Monday 1 October 2018

கயவாளி கட்டபொம்மன் - 8

கயவாளி கட்டபொம்மன்

பகுதி - 8
பதிவர்: ஆதி பேரொளி

"பாஞ்சாலங்குறிச்சி வீழ்ந்தது"

கட்டபொம்மன் மீண்டும் ஆங்கிலேயருக்கு கிஸ்தி கட்டாமலும் பொதுமக்களைக் கொள்ளையடித்தும் அட்டூழியம் புரிந்துவந்தான்.

இராமநாதபுர பாளையக்காரர் முத்துராமலிங்க சேதுபதி ஆங்கிலேயரை எதிர்த்து புரட்சி செய்ய திட்டமிட்டபோது கள்ளத்தனமாக துப்பாக்கிகளை விற்றான் கட்டபொம்மன்.

புரட்சிக்கு முந்தைய நாள் ஆங்கிலேயருக்கு இக்கலகம் பற்றி தெரிந்துவிட்டது.
இதனால் சேதுபதி நாடு கடத்தப்பட்டு புரட்சி அடக்கப்பட்டது.

எப்போதும் இருதரப்பினர் மோதினால் இடையில் புகுந்து ஒரு புறம் வெளிப்படையான உதவியும் இன்னொரு புறம் மறைமுகமாக உளவுத்தகவலும் கொடுத்து யார் வென்றாலும் ஆதாயம் அடைவது கெட்டுபொம்மு பரம்பரையின் உத்தி.

எனவே வழக்கம்போல இதைச் செய்தது கட்டபொம்மனோ என்ற ஐயம் நமக்குத் தோன்றினாலும் இம்முறை கட்டபொம்மன் போட்டுக்கொடுக்கவில்லை.
வேறு எவனோ முந்திக்கொண்டுவிட்டான்.

சேதுபதிக்கு தூத்துக்குடி டச்சுக்கார வணிகர்கள் மூலம் கள்ளக்கடத்தல் செய்து ஆயுதம் விற்றது கட்டபொம்மன் என்கிற விடயம் பிற்பாடு ஆங்கிலேயருக்கு தெரிந்தபோது அவர்கள் அதிர்ந்துவிட்டனர்.

'நம்ம செல்லப்பிள்ளை கெட்டிபொம்முவா இப்படி?!' என்று மனம் வெதும்பினர்.

இந்நிலையில் தமது பகுதியில் புகுந்து திசைக்காவல் என்ற பெயரில் கட்டபொம்மன் பணம் பிடுங்குவதாக ஆங்கில அதிகாரிகள் கெட்டிபொம்மு மீது புகார் அளித்தனர்.

பிற பாளையங்களை கொள்ளையடித்த கட்டபொம்மன் ஆங்கிலேயப் பகுதிகளிலும் கொள்ளையிடுவதை தாங்கமுடியாத கலெக்டர் லூசிங்டன் கட்டபொம்முவை கிஸ்திபாக்கியைத் தருமாறும் அதற்கு நேரில் வருமாறும் மூன்றுமுறை ஓலை அனுப்பினான்.

உடம்பு சரியில்லை, நாள் நல்லாயில்லை என சாக்குபோக்கு சொல்லி அனுப்பினான் கெட்டிபொம்மு.
அதோடு தன்னை 'ஆங்கிலேய வளர்ப்புப் பிள்ளை' என்று அடையாளப்படுத்தியே பதில் எழுதியிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது கடிதம் 'ஒழுங்கு மரியாதையா வந்துரு' என்கிற தொனியில் இருந்தது.

'இது உங்க ஒடம்பு, எப்பவேணா தொவைக்கலாம்' என்கிற ரீதியில் பதில் அனுப்பினான் கெட்டிபொம்மு.
ஏற்கனவே ஜாக்சனை நேருக்கு நேர் பார்த்து மிரண்டு பேண்டு நாறிப்போன கதிக்கு மீண்டும் ஆளாக அவன் விரும்பவில்லை.
எனவே 'வரும்போது என் கூட்டத்தையும் கூட்டிவரலாமா?' என்று அனுமதியும் கேட்டிருந்தான்.

