Wednesday, 5 April 2023
பேரினப்படுகொலை
Friday, 5 October 2018
நமது கடல் இனி வேதாந்தாவின் சொத்து
நமது கடல் இனி வேதாந்தாவின் சொத்து
ஆம். தமிழகக் கடல் வளங்களை விழுங்க வருகிறது வேதாந்தா!
ஒரு சதுர அடிக்கு 80 பைசா கொடுத்து வாங்கிய கூத்து!
தமிழகத்தில் மூன்று இடங்களில் மீத்தேன் எடுக்க அனுமதி என்று உண்மையைச் சுருக்கி பொய்யான செய்தியைப் பரப்புகின்றன திருட்டு ஊடகங்கள்.
இது மூன்று இடம் அல்ல மூன்று மண்டலம்.
மொத்தம் 5099 சதுர கிலோ மீட்டர் (ஏறத்தாழ சேலம் மாவட்டம் அளவு).
இம்மண்டலங்களில் முதற்கட்டமான 24 ஹைட்ரோகார்பன் (மீத்தேன்) கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.
(இதுதான் மூன்று இடமாம்)
இதில் இரண்டு அதாவது 1794 + 2574= 4368 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (புதுக்கோட்டை மாவட்டம் அளவு பெரியது) கடலில் வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஹைட்ரோகார்பன் எடுக்க தாரைவார்க்கப் பட்டுள்ளது.
மீதி 731 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி.
ஒரு சதுர கிலோமீட்டர் என்பது ஒரு கிலோமீட்டர் நீளமும், ஒரு கிலோமீட்டர் அகலமும் கொண்ட சதுரம் ஒன்றின் பரப்பளவுக்குச் சமமானது.
ஒப்பந்தத்தின் படி வேதாந்தா ஒரு ச.கீ.மி நிலத்திற்கு 90 லட்சம் விலை தரவேண்டும் (இதையும் முதலிலேயே தரவேண்டாம் சாவகாசமாகத் தரலாம்).
அதாவது வேதாந்தா சதுர அடிக்கு 83 பைசா கொடுக்கிறது.
ONGC எனும் அரச கார்ப்பரேட் நிறுவனமோ அதையும் தராது.
ஓசியிலேயே நம்மை ஒழித்துகட்ட வருகிறது.
OLAP எனும் இந்த புதுவிதமான தாராளமான ஒப்பந்தப்படி காலவரையறை இல்லாமல் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகியன என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.
அரசாங்கம் கேள்வி கேட்க முடியாது.
வேண்டுமானால் பாதுகாப்பு கொடுக்கலாம்.
(மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பினால்) நெடுவாசலில் இருந்து அகற்றப்பட்ட இந்த திட்டம் இப்போது வேறு மூன்று மண்டலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தின் முழு கடற்கரையும் அதை ஒட்டிய கடல் பகுதியும் வருகிறது.
சுருக்கமாகக் கூறினால்,
நமது வளமான பூமியை,
பொன்முட்டை இடும் வாத்தை, எங்கிருந்தோ ஒருவன் வந்து அறுக்கப் போகிறான்.
நன்றி: Tamil research institution (TRI)
Tuesday, 26 June 2018
தமிழகத்தில் ஒரு மரண ரயில்
தமிழகத்தில் ஒரு மரண ரயில்
மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
(நற்றிணை 226)
அதாவது ஒரு மரத்தை சாகடித்து உயிர்வாழாத மனிதர்கள் என்று பொருள்.
அதனாலேயே மர ஆசாரிக்கு 'கொல்லன்' என்று பெயர்.
அத்தகைய சான்றோர் வாழ்ந்த தமிழ்நாடுதானா இது?
முல்லைக்கொடி பற்றி படர தவித்தபோது தன் தேரையே கொடுத்த பாரி பிறந்த இனம்,
* 2 லட்சம் மரங்களை வெட்ட விடுமா?
* 8 பள்ளிகள் 11 கோயில்கள் உட்பட 40,000 வீடுகளை இடிக்க விடுமா?
* 8,000 கிணறுகள்,
36 ஏரிகள்,
64 குளங்கள்,
10,000 ஏக்கர் விளைநிலம்
ஆகியவற்றை அழிக்க விடுமா?
* "புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே" (நற்றிணை 11)
என மணலில் ஊறும் நண்டுகள் நசுங்காமல் தேரோட்டச்சோன்ன தலைவன் வாழ்ந்த தமிழ்மண் இது.
இப்போது கரடி, மான், காட்டெருமை, நரி, காட்டுபன்றி உள்ள விலங்குகளும், அரியவகை பறவையினங்களும் வாழும் வீடான 500 ஏக்கர் காட்டை அழிக்க விடலாமா?
