Showing posts with label பதிலடி. Show all posts
Showing posts with label பதிலடி. Show all posts

Thursday, 4 July 2024

என்னடா ஆர் எஸ் பாரதி நாயே

#ஆர்_எஸ்_பாரதி_நாயே

என்னடா! ஆர்.எஸ்.பாரதி நாயே!

14.02.2020 அன்று நீ பேசியது..
 "மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதிகூட இல்லை.
 ஆனால், தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு, வரதராஜனை உட்கார வைத்தார். 
அதன் பின்னர் ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்த ஏழெட்டுப் பேர் நீதிபதிகளாக இருந்தார்கள் என்றால் அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை!" 

 கூறியதும் பொய்! கூறிய விதமும் திமிரானது!
இதற்காக உன்னைப் போட்டு செய்கை செய்ததில் மூன்றே நாட்களில்..

17.02.2020 அன்று கதறியபடி நீ பதிவிட்டது...  
"அன்று நான் எமோஷனலாகப் பேசிவிட்டேன். 
என் தலைவரையும், பெரியாரையும் பற்றி ஹெச்.ராஜா மரியாதை இல்லாமல் பேசியதைப் பார்த்த கோபத்தில் இருந்தேன்.
 அதனால்தான் அந்தத் தவறு நடந்துவிட்டது.
என்னுடைய நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதைப் புண்படுத்துவது அல்ல. கலைஞர் அம்மக்களுக்காகச் செய்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறுவதே ஆகும்''

 தற்போது மீண்டும் கொழுப்பேறி நீ பேசியிருப்பது...
"திராவிட இயக்கம் இல்லையென்றால், கம்யூனல் அரசாணை இல்லை என்று சொன்னால், இத்தனை பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்க முடியாது.
நான் பட்டம் பெறும் காலத்தில் ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி மாட்டுவார்கள். காரணம் என்னவென்றால், அந்த ஊரிலேயே ஒரே ஒரு பி.ஏ. தான் இருக்கும். 
ஆனால், இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில்."
 இந்த முறையும் நீ குரைத்தது பொய்! குரைத்த விதமும் வெறித்தனமானது!

 எத்தனை நாட்களில் மன்னிப்பு கேட்கிறாய் என்று பார்ப்போமா?! 

Sunday, 18 February 2024

வந்தேறிகளின் நீலிக்கண்ணீர்

வந்தேறிகளின் நீலிக்கண்ணீர் 

 தமிழர்கள் வந்தேறிகளின் சதியை உணர்ந்து குரல் எழுப்பினால் உடனே நீலி கண்ணீர் வடித்துக் கொண்டு வந்தேறிகள் உருட்டும் வழக்கதான உருட்டுகள் மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளன 

 முதலாக தமிழ்நாடு என்று நாடே இல்லை மூவேந்தர்கள் ஒற்றுமையாக இல்லை என்கிற ஒரு உருட்டு.  இதை இலக்கியச் சான்றுகளுடன் கல்வெட்டு சான்றுகளுடன் முறியடித்துவிட்டோம்.
 இலக்கியத்தில் தமிழரின் நிலம் தமிழ்நாடு என்று மொழியின் பெயரால் நாடாகவே குறிக்கப்பட்டுள்ளது.
 அதன் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன.
 அதேபோல தமிழ் இனமும் அதன் பண்புகளும் குறிக்கப்பட்டுள்ளன.
 மூவேந்தர்களும் மௌரியர் படையெடுப்பில் கரிகாலனின் தந்தை தலைமையில் தமிழர் கூட்டணி அமைத்து வென்றனர். இதை காரவேலன் கல்வெட்டு தமிர் சங்காந்த் என்று கூறுகிறது.
 இக்கூட்டணி தமிழர் ஆட்சி வீழும்வரை இருந்தது.
பல்வேறு மன்னர்களை அடக்கிக் கப்பம் கட்ட வைத்து பல்வேறு அரசர்களுடன் மண உறவுகள் செய்து கொண்டு மிகப்பெரிய பேரரசை கட்டியாண்ட ராஜேந்திர சோழனும் சுந்தர பாண்டியனும் தங்களுடைய ராஜமுத்திரையில் வில் மீன் புலி ஆகிய மூன்றை மட்டுமே வைத்திருந்தனர்.
 ஆக நாடு என்கிற உணர்விலும் இனம் என்கிற உணர்விலும் தமிழர்கள் ஒற்றுமையாகவே இருந்துள்ளனர். நிலத்தை மொழியின் பெயரால் குறித்த முதல் இனம் தமிழினமே!

  அடுத்த ஒரு உருட்டு சென்னை மாகாணத்தில் எல்லா மொழியினரும் இருந்தனர் அதுவே தெலுங்கர் இங்கு குடியிருப்பதற்கு காரணம் என்ற உருட்டு.
 சென்னை மாகாணத்தில் தமிழர் நிலப்பகுதியும் தெலுங்கு நிலப்பகுதியும் ஒரே ஆட்சியின் கீழ் இருந்ததால் தமிழர்கள் இழந்தது அதிகம்.
 முதலமைச்சர் பதவியில் ஆங்கிலேயருக்கு சாமரம் வீசிய தெலுங்கு ஜமீன்தார்களே இருந்தனர்.
 மாதிலங்கள் பிரிந்தபோது திருப்பதி காளகஸ்தி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வளமான தமிழர் நிலப்பரப்புகள் தெலுங்கர்களிடம் பறி போனது. சென்னை வரைக்கும் விழுங்க துடித்த தெலுங்கர்களிடமிருந்து தமிழர்கள் தலைநகரை படாத பாடுபட்டு காப்பாற்றி பிறகு திருத்தணி வரை மீட்டனர்.

 இன்னொன்று தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கருக்கு தெலுங்கே தெரியாது அவர்கள் பேசும் மொழி தெலுங்கு அல்ல என்று உருட்டுவது.
 இது முழு உண்மை இல்லை. தமிழ்நாட்டிற்குள் இருக்கும் தெலுங்கர்கள் பேசும் தெலுங்கு பழைய கால சுத்தமான தெலுங்கு.
 இது ஆந்திர தெலுங்கர்களுக்கு புரியாது ஆனால் தமிழ்நாட்டு தெலுங்கர்கள் ஆந்திரா தெலுங்கை புரிந்துகொள்ளும் அளவு அப்டேட்டாக இருக்கிறார்கள்.
 மதுரையில் உள்ள ஒரு தெலுங்கர் ஹைதரபாத் போனால் தெலுங்கை பேச முடியும் புரிந்து கொள்ள முடியும்.
  உலகிலேயே வேறு ஒரு தேசத்தில் குடியேறி 500 ஆண்டுகள் ஆகியும் தன் தாய் மொழியை அதுவும் இலக்கிய இலக்கண வளம் இல்லாத ஒரு மொழியை 15 தலைமுறையாக விடாமல் பேசி வருவது தமிழ்நாட்டில் இருக்கும் தெலுங்கர் மட்டுமே!
 ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு தொடர்ச்சியாக குடியேற்றமும் மண உறவுகளும் நடந்து வருவது மற்றும் தெலுங்கு பேசுவதை ஆண்ட பரம்பரை அடையாளமாக நினைப்பதும் இதற்கு காரணம் ஆகும்.

  தமிழர்களின் மொழிப் போரிலும் தமிழர்களின் எல்லை மீட்புப் போராட்டத்திலும் ஈழப் போராட்டம் நடந்த காலகட்டத்திலும் தற்போது தமிழர் அரசியல் உரிமை கேட்டு பேசி வரும் காலகட்டத்திலும் எந்த தெலுங்கரும் ஆதரவு தெரிவிப்பது இல்லை.
 இவர்களால் காட்ட முடிந்த ஒரே ஒரு உதாரணம் கீழ் தஞ்சையில் சீனிவாச ராவ் நடத்திய கம்யூனிஸ்ட் போராட்டங்கள் மட்டுமே.
 அவர் ஒரு விதிவிலக்கு என்றுதான் ஆகும்.
 தமிழர் ஸ்டேன் சாமி சத்தீஸ்கர் பழங்குடிகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடி சாகவில்லையா?!
அதே கீழ் தஞ்சையில் கோபாலகிருஷ்ண நாயுடு போன்ற தெலுங்கு ஜமீன்தார்கள் விவசாயக் கூலிகளை கொடுமைப் படுத்தியதை கண்டு கர்நாடகாவில் இருந்துதான் ஒரு தெலுங்கர் வந்து போராடினார் அருகில் உள்ள வந்தேறித் தெலுங்கர் போராடவில்லை. அப்படி கீழ் தஞ்சையில் விவசாய கூலிகளுக்காக களத்தில் இறங்கி குண்டடிப்பட்டது 5 பேரும் தமிழர்கள் தான். கொன்றது தெலுங்கு வந்தேறி முதலமைச்சர் அனுப்பிய போலீஸ்தான்.
 
 தமிழகத்தின் உள்ளிருக்கும் தெலுங்கர்கள் இன்னொரு உருட்டும் வைத்துள்ளனர்.
 அது பஞ்சம் பிழைக்க வந்தோம் நாங்கள் பாவம் என்கிற மாதிரி உருட்டுவது.
 ஆரம்பத்தில் இவர்கள் பஞ்சத்தாலும் இஸ்லாமிய படை எடுப்பாலும் அகதிகளாக வந்தனர்.
 அதன் பிறகு விஜயநகர அரசு எழுந்தபோது தெலுங்கர் பகுதிகளுக்கு பரவாமல் தமிழர் பகுதிக்கு அவர்கள் படையெடுத்து பாண்டிய நாட்டை பிடிக்க காரணம் இங்கே ஏற்கனவே குடி இருந்த தெலுங்கர்கள் தான்.
  இதன் காரணமாக விஜய நகரத்தின் கீழ் பெரும் ஆதிக்கத்தையும் அதன் பிறகு பாளையங்களையும் நிலவுடைமையையும் பெற்று அகதிகளின் வாரிசுகள் ஆதிக்க சாதியாக மாறினார்கள்.
 பாஞ்சாலங்குறிச்சி, ராஜபாளையம் வரைக்கும் இவர்கள் ஆதிக்கம் இன்று வரை கொடிகட்டி பறக்கிறது.

 தமிழகத்தில் இருக்கும் தெலுங்கர்களை தமிழர்கள் வெறுக்க காரணம் தமது இருப்புக்கு அதிகமாக ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்ல தமிழர் தமது உரிமைகளுக்காக குரல் எழுப்பும்போது ஆதரவு தெரிவிக்கா விட்டாலும் எதிர்ப்பது அல்லது குழப்புவது அது மட்டுமல்லாமல் தானாக கிடைக்க இருப்பதையும் கெடுத்து விடுவது.
 இப்படி தொடர்ச்சியாக உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது இன்று உதயநிதி வரை தொடர்கிறது.

 உலகத்தில் இப்படி ஒரு நன்றிகெட்ட இனம் இருப்பதாகத் தெரியவில்லை.

 இவர்கள் ஈவேரா, அண்ணா, கருணாநிதி, வைகோ போன்றோரை போராளிகள் என்று கட்டிவைத்த பிம்பம் இன்று உடைந்துவிட்டது.
 இதனால் சீனிவாச ராவை தூக்கிக்கொண்டு வருகின்றனர்.

 போராளி வேடம் கலைந்தவுடன் அப்பாவி வேடம் போடுகின்றனர்.
 தமிழர் ஏமாற வேண்டாம்.

 

Wednesday, 12 July 2023

சாதியே இனம்

சாதியே இனம்

 தேசிய வாதத்தின் தாயகம் ஐரோப்பா என்று கூறுவர். ஆனால் உலகத்தில் தமிழர்கள்தான் மொழிவழி அமைந்த இன தேசியத்தை முதன்முதலில் எழுதியவர்கள்.
 உலகிலேயே முதன்முதலில் மொழியின் பெயரால் இனத்தையும் தேசத்தை குறிப்பிட்டு எழுதியதும் மொழியின் பெயரால் அரசுகளின் கூட்டணி அமைத்ததும் தமிழர்தான்.
  அந்த வகையில் தேசியத்திற்கான முதல் வரையறையை எடுத்துக் கொடுத்தது தமிழ் இலக்கியம் தான். 
 நாம் நெடுங்காலமாக வெற்றியை ஈட்டி வல்லரசாக திகழ்ந்து வந்தோம்.
 பிறகு நமது வீழ்ச்சி இனக்கலப்பினாலும் ஒற்றுமை இன்மையினாலும் வந்தேறிகளின் சதியினாலும் தொடங்கியது. 
 ஆம், கிமு வில் இருந்து கிபி 13 ஆம் நூற்றாண்டு வரை வல்லரசாக வீற்றிருந்த காலங்களில் பொறாமை கொண்டு நம் மீது எத்தனையோ பேரரசுகள் சிற்றரசுகள் தாக்குதல் நடத்தின. மத ரீதியான குழப்பங்கள் ஏற்படுத்தி நம்மை சிதைக்கவும் முயன்றன. பல நெடுங்காலம் நமது இனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இறுதியில் வெற்றியடைந்து நாம் வீழ்த்தப்பட்டோம். 
 வீழ்ந்தும் 800 ஆண்டுகளில் எத்தனையோ முறை எழ முயன்றோம். இன்று வரை வெற்றி அடைய முடியவில்லை என்றாலும் இன்று நம்மிடம் மிக உறுதியான இனவெழுச்சி ஏற்பட்டுள்ளது.
 நமது இளைஞர்களின் இனரீதியான எழுச்சி என்பது தமிழகத்திலே பக்கம் பக்கமாக எழுதிய எழுத்தாளர்களால் வந்தது இல்லை. வீதி வீதியாக பேசிய இயக்கங்களால் வந்ததில்லை. இது இனப்பற்றை மட்டுமே முதல் தகுதியாகக் கொண்ட ஒரு தலைவன் தனது ராணுவ சிந்தனையின் மூலம் ஈழத்தில் இனரீதியான படைகட்டி தாய் நிலத்தை மீட்டு வரிசையாகப் புரிந்த சாதனைகளினால் ஏற்பட்டது. ஆம், உலக வல்லரசுகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து அந்த தலைவனை வீழ்த்திய போதும் இறுதி நொடி வரை அவருடைய உறுதியான நிலைப்பாடு இன்று உலகத் தமிழர்கள் மனத்தில் விடுதலைத் தீயை மூட்டி இன்று இளைஞர்கள் தமிழ் தேசியத்தின் மீது விருப்பம் கொண்டு சாதி, மொழி, மதம், நாடு என அனைத்தையும் கடந்து இனமாக திரண்டு நிற்க காரணம்.
 இன்றைய சூழலில் பழைய கருத்தியல்வாதிகள் தங்களுக்குள் மோதிக் கொள்வதுடன் ஒருவரை ஒருவர் 'குடி தேசியம்' என்றும் 'மாநில தேசியம்' என்றும் 'வரட்டு வாதம்' என்றும் தூற்றிக்கொண்டு தற்கால இளைஞர்களை குழப்புகின்றனர்.
 சாதி இல்லாமல் வந்தேறிகளை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை.

 உலகில் புரட்சி செய்த மக்கள் தங்களுடைய இன, மத, ஜாதி அடையாளங்களை ஒழித்து விட்டு ஒன்று சேரவில்லை.
 உலகம் போற்றும் புரட்சியாளர்கள் தங்கள் குடிப்பெயருடனும் மொழி அடையாளத்துடனும் மத அடையாளத்துடனும் இருந்தார்கள்.
 தன்னுடைய உண்மையான எந்த அடையாளத்தையும் மறைக்காமல்தான் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி புரட்சி செய்தனர்.

 தமிழகத்தில் (இன)தேசியத்தை 'மொழித் தேசியம்' என்றாக்கி 'தமிழ் பேசுபவர் எல்லாம் தமிழர்' என்ற மாயையை உருவாக்கி தமிழை நன்கு கற்ற பிற வந்தேறி இனங்கள் தமிழை வைத்தே தமிழரை வீழ்த்தி தமிழர் தலையில் அமர்ந்து சுரண்டி கொழுப்பது பல ஆண்டுகளாக நடக்கிறது.

  இந்த வேளையில் நாம் மொழியை மட்டும் வைத்துக்கொண்டு நம்மை அடையாளப்படுத்தினால் இச்சதியை வீழ்த்த முடியாது.
 அதே நேரத்தில் இனத்திற்கான எந்தவித ஆவணச் சான்றும் நம்மிடம் இல்லை.
 பிற மாநிலங்களில் ஆவணங்களில் தாய்மொழி இன்னது என்று சான்றிதழ்களில் இருக்கும். அதை தமிழகத்தில் திராவிடம் நீக்கிவிட்டது.
 அதனால் தான் நாம் இனத்தின் உட்பிரிவான சாதியை இன அடையாளமாக கொண்டு 'முதலில் சாதிய சமத்துவம் பிறகு சாதி ஒழிப்பு' என்கிற திட்டத்துடன் குடிவழி இனத்தேசியத்தை முன்னெடுத்து வருகிறோம்.

 எந்த ஒரு தோல்வி அடைந்த குருவும் வெற்றியடையும் சீடனை பார்த்து பொறாமை கொள்வது இயல்பு.
 நடைமுறைச் சூழல் புரியாமல் கருத்தியலில் ஊறிப்போன பழைய தலைவர்கள் இதை சாதிய எழுச்சியாக பார்ப்பதும் பழைய திராவிட சதிகாரர்கள் பேசிய அதே சினிமா வசனங்களை இவர்களும் பேசுவதும் எங்களுக்கு வருத்தமாக இருந்தாலும் எங்களை இது பாதிக்கப் போவதில்லை.
 எங்களது குடி அடையாளத்துடன் எங்கள் குடி எங்கள் பின்னே வருகிறதா இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல் நாங்கள் தமிழ் தேசியத்தின் கொள்கைகளை ஏற்று இந்த உலகம் ஏற்கனவே சாதித்த நடைமுறை வழியில் நாங்களும் செல்ல முற்பட்டு உள்ளோம். அடையாளத்திற்காக குடியை முன்வைக்கிறோமே தவிர 'சுய சாதி ஆதிக்கத்தை' நிறுவ அல்ல.
 கருத்தியலில் ஊறிப் போய்விட்ட பெரியவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல விரும்பவில்லை. தர்க்க ரீதியான விவாதத்தில் அவர்களுடன் சரிக்கு சரியாக மோத எங்களால் முடியும் இருந்தாலும் அவர்களை நாங்கள் எதிரிகளாக கருதவில்லை.
 ஆனாலும் எங்களை ஒத்த இளைஞர்களுக்கும் எங்களையும் விட சிறிய வயதினரான இளைஞர்களுக்கும் அவர்களையும் விட இளைய சிறுவர்களுக்கும் நாங்கள் விளக்கம் கண்டிப்பாக அளிக்க விரும்புகிறோம்.

  சில உதாரணங்களை பார்ப்போம்.

  புலிகள் இயக்கம் எழுந்த பொழுது அதிலே அனைத்து சாதி, மத, பிரதேச தமிழர்களும் இணைந்தார்கள். பிறகு ஒரு காலகட்டத்தில் அவர்கள் மீது மத ரீதியான பிளவு ஏற்படுத்தப்பட்டபோது புலிகளிடம் எங்களிலும் பலர் அந்த சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று காட்ட தரவுகள் இல்லை.
 இன்றும் புலிகளிலே எந்த ஜாதியினர் எந்த மதத்தினர் எவ்வளவு என்கிற தரவு கிடையாது. புலிகள் அத்தனை பேரையும் வெறும் தமிழர்களாக மட்டுமே பார்த்தார்கள். அதனால் அவர்கள் மீது சாதி ரீதியான மத ரீதியான பிரதேச ரீதியான விமர்சனங்கள் வைக்கப்பட்ட போது அவர்களால் அதை எதிர் கொள்ள முடியவில்லை.

 ஈழத்தை விட தமிழகத்தில் சிக்கல் அதிகம். எல்லா இடங்களிலும் மூலைக்கு மூலை வந்தேறிகள் புகுந்துள்ளனர். இவர்களே சாதிய மோதலை உருவாக்கி நடுவில் அமர்ந்து இனம் கடந்த சித்தாந்தம் (திராவிடம், மதவாதம், இந்தியம், தலித்தியம், பொதுவுடைமை, மனித நேயம்) பேசி பலன் பெறுகின்றனர். 
 இவர்களைப் பிரித்தறியவும் வேண்டும்.  அதே நேரத்தில் சாதிய பிளவுகள் மறைய வேண்டும். அதே நேரத்தில் தத்துவமும் வேண்டும். 
 இதற்காக சாதி அடையாளத்துடன் சாதிய சமத்துவம் பேசும் தமிழ்த் தேசியவாதிகள் தேவைப்படுகிறார்கள். 

