே பெரும்பான்மையாக இருந்தனர்.

 1956 வரை இப்பகுதி கல்வி நிர்வாகம் சென்னை பல்கலை மற்றும் சென்னை அரசிடம் இருந்து வந்தது.

 1956 இல் எந்த பொருத்தமும் இல்லாமல் பெங்களூர் கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டது.
 அப்போது அந்த மாநாகராட்சி எல்லைக்கும் தமிழக இல்லைக்கும் இடையே 4 கிலோமீட்டர் தொலைவுதான் இருந்தது.

 நன்றி: அறிஞர் குணா அவர்கள் எழுதிய
விழுதுகள் (கட்டுரைத் தொகுப்பு)






1 comment:

  1. தமிழகத்தில் ஆங்கிலேயரின் கண்டோன்மென்ட் நிலங்கள் எங்கெல்லாம் உள்ளது

    ReplyDelete