Friday, 5 October 2018

நமது கடல் இனி வேதாந்தாவின் சொத்து

நமது கடல் இனி வேதாந்தாவின் சொத்து

ஆம். தமிழகக் கடல் வளங்களை விழுங்க வருகிறது வேதாந்தா!

ஒரு சதுர அடிக்கு 80 பைசா கொடுத்து வாங்கிய கூத்து!

தமிழகத்தில் மூன்று இடங்களில் மீத்தேன் எடுக்க அனுமதி என்று உண்மையைச் சுருக்கி பொய்யான செய்தியைப் பரப்புகின்றன திருட்டு ஊடகங்கள்.

இது மூன்று இடம் அல்ல மூன்று மண்டலம்.
மொத்தம் 5099 சதுர கிலோ மீட்டர் (ஏறத்தாழ சேலம் மாவட்டம் அளவு).

இம்மண்டலங்களில் முதற்கட்டமான 24 ஹைட்ரோகார்பன் (மீத்தேன்) கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.
(இதுதான் மூன்று இடமாம்)

இதில் இரண்டு அதாவது 1794 + 2574= 4368 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (புதுக்கோட்டை மாவட்டம் அளவு பெரியது) கடலில் வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஹைட்ரோகார்பன் எடுக்க தாரைவார்க்கப் பட்டுள்ளது.

மீதி 731 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி.

ஒரு சதுர கிலோமீட்டர் என்பது ஒரு கிலோமீட்டர் நீளமும், ஒரு கிலோமீட்டர் அகலமும் கொண்ட சதுரம் ஒன்றின் பரப்பளவுக்குச் சமமானது.
ஒப்பந்தத்தின் படி வேதாந்தா ஒரு ச.கீ.மி நிலத்திற்கு 90 லட்சம் விலை தரவேண்டும் (இதையும் முதலிலேயே தரவேண்டாம் சாவகாசமாகத் தரலாம்).

அதாவது வேதாந்தா சதுர அடிக்கு 83 பைசா கொடுக்கிறது.
ONGC எனும் அரச கார்ப்பரேட் நிறுவனமோ அதையும் தராது.
ஓசியிலேயே நம்மை ஒழித்துகட்ட வருகிறது.

OLAP எனும் இந்த புதுவிதமான தாராளமான ஒப்பந்தப்படி காலவரையறை இல்லாமல் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகியன என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.
அரசாங்கம் கேள்வி கேட்க முடியாது.
வேண்டுமானால் பாதுகாப்பு  கொடுக்கலாம்.

(மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பினால்) நெடுவாசலில் இருந்து அகற்றப்பட்ட இந்த திட்டம் இப்போது வேறு மூன்று மண்டலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தின் முழு கடற்கரையும் அதை ஒட்டிய கடல் பகுதியும் வருகிறது.

சுருக்கமாகக் கூறினால்,
நமது வளமான பூமியை,
பொன்முட்டை இடும் வாத்தை, எங்கிருந்தோ ஒருவன் வந்து அறுக்கப் போகிறான்.

நன்றி: Tamil research institution (TRI)

No comments:

Post a Comment