Tuesday 12 June 2018

சண்டாள ஜிண்டால்

சண்டாள ஜிண்டால்

2005 ல் ஜிண்டால் மற்றும் ஜெயலலிதாவுக்கு இடையே நடந்த உரையாடல்

"வாழவைக்கும் ஜிண்டால் அவர்களே! வருக!"

"நமஸ்தே! என்ன விசயம்?"

"சேலத்திற்கும்  சென்னைக்கும் நடுவே இருக்கும் திருவண்ணாமலைக்கு மிக அருகில் இருக்கிறது கவுத்திமலை.
இது சாதாரண மலை இல்லை,
41% இரும்புத்தாது நிறைந்தது.
அதாவது 35 மில்லியன் டன் இரும்புத்தாது இருப்பதாக கணித்துவிட்டனர்.
இதை விற்க நல்ல ஆள் தேடிக்கொண்டு இருந்தோம்.
அதற்கு உங்கள் கார்ப்பரேட்டை தேர்ந்தெடுத்துள்ளோம்"

"அந்த இடமா?
சுத்தமாக பின்தங்கிய பகுதி.
நீதிமன்றத்தையும் அரசாங்கத்தையும் கூட விலைக்கு வாங்கிவிடலாம்.
ஆனால் படிப்பறிவில்லாத பாமர மக்களைத்தான் சமாளிக்கமுடியாது.
எவனாவது சமூகப் போராளி எடுத்துக் கூறினால் போராட்டங்களை தொடங்கிவிடுவார்கள்"

"அவர்களை நான் சமாளித்துவிடுவேன்.
ஊடகங்களை மட்டும் நீங்கள் கவனித்துக்கொள்ளுங்கள்.
ரொம்ப போராடினால் போலீசை ஏவிவிடலாம்.
வெறிநாய்களை விட மோசமாக குதறிவிடுவார்கள்"

"மக்கள் ஆயுதம் தூக்காதவரை எப்படியும் சமாளித்துவிடலாம்.
என்னவொன்று காலம் இழுத்துக்கொண்டே போகுமே என்று யோசிக்கிறேன்.
தவிர அங்கே போதிய வசதிகளும் கிடையாது"

  "மலையை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்!
வேண்டிய வசதிகளை வரிப்பணம் செலவளித்து செய்து தருகிறேன்"

"ம், எவ்வளவு நிலம் தருவாய்"

"325 ஹெக்டர் வனப்பகுதியை எழுதித் தருகிறேன்"

"வனப்பகுதியா? மரங்கள் நிறைய இருக்குமே?!"

" ஆம் 3லட்சம் மரங்கள் வரை இருக்கும்"

"மரங்களை வெட்டினால் பொதுமக்கள் எதிர்ப்பார்களே?!
சமாளித்து விடுவாயா?"

"அதற்கென்ன?! இதே அளவு மரங்களை திருநெல்வேலி மாவட்டத்தில் நட்டு ஈடுசெய்வதாக வாக்குறுதி கொடுத்தால் போயிற்று"

"ஹ.. ஹ... ஹா... ஹா... அப்படி சொன்னால் நம்பும் அளவு முட்டாள்களா இந்த மக்கள்?!"

"ஆம், மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிக்கொள்வீர்களா? நான் வெட்டித்தரவா?"

"நானே வெட்டிக்கொள்வேன்.
ஏற்கனவே எனக்கு சேலத்தில் என் மச்சான் மலைமுழுங்கி SISCOL உடன் கூட்டான ஒரு மின்சார உற்பத்தி ஆலை உள்ளது.
ஏற்கனவே எனக்கு சேலத்தில் என் மச்சான் மலைமுழுங்கி SISCOL உடன் கூட்டான ஒரு மின்சார உற்பத்தி ஆலை உள்ளது.
சாலைதான் சரியாக இல்லை."

"என்ன சொல்கிறீர்கள்?!
சேலத்திலிருந்து சென்னைக்கு ஏற்கனவே இரண்டு பெரிய சாலைகளும் ஒரு சின்ன சாலையும் ஒரு ரயில்பாதையும் இருக்கிறதே!"

"சேலத்திலிருந்து சென்னை செல்லும் இரு சாலைகளும் திருவண்ணாமலை மற்றும்  அதை ஒட்டிய மலைகளைத் தொடாமல் விலகி சுற்றியவாறு செல்கின்றன.
என்னால் எனது ஆலையை அதிலொன்றில் இணைக்கவெல்லாம் முடியாது.
தனி சாலை வேண்டும்.
கோயம்புத்தூரிலிருந்து சேலம் வரை நேரான சாலை வருகிறதே அதை அப்படியே சென்னை வரை நேராக கொண்டுசெல்லவேண்டும்"

"போட்டுத்தருகிறேன். பொதுமக்கள் வசதிக்காக பசுமையான காடு வழியே நான்கு வழிச்சாலை போடுகிறோம் என்று பிரச்சாரம் செய்தால் போயிற்று"

"எனக்கு இங்கே மக்கள் ஆயுதம் தூக்குவார்களோ என்று பயமாக இருக்கிறது."

"அதை நான் போக்குகிறேன்.
எட்டுவழிச் சாலை போட்டு தருகிறேன்.
தீவிரவாதிகள் முளைத்தால் நீங்கள் பீரங்கிகளை கொண்டுவரலாம்.
அதுவும் காடுகளை அழித்தபடி செல்லும்.
இதிலேயே ஒன்றரை லட்சம் மரங்களை வெட்டிவிடுவோம்.
மீதி ஒன்றரை லட்ச மரங்களை நீங்கள் வெட்டிக்கொள்ளுங்கள்"

"சாலை போட எதுவும் பணம் வேண்டுமா?
என் அறக்கட்டளை மூலம் நானே போட்டுவிடவா?"

"வாழவைக்கும் ஜிண்டாலே!
ஏன் உங்களுக்கு வீண் சிரமம்.
இதோ பத்தாயிரம் கோடி நிதி ஒதுக்கிவிடுகிறேன்.
சென்னைக்குதானே நேர்சாலை கேட்டீர்கள்?!
நான் நேரே சென்னை துறைமுகம் வரை சாலையை போடுகிறேன்.
நீங்கள் இந்நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கு கப்பலில் அனுப்பலாம்"

"சரி மலைகளை மட்டும் தந்தால் எப்படி?
உட்கார்ந்து வெட்டியெடுக்க மலைகளைச் சுற்றியிருக்கும் நிலமும் வேண்டும்"

"சுற்றியிருக்கும் 51 கிராமங்களின் 2700 ஏக்கர் விளைநிலங்களை உங்களுக்கு தந்துவிடுகிறேன்"

"நிறைய தண்ணீர் தேவைப்படும்.
அப்படியே அதற்கும் ஏற்பாடு செய்"

"சாத்தனூர் அணை இருக்கிறதே!
விளைநிலமே இல்லை தண்ணீரை வைத்து என்ன செய்ய?!
நேரடியாக அணையிலேயே குழாய் போட்டு உங்கள் ஆலைக்கு தந்துவிடவா?
நீங்கள் உறிஞ்சியது போக மீதிதான் குடிநீர் விநியோகம் செல்லும்"

"ஏற்கனவே 14 கோடியில் 'நந்தன் கால்வாய் திட்டம்' என்ற பெயரில் இரண்டு மாவட்டங்களுக்கு குடிநீர் தரும் திட்டத்தை போட்டுள்ளாயே?!
மலையையும் அணையையும் எனக்கு தந்துவிட்டு அந்த 36 ஏரிகளுக்கு தண்ணீர் எப்படி கொண்டு செல்வாய்?!
மக்கள் கேட்கமாட்டார்களா?!"

"அந்த திட்டத்தை ஆரம்பித்து பாதியில் நிறுத்தி மீதி நிதியை தின்றுவிட்டால் போயிற்று"

"இரும்பு தொழிற்சாலை என்றாலே காற்றில் மாசு அதிகம் இருக்கும்.
6 கி.மீ அந்த பக்கம் இருக்கும் திருவண்ணாமலை கோயில் பாதிக்கப்படுமே?!
ஆன்மீகவாதிகள் எதிர்க்குரல் எழுப்புவார்களே!"

"ஆமாம், நாம் அழிக்கவுள்ள மலைகள் அனைத்துமே மூலிகைகள் நிறைந்தவை.
அதனாலேயே அங்கே கோயில்கட்டி அவ்வப்போது மக்கள் போய்வருமாறு அந்த காலத்து ஆட்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதை சமாளிக்க 'கடவுளே இல்லை', 'கோயில்களே தேவையில்லை', 'திருவண்ணாமலை தீபம் மூடநம்பிக்கை' என்று பிரச்சனை செய்ய கருப்புசட்டை இயக்கங்களை இறக்கிவிட்டால் போதும்.
மூலிகைகள் அழிந்தால் என்ன மெடிக்கலில் மாத்திரைதான் கிடைக்கிறதே!"

"கோயிலைப் பற்றி கவலைப்படும் இந்து அமைப்புகளை சமாளிக்கவேண்டுமே?!"

"என்ன ஜிண்டால் அவர்களே!
போட்டு வாங்குகிறீர்களா?!
நீங்கள் காங்கிரஸ் குடும்பமாக இருந்தாலும் இந்து மத கட்சிகள் மற்றும் அமைப்புகள் உங்கள் சட்டைப்பையில் இருப்பதாகக் கூறுகிறார்களே?!
இந்துமத கட்சிகள் தமிழகம் என்றாலே ஒதுங்கிக் கொள்வார்களே?!"

