Showing posts with label நல்லிணக்கம். Show all posts
Showing posts with label நல்லிணக்கம். Show all posts

Friday, 22 December 2023

ஆற்காடு நவாபு விநாயகர் கோவிலுக்கு அளித்த தானம்

சென்னைக்கு அருகில் உள்ள ஆற்காட்டை தலைநகராகக் கொண்ட இஸ்லாமியர்களான நவாப்புகள், கர்நாடக பகுதிகளை, 1690 முதல் 1801 வரை ஆண்டனர். நவாப்புகளில் பலர் மத அடையாளங்களைக் கடந்த மனிதநேயர்களாக இருந்துள்ளனர்.
அவர்கள், அனைத்து மதத்தினரின் வழிபாட்டு உரிமைகளையும் மதித்ததுடன், அரசின் சார்பில் வழிபாட்டு சடங்குகளுக்கு உதவிகளையும் செய்தனர்.
அந்த வகையில், திருநெல்வேலி குறவர் தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நித்திய அபிேஷகம், நைவேத்தியம் செய்ய லாலுகான் சாய்பு, தான அறக்கட்டளை நிறுவியதும், அசாது வால சாய்பு, இஸ்மாலி ராவுத்தர் ஆகியோர், குற்றாலநாதர் கோவிலுக்கு நித்திய பூஜைக்காக தானமளித்த செய்திகள், ஏற்கனவே கிடைத்த செப்பேடுகள் வாயிலாக தெரியவந்தன.
இந்நிலையில், ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் கிடைத்துள்ள செப்பு பட்டயங்கள், 1774ல் வெட்டப்பட்டுள்ளன.
அதில், ராச மானியார் அசாது நவாப்பு என்பவருக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, கோவிலின் அருகில் உள்ள கிராம மக்கள், கோவில்களுக்கு தானம் அளித்துள்ளனர்.
அதாவது, ஆயிரத்தெண் விநாயகர் கோவிலின் பூஜைக்கும், மாறமங்கலத்தில் உள்ள சந்திரசேகர சுவாமி கோவிலின் திருப்பணிக்கும் தானியங்களையும், நிலத்தையும் தானமளித்து, அதற்கான தர்மக்கட்டளையை நிறுவியுள்ளனர்.
அதாவது, அரசுக்கு சேர வேண்டிய வரியின் ஒரு பகுதியை, ஆட்சியாளரின் பெயரில், கோவிலுக்கு வழங்க, முஸ்லிம் ஆட்சியாளர்கள் முன்வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

22.12.2023 தினமலர் செய்தி 

Thursday, 6 February 2020

குற்றாலநாதர் கோவிலுக்கு இசுலாமியர்கள் அளித்த கொடை














குற்றாலநாதர் கோவிலுக்கு இசுலாமியர்கள் அளித்த கொடை

 தர்கா மற்றும் பள்ளிவாசல் போன்ற இசுலாமிய வழிபாட்டுத் தளங்களுக்கு சோழர், பாண்டியர், நாயக்கர், சேதுபதி என ஏறத்தாழ எல்லா மன்னர்களும் கொடையளித்துள்ளனர்.

 பொதுமக்களும் கூட பல திருப்பணிகள் செய்துள்ளனர்.

 இதுபோல இசுலாமியர் ஏதேனும் ஒரு கோவிலுக்கு கொடையளித்த நிகழ்வு உண்டா?!

 ஏனில்லை?!

 தென்காசி இசுலாமியர்கள் குற்றாலநாதர் கோவிலுக்கு அளித்த கொடை நிகழ்வு உண்டு.

 திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சேர்ந்த அகமதுபேட்டை முஸ்லீம்கள் தாங்கள் வாணிகம் செய்யும் ஊர்களில், குற்றால நாதர் நித்திய பூசைக்கு மகமைப் பணம் கொடுக்க (கி.பி. 1788ல்) இணங்கி எழுதிய பட்டயம் வருமாறு....

 "சாலிவாகன சகாப்தம் 1710 ம் வருடம் செல்லா நின்ற கொல்லம் 964 ஆண்டு லேக வருடம் கார்த்திகை மாதம் 25 ம் தேதி குற்றாலநாத சுவாமி கட்டளைக்கு அசரது வாவா சாயபு அகமது பேட்டை மணியம் இஸ்மாயில் ராவுத்தன் முதலான பலரும் எழுதிக் கொடுத்தபடி பட்டயமாவது சுவாமிக்கு நித்திய விழா பூஜையில் கட்டளை வைத்துவரும்படி படித்தரப் படிக்கி, நடத்திவரும் வகைக்கு, நாங்கள் எல்லோரும் வகை வைத்துக் கொடுத்து ஏறு காற்று, இறங்கு காற்று வாகைச்சை ஒன்றுக்கு, மருவுருட் சட்டை ஒன்றுக்கு கால் மாகாணிப் பணம் வீதமும் நடையொற்றுக்கு மாகாணி பணம் வீதமும் இன்னொன்றுக்கு அரை மாகாணி வீதமும் இந்தப்படிக்கு திருநெல் வேலி காந்திமதியம்மன் சிறுகால மகிமை காந்திமதி மகிமைப் படிக்கு தென்காசி ஆமது பேட்டையில் உள்ள வனிதசேகர செங்கோட்டை, புலியறை, பண்புளி, கடையநல்லூர், சிவராமப் பேட்டை, சுரண்டைச் சந்தை, முதலான துறையிலும் மகமை வைத்துக் கொடுத்தபடியினாலே மாசம் மாசம் உள்ள பணத்தை வாணிபம் கணக்குப் பார்த்து வாங்கிக்கொண்டு சுவாமிக்கு கட்டளை என்றென்றைக்கும் நடத்தி வருவோமாகவும்..."

[ செப்பு பட்டயம் எண்: A.R. No.43 of 1946 ]

நன்றி: முஸ்லிம்களும் தமிழகமும் (நூல்)