Friday 23 November 2018

நம் ஒற்றுமை கண்டு அனத்தும் வந்தேறிகள்

நம் ஒற்றுமை கண்டு அனத்தும் வந்தேறிகள்


 இந்த படத்தின் SC என்கிற எழுத்துகளை திரித்து பல கதைகள் எழுதிவிட்டனர்.


 எப்படியெல்லாம் திரித்து எழுதுகிறார்கள் பாருங்கள்.


ஒரு உதாரணம்...


 அந்த ஊரில் இருக்கும் உயர்சாதியினர் நிவாரண பொருட்களை பட்டியல் சாதி (SC) மக்களுக்கு கிடைக்க விடுவதில்லையாம்.


 அதனால் அவர்கள் தனியே வேறுவழியில் இப்படி எழுதி வைத்துள்ளனராம்.


 இவர்களுக்கு உதவி ஒரு கேடா?!

ஐயகோ புயல் மரங்களை மட்டும் ஏன் அடித்தது?! 

சுனாமி வந்து ஏன் டெல்டாவையே தூக்கவில்லை?! 

 சோத்துக்கு இல்லாவிட்டாலும் சாதிவெறிக்கு குறைச்சல் இல்லையே?!


 என்றெல்லாம் கைவலிக்க எழுதினர்.

 சில தமிழர்களும் இதில் குழம்பி அதே போல எழுதியதும் நடந்தது.


  ஆனால் உண்மையில் Secures center எனப்படும் பாதுகாப்பு கட்டிடம் சுருக்கமாக SC என்று அழைக்கப்படும்.


 இது பெரிய ஆலைகள், நிறுவனங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டப்பட்டு இருக்கும்.


 (தமிழகத்தில் இப்படியான கட்டிடங்கள் பரவலாக இல்லை)


 எதாவது ஆபத்து என்றால் மக்கள் இங்கே வந்து பாதுகாப்பாகத் தங்கிக்கொள்வர்.


 அப்படியான ஒரு பாதுகாப்பு கட்டிடத்தில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.


 அதற்கு வழிகாட்டவே இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.


 கீழே தமிழிலும் "புயல் பாதுகாப்பு கட்டிடம்" என்று எழுதப்பட்டுள்ளது.


 இதேபோல பல வேலைகளில் வந்தேறிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


 பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் விலைபோய்விட்ட நிலையில் சமூக ஊடகங்களே தமிழர்களுக்கு தகவல்களை வழங்கி வருகின்றன.


 இதில் தமிழர்களுக்கும் வந்தேறிகளுக்கும் ஒரு போரே நடந்துவருகிறது.


 புயல் கரைகடந்த மறுநாளே சென்னைக்கு எவ்வளவு உதவினோம்?!

 சென்னைக்காரன் எவனும் வரவில்லை?!

 டெல்டாவை தமிழ்நாடு மதிக்கவில்லை!

கேரளாவுக்கு உதவினீர்கள் டெல்டாவுக்கு உதவ்வில்லை!

 என்று தொடர்ச்சியாக டெல்டா மக்கள் பிற தமிழர்களை மண்வாரித் தூற்று சாபமிடுவது போல எழுதிக்கொண்டே இருந்தனர்.


 ஆனால் சமூக ஊடகங்களின் மூலம் செய்தி அறிந்த தமிழக மக்கள் புயல் பாதித்த மூன்றாவது நாளிலிருந்து உதவிகளை அனுப்பத் தொடங்கினர்.


 ஆனாலும் வந்தேறிகள் சாபங்கள் நிற்கவில்லை.

 இனி எங்கேயும் டெல்டா உதவிக்கு வராது என்று மிரட்டல் பதிவுகள் வேறு.


 சென்னையிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் சென்றடைந்த பிறகும் 'டெல்டாவுக்கு உதவவில்லை' என்று குற்றம் சுமத்தும் வசைபாடல் பதிவுகள் வந்த வண்ணம் இருந்தன.

 அதன் பிறகுதான் நின்றன.

 

 இதிலே மலையாள வந்தேறிகள் பழைய படம் ஒன்றை எடுத்துப்போட்டு "கேரளா உதவுகிறது" என்று போட்டனர்.

 அதை ஆதாரத்தோடு முறியடித்துவிட்டாலும் பினராயி விஜயன் கேரள மின் அமைப்பாளர்களை அனுப்பியதை பெரிதாக பரப்புரை செய்தனர்.

 நேற்று 27 லாரிகளில் கேரளா கழிவுகளை அனுப்பிய செய்தி மலையாள திரிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.


 களத்தில் 'நாம் தமிழர்' இறங்கிய பிறகு வந்தேறிகளின் அனத்தல் அதிகமாகிவிட்டது.


 எவரையும் விட முதலிலிருந்தே களத்தில் பணியாற்றியது இசுலாமியத் தமிழர்.

 உணவு கொடுப்பதில் அவர்களை மிஞ்ச ஆளில்லை.

 

 இப்போது வந்தேறி கும்பலுடன் காவி கும்பலும் சேர்ந்துகொண்டது.

 "நாய்க்கறி பாய்" என்று பல பதிவுகள் வந்தன.

 அது ஆட்டுக்கறி என்பது நிரூபனம் ஆன பிறகு "பொன்.ராதாகிருஷ்ணன் செருப்படி வாங்கிட்டார்" என்று குட்டிக்கரணம் அடித்தனர்.

 காவிகளின் ராஜதந்திரம் அனைத்தும் வழக்கம்போல காமெடியில் முடிந்த்து.


ஆனால் வந்தேறிகளின் 'கூட இருந்தே கழுத்தை அறுக்கும்' வேலைகளைத் தொடர்ந்து செய்துவந்தனர்.


 உதவ போனால் கொள்ளை அடிக்கிறார்கள்!

அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை பொருட்களை தடுக்கிறார்கள்!

 களத்திற்கு செல்வோர் கையிலிருந்து நிறைய பணம் போடவேண்டும்!

 போக சாலையில்லை! 

பெட்ரோல் கிடைக்காது!

மழை வரப்போகிறது!

இன்னொரு புயல் வரப்போகிறது!

உதவ போனால் உங்களுக்கே சோறு கிடைக்காது!

என்றெல்லாம் வதந்தி பரப்பி உதவி செய்யும் மனப்பான்மையை அழிக்க நினைத்தனர்.


 நாப்கின் சேகரிக்க பதிவுபோட்ட பெண்களை "ஜட்டியும் சேர்த்து கொடுங்க" என்று மனிதத்தன்மையே இல்லாமல் கிண்டல் செய்தவர்கள் உண்டு.


 இந்த நேரத்தில் டெல்டா மக்கள் உதவிக்கு வந்த வண்டிகளில் விழுந்த தென்னை மரத்தின் இளநீர் காய்களை நிரப்பி அனுப்பும் படங்கள் வெளியாகி அனைத்து சதிகளையும் தவிடுபொடி ஆக்கின.


 முதலில் களத்திற்கு சென்றவர் சீமான்.

 உடனே சீமான் கார், பாடிகாடுகள் என்று வசதியாக வாழ்வதாக ஒரு பதிவு வலம் வந்தது.


 உடனே அன்புமணி எங்கே?

 ராமதாசு எங்கே? வேல்முருகன் எங்கே? தினகரன் எங்கே? என்றெல்லாம் பதிவுகள் வலம் வந்தன.

 

 வேல்முருகன் மற்றும் தினகரன் ஆகியோரும் களத்திற்கு சென்றனர்.

 அன்புமணி இந்த விடயத்தில் சொதப்பிவிட்டார். 

 ஆனால் பாமக சார்பில் நிவாரணம் அனுப்பியதுடன் களத்திலும் பணி செய்த பலர் இருந்தனர்.


 நடிகர் விஜய் உதவியதும் பொறுக்காமல் அவரை வசைபாடியும் சர்கார் பட லாபத்தை அப்படியே கொடுத்துவிட்டார் என்று கிண்டலடித்தும் பரப்பினர்.


 பதிலுக்கு அஜித்தை கிண்டலடித்து பதிவுகள் வர 

 இந்த இரண்டுக்குமே உண்மையான ரசிகர்கள் காரணமில்லை என்று அறிந்து சமாதானம் செய்யும் வகையில் இருதரப்பு ரசிகர்களும் பதிவுகள் இட்டனர்.


 அப்போதுதான் இந்த எஸ்.சி படம் வெளியானது.

 மீண்டும் கதைகள் புனைந்து பரப்பினர்.


 ஆனால் எல்லாவற்றையும் தாண்டி தமிழகம் முழுவதிலிருந்தும் டெல்டாவை மீட்டெடுக்க நிவாரணம் போய்க்கொண்டே இருக்கிறது.


 களத்தில் சீமான் அண்ணனின் காணொளிகள், 

புற்றுநோயால் இறந்த தன் மகளுக்கு கிடைத்த இழப்பீட்டை நிவாரணமாக தந்த குடும்பம்,

 பாளையங்கோட்டை கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் செருப்புகளைத் துடைத்து நிதி திரட்டிய இளைஞர்,

 சிறையில் சம்பாதித்த பணத்தில் நிவாரணம் வழங்கி நளினி அக்கா,

 உண்டியல் பணத்தை கொடுத்த சிறுமிகள்,

 நான்காவது நாளே ஐரோப்பிய ஈழத்தமிழர் அனுப்பிய பொருட்கள் மற்றும் சூரிய ஒளி சேமிப்பு விளக்குகள் ஆகியன குறிப்பிடத் தகுந்தன.


 (இது தொடர்பாக ஒரு ஆல்பம் போட்டுள்ளேன்)


 தமிழர்கள் ஒற்றுமையாக செயல்படுவது பொறுக்க முடியாமல் அனத்திக்கொண்டு அடுத்த திரிப்புக்கு எதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டு உள்ளனர் வந்தேறிகள்,

அதிலும் குறிப்பாக டெல்டாப் பகுதி வந்தேறிகள்.


பாவம்!

No comments:

Post a Comment