Showing posts with label சதி. Show all posts
Showing posts with label சதி. Show all posts

Saturday, 16 March 2024

The TamBrahs

The TamBrahs

இன்று நாம் தமிழ்குடிகள் பிற வந்தேறிகளுடன் பொதுவான குடி அடையாளத்தில் அடைக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்கிறோம்.
 இணைய யுகத்தில் இதை முதலில் தொடங்கியது பார்ப்பனர்கள் தான்.
  இன்று குலாலா அடையாளத்தில் இருந்து குயவர்களும்
 நரிக்குறவர் அடையாளத்தில் இருந்து குறவர்களும்
 யாதவர் அடையாளத்தில் இருந்து கோனார்களும் தமது இன அடையாளத்தை  மீட்க குரல் எழுப்புகிறோம்.

  இப்படி பொதுவான 'பிராமணர்' அடையாளத்தில் வெகுகாலமாக அடைக்கப்பட்டிருந்த பார்ப்பனர்கள் தம்மை தனிப்படுத்த  'தமிழ் பிராமணர்' அதாவது 'தம்பிராஸ்' என்ற நவீன பெயருடன் தமது இன அடையாளத்தை தனித்து காட்ட முற்பட்டனர்.

 இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதை (பெரும்பாலும்) அமெரிக்காவில் நன்கு செட்டில் ஆகிவிட்ட தமிழே தெரியாத மாடர்ன் பார்ப்பன பிள்ளைகள் செய்துள்ளனர்!
 உலகப் பார்ப்பனர் இதைப் பின்பற்றி ட்ரென்டிங் இல் வைத்துள்ளனர்.

 இது ஆதிக்க சாதிவெறி என்றால் அவர்கள் 'பிராமணர்' என்றாலே போதுமானது!
 தமிழ் என்கிற இன அடையாளத்தை அதில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை!
 ஆனாலும் இயல்பாகவே இது நடந்துள்ளது!
 
இயல்பானது இனம்!
பார்ப்பனர் தமிழரே!
 

Sunday, 18 February 2024

வந்தேறிகளின் நீலிக்கண்ணீர்

வந்தேறிகளின் நீலிக்கண்ணீர் 

 தமிழர்கள் வந்தேறிகளின் சதியை உணர்ந்து குரல் எழுப்பினால் உடனே நீலி கண்ணீர் வடித்துக் கொண்டு வந்தேறிகள் உருட்டும் வழக்கதான உருட்டுகள் மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளன 

 முதலாக தமிழ்நாடு என்று நாடே இல்லை மூவேந்தர்கள் ஒற்றுமையாக இல்லை என்கிற ஒரு உருட்டு.  இதை இலக்கியச் சான்றுகளுடன் கல்வெட்டு சான்றுகளுடன் முறியடித்துவிட்டோம்.
 இலக்கியத்தில் தமிழரின் நிலம் தமிழ்நாடு என்று மொழியின் பெயரால் நாடாகவே குறிக்கப்பட்டுள்ளது.
 அதன் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன.
 அதேபோல தமிழ் இனமும் அதன் பண்புகளும் குறிக்கப்பட்டுள்ளன.
 மூவேந்தர்களும் மௌரியர் படையெடுப்பில் கரிகாலனின் தந்தை தலைமையில் தமிழர் கூட்டணி அமைத்து வென்றனர். இதை காரவேலன் கல்வெட்டு தமிர் சங்காந்த் என்று கூறுகிறது.
 இக்கூட்டணி தமிழர் ஆட்சி வீழும்வரை இருந்தது.
பல்வேறு மன்னர்களை அடக்கிக் கப்பம் கட்ட வைத்து பல்வேறு அரசர்களுடன் மண உறவுகள் செய்து கொண்டு மிகப்பெரிய பேரரசை கட்டியாண்ட ராஜேந்திர சோழனும் சுந்தர பாண்டியனும் தங்களுடைய ராஜமுத்திரையில் வில் மீன் புலி ஆகிய மூன்றை மட்டுமே வைத்திருந்தனர்.
 ஆக நாடு என்கிற உணர்விலும் இனம் என்கிற உணர்விலும் தமிழர்கள் ஒற்றுமையாகவே இருந்துள்ளனர். நிலத்தை மொழியின் பெயரால் குறித்த முதல் இனம் தமிழினமே!

  அடுத்த ஒரு உருட்டு சென்னை மாகாணத்தில் எல்லா மொழியினரும் இருந்தனர் அதுவே தெலுங்கர் இங்கு குடியிருப்பதற்கு காரணம் என்ற உருட்டு.
 சென்னை மாகாணத்தில் தமிழர் நிலப்பகுதியும் தெலுங்கு நிலப்பகுதியும் ஒரே ஆட்சியின் கீழ் இருந்ததால் தமிழர்கள் இழந்தது அதிகம்.
 முதலமைச்சர் பதவியில் ஆங்கிலேயருக்கு சாமரம் வீசிய தெலுங்கு ஜமீன்தார்களே இருந்தனர்.
 மாதிலங்கள் பிரிந்தபோது திருப்பதி காளகஸ்தி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வளமான தமிழர் நிலப்பரப்புகள் தெலுங்கர்களிடம் பறி போனது. சென்னை வரைக்கும் விழுங்க துடித்த தெலுங்கர்களிடமிருந்து தமிழர்கள் தலைநகரை படாத பாடுபட்டு காப்பாற்றி பிறகு திருத்தணி வரை மீட்டனர்.

 இன்னொன்று தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கருக்கு தெலுங்கே தெரியாது அவர்கள் பேசும் மொழி தெலுங்கு அல்ல என்று உருட்டுவது.
 இது முழு உண்மை இல்லை. தமிழ்நாட்டிற்குள் இருக்கும் தெலுங்கர்கள் பேசும் தெலுங்கு பழைய கால சுத்தமான தெலுங்கு.
 இது ஆந்திர தெலுங்கர்களுக்கு புரியாது ஆனால் தமிழ்நாட்டு தெலுங்கர்கள் ஆந்திரா தெலுங்கை புரிந்துகொள்ளும் அளவு அப்டேட்டாக இருக்கிறார்கள்.
 மதுரையில் உள்ள ஒரு தெலுங்கர் ஹைதரபாத் போனால் தெலுங்கை பேச முடியும் புரிந்து கொள்ள முடியும்.
  உலகிலேயே வேறு ஒரு தேசத்தில் குடியேறி 500 ஆண்டுகள் ஆகியும் தன் தாய் மொழியை அதுவும் இலக்கிய இலக்கண வளம் இல்லாத ஒரு மொழியை 15 தலைமுறையாக விடாமல் பேசி வருவது தமிழ்நாட்டில் இருக்கும் தெலுங்கர் மட்டுமே!
 ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு தொடர்ச்சியாக குடியேற்றமும் மண உறவுகளும் நடந்து வருவது மற்றும் தெலுங்கு பேசுவதை ஆண்ட பரம்பரை அடையாளமாக நினைப்பதும் இதற்கு காரணம் ஆகும்.