* சாலை வசதி தேவை என்றாலும் இந்த மாபாதகங்களைச் செய்யக்கூடாதே?!
தேவையற்ற சாலைக்காக இவற்றை செய்யவிடலாமா?!
* அற்புத மூலிகைகளுடன் எண்ணற்ற காட்டாறுகளுடன் கூடிய 8 மலைகள் சூழ இங்கே குடியிருக்கும் இயற்கைத்தாயை இரண்டு கூறாக அறுத்தபடி செல்லும் இந்த கொழுத்த 8 வழிச்சாலையை வரவிடலாமா?!
* "மன்ற மராஅத்த பேஎமுதிர்க் கடவுள்" என்று குறுந்தொகை கூறுவது போல மரத்தைக் கடவுளாகப் பார்த்த தமிழினம்தானா நாம்?!
* நாய்க்கும் சண்டைச் சேவலுக்கும் நடுகல் நட்டு சிறப்பித்த தமிழினம்தானா நாம்?
* கன்றைக் கொலைசெய்த தன் மகனையே கொன்ற மனுநீதி சோழனின் வாரிசுதானா நாம்?
காளைக்கு ஒரு விழா எடுத்து
மாடு சொரிந்துகொள்ள மாடுரசு கல் நட்டு விலங்குகளை நேசித்து மதித்து வாழும் தமிழினமே!
உன் வீட்டை இடித்து
உன்னைத் துரத்தி
உன் தாய்நிலத்து இயற்கையை அழித்து
உயிர்களையெல்லாம் கொன்று
மண்ணைத் தோண்டித் தின்று
காற்று நீரை மாசாக்கி
பாலைவனத்தை விட மோசமாக மாற்றிவிட வருகிறான் ஜிண்டால் எனும் சண்டாளன்.
அவனுக்கு சிவப்புக் கம்பளமாக வருகிறது இந்த சாலை.
"சயாம் மரண ரயில்" போல
"சேலம் மரண சாலை" வருகிறது.
கெஞ்சி அழாதே!
போராடு!
இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொடுக்கலாம்!
போராட்டம் நசுக்கப்பட்டால் வன்முறையில் இறங்கு!
ஏனென்றால் இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொல்லலாம்!
அரசு ஊழியன் வருவான் அவனை அடித்து விரட்டு!
காவல்துறை வருவான் அவனை அரிவாளால் வெட்டு!
துணை ராணுவம் வரும்போது துப்பாக்கியால் சுடு!
ஹிந்தி ராணுவம் வரும் குண்டெறிந்து கொல்லு!
ஏனென்றால் இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொல்லலாம்!
பாவமில்லை!
Friday, 22 June 2018
தமிழகத்தில் ஒரு மரண ரயில்
தமிழகத்தில் ஒரு மரண ரயில்
மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
(நற்றிணை 226)
அதாவது ஒரு மரத்தை சாகடித்து உயிர்வாழாத மனிதர்கள் என்று பொருள்.
அதனாலேயே மர ஆசாரிக்கு 'கொல்லன்' என்று பெயர்.
அத்தகைய சான்றோர் வாழ்ந்த தமிழ்நாடுதானா இது?
முல்லைக்கொடி பற்றி படர தவித்தபோது தன் தேரையே கொடுத்த பாரி பிறந்த இனம்,
* 2 லட்சம் மரங்களை வெட்ட விடுமா?
* 8 பள்ளிகள் 11 கோயில்கள் உட்பட 40,000 வீடுகளை இடிக்க விடுமா?
* 8,000 கிணறுகள்,
36 ஏரிகள்,
64 குளங்கள்,
10,000 ஏக்கர் விளைநிலம்
ஆகியவற்றை அழிக்க விடுமா?
* "புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே" (நற்றிணை 11)
என மணலில் ஊறும் நண்டுகள் நசுங்காமல் தேரோட்டச்சோன்ன தலைவன் வாழ்ந்த தமிழ்மண் இது.
இப்போது கரடி, மான், காட்டெருமை, நரி, காட்டுபன்றி உள்ள விலங்குகளும், அரியவகை பறவையினங்களும் வாழும் வீடான 500 ஏக்கர் காட்டை அழிக்க விடலாமா?
* சாலை வசதி தேவை என்றாலும் இந்த மாபாதகங்களைச் செய்யக்கூடாதே?!
தேவையற்ற சாலைக்காக இவற்றை செய்யவிடலாமா?!
* அற்புத மூலிகைகளுடன் எண்ணற்ற காட்டாறுகளுடன் கூடிய 8 மலைகள் சூழ இங்கே குடியிருக்கும் இயற்கைத்தாயை இரண்டு கூறாக அறுத்தபடி செல்லும் இந்த கொழுத்த 8 வழிச்சாலையை வரவிடலாமா?!
* "மன்ற மராஅத்த பேஎமுதிர்க் கடவுள்" என்று குறுந்தொகை கூறுவது போல மரத்தைக் கடவுளாகப் பார்த்த தமிழினம்தானா நாம்?!
* நாய்க்கும் சண்டைச் சேவலுக்கும் நடுகல் நட்டு சிறப்பித்த தமிழினம்தானா நாம்?
* கன்றைக் கொலைசெய்த தன் மகனையே கொன்ற மனுநீதி சோழனின் வாரிசுதானா நாம்?
காளைக்கு ஒரு விழா எடுத்து
மாடு சொரிந்துகொள்ள மாடுரசு கல் நட்டு விலங்குகளை நேசித்து மதித்து வாழும் தமிழினமே!
உன் வீட்டை இடித்து
உன்னைத் துரத்தி
உன் தாய்நிலத்து இயற்கையை அழித்து
உயிர்களையெல்லாம் கொன்று
மண்ணைத் தோண்டித் தின்று
காற்று நீரை மாசாக்கி
பாலைவனத்தை விட மோசமாக மாற்றிவிட வருகிறான் ஜிண்டால் எனும் சண்டாளன்.
அவனுக்கு சிவப்புக் கம்பளமாக வருகிறது இந்த சாலை.
"சயாம் மரண ரயில்" போல
"சேலம் மரண சாலை" வருகிறது.
கெஞ்சி அழாதே!
போராடு!
இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொடுக்கலாம்!
போராட்டம் நசுக்கப்பட்டால் வன்முறையில் இறங்கு!
ஏனென்றால் இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொல்லலாம்!
அரசு ஊழியன் வருவான் அவனை அடித்து விரட்டு!
காவல்துறை வருவான் அவனை அரிவாளால் வெட்டு!
துணை ராணுவம் வரும்போது துப்பாக்கியால் சுடு!
ஹிந்தி ராணுவம் வரும் குண்டெறிந்து கொல்லு!
ஏனென்றால் இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொல்லலாம்!
பாவமில்லை!
Friday, 15 June 2018
மாவட்டத்திற்கொரு நாகசார திட்டம்
மாவட்டத்திற்கொரு நாகசார திட்டம்
வேலூர் - தோல் தொழிற்சாலைகள்
காஞ்சிபுரம் - அணுவுலை
நீலகிரி - யூகலிப்டஸ் மரங்களின் பெருக்கம்
அரியலூர் - சிமெண்ட் ஆலை
மதுரை - கிரானைட் கொள்ளை
தேனி - நியூட்ரினோ
டெல்டா மாவடங்கள் - ஹைட்ரோகார்பன்
தூத்துக்குடி - ஸ்டெர்லைட்
கன்னியாகுமரி - இனையம் துறைமுகம்
------
இன்றைக்கு (14-6-2018)ஆனந்த விகடன் இதழில் தமிழக சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறித்தான தமிழகத்தின் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
சுற்றுச் சூழலை பாதிக்கும் பல பிரச்சனைகள் அந்த வரைபடத்தில் இடம்பெறவில்லை.
அதில் விடுபட்டவை கீழே,
1. மீத்தேன், ஹட்ரோகார்பன் திட்டம் இராமநாதபுரம் மாவட்டம் வழியாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வரை திட்டமிடப்பட்டுள்ளது.
2. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முதல் கோவை மாவட்டம் பாலக்காடு முடிய உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வளங்களை அழித்தல், வனவிலங்களுக்கு துன்புறுத்தல்
3. விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் தமிழ்நாடு சிமெண்ட் ஆலை.
4. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பாதரசக் கழிவு.
5. நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆறு, தூத்துக்குடி மாவட்டம் வைப்பாற்றில் மணல் கொள்ளை.
6. நாமக்கல் மாவட்டம் சித்தாம்பூண்டியில் பிளாட்டினம் உருக்கி எடுத்தல்.
7. திண்டுக்கல்லில் தோல் தொழிற்சாலைக் கழிவுகள்.
8. பாலக்காடு, செங்கோட்டை போன்ற தமிழக - கேரள எல்லைப் பகுதியில் நச்சுக் கழிவுகளை குப்பை, குப்பையாக்கொட்டுவது.
9. கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் விவசாயத்தை பாதிக்கும் கெயில் குழாய் பதிப்புகள்.
(இதே போல திருவள்ளூரில் இருந்து மதுரை வரையும்,
கடலூரில் இருந்து சேலம் வரையும் திட்டமிடப்பட்டுள்ளது)
10. தமிழகத்தின் நீராதாரங்கள், நீர் நிலை ஆக்கிரமிப்புகள்.
11. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் சுற்றுச் சூழல் பாதிப்புகள்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
Tuesday, 12 June 2018
சண்டாள ஜிண்டால்
சண்டாள ஜிண்டால்
2005 ல் ஜிண்டால் மற்றும் ஜெயலலிதாவுக்கு இடையே நடந்த உரையாடல்
"வாழவைக்கும் ஜிண்டால் அவர்களே! வருக!"
"நமஸ்தே! என்ன விசயம்?"
"சேலத்திற்கும் சென்னைக்கும் நடுவே இருக்கும் திருவண்ணாமலைக்கு மிக அருகில் இருக்கிறது கவுத்திமலை.
இது சாதாரண மலை இல்லை,
41% இரும்புத்தாது நிறைந்தது.
அதாவது 35 மில்லியன் டன் இரும்புத்தாது இருப்பதாக கணித்துவிட்டனர்.
இதை விற்க நல்ல ஆள் தேடிக்கொண்டு இருந்தோம்.
அதற்கு உங்கள் கார்ப்பரேட்டை தேர்ந்தெடுத்துள்ளோம்"
"அந்த இடமா?
சுத்தமாக பின்தங்கிய பகுதி.
நீதிமன்றத்தையும் அரசாங்கத்தையும் கூட விலைக்கு வாங்கிவிடலாம்.
ஆனால் படிப்பறிவில்லாத பாமர மக்களைத்தான் சமாளிக்கமுடியாது.
எவனாவது சமூகப் போராளி எடுத்துக் கூறினால் போராட்டங்களை தொடங்கிவிடுவார்கள்"
"அவர்களை நான் சமாளித்துவிடுவேன்.
ஊடகங்களை மட்டும் நீங்கள் கவனித்துக்கொள்ளுங்கள்.
ரொம்ப போராடினால் போலீசை ஏவிவிடலாம்.
வெறிநாய்களை விட மோசமாக குதறிவிடுவார்கள்"
"மக்கள் ஆயுதம் தூக்காதவரை எப்படியும் சமாளித்துவிடலாம்.
என்னவொன்று காலம் இழுத்துக்கொண்டே போகுமே என்று யோசிக்கிறேன்.
தவிர அங்கே போதிய வசதிகளும் கிடையாது"
"மலையை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்!
வேண்டிய வசதிகளை வரிப்பணம் செலவளித்து செய்து தருகிறேன்"
"ம், எவ்வளவு நிலம் தருவாய்"
"325 ஹெக்டர் வனப்பகுதியை எழுதித் தருகிறேன்"
"வனப்பகுதியா? மரங்கள் நிறைய இருக்குமே?!"
" ஆம் 3லட்சம் மரங்கள் வரை இருக்கும்"
"மரங்களை வெட்டினால் பொதுமக்கள் எதிர்ப்பார்களே?!
சமாளித்து விடுவாயா?"
"அதற்கென்ன?! இதே அளவு மரங்களை திருநெல்வேலி மாவட்டத்தில் நட்டு ஈடுசெய்வதாக வாக்குறுதி கொடுத்தால் போயிற்று"
"ஹ.. ஹ... ஹா... ஹா... அப்படி சொன்னால் நம்பும் அளவு முட்டாள்களா இந்த மக்கள்?!"
"ஆம், மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிக்கொள்வீர்களா? நான் வெட்டித்தரவா?"
"நானே வெட்டிக்கொள்வேன்.
ஏற்கனவே எனக்கு சேலத்தில் என் மச்சான் மலைமுழுங்கி SISCOL உடன் கூட்டான ஒரு மின்சார உற்பத்தி ஆலை உள்ளது.
ஏற்கனவே எனக்கு சேலத்தில் என் மச்சான் மலைமுழுங்கி SISCOL உடன் கூட்டான ஒரு மின்சார உற்பத்தி ஆலை உள்ளது.
சாலைதான் சரியாக இல்லை."
"என்ன சொல்கிறீர்கள்?!
சேலத்திலிருந்து சென்னைக்கு ஏற்கனவே இரண்டு பெரிய சாலைகளும் ஒரு சின்ன சாலையும் ஒரு ரயில்பாதையும் இருக்கிறதே!"
"சேலத்திலிருந்து சென்னை செல்லும் இரு சாலைகளும் திருவண்ணாமலை மற்றும் அதை ஒட்டிய மலைகளைத் தொடாமல் விலகி சுற்றியவாறு செல்கின்றன.
என்னால் எனது ஆலையை அதிலொன்றில் இணைக்கவெல்லாம் முடியாது.
தனி சாலை வேண்டும்.
கோயம்புத்தூரிலிருந்து சேலம் வரை நேரான சாலை வருகிறதே அதை அப்படியே சென்னை வரை நேராக கொண்டுசெல்லவேண்டும்"
"போட்டுத்தருகிறேன். பொதுமக்கள் வசதிக்காக பசுமையான காடு வழியே நான்கு வழிச்சாலை போடுகிறோம் என்று பிரச்சாரம் செய்தால் போயிற்று"
"எனக்கு இங்கே மக்கள் ஆயுதம் தூக்குவார்களோ என்று பயமாக இருக்கிறது."
"அதை நான் போக்குகிறேன்.
எட்டுவழிச் சாலை போட்டு தருகிறேன்.
தீவிரவாதிகள் முளைத்தால் நீங்கள் பீரங்கிகளை கொண்டுவரலாம்.
அதுவும் காடுகளை அழித்தபடி செல்லும்.
இதிலேயே ஒன்றரை லட்சம் மரங்களை வெட்டிவிடுவோம்.
மீதி ஒன்றரை லட்ச மரங்களை நீங்கள் வெட்டிக்கொள்ளுங்கள்"
"சாலை போட எதுவும் பணம் வேண்டுமா?
என் அறக்கட்டளை மூலம் நானே போட்டுவிடவா?"
"வாழவைக்கும் ஜிண்டாலே!
ஏன் உங்களுக்கு வீண் சிரமம்.
இதோ பத்தாயிரம் கோடி நிதி ஒதுக்கிவிடுகிறேன்.
சென்னைக்குதானே நேர்சாலை கேட்டீர்கள்?!
நான் நேரே சென்னை துறைமுகம் வரை சாலையை போடுகிறேன்.
நீங்கள் இந்நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கு கப்பலில் அனுப்பலாம்"
"சரி மலைகளை மட்டும் தந்தால் எப்படி?
உட்கார்ந்து வெட்டியெடுக்க மலைகளைச் சுற்றியிருக்கும் நிலமும் வேண்டும்"
"சுற்றியிருக்கும் 51 கிராமங்களின் 2700 ஏக்கர் விளைநிலங்களை உங்களுக்கு தந்துவிடுகிறேன்"
"நிறைய தண்ணீர் தேவைப்படும்.
அப்படியே அதற்கும் ஏற்பாடு செய்"
"சாத்தனூர் அணை இருக்கிறதே!
விளைநிலமே இல்லை தண்ணீரை வைத்து என்ன செய்ய?!
நேரடியாக அணையிலேயே குழாய் போட்டு உங்கள் ஆலைக்கு தந்துவிடவா?
நீங்கள் உறிஞ்சியது போக மீதிதான் குடிநீர் விநியோகம் செல்லும்"
"ஏற்கனவே 14 கோடியில் 'நந்தன் கால்வாய் திட்டம்' என்ற பெயரில் இரண்டு மாவட்டங்களுக்கு குடிநீர் தரும் திட்டத்தை போட்டுள்ளாயே?!
மலையையும் அணையையும் எனக்கு தந்துவிட்டு அந்த 36 ஏரிகளுக்கு தண்ணீர் எப்படி கொண்டு செல்வாய்?!
மக்கள் கேட்கமாட்டார்களா?!"
"அந்த திட்டத்தை ஆரம்பித்து பாதியில் நிறுத்தி மீதி நிதியை தின்றுவிட்டால் போயிற்று"
"இரும்பு தொழிற்சாலை என்றாலே காற்றில் மாசு அதிகம் இருக்கும்.
6 கி.மீ அந்த பக்கம் இருக்கும் திருவண்ணாமலை கோயில் பாதிக்கப்படுமே?!
ஆன்மீகவாதிகள் எதிர்க்குரல் எழுப்புவார்களே!"
"ஆமாம், நாம் அழிக்கவுள்ள மலைகள் அனைத்துமே மூலிகைகள் நிறைந்தவை.
அதனாலேயே அங்கே கோயில்கட்டி அவ்வப்போது மக்கள் போய்வருமாறு அந்த காலத்து ஆட்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதை சமாளிக்க 'கடவுளே இல்லை', 'கோயில்களே தேவையில்லை', 'திருவண்ணாமலை தீபம் மூடநம்பிக்கை' என்று பிரச்சனை செய்ய கருப்புசட்டை இயக்கங்களை இறக்கிவிட்டால் போதும்.
மூலிகைகள் அழிந்தால் என்ன மெடிக்கலில் மாத்திரைதான் கிடைக்கிறதே!"
"கோயிலைப் பற்றி கவலைப்படும் இந்து அமைப்புகளை சமாளிக்கவேண்டுமே?!"
"என்ன ஜிண்டால் அவர்களே!
போட்டு வாங்குகிறீர்களா?!
நீங்கள் காங்கிரஸ் குடும்பமாக இருந்தாலும் இந்து மத கட்சிகள் மற்றும் அமைப்புகள் உங்கள் சட்டைப்பையில் இருப்பதாகக் கூறுகிறார்களே?!
இந்துமத கட்சிகள் தமிழகம் என்றாலே ஒதுங்கிக் கொள்வார்களே?!"
"சரி நான் அவர்களை கவனித்துக் கொள்கிறேன்.
மேட்டூர் அருகே உள்ள என் பங்காளி மலைமுழுங்கி LMW நிறுவனத்தின் ஆலையை நான் வாங்கிவிட்டேன்.
உன் அரசுக்கு சொந்தமான சேலம் உருக்காலையையும் எப்படியாவது வாங்கிவிடுவேன்.
காங்கிரஸ் போய் பிஜேபி வந்தாலும் சரி இது நடக்கும். சேலம் உருக்காலையின் 4000 ஏக்கர் நிலமும் அதனருகே உள்ள கஞ்சமலையும் என் வசமாகும் பொறுத்திருந்து பார்"
"என்ன ஆச்சரியம்?! காங்கிரஸ் கட்சிக்காரரான உங்களுக்கு பிஜேபியில் அவ்வளவு செல்வாக்கா?!"
"ஆம், இரண்டு கட்சிகளுமே பிச்சைக்காசை விட்டெறிந்தால் போதும் எனக்கு நாயாக வேலை செய்வார்கள்.
இன்னும் சில நாட்களில் சேலம் உருக்காலை நட்டத்தில் இயங்குவதாக பிரதமர் அலுவலகமே பொய்யாக அறிவிக்கும்.
பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் அந்த ஆலை தனியார் கைக்கு வரும்.
அதாவது அது அரசாங்க உருக்காலை எனக்கு சொந்தமாகும்.
அதேவேளையில் அதற்கு தீனி போட அருகிலுள்ள கஞ்சமலையும் எனக்கு சொந்தமாகவேண்டும்.
அதற்கு நீ உதவ வேண்டும்."
"அதற்கென்ன! இதற்காகத்தானே டிம்கோ என்பதை (Tamil Nadu Iron Ore Mining Corporation TIMCO) உருவாக்கியுள்ளேன்.
நிலத்தை கையகப்படுத்துவது கடன் பெற்று தருவது போன்ற தரகர் வேலைகளை செய்துதரத்தானே அது!"
" இதில் ஒரேயொரு பயம்!
என் மலைமுழுங்கி அண்ணன் வேதாந்தா போல பாஜக வுக்கு கமிசன் கொடுத்தது அது கோர்ட் வரை போய் நாறியதுபோல் ஆகிவிடக்கூடாது"
" அட நீங்கள் வேறு!
அவர் வெளிநாட்டில் கம்பெனி நிறுவி இந்நாட்டு கட்சிக்கு நிதி கொடுத்ததால் மாட்டிக்கொண்டார்.
நீங்கள் பிறப்பாலும் தொழிலாலும் ஹிந்தியர் ஆயிற்றே!"
"சரி கவுத்தி மலையை நான் வைத்துக் கொள்கிறேன்.
முதலில் 23 ஹெக்டேர் எழுதித் தாருங்கள்.
சிறிய அளவில் ஆரம்பிப்போம் பிறகு படிப்படியாக விரிவாக்கி விடலாம்.
அந்த பகுதியில் மேலும் சில மலைகள் உள்ளன.
எல்லாம் எனக்குத்தான்!"
"உங்களுக்கில்லாமல் வேறு யாருக்கு?!
நீங்கள் கூறியதுபோலவே செய்து 23 எக்டேரில் பிள்ளையார்சுழி போட்டுவிடலாம்"
"இதற்கெல்லாம் உன் கமிசன் எவ்வளவு என்று கூறு"
"10% தரமுடியுமா ஜிண்டால்ஜி!"
"இது அதிகம்!
இவ்வளவு அதிகம் கேட்டால் நான் தி.மு.க விடம் போய்விடுவேன்.
அவர்கள் என் மலைமுழுங்கி அண்ணன் வேதாந்தாவுக்கு இருப்பது போல எனக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
நான் முறைப்படி தமிழக அரசாங்கத்திற்கும் பங்கு வேறு ஒதுக்கவேண்டும்.
அரசின் கூட்டுடன் நடப்பதாக வெளியே காட்டிக்கொள்ளவேண்டும் அல்லவா?"
"அட என்ன நீங்கள் அரசாங்க பங்கு பற்றியெல்லாம் கவலை பட்டுக்கொண்டு.
எனக்கும் என் கட்சிக்கும் தரும் கமிசனை மட்டும் ஒதுக்குங்கள்.
நீங்கள் முறைப்படி 1% பங்கு மட்டும் டிம்கோவுக்கு ஒதுக்கினால் போதும்"
"என்ன அரசாங்கத்திற்கு வெறும் 1% போதுமா?! மீதி 99% பங்கு எனக்கே எனக்கா?!"
ஜிண்டால் சந்தோசத்தில் அங்கேயே மயங்கிவிழுந்தார்.
ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால் சேலம் உருக்காலை ஊழியர்களும் கஞ்சமலை கௌத்தமலை அடிவாரத்து பாமர மக்களும் இன்றுவரை போராடி போராடி ஜிண்டாலை தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.
Saturday, 24 March 2018
ஸ்டெர்லைட் முன்பு ஒரு லட்சம் தமிழர்கள்!
ஸ்டெர்லைட் முன்பு ஒரு லட்சம் தமிழர்கள்!
அதே நேரத்தில் லண்டனில் உள்ள அதன் முதலாளி அகர்வால் வீடு முன்பும் போராட்டம்!
ஜல்லிக்கட்டு போராட்டம் போல மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியம்!
ட்விட்டர் மூலம் ஒருங்கிணைந்த இளைஞர்கள்!
Saturday, 17 March 2018
பாலைவனமாகும் 36 விவசாய கிராமங்கள் - இது ஆரம்பம்தான்
பாலைவனமாகும் 36 விவசாய கிராமங்கள்
- இது ஆரம்பம்தான்
இப்பட்டியலில் உங்கள் ஊர் இருக்கிறதா பாருங்கள்.
அப்படி இருந்தால் குடும்பத்தோடு ஊரை காலி செய்ய தயாராகுங்கள் தமிழர்களே...!
எல்லா அழிக்கப்பட்டு நீரின்றி நோய்வாய்ப்பட்டு கேவலமாக சாவதை விட இப்பொழுதே குடும்பத்துடன் வெளியேறிவிடுங்கள்.
தன் உரிமைக்காக போராடாத ஒரு இனம் அழிந்து போகட்டும்.
தமிழகத்தில் ஹைட்டரோ கார்பன் மற்றும் மீத்தேன் எடுக்க அடிமை மாநில அரசால் தாரைவார்க்கப்பட்டு பாலைவனமாக்கப்பட போகும் இடங்கள்!
1). கருவேப்பிலைக்குறிச்சிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள
- கண்ணூர்.
2). புவனகிரிக்கும் கீரப்பாளையத்திற்கும் இடையில் உள்ள
- கிளியனுர்
3). புவனகிரிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள
- எரம்பூர்
4). புவனகிரிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள, மனவெளி அருகிலுள்ள
- பூதராயன்பேட்டை
5). புவனகிரியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஊர் பேரு தெரியாத இடம்..
