Thursday 6 February 2020

குற்றாலநாதர் கோவிலுக்கு இசுலாமியர்கள் அளித்த கொடை














குற்றாலநாதர் கோவிலுக்கு இசுலாமியர்கள் அளித்த கொடை

 தர்கா மற்றும் பள்ளிவாசல் போன்ற இசுலாமிய வழிபாட்டுத் தளங்களுக்கு சோழர், பாண்டியர், நாயக்கர், சேதுபதி என ஏறத்தாழ எல்லா மன்னர்களும் கொடையளித்துள்ளனர்.

 பொதுமக்களும் கூட பல திருப்பணிகள் செய்துள்ளனர்.

 இதுபோல இசுலாமியர் ஏதேனும் ஒரு கோவிலுக்கு கொடையளித்த நிகழ்வு உண்டா?!

 ஏனில்லை?!

 தென்காசி இசுலாமியர்கள் குற்றாலநாதர் கோவிலுக்கு அளித்த கொடை நிகழ்வு உண்டு.

 திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சேர்ந்த அகமதுபேட்டை முஸ்லீம்கள் தாங்கள் வாணிகம் செய்யும் ஊர்களில், குற்றால நாதர் நித்திய பூசைக்கு மகமைப் பணம் கொடுக்க (கி.பி. 1788ல்) இணங்கி எழுதிய பட்டயம் வருமாறு....

 "சாலிவாகன சகாப்தம் 1710 ம் வருடம் செல்லா நின்ற கொல்லம் 964 ஆண்டு லேக வருடம் கார்த்திகை மாதம் 25 ம் தேதி குற்றாலநாத சுவாமி கட்டளைக்கு அசரது வாவா சாயபு அகமது பேட்டை மணியம் இஸ்மாயில் ராவுத்தன் முதலான பலரும் எழுதிக் கொடுத்தபடி பட்டயமாவது சுவாமிக்கு நித்திய விழா பூஜையில் கட்டளை வைத்துவரும்படி படித்தரப் படிக்கி, நடத்திவரும் வகைக்கு, நாங்கள் எல்லோரும் வகை வைத்துக் கொடுத்து ஏறு காற்று, இறங்கு காற்று வாகைச்சை ஒன்றுக்கு, மருவுருட் சட்டை ஒன்றுக்கு கால் மாகாணிப் பணம் வீதமும் நடையொற்றுக்கு மாகாணி பணம் வீதமும் இன்னொன்றுக்கு அரை மாகாணி வீதமும் இந்தப்படிக்கு திருநெல் வேலி காந்திமதியம்மன் சிறுகால மகிமை காந்திமதி மகிமைப் படிக்கு தென்காசி ஆமது பேட்டையில் உள்ள வனிதசேகர செங்கோட்டை, புலியறை, பண்புளி, கடையநல்லூர், சிவராமப் பேட்டை, சுரண்டைச் சந்தை, முதலான துறையிலும் மகமை வைத்துக் கொடுத்தபடியினாலே மாசம் மாசம் உள்ள பணத்தை வாணிபம் கணக்குப் பார்த்து வாங்கிக்கொண்டு சுவாமிக்கு கட்டளை என்றென்றைக்கும் நடத்தி வருவோமாகவும்..."

[ செப்பு பட்டயம் எண்: A.R. No.43 of 1946 ]

நன்றி: முஸ்லிம்களும் தமிழகமும் (நூல்)

No comments:

Post a Comment