  தமிழர்களின் மொழிப் போரிலும் தமிழர்களின் எல்லை மீட்புப் போராட்டத்திலும் ஈழப் போராட்டம் நடந்த காலகட்டத்திலும் தற்போது தமிழர் அரசியல் உரிமை கேட்டு பேசி வரும் காலகட்டத்திலும் எந்த தெலுங்கரும் ஆதரவு தெரிவிப்பது இல்லை.
 இவர்களால் காட்ட முடிந்த ஒரே ஒரு உதாரணம் கீழ் தஞ்சையில் சீனிவாச ராவ் நடத்திய கம்யூனிஸ்ட் போராட்டங்கள் மட்டுமே.
 அவர் ஒரு விதிவிலக்கு என்றுதான் ஆகும்.
 தமிழர் ஸ்டேன் சாமி சத்தீஸ்கர் பழங்குடிகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடி சாகவில்லையா?!
அதே கீழ் தஞ்சையில் கோபாலகிருஷ்ண நாயுடு போன்ற தெலுங்கு ஜமீன்தார்கள் விவசாயக் கூலிகளை கொடுமைப் படுத்தியதை கண்டு கர்நாடகாவில் இருந்துதான் ஒரு தெலுங்கர் வந்து போராடினார் அருகில் உள்ள வந்தேறித் தெலுங்கர் போராடவில்லை. அப்படி கீழ் தஞ்சையில் விவசாய கூலிகளுக்காக களத்தில் இறங்கி குண்டடிப்பட்டது 5 பேரும் தமிழர்கள் தான். கொன்றது தெலுங்கு வந்தேறி முதலமைச்சர் அனுப்பிய போலீஸ்தான்.
 
 தமிழகத்தின் உள்ளிருக்கும் தெலுங்கர்கள் இன்னொரு உருட்டும் வைத்துள்ளனர்.
 அது பஞ்சம் பிழைக்க வந்தோம் நாங்கள் பாவம் என்கிற மாதிரி உருட்டுவது.
 ஆரம்பத்தில் இவர்கள் பஞ்சத்தாலும் இஸ்லாமிய படை எடுப்பாலும் அகதிகளாக வந்தனர்.
 அதன் பிறகு விஜயநகர அரசு எழுந்தபோது தெலுங்கர் பகுதிகளுக்கு பரவாமல் தமிழர் பகுதிக்கு அவர்கள் படையெடுத்து பாண்டிய நாட்டை பிடிக்க காரணம் இங்கே ஏற்கனவே குடி இருந்த தெலுங்கர்கள் தான்.
  இதன் காரணமாக விஜய நகரத்தின் கீழ் பெரும் ஆதிக்கத்தையும் அதன் பிறகு பாளையங்களையும் நிலவுடைமையையும் பெற்று அகதிகளின் வாரிசுகள் ஆதிக்க சாதியாக மாறினார்கள்.
 பாஞ்சாலங்குறிச்சி, ராஜபாளையம் வரைக்கும் இவர்கள் ஆதிக்கம் இன்று வரை கொடிகட்டி பறக்கிறது.

 தமிழகத்தில் இருக்கும் தெலுங்கர்களை தமிழர்கள் வெறுக்க காரணம் தமது இருப்புக்கு அதிகமாக ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்ல தமிழர் தமது உரிமைகளுக்காக குரல் எழுப்பும்போது ஆதரவு தெரிவிக்கா விட்டாலும் எதிர்ப்பது அல்லது குழப்புவது அது மட்டுமல்லாமல் தானாக கிடைக்க இருப்பதையும் கெடுத்து விடுவது.
 இப்படி தொடர்ச்சியாக உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது இன்று உதயநிதி வரை தொடர்கிறது.

 உலகத்தில் இப்படி ஒரு நன்றிகெட்ட இனம் இருப்பதாகத் தெரியவில்லை.

 இவர்கள் ஈவேரா, அண்ணா, கருணாநிதி, வைகோ போன்றோரை போராளிகள் என்று கட்டிவைத்த பிம்பம் இன்று உடைந்துவிட்டது.
 இதனால் சீனிவாச ராவை தூக்கிக்கொண்டு வருகின்றனர்.

 போராளி வேடம் கலைந்தவுடன் அப்பாவி வேடம் போடுகின்றனர்.
 தமிழர் ஏமாற வேண்டாம்.

 

Tuesday, 13 February 2024

குலாலா மட்டும் இல்லன்னா

குலாலா மட்டும் இல்லன்னா

 "கலம் செய் கோவே" அதாவது "பானை செஞ்சு தாங்க மகாராசா" என்கிற மாதிரி மரியாதையாக கூப்பிட்டு 'எனக்கு தகுந்த ஈமத்தாழி செய்து தா' என்று கணவனை இழந்த துக்கத்தில் பாடுகிறாள் ஒருத்தி (புறநானூறு 256).

 ஒரு தேர்ந்த குயவர் மண்ணை தன் விருப்பம் போல வளைத்து பானை செய்வது போல மன்னன் நாட்டை வடிவமைத்ததாக புறநானூறு (32) கூறுகிறது.
 
 கம்ப ராமாயணம் (3980) 'வன் தோள் குயவன் திரி மட்கலத்து' என்று தோள்வலிமை கொண்ட குயவர் சக்கரத்தைச் சுற்றுவது போல என்று மரியாதையுடன் உவமை காட்டுகிறது.

 பெரியபுராணம் 'திருநீலகண்டத்து குயவனாருக்கு' என்றும் 
 சித்தர் பாடல் 'நாலாறு மாதமாய் குயவனை வேண்டி' என்றும் குயவரை மரியாதையுடன் குறிக்கின்றன.

 கிபி 1837 இல் அமெரிக்க பயணி வரைந்த குயவர் ஓவியம் கொசவன் என்ற தலைப்புடன் இருக்கிறது அதில் பூணூல், கடுக்கன், தலைப்பாகை அணிந்த குயவர் பானை செய்வது போல உள்ளது (Seventy-two Specimens of Castes in India).

 ஆனா இவனுக சொல்ற கதைய பாருங்க!
 தமிழர்கள் சாதிவெறியோட குயவரை "கொசப்பய" னு சொன்னோமாம்!
சாதிக் கொடுமை பண்ணோமாம்!
 உடனே தெலுங்கு குலாலா ஓடிவந்து 'இனி நீங்களும் குலாளர் என்று அழைக்கப் படுவீர்களாக' னு தங்களோட பெயரை குயவருக்கு சூட்டி மரியாதை வாங்கித் தந்தானுகளாம்!

குயவர் என்கிற பெயரையும் வேளார் என்கிற பட்டத்தையும் மீட்க குயவர் குரல் எழுப்பினால் சாதி ஒற்றுமை கெட்டுவிடுமாம்!

 அதனால் அரசின் சாதிப் பட்டியலில் உள்ளபடி 'குலாலா சாதியின் ஒரு பிரிவுதான் குயவர்' னு ஒத்துக்கிட்டு வேளார் பட்டம் போடாம ஒற்றுமையா இருக்குற இடம் தெரியாம  இருக்கணுமாம்!

 இந்த அநியாயத்த கேக்க யாருமில்லயா?! 
 

 

 

Wednesday, 16 August 2023

வீரப்பனை காட்டிக்கொடுத்த மாவோயிஸ்ட்

வீரப்பனை காட்டிக்கொடுத்த மாவோயிஸ்ட்

 வீரப்பனைப் பிடிப்பதில் தமிழக காவல்துறை மாவோயிஸ்ட் என்று அறியப்படும் நக்சலைட் ஆயுதப் போராளி ஒருவரை அழைத்து வந்து வீரப்பன் குழுவுக்கு  வெடிகுண்டு பயிற்சி அளிப்பதாகக் கூறி ஏமாற்றி மயக்கம் ஏற்படும் குண்டை வெடிக்க வைத்து உயிருடன் பிடித்துள்ளனர்.
 இப்போதும் அந்த நபர் முழுநேர மாவோயிஸ்ட் மக்கள் படை போராளியாக இருக்கிறாராம்!
 அதாவது தேசத் துரோகி என்று இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி தமிழக காவல்துறையுடன் கைகோர்த்து தமிழ்தேசிய சக்தியாகத் திகழ்ந்த வீரப்பனாரை வீழ்த்தியுள்ளார்.

 தகவலுக்கு நன்றி: சிவா என்கிற சிவசுப்பிரமணியன் அவர்களது ராவணா யூட்யூப் சேனல் பேட்டி 
 

Thursday, 2 May 2019

சாதியம் vs தமிழ்தேசியம்

சாதியம் vs தமிழ்தேசியம்

எப்படி ஒரு திராவிடவாதியின் வடவர் எதிர்ப்பு தமிழ்தேசியம் ஆகாதோ....
அதேபோல,
ஒரு சாதியவாதியின் திராவிட எதிர்ப்பு தமிழ்தேசியம் ஆகாது.
-------
சில சாதி வெறியர்கள் இருந்தனர்.
அவர்கள் தமிழ்தேசியம் பேசிக்கொண்டே
"நாங்கதான் பாண்டியர்! நாங்கதான் மள்ளர்!
விவசாயத்தை கண்டுபிடித்ததே நாங்கள்தான்!
எங்க திணை மருதம்!
பாவாணரே கூறிவிட்டார்!
எங்க இம்மானுவேல் சேகரனை தேவர் கொன்னுட்டாரு!"
என்று கத்தினார்கள்.

வடநாட்டு கூர்மி சாதியை அழைத்து வந்து குடும்பர் மாநாடு போட்டார்கள்.
போட்டியாக இம்மானுவேல் சேகரனார் குருபூஜை நடத்தினார்கள்.
பசுபதி பாண்டியன் வளரவிடாமல் தடுக்க தி.மு.க களமிறக்கிய கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்று தெரிந்தும் அரசியல் அடையாளம் போய்விடக்கூடாது அவரை ஆதரித்துவந்தனர்.
இறுதியாக தென்தமிழ்நாடு தனியாக பிரியவேண்டும் என்பதில் போய் நின்றனர்.

பதிலடியாக ,
"மள்ளர் என்பது வீரர் என்று பொருள் தரும் பொதுவான சொல்.
மருதம் மட்டுமுன்றி பிற திணைகளிலும் மள்ளர் இருந்தனர்.
பள்ளருக்கும் பாண்டியருக்கும் பொதுவான வேர்ச்சொல் உள்ளதென்று பாவாணர் கூறவதாக நீங்கள் கூறுவது பொய்.
இம்மானுவேல் சேகரன் அத்தனை பெரிய ஆள் கிடையாது.
அவர் பற்றி வந்த ஆகப்பெரிய புத்தகத்தில் 300 பக்கங்கள் உண்டு.
அதில் சொந்தக்கதை சோக கதை போக 3 பக்கம் கூட அவர் போராடிய வரலாறு இல்லை.
தேவர் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தமைக்கு சாதி காரணம் இல்லை.
சமாதான கூட்டத்திற்கு வரவேண்டிய எம்.எல்.ஏ (அவரும் பள்ளர்) வராமல் அவரது எடுபிடி இம்மானுவேலை அனுப்பியதுதான் காரணம்.
பிறகு இருவரும் சமரசமாகி சாமாதானத்திற்கு அழைப்பு விடும் கூட்டு அறிவிப்பில் கையெழுத்தும் போட்டனர்.
அந்த சமாதான அறிக்கை வெளிவரக்கூடாது.
சாதியாக நாம் பிரிந்து கிடக்க வேண்டும் என்றுதான் அன்றிரவே இம்மானுவேலைக் கொன்று தேவர் மீது பழிபோட்டுவிட்டனர்.
(தேவருக்கு நியாயம் கேட்பது போல காமராசரை வீழ்த்தி ஆட்சியையும் பிடித்துவிட்டனர்.)
இம்மானுவேலார் கொலையான பிறகும் கூட பள்ளர் அதிகமாக வாழ்ந்த தொகுதியில் தேவர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
இறக்கும்போது தேவர் சொத்தில் 5 இல் 1 பங்கு பள்ளருக்கு கிடைத்தது.
மள்ளர் என்கிற பெயரில் குடும்பர் மீதி பள்ளர்களை ஏய்க்கின்றனர்.
மள்ளரியத்தை தமிழ்தேசியம் சுமப்பது அதிகநாள் நீடிக்காது"
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
---------------
அடுத்து சில சாதிவெறியர்கள் இருந்தனர்,
"நாங்கதான் தேவரு!
முக்குலம் நாங்க ஒரே சாதியோட மூன்று பிரிவு!
நாங்கதான் மூவேந்தரு!
தேவர்கள காமராஜ் நாடார் பழிவாங்கிட்டாரு!
தமிழ்நாட்டுல எங்கள விட்டா வீரனே கிடையாது.
அந்த படம் இருக்கு இந்த பாட்டு இருக்கு!
போர்த்துகீஸ் வரைபடத்துல மறவர்நாடு இருக்கு.
10,15 ஜமீன் நாங்கதான்!"
என்று ஆரம்பித்தார்கள்.
தேவர் குருபூஜை என்ற பெயரில் ரவுடித்தனம்.
ஊருக்கு ஊர் முச்சந்தியில் தேவர் சிலை.
4,5 சாதிக்கட்சிகள்.
எதற்கெடுத்தாலும் பள்ளரை வம்புக்கு இழுப்பது என்று சாதிவெறிக்கு இலக்கணமாக மாறி நின்றனர்.

பதிலடியாக,
" தேவர் என்பது சாதி கிடையாது அது ஒரு பட்டம்.
முக்குலம் மூன்றும் தமக்குள் எந்த தொடர்பும் அற்றவை.
முக்குலத்தோர் என்கிற பெயரில் அம்மூன்று குல மக்கட்தொகையில் 60% இருக்கும் அகமுடையார்களை ஏய்த்து அரசியல் செய்கிறீர்கள்.
பாவாணர் பார்வையில் அகமுடையார் நாட்டுப்படை, கள்ளர் காட்டுப்படை.
மறவர் பொதுவான வீரர் பெயர்.
காமராசர் காலத்தில் நடந்தது இரு கட்சிகளுக்கு இடையேயான மோதல்.
அப்போது காமராசர் பக்கம் அதிகம் இருந்தோர் முக்குலம்.
தேவர் பக்கம் அதிகம் நின்றது பள்ளர்கள் (தேவரின் அப்பா கூட எதிர்க்கட்சிதான்).
மற்றபடி காமராசர் நேரு குடும்பத்தின் அடிமை.
அவரால் நாடார்கள் அடைந்த சீரழிவுக்கு பதிலடியாகத்தான் தேர்தலில் அவரை சொந்த சாதி என்றும் பாராமல் தோற்கடித்தனர்.
பள்ளரும் மறவரும் பூலித்தேவன் காலத்தில் இருந்தே ஒன்றுக்குள் ஒன்று.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் கூட 8 பேர் பள்ளர்தான்.
நீங்கள் சண்டையிட்டு வருவதால் பூலித்தேவன் இடத்தில் கொள்ளைக்காரனான கட்டபொம்மனை அமரவைத்து புகழ்கின்றனர்.
கள்ளர் தன்னரசு கூட்டமைப்பு வெள்ளையரிடம் பேசிய வீரவசனத்தை கட்டபொம்மன் பேசியதாக படமெடுத்துவிட்டனர்.
மறவர் பாளையங்கள் கொசுறு.
அதைவிட தெலுங்கு பாளையங்கள்தான் தமிழகம் முழுவதும் இருந்தது."
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
----------------
அடுத்து சில வன்னியசாதி வெறியர்கள்,
"நாங்கதான் வன்னியகுல சத்திரியர்.
அக்கினி குண்டால இருந்து பொறந்த அக்னிகுலம்.
தமிழினத்திலேயே பெரும்பான்மை நாங்கதான்.
வீரப்பன், தமிழரசனை நீங்க யாருமே கொண்டாடலை.
வன்னியர்களை காமராசர் ஏமாத்திட்டார்.
எங்கயும் தெற்கத்தி ஆதிக்கம்.
சென்னை முழுக்க நாடார் ஆதிக்கம்.
அதனால தனி வடதமிழ்நாடு வேணும்"
என்று கத்தினார்கள்.

பதிலடியாக,
" வன்னியர் என்பது பட்டமே!
வன்னியர் என்கிற பட்டத்தை பயன்படுத்தி பள்ளிகள் படையாச்சிகளை முட்டாளாக்குகிறீர்கள்!
வீரப்பன், தமிழரசன், காடுவெட்டி குரு எல்லாரும் படையாச்சிதான்.
பதவியில் மட்டுமே இருப்பது பள்ளி!
திராவிட கட்சிகளை தூக்கி சுமப்பது வடக்குதான்.
பெரியார் கூடவே இருந்ததும் கருணாநிதி கூடவே இருந்ததும் வன்னியர்தான்.
தெற்கை விட வடக்கு பின்தங்கியதாகவோ
வடக்கில் தெற்கத்திகள் ஆதிக்கம் செலுத்துவதாகவோ நீங்கள் நிறுவ முடியாது.
தலைநகர் அனைவருக்கும் பொது.
சென்னையை ஆந்திராவுக்கு போகாமல் தடுத்ததே ம.பொ.சி என்கிற நாடார்தான்.
நாடார்களை இழிவு படுத்தும் மத்திய பாடத்திட்டம் வந்தபோது அதை கண்டித்து நீக்கியது ராமதாஸ்தான்.
நாடாரான சீமான் அளவுக்கு வீரப்பனுக்கு வெளிப்படையான ஆதரவு எந்த இயக்கமும் கட்சியும் தெரிவித்ததே கிடையாது.
தற்போதுகூட உங்கள் இருப்பிடத்துக்கு வந்த பெரிய ஆபத்தான எட்டுவழிச் சாலையை எதிர்த்து முதலில் சிறை சென்றதும் முதலில் வழக்கு போட்டு அந்த ஆபத்தை தடுத்து நிறுத்தியதும்கூட நாம்தமிழர்தான்."
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
-------
அடுத்து, சில சாதிவெறியர்கள் இருந்தனர்.
"நாங்கதான் பரையர்.
சாவுக்கு அடிக்கிற பறைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.
பரைனா பழமை.
நாங்கதா மூத்தகுடிக்கே மூத்தகுடி!
ஆதாரம் அந்த பழமொழி இந்த பழமொழி!
நாங்கதான் பூணூல் போட்ட ஒரிஜினல் பார்ப்பனரு.
வேதம் படித்த பறையூர் சாக்கையன் பற்றி இலக்கியத்துல வருது.
குலதெய்வ பூசாரிகள்லாம் நாங்கதான்!
திருவள்ளுவர், புத்தர் நாங்கதான்!
பௌத்தம்தான் எங்க நெறி!"
என்று கத்தினார்கள்.
சாதிவெறியையும் தலித்தியத்தையும் கலந்து தூக்கிக்கொண்டு
திருமாவளவன் (கருணாநிதி காலை நக்கிய அதே நாவால்) இடும் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு வன்னியர் பெண்களை துரத்த ஆரம்பித்தனர்.
இவர்களுக்கு ஆதரவாக தி.மு.கவும் பறையர் சாதி போலீஸ் வக்கீல் அடங்கிய கட்டப்பஞ்சாயத்து கும்பலும் இருந்தது.
இறுதியில் ராஜபக்ச புத்தரை வணங்கும் படத்தைப் போட்டு சாக்கியமுனிகள் வாழ்த்தியதில் போய் முடிந்தது.

பதிலடியாக,
"பரையர் என்பது தவறு.
சங்க இலக்கிய பாடலில் கடம்பன், துடியன், பாணன் என நான்கு குடிகள் சிறப்பித்து கூறப்படுகின்றன.
அதில் நான்குமே இசைக்கருவி சார்ந்த பெயராக இருக்கும்போது நீங்கள் எப்படி பழமை சார்ந்த பெயராக இருக்க முடியும்?!
பழமொழிகள் காலத்துக்கு காலம் திரியும். அவை சான்றாகாது.
இலக்கியத்தில் வரும் பறையூர் சாக்கையன் சாக்கைக்கூத்து ஆடும் கலைஞன் என தெளிவாகவே உள்ளது.
பூணூல் பல சாதியினர் போடுவது.
அது வில்லின் நாண்.
150 ஆண்டு முந்தைய பூணூல் போட்ட குயவர் ஓவியமும் பூணூல் போட்ட ராசராச சோழன் பெரியம்மா சிலையும் கூட உண்டு.
பறை என்றால் கேவலமில்லை.
பறையில் பலவகை உண்டு.
பூசைக்கு திருமணத்துக்கு என்று பலவிதமான பறைகள் இருந்தன.
ஆண்டாள்கூட பறையடித்து பாடுகிறாள்.
குறவர்தான் உண்மையில் மூத்தகுடி (நரிக்குறவர் இல்லை. அவர்கள் மராத்தியர்).
உங்களை ஆதித் தமிழர் என்று குறிக்காமல் ஆதி திராவிடர் பதிவாக்கி வைத்துள்ளனர்.
திருமாவளவன் என்கிற திமுக கொத்தடிமையை நம்பாதீர்கள்.
அவன் மலைச்சாமி தேவேந்திரன் ஆரம்பித்த தலித் பேந்தர்ஸ் அமைப்பை ஆட்டையைப் போட்டவன்.
இடைக்காலத்தில் நன்றாக இயங்கி பிரபாகரனாரைச் சந்திக்கும் அளவு போனான்.
பின் அவனது அசிங்கம் ஏதோ திமுக விடம் மாட்டி இன்று வரை பல அவமானங்களைச் சந்தித்து வருகிறான்.
ராஜபக்சவை சந்தித்து பல்லைக் காட்டியபிறகும் அவனை நம்புவது பச்சையான சாதிவெறி.
வெறுமனே ஆதரவு தெரிவித்தே வந்தேறி சக்கிலியர் இட ஒதுக்கீடில் தனியாக உள் ஒதுக்கீடு வாங்கி 1% அதிகம் பயனடைந்து உங்களை பின்னுக்குத் தள்ளி நன்கு முன்னேறிவிட்டனர்.
ஏக ஹிந்தி வெறியன் அம்பேத்கரை தூக்கிக்கொண்டு திரியாதீர்கள்.
அவன் ஆங்கில அடிமை.
வன்னியரையும் உங்களையும் மோதவிட்டு அந்த இடைவெளியில் படுத்துதான் திமுக இறுதி மூச்சை விட்டுக்கொண்டு இருக்கிறது"
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
----------
அடுத்து சில சாதி வெறியர்கள் இருந்தனர்.
"நாங்கதான் ஆரியர்.
நாங்கதான் பகவான் தலைல இருந்து பிறந்து மனுதர்மம் படைச்சு சாதிய உருவாக்கினது.
ஹிந்து மதம்தான் பழமையானது.
அகண்ட பாரதம் அமைப்போம்"
என்று எவனோ எழுதிக்கொடுத்ததை ஒப்பித்து செய்துவந்தனர்.

பதிலடியாக,
" ஆரியர் என்பதே கற்பனை!
அதை உருவாக்கிய மாக்ஸ் முல்லரே அதைத் தவறு என்று ஒத்துக் கொண்டார்.
ஆரியருகும் சமஸ்கிருத மொழிக்கும் பார்ப்பனருடன் தொடர்பு எதுவும் இல்லை.
பார்ப்பனர் வேறு பிராமணர் வேறு.
சாதி தொழில்வழி வந்தது.
ஆரியர் காலம் என்று கூறப்படும் காலத்தில் வடயிந்தியா வந்த ரோம் நாட்டு பயணி ஏழ்வர்ணம் நடைமுறையில் இருப்பதாகவும் அதில் உயர் அடுக்கு கவிஞர் மற்றும் விவசாயிகள் என்றும் குறித்துள்ளார்.
மிகப் பழமையான தொல்காப்பியம் கூட பார்ப்பனர் பற்றி நல்ல விதமாகக் கூறுகிறது.
தமிழுக்காகவும் தமிழர் உரிமைக்காகவும் பாடுபட்ட எத்தனையோ பார்ப்பனரைக் காட்டமுடியும்.
இன்று இந்துத்துவ வெறியரில் பல சாதியினரும் உண்டு.
நீங்கள் இந்துத்வா என்ற பெயரில் உள்ளே நுழைந்திருக்கும் வந்தேறி  பிராமணர்களின் மூளைச் சலவைக்கு ஆளானவர்கள்.
மதத்தின் அடிப்படையில் நாடுகள் அமைவதில்லை.
எங்கள் பார்ப்பனர்கள் இனப்பற்றுக்கு முன் பிராமணிய-இந்துத்வா கட்டாயம் தோற்கும்"
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
-------
அடுத்து,
" நாங்கதான் நாடாரு!
காமராசர் இல்லனா எவனும் படிச்சிருக்கவே முடியாது!
நகை கடை, ஜவுளிக்கடை, மளிகைக் கடை எல்லாம் எங்க கைல தான்!"
என்று சரத்குமார் படத்தை வைத்துக்கொண்டு திரிந்தனர்.

பதிலடியாக,
"காமராசர் உங்களுக்கு என்று எதுவும் செய்யவில்லை.
கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைத்த நேசமணிக்கு அவர் எந்த ஆதரவும் தரவில்லை.
தமிழகத்திற்கு சேரவேண்டிய வளமான மாவட்டமான இடுக்கியை கேரளாவுக்கு தாரைவார்த்தார்.
ம.பொ.சி திருப்பதி வரை கேட்டு திருத்தணி வரை மட்டுமே கிடைத்தபோதும் சும்மாயிருந்தார்.
இந்தியெதிர்ப்பில் பல கொலைகளைச் செய்தது அவரே!
தமிழ்நாடு என்ற பெயர்மாற்ற உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்க நாடாரை சாகவிட்டது அவரே!
அதனால்தான் சிவகாசி நாடார்கள் அவரை பதவியிலிருந்து தூக்கியெறிந்தனர்.
உங்களுக்கான தலைவர் நேசமணிதான்.
நீங்கள் பெரும்பான்மையாக இருக்கும் குமரி மாவட்டத்தை மத ரீதியாக பிரித்து அடிமைகளை பதவியில் அமர்த்தி அடக்கியாள்கின்றனர்.
நீங்கள் கணிசமாக வாழும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் கொண்டுவந்து உங்களுக்கும் பள்ளர்-பரதவருக்கும் சாதிச்சண்டை மூட்டிவிட்டு ரவுடிகளை வளர்த்துவிட்டு  திசைதிருப்பியதே இன்று துப்பாக்கிச்சூடு வரை போய்விட்டது"
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
-------
சாதியம் எப்போதெல்லாம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் தமிழ்தேசியம் அதை நசுக்கத் தவறியதில்லை.