 உதாரணத்திற்கு தற்போதைய பிரச்சனையான மேல் பாதி கோவில் பிரச்சனை எடுத்துக் கொள்வோம். இதிலே வன்னியர் பறையர் மோதல் ஏற்பட்டபோது வன்னியர் என்கிற பெயரை தாங்கிய ஒருவரும் பறையர் என்கிற பெயரை தாங்கிய ஒருவரும் கூட்டாக சேர்ந்து சமாதானம் ஏற்படுத்த முயன்ற போது தான் அந்தப் பிரச்சனை (அரசாங்கம் சதி செய்த போதும்) மக்கள் மத்தியில் பிளவுகளையோ கலவரங்களையோ தூண்டாமல் நீர்த்துப் போனது.

  சாதியப் பட்டதை பின்னால் போட்டுக் கொண்டு போட்டுக் கொண்டு புரட்சி செய்ய முடியாது என்பது உலகின் நடைமுறைக்கு ஒத்து வராத கூற்று.

 தமிழர்கள் தங்கள் குடிப்பட்டத்தை போட்டுக்கொண்டு குடி அடையாளத்துடன் தேசியம் பேசுவது மட்டுமே மொழித்தேசியம் என்று இத்தனை நாள் தமிழர்களை ஏமாற்றி வந்த வந்தேறிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

 இப்படி குடி அடையாளத்துடன் தேசியம் பேசும் எந்த தலைவரும் சாதிவெறி பிடித்தவர் என்றோ பிற சாதி மீது வன்மம் கொண்டவர் என்றோ பெரும்பாலும் இருப்பதில்லை.

  சில சாதியவாதிகள் கூட இந்த அரசியலின் பலம் அறிந்து தமது பிழைப்புக்காகவேணும் தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பது போல பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விட்டனர். ஆனால் அந்த புத்திசாலித்தனம் கூட இல்லாம தத்துவப் பெரியவர்கள் பழைய வரட்டு போக்கிலேயே இருக்கிறார்கள்.

 ஆக இங்கே குடிவழி தமிழ் தேசியம் தான் தற்போது ஒரே வழி. இது நாங்கள் விரும்பி உருவாக்கியது அல்ல காலம் கட்டாயப்படுத்தும் வழிமுறை.

 தமிழர்கள் கைக்கு அதிகாரம் வந்த பிறகு (அது மாநில அரசாக இருந்தாலும் அல்லது தனி நாடு அமைத்த ராணுவ அரசாக இருந்தாலும்) நாங்கள் சாதிகளை நீக்கி இனம் என்கிற ஆவணங்களை கொண்டு வந்து இனரீதியான சான்றுகள் அனைவருக்கும் கிடைக்கப் பெற்ற பிறகு சாதியும் சாதிய பட்டங்களும் இல்லாமல் போய் தமிழர் என்கிற ஒற்றை அடையாளத்துடன் வருங்காலங்களில் வாழ்வோம்.

 அதுவரை வந்தேறிகளின் சதியை முறியடிக்க,
 நடைமுறையை கருத்தில் கொண்டு,
தமிழ் சாதிகளில் எந்த சாதியும் இழிவானது இல்லை என்பதை ஏற்றுக் கொண்டு,
 சக தமிழ் குடிகளின் மீது பாசம் கொண்டு,
 அனைவரும் தமது குடி அடையாளத்துடன்,
 மத அடையாளத்துடன்,
 பிரதேச அடையாளத்துடன்,
 பாலின அடையாளத்துடன்,
தமது எந்த ஒரு அடையாளம் மறைப்பும் இல்லாமல்
 தமிழராக ஒன்று சேர்ந்து தமிழ் தேசியத்தை வெல்வோம்!

  இயல்பான இனப்பற்றுடன் இனத்திற்காக உழைக்க முன்வருபவனிடம் 
"நீ போய் ஜாதியை ஒழித்து விட்டு வா"
"மதத்தை ஒழித்து விட்டு வா"
"உன்னுடைய பழக்க வழக்கங்களை ஒழித்துவிட்டு வா"
"தூய தமிழில் பேசிக்கொண்டு வா"
"கருத்தியல் ரீதியில் தெளிந்து விட்டு வா"
என்று விரட்டி விடுவது இந்த இனத்தின் பெரிய கேடாக இருக்கிறது.

 அண்டை இனங்களிடம் நாம் பாடம் கற்க ஏராளம் உள்ளது.
 அண்டை இனங்கள் நம்மை விட பெரிய அளவில் சாதிய ஏற்றத்தாழ்வு  உள்ளவர்கள்.
அவர்கள் இன்று சாதிய அடையாளத்துடனே இனமாக திரண்டு தங்கள் தாய்நிலங்களில் தங்களது இன உரிமைகளையும் தத்தமது குடிக்கான உரிமைகளையும் மீட்டு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர்.
 இவர்களில் யாருமே அதிமேதாவிகள் அல்ல.
 இன்று நாம் தப்பி பிழைக்க வேண்டும் என்றால் இயல்பான இனப்பற்று இருக்கும் நமது மக்களை இயல்பான வழியில் ஒன்று திரட்டி கூட்டான முயற்சியின் மூலம் வேற்றின ஆதிக்கத்தைத் தடுத்து வாழ்ந்துகொள்ள முடியும்.

 தலைவர் பிரபாகரன் "ஒவ்வொரு தமிழனும் தமிழனாக தனது இயல்பான சிறிய பங்களிப்பை செய்து விட்டால் எனக்கு அவசியம் இருக்காது" என்று கூறியது போல நாம் செயல்பட வேண்டும்.

 தமிழர்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட பழைய சாதிய பகை உணர்வை மறந்து இன்று ஒன்று திரண்டு வெற்றிப் பாதையை நோக்கி செல்லும் இதே 'குடி வழி தமிழ் தேசியத்தை' தொடர வேண்டும்!

 இதுவும் கூட எளிதானது அல்ல!
 தமிழ் சாதிகளில் ஒன்று ஓரணியில் திரண்ட போது கூட திராவிடம் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளது.
 ஆகவே ஒரு சாதி தனியாக திரண்டு விடக்கூடாது என்பதில் கூட வந்தேறிகள் கவனமாக இருக்கிறார்கள். 

 அண்ணன் சீமான் சொல்வது போல "கன்னியாகுமரியில் பெரும்பான்மையாக வாழும் நாடார் சாதியினரை இரண்டு மதங்களாக பிரித்துள்ளனர், அதற்கு அடுத்த திருநெல்வேலி மாவட்டத்தை மதமாக பிரிக்காமல் 3 ஜாதிகளாக பிரித்துள்ளனர்" 

 அப்படி ஒரே மதத்தில் ஒரே ஜாதியாக திரண்டு இருக்கின்ற தமிழர்களை கூட இவர்கள் மொழித் தேசியம் என்றும் இடதுசாரி வலது சாரி என்றும் பல்வேறு வகையில் பிரித்து கருத்தில் ரீதியில் குழப்புகின்றனர்.

  இன்று தமிழ்ச் சாதிகளில் பெரும்பான்மையான சாதிகளில் இளைஞர்கள் தமிழ் தேசியத்தின் பக்கம் கணிசமாக வந்துவிட்டனர்.
 பழைய வந்தேறி அரசுகளால் தாழ்த்தப்பட்ட சில சாதிகள் தமிழ் தேசியத்தின் பக்கம் வருவதற்கு தயங்கிக் கொண்டிருக்கின்றன.
 அவர்களை 'நாம் தாழ்ந்தவர்கள்' என்ற உளவியலில் இருந்து விடுபட்டு தமிழ்க் குடியாக தமிழர்களாக தமிழ் தேசியத்தில் இணைவதும் கூடிய சீக்கிரம் நடக்க இருக்கிறது.
 அப்படி தமிழ்தேசியத்தின் பக்கம் அத்தனை சாதி இளைஞர்களும் வந்துவிட்டாலே தமிழினம் பாதி வெற்றியை அடைந்து விட்ட தாக அர்த்தம்.

 ஒழிப்பதற்கு எத்தனையோ முயற்சி செய்தும் குளறுபடி செய்தும் தமிழினத்திடம் சாதிதான் எஞ்சி நிற்கிறது. கடைசி வாய்ப்பாக சாதியைப் பயன்படுத்தி இனத்தைக் காப்பாற்றுவோம்! 

 தமிழ் இனமே ஒரு சாதி!
இனத்திற்காக உழைப்பவர் உயர்ந்த சாதி!
தயங்கி நிற்பவர் தாழ்ந்த சாதி! 

 

Thursday, 2 May 2019

சாதியம் vs தமிழ்தேசியம்

சாதியம் vs தமிழ்தேசியம்

எப்படி ஒரு திராவிடவாதியின் வடவர் எதிர்ப்பு தமிழ்தேசியம் ஆகாதோ....
அதேபோல,
ஒரு சாதியவாதியின் திராவிட எதிர்ப்பு தமிழ்தேசியம் ஆகாது.
-------
சில சாதி வெறியர்கள் இருந்தனர்.
அவர்கள் தமிழ்தேசியம் பேசிக்கொண்டே
"நாங்கதான் பாண்டியர்! நாங்கதான் மள்ளர்!
விவசாயத்தை கண்டுபிடித்ததே நாங்கள்தான்!
எங்க திணை மருதம்!
பாவாணரே கூறிவிட்டார்!
எங்க இம்மானுவேல் சேகரனை தேவர் கொன்னுட்டாரு!"
என்று கத்தினார்கள்.

வடநாட்டு கூர்மி சாதியை அழைத்து வந்து குடும்பர் மாநாடு போட்டார்கள்.
போட்டியாக இம்மானுவேல் சேகரனார் குருபூஜை நடத்தினார்கள்.
பசுபதி பாண்டியன் வளரவிடாமல் தடுக்க தி.மு.க களமிறக்கிய கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்று தெரிந்தும் அரசியல் அடையாளம் போய்விடக்கூடாது அவரை ஆதரித்துவந்தனர்.
இறுதியாக தென்தமிழ்நாடு தனியாக பிரியவேண்டும் என்பதில் போய் நின்றனர்.

பதிலடியாக ,
"மள்ளர் என்பது வீரர் என்று பொருள் தரும் பொதுவான சொல்.
மருதம் மட்டுமுன்றி பிற திணைகளிலும் மள்ளர் இருந்தனர்.
பள்ளருக்கும் பாண்டியருக்கும் பொதுவான வேர்ச்சொல் உள்ளதென்று பாவாணர் கூறவதாக நீங்கள் கூறுவது பொய்.
இம்மானுவேல் சேகரன் அத்தனை பெரிய ஆள் கிடையாது.
அவர் பற்றி வந்த ஆகப்பெரிய புத்தகத்தில் 300 பக்கங்கள் உண்டு.
அதில் சொந்தக்கதை சோக கதை போக 3 பக்கம் கூட அவர் போராடிய வரலாறு இல்லை.
தேவர் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தமைக்கு சாதி காரணம் இல்லை.
சமாதான கூட்டத்திற்கு வரவேண்டிய எம்.எல்.ஏ (அவரும் பள்ளர்) வராமல் அவரது எடுபிடி இம்மானுவேலை அனுப்பியதுதான் காரணம்.
பிறகு இருவரும் சமரசமாகி சாமாதானத்திற்கு அழைப்பு விடும் கூட்டு அறிவிப்பில் கையெழுத்தும் போட்டனர்.
அந்த சமாதான அறிக்கை வெளிவரக்கூடாது.
சாதியாக நாம் பிரிந்து கிடக்க வேண்டும் என்றுதான் அன்றிரவே இம்மானுவேலைக் கொன்று தேவர் மீது பழிபோட்டுவிட்டனர்.
(தேவருக்கு நியாயம் கேட்பது போல காமராசரை வீழ்த்தி ஆட்சியையும் பிடித்துவிட்டனர்.)
இம்மானுவேலார் கொலையான பிறகும் கூட பள்ளர் அதிகமாக வாழ்ந்த தொகுதியில் தேவர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
இறக்கும்போது தேவர் சொத்தில் 5 இல் 1 பங்கு பள்ளருக்கு கிடைத்தது.
மள்ளர் என்கிற பெயரில் குடும்பர் மீதி பள்ளர்களை ஏய்க்கின்றனர்.
மள்ளரியத்தை தமிழ்தேசியம் சுமப்பது அதிகநாள் நீடிக்காது"
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
---------------
அடுத்து சில சாதிவெறியர்கள் இருந்தனர்,
"நாங்கதான் தேவரு!
முக்குலம் நாங்க ஒரே சாதியோட மூன்று பிரிவு!
நாங்கதான் மூவேந்தரு!
தேவர்கள காமராஜ் நாடார் பழிவாங்கிட்டாரு!
தமிழ்நாட்டுல எங்கள விட்டா வீரனே கிடையாது.
அந்த படம் இருக்கு இந்த பாட்டு இருக்கு!
போர்த்துகீஸ் வரைபடத்துல மறவர்நாடு இருக்கு.
10,15 ஜமீன் நாங்கதான்!"
என்று ஆரம்பித்தார்கள்.
தேவர் குருபூஜை என்ற பெயரில் ரவுடித்தனம்.
ஊருக்கு ஊர் முச்சந்தியில் தேவர் சிலை.
4,5 சாதிக்கட்சிகள்.
எதற்கெடுத்தாலும் பள்ளரை வம்புக்கு இழுப்பது என்று சாதிவெறிக்கு இலக்கணமாக மாறி நின்றனர்.

பதிலடியாக,
" தேவர் என்பது சாதி கிடையாது அது ஒரு பட்டம்.
முக்குலம் மூன்றும் தமக்குள் எந்த தொடர்பும் அற்றவை.
முக்குலத்தோர் என்கிற பெயரில் அம்மூன்று குல மக்கட்தொகையில் 60% இருக்கும் அகமுடையார்களை ஏய்த்து அரசியல் செய்கிறீர்கள்.
பாவாணர் பார்வையில் அகமுடையார் நாட்டுப்படை, கள்ளர் காட்டுப்படை.
மறவர் பொதுவான வீரர் பெயர்.
காமராசர் காலத்தில் நடந்தது இரு கட்சிகளுக்கு இடையேயான மோதல்.
அப்போது காமராசர் பக்கம் அதிகம் இருந்தோர் முக்குலம்.
தேவர் பக்கம் அதிகம் நின்றது பள்ளர்கள் (தேவரின் அப்பா கூட எதிர்க்கட்சிதான்).
மற்றபடி காமராசர் நேரு குடும்பத்தின் அடிமை.
அவரால் நாடார்கள் அடைந்த சீரழிவுக்கு பதிலடியாகத்தான் தேர்தலில் அவரை சொந்த சாதி என்றும் பாராமல் தோற்கடித்தனர்.
பள்ளரும் மறவரும் பூலித்தேவன் காலத்தில் இருந்தே ஒன்றுக்குள் ஒன்று.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் கூட 8 பேர் பள்ளர்தான்.
நீங்கள் சண்டையிட்டு வருவதால் பூலித்தேவன் இடத்தில் கொள்ளைக்காரனான கட்டபொம்மனை அமரவைத்து புகழ்கின்றனர்.
கள்ளர் தன்னரசு கூட்டமைப்பு வெள்ளையரிடம் பேசிய வீரவசனத்தை கட்டபொம்மன் பேசியதாக படமெடுத்துவிட்டனர்.
மறவர் பாளையங்கள் கொசுறு.
அதைவிட தெலுங்கு பாளையங்கள்தான் தமிழகம் முழுவதும் இருந்தது."
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
----------------
அடுத்து சில வன்னியசாதி வெறியர்கள்,
"நாங்கதான் வன்னியகுல சத்திரியர்.
அக்கினி குண்டால இருந்து பொறந்த அக்னிகுலம்.
தமிழினத்திலேயே பெரும்பான்மை நாங்கதான்.
வீரப்பன், தமிழரசனை நீங்க யாருமே கொண்டாடலை.
வன்னியர்களை காமராசர் ஏமாத்திட்டார்.
எங்கயும் தெற்கத்தி ஆதிக்கம்.
சென்னை முழுக்க நாடார் ஆதிக்கம்.
அதனால தனி வடதமிழ்நாடு வேணும்"
என்று கத்தினார்கள்.

பதிலடியாக,
" வன்னியர் என்பது பட்டமே!
வன்னியர் என்கிற பட்டத்தை பயன்படுத்தி பள்ளிகள் படையாச்சிகளை முட்டாளாக்குகிறீர்கள்!
வீரப்பன், தமிழரசன், காடுவெட்டி குரு எல்லாரும் படையாச்சிதான்.
பதவியில் மட்டுமே இருப்பது பள்ளி!
திராவிட கட்சிகளை தூக்கி சுமப்பது வடக்குதான்.
பெரியார் கூடவே இருந்ததும் கருணாநிதி கூடவே இருந்ததும் வன்னியர்தான்.
தெற்கை விட வடக்கு பின்தங்கியதாகவோ
வடக்கில் தெற்கத்திகள் ஆதிக்கம் செலுத்துவதாகவோ நீங்கள் நிறுவ முடியாது.
தலைநகர் அனைவருக்கும் பொது.
சென்னையை ஆந்திராவுக்கு போகாமல் தடுத்ததே ம.பொ.சி என்கிற நாடார்தான்.
நாடார்களை இழிவு படுத்தும் மத்திய பாடத்திட்டம் வந்தபோது அதை கண்டித்து நீக்கியது ராமதாஸ்தான்.
நாடாரான சீமான் அளவுக்கு வீரப்பனுக்கு வெளிப்படையான ஆதரவு எந்த இயக்கமும் கட்சியும் தெரிவித்ததே கிடையாது.
தற்போதுகூட உங்கள் இருப்பிடத்துக்கு வந்த பெரிய ஆபத்தான எட்டுவழிச் சாலையை எதிர்த்து முதலில் சிறை சென்றதும் முதலில் வழக்கு போட்டு அந்த ஆபத்தை தடுத்து நிறுத்தியதும்கூட நாம்தமிழர்தான்."
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
-------
அடுத்து, சில சாதிவெறியர்கள் இருந்தனர்.
"நாங்கதான் பரையர்.
சாவுக்கு அடிக்கிற பறைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.
பரைனா பழமை.
நாங்கதா மூத்தகுடிக்கே மூத்தகுடி!
ஆதாரம் அந்த பழமொழி இந்த பழமொழி!
நாங்கதான் பூணூல் போட்ட ஒரிஜினல் பார்ப்பனரு.
வேதம் படித்த பறையூர் சாக்கையன் பற்றி இலக்கியத்துல வருது.
குலதெய்வ பூசாரிகள்லாம் நாங்கதான்!
திருவள்ளுவர், புத்தர் நாங்கதான்!
பௌத்தம்தான் எங்க நெறி!"
என்று கத்தினார்கள்.
சாதிவெறியையும் தலித்தியத்தையும் கலந்து தூக்கிக்கொண்டு
திருமாவளவன் (கருணாநிதி காலை நக்கிய அதே நாவால்) இடும் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு வன்னியர் பெண்களை துரத்த ஆரம்பித்தனர்.
இவர்களுக்கு ஆதரவாக தி.மு.கவும் பறையர் சாதி போலீஸ் வக்கீல் அடங்கிய கட்டப்பஞ்சாயத்து கும்பலும் இருந்தது.
இறுதியில் ராஜபக்ச புத்தரை வணங்கும் படத்தைப் போட்டு சாக்கியமுனிகள் வாழ்த்தியதில் போய் முடிந்தது.

பதிலடியாக,
"பரையர் என்பது தவறு.
சங்க இலக்கிய பாடலில் கடம்பன், துடியன், பாணன் என நான்கு குடிகள் சிறப்பித்து கூறப்படுகின்றன.
அதில் நான்குமே இசைக்கருவி சார்ந்த பெயராக இருக்கும்போது நீங்கள் எப்படி பழமை சார்ந்த பெயராக இருக்க முடியும்?!
பழமொழிகள் காலத்துக்கு காலம் திரியும். அவை சான்றாகாது.
இலக்கியத்தில் வரும் பறையூர் சாக்கையன் சாக்கைக்கூத்து ஆடும் கலைஞன் என தெளிவாகவே உள்ளது.
பூணூல் பல சாதியினர் போடுவது.
அது வில்லின் நாண்.
150 ஆண்டு முந்தைய பூணூல் போட்ட குயவர் ஓவியமும் பூணூல் போட்ட ராசராச சோழன் பெரியம்மா சிலையும் கூட உண்டு.
பறை என்றால் கேவலமில்லை.
பறையில் பலவகை உண்டு.
பூசைக்கு திருமணத்துக்கு என்று பலவிதமான பறைகள் இருந்தன.
ஆண்டாள்கூட பறையடித்து பாடுகிறாள்.
குறவர்தான் உண்மையில் மூத்தகுடி (நரிக்குறவர் இல்லை. அவர்கள் மராத்தியர்).
உங்களை ஆதித் தமிழர் என்று குறிக்காமல் ஆதி திராவிடர் பதிவாக்கி வைத்துள்ளனர்.
திருமாவளவன் என்கிற திமுக கொத்தடிமையை நம்பாதீர்கள்.
அவன் மலைச்சாமி தேவேந்திரன் ஆரம்பித்த தலித் பேந்தர்ஸ் அமைப்பை ஆட்டையைப் போட்டவன்.
இடைக்காலத்தில் நன்றாக இயங்கி பிரபாகரனாரைச் சந்திக்கும் அளவு போனான்.
பின் அவனது அசிங்கம் ஏதோ திமுக விடம் மாட்டி இன்று வரை பல அவமானங்களைச் சந்தித்து வருகிறான்.
ராஜபக்சவை சந்தித்து பல்லைக் காட்டியபிறகும் அவனை நம்புவது பச்சையான சாதிவெறி.
வெறுமனே ஆதரவு தெரிவித்தே வந்தேறி சக்கிலியர் இட ஒதுக்கீடில் தனியாக உள் ஒதுக்கீடு வாங்கி 1% அதிகம் பயனடைந்து உங்களை பின்னுக்குத் தள்ளி நன்கு முன்னேறிவிட்டனர்.
ஏக ஹிந்தி வெறியன் அம்பேத்கரை தூக்கிக்கொண்டு திரியாதீர்கள்.
அவன் ஆங்கில அடிமை.
வன்னியரையும் உங்களையும் மோதவிட்டு அந்த இடைவெளியில் படுத்துதான் திமுக இறுதி மூச்சை விட்டுக்கொண்டு இருக்கிறது"
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
----------
அடுத்து சில சாதி வெறியர்கள் இருந்தனர்.
"நாங்கதான் ஆரியர்.
நாங்கதான் பகவான் தலைல இருந்து பிறந்து மனுதர்மம் படைச்சு சாதிய உருவாக்கினது.
ஹிந்து மதம்தான் பழமையானது.
அகண்ட பாரதம் அமைப்போம்"
என்று எவனோ எழுதிக்கொடுத்ததை ஒப்பித்து செய்துவந்தனர்.

பதிலடியாக,
" ஆரியர் என்பதே கற்பனை!
அதை உருவாக்கிய மாக்ஸ் முல்லரே அதைத் தவறு என்று ஒத்துக் கொண்டார்.
ஆரியருகும் சமஸ்கிருத மொழிக்கும் பார்ப்பனருடன் தொடர்பு எதுவும் இல்லை.
பார்ப்பனர் வேறு பிராமணர் வேறு.
சாதி தொழில்வழி வந்தது.
ஆரியர் காலம் என்று கூறப்படும் காலத்தில் வடயிந்தியா வந்த ரோம் நாட்டு பயணி ஏழ்வர்ணம் நடைமுறையில் இருப்பதாகவும் அதில் உயர் அடுக்கு கவிஞர் மற்றும் விவசாயிகள் என்றும் குறித்துள்ளார்.
மிகப் பழமையான தொல்காப்பியம் கூட பார்ப்பனர் பற்றி நல்ல விதமாகக் கூறுகிறது.
தமிழுக்காகவும் தமிழர் உரிமைக்காகவும் பாடுபட்ட எத்தனையோ பார்ப்பனரைக் காட்டமுடியும்.
இன்று இந்துத்துவ வெறியரில் பல சாதியினரும் உண்டு.
நீங்கள் இந்துத்வா என்ற பெயரில் உள்ளே நுழைந்திருக்கும் வந்தேறி  பிராமணர்களின் மூளைச் சலவைக்கு ஆளானவர்கள்.
மதத்தின் அடிப்படையில் நாடுகள் அமைவதில்லை.
எங்கள் பார்ப்பனர்கள் இனப்பற்றுக்கு முன் பிராமணிய-இந்துத்வா கட்டாயம் தோற்கும்"
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
-------
அடுத்து,
" நாங்கதான் நாடாரு!
காமராசர் இல்லனா எவனும் படிச்சிருக்கவே முடியாது!
நகை கடை, ஜவுளிக்கடை, மளிகைக் கடை எல்லாம் எங்க கைல தான்!"
என்று சரத்குமார் படத்தை வைத்துக்கொண்டு திரிந்தனர்.

பதிலடியாக,
"காமராசர் உங்களுக்கு என்று எதுவும் செய்யவில்லை.
கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைத்த நேசமணிக்கு அவர் எந்த ஆதரவும் தரவில்லை.
தமிழகத்திற்கு சேரவேண்டிய வளமான மாவட்டமான இடுக்கியை கேரளாவுக்கு தாரைவார்த்தார்.
ம.பொ.சி திருப்பதி வரை கேட்டு திருத்தணி வரை மட்டுமே கிடைத்தபோதும் சும்மாயிருந்தார்.
இந்தியெதிர்ப்பில் பல கொலைகளைச் செய்தது அவரே!
தமிழ்நாடு என்ற பெயர்மாற்ற உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்க நாடாரை சாகவிட்டது அவரே!
அதனால்தான் சிவகாசி நாடார்கள் அவரை பதவியிலிருந்து தூக்கியெறிந்தனர்.
உங்களுக்கான தலைவர் நேசமணிதான்.
நீங்கள் பெரும்பான்மையாக இருக்கும் குமரி மாவட்டத்தை மத ரீதியாக பிரித்து அடிமைகளை பதவியில் அமர்த்தி அடக்கியாள்கின்றனர்.
நீங்கள் கணிசமாக வாழும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் கொண்டுவந்து உங்களுக்கும் பள்ளர்-பரதவருக்கும் சாதிச்சண்டை மூட்டிவிட்டு ரவுடிகளை வளர்த்துவிட்டு  திசைதிருப்பியதே இன்று துப்பாக்கிச்சூடு வரை போய்விட்டது"
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
-------
சாதியம் எப்போதெல்லாம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் தமிழ்தேசியம் அதை நசுக்கத் தவறியதில்லை.

சாதியை அனைவரும் வெறுக்கின்றனர் என்றால் அது காரணமில்லாமல் இல்லை.

சாதி சமத்துவம் ஏற்பட வந்தேறிகள் போலவே சாதிவெறியர்களும் தடையாக உள்ளனர்.

எனவே சாதி ஒழிப்பு என்கிற வந்தேறிகளின் பித்தலாட்டத்தை எதிர்க்கும் அதே நேரத்தில்
சாதிவெறியர்களின் அளவுகடந்த அடாவடியையும் எதிர்த்தே வந்துள்ளோம்.

Monday, 22 October 2018

நான்மறை படைத்தது தமிழரே!

நான்மறை படைத்தது தமிழரே!

நான்மறை என்றாலே ரிக்,யஜூர், சாமம், அதர்வணம் என்று தவறாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

வடக்கே வேதங்கள் என்றாலே ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்றுதான்.
ரிக் வேதத்திலும், மனுஸ்மிருதியிலும் வேதம் மூன்று (வேதம் த்ரியே) என்றே வருகிறது.
நாம் "நான்மறை" என்றழைப்பதுபோல வடவர் "த்ரிவேதா" என்றே அழைக்கின்றனர்.
(திரிவேதி எனும் வடயிந்திய பிராமணப் பட்டம் இதைக் குறிப்பதே)
‘அதர்வண வேதம்’ ஒரு வேதமாக ஒப்புக் கொள்ளப்பட்டது மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர் தத்தர் கூறுகின்றார். (R.C.Dutt, early Hindus clivilization Page 116)

உண்மையில் நான்மறை என்பது தமிழ் மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன ஆகும்.
--------------

கி.பி.1050 இல் இயற்றப்பட்ட திருவள்ளுவமாலை அந்தணர்கள் நான்மறையை எழுதிவைக்காமல் வாய்வழிக் கல்வியாகவே கற்பித்துவந்தனர்.
(குறுந்தொகை 156 பார்ப்பனர் ஓதுவதை 'எழுதாக் கற்பு' என்றே கூறுகிறது)
அந்த மறைகளை வள்ளுவர் முப்பாலாக எளிமையாக எழுத்தில் எழுதினார் என்று உள்ளது.

"ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று”

இதிலிருந்து வள்ளுவர் இயற்றிய திருக்குறள் அந்தணர் கற்பித்துவந்த நான்மறைதான் என்பது தெளிவாகிறது
----------------------

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பார்ப்பனரான திருஞானசம்பந்தர் இதையே கூறியுள்ளார்.

"...சைவவேடம் தான் நினைந்து ஐம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு
அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே"

அதாவது அந்தணர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு சொல்லிக்கொடுத்த சிவனை போற்றுகிறார் அவர்
----------

கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் மறை ஓதும் பார்ப்பனரை 'வண்டமிழ் மறையோர்' என்று குறிப்பிடுகிறது.

இது பற்றிய கட்டுரைக் காதை பாடல் வருமாறு,

"வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி
நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு"

இதன் பொருள்,
பார்ப்பனரான பராசரன் என்பவர் வளமான தமிழ்மறைகளில் வல்லவரான மறையோருக்கு வானளவு பொருள் கொடுத்து உதவிய, உறுதியான வளமிகுந்த நீண்ட வேலுடைய, சேரனைக் காண காடு, நாடு, ஊர் என அனைத்தையும் கடந்து உயர்ந்த பொதியமலையும் பின்னால் இருக்கும்படி (கடந்து) வெகு தூரம் சென்று அவனைச் சந்தித்தார்.

இதிலிருந்து மறைகள் தமிழில் இருந்தது என அறியலாம்.
அவற்றை ஓதிய பார்ப்பனருக்கு சேரன் கொடையளித்ததைக் கேட்டு பராசரன் எனும் பார்ப்பனரும் அவனை நாடிச் சென்றதையும் அறியலாம்.
-------------
  தொல்காப்பியம் (பிறப்பியல் 20) கூறுகிறது,

"..வளியிசை யரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே"

அதாவது ஒரு எழுத்தின் உச்சரிப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை அந்தணர் ஓதும் மறைகளை வைத்து முடிவு செய்யுமாறு கூறுகிறது.

பழமையான தமிழின் முதன்மையான இலக்கண நூலே அந்தணரின் ஓதும் உச்சரிப்பை வரையறையாகக் கூறுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
------------

என்றால் சமஸ்கிருதம் எப்படி ஓதப்படும் மொழியாக ஆனது?!

வேதங்கள் சமஸ்கிருதத்தில் இருந்தன.
அதற்கு பொருளே தெரியாமல் இருந்ததால் யாரும் அவற்றை விரும்பவில்லை.

(நம்மாழ்வார் இயற்றிய நான்கு பாசுர நூல்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியன நால்வேதத்தின் சாரமாக இருப்பதாகக் கூறி அவரை 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று மதுரகவியாழ்வார் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மேற்கண்ட பாசுர நூல்களுக்கும் சமஸ்கிருத வேதங்களுக்கும் பொருத்தம் இல்லை)

இன்று நான்கு வேதங்களுக்கு கிடைக்கும் ஒரே விளக்க உரை சாயனர் எனும் கன்னடர் எழுதிய விளக்க உரை மட்டுமே!

இவர் யாரென்றால் வேதாரண்யரின் உடன்பிறந்தவர் ஆவார்.

வேதாரண்யர் யார்?!

கிபி 14 ஆம் நூற்றாண்டில் சிருங்கேரி மடத்தின் 12வது சங்கராச்சாரியார் வேதாரண்யர்.
கன்னடரான இவரும் வடமொழியில் சிறந்த புலவர்.
சம்ஸ்கிருதத்தில் பல படைப்புகளைத் தந்தவர்.

இவரே தமிழகத்தில் வடுகர் ஆட்சி அமையக் காரணமானவர்.
பாண்டியப் பேரரசு வாரிசுரிமைப் போரில் சிக்கியிருந்தபோது டெல்லி சுல்தான்கள் பாண்டியரை வீழ்த்தி மதுரை வரை முன்னேறினர்.
அப்போது மதுரை சுல்தானிய படைத்தளபதிகளான ஹரிஹர, புக்கரை மனம் மாற்றி மதுரை மீது ஏவியர் வேதாரண்யரே!
அவர்கள் துருக்கியரை விரட்டி மதுரையைக் கைப்பற்ற காரணமானவர்.
விஜயநகர பேரரசு க்கு அடித்தளமிட்டவர்.

கோயில்கள் பிராமண மயமானதர்க்கும் சமஸ்கிருத மயமானதற்கும் மூல காரணம் விஜயநகர பேரரசு மற்றும் அதன் வழிவந்த நாயக்கர் அரசுகளே!

தமிழகத்து நாயக்கர் ஆட்சியை சமஸ்கிருதத்தின் பொற்காலம் என்றே கூறலாம்.

சோழர் காலத்தில் தாய்லாந்து சென்ற தமிழ்ப் பார்ப்பனர் இன்றும் தமிழில் ஓதிதான் அந்நாட்டு மன்னருக்கு முடிசூட்டுகின்றனர்.

ஆக தமிழ் மறைகளை புறக்கணித்து சமஸ்கிருதத்தைப் புகுத்தியது தமிழரல்லாத ஆட்சியே!
----------
பெரும்பான்மையான தகவல்களுக்கு நன்றி: பாண்டிய ராசன் சட்டத்தரணி
-----------