RSS பரப்பும் தேவர் பற்றிய பொய்
ஆர்.எஸ்.எஸ் தலைவரான கோல்வால்கர் மதுரை வந்தபோது தேவர் அவரைச் சந்தித்து பொன்முடிப்பு வழங்கியதாக இந்துத்துவ வெறியர்கள் பொய் பரப்புரை செய்துவருகின்றனர்.
தேவர் வெறுப்பு அரசியல் செய்வோரும் இதை முக்கிய குற்றச்சாட்டாக வைக்கின்றனர்.
"காந்தியைக் கொன்றவருக்கு பணமுடிப்பு கொடுத்தார்" என்றெல்லாம் கலங்கம் கற்பிக்கின்றனர்.
இதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டும் புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இதில் இருப்பவர் தேவரே இல்லை என்பது தெளிவு.
1951 முதலே தேவர் மீசையில்லாமல் நீளமான முடியுடன் தோற்றமளித்தார்.
இதற்கு பல சான்றுகள் உண்டு.
1955 இல் தேவர் பர்மா சென்றபோது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட காணொளிகள் புகைப்படங்கள் இன்றும் உண்டு.
அதில் அவர் மீசையில்லாமல் நன்கு நீண்ட தலைமுடியுடன் உள்ளார்.
கடைசிவரை அப்படியே தொடர்ந்தார்.
கோல்வால்கர் மதுரை வந்தது 1956 இல்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தேவர் என்று காட்டப்படும் நபர் மீசையுடனும் நன்கு வெட்டப்பட்ட தலைமுடியுடனும் காணப்படுகிறார்.
தேவருடைய வாழ்க்கை வரலாறு என்று முதலில் வந்த நூல் "முடிசூடா மன்னன் முத்துராமலிங்கத் தேவர்" என்கிற நூலே ஆகும்.
அந்த நூலை எழுதிய திரு.ஏ.ஆர். பெருமாள் தனது சிறு வயது முதல் தேவருடன் இணைந்து பணியாற்றியவர் ஆவார்.
அதில் தேவருடைய இந்து மதப்பற்று பற்றியும் வருகிறது.
ஆனால் கோல்வால்கர் பற்றியோ ஆர்.எஸ்.எஸ் பற்றியோ எதுவுமில்லை.
திரு.காவ்யா சண்முகசுந்தரம் என்கிற எழுத்தாளர் தேவர் பற்றி வெளிவந்த 24 சிறிய பெரிய நூல்களை ஆராய்ந்து தொகுத்து "பசும்பொன் சரித்திரம்" எனும் தேவரின் முழுமையான சுயசரிதை எழுதியுள்ளார்.
அதிலும் கோல்வாக்கர் சந்திப்பு சேர்க்கப்படவில்லை.
தேவர் வாழ்க்கை வரலாறு பற்றி ஆராய்ந்து தகவல்களைத் திரட்டிவைத்திருக்கும் ஆய்வாளர் திரு.நவமணி கோல்வால்கர் - தேவர் சந்திப்பு பொய் என்று கூறிவிட்டார்.
தேவருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது.
எனவே ஆதாரமற்ற இந்த பொய்பிரச்சாரத்தை யாரும் நம்பவேண்டாம்.
No comments:
Post a Comment