"சரி நான் அவர்களை கவனித்துக் கொள்கிறேன்.
மேட்டூர் அருகே உள்ள என் பங்காளி மலைமுழுங்கி LMW நிறுவனத்தின் ஆலையை நான் வாங்கிவிட்டேன்.
உன் அரசுக்கு சொந்தமான சேலம் உருக்காலையையும் எப்படியாவது வாங்கிவிடுவேன்.
காங்கிரஸ் போய் பிஜேபி வந்தாலும் சரி இது நடக்கும். சேலம் உருக்காலையின் 4000 ஏக்கர் நிலமும் அதனருகே உள்ள கஞ்சமலையும் என் வசமாகும் பொறுத்திருந்து பார்"

"என்ன ஆச்சரியம்?! காங்கிரஸ் கட்சிக்காரரான உங்களுக்கு பிஜேபியில் அவ்வளவு செல்வாக்கா?!"

"ஆம், இரண்டு கட்சிகளுமே பிச்சைக்காசை விட்டெறிந்தால் போதும் எனக்கு நாயாக வேலை செய்வார்கள்.
இன்னும் சில நாட்களில் சேலம் உருக்காலை நட்டத்தில் இயங்குவதாக பிரதமர் அலுவலகமே பொய்யாக அறிவிக்கும்.
பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் அந்த ஆலை தனியார் கைக்கு வரும்.
அதாவது அது அரசாங்க உருக்காலை எனக்கு சொந்தமாகும்.
அதேவேளையில் அதற்கு தீனி போட அருகிலுள்ள கஞ்சமலையும் எனக்கு சொந்தமாகவேண்டும்.
அதற்கு நீ உதவ வேண்டும்."

"அதற்கென்ன! இதற்காகத்தானே டிம்கோ என்பதை (Tamil Nadu Iron Ore Mining Corporation TIMCO) உருவாக்கியுள்ளேன்.
நிலத்தை கையகப்படுத்துவது கடன் பெற்று தருவது போன்ற தரகர் வேலைகளை செய்துதரத்தானே அது!"

" இதில் ஒரேயொரு பயம்!
என் மலைமுழுங்கி அண்ணன் வேதாந்தா போல பாஜக வுக்கு கமிசன் கொடுத்தது அது கோர்ட் வரை போய் நாறியதுபோல் ஆகிவிடக்கூடாது"

" அட நீங்கள் வேறு!
அவர் வெளிநாட்டில் கம்பெனி நிறுவி இந்நாட்டு கட்சிக்கு நிதி கொடுத்ததால் மாட்டிக்கொண்டார்.
நீங்கள் பிறப்பாலும் தொழிலாலும் ஹிந்தியர் ஆயிற்றே!"

"சரி கவுத்தி மலையை நான் வைத்துக் கொள்கிறேன்.
முதலில் 23 ஹெக்டேர் எழுதித் தாருங்கள்.
சிறிய அளவில் ஆரம்பிப்போம் பிறகு படிப்படியாக விரிவாக்கி விடலாம்.
அந்த பகுதியில் மேலும் சில மலைகள் உள்ளன.
எல்லாம் எனக்குத்தான்!"

"உங்களுக்கில்லாமல் வேறு யாருக்கு?!
நீங்கள் கூறியதுபோலவே செய்து 23 எக்டேரில் பிள்ளையார்சுழி போட்டுவிடலாம்"

"இதற்கெல்லாம் உன் கமிசன் எவ்வளவு என்று கூறு"

"10% தரமுடியுமா ஜிண்டால்ஜி!"

"இது அதிகம்!
இவ்வளவு அதிகம் கேட்டால் நான் தி.மு.க விடம் போய்விடுவேன்.
அவர்கள் என் மலைமுழுங்கி அண்ணன் வேதாந்தாவுக்கு இருப்பது போல எனக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
நான் முறைப்படி தமிழக அரசாங்கத்திற்கும் பங்கு வேறு ஒதுக்கவேண்டும்.
அரசின் கூட்டுடன் நடப்பதாக வெளியே காட்டிக்கொள்ளவேண்டும் அல்லவா?"

"அட என்ன நீங்கள் அரசாங்க பங்கு பற்றியெல்லாம் கவலை பட்டுக்கொண்டு.
எனக்கும் என் கட்சிக்கும் தரும் கமிசனை மட்டும் ஒதுக்குங்கள்.
நீங்கள் முறைப்படி  1% பங்கு மட்டும் டிம்கோவுக்கு ஒதுக்கினால் போதும்"

"என்ன அரசாங்கத்திற்கு வெறும் 1% போதுமா?! மீதி 99% பங்கு எனக்கே எனக்கா?!"

ஜிண்டால் சந்தோசத்தில் அங்கேயே மயங்கிவிழுந்தார்.

ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால் சேலம் உருக்காலை ஊழியர்களும் கஞ்சமலை கௌத்தமலை அடிவாரத்து பாமர மக்களும் இன்றுவரை போராடி போராடி ஜிண்டாலை தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment