Monday 26 August 2019

பெங்களூர் எங்களூர் - 1

பெங்களூர் எங்களூர் -1
1981 இல் கர்நாடகாவில் வாழும் தமிழர் எண்ணிக்கை 90லட்சம் ஆகும் [1].
இன்று அது 1.5 கோடியைத் தாண்டும்.
இவர்கள் கன்னடர்களின் பார்வையில் வந்தேறிகள் என்று இருப்பதுகூட பரவாயில்லை
ஆனால், தமிழகத் தமிழர் சிலரும் இவர்களை 'அங்கு போய் குடியேறியவர்கள்' என்று கூறுவது மன்னிக்க முடியாத வரலாற்று அறியாமை ஆகும்.
1991 இல் ஏறத்தாழ ஒரு கோடித் தமிழர்கள் தமிழகத்தின் எல்லையை ஒட்டிய பெங்களூர், கோலார் தங்கவயல், குடகு, பெல்லாரி, கொள்ளேகால் போன்ற பகுதிகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் அப்பகுதிகளின் பூர்வ குடிகள்தாம்.
இவர்கள் தவிர பத்திராவதி, சிவமுகா, சித்திர துர்கம், சிக்கமளூர் போன்ற பகுதிகளிலும் தமிழர்கள் உண்டு.
இவர்கள்தான் பிறகு குடியேறியவர்கள்.
அதுவும் ஆங்கிலேயர்களால் இரும்புச் சுரங்களிலும், உருக்கு ஆலைகளிலும், தோட்டவேலைக்காகவும் கொண்டுசெல்லப்பட்டவர்கள்.
இவர்கள் இன்னமும் தமிழர் என்ற அடையாளத்துடன் கர்நாடக கடலில் பண்பாட்டுத் தீவுகளாக தனித்து வாழ்ந்துவருகின்றனர்.

மேற்கண்டவர்களையும் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கூட்டங்கூட்டமாக வந்தேறி இன அடையாளத்தை மறைத்துக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழரை ஏமாற்றிவரும் தெலுங்கரையும் ஒப்பிடுவது எந்த விதத்திலும் நியாயமே இல்லை.

எடுத்துக்காட்டாக தமிழக எல்லையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ள பெங்களூர் பற்றி அறிவோம்.
1891 இல் பெங்களூர் மைய நகர் (cantonment அல்லது civil and military பகுதி) தமிழர் 39%, கன்னடர் 6.7%, 
என்றவாறு வாழ்ந்து வந்தனர்
[மொத்தம் 100081 பேர், தமிழர் 39079, கன்னடர் 6746].
ஆனால் மைய நகருக்கு வெளியே பேட்டைப் பகுதியில் (pettah அல்லது city பகுதி)
தமிழர் 23%, கன்னடர் 31%
என வாழ்ந்துவந்தனர்
  [மொத்தம் 69447 பேர், தமிழர் 15755, கன்னடர் 21936].
அதாவது பெங்களூர் நகரை கட்டி அதில் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தது தமிழரே!
கன்னடர் அந்நகருக்கு வெளிப்புறத்தில் குடியேறி தமிழரை விட சிறிது அதிகமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இரண்டு பகுதிகளையும் சேர்த்து பார்த்தாலும் தமிழரே அதிகம்.
1911 இல் பெங்களூர் மொத்தமும் சேர்த்து பார்க்கும்போது தமிழர் 32%, கன்னடர் 17% என்றே வரும் (தெலுங்கர் 25%).
இந்த முக்கியமான பெருநகரத்தைத் தமிழகத்துடன் சேர்க்காமல் கன்னடருக்கு வாரிக் கொடுத்துவிட்டது ஹிந்திய அரசு.
மக்கட்தொகை அடிப்படையில் தமிழருக்கு வந்திருக்கவேண்டும்.
அல்லது இரண்டாவது பெரும்பான்மையான தெலுங்கருக்காவது போயிருக்கவேண்டும்.
வரலாற்று ரீதியில் ஆராய்ந்து அது கன்னடருக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அதுபற்றி ஆராய்வோம்.
பெங்களூர் மாவட்டத்தின் ஒசக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகள் கி.பி 997 இல் பல்லவரிடம் இருந்து சோழ அரசன் இராராசதேவனால் வெல்லப்பட்டது [2].
பெங்களூர் மாவட்டத்தின் மாகடி பட்டணத்தை 1139 ஆம் ஆண்டு நிறுவியது சோழர்களே! [3].

இன்று 'எலவங்கா' என்றழைக்கப்படும் பெங்களூர் பகுதி பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழரால் உருவாகப்பட்ட 'இராசேந்திர சோழவளநாட்டின்' பிரிவுகளில் ஒன்றான 'இலைப்பாக்க நாடு' ஆகும்.
இது ஒய்சளர் காலத்தில் 'எலவக்கா' என்றாகி 'எலவங்கா' என்று திரிந்தது [4].
பெங்களூர் மாவட்டத்தில் உள்ள 'தோட்டபல்லாபூர்' பண்டைநாளில் 'காடனூர் எழுபது' என்கிற பெயரில் வழங்கி வந்தது [5].
மைசூர் மாவட்டத்தின் 'தலைக்காடு' பகுதியை ஆண்டுவந்த கங்கர்கள் தமிழே பேசிவந்ததால் 'தமிழ்க் கங்கர்' எனப்பட்டனர் [6].
பெங்களூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
அப்படி கிடைத்துள்ள ஊர்களாவன
அகரம்,
ஐகண்டபுரம்,
ஆவதி,
பைச்சபுரம்,
பேகூர்,
பிண்ணமங்கலா,
தொம்மளூர்,
கங்காவரம்,
அலசூர்,
அசிகலா,
எக்குண்டா,
ஒசக்கோட்டை,
கொண்டரள்ளி,
கூடலூர்,
குப்பேப்பள்ளி,
மாகடி,
மண்குண்டா,
மண்ணே,
நந்தகுடி,
நெலமங்கலா,
திருமலை,
ஓகட்டா,
வணக்கணள்ளி,
வரநாயக்கனள்ளி.

[மேற்கண்ட ஊர்களில் நூற்றுக்கணக்கான தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
எண்ணிக்கை அடிப்படையில் பாதியளவுகூட கன்னடக் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை.
எல்லையோர மாவட்டங்கள் முழுவதுமே தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்து உள்ளன.
கிடைத்த இடங்களை வரைபடமாக ஏற்கனவே "பழைய மைசூர் மாநிலத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் (வரைபடம்)" எனும் பதிவாக இட்டுள்ளேன்.]

மேற்கண்ட ஊர்ப் பெயர்கள் தற்காலப் பெயர்கள்தாம். அதாவது திரிந்த தமிழ்ப் பெயர்கள்.
அதாவது,
அகரம் அருகேயுள்ள 'இப்பலூர்' உண்மையில் 'இருவுளியூர்' ஆகும் [7].
'ஐகண்டபுரம்' உண்மையில் 'ஐவர்கண்டபுரம்' ஆகும் [8].
'ஆவதி' உண்மையில் 'ஆகுதி' ஆகும் [9].
'பிண்ணமங்கலா' உண்மையில் 'விண்ணமங்கலம்' ஆகும் [10].
'தொம்மளூர்' உண்மையில் 'தும்பளூர்' ஆகும் [11].
'காண்கானள்ளி' உண்மையில் 'காணிக்காரன்பள்ளி'  [12].
'கூடலூர்' கல்வெட்டில் 'இராசராச சதுர்வேதி மங்கலம்' என்று குறிக்கப்பட்டுள்ளது  [13].
'மாலூர் பட்டணம்' கல்வெட்டில் 'நிகரிலி சோழபுரம்' என்று குறிக்கப்பட்டுள்ளது  [14].
'மண்குண்டா' என்பது உண்மையில் 'மணலூர்'  [15].
'மண்ணே' என்பது 'மண்ணைநாடு'  [16].
'நந்தகுடி' என்பது 'நொந்தகுழி'  [17].
'மடவாளம்' என்பது 'மடவளாகம்',  'ஓகட்டா' என்பது 'ஓவட்டம்' அதேபோல்
'வணக்கனள்ளி' என்பது 'வண்ணக்கார பட்டணம்' [18].
பெங்களூர் பகுதி கல்வெட்டில் 'விக்கிரமசோழ மண்டலம்' என்ற பெயரில் குறித்துள்ளனர்  [19].
இன்றும் பெங்களூரில் 'கங்கைகொண்ட சோழனள்ளி' உண்டு.
பெங்களூருக்கு வடக்கே 'சோழநாயக்கனள்ளி' மற்றும் 'சோழதேவனள்ளி' ஆகிய பெயர்களுடைய பகுதிகள் உள்ளன.
இன்று கன்னடருக்கு ஆதரவாக
சோழர் கல்வெட்டுகளை விட பழமையான ஒரு கன்னட நடுகல் கல்வெட்டு மிகவும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவந்தது.
அதைவிடவும் பழமையான தமிழ்க் கல்வெட்டு கிடைக்காமல் இருந்திருக்காது.
அது மறைக்கப்பட்டிருக்க அதிகம் வாய்ப்புள்ளது.
  மைசூரில் தென்னிந்திய கல்வெட்டுத் துறை தலைமைச் செயலகம் இருப்பதால் அங்கு பல தமிழ்க் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த இனவெறிப் போக்கு பற்றி ஜூனியர் விகடன் (18.06.2006), விகடன் (02.05.2013), மற்றும் தினமலர் (04.02.2018) ஆகிய பத்திரிக்கைகள் கட்டுரைகளும் வெளியிட்டுள்ளன.
[1] தமிழும் தமிழரும், முனைவர் ந. கடிகாசலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1982, பக் 27.
[2 - 19] Mysore Gazetteer, Vol V, ed., C.Hayavadana Rao, 1930, pp 38-39, 342, 39, 369, 76-77, 86, 168, 94, 189, 194, 38-39, 202-03, 205, 239 land 39.
பெரும்பான்மையான தகவல்களுக்கு நன்றி,
நூல்: விழுதுகள் (கட்டுரைத் தொகுப்பு)
ஆசிரியர்: குணா
காலகட்டம்: 1991

வரைபடம்: பெங்களூர்
காலகட்டம்: 1914
(காண: https://vaettoli.wordpress.com/2019/08/27/பெங்களூர்-எங்களூர்-1/ )
அடுத்த பகுதி விரைவில்...


Saturday 24 August 2019

திருநெல்வேலி வரை தெலுங்கர்

திருநெல்வேலி வரை தெலுங்கர்

தெலுங்கரின் திட்டமிட்ட குடியேற்றம் ஆந்திரத்துக்கு அண்மையில் உள்ள எல்லை மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டம் வரை நடந்துவந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் 1881 லேயே அதன் மக்கட்தொகையில் 15% வந்தேறிகள்.
அவர்களில் தெலுங்கர் 8.6% இருந்துள்ளனர்.
(இவர்களில் பெரும்பாலோர் கம்மா ஆவர்).

இது அம்மாவடத்தில் தமிழ்ச் சாதிகளில் எந்தவொரு பெரிய சாதிக்கும் சளைக்காத எண்ணிக்கை ஆகும்.
அன்றைய நிலையில் திருநெல்வேலியில் தமிழ்ச் சாதியினர்
சாணார் 13.7%
பள்ளர் 11.1%
மறவர் 9.1%
வேளாளர் 8.2%
பறையர் 5.6%
இடையர் 5.3%
கம்மாளர் 4%
என்றவாறு இருந்தனர்.

வடக்கில் கோவை மாவட்டமே தெலுங்கர் குடியேற்றத்திற்கு அதிகம் இலக்காகி உள்ளது.
1921 லேயே மக்கட்தொகையில் 15% தெலுங்கர் இருந்துள்ளனர்.
(இவர்களில் மிகப் பெரும்பாலோர் சக்கிலியர் ஆவர்).

இதற்கு இணையானது சென்னை.
1961 நிலவரப்படி சென்னை மக்கட்தொகையில் 14.1% தெலுங்கர் ஆவர்.

1965 வாக்கில் இந்தியாவில் தெலுங்கு இனத்தின் 18% மக்கள் (67 லட்சம்) ஆந்திராவுக்கு வெளியே வாழ்ந்துவந்தனர்.
இதில் ஏறத்தாழ 9% (34 லட்சம்) மக்கள் தமிழகத்தில் குடியேறியுள்ளனர்.

அதாவது சுருக்கமாகக் கூறினால் தெலுங்கரில் பத்தில் ஒருவர் தமிழகத்தில் இருக்கிறார்.

இதன் பிறகுதான் திராவிடம் ஆட்சிக்கு வருகிறது!

தமிழகத்தில் தெலுங்கு வந்தேறிகளின் குடியேற்றமும் பொற்காலமும் உச்சத்திற்கு சென்றது.

என்றால் தற்போதைய நிலையை யூகியுங்கள்!

(புள்ளிவிபரங்கள் அறிஞர் குணா எழுதிய "விழுதுகள்" நூலில் இருந்து எடுக்கபெற்றன)

வரைபடம்
https://vaettoli.wordpress.com/2019/08/24/திருநெல்வேலி-வரை-தெலுங்க/

Saturday 3 August 2019

மூன்று லட்சங்கோடி கொள்ளை

மூன்று லட்சங்கோடி கொள்ளை

ஓராண்டுக்கு ஏறத்தாழ "3 லட்சம் கோடி" ரூபாயை தமிழகத்திடம் கொள்ளை அடிக்கிறது மத்திய அரசு
- தமிழ்தேசிய பேரியக்கம் அறிக்கை

இந்த "3 லட்சங்கோடி" என்பது எவ்வளவு?!

இந்தியாவின் முதல் பணக்காரனான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பே "3.8 லட்சங்கோடி" தான்.

இந்த பணத்தை ஒவ்வொரு ரூபாயாக மாற்றி தரையில் ஒன்றன்பின் ஒன்றாக நிற்கவைத்துக் கொண்டே போனால் இந்த உலகத்தை கிட்டத்தட்ட 74 முறை சுற்றி வரலாம்.

ஒவ்வொரு தமிழக குடிமகன் தலையிலும் 40,000 ரூபாய் கடன் உள்ளது.
அப்படியாக தமிழக அரசின் மொத்த கடனே "3.2 லட்சங்கோடி" தான்.

என்றால் தமிழகத்தில் குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வொருவரிடம் இருந்தும் மத்திய அரசு ஆண்டுக்கு 37,000 ரூபாய் கொள்ளை அடித்து செல்கிறது.

இதற்கு பதிலாக நமக்கு என்ன லாபம் கிடைக்கிறது?!

லாபத்தை விடுங்கள்.

உணவுக்கு தேவையான தண்ணீர் கூட நமக்கு கிடைப்பதில்லை.

கடலில் நம் உயிருக்கு பாதுகாப்பு கூட இல்லை.

இதையெல்லாம் விட நம் மண்ணை அழிக்கும் திட்டங்களும் வரவுள்ளன?!

ஆங்கிலேயர் இந்தியாவிடம் இருந்து 1765 முதல் 1938 வரை அடித்த மொத்த கொள்ளையே "3.2 லட்சங்கோடி" தான்!

1947 இல் பிரிட்டிஷ் அரசிடம் இந்திய அரசு கேட்ட நட்ட ஈடு "3.37 லட்சங்கோடி" தான்!

(ஒப்பீட்டுக்காக அப்போது இந்தியாவின் தனிமனித வருமானம் ரூ.200
இப்போது அது ரூ.10,500)

இத்தனை பெரிய தொகையை தமிழக மாநிலத்தில் இருந்து ஹிந்தியா ஆண்டுக்கு ஒருமுறை கொள்ளையிட்டு செல்கிறது.

அன்று ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து இந்தியா விடுதலை கேட்டது சரி என்றால்
இப்போது நாம் இந்திய ஆட்சியிலிருந்து விடுதலை கேட்பதும் சரியே!

தனிநாடு ஒன்றே தீர்வு!