Monday 29 October 2018

தமிழக மாணவர்களைக் காவுவாங்கும் டெல்லி

தமிழக மாணவர்களைக் காவுவாங்கும் டெல்லி

டெல்லியில் தமிழக மாணவி ஸ்ரீமதி தற்கொலை!

தொடரும் தமிழர் மீதான டெல்லியின் வன்மம்!

இது நான்காவது சம்பவம்!

2016 இல் திருப்பூரைச் சேர்ந்த மாணவர் "சரவணன்" வீச ஊசி போடப்பட்டு மர்மச்சாவு
[டெல்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (UCMS) மருத்துவ மேற்படிப்பு]
இடதுகைப் பழக்கமில்லாத இவர் வலதுகையில் விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
தற்கொலை என்று பதிவான வழக்கு பிரேத பரிசோதனைக்குப் பிறகு கொலைவழக்காக எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

2017 சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த "மாணவர் முத்துக்கிருஷ்ணன் (எ) ரஜினி கிரிஷ்" தூக்கில் தொங்கியநிலையில் மர்மச்சாவு
[டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் (JNU) பி.எச்.டி]
சேர்க்கையிலும் வாய்மொழித் தேர்விலும் பாரபட்சம் காட்டப்படுவதாக கடைசி முகநூல் பதிவு செய்துள்ளார்.

2018 திருப்பூரைச் சேர்ந்த மாணவர் "சரத் பிரபு" மர்மச்சாவு
[டெல்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (UCMS) மருத்துவ மேற்படிப்பு]
இவரது உடலில் காயங்கள் இருந்தன.

2018 பிப்ரவரியில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ண பிரசாத் மர்மச்சாவு
[பட்ட மேற்படிப்பிற்கான மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (PGIMER) சண்டீகர்]
இவர் மாணவர் தங்கும் விடுதியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியநிலையில் இறந்து கிடந்தார்.
இந்தி தெரியாததால் தனிமைப்பட்டு மன உளைச்சலில் இருப்பதாக தன் தந்தையிடம் கடைசியாகப் பேசும்போது கூறியுள்ளார்.

இறந்த எவருமே கடிதம் எழுதிவைக்காமல் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

இதேபோல 2018 ஜனவரியில் திருநெல்வேலியைச் சேர்ந்த "மாரிராஜ்" தற்கொலை முயற்சி
[அகமதாபாத் பி.ஜே மருத்துவக் கல்லூரி, குஜராத்]
சாதி மற்றும் இனத்தைக் காட்டி தொடர்ச்சியாக அவதானப்படுத்தியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக டெல்லியில் ஐ.ஏ.எஸ் தேர்வாகி பயிற்சியில் இருந்த சத்தியமங்கம் ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்த அதிர்ச்சியான செய்தி இன்று வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment