Thursday, 1 November 2018

தமிழக நிலப்பரப்பு கேட்டதும் பெற்றதும்

தமிழக நிலப்பரப்பு
கேட்டதும் பெற்றதும்

மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது நமக்கு நியாயமாக சேரவேண்டிய எல்லைப் பகுதிகளை நாம் இழந்துள்ளோம்.

ம.பொ.சி அவர்கள் தமிழ் மாநிலத்திற்காகக் கேட்ட நிலப்பரப்பானது அவர் நடத்திவந்த "தமிழ் முரசு" ஏட்டின் (1950 மே மாதம்) பதிப்பில் வரைபடமாக முகப்பில் இடம்பெற்றிருந்தது.

அதை ஏற்கனவே வெளியிட்டிருந்தேன்.

அதை தற்போதைய தமிழ்நாடு வரைபடத்துடன் ஒப்பிட்டால் நாம் இழந்த பகுதிகள் தெளிவாகும்.

ம.பொ.சி கேட்ட நிலப்பரப்பையும் தற்போதைய தமிழகத்தையும் ஒரு பழைய மதராஸ் மாகாண வரைபடத்தில் குறித்துள்ளேன்.

இழந்த பகுதிகளில் அன்றைய
செங்கல்பட்டு மாவட்ட சத்தியவேடு தாலுகா,
சித்தூர் மாவட்ட தென்பாதி,
கோலார் மாவட்ட தென்பாதி ,
கொள்ளேகால் வட்ட தென்பாதி,
பாலக்காட்டு வட்டத்தின் சித்தூர் தாலுகா,
தேவிகுளம் மற்றும் பீர்மேடு மாவட்டம்,
கொல்லம் மாவட்ட கிழக்குப் பாதி,
திருவனந்தபுரம் மாவட்டம் தென்பாதி
ஆகியன அடங்கும்.

அதாவது ம.பொ.சி எல்லை மாவட்டங்களில் பாதியை விட்டுக்கொடுத்து பாதியைக் கோரியுள்ளார் (தேவிகுளம்- பீர்மேடு தவிர).

தற்போது படத்தில் காட்டப்பட்டுள்ள இழந்த பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்கள் நடந்து தமிழர் பெரும்பான்மை சற்று குறைந்துவிட்டாலும் இப்போதும் தமிழரே பாதிக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

தற்போது பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சரி,
இப்பகுதிகளை மீட்பது நமது கடமையாகும்.

No comments:

Post a Comment