6). சிதம்பரத்திற்கும் காட்டுமன்னார்கோவிலுக்கும் இடையிலுள்ள தாவரத்தாம்பட்டு அருகிலுள்ள
- மெய்யத்தூர்
7). சிதம்பரத்திற்கும் காட்டுமன்னார்கோவிலுக்கும் இடையிலுள்ள டி.நெடுஞ்சேரி அருகிலுள்ள
- நெய்வாசல்
8). சிதம்பரத்திற்கும் காட்டுமன்னார்கோவிலுக்கும் இடையிலுள்ள டி.நெடுஞ்சேரி அருகிலுள்ள
- பூர்த்தங்குடி
9). கருவேப்பிலைக்குறிச்சிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள
- வடக்குபாளையம்
10). கருவேப்பிலைக்குறிச்சிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள
- பாளையம்கோட்டை
11). ஆண்டிமடம் காடுவெட்டி இடையில் உள்ள
- கோவில்வழக்கை
12). ஆண்டிமடம் அருகிலுள்ள
- கூவத்தூர், அக்னீஷபுரம்
13). ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் இடையிலுள்ள
- கீழக்குடியிருப்பு
14). ஜெயங்கொண்டம் சிறுகொளத்தூர் இடையிலுள்ள
- தேவனூர்
15). ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் இடையில் உள்ள
- சூரியமணல்
16). மயிலாடுதுறை சேந்தன்குடி இடையிலுள்ள
- மண்ணம்பந்தல்
17). மயிலாடுதுறை நெய்வாசல் இடையிலுள்ள
- பண்டூர், மகாராஜபுரம்
18). கும்பகோணம் நெடுங்கொல்லை அருகிலுள்ள
- கடமங்குடி, பரவனூர்
19). திருப்பனந்தாள் திருமங்கலக்குடி இடையிலுள்ள
- சூரியமூலை
20). கதிரமங்கலம் பந்தநல்லூர் இடையிலுள்ள
- முள்ளுக்குடி
21). மயிலாடுதுறை குத்தாலம் அருகிலுள்ள
- அரையபுரம், கோமல்
22). மயிலாடுதுறை மண்டாரவாடை மாப்படுகை அருகிலுள்ள
- பொன்னுர்
23). மயிலாடுதுறை ஆனதாண்டவபுரம் அருகிலுள்ள
- சேந்தன்குடி
24). தரங்கம்பாடி பொறையார் திருக்களாச்சேரி அருகிலுள்ள
- ஈச்சங்குடி, நரசிங்கநாதம்
25). கும்பகோணம் காரைக்கால் இடையிலுள்ள
- எழுமகளூர், எ.கிளியனூர்
26). மயிலாடுதுறை திருவாரூர் இடையிலுள்ள
- தேவூர், கீரனூர்
27). திருப்பனந்தாள் அருகிலுள்ள
- திருலோக்கி
28). சேத்தியாத்தோப்பு சோழதரம் அருகிலுள்ள
- நந்தீஸ்வரமங்கலம்
29). குறிஞ்சிப்பாடி நெல்லிக்குப்பம் அருகிலுள்ள
- பச்சாரபாளயம்
30). புவனகிரி, நெடுஞ்சேரி அருகிலுள்ள - கீழநத்தம்
31). காட்டுமன்னார்குடி அய்யன்குடி அருகிலுள்ள
- குச்சூர்
32). காட்டுமன்னார்குடி முத்தம் அருகிலுள்ள
- ஆச்சாள்புரம்
33). கங்கைகொண்டசோழபுரம் பாப்பாக்குடி இடையில்
- ஊருபேரு தெரியாத இடம்
34). ஆடுதுறை மங்கநல்லூர் இடையிலுள
- கஞ்சுவோய், மாம்புலி
35). மயிலாடுதுறை குத்தாலம் அருகிலுள்ள
- சென்னியநல்லூர்
36). கும்பகோணம் திருமங்கலக்குடி அருகிலுள்ள
- வேப்பத்தூர்...
(பட்டியலுக்கு நன்றி: Veera VK)
மேற்கண்ட அனைத்தும் விவசாய கிராமங்கள்.
இங்கே கூறப்பட்டது காவிரி டெல்டா மட்டும்தான்.
இதற்கு வடக்கே மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை ஐட்ரோ கார்பன் எடுக்க ஒற்றை உரிமை அடிப்படையில் அனுமதி தரப்பட்டுவிட்டது.
இனி மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் எண்ணெய், ஷேல் எரிவாயு உள்ளிட்ட எவற்றையும் எடுப்பதற்கு ஒரே ஒரு முறை அனுமதி வாங்கினால் போதுமானது.
அதுவும் பத்தே நாளில் கிடைத்துவிடும்.
மாசுக் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிகூட தேவையில்லை.
இந்த திட்டத்திற்கு பேர்தான் # ஹெல்ப் # HELP
100 விழுக்காடு நேரடி அந்நிய முதலீட்டில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளால் அரங்கேற இருக்கும் இத்திட்டத்தில்
முதன்முதலாக வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு கான்டராக்ட் தரகர்கள் இன்றி நேரடியாக நம் தாய் நிலத்தில் கால் பதிக்கும் வகையில் மத்திய அரசு தாரை வார்த்து விட்டது.
அதாவது முற்றாக அழிக்கப்படவுள்ள காவிரிப் படுகை.
பல ஆயிரம் ஆண்டுகள் நமக்கு சோறுபோட்ட பூமி.
பூமித்தாயின் பாலூட்டும் மார்பு.
அதை அறுத்து ரத்தத்தை உறிஞ்சப் போகிறார்கள்.
என்ன செய்யப்போகிறோம் நாம்?