'வீரன் ஒத்தையா போனாலும் நூறுபேர் மாதிரி.
நீ நூறுபேரோட வந்தாலும் ஒத்தையாள்தான்' எனவே 30 பேருக்கு அதிகமாக வரக்கூடாது என்கிற தொனியில் அடுத்த கடிதம் உடனடியாக வந்தது.
அதில் இரண்டு மணிநேரம் கெடு விதித்து இருந்தது.

லூசிங்டனை இதற்குமேல் லூசாக்க முடியாது என்றுணர்ந்த கட்டபொம்மன் மறுநாள் வருவதாக கூறி அனுப்பினான்.
ஆனாலும் அவன் போகவில்லை.
லூசிங்க்டன் மேலிடத்திற்கு எழுதி ராணுவ நடவடிக்கை கோரினான்.

இந்நிலையில் கட்டபொம்மனது தம்பி ஊமைத்துரைக்கு திருமணம் நிச்சயமானது.

கல்யாண சமையல்காரர் லிஸ்ட் ஒன்றைக் கொடுத்தார்.

தேங்காய் - எவன் தோட்டத்திலாவது பறிச்சுக்கலாம்.
காய்கறி - சந்தையில் திருடிக் கொள்ளலாம்.
சர்க்கரை - மளிகை கடை பூட்டியதும் எடுத்துக்கலாம்.
அரிசி - ரேசன் கடையை கொள்ளையடிக்கலாம்.

அப்போ வாங்கறதுனு எதுவுமே இல்லையா?!
கட்டபொம்மனுக்கு எதையும் பறித்துதான் பழக்கம்!

அப்போது வெள்ளையர் வரிவசூலை பொருட்களாகவும் வாங்கினர்.
அவ்வாறு ஆங்கிலேயரது அரிசி குடோன் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்தது.

இரவில் வியாபாரிகள் போல வேடமிட்டு சென்ற கட்டபொம்மனின் ஆட்கள் குடோன் காவலாளியைக் கொன்றுவிட்டு நெல்லையெல்லாம் கொள்ளையடித்து ஓட்டப்பிடாரத்தில் ஒளித்துவைத்தனர்.

அப்பகுதி அதிகாரி பிர்க்கட்டு என்பவன் மறுநாள் இதுபற்றி விசாரித்தான்.
"கொள்ளைனா! கெட்டிபொம்மு! வேற எந்த... ஒரு பேரும் மைண்ட்ல வரமாட்டன்து" என்று மக்கள் கூறினர்.

அவன் ஆத்திரத்தோடு நேரே பாஞ்சாலங்குறிச்சி போய் கட்டபொம்மனை விசாரித்தான்.

கெட்டுபொம்மு "நீங்க போங்க சார்! யார்னு விசாரிச்சு நானே உரிச்சுவிடறேன்" என்று பதிலளித்தான்.

பிர்க்கட்டு "கட்டபொம்மா ஒனக்கு கட்டம் சரியில்லை.
ஒழுங்கா நீயே ஒத்துக்கோ!
இல்லன்னா பானர்மேன் படையோட வருவான்.
அவன் போட்டுத்தள்ளிட்டு பொணத்துகிட்டதான் என்ன யாதுனு கேப்பான். பாத்துக்கோ!" என்று கூறிவிட்டு கிளம்பிப்போனான்.

அப்போது சிவகிரி பாளையத்தின் அமைச்சன் ஒருவன் கட்டபொம்மனை ஒரு கட்டப்பஞ்சாயத்து விடயமாகப் பார்க்கவந்தான்.

கட்டபொம்மன் அதற்கு கூலியாக பணம் வேண்டாமென்றும் அதற்குப் பதிலாக தன் சார்பில் பானர்மேனைப் பார்த்து தனக்கு பரிந்துபேசுமாறும் கூறினான்.

அவனும் ஒத்துக்கொண்டு பானர்மேனை பார்க்கப்போனான்.
அங்கே போய் "கட்டபொம்மன்.." என்று வாயைத்தான் திறந்தான்.
வாயிலேயே குத்தி விலங்கு மாட்டி சிறையில் தள்ளினான் பானர்மேன்.

கட்டபொம்மன் இச்செய்தி கேட்டு வெலவெலத்துப்போய் ஜுரம் வந்து படுத்துவிட்டான்.

1799 செப்டம்பர் 4 ஆம் தேதி பாளையங்கோட்டை யிலிருந்து சீவலப்பேரி வழியாக பானர்மேனின் படை பாஞ்சாலங்குறிச்சி எல்லையை நள்ளிரவில் வந்தடைந்தது.

இரவே 12 பவுண்ட் பீரங்கிகளும் இரண்டு கும்பினி பட்டாளத் தொகுதியும் வரவழைக்கப்பட்டன.

காலையில் டல்லாஸ் என்பவன் தலைமையில் குதிரைப்படை பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை சுற்றிவளைத்து.

பானர்மேன் மூன்று ஆட்களை அனுப்பி கட்டபொம்மன் தனியாளாக தன்னிடம் வரவேண்டும் என்று உத்தரவிட்டு கோட்டைக்குள் அனுப்பினான்.

கட்டபொம்மன் பயந்து நடுங்கியபடி "என்னை எதுவும் செய்யமாட்டேன்" என்று உறுதி கொடுத்தால் வருகிறேன் என்றான்.

பானர்மேன் அப்படி உறுதிமொழி எதுவும் தரத் தயாராக இல்லை.
அவன் ஒரு முடிவுடன் வந்திருந்தான்.

(திப்பு சுல்தான் இந்த இடத்தில் கட்டபொம்மனிடமிருந்து  மாறுபடுகிறான்.
தன் முடிவு கண்ணுக்குத் தெரிந்ததும் திப்பு உண்மையிலேயே வீரனாக மாறி முடிந்தவரை போராடி வீரமணம் அடைந்தான்.
ஆனால் கெட்டிபொம்முவோ கடைசி வரை கோழையாகவே இருந்தான்.)

கட்டபொம்மு நிபந்தனையற்ற சரணடையாத காரணத்தால் பீரங்கிகள் கோட்டையைத் தாக்கின.
காலின்ஸ் என்பவன் தலைமையில் ஆங்கிலப் படை உள்ளே நுழைய முற்பட்டது.
அப்போது நடந்த மோதலில் காலின்ஸ் கொல்லப்படுகிறான்.
போர் அப்படியே இடைநிறுத்தப்பட்டது.

மறுநாள் விடிந்ததும் கட்டபொம்மன் தூது அனுப்பினான்.
"தங்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது,
நான் ஆங்கிலேய  அரச அதிகாரி எவரிடமாவது சரண்டைகிறேன்.
அதற்கு அனுமதிக்குமாறு கெஞ்சுகிறேன்" என்கிற தொனியில் அனுப்பியிருந்தான்.

பானர்மேன் ஒத்துக்கொள்ளவில்லை.
"என்னிடம்தான் சரண்டையவேண்டும்.
உயிருக்கு உத்தரவாதமும் கிடையாது" என்று கூறி ஒரு நாள் அவகாசம் கொடுத்தான்.
 
7ம் தேதி சந்தர்ப்பம் பார்த்து இரவு பத்துமணிக்கு ரகசிய வழி மூலம் 50 பேருடன் கோட்டையை விட்டு தப்பி ஓடினான் கட்டபொம்மன்.

எதற்கு?
வேறெதற்கு?! தான் காக்கா பிடித்து வைத்திருந்த திருச்சி ஆங்கிலேய உயரதிகாரிகள் காலில் விழுந்து உயிர்தப்பிக்கத்தான்.

(தொடரும்)

No comments:

Post a Comment