சாதியை அனைவரும் வெறுக்கின்றனர் என்றால் அது காரணமில்லாமல் இல்லை.

சாதி சமத்துவம் ஏற்பட வந்தேறிகள் போலவே சாதிவெறியர்களும் தடையாக உள்ளனர்.

எனவே சாதி ஒழிப்பு என்கிற வந்தேறிகளின் பித்தலாட்டத்தை எதிர்க்கும் அதே நேரத்தில்
சாதிவெறியர்களின் அளவுகடந்த அடாவடியையும் எதிர்த்தே வந்துள்ளோம்.

Friday, 15 February 2019

தமிழக வீரரை காஷ்மீரில் வைத்து கொலை செய்த ஹிந்தியர்களே

தமிழக வீரரை காஷ்மீரில் வைத்து கொலை செய்த ஹிந்தியர்களே!

காஷ்மீரிகளின் நிறம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

தோற்றம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

மொழி உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

மதம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

உடைகள் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

காலநிலை உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

மண்வகை உங்களுடன் ஒத்துப்போவதில்லை!

உணவுமுறை உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

கலாச்சாரம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

அவர்கள் வரலாற்றில் புராணங்களில் இலக்கியங்களில் உங்கள் பெயர் கூட இல்லை!

இன்றுவரை காஷ்மீருக்கு நேரடி நிலவழித் தொடர்பே இல்லை!

அவர்களை நீங்கள் போர் செய்து வென்று உங்கள் நாட்டுடன் இணைக்கவும் இல்லை!

அதாவது தமிழகத்தை விடவும் அந்நியமான ஒரு அண்டை நாட்டை ஆக்கிரமித்து உள்ளீர்கள்!

அதன் வளங்களை கொள்ளையடித்து வருகிறீர்கள்!

அங்குள்ள பெண்களைச் சீரழித்து வருகிறீர்கள்!

காஷ்மீர் விடுதலைக்காக ஆயுதம் தாங்கி போராடிய அனைவரையும் கொன்று ஒழித்து பதினைந்து ஆண்டுகள் ஆகியும்
நேரு காலத்தில் கொடுத்த உறுதிமொழிப்படி பொதுவாக்கெடுப்பு நடத்தாமல் சண்டித்தனம் செய்கிறீர்கள்!

அத்தோடு நில்லாமல் தேர்தல் நேரத்தில் நீங்களே குண்டு வைத்து பல மாநில வீரர்களைக் கொன்று
நாடு முழுக்க அனுதாப அலையையும் எழுப்பி
அரசியல் ஆதாயமும் அடைகிறீர்கள்!

இத்தகைய இழிவுக்கு
உங்களது ஆக்கிரமிப்பில் இருக்கும் மற்றொரு நாட்டு மக்களான நாங்கள்
பெருமை வேறு படவேண்டுமா?!

Friday, 23 November 2018

நம் ஒற்றுமை கண்டு அனத்தும் வந்தேறிகள்

நம் ஒற்றுமை கண்டு அனத்தும் வந்தேறிகள்


 இந்த படத்தின் SC என்கிற எழுத்துகளை திரித்து பல கதைகள் எழுதிவிட்டனர்.


 எப்படியெல்லாம் திரித்து எழுதுகிறார்கள் பாருங்கள்.


ஒரு உதாரணம்...


 அந்த ஊரில் இருக்கும் உயர்சாதியினர் நிவாரண பொருட்களை பட்டியல் சாதி (SC) மக்களுக்கு கிடைக்க விடுவதில்லையாம்.


 அதனால் அவர்கள் தனியே வேறுவழியில் இப்படி எழுதி வைத்துள்ளனராம்.


 இவர்களுக்கு உதவி ஒரு கேடா?!

ஐயகோ புயல் மரங்களை மட்டும் ஏன் அடித்தது?! 

சுனாமி வந்து ஏன் டெல்டாவையே தூக்கவில்லை?! 

 சோத்துக்கு இல்லாவிட்டாலும் சாதிவெறிக்கு குறைச்சல் இல்லையே?!


 என்றெல்லாம் கைவலிக்க எழுதினர்.

 சில தமிழர்களும் இதில் குழம்பி அதே போல எழுதியதும் நடந்தது.


  ஆனால் உண்மையில் Secures center எனப்படும் பாதுகாப்பு கட்டிடம் சுருக்கமாக SC என்று அழைக்கப்படும்.


 இது பெரிய ஆலைகள், நிறுவனங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டப்பட்டு இருக்கும்.


 (தமிழகத்தில் இப்படியான கட்டிடங்கள் பரவலாக இல்லை)


 எதாவது ஆபத்து என்றால் மக்கள் இங்கே வந்து பாதுகாப்பாகத் தங்கிக்கொள்வர்.


 அப்படியான ஒரு பாதுகாப்பு கட்டிடத்தில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.


 அதற்கு வழிகாட்டவே இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.


 கீழே தமிழிலும் "புயல் பாதுகாப்பு கட்டிடம்" என்று எழுதப்பட்டுள்ளது.


 இதேபோல பல வேலைகளில் வந்தேறிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


 பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் விலைபோய்விட்ட நிலையில் சமூக ஊடகங்களே தமிழர்களுக்கு தகவல்களை வழங்கி வருகின்றன.


 இதில் தமிழர்களுக்கும் வந்தேறிகளுக்கும் ஒரு போரே நடந்துவருகிறது.


 புயல் கரைகடந்த மறுநாளே சென்னைக்கு எவ்வளவு உதவினோம்?!

 சென்னைக்காரன் எவனும் வரவில்லை?!

 டெல்டாவை தமிழ்நாடு மதிக்கவில்லை!

கேரளாவுக்கு உதவினீர்கள் டெல்டாவுக்கு உதவ்வில்லை!

 என்று தொடர்ச்சியாக டெல்டா மக்கள் பிற தமிழர்களை மண்வாரித் தூற்று சாபமிடுவது போல எழுதிக்கொண்டே இருந்தனர்.


 ஆனால் சமூக ஊடகங்களின் மூலம் செய்தி அறிந்த தமிழக மக்கள் புயல் பாதித்த மூன்றாவது நாளிலிருந்து உதவிகளை அனுப்பத் தொடங்கினர்.


 ஆனாலும் வந்தேறிகள் சாபங்கள் நிற்கவில்லை.

 இனி எங்கேயும் டெல்டா உதவிக்கு வராது என்று மிரட்டல் பதிவுகள் வேறு.


 சென்னையிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் சென்றடைந்த பிறகும் 'டெல்டாவுக்கு உதவவில்லை' என்று குற்றம் சுமத்தும் வசைபாடல் பதிவுகள் வந்த வண்ணம் இருந்தன.

 அதன் பிறகுதான் நின்றன.

 

 இதிலே மலையாள வந்தேறிகள் பழைய படம் ஒன்றை எடுத்துப்போட்டு "கேரளா உதவுகிறது" என்று போட்டனர்.

 அதை ஆதாரத்தோடு முறியடித்துவிட்டாலும் பினராயி விஜயன் கேரள மின் அமைப்பாளர்களை அனுப்பியதை பெரிதாக பரப்புரை செய்தனர்.

 நேற்று 27 லாரிகளில் கேரளா கழிவுகளை அனுப்பிய செய்தி மலையாள திரிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.


 களத்தில் 'நாம் தமிழர்' இறங்கிய பிறகு வந்தேறிகளின் அனத்தல் அதிகமாகிவிட்டது.


 எவரையும் விட முதலிலிருந்தே களத்தில் பணியாற்றியது இசுலாமியத் தமிழர்.

 உணவு கொடுப்பதில் அவர்களை மிஞ்ச ஆளில்லை.

 

 இப்போது வந்தேறி கும்பலுடன் காவி கும்பலும் சேர்ந்துகொண்டது.

 "நாய்க்கறி பாய்" என்று பல பதிவுகள் வந்தன.

 அது ஆட்டுக்கறி என்பது நிரூபனம் ஆன பிறகு "பொன்.ராதாகிருஷ்ணன் செருப்படி வாங்கிட்டார்" என்று குட்டிக்கரணம் அடித்தனர்.

 காவிகளின் ராஜதந்திரம் அனைத்தும் வழக்கம்போல காமெடியில் முடிந்த்து.


ஆனால் வந்தேறிகளின் 'கூட இருந்தே கழுத்தை அறுக்கும்' வேலைகளைத் தொடர்ந்து செய்துவந்தனர்.


 உதவ போனால் கொள்ளை அடிக்கிறார்கள்!

அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை பொருட்களை தடுக்கிறார்கள்!

 களத்திற்கு செல்வோர் கையிலிருந்து நிறைய பணம் போடவேண்டும்!

 போக சாலையில்லை! 

பெட்ரோல் கிடைக்காது!

மழை வரப்போகிறது!

இன்னொரு புயல் வரப்போகிறது!

உதவ போனால் உங்களுக்கே சோறு கிடைக்காது!

என்றெல்லாம் வதந்தி பரப்பி உதவி செய்யும் மனப்பான்மையை அழிக்க நினைத்தனர்.


 நாப்கின் சேகரிக்க பதிவுபோட்ட பெண்களை "ஜட்டியும் சேர்த்து கொடுங்க" என்று மனிதத்தன்மையே இல்லாமல் கிண்டல் செய்தவர்கள் உண்டு.


 இந்த நேரத்தில் டெல்டா மக்கள் உதவிக்கு வந்த வண்டிகளில் விழுந்த தென்னை மரத்தின் இளநீர் காய்களை நிரப்பி அனுப்பும் படங்கள் வெளியாகி அனைத்து சதிகளையும் தவிடுபொடி ஆக்கின.


 முதலில் களத்திற்கு சென்றவர் சீமான்.

 உடனே சீமான் கார், பாடிகாடுகள் என்று வசதியாக வாழ்வதாக ஒரு பதிவு வலம் வந்தது.


 உடனே அன்புமணி எங்கே?

 ராமதாசு எங்கே? வேல்முருகன் எங்கே? தினகரன் எங்கே? என்றெல்லாம் பதிவுகள் வலம் வந்தன.

 

 வேல்முருகன் மற்றும் தினகரன் ஆகியோரும் களத்திற்கு சென்றனர்.

 அன்புமணி இந்த விடயத்தில் சொதப்பிவிட்டார். 

 ஆனால் பாமக சார்பில் நிவாரணம் அனுப்பியதுடன் களத்திலும் பணி செய்த பலர் இருந்தனர்.


 நடிகர் விஜய் உதவியதும் பொறுக்காமல் அவரை வசைபாடியும் சர்கார் பட லாபத்தை அப்படியே கொடுத்துவிட்டார் என்று கிண்டலடித்தும் பரப்பினர்.


 பதிலுக்கு அஜித்தை கிண்டலடித்து பதிவுகள் வர 

 இந்த இரண்டுக்குமே உண்மையான ரசிகர்கள் காரணமில்லை என்று அறிந்து சமாதானம் செய்யும் வகையில் இருதரப்பு ரசிகர்களும் பதிவுகள் இட்டனர்.


 அப்போதுதான் இந்த எஸ்.சி படம் வெளியானது.

 மீண்டும் கதைகள் புனைந்து பரப்பினர்.


 ஆனால் எல்லாவற்றையும் தாண்டி தமிழகம் முழுவதிலிருந்தும் டெல்டாவை மீட்டெடுக்க நிவாரணம் போய்க்கொண்டே இருக்கிறது.


 களத்தில் சீமான் அண்ணனின் காணொளிகள், 

புற்றுநோயால் இறந்த தன் மகளுக்கு கிடைத்த இழப்பீட்டை நிவாரணமாக தந்த குடும்பம்,

 பாளையங்கோட்டை கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் செருப்புகளைத் துடைத்து நிதி திரட்டிய இளைஞர்,

 சிறையில் சம்பாதித்த பணத்தில் நிவாரணம் வழங்கி நளினி அக்கா,

 உண்டியல் பணத்தை கொடுத்த சிறுமிகள்,

 நான்காவது நாளே ஐரோப்பிய ஈழத்தமிழர் அனுப்பிய பொருட்கள் மற்றும் சூரிய ஒளி சேமிப்பு விளக்குகள் ஆகியன குறிப்பிடத் தகுந்தன.


 (இது தொடர்பாக ஒரு ஆல்பம் போட்டுள்ளேன்)


 தமிழர்கள் ஒற்றுமையாக செயல்படுவது பொறுக்க முடியாமல் அனத்திக்கொண்டு அடுத்த திரிப்புக்கு எதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டு உள்ளனர் வந்தேறிகள்,

அதிலும் குறிப்பாக டெல்டாப் பகுதி வந்தேறிகள்.


பாவம்!

Saturday, 4 November 2017

பிரிவினையைத் தூண்டும் திராவிடியா

தமிழன்:-
என்னடி திராவிடியா!
எப்பவும் எதாவது உளறி வாயக்குடுத்து அடிவாங்கி எங்கள பிசியாவே வெச்சிருப்ப?!
இப்ப என்ன சத்தத்தையே காணோம்?!
வேட்டி ஆபாச உடைனு சொல்லி மூத்திரசந்துல குத்து வாங்குனதோட சரி?!
ஆம்பளைக்கு தாலி கட்றது,
கழுதைக்கு பாட கட்றது,
சுடிதாருக்கு பேன்ட் அவசியமானு பட்டிமன்றம் போடுறது இப்டி எதாவது பண்ணுங்க.
டைம் பாஸ் ஆகமாட்டிக்குதுல!

திராவிடியா:-
அது வந்துங்க, எங்க வடதமிழ்நாடு ப்ராஜக்ட் போயக்கிட்டு இருக்குதுல?!
கடைசியாதான் எறக்கலாம்னு வச்சிருந்தோம், ஆனா கடைசி சீக்கிரமே வந்திருச்சு.
இப்ப எதாவது டிஸ்டப் பண்ணா எங்க காவி முதலாளி கோவிச்சுக்குவாரு.

தமிழன்:-
ஓ அந்த வடைதமிழ்நாடு பொரியலியக்கம் உங்க ஏற்பாடுதானா?!

நாப்பது பேர் கூட வரலயாமே?!
அவங்களும் மழைக்கு ஒதுங்குன கூட்டமாமே?!

இதுக்கு முன்னாடியே
சிங்களவன் ஈழத்தமிழர் மத்தில இததான பண்ணாங்க?!

இசுலாமியத் தமிழன் vs பிற தமிழன்
புலம்பெயர் தமிழன் vs தாயகத் தமிழன்
வடக்கு தமிழன் vs கிழக்கு தமிழன்
யாழ் வெள்ளாளர் vs வன்னி மக்கள்

இப்படி பல ப்ராஜக்ட்டுகள் போட்டாங்களே?!

அத பாத்து காப்பியடிச்சு திராவிடியாக்களும்

தேவர், வன்னியர், கவுண்டர் vs பிற சாதிகள்
நாம்தமிழர் vs தனித்தமிழ்நாடு
நாம்தமிழர் vs பா.ம.க
தமிழ்தேசிய கிறித்துவர் vs இந்து தமிழர்கள்
சீமான் vs நாயக்கர்
வன்னியர் vs நாடார்
நாம்தமிழர் vs விசிக
தமிழ்தேசியம் vs பறையர்
தமிழ்தேசியம் vs தலித்தியம்

இது மாதிரி போட்ட பல ப்ராஜக்ட்டுகளும் ஆரம்பிச்ச ஒடனே முடிஞ்சு போச்சே?!

திராவிடியா:-
என்னங்க நீங்க?
பார்ப்பனர் vs பார்ப்பனரல்லாதார்
வன்னியர் vs பறையர்
மறவர் vs பள்ளர்
இந்த ப்ராஜக்ட்லாம் சக்ஸஸ் ஆகி இன்னும் ஓடிகிட்டு இருக்கே!

சிங்களவனுக்கு மத பிரிவினை சக்ஸஸ் ஆனமாதிரி எங்களுக்கும் எதாவது ஒண்ணு சக்ஸஸ் ஆகும்.
அத வச்சு இன்னும் 30 வருசம் வண்டிய ஓட்டுவோம்.
அதுவர ட்ரை பண்ணிட்டே இருப்போம்.
எவ்வளவு அடிவாங்கினாலும் கடைசி வர உங்கள ஒண்ணுசேர விடவேமாட்டோம்.

தமிழன்:-
பாப்போம்டி! எத்தன நாளைக்குன்னு!

Saturday, 30 April 2016

புலிகள் செய்யாத காத்தான்குடி படுகொலை

புலிகள் செய்யாத காத்தான்குடி படுகொலை

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை ஆகஸ்ட் 03, 1990இல் காத்தான் குடியிலுள்ள மீரா ஜும்மாவிலும்
ஹீசைனா பள்ளியிலும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்திக்கொண்டிருந்த 200 முஸ்லீம்களை,
வாகனங்கள் பலவற்றில் அங்கு வந்த ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினர் தாக்கினர்.

தானியங்கித் துப்பாக்கிகளாலும், கிரனேடுகளினாலும்தாக்கப்பட்டு நூற்றுக்குமதிகமானோர் கொல்லப்பட்டனர் 87பேர் காயமடைந்தனர்

அந்த இரண்டு பள்ளி வாசல்களும் 1.5 கிமீ அகலமுள்ள ஒடுங்கிய நிலப்பரப்பில் அமைந்துள்ளன.
அதன் ஒரு பக்கத்தில் இந்து சமுத்திரமும் , மறுபக்கத்தில் கடல் நீரேரியும் அதன் எல்லைகளாக உள்ளன.
காத்தான்குடி மட்டுமல்ல அதைச் சுற்றியுள்ள பிரதேசமும் இலங்கை இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலம் அது.

காத்தான்குடிக்குள் நுழையும் பாதையின் இரண்டு பகுதிகளிலும் இலங்கை இராணுவத்தின் சோதனைச் சாவடிகள், பலத்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருந்தன.
இராணுவத்தின் சோதனையை மீறி எந்த வாகனமோ, அல்லது மனிதர்களோ உள்ளே நுழைய முடியாது.

அந்த பிரதேசம் அத்தகைய பாதுகாப்புக்குட்பட்ட வலயமாக இருந்தும், பள்ளிவாசலில் தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள், பல வாகனங்களில்,நவீன தானியங்கி துப்பாக்கிகளுடன் காத்தான்குடிக்குள்நுழைந்தது மட்டுமல்ல,
கொலைகளைச் செய்த பின்னர் ஒருவர் கூட அகப்படாமல் தப்பியும் போயிருக்கிறார்கள்.
உடனடியாக புலிகளைக் குற்றம் சாட்டியது இலங்கை இராணுவம்.

ஆனால் புலிகளோ அந்தப் படுகொலையைத் தாம் செய்யவில்லையென மறுத்தனர்.

தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரித்து, பகையையும், வெறுப்பையும் வளர்க்க இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் சதித் திட்டங்களிலொன்று தான் இதுவும் எனவும்,
தாம் காத்தான்குடி படுகொலையை செய்யவில்லை எனவும்தீவிரமாக மறுத்தனர் புலிகள்.
அத்துடன் இதே போன்ற பல முந்தைய சம்பவங்களையும் அவர்கள் நினைவூட்டினர்.

காத்தான்குடிச் சம்பவம் நடந்த போது இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரட்னா இஸ்லாமிய நாடுகளில், ஈழத் தமிழர்களுக்கெதிரான போருக்கு பணமும் , ஆயுத உதவியும் கேட்டுச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

நன்றி: பத்மநாபன் பட்ஜெட்மாஸ